Thiruchchikkaaran's Blog

இந்துக்களின் சீர் திருத்தம் வலிந்து திணிக்கப் பட்டதா?

Posted on: November 13, 2010


இந்து மதம் தொடர்பான கேள்விகளுக்கான நமது பதில்கள் தொடருகின்றன.

 கேள்வியாக முன் வைக்கப் படுவது :

//ஹிந்து மதம் தன்னை காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது என பரவலாக சொல்லப்படுகிறது,

அப்படிப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இது போன்ற நாத்தீகர்கள் மற்றும் ஹிந்து மதத்தை ஏற்காதவர்கள் எழுப்பிய கேள்விகளால் தானே உண்டானது.

இவர்கள் யாவரும் ஹிந்துமதத்தை பின்பற்றாதவர்கள்,ஹிந்து மத கடவுள்களை புறக்கணிப்பவர்கள்,இவர்களின் பொருட்டு ஹிந்துமதம் மாற்றங்களை வலிந்து ஏற்றது என்றே சொல்ல முடியும்.

ஏனெனில் தற்காலத்தில் இல்லாத,கடந்த நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்த மூடபழக்கங்கள் யாவும் நாமறிந்து,எந்த ஹிந்துமத ஆச்சாரியார்களாலும் களையப்படவில்லை.

ஏதும் இருந்தால் சொல்லலாம்.விவேகானந்தர் கூட,பல்வேறு தத்துவங்களை சொன்னாரே ஒழிய,அவரது காலத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட எந்த ஒரு மூட நம்பிக்கையும், அவரைக் கொண்டு அழிக்கப்பட்டதாக தெரியவில்லை.

சாதி ஒழிப்பாகட்டும்,தீண்டாமையாகட்டும்,’சதி’யாகட்டும்,பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளாகட்டும்,இத்துனையும் தகற்தெரியப்பட்டது,அம்பேத்கார்,பெரியார்,இன்னும் பல நாத்தீகர்கள்,மற்றும் ஹிந்துமதத்தை ஏற்காத ஹிந்துக்களால் தானே.

எனவே இப்படிப்பட்ட உன்னதமான மாற்றங்களை தன்னுள் ஏற்கும்??மதமானது,அந்த மாற்றங்களுக்கான காரணகர்த்தாக்களை புறந்தள்ளுகிறது.அவர்களை புறக்கணிக்கிறது.அவர்களுக்கு ஹிந்துமத வளர்ச்சியில் இடமளிக்க மறுக்கிறது.//

உதாரணமாக இன்றைக்கு தமிழகத்தில் பெரும்பான்மை ஹிந்துக்கள் சாதிகொடுமைகளில் இருந்து மீள காரணமான தந்தை பெரியாரை,ஹிந்துமதம் தனது வளர்ச்சியின் படிக்கட்டாக கருதுவதில்லை.ஆனால் அவரின் மூலம் வந்த வளர்ச்சியை மட்டும்,தான் ஏற்றதாக சொல்லிக்கொள்வது…மாற்றத்தை ஏற்றதாக இல்லை.ஏற்க வைக்கப்பட்டதாகவே தெரிகிறது.//

நமது  பதில்:

 இந்து மதம் என்பது எப்போதும் சனாதனமாகவே, அதாவது மாறாத ஒன்றாகவே இருக்கிறது. அதிலே பல ஆன்மீக முறைகள், பல கோட்பாடுகள் சொல்லப் பட்டு இருக்கின்றன. 

வெவ்வேறு  கால கட்டத்திலே வெவ்வேறு  ஆன்மீக முறைகளுக்கு  மக்கள்   முக்கியத்துவம் கொடுத்து வருகிரார்கள. 

 வாழை மரத்திலே வாழைப் பழத்தை  பறித்து உண்ணலாம். வாழைக் காயை, வாழைப் பூவை பறித்து சமைத்து உண்ணலாம். வாழை  இலையை உபயோகிக்கிறோம்.

இதைப் போல அவ்வப் போது இந்து மதத்தின் பலவேறு முறைகள் உபயோககிக்கப் பட்டு வருகின்றன. இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடுவோம்.  இந்து மதத்தின் வரலாற்றைப் படித்தால் இது தெரியவரும்.

ஆனால் நண்பர்கள அவசரம் அவசராமாக பெரியாரை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆஹா.., தந்தை பெரியார் இந்து மத நூல்களை கிண்டல் செய்து இருக்கிறார்,  இந்துக் கடவுளகளை இகழ்ந்து இருக்கிறார், அவருக்கு தமிழ் நாட்டில் செல்வாக்கு இருக்கிறது, அதனால அவரு வலிந்து அறிவுறுத்தியதால தான்  இந்துக்கள் தீண்டாமையை விட்டார்கள், இந்துக்கள் தாங்களாகவே சீர்திருத்தம் செய்து கொள்ளவில்லை, இந்து மதத்தை நம்பாதவர்கள், இந்து மதத்தை பெண்டு எடுத்தார்கள, என்ற வகையிலே  எழுதி வைப்போம் என்று எழுதி இருப்பது போலவே உள்ளது. 

தந்தை பெரியார் தமிழ் நாட்டில் நன்கு அறிமுகம் ஆனவர். ஆனால் தமிழ் நாட்டுக்கு வெளியே , தமிழ் மொழிபேசாத  மக்களுக்கு பெரியாரை தெரியாது.  அப்படி  இருக்கையில் திருப்பதி கோவிலில், சபரி மலை ஐயப்பன் கோவிலில், பூரி ஜகன்னாதர் கோவிலில், டில்லி பிர்லா மந்திரில், பாம்பே மகாலட்சுமி கோவிலில்  … இங்கேயம் யாரும் ஜாதி வித்யாசம் பார்ப்பதோ, அடுத்தவர் ஜாதி என்ன நினைப்பதுவோ கூட கிடையாது. அங்கே எப்படி சீர் திருத்தம் உண்டானது? சீர் திருத்தம் இந்தியா முழுவது நடை பெற்று இருக்கிறது.

ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர்  , மகாத்மா காந்தி, பாரதியார், அம்பேத்கர்  , ரபீந்தரநாத் தாகூர் …..உள்ளிட்ட   பலவேறு சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஏற்று இந்திய மக்கள் தங்களை சீர்திருத்திக் கொண்டனர், இன்னும் சீர்திருத்தம் நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

                                          

இதிலே சதி போன்ற பழக்கங்களை எதிர்த்த மிக முக்கிய சீர் திருத்தவாதியான் ராஜா ராம் மோகன்  ராயை நண்பர்கள்  கண்டு கொள்ளவில்லை. அதே போல தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக செயல் பட்ட மகாத்மா காந்தியும் “சீர்திருத்தவாதி கள்  லிஸ்டிலே”  இல்லை. 

“வஞ்சனைப் பேய்கள் என்பார் , அந்த மரத்தில் என்பார் , இந்தக் குளத்தில் என்பார்” என்று பாடிய பாரதியும்  இல்லை.

                                                      

அம்பேத்கர் இந்து மதத்தை விமரிசித்தவர்தான். அவர் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் போற்றப் பட வேண்டிய தலைவர் , இந்திய நாட்டை உருவாக்கியவர்களில்  மிக முக்கியமானவர் அம்பேத்கர்.  சிறந்த அறிவாளி, மாமேதை அம்பேத்கரைப் பற்றி பல கட்டுரைகள நமது தளத்திலே வெளியாகும்.

                                  

இதிலே தந்தை பெரியாரை மட்டும் எடுத்துக் கொண்டு “தந்தை பெரியாருக்கு ஏன் இந்துக்கள் முக்கியத்துவம் குடுக்கவில்லை” என்று ஆடு நனைகிறதே என்கிற ரீதியில் நூல் விட்டுப் பார்ப்பது போல உள்ளது.

இவ்வாறாக இந்திய சமுதாயத்திலே,  இந்து மதத்திலே சீர் திருத்தம் என்பது பல்வேறு சிந்தனையாளர்களால் ஆரம்பிக்கப் பட்டு, மக்களால் புரிந்து கொள்ளப் பட்டு, தாங்களாகவே செயல் படுத்தியது.

இந்திய மக்களிடம் வலிந்து எதையும் அவ்வளவு எளிதில் திணிக்க முடியாது. ஏமாறக் கூடியவர், பயப் படுபவர்கள, கொஞ்சம் பேர் இருக்கலாம், அவர்களிடம் வலிந்து  திணிக்கலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் வலிந்து திணிப்பதை ஏற்க மாட்டார்கள்.

                                    File:Periyar during Self respect movement.JPG

தமிழ் நாட்டைப் பொறுத்த அளவிலே பெரியாரின் கடவுள் இல்லை என்கிற கோட்பாட்டுக்கு மக்கள் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேடும் என்றே நான் விரும்புகிறேன். தமிழ் நாட்டிலே மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியைப் பரப்பும் கோட்பாடுகள் மக்களை சூழ்ந்து வருகின்றன.

தங்களுடைய மத வெறியை கடவுளின் பெயராலே இவர்கள் நியாயப் படுத்தப் பார்க்கின்றனர்.  என் கடவுள் மட்டும் தான் உண்மையான கடவுள், மற்ற கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று பிற மதங்களுக்கு எதிரான இகழ்ச்சிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

 சரி உன் கடவுள் இருப்பதை நீ முதலில் காட்டு,  நிரூபி என்றால் கடவுள் இருப்பதற்கான எந்த ஒரு  ஆதாரமும் இவரகளைடமும்  இல்லை.  எனவே யாரும் பார்க்காத , சரி பார்க்கக் கூடிய  நிரூபணம் இல்லாத கடவுள் என்கிற ஒரு கான்செப்டை வைத்துக் கொள்வதானால், அமைதியாக வணங்கிக்  கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம், ஆனால் அவர்கள், தங்கள் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற மதத்தினரின்  கடவுள்கள் பொய் என்று சொல்லி, உலகத்தின் பல பகுதிகளிலும் இரத்த ஆறை ஓட விட்டு,  கோடிக் கணக்கனவரை கொன்று குவித்து, இங்கே இப்போது இந்தியப் பகுதியில் அந்த மத வெறி சித்தாந்தங்களை செய்து பார்க்க முயலுகின்றனர்.

 இதற்கு மருந்தாக பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தமிழர்கள் உபயோகப் படுத்த வேண்டும். பெரியாரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், பெரியார் சிலைக்கு மாலை மரியாதை செய்து,அவர் சிலை அருகே நின்று 7  கோடி தமிழர்களும், கடவுள்  இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுள் இருந்தால் எங்களுக்கு காட்டுங்கள் என்று,  கடவுள் இல்லை, நோ காட் … என்று  எல்லா மொழிகளிலும்  கோஷம் போட வேண்டும். 

 “பரப்பாதே, பரப்பாதே    கடவுள் பேரால், இங்கே மத வெறியைப்  பரப்பாதே…” என்று ஏழு கோடி தமிழர்களும் செய்யும் முழக்கமானது, மத வெறிக் கருத்துக்களில் சிக்கியவர்களை மீட்பதாக அமைய வேண்டும். 

 வரும் பெரியார் பிறந்த நாளில்,  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நானே  இந்த முழக்கத்தை செய்வேன்.

 

                       
 
 

கடவுள் இல்லை என்று சொல்வதை சகித்துக் கொள்ள பழகி விட்டால் , அதற்குப் பிறகு கடவுள் இருக்கிறாரா என்கிற ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் சகித்துக் கொள்ள புரிந்து கொள்ள பழக்கமாகி விடும். இப்ப நாம கடவுள் இருக்கிறாரா என்று கேட்க, ஆராய  ஆரம்பித்தால உட னே ” ஏய் , நீ ஒக்காரு”  என்கிற ரீதியில் தலையில் தட்ட முயற்சி செய்வார்கள். ஏனெனில் “கடவுளை”  வைத்து தங்கள வாழ்க்கையை  வளம் பெற செய்து கொள்ளவும், கடவுளின் பெயரால் தங்களது பிடிவாதக் கருத்துக்களுக்கு மற்றவரை அடி  பணியச் செய்யவும் பழகிப் போய்  விட்டது பலருக்கு.   எனவே நாம் கடவுள் இல்லை என்று சொல்லப் பட்டதை   சுட்டிக் காட்டுவது, மத வெறிக் கோட்ப்பாடு, செயல் பாடுகளில்  இருந்து மக்களை பாது காக்கவே. 
 
 
மற்றபடி பிற மதத்தவரின்  வழிபாட்டு முறைகளின் மீது வெறுப்புணர்ச்சி இல்லாமல்,  பிற மத வழி பாட்டு முறைகளை பார்த்தவுடன் சகிப்புத் தன்மை இல்லாமல் பொங்கும் தன்மை இல்லாமல்,  தான் கடவுள் என்று நம்புவதை   அமைதியாக வழிபாடும் அப்பாவி- அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி – அவரை நாம் எந்த வகையிலும்  அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை. 
அவருடன் சேர்ந்து நல்லிணக்க அடிப்படையிலே அவருடைய வழிபாட்டு முறையிலே, விழாக்களிலே  மகிழ்ச்சியுடன், மனப் பூர்வமாக கலந்து கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
 
இந்த மத நல்லிணக்கப் பாதையில் நாம் என்றுமே உறுதியாக இருக்கிறோம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: