Thiruchchikkaaran's Blog

நல்ல விசயங்களை ஏம்பா விஸ்தாரமா அடிக்கடி சொல்றீங்க…..எங்களுக்கு எரிச்சல் வருதுப்பா…!

Posted on: October 27, 2010


 

கீதையில் சொன்ன  “அத்வேஷ்டா”  என்ற  வார்த்தையை   மீண்டும்  மீண்டும்  சொல்லுறாங்களே …..  அதைக்  கேட்டா  எரிச்சலா  இருக்கே … என்கிற வகையிலே சில நண்பர்கள் பீல் பண்ணுகிறார்கள். அதாவது கிரிஷ்ணரை கடவுளாக வழிபடுபவர்கள் சிலரே இப்படி ஏகத்துக்கும் எரிச்சல் படுகிறார்கள்.

 

 

அன்பு க்கு  எதிரானது  வெறுப்புணர்ச்சி . சிநேகத்துக்கு  எதிரானது  வெறுப்புணர்ச்சி . நல்லிணக்கத்துக்கு  எதிரானது  வெறுப்புணர்ச்சி . அமைதிக்கு  எதிரானது வெறுப்புணர்ச்சி  .
 
ஒருவரின் மனதில் வெறுப்புணர்ச்சி  இருந்தால் அது அவரின் மனதில் உள்ள நீதி, கண்ணியம், அன்பு எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி விட்டு மனிதனை மிருகமாக்கி விடும் சக்தி உடையது.

எந்த  அளவுக்கு  மக்கள்  மனதில்  வெறுப்பு  இருக்கிறதோ  அந்த  அளவுக்கு  அப்பாவி  மக்கள்  கஷ்டப்  படுகிறார்கள் . மானிட  சமுதாயம்  சிதைக்கப்  படுகிறது .
 
பிற  இனத்தவர்  , பிற  மொழி   பேசுவோர்,  பிற  நாட்டவர் , பிற  மதத்தவர் …. இப்படியாக  பல்வேறு  விதமான  வெறுப்புணர்ச்சிகள்  மனிதர்  மனதில்  உருவாகி    பரப்பப்  படுகிறது .
 
ஹிட்லரக்கு  யூதர்கள்  மேல்  வெறுப்புணர்ச்சி  வந்தததால் , யூதர்களை  இன  அழிப்பு  செய்தான் .
 
சிங்கள  பேரின  வாதிகள்  இனவெறியால்  அப்பா வி  தமிழர்  பலரை  கொடுமைப்  படுத்திக்  கொன்று  விட்டனர் .
 
பிறர்  மீது  காரணமே  இல்லாமல்  எதற்கு  வெறுப்புணர்ச்சி  வர  வேண்டும் .
 
முதலாளித்துவ  சிந்தனையாளருக்கு  பொது  உடமை  

சிந்தனைகளை  முற்றாகப்  பிடிக்கவில்லை .   பொது  உடமை  கோட்பாட்டில்  உள்ள  நன்மைகள்  என்ன  என்று  சிந்திக்கக்  கூடாதா ? கஞ்சிக்கு  வழி  இல்லை  என்றால்  எல்லோரும்  கம்யூனிஸ்ட்  தான் .
 
கம்யூனிஸ்ட்  காரருக்கு  அவர்களுடைய  சித்தாந்தை  தவிர  வேறு  எல்லா  சித்தாந்தங்கள்  மீதும்  வெறுப்பு . பிற  சித்தாந்தங்களில்  என்ன  நன்மை  இருக்கிறது  என்று  ஏன்  பார்க்கக்  கூடாது ?
 
மொத்தத்திலே  எந்த  ஒரு  கோட்பாட்டையும்  வெறுக்காமல்  நடு  நிலையுடன்  அணுக  வேண்டும் .
 
ஒரு  மனிதர்  வெள்ளையரோ, , கருப்பரோ , ஆசியரோ .. அவரை  காரணம்  இல்லாமல்  வெறுக்க  கூடாது .
 
ஒவ்வொரு  மனிதரிடத்திலும்  நல்ல  கருத்துக்களை  சொல்லி  எல்லோரையும்  நாகரிக  மனிதராக 

 மாற்றுவதே  சிந்தனையாளர்களின்  பணி .  ஒரு  மனிதர்  முரட்டுப் பிடிவாதம் உள்ள  கொடுமையாளராக  இருக்கிறார்  என்றால் , நானும்  அவரைப்   போல  கொடுமையாளராக  மாறுவேன்  என்று  சொல்வது   ஆக்க   பூர்வமான  பாதை  அல்ல .
 
எனவே  வெறுப்புனர்ச்ச்யை   கை  விடுவது  மனித  சமுதாயம்  நாகரீகமாக  வாழ  அவசியமானது .
 
பாரதியார்   சொன்னது  போல  விதம்  விதமான  கார்களில்  செல்வதாலோ , விமானத்தில்  பரப்பதாலோ , கணினி , அலைபேசி  உள்ளிட்ட  சாதனங்களை  உபயோகிப்பதாலோ  ஒருவன்  நாகரீகமானவனாக 

 கருதப்  பட  முடியாது .
 
நன்கு  படித்து , ஸ்டையிலாக  இருப்பவன்  வெறுப்புணர்ச்சி  உடையவனாக  இருந்தால் , அந்த  வெறுப்பினால  உந்தப்  பட்டு  அடுத்தவருக்கு  அறிந்தோ  அறியாமலோ  தீங்கு  செய்து  விடலாம் . 
 
படிக்காத  ஏழை  ஒருவன்  கந்தல்  உடை  அணிந்தவனாக  இருந்தாலும்  ,அவன்  மனதில்  வெறுப்புணர்ச்சி  இல்லை  என்றால்  அவனால்  யாருக்கும்  தீங்கு  இல்லை.
 
இதை  எல்லாம்  நாம்  சிறிது  யோசிதாதலே   லாஜிக்கின்  அடிப்படையிலே ,  பகுத்தறிவின்  மூலமே  அறிந்து  கொள்ள  முடியும் .
 
தத்துவங்களின்   சிகரம்  என  சொல்லப்  படும்  கீதையில்  கிரிஷ்ணர் 
  இந்தக்  கருத்தை  முக்கியக்  கருத்தாகக்  குறிப்பிட்டு , அத்வேஷ்டா  வாக  இருப்பவன்  தனக்கு  மிகவும்  பிரியமானவன்  என்று  சொல்லுகிறார் .
 
போஜராஜன்  காளிதாசனின்  ஒரு  கவிதைக்கு – வார்த்தைக்கு  வார்த்தை  ஆயிரம்   பொன்  கொடுத்தானாம் .
 
அத்வேஷ்டா  என்ற  ஒரே  வார்த்தைக்கு  இந்த  உலகத்தில்  உள்ள  அத்தனை  பொன்னையும் , அத்தனை  பணத்தையும்  கொட்டிக்  கொடுத்தாலும்  அது  இந்தக்   கருத்துக்கு  ஈடாகாது .

 
பொன்னோ ,  பணமோ  மனிதத்தைக்  காக்க   இயலாது . இந்த  அத்வேஷ்டா என்னும்  கருத்து  மனிதத்தைக்  காக்கக்  கூடியது . எந்த  அளவுக்கு  வெறுப்புணர்ச்சி  இல்லாமல்  இருக்கிறார்களோ  அந்த  அளவுக்கு  மனிதம்  காக்கப்  படும் .
 
எனவே  அத்வேஷ்டா ,( வெறுப்புணர்ச்சி  இல்லாமல் )  என்பதை  ஒரு  முறை  அல்ல , இரு  முறை  அல்ல ,   ஓராயிரம்   முறை … சொல்லுவோம் ,  இந்த  உலகில்  ஒவ்வொருவரிடமும்  இதை   சொல்ல  வேண்டியது   மிக  அவசியமானது.  

 
(இதைப் பற்றி இன்னும் தொடர்ந்து எழுதுவோங்கண்ணா  )

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: