Thiruchchikkaaran's Blog

ஈஸ்வர் அல்லா தேரோ நாம்! சமரச சன்மார்க்க கோட்பாடு! நண்பர் ரசீனுக்கு நமது வேண்டுகோள்!

Posted on: October 22, 2010


 ஈஸ்வர் அல்லா தேரோ நாம் – சமரச சன்மார்க்க கோட்பாடு- நண்பர் ரசீனுக்கு நமது வேண்டுகோள் :

 
இணையம் மூலம் நமக்கு பரிச்சயமான நமது அன்புக்குரிய நண்பர்களில் ஒருவர் திரு. ரசீன் அப்துல் ரஹ்மான் அவர்கள். நமது தளத்தில் அவர் சில பின்னூட்டங்களை வழங்கி பங்கெடுத்துள்ளார். நமது தளத்தைக் காட்டிலும் அதிக அளவில்  தமிழ் இந்து தளத்தில் நானும் அவரும் பல விடயங்களை விவாதித்து இருக்கிறோம்.  இஸ்லாத்தில் ஆழ்ந்த பற்றுடைய அவர், இஸ்லாத்தை சேர்ந்த சிலர் அடிப்படை வாத இஸ்லாத்தை வலியுறுத்திய போது அவர்களின் கருத்தை மறுத்து தமிழ் இந்து தளத்தில்   பல பின்னூட்டங்களை  இட்டதை நாம் நினைவு கூர்கிறோம்.
 
சமீபத்தில் அவருடைய தளத்திலே “அல் குர் ஆனை அறிவோம் …. (என் ஹிந்து சகோதரர்களே) என்கிற கட்டுரையை அவர் பதிவு இட்டு உள்ளார்”.
அக் கட்டுரையில் திரு குர் ஆனைப் பற்றிய விளக்கங்களை அவர் வழங்கி உள்ளார். அக்கட்டுரையைப் படித்தவுடன் நம் மனதில் எழுந்த எண்ணங்களை ஒரு மடலாக வரைந்து இருக்கிறோம்.

அன்புக்குரிய சகோதரர் ரசீன் அவர்களே,
 
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
உங்களுடைய  “அல்குர் ஆனை அறிவோம்…(என் ஹிந்து சகோதரர்களே)”,   கட்டுரையை வரவேற்கிறோம்.
 
 திரு குர் ஆனை பற்றி ஓரளவுக்கு பிற மதத்தவருக்கும் தெரிந்து இருக்கிறது. வட்டி வாங்கக் கூடாது. சூதாடக் கூடாது,  குடிக்கக் கூடாது போன்ற  சமூக நனமைக்கான  கருத்துக்கள் அவற்றில் உள்ளன.
 
 திரு குர் ஆன் பற்றிய விளக்கங்களை தருகிறீர்கள்.  அதை வரவேற்கும் நேரத்தில் நாங்கள் அதை  விட முக்கியமாக   உங்களிடம்  எதிர்பார்ப்பது, அறிய விரும்புவது  என்னவென்றால், இஸ்லாமியர்களும், இஸ்லாமும் மற்ற மதங்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள், மற்ற மதங்களோடு எந்த அளவுக்கு  சமரசப் போக்கை கடைப் பிடிக்கப் போகிறீர்கள், என்பதே.
 
இது இஸ்லாத்துக்கு  மட்டுமல்ல,  எல்லா மதங்களுக்கும் எல்லா மதத்தவருக்கும்   பொருந்தும். இந்து மதமோ, புத்த மதமோ, கிறிஸ்தவ மதமோ, பார்சி  மதமோ, இஸ்லாமிய மதமோ …. உங்கள் மதம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது,  நீங்கள் நெடுஞ்சாண்  கிடையாக  விழுந்து வழிபாடு செய்கிறீர்களா அல்லது   மண்டி போட்டு வழிபாடு  செய்கிறீர்களா… இது போன்ற விவரங்களை எல்லாம் சொல்லுவதோடு, அவற்றுக்கு முன்னால், பிற மதத்தவரோடு எந்த அளவுக்கு சமரசமாக , இணக்கமாக வாழத் தயாராக இருகிறீர்கள் என்பதையே எல்லா மதத்தினரிடம்  இருந்தும் தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இது மக்களின் வாழக்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்  கூடியதாக  இருக்கிறது.
 
 
எங்கள் மதம் எங்களுக்கு , அவர்கள் மதம் அவர்களுக்கு என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்.ஆனால் பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி இல்லை, பிற மதங்கள் தெய்வங்களாக வழிபடுபவர்களின் மீதோ, அவர்களின் வழிபாட்டு முறைகள்,  வழிபாட்டு தளங்கள்  மீதோ மனதில் வெறுப்பு இல்லை என்பதை உறுதி செய்வதே  முக்கியமானது.
 
ஏனெனில் ஒருவரின் மனதில் வெறுப்புணர்ச்சி  இருந்தால் அது அவரின் மனதில் உள்ள நீதி, கண்ணியம், அன்பு எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி விட்டு மனிதனை மிருகமாக்கி விடும் சக்தி உடையது.
 
 
மேலும் நீங்கள் ஜிஹாத் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறீர்கள். அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள மீது நடத்தப் பட்ட தாக்குதல் பற்றிய உங்களின் கருத்து என்ன?
 
 அமெரிக்காவில் இஸ்லாமியரின்  வழிபாட்டுக்கு எந்த ஒரு தடங்கலோ , இடையூறோ இல்லை, குறிப்பாக 2000௦௦௦ ஆண்டுக்கு  முன்னால  அமெரிக்காவில் இஸ்லாமியர்  மீது தனியாக எந்த ஒரு கட்டுப்பாடோ, அடக்குமுறையோ  கிடையாது. 
 
அப்படி இருக்கும் போது அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? அவற்றை நீங்கள் கண்டிக்கிறீர்களா? அப்படியானால் ஜிஹாத் பற்றிய விளக்கத்தை நீங்கள் அளிக்க வேண்டியது இஸ்லாமிய சமுதாயத்தை  சேர்ந்தவர்களுக்கு தானே?
 
உலகில் எந்த ஒரு இஸ்லாமியரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பது பற்றிய  பிரச்சாரத்தை தொடர்ச்சியாக உங்கள் தளத்தின் மூலம் நீங்கள் நடத்துகிறீர்களா?
 
 
குதாபிஸ்
 
திருச்சிக்காரன்

Advertisements

9 Responses to "ஈஸ்வர் அல்லா தேரோ நாம்! சமரச சன்மார்க்க கோட்பாடு! நண்பர் ரசீனுக்கு நமது வேண்டுகோள்!"

nanparhaley matham manithankadamay kanyam kadduppadu nallolukkam purynthvaalum thanmay pothuvaaha olukam niraithavarkalaaka vaala uruvaakkappaddathu

Mr, Mohan,
thanks for visitig the site and registering yur comments.

சகோ திருச்சிக்காரன் அவர்களே.

தங்களது பதிவையின்,மெயிலையும் பார்த்தேன்.நன்றி.பிற மதங்களை பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? என கேட்கிறீர்கள்.மதநல்லிணக்கம் என்பதே ஒரே வார்த்தையில் சொல்லக்கிடைக்கும் பதில்.இது பற்றி விரைவில் விரிவானதொரு பதிவு இன்ஷா அல்லாஹ் வெளியிடுகிறேன்.இப்படி ஒரு பதிவு எழுத என்னை தூண்டிய தங்களுக்கு என் நன்றிகள்.

இரட்டை கோபுர தாக்குதல் பற்றி கேட்டுள்ளீர்கள்.எனக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்கள்,மற்றும் தகவல்கள் அடிப்படையில்,அது அமேரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல்.இதை சொன்னால்,எவனாவது,தன்னாட்டை தாக்கி அழிப்பானா?என கேட்பீர்கள்.அமேரிக்கா செய்வதற்கு பல்வேறு முகாந்திரங்கள் உண்டு.அதுவல்லாது.எனது கணிப்பு படி,பின் லேடன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.இருந்தால் அமேரிக்க கஸ்டடியில் இருக்கலாம்..
ஆப்கான் மீது போர் தொடுக்க ஒரு பின்லேடனின் கோபுரத்தாக்குதல் தேவைப்பட்டது அமேரிக்காவுக்கு,ஈராக்குடன் போர் தொடுக்க,ஒரு ரசாயண ஆயுத காரணம் தேவைப்பட்டது.இன்னும் ஈரானுக்கு,அணுஆயுத காரணம் ரெடி,விரைவில் போரை எதிர்பார்க்கலாம்.அடுத்து,தென் கொரியா,சிரியா,…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..நாளை இந்தியாவை தாக்க வேண்டுமென்றால்…அதற்கும் இப்படி ஒரு காரணம் அமேரிக்கா உருவாக்கும்..
அமேரிக்காவின் இன்றைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள,அல்லது அதன் கொள்கைகளை எதிர்ப்பவர்களை அழிக்க,இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தை சொல்லி சொல்லி,மக்கள் மத்தியில் பரப்பப்பட்டாகிவிட்டது.

அதற்காக முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்துவதில்லை என நான் மறுக்கவில்லை.அது தவறு என்பதில் மாற்றுக்கருத்து நான் கொள்ளவில்லை.அப்படியான தாக்குதல்கள் வெகு சொர்ப்பமே..ஆனால் இன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தை, சில நாடுகளின் மீது போர் தொடுப்பதற்கு காரணமாகவும்.இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் ஆதாயம் பெறுவதற்கும்,பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை.

தீவிரவாதத்தை மதத்துடன் சேர்த்து,மதத்தை பழிப்பது அறிவார்ந்த செயல் அல்ல.இஸ்லாத்தின் பேரால் நிகழும் தாக்குதல்களை கண்டிக்கும் முதல் குரல்,ஒரு முஸ்லீமுடையாதாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

நன்றி.

சகோதரர் ரசீன் அவர்களே,

கருத்துப் பதிவு இட்டதற்கு நன்றி

மத நல்லிணக்கம் என்று சொல்லியிருப்பதை வரவேற்கிறோம். பிற மதங்கள் மீது, பிற மதங்களின் தெய்வங்களின் மீது வெறுப்பு எதுவும் இஸ்லாத்தில் இருக்கிறதா, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களிடம் வெறுப்பு இருக்கிறதா என்பதை பற்றி முக்கியமாக கேட்டு இருந்தோம். அதை விளக்கினால் நல்லது.

நாம் இதை எழுதுவது இஸ்லாத்தையோ, இஸ்லாமியர்களையோ குறை சொல்ல அல்ல. உலகில் பல மார்க்கங்களைப் பற்றிய பிரச்சாரமாக செய்யப்பட்டு எல்லா மக்களின் மனதிலும் உருவாக்கப் பட்டுள்ள வெறுப்புணர்ச்சியை குறைத்து பதிலாக சிநேகத்தை, அன்பு உணர்ச்சியை உருவாக்க நீங்களும் உதவுவீர்கள என்ற நம்பிக்கையிலே இதை எழுதுகிறோம்.

இரட்டை கோபுரங்கள் தாக்குதல் பற்றிய இதே விளக்கத்தை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் இந்த விளக்கம் உங்களுக்கே திருப்தியாக இருக்கிறதா? இது பற்றியும் தொடர்ந்து விவாதிப்போம்.

//தீவிரவாதத்தை மதத்துடன் சேர்த்து,மதத்தை பழிப்பது அறிவார்ந்த செயல் அல்ல.இஸ்லாத்தின் பேரால் நிகழும் தாக்குதல்களை கண்டிக்கும் முதல் குரல்,ஒரு முஸ்லீமுடையாதாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.//

ஒரு குரல் மட்டும் அல்ல. ஒவ்வொரு இஸ்லாமியரும் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப் படும் தீவிரவாதத்தை கண்டித்து குரல் எழுப்ப வேண்டும். தங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர்களிடமும் தீவிரவாதம் மனித சமுதாயத்துக்கு எதிராக கடும் தீங்கு விளைவிப்பது என்பதை சொல்ல வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு இஸ்லாமியரும் போராட வேண்டும்.

இந்துக்களும் அவ்வாறே தங்கள் மதத்தின் பேரால் நடத்தப் படும் அத்து மீறல்களை, வன்முறையை, தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும்.

அப்போதுதான் நாம் நாகரீக சமுதாயமாக முடியும், இல்லை என்றால் வெளியிலே விதம் விதமாக வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு மனதளவிலே காட்டுமிராண்டிகளாக வாழ்வதாக கருதப்படக் கூடும் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(காட்டு மிராண்டி என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு காட்டு மிராண்டிக்ளைடம் மன்னிப்புக் கோருகிறேன். அவர்கள எவ்வளவோ மேலானவர்கள். கல்வி அறிவு இல்லாத காலத்தில் அவர்கள முரட்டுத் தனத்தில் ஈடுபட்டனர். இக்காலம் போல நன்கு படித்து விட்டு , கல்வி அறிவு பெறும் மத, இன, மொழி , சாதி அடிப்படையில் வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலை அவர்கள செய்யவில்லை. )

//இரட்டை கோபுர தாக்குதல் பற்றி கேட்டுள்ளீர்கள்.எனக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்கள்,மற்றும் தகவல்கள் அடிப்படையில்,அது அமேரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல்.இதை சொன்னால்,எவனாவது,தன்னாட்டை தாக்கி அழிப்பானா?என கேட்பீர்கள்.// ரஜின் அவர்களே, உங்களைப் போன்ற முஸ்லீம்கள் தான் அமெரிக்காவின் மீதான தாக்குதலை அமெரிக்காவே செய்தது என்று பிரசாரம் செய்துவருகிறீர்கள். ரெட்டை கோபுரம் இடிப்பு நிகழ்ச்சி நடந்த போது எனது பக்கத்து அலுவலகத்து முஸ்லீம்காரர் என்ன சொன்னார் தெரியுமா “பாத்தியா, எங்காளு வுட்டான் பாரு அடி, அமெரிக்காவுக்கு இது மரண அடி. பன்னினாங்க இல்ல..” என்று பெருமை பீற்றிக்கொண்டார். அந்த நபரை இப்போது பார்த்தால் உங்களைப் போல மாற்றிச் சொல்வார் என்று நினைக்கிறேன். உண்மையாக சொல்லப்போனால் அமெரிக்கா போர் அறிவிக்கும் வரை முஸ்லீம்கள் ஒரு மிதப்புடன் தான் அலைந்தார்கள். மும்பை போன்ற நகரங்களில் எல்லாம் அரபு நாட்டுப் பணமும், தாவூத் போன்ற இஸ்லாம் பெயரைச் சொல்லி வெறி கும்பல்கள் போடாத ஆட்டம் இல்லை. உலகை இஸ்லாம் நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரே பிரசாரத்தின் கீழ் பெருமையாக இயங்கினார்கள். அமெரிக்கா போர் அறிவித்த உடன் இவர்கள் எல்லாரும் அடித்து பிரண்டு கொண்டு ஐயோ இஸ்லாம் அமைதி மார்க்கம்.. ஐயய்யோ நாங்கள் எல்லாம் அன்பே தெய்வம் என்று வாழ்பவர்கள் என்று காலில் விழாத குறையாக கதறத் துவங்கிவிட்டார்கள். அது வரை கோயமுத்தூர் குண்டுவெடிப்பின் போது இஸ்லாம் அமைதிமார்க்கம் என்று கூறாதவர்கள், மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் போது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறாதவர்கள், வருஷம் தோறும் இந்தியாவில் முறைவைத்து மாநிலத்திற்கு மாநிலம் குண்டு வைக்கும் போது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறாதவர்கள், காஷ்மீர பண்டிட்டுகளை குடும்பம் குடும்பமாக கொன்று லட்ஷக்கனக்கானோரை சொந்த நாட்டில் அகதிகளாக்கி ஓடச்செய்த போது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறாதவர்கள் அமெரிக்கா அழித்து விடும் என்ற பயம் வந்தவுடன் இஸ்லாம் அமைதி மார்க்கம், ஐயோ எங்கள் வழி அன்பு வழி என்று முனங்கத் துவங்கிவிட்டார்கள். இப்படி இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு முகங்களுடன் இருக்கும் வரை இஸ்லாமியனை நம்ப முடியாது என்கிற நிலை தான் இருக்கிறது. இன்றைக்கும் கேரளத்தின் அப்துல் நாசர் மதானியை எந்த இஸ்லாமியனும் இஸ்லாம் தலைவர்களும் நேரடியாக கண்டிக்கவோ எதிர்க்கவோ இல்லை. மாறாக கூடிக் கூடி ஆதரிக்கிறார்கள். ரஜின், எனக்கும் முஸ்லீம் நண்பர்கள் உண்டு. மிகவும் சாதுவான நண்பனும் உண்டு, பேசும் போதே உங்க மதத்தில இந்த தப்பு பன்றீங்க என்று மதவாதியாகவே வாதிடும் நண்பனும் உண்டு. முதலாமவனுடன் பழகும் போதுஇருக்கும் சுதந்திரமும் அன்பும் இரண்டாமவனிடம் பழகும் போது இருப்பதில்லை. நம்பி பழக முடியலப்பா! நீங்க என்ன சொல்றீங்க.

திருச்சிக்காரன், மாற்று மதத்தினரின் மனதில் இருக்கும் முக்கிய கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயல்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

நன்றி திரு. ஆர். வி. அவர்களே,

நட்சத்திரமே தளத்திற்கு வந்து ஒளி விட்டது போல உங்களின் கருத்து அமைந்து இருக்கிறது.

பிற மதங்களின் மீது ஒருவருக்கு வெறுப்பு இல்லாவிட்டால் , உலகத்தில் எந்த அளவுக்கு இந்த வெறுப்பற்ற மன நிலையை உடையவர்கள் இருக்கிறார்களோ , அந்த அளவுக்கு இந்த உலகம் அமைதியாக இருக்கும், பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பதை, யாரும் எளிதில் புரிதல் செய்யலாம்.

இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உங்கள் நேரத்தை செலவழித்து கருத்துப் பதிவு இட்ட ஆதரவுக்கு நன்றி.

சகோ…இஸ்லாத்தின் வெறுப்புணர்ச்சி குறித்த தங்களது கேள்விக்கு பதில்,பதிவாக வந்தாகிவிட்டது,,,,

இதில் இஸ்லாம் குறித்த தங்களது புரிதல்களையும்,கருத்துகளையும் வரவேற்கிறோம்…

நன்றி

ரஜின்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: