Thiruchchikkaaran's Blog

சமரசம் எங்கள் வாழ்வென்போம் !

Posted on: November 1, 2010


உலகில் எல்லா மதத்தவரும்  வெறுப்புணர்ச்சி இல்லாமல் தங்கள மதங்களை சிறப்பாக பின்பற்ற முடியும், என்பதே என்னுடைய கருத்து. எனவே எல்லோரையும் வெறுப்பற்ற அன்பு பாதைக்கே நாம் அழைக்கிறோம்.

பல்வேறு தளங்களில் உள்ள கருத்துக்களைப் படிக்கும் போது 
இது விடயமாக , நமது அன்புக்குரிய சகோதரர் ரசீன் அவருடைய கட்டுரையிலே பின் வருமாறு குறிப்பிட்டு இருக்கிறார். 

 
//மேலும் இப்படிப்பட்ட தவறான வழிகாட்டுதலை தவிர்க்கவே,இஸ்லாத்தை பிற மக்களிடம் அறிமுகப்படுத்தவும்,அவர்களிடம் கொண்டு
 
சேர்க்கவும் முஸ்லீம்களையே இஸ்லாம்  பணிக்கிறது.
 
இஸ்லாம்,அடிப்படையாக ஒவ்வொரு முஸ்லீமுக்கும்,தனது மார்க்கத்தை
பிறரிடம்
எத்திவைப்பதை கடமையாக்கியுள்ளது.அதை எப்படி செய்யவேண்டும் என்பதையும்,
அதன் வரம்புகளையும் அழகாக கற்றுத்தருகிறது.//
 
நல்லது. இஸ்லாத்தின் கோட்பாடுகளை  பற்றி மற்றவருக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.
 
ஸ்வாமி விவேகானந்தர்  “உலகில் உள்ள எல்லா மதங்களைப் பற்றியும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கலாம். அவற்றில் எந்த மதம் ஒருவருக்குப் பொருத்தமாக இருக்கிறதோ, அதை அவர் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்” என்கிற மிக சிறப்பான கருத்தை சொல்லி உள்ளார்.
 
இஸ்லாத்தைப்  பற்றி நீங்கள் மற்றவருக்கு எத்தி வைப்பதை  (சொல்லிக் கொடுப்பதை) இஸ்லாமியரின் அடிப்படை கடமை என்கிறீர்கள்!. அதே போல பிற மதத்தவர் தங்கள் மதத்தை இஸ்லாமியரிடம்  எத்தி வைக்க  இஸ்லாம் அனுமதிக்கிறதா, என்பதை நீங்கள் விளக்க முடியுமா?
 
நாங்கள் கேள்விப்பட்ட வகையிலே சில ஆப்பிரிக்கா நாடுகளிலும், சில அரேபிய நாடுகளிலும் பிற மதங்களை பற்றிய பிரச்சாரத்தை அனுமதிப்பதில்லை, தடை செய்து இருக்கிறார்கள்  என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். பிற மதங்களைப் பற்றிய பிரச்சாரம் செய்தாலோ, பிற மதக் கடவுள்களை வழிபட்டாலோ அவர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டதாக சமபவங்களை சில பத்திரிகைகளில் படித்து இருக்கிறோம்.
 
அந்த நாடுகள் மத, அரசியல், சமூக, பொருளாதார  கோட்பாடுகள் எல்லாவற்றிலும் இஸ்லாத்தை அப்படியே பின்பற்றுவதாக சொல்லப் படுகிறது.
 
 
 
பிற மத பிரச்சாரங்களை தடை செய்து சட்டம் இயற்றி உள்ள அவர்கள இஸ்லாத்தின் கோட்பாட்டின்  படி செயல்படுகிறார்களா? அல்லது  அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாட்டுக்கு விரோதமாக செயல் படுகிறார்களா?
 
உலகில் எல்லோரிடமும் தன்னுடைய மார்க்கத்தை எத்தி வைக்க  சொல்லும் இஸ்லாம்,  பிற மதங்களும் அவ்வாறே தங்களுடைய கருத்துக்களை இஸ்லாமியரிடம் எத்தி வைக்க அனுமதிக்கிறதா?  திறந்த மனதுடன் வரவேற்கிறதா?

நான் நம்முடைய நண்பர்களை தாழ்மையுடன்  கேட்டுக் கொள்வது என்னவென்றால், இது விடயமாக நம்முடைய கருத்துக்கள் இஸ்லாமிய மத சகோதரர்களையோ, குறிப்பாக சகோ. திரு. ரசீனையோ  மனம் புண்படும் வகையிலே இல்லாமல், உலகில் உள்ள அனைவரயும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வரும் வகையிலே அமையட்டும் என்று தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

1 Response to "சமரசம் எங்கள் வாழ்வென்போம் !"

கிருஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் தம் மதத்திற்கு ஆள் சேர்க்கும் எண்ணம் இருக்கும் வரை சமரசம் ஏற்ப்படப்போவதில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: