Thiruchchikkaaran's Blog

என்கவுண்டர் கில்லிங்….!

Posted on: November 11, 2010


 

கோவையில் முஷ்கின், ரித்திக் ஆகியோரை கடத்தி சிதைத்துக் கொன்ற கொடூரனுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே நம்முடைய கருத்து. 

 உச்சபட்ச தண்டனை என்பது மரண தண்டனையே. நமது நாட்டில் செசன்ஸ் கோர்ட்டில் மரண தண்டனை வழங்கப் பட்டு  உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் ஆகியவற்றில் மரணதண்டனை உறுதி செய்யப்  பட்ட பலருக்கு அந்த தண்டனை நிறைவேற்றப் படாமலே உள்ளது.

நமது நாட்டின் நீதித் துறையில் உச்ச நீதி மன்றமே உச்சமானது. உச்ச நீதி மன்றத்திலே  ஒருவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப் படுகிறது என்றால் அது அவ்வளவு எளிதாக உறுதி செய்ய மாட்டார்கள்.  மிகவும் ஆராய்ந்தே மரண தண்டனையை உறுதி செய்வார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் மரண தண்டனை உறுதி செய்யப் பட்ட ஒருவருக்கு  அதற்குப் பிறகு மரண தண்டனையில் இருந்து தப்ப   ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்றால் அது குடி அரசுத் தலைவருக்கு விடுக்கப் படும் கருணை மனு. ஐயா எனக்கு கருணை காட்டுங்கள் என்று மரண தண்டனை உறுதி செய்யப் பட்ட கொடூர குற்றவாளி மனு செய்தால், அந்த மனுவை குடி அரசுத் தலைவர் உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார்….. . இங்கே தான் கருணை மழை பொழிய ஆரம்பிக்கும்.  அதோடு    பல கணக்குகளும்  போடப் படும். மரண தண்டனை பெற்றவன் எந்த வித செல்வாக்கும் இல்லாத சாதா கொடூரனாக இருந்தால் ஒரு வேலை அவன் பால்  கருணை எதுவும் இல்லாமல் போகலாம்.

மொத்தத்திலே இந்தியாவிலே மரண தண்டனை வழங்கப் படுகிறதே ஒழிய அது பெரும்பாலும் நிறைவேற்றப் படுவது இல்லை. எனவே கொலை செய்வது என்பது பலருக்கு  கிட்டத் தட்ட இளநீர் சீவுவது போல ஆகி விட்டது.

இதனால் பொது மக்கள் கடுப்பாகி விடுகின்றனர், இதிலே பொது மக்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. ஆளும் வர்க்கத்தினர் பலவேறு லாப நஷ்ட கணக்குகளை போட்டு பார்த்து கொலை குற்றவாளிகளின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் அந்த கோர்ப்பை மேசையிலே தூங்க விடுகின்றனர். கொடூரனும் சிறையிலே தூங்குகிறான். இதிலே இறந்தவன் அப்பாவிதான்.  அதாவது அப்பாவி , கருணை காட்டப் படாமல் சிதைத்து கொல்லப் பட்டால் அனுதாபம் தெரிவிப்பதோடு மேட்டரை முடித்துக் கொண்டு , தங்களிடம் டன் கணக்கில்   இருக்கும் கருணையை கொடூரன் மேல் பொழிவார்கள.

இதிலே மனித உரிமை

ஆரவலர்கள் நிலைப்பாடு வேறு இருக்கிறது. அதாவது சிறுமியை சிதைத்து கொன்றவனுக்கு உயிர் வாழும் உரிமை கொடுக்கப் பட வேண்டுமாம். ஆனால் சிறுமிக்கு உயிர் வாழ இந்த உலகிலே இடம் இல்லாமல் போனது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
 

 

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலே கொடூர கொலைகள் செய்த பத்து பதினைந்து பேரை மக்கள் முன்னிலையில் ஆங்காங்கே தூக்கில் இட்டு பாருங்கள். கொலைகள் குறைகிறதா இல்லையா என்று. தண்டனை கடுமையாக்கப் பட்டால், தண்டனை நிச்சயம் நிறைவேற்றப் படும் என்று தெரிந்தால் கொலை செய்ய தயங்குவான்.  
இந்த நிலையிலே கொலை சிதவன் தண்டனை பெறுவது குதிரைக் கொம்பு என்று மக்களுக்கு தெரிந்து இருப்பதால், மக்கள் ஒவ்வொரு அப்பாவி சிதைக்கப் படும் போதும் குமுறுகின்றனர். மக்களின் குமுறலைப் போக்க என்ன வழி  என்று, “மக்களுக்காவே உயிர் வாழ்வோர்” சிந்திக்காமல் இருப்பார்களா?
இப்படியாகப் பட்ட கால கட்டத்திலே , ஓரிரு நாட்களுக்கு முன் சிறுமி முஷ்கினை சீரழித்து கொன்றதாக குற்றம் சாட்டப் பட்ட மோகனகிருஷ்ணன் என்பவனை போலீசார் என்கவுன்டர் (encountr)  செய்து சுட்டு விட்டனர் (அதாவது அவன் போலீசாரை கவுண்டர் (counter) செய்தானாம்.  

இது சம்பந்தமான பத்திரிக்கை  செய்தி: 

Police today shot dead a key accused in the recent kidnapping and murder of two children of a businessman when he allegedly tried to escape from custody after snatching a policeman’s revolver, days after his arrest for the brutal crime which sparked a public outrage.

Police claimed the incident occurred when the accused, Mohan, was being taken near Pollachi on the city outskirts, where he had thrown 11-year-old Muskin and her brother Ritik Jain (7) into a canal after raping the girl.

Two policemen were also injured in the “encounter”. As the police van reached Kuppamedu, Mohanraj, in his 20s, “suddenly” snatched a revolver from escorting sub-inspector Muthumalai and asked the driver to take the vehicle to Kerala, Police Commissioner Sylendra Babu told reporters here.

After the driver refused to do so, Mohanraj fired at Muthumalai and Jyothi, another sub-inspector, who, however, managed to overpower him before Inspector Annadurai fired three rounds at the accused, killing him instantly, he said. Mohanraj received bullet injuries on his chest, right eye and middle of the forehead, he said, adding Muthumalai and Joythi, who were injured in the incident, had been admitted to a government hospital here

கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகன் [^] என்கிற மோகனகிருஷ்ணன், தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போலீஸ் [^] என்கவுன்டர் குறித்து சைலேந்திரபாபு இன்று கூறுகையில்,

விசாரணைக்காக மோகன் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் பலத்த பாதுகாப்பு [^]டன் அழைத்துச் சென்றனர். அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.

கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக சுட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் அவன் மீது 3 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான் என்றார் சைலேந்திர பாபு.//

 

இந்த செய்தியை படித்தவுடன் இந்த நிகழ்வைப்  பற்றி இது உண்மையான என்கவுண்டரா  அல்லது  அப்படி இல்லையா என்று  பஞ்சாயத்து தீர்ப்பு எதுவும் நாம்  வழங்கவில்லை. மாறாக நம்முடைய சந்தேகத்தை முன் வைக்கிறோம். 

1) குற்றம் சாட்டப் பட்ட மோகன கிருஷ்ணன் கையில் விலங்கு மட்டப் பட்டு இருந்ததா இல்லையா?

2)அது என்ன போல்லீசிடம் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்குவது எளிதா?

3)இது என்ன போலீசிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கினான் என்றால் போலீஸ் என்ன பள்ளி சிறுவர்கள் பேனாவை பயிலே சொருகி வைத்திருப்பது போல அவ்வளவு எளிதாக எடுக்கும்படி வைத்திருந்தார்களா?

4) சப் இன்ஸ்பெக்டரின் ரிவால்வரை  பிடுங்கினான்  என்றால், ரிவால்வரை உறுதியான கயிற்றுடன் நன்கு இணைத்து அந்தக் கயிறின் வளையத்தை தோள் பட்டையில் மாட்டிக் கொள்வதுதானே சரியான சீருடை முறை?

……..இப்படியாக இன்னும் பல கேள்விகள்  எழுகின்றன.

மருதமலை  படத்தில் வரும் சிரிப்பு போலீஸ் (வடிவேலு நடித்து )  கூட இவ்வளவு ஓட்டைகளை வைத்து இருப்பாரா என்பது தெரியவில்லை.
நீலாங்கரை கொலை  விவாகரத்தில் சமபந்தப் பட்ட குற்றம் சாட்டப் பட்டவரையும் போலீஸ் கஸ்டடியில் இறந்ததவும் நினைவுக்கு வருகிறது

என்கவுண்டர்  என்பது எப்போதாவது ஒரு முறை  எக்ஸ்ட்ரீம் நேரத்தில் நெருக்கடியான  நிலையில் செய்யப் பட வேண்டியது.

எண்கவ்ண்டர் கொலைகளே நாளைக்கு மக்களுக்கு பெரிய ஆபத்தாக வளரக் கூடும்.

நாளைக்கு நானோ நீங்களோ, திருச்சியில் இருந்து வண்டி பிடித்து இரவிலே தாமபரத்திலே இறங்கி , வழி தெரியாமல் ஏதாவது போலீஸ் கையில் சிக்கி அவர நம்மை சந்தேக கேசிலே புக் செய்து,  வெளியே விட வேண்டுமென்றால் ” கவனிக்கும்படி” சொன்னால், நாம பெரிய பதிவர் என எண்ணிக் கொண்டு, நான் என் பிளாகுல இதைப் பத்தி எழுதுவேன் என்று கவுண்டர்  விட, கடுப்பாகி நம்மையே “என்கவண்டர்” செய்தால் என்ன செய்ய முடியும்? 
 

பொதுவாகவே சட்டங்களை கடுமையாக்கி,  முக்கியமாக நீதி  அமுலாக்கத்தை நிச்சயமாக செயல்  படுத்தினால் குற்றங்கள் குறையும். அதை விட்டு விட்டு புண்ணுக்கு  புனுகு பூசுவது போல மக்களின் மனக் குமுறலை சரிக் கட்ட எதாவது செய்வது என்பதும் ஒரு வகையான ஆபத்தே.  

Advertisements

4 Responses to "என்கவுண்டர் கில்லிங்….!"

நாளைக்கு நானோ நீங்களோ, திருச்சியில் இருந்து வண்டி பிடித்து இரவிலே தாமபரத்திலே இறங்கி , வழி தெரியாமல் ஏதாவது போலீஸ் கையில் சிக்கி அவர நம்மை சந்தேக கேசிலே புக் செய்து, வெளியே விட வேண்டுமென்றால் ” கவனிக்கும்படி” சொன்னால், நாம பெரிய பதிவர் என எண்ணிக் கொண்டு, நான் என் பிளாகுல இதைப் பத்தி எழுதுவேன் என்று கவுண்டர் விட, கடுப்பாகி நம்மையே ”என்கவண்டர்” செய்தால் என்ன செய்ய முடியும்?//

வாய்ப்பும் இருக்கிறது… சட்டம் தாறுமாறாக எகிறி கையாளப்படும் இந்த காலக் கட்டத்தில்.

சிவப்பேற்றிய உங்கள் கடைசிபத்தி சிந்தனையை விரித்து என்னோட பதிவு நேத்து போட்டது பாருங்க, நல்ல உரையாடலும் நடந்திருக்கிறது…
http://thekkikattan.blogspot.com/2010/11/blog-post.html

Thanks Mr. Thekkikattan,

Yor article was good.

//பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.//

This is true and create anxiety!

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///பொதுவாகவே சட்டங்களை கடுமையாக்கி, முக்கியமாக நீதி அமுலாக்கத்தை நிச்சயமாக செயல் படுத்தினால் குற்றங்கள் குறையும்.///

மிகச் சரியான வாக்கியம்.அனால் இப்பொழுதுள்ள நிலை அவ்வாறு இல்லாமல் இருப்பதால் இப்படிப்பட்ட என்கௌன்ட்டர் நடக்கிறது.சட்டங்கள் கடுமையாகி, தண்டனைகள் கடுமையாகும் போது இப்படிப்பட்ட என்கௌன்ட்டர் -களின் அவசியம் இல்லாமல் போய்விடும்.ஏனெனில் அதே என்கவுன்டர் சட்டப்படி அரபு நாடுகள் போல் பொது மக்கள் முன்னிலையில் செய்யும் போது த்ண்டனையாகிறது.இந்த என்கௌன்டர் இதுவரை மிகக் கொடிய குற்றவாளிகளிடமே நிகழ்ந்துள்ளது.இதுவும் அரபு நாடுகள் போல் விரைவாகக் கொடுக்கப்பட்ட ஒரு தண்டனை என்று தான் கருதுகிறேன்.

அன்புக்குரிய தன்பால் சார்,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு மகிழ்ச்சியும், நன்றிகளும்.

ஒரு காவல் துறை அதிகாரி ஒரு அபாயமான கட்டத்திலே தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ள என்கவுண்டர் செய்வதற்கு அவர்க்கு உரிமை உண்டு. அதே நேரம் சாதாரணமான நேரத்திலே என்கவுண்டர் செய்வது சரியல்ல என்பதே நம் கருத்து.

குற்றம் சாட்டப்பட்டவரை நீதியின் முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி தருவதே காவல் அதிகாரியின் மிக சரியான கடமை.

சட்டத்திலே ஓட்டைகள இருந்தால் அவை அடைக்கப் பட வேண்டும். தண்டனை வழங்கப் பட்டு ஆனால் தண்டனை நிறைவேற்றப் படாமல் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. அதற்க்கு சரியான் தீர்வு என்னவென்றால்,மரண தண்டனை வழங்கப் பட்டவர் கருணை மனு அளித்தால் அதன் மீதான முடிவு ஒரு வருடத்திற்குள் எடுக்கப் பட வேண்டும். அதற்க்கு தனி யாக ஒரு துறையை உருவாக்க வேண்டும் , இது போல சரியான முறைகளை கொண்டு வருவதே சரியான தீர்வு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: