Thiruchchikkaaran's Blog

சங்கராச்சாரியார் யார்?

Posted on: October 24, 2010


Title: சங்கராச்சாரியார் யார்

 
இந்தியாவின்
 முன்னாள் பிரதமரான திருமதி இந்திரா காந்தியை  ஒரு நிருபர் பேட்டி கண்டபோது அவரிடம், இந்திய வரலாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளவர்களில்  உங்களை மிகவும் கவர்ந்த நபர் யார் என்று கேட்டார்

 

அதற்கு திருமதி இந்திரா காந்தி உடனே  ஆதி சங்கரர் என்று பதில் அளித்தாராம்நான் சிறுவனாக இருந்த போது இதைப் பத்திரிகைகளில் படித்தவுடன் படிக்கும் போது எனக்கு இது பெரிய வியப்பை அளித்தது.

 

 

திருமதி காந்தி தன்னுடைய தந்தையான நேருவைக் குறிப்பிடவில்லை. உலகமே வியக்கும் வண்ணம் அஹிம்சை முறையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்தி சென்ற மகாத்மா காந்தியைக் குறிப்பிடவில்லை. மாமன்னர் அக்பரைக்  குறிப்பிடவில்லை, சத்ரபதி சிவாஜியைக் குறிப்பிடவில்லை. இந்திய துணைக் கண்டத்தை தாண்டி வெளியே படை எடுத்து சென்று, (இன்றைய மலேசிய, இந்தோனேசிய பகுதிகளை ஆண்ட) ஸ்ரீ விஜய பேரரசை வென்ற இராசேந்திர சோழனைக் குறிப்பிடவில்லை. இந்திய நெப்போலியன் என அழைக்கப் பட்ட சமுத்திர குப்தனை குறிப்பிடவில்லை. ஹர்ஷரை, கனிஷ்கரைக் குறிப்பிடவில்லை. மாபெரும் வெற்றி அடைந்தும், அதற்குப் பிறகு போரே வேண்டாம் என அமைதி வழிக்கு திரும்பி உலகை வியக்க செய்த மகா அசோக சக்கரவர்த்தியைக் கூட குறிப்பிடவில்லை.

 

 

 பள்ளிகளில் நாம் வரலாறு படித்து இருக்கிறோம். அதில் ஆதி சங்கரரைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது.

 

 

 ஆனால் மகாத்மா காந்தி, அசோகர், இராஜேந்திர சோழன்இவர்களை எல்லாம் விட்டு விட்டு திருமதி இந்திரா காந்தி,  ஆதி சங்கரரைக் குறிப்பிட்டு தன்னை மிகவும் கவர்ந்தவராக சொல்கிறார் என்றால் அந்த அளவுக்கு அவர் செய்தது என்ன என்று எனக்கு அப்போது கொஞ்சம் கூட புரியவில்லை.

 

ஏனெனில் இராணுவ , அரசியல்  மற்றும்   பொருளாதார  துறைகளில்  பலரும்  பெற்ற   வெற்றிகளை  நாம்   எளிதாக  அறிந்து  கொள்ள  முடிகிறது .
 
 
 
பின்னாளில்  சிந்தனைகள் , ஆன்மிகம்  மற்றும்  சமயக்  களங்களில்  பலரும்  ஆற்றிய  பணியை  நாம்  ஆராய்ந்தோம். அந்த  வகையிலே  ஆதி  சங்கரர்  தன்னை மிகவும்   கவர்ந்தவராக  திருமதி . காந்தி  அறிவித்ததில்  வியப்பேதும்  இல்லை  என்று  சொல்லத்  தக்க  வகையிலே  ஆதி  சங்கரரின்  பணி  அமைந்து  இருக்கிறது.

 

 

 

 

 
                       File:Raja Ravi Varma - Sankaracharya.jpg
ஆதி  சங்கரர்  மிகவும்  குறுகிய  காலமே  வாழ்ந்து  இருக்கிறார் . அவர்  வாழ்ந்தது  கிட்டத்  தட்ட  32வருடங்கள்  மாத்திரமே .
 
அதிலே  முதல்  பதினாறு  வயதிற்குள்  அவர்  நான்கு  வேதங்களையும்  கற்று  அறிந்து  இருக்கிறார் .
 
தான்  கற்ற  வேதங்களின்  உண்மைப்  பொருள்  என்ன  என்று  ஆராய்ந்து  அவற்றை  ஒரு  கோட்பாடாக  
தொகுத்து  இருக்கிறார் .
 
தன்னுடைய  அனுபவத்தின்  மூலாமாக  தன்னுடைய  கோட்பாடுகளை  தானே  நேரிலே  உணர்ந்து  சரி  பார்த்து  தன்னுடைய  கோட்பாட்டை   அவர்  உருவாக்கி  இருக்கிறார்  என்பதாக  அறிகிறோம் . இது  முக்கியமாது , வெறுமனே  நூல்களைப்  படித்து  விட்டு , இதை  அப்படியே  ஒத்துக்  கொள்  என்று  திணிக்க  முற்படாமல் , தன்னுடைய  நேரடி  அனுபவத்தில்  ஆதி  சங்கரர்  அவற்றை  உணர்ந்ததாக  சொல்லப்  பட்டு  இருக்கிறது .
 
முயன்றால் எவரும்  

   நேரடி  அனுபவத்தின்  மூலம்  ஆன்மீக  உண்மைகளை  உணர  முடியும்  என்பதும் , அப்படி  நேரடியாக  உண்மைகளை  அனுபவத்தில்  உணராவிட்டாl பலன்  இல்லை  என்பதும்  அவரின்  அழுத்தமான  கோட்பாடு .

 
இப்படியாக  சங்கராச்சாரியாரின்  வாழ்க்கையின்  முதல்  பகுதி  ஆன்மீக  நூல்களை  கற்பதிலும் , ஆன்மீக  பயிற்ச்சிகளை  மேற்கொண்டு  ஆன்மீக  உணமைகளாக  தான்  கனடரிந்தவர்ரை  ஒரு  கோட்பாடாக  உருவாக்குவதுமாக  இருந்திருக்கிறது.
 
அத்வைதம்  எனப்  படும்  இவரது  ஆன்மீக  கோட்பாடு  தத்துவங்களின்  சிகரம்  எனக் கருதப்  படுகிறது . அதைப்  பற்றி  நாம்  விரிவாக  பிறகு ஆராய்வோம்.
 
இப்படியாக  சங்கராச்சாரியாரின்  வாழ்க்கையின்  முதல்  பகுதி  ஆன்மீக  நூல்களை  கற்பதிலும் , ஆன்மீக  பயிற்ச்சிகளை  மேற்கொண்டு  ஆன்மீக  உணமைகளாக  தான்  கனடரிந்தவர்ரை  ஒரு  கோட்பாடாக  உருவாக்குவதுமாக  இருந்திருக்கிறது.
 
அத்வைதம்  எனப்  படும்  இவரது  ஆன்மீக  கோட்பாடு  தத்துவங்களின்  சிகரம்  எனக் கருதப்  படுகிறது . அதைப்  பற்றி  நாம்  விரிவாக  பிறகு ஆராய்வோம்.  
 
இப்படி  அறிந்த  தத்துவ  உண்மைகளை  இவர்  பதினாறு  வயது  முதல்  முப்பத்து  இரண்டு  வயதிற்குள் ,  இந்தியா  முழுவது  கால்  நடையாக  நடந்து  சென்று  பரப்பி  இருக்கிறார் . பல்வேறு  அறிஞ்சர்  களுடுன்  விவாதம்  நடத்தி  தன்னுடைய  கோட்பாடு  சரியானது  என்பதை  அவர்கள்  உணரும்  வண்ணம்  செய்து  இருக்கிறார் .
 
தனி  ஒரு  மனிதனாக , பதினாறே  வருடங்களில்  இந்து  மத்ததை  இந்தியாவில்  மீண்டும்  நிலை  நிறுத்தி  விட்டார் .
 
இந்து  மதமானது  உண்மைக்கு  அழைத்து   செல்வது , உண்மையை  அறியுமாறு   ஒருவனைத்  தூண்டுகிறது  என்பதாலே , அடிப்படையிலே  பகுத்தறிவிக்கும்  , அனுபவத்துக்கும் இந்து மதத்தில்    முக்கியத்துவம்  கொடுப்பதாக  இருக்கிறது .
 
அத்தகைய  பகுத்தறிவு  அடிப்படையிலான  புராதன  இந்து  மதத்தை  பதினாறே  வருடங்களில்  இந்திய  துணைக்  கண்டத்தில்   புனர்  நிர்மாணம்  செய்து  விட்டார் .
 
படித்த  பண்டிதர்கள்  மட்டும்  அல்லாமல்  சாதாரண  மக்களும்  பின்பற்றி  ஆன்மீக  உயர்வு  அடையும்  படிக்கு  எளிமையான  முறையில்  எல்லோருக்குமான  பக்தி  மார்க்கத்தையும்  அமைத்து  
தந்திருக்கிறார் .
 
சமய  சச்சரவு கள்   இல்லாத  படிக்கு  மத  நல்லிணக்கத்தை  உருவாக்கி  இருக்கிறார். இந்தியாவில்  தொன்று  தொட்டு  மக்களா ல்  வழிபடப்  பட்டு  வந்த  தெய்வங்களான  அம்மன் , கோவிந்தன் , முருகர் , சிவன் … இப்படியான  எல்லா  தெய்வங்களையும்  பாடி  அவரவர்கள் ளுக்கான  வழிபாட்டு  முறையை  வூக்கப்  படுத்தி , அதே  நேரம்  நல்லிணக்கத்தையும்  வளர்த்து  இருக்கிறார் .
 
கத்தியின்றி , இரத்தமின்றி , காசின்றி , பணமின்றி  பதினாறே  வருடங்களில்  இந்திய  துணைக்  கண்டத்தின்  ஆன்மீக  துறையில்  மாபெரும்  மாற்றத்தை  உருவாக்கி  வெற்றி  வாக்கை  சூடி  இருக்கிறார்  ஸ்ரீ  சங்கராச்சாரியார் .
 
அவருடைய  கோட்பாடு , மற்றும்  செயல்  பாடுகள்  பற்றி  நாம்  இன்னும்  தொடர்ந்து  பல  கட்டுரைகளின்  மூலம்  ஆராய்வோம்
Advertisements

3 Responses to "சங்கராச்சாரியார் யார்?"

ஆதிசங்கரரை பற்றி மேலும் விபரம் தெரிய சுட்டிகளை க்ளிக் செய்து படிக்கவும். இத்தொடரை தொடர்ந்து படித்து வரவும். நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.

1.
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 13. ஆதிசங்கரர் யார்?

2. இந்து மதம் எங்கே போகிறது?

….

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி திரு தாத்தாச்சாரியார் அவர்களே .

சங்கராச்சாரியாரின் கோட்பாடுகள் பற்றி பல விளக்கக் கட்டுரைகள் நம்முடைய தளத்தில் வெளியாகும். அவற்றையும் படித்து கருத்தைப் பதிவு செய்யக் கோருகிறோம்.

திரு திருச்சிக்காரர் அவர்களே,

///அத்வைதம் எனப் படும் இவரது ஆன்மீக கோட்பாடு தத்துவங்களின் சிகரம் எனக் கருதப் படுகிறது . அதைப் பற்றி நாம் விரிவாக பிறகு ஆராய்வோம்.///

இந்த அத்வைதக் கோட்பாடே இன்றைய அறிவியலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.ஆனால் இந்த அத்வைதக் கோட்பாடு வேதத்தில் உள்ளதே.அதை எடுத்துக்கூறியவரே ஆதி சங்கரர்.நீங்கள் கூறியபடி 16 வருடங்களிலேயே அவர் செய்த இந்த சாதனைக்கு 100 நோபல் பரிசுகள் தந்தாலும் இணையாகாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: