Thiruchchikkaaran's Blog

சொல்லி, சொல்லி ஆறாது, சொன்னா துயர் தீராது! முஸ்கீன், ரிதீக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி!

Posted on: November 5, 2010


 

கயவர்களால் கொஞ்சமும் மனிதாபிமானமின்றி கொடுமைப் படுத்தப் பட்டு கொல்லப் பட்ட முஷ்கின், ரித்திக் இருவருக்கும் நமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.  

கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியின் மகள் முஷ்கின். 11 வயது சிறுமி. அவளது தம்பி ரித்திக் ஜெயின், வயது 8. இருவரையும் மோகன் என்கிற மோகனகிருஷ்ணன் என்கிற கால் டாக்சி டிரைவர் தனது கால் டாக்சியில் கடத்திச் சென்று பி.ஏ.பி கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்த செயல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மோகனகிருஷ்ணனுக்கு உடந்தையாக இருந்த மனோகரன் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு கயவர்களும், முஷ்கினையும், ரித்திக்கையும் கொலை செய்வதற்கு முன்பு, முஷ்கினை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாற்றப் பட மோகன கிரிஷ்ணனும், மனோகரனும் செய்த செயல் மிருக்கத்தனமானது   என்று சொல்வது கூட சரியல்ல. மிருகங்கள் எவ்வளவோ மேலானவை.  மிருகங்கள் வேட்டை யாடாவிட்டால் உணவின்றி இறந்து விடும். புலியோ, சிறுத்தையோ தாங்கள் உயிர் வாழ இயற்கையின் நியதி காரணமாக பிற விலங்கை கொன்று உண்கின்றன.
 
ஆனால் முஷ்கினை சிதைத்தவர்கள்  மனிதர்களாகப் பிறந்தும், மிருகத்தை விட கொடூரமாக நடந்து கொண்டு உள்ளனர்.
 
பணபாடை , நாகரீகத்தை ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் முக்கியமான செயல். அடுத்தவருக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் இருப்பது மிக முக்கியம் என்பதை ஒவ்வொருவரும்  அறிவு பூர்வமாக உணர்ந்து உணர்வு பூர்வமாக  செயல் பட வேண்டும்.
 
நாம் அடுத்தவருக்கு உதவுவது என்பது கூட அடுத்த கட்டம்,  முதலில் அடுத்தவருக்கு தீங்கு செய்யாமல் வாழ வேண்டும். நாம் அடுத்தவரை சிதைக்காமல், அவரை  வாழ விட்டால் போதும்.
 
இந்தக் குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.இது வரை  மரண தண்டனை வழங்கப்  பட்ட பலருக்கு அத் தண்டனை நிறைவேற்றப் படவில்லை . கொடூர குற்றங்கள் செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கினால், அந்த தண்டனையையும் பொது மக்கள முன்னிலையில் வழங்கினால் அதைப் பார்ப்பவருக்கு குற்றம் செய்யக் கூடாது என்கிற எண்ணம் உருவாகும்.  நம் நாட்டிலே பலர் கொடூர குற்றம் புரிபவருக்கு கூட மரண தண்டனை தரக் கூடாது என்று வாதிட்டு அதற்க்கு மனித நேயம் என்கின்றனர். அதாவது அப்பாவை சிறுமியை சிதைக்க ஒரு காம கொடூரனுக்கு வாய்ப்பு இருக்கிறது நம் நாட்டில். ஆனால் அந்த காமக் கொடூர கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கும் போதுதான் பலருக்கு அவன் மேல் அனுதாபம் பீரிட்டு வரும்.
 
அதாவது அப்பாவி சிறுமி மீது பரிதாபப் படுவதை விட, இன்னும் பல் அப்பாவி சிறுமிகள் க்காகப் பட வேண்டும் என்பதை விட கூடூர கொலையாளிகள் மீதுள்ள அனுதாபம் தான் அவர்களுக்கு முக்கியம்.
 
முஸ்கீன் நம் ஒவ்வொருவருக்கும்  சகோதரி அல்லது மகளைப் போன்றவர்தான். அவருக்காக கண்ணீர் சிந்துவதுதான் இப்போது நாம் செய்யக் கூடியது.  
இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் முறையான கல்வியும், பண்பாடும் கற்ப்பிக்கப் பட்டு அவர்கள நாகரிக மனிதர்கள ஆக்கப் பட வேண்டிய கட்டாயத்தை நினைவுறுத்துகிறோம். கல்வியும் பண்பாடுமே ஒருவனை மனிதன் ஆக்குகிறது.
Advertisements

5 Responses to "சொல்லி, சொல்லி ஆறாது, சொன்னா துயர் தீராது! முஸ்கீன், ரிதீக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி!"

மிகவும் மோசமான, மிருகத்தைவிட மோசமான இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.கொல்லப்பட்ட குழந்தைகளான முஸ்கீன், மற்றும் ரிதீக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.

//கல்வியும் பண்பாடுமே ஒருவனை மனிதன் ஆக்குகிறது.//

இவை உள்ள பலரும் சிறுமதி படைத்தோராக இருக்கிறார்கள்; கல்லூரி மாணவியைக் கலவிக்குக் கொண்டுவரச் சொல்லும் எத்தனையோ கற்றோர் கதை கேட்கவில்லையா?
அதனால் சட்டம் யாராகினும் தன் கடமையைச் செய்யும் என்ற பயம் வரவேண்டும். காசு; பதவி; ஆளும் கட்சி அனுசரணை இருந்தால் எதையும் செய்யலாம்; தப்பிவிடலாம்; நெஞ்சை நிமிர்த்தலாம். என்ற தைரியம் உள்ளவரை நாம் அப்பப்போ கண்ணீர் அஞ்சலி செய்யவேண்டியதே!
தர்மபுரி பஸ் எரிப்பு; தினகரன் பத்திரிகைக் காரியாலய எரிப்பு இதனால் மாண்ட உயிர்களுக்காக
என்ன? நடந்தது.
சட்டம் இறுக்கப்படவேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது.
அத்துடன் நமது சின்னத்திரை; பெரிய திரைக்கெல்லாம் மிகக் கடுமையான தணிக்கை வேண்டும்.

நண்பர் ஜோஹன் அவர்களே,

நீங்கள் தளத்தைப் பார்வை இட்டு கருத்துப் பதிவு இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

//அதனால் சட்டம் யாராகினும் தன் கடமையைச் செய்யும் என்ற பயம் வரவேண்டும். காசு; பதவி; ஆளும் கட்சி அனுசரணை இருந்தால் எதையும் செய்யலாம்; தப்பிவிடலாம்; நெஞ்சை நிமிர்த்தலாம். என்ற தைரியம் உள்ளவரை நாம் அப்பப்போ கண்ணீர் அஞ்சலி செய்யவேண்டியதே!
தர்மபுரி பஸ் எரிப்பு; தினகரன் பத்திரிகைக் காரியாலய எரிப்பு இதனால் மாண்ட உயிர்களுக்காக
என்ன? நடந்தது.
சட்டம் இறுக்கப்படவேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது.
அத்துடன் நமது சின்னத்திரை; பெரிய திரைக்கெல்லாம் மிகக் கடுமையான தணிக்கை வேண்டும்.//

நீங்கள் சொல்வது மிகச் சரியே.

கல்வி என்றால் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி போன்றவை தான் என்ற வகையிலே தான் இன்று எண்ணி கல்வி பயிற்றுவிக்கப் படுகிறது. பண்டைய காலத்தில் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் நேர்மையான, கனிவான, நல்ல மனிதனை உருவாக்கும் வகையிலே கல்வி அளிக்கப் பட்டது. பணடைய தமிழ் இலக்கியங்களை நினைவு கூர்ந்தால் இது புலனாகும்.

with the recent case of kidnapping of a boy in Chennai(it appears that kidnapping is a daily news in the papers nowadays) I believe that only good upbringing coupled with values in life may transform the way people think of Money and sex
That Mohanakrishnana is killed in encounter may reduce the no of cases in future

Dear Mr. S.R. Chadrasekaran Sir,

Thank you for your vist and comments.

//I believe that only good upbringing coupled with values in life may transform the way people think of Money and sex//

Yes.

Schooling shall be made compulsory, and the education shall be towrads man making education, probably gentle man.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: