Thiruchchikkaaran's Blog

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!

Posted on: November 3, 2010


இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. இவ்வளவு பண்டிகைகளும், கொண்டாட்டமும் எந்த நாட்டிலாவாது இருக்குமா என்பது சந்தேகமே.
 
இதிலே தீபாவளியானது இந்தியா முழுவதும் கொண்டாடப் படும் பண்டிகையாக உள்ளது.
 
 ஆன்மீகம், சமூக இணைப்பு, கலாச்சாரம், குடும்ப இணைப்பு,  கேளிக்கை…. இப்படி பல்வேறுபரிமாணங்களை  உள்ளடக்கியதாக உள்ளது தீபாவளி.
 
 நான் சந்தித்த தீபாவளிகள் பற்றிய  நினைவுகள்  பசுமையாக நெஞ்சிலே நிறைந்து உள்ளன.
 
பள்ளியில் பயிலும் போது தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளி எங்களுக்கு தொடங்கி விடும்.
 
நோட்டு புத்தகத்தின் பக்கங்களை கிழித்து ” பட்டாசு லிஸ்ட்டு ” தயாரிப்போம்.
 
எடுத்தவுடனே லட்சுமி வெடி எழுத மாட்டோம்.
 
தம்பி வெடிக்க துப்பாக்கி, கேப். 
 
தங்கைக்கு மத்தாப்பு, அதுவும் பெட்டியிலே இருக்கும் மத்தாப்புகள் பல வகையானவை. பச்சை நிறத்திலே எரிவது, சிகப்பு நிறத்திலே எரிவது … இதுவல்லாமல் பூ தூவுவது போல பொறிகள் விழும் மத்தாப்பு.
 
அதற்குப் பிறகு  கம்பி மத்தாப்பு – அதிலும் மென்மையான பொறிகளை தருவது, ஸ்பார்க்லிங் பொறிகளை தருவது என இருவகை.
 
 அதற்குப் பிறகு தரைச் சக்கரம்,  விஷ்ணு சக்கரம், பென்சில், சாட்டை,
 
இவற்றை எல்லாம் வீட்டுக்கு உள்ளேயும் கொளுத்தி விளயாடலாம்.
 
பூச்சட்டிகள் முக்கியமான ஒன்று.
 
அதற்குப் பிறகு வெடி வகைகள், குருவி வெடி, ஜெய் ஹிந்து வெடி …. இதிலே லட்சுமி வெடிதான் டாப். அணுகுண்டு என சொல்லப் படும் விளையாட்டு வெடிகளும் உண்டு. அது சிறியதாக இருந்தாலும் மிக அதிகமான வெடி சத்தத்தை எழுப்பும்.
 
இதற்கும் மேலே , மேலே செல்லக் கூடிய ராக்கெட்டுகள் … இப்படியாக லிஸ்ட்டை எழுதும்போதே மிகுந்த ஆர்வமும் பரபரப்பும் இருக்கும்.
 
வீட்டிலே ஒவ்வொருவரம் ஒரு லிஸ்ட் போடுவார்கள.
 
பள்ளியிலே நண்பர்கள என் லிஸ்ட்டுதான் பெரியது என்று காட்ட, பழைய லிஸ்ட்டுகள் கசக்கி எறியப் பட்டு, நீளமான புதிய லிஸ்ட்டுகள் உருவாக்கப் படும் …..
 
(தொடரும்)

Advertisements

3 Responses to "உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!"

சகோ திருச்சிக்காரன் அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

திரு திருச்சிக்காரர் அவர்களே,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு நல்ல பதிவு.

///நான் சந்தித்த தீபாவளிகள் பற்றிய நினைவுகள் பசுமையாக நெஞ்சிலே நிறைந்து உள்ளன.///

எனக்கும் தீபாவளி என்றால் பல பசுமையான நினைவுகள் வருகிறது.
உங்களுக்கும்,உங்கள்குடும்பத்திருக்கும், மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்து தெரிவித்த சகோதரர்கள் ரசீன், தனபால், ஆகியோருக்கு நன்றிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: