Thiruchchikkaaran's Blog

சிகரம் தொட்டவர்கள்!

Posted on: October 21, 2010


சிகரம்  தொட்டவர்கள்  
 
 
இந்திய  மக்களின்  முக்கிய  கேளிக்கை  பொழுது  போக்கு  நிகழ்சிகளில் ஒன்றாக  திரைப்  படங்கள்  உள்ளன. 
 இன்றைய  கால  கட்டத்தில்  திரைப்  படத்  துறைக்கு  போட்டியாக  பல்வேறு  கேளிக்கை  நிகழ்ச்சிகள்   வந்து  கொண்டு  இருக்கின்றன . 1950- 1990 வரையிலான  கால  கட்டத்தில்  இந்திய  சமூகத்தில் சினிமாவின்  தாக்கம்  கணிசமாக  இருந்ததாக  கருதலாம் .
 
அதிலும்  குறிப்பாக  1950- 1970 காலகட்டத்தில்  இந்தி , தமிழ்  மற்றும்  தெலுங்கு  மொழி  படங்கள்  மக்கள்  வாழ்க்கையை  பிரதிபலிப்பதாக , இந்திய  சமூகத்தை  சித்தரிக்கும்  வகையிலே  அமைந்து  இருந்தன .
 
இந்தி  திரைப்படங்கள்  தென்   ஆப்பிரிக்க ,  எகிப்து  , அரேபியா , ஈரான் , ஈராக் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , நேபாளம் , பர்மா , உள்ளிட்ட  நாடுகளிலும்  பிரபலமாக  விளங்கின .
 
ஒரு  கான்பெரன்ஸில்   எகிப்து  நாட்டை  சேர்ந்த  ஒருவரை    சந்திக்கும்  வாய்ப்பு  கிடைத்தது . நாங்கள்  காரிலே  சென்று  கொண்டு  இருந்தோம்  ,அபோது  எப் . எம் . மில்  மேஹபூபா , யே  மேஹபூபா   என்கிற  பழைய  இந்தி  பாடல்  ஒழி  பரப்பானது . அந்த  எகிப்து  நண்பர்   அந்தப்  பாடலைக்  கேட்டவுடன்  இது  சங்கம்  படப்   பாடல் , நாங்கள்  கல்லூரி  நாட்களில்  கிளாஸ்  கட்  அடித்து  விட்டு , இந்தப்  படத்தை  பலமுறை  பார்த்து  இருக்கிறோம்  என்று  சொல்லி  என்னை  வியப்பில்  ஆழ்த்தினார் .
 
இந்தி  படங்கள்  இப்படி  இருந்தது  என்றால்  தமிழ்  படங்களோ , தமிழ்  நாடு, சிலோன் , மலேசியா , சிங்கபூர்   போன்ற  நாடுகளில்   சக்கை  போடு   போட்டன .
 
எம் . ஜி .ஆர் , சிவாஜி  இவர்கள்  இருவரும்  அக்காலத்தில்  தமிழ்  பேசும்  மக்களைடையே  மிகவும்  புகழ்  பெற்று  விளங்கினர் . சிவாஜி  நடித்த  வீரபாண்டிய  கட்டபொம்மன் , கப்பல்  ஒட்டிய  தமிழன்  போன்ற  படங்க l நமக்கு  உண்மையிலே  வரலாற்று  பாடங்களாக  வே  இருந்தது  என்று   சொன்னால்  அது  மிகை யாகாது .
 
குடும்ப  உறவுகள், தாய்  மகன்  இவர்களுக்கிடையேயான  பாசம்   அண்ணன்  தங்கை   பாசம்  இவற்றை  எடுத்துக்  காட்டும்  பல  படங்கள்  அப்போது  வந்தன .
 
எம் . ஜி .ஆர்  , சிவாஜி  கால  கட்டத்துக்கு  முன்னாலே   தியாகராஜா  பாகவதர் , பி .யூ , சினப்பா , கிட்டப்பா  போன்றவர்கள்  மிகவும்  பாப்புலர்  ஆக  இருந்தார்கள்  என்று  கேள்விப்  பட்டு  இருக்கிறோம் .
ஆனால்    உண்மையில்  அவர்களின்  படங்களை  நான்  பார்த்தது  இல்லை .
ஆனால்  இந்திய  சினிமாவில் , குறிப்பாக  தமிழ்  சினிமா  துறையில்  அக்காலத்தில்  சிகரங்களைத்  தொட்டவர்கள்  பலர்  இருந்திருக்கின்றனர் .  
 
அதை  எல்லாம்  எடுத்து  சொல்ல  என்னால்  இயலாது, நான்  அறியவில்லை .
 
ஆனால்  பழைய  தமிழ்  சினிமா  துறையை  சேர்ந்த  நடிக , நடிகையர் , இசை  அமைப்பாளர்கள் , வசனகர்த்தாக்கள் , இயக்குனர்க   ….l உள்ளிட்ட  பல  கலைஞர்களையும்  பற்றி  மிக  சிறப்பாக  ஆராய்ச்சி  செய்து , அந்த  விவரங்களை  மிகவும்  சுவையாகவும்  சிகரம்  தொட்டவர்கள்  என்ற  தொடர்  கட்டுரை களின்  மூலம்  வழங்கி  வருகிறார்  நமது  அன்பு  நண்பர்  திரு . பி . ஜி .எஸ் . மணியன்   அவர்கள்.
இவ்வளவு  தகவல்கள்  இவருக்கு  எங்கே  இருந்து  கிடைக்கின்றன  என்று  ஆச்சரியப்  படும்  வகையில்  எழுதி  வருகின்றார்.  திரு.மணியனின்  கட்டுரைகள்  வெளியாகும்  தளத்தின்  சுட்டியை  இத்துடன்  இணைத்து   இருக்கிறோம் . 
 
தமிழ்  சினிமாவின்  தொடக்க  காலம்  பற்றிய  சுவையான  தகவல்களை  அறிய  விரும்புவோருக்கு , இக்கட்டுரைகள்  ஒரு  விருந்தாக  அமையும் .
 
 

 
http://koodu.thamizhstudio.com/thodargal_4_46.php
 

 
Advertisements

1 Response to "சிகரம் தொட்டவர்கள்!"

நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னையும் ஒரு எழுத்தாளனாக ஏற்றுக்கொண்டு எனது படைப்புக்கான தளத்தின் குறியீட்டையும்
இங்கு கொடுத்து என்னை கவுரவப் படுத்தி இருக்கிறீர்கள்.

நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு – இந்த வாரத்திய தொடரைப் படிப்பதற்கானது தான்.

இதுவரை வந்திருக்கும் அனைத்து கட்டுரைகளையும் படிப்பதற்கான இணைப்பு இதோ:

http://koodu.thamizhstudio.com/thodargal_4_index.php

படித்துவிட்டு நண்பர்கள் அவர்கள் கருத்துக்களை இங்கும்/அங்கும் தெரிவிக்கவும்.

சந்தேகங்கள் வரவேற்க்கபடுகின்றன? அவற்றை தெளிவு படுத்தும் விதமாக என்னையும் நான்
தெளிவித்துக்கொள்வேன்.

குறைகளை தாராளமாக சுட்டி எழுதலாம். எனது இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
என் இணையதள முகவரி சிகரம் தொட்டவர்கள் – இடுகைகளிலேயே மேலே இருக்கிறது.

என்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு.

நண்பர் திருச்சிக்காரர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

அன்புடன் – மணியன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: