Thiruchchikkaaran's Blog

கெட்டிக் காரனின் …..

Posted on: November 7, 2010


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக என்று சொல்வார்கள் அல்லவா?

அப்படி இப்படி என்று என்ன என்னவோ சொல்லி விட்டு, கடைசியில் பகவத் கீதையில் கை வைக்கிறார்கள்.
               

               
 
 பகவத் கீதையை சொல்ல நமக்கு மட்டும் தான் உரிமையா, கீதைக்கு பொருள் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் சரியான பொருளை, சரியான அர்த்தத்தை சொல்லுங்க அண்ணே.
 
கீதையிலே சொன்ன  “அத்வேஷ்டா ” என்றால் பொறாமை இல்லாமை என்று பொருள் கொள்ள வேண்டுமாம். பொறாமை இல்லாத மன நிலை சிறந்த மனநிலையே, அது ஆன்மீக முன்னேற்றத்துக்கு அவசியமே. ஆனால் அத்வேஷ்டா என்றால் பொறாமை  இல்லாமை என்ற அர்த்தமே  என்பது போல  சொல்லி வெறுப்புணர்ச்சி இல்லாமை என்கிற குணத்தை நெட்டித் தள்ளப் பார்க்கிறார்கள். 
 
ஏனென்றால் வெறுப்புணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்

என்றால் சிலருக்கு  நெருடலாக இருக்கிறது போல.
 
துவேசம் என்பது வட மொழி வார்த்தையே. ஆனால் தமிழ் நாட்டிலே வசிக்கும் தமிழை தாய் மொழியாக கொண்ட பலருக்கும் ( வட மொழியை அறியாதவருக்கும்)  கூட துவேசம் என்றால் வெறுப்பு , வெறுப்புணர்ச்சி என்ற அர்த்தம் என்பது நன்றாகத்  தெரியும்.  
 
துவேசம் என்றால் வெறுப்புணர்ச்சி,  துவேஷ்டா என்றால் வெறுப்புணர்ச்சி – அத்வேஷ்டா என்றால் “வெறுப்புணர்ச்சி இல்லாமல்” -என்ற பொருள் தெளிவாக எல்லோருக்கும் தெரியும்.


 
இப்படி பொறாமை இல்லாமல்  மாற்றி எழுதினால், அதன் உண்மைப்  பொருள் மக்களுக்கு தெரியாதா?
 
முற்றிய பக்தனின் நிலையில் இருப்பவன்  தான் அத்வேஷ்டா மன நிலையில் இருக்க வேண்டுமாம்.  மற்ரவர்கள எல்லாம் மனதிலே வெறுப்புக் கருத்துக்களை வைத்துக் கொண்டு, வெறுப்புணர்சசியை கக்கிக் கொண்டு இருக்கலாமாம்.  அத்வேஷ்டாவாக இருப்பவன்,  சர்வ பூதானம் மைத்ராவாக இருப்பவன்… எனக்கு பிரியமானவன் என்று கிருஷ்ணர் தெளிவாக சொல்லி இருக்கிறார் அல்லவா. எந்த அளவுக்கு அத்வேஷ்டாவாக இருக்கிறானோ அந்த அளவுக்கு அவருக்கு பிரியமானவன்.  
 
உண்மையிலே எவன் ஒருவன் வெறுப்புணர்ச்சி இல்லாமலும், எல்லா உயிர்களுடனும் நட்புடனும், கருணையுடனும், உறுதியான மனத்துடனும் இருக்கிறானோ அவனை எல்லோருக்குமே பிடிக்கும் அல்லவா?
 
அப்படிப்பட்ட மன நிலையை நோக்கித் தானே நாம் செல்ல வேண்டும்.

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

 க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

 
கிருஷ்ணர் சொன்னதை சொல்லிட்டார். அதை நாம பாலோ செய்வதா இல்லையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
 
கிரிஷ்ணருக்கு பிரியமான  குணத்துக்கு   மாறான குணத்தை  வைத்துக் கொள்வது என்றால் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதில் யாரும் தலையிட  முடியாது.  ஆனால் கிரிஷ்ணரின்   கோட்பாட்டை திரித்து அர்த்தம் சொல்வது சரியா என்று அவரவர் தங்கள் மனசாட்சியை கேட்டுக் கொள்ளுங்கள்.
 
அப்படி கிரிஷ்ணரின் வார்த்தைகளின்   உண்மைப் பொருளை பின்னுக்குத் தள்ளி வேறொரு பொருளை முன்னுக்கு கொண்டு வந்தால், ஓரளவு விவரம் அறிந்தவர்கள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். விவரம் அறியாதவர்கள் கூட இது என்னாது, முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைக்கிராங்களே என்று நினைத்துக் கொள்வார்கள்.
 
உண்மைப் பொருளை மறைத்து, வேறொரு பொருளை புரித செய்வது மயக்கம் எனப்படுகிறது.  வெகுளிகளும்  அப்பாவிகளுமான கோடிக் கணக்கான இந்துக்களை, சரியான இந்து மதத்தை நோக்கி, சரியான இந்து தன்மையை நோக்கி, சரியான இந்து துவத்தை நோக்கி,   உண்மையை நோக்கி அழைத்து செல்வது  நம் அனைவரின்  கடமை.

மேலும் சில நண்பர்கள், அத்வேஷ்டா, யதாத்மா போன்ற வார்த்தைகள் புரியவில்லை என்றும், எளிமையாக விளக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். நாம்  பகவத் கீதை, வேதங்கள் இவற்றி ல் இருந்து மேற்கோள் காட்டும் போதெல்லாம் அவற்றுக்கான எளிமையான தமிழ் மொழி பெயர்ப்பையும் அளிக்க தவறுவது இல்லை. அந்த தமிழ் மொழி பெயர்ப்பு எப்படி நண்பர்களின் கண்ணில் படவில்லை என்பது தெரியவில்லை. இந்த முறை தமிழ் மொழி பெயர்ப்பை வண்ணத்திலே வெளியிட்டு இருக்கிறோம், படித்து மன அமைதி  பெறுவார்கள் என நம்புகிறோம்.

Advertisements

2 Responses to "கெட்டிக் காரனின் ….."

Well said

Dear Mr. S.R. Chadrasekaran Sir,

Thank you for your vist and comments.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: