Thiruchchikkaaran's Blog

கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!

Posted on: November 8, 2010


பிரமிப்பு – கிரிஷ்ணரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு தோன்றுவது  இதுவே.

தன்னைக்  கடவுள் என்று அறிவித்துக் கொண்டே ஒரே ஒருவராக அவர் இருந்திருக்கிறார்.  தான் கடவுளே என்றும், உலகம் உட்பட எல்லா அண்டங்களும் தன்னிலே இருப்பதாகவும், தான் எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பதாகவும், தான் மனித வடிவில் வந்திருப்பதாகவும்  அத்தாரிட்டியுடன் சொன்னவராக இருந்திருக்கிறார் கிருஷ்ணர்.

மனிதன், மனிதனின் வாழ்க்கை மனிதனின் உயிரின் தன்மை , மனித உயிர் அடையக் கூடிய உச்ச கட்ட நிலைமை ஆகியவற்றை பற்றிய ஆழமான கருத்துக்களை விளக்கி இருக்கிறார்.

உலகத்திலே உள்ள பல மதங்களையும் நாம் ஆக்க பூர்வமாக அணுகி,   அவற்றில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து இருக்கிறோம். பல்வேறு   மத நூல்களிலும் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை  அளிக்கக் கூடிய  கருத்துக்கள் இருப்பதையும் நாம் கண்டு இருக்கிறோம்.  நான்  படித்த ஆன்மீக நூல்களில்   மிகவும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாக, பிரமிக்க வைக்கும் சிந்தனைகளின் தொகுப்பாக கிருஷ்ணர் சொன்ன பகவத் கீதை உள்ளது.

உலகத்திலே பல மதங்கள் நம்பிக்கையின் (faith) அடிப்படையிலே அமைக்கப் பட்டு உள்ளன. புத்த மதம் போன்ற சில  மதங்கள் , மனிதன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் பகுத்தறிவு அடிப்படியிலே அமைக்கப் பட்டு உள்ளது.

பகுத்தறிவு  அடிப்படையிலே ஆன்மீகத்தை அணுக விரும்புவோரும் சரி, நம்பிக்கை அடிப்படையிலே ஆன்மீகத்தை அணுக விரும்புபவராக இருந்தாலும் சரி, இருவருக்குமே பொருத்தமான ஆன்மீக முறைகளை கிருஷ்ணர் கீதையில் வழங்கி இருக்கிறார்.

பகுத்தறிவு அடிப்படையிலே வாழ்க்கையை ஆராய்பவருக்கு ஆரம்ப பாடமாக இந்திதிரியார்த்தேஷு வைராக்கிய மன அஹங்கார  ஏவ ச, ஜன்ம மிருத்யு ஜரா வியாதி சுக துக்க அனுதர்ஷன – பிறப்பு, இறப்பு மூப்பு, சாக்காடு உள்ளிட்ட வாழ்க்கையின் இன்ப துன்பங்களை ஆராய்ந்து, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு  ஆன்மீக வாழ்க்கையிலே முன்னேற விரும்புகிறவன் ஞானி என்று ஆன்மீக ஆரய்ச்சியாளனைக்  குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட ஆன்மீக உணர்வாளன் தன்னை தானே ஆன்மீக ரீதியாக உயர்த்திக் கொண்டு, அமைதியான மன நிலையை அடைந்து, இன்பத்தில் நாட்டமில்லாத, துன்பத்தில்  துடியாத உறுதியான மன நிலையை அடைய முடியும், ஆன்மீக முயற்சிகளை மேற்கொண்டு, அவன் வாழும் காலத்திலேயே அவன் அடையக் கூடிய உச்ச கட்ட மனவலிமையை, எல்லா  உயிர்களின் மீதும் அன்பு செலுத்தும் நிலையை,  அடைய முடியும் என்கிறார்.  முயற்சி செய்து பாருங்கள், நீங்களே உணர்வீர்கள என்று பகுத்தறிவுக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய ஆன்மீக முறையை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

அதே நேரம் இந்த உலகின் ஆசாபாசங்களில் சிக்கி தவிக்கும் மக்களையும் கை விடாமல், நானே கடவுள் உங்களை நான் காப்பாற்றுவேன் என்று சொல்லி, நம்பிக்கை யோடு  தன்னை வணங்கினால் காப்பாற்றுவேன் என்று அபயம் தருகிறான்.

என்னுடைய பக்தன் தீய வழியில் சென்றாலும் விரைவில்  நல்ல  வழிக்கு வந்து விடுவான் என்கிறார்.

கீதையில் சொல்லப் பட்டு இருக்கிற கருத்துக்களை , சிந்தனைகளை விளக்குவது எளிதான காரியம் அல்ல.

ஆதி சங்கரர், இராமானுஜர், மாதவர் போன்ற மிக சிறந்த தத்துவ அறிஞ்கர் களே, கீதைக்கு உரை எழுதி விளக்கி உள்ளனர்.

கிருஷ்ணர்   சொன்ன  கீதை என்பது ஒரு மிகச் சிறந்த ஒளி போன்றதுதாகவும் , வெவ்வேறு வூடகங்கள் அந்த ஒளியை தம்முள் வாங்கி பிரதிபலித்திருப்பதாக கருதலாம்.

என்னால் முடிந்த அளவுக்கு கீதையை, கிரிஷ்ணரை  நான் புரிதல் செய்த வகையை விளக்குகிறேன்.

(தொடரும்)

Ref: (Title: கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!)

Advertisements

2 Responses to "கண்ணன் வந்தான் , அங்கே கண்ணன் வந்தான், ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!"

ஏழைக் கண்ணீர் கடல் போல் நிறைந்துள்ளது,கண்ணனைத் தான் காணோம். கண்ணன் பெயரிலே பல கொள்ளையர்தான் காண்கின்றோம்.

வாங்க தமிழன்,

பல்வேறு மதங்களும் தங்களின் கடவுள் அல்லற்படுபவர்க்ளுக்கு உதவுபவர் என்றும், சுமையைக் குறைப்பவர் என்றும் சொல்லும்போதும், நீங்கள் கிரிஷ்ணரின் மீது அதிக நம்பிக்கை வைத்து, உரிமையோடு அவரை கேட்பது போல உள்ளது. ஏழைகளின் மீது உங்களுக்கு உள்ள அக்கறையையும், கிரிஷ்ணரின் மீது உரிமையோடு கேட்பதையும் புரிந்து கொள்வார்கள்.

மொத்தத்திலே எல்லாக் கடவுள்களும் சேர்ந்து இந்த உலகத்திலே கஷ்டம் என்பதே , துன்பம் என்பதே இல்லாத படிக்கு செய்து விட்டால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்த உலக வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது, என்பதை பகுத்தறிவு முறையில் உணர்ந்து நம்முடைய மன வலிமையை, மந்த திண்மையை உயர்த்தும் பகுத்தறிவு முறையையும் முயற்சி செய்வோம். அதுவும் கிருஷ்ணர் சொன்னதுதானே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: