Thiruchchikkaaran's Blog

அல்லற்படும் மாந்தர்களே அயராதீர்கள், அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்!

Posted on: October 19, 2010


இந்தியா ஒரு ஆன்மீக நாடு. ஆன்மீகத்தை  தன்னுடைய முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இந்தியா வைத்திருந்திருக்கிறது. அன்று தொட்டு இன்று வரை இந்தியாவில் தொடர்ச்சியாக  ஆன்மீக ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது. இந்தியாவில் இருப்பவர்கள் அவர்கள்   எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் வழிபாட்டில், ஆராய்ச்சியில்  முனைப்பு கட்டுபவர்களாக உள்ளனர்.

இந்தியர்கள், அவர்கள் இந்துக்களோ, பவுத்தரோ, சமணரோ, இஸ்லாமியரோ, சீக்கியரோ, கிறிஸ்தவர்களோ .. அவர்கள் தங்கள் வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்களாக இருக்கின்றனர். நாத்தீகர்கள் கூட தங்கள நாத்தீக கோட்பாட்டில்  பிடிப்பு உள்ளவராக உள்ளனர். உலகிலே வேறு எந்த நாட்டிலும் இது போல சமயத்தில் ஈடுபாடு உடைய வெவ்வேறு சமயத்தினர் ஒன்றாக இதைப் போல ஒரு சமூகமாக வாழ்கின்றனரா என்பதை எண்ணிப் பார்க்கிறோம். 

இவ்வாறாக மத நல்லிணக்கத்துக்கான  சிறந்த தளமாக இந்தியா உள்ளது. மத நல்லிணக்கத்தைக் கைக் கொள்ளவும், அதை உலகம் முழுவதும் பரப்பவும் கூடிய சமுதாயம் ஏதாவது உண்டு என்றால் அது இந்திய சமுதாயமே என்கிற கடமையை  நாம் நினைவு கூறுவோம். 

இந்திய ஆன்மீகத்தின் முக்கிய கூறுகளில்  ஒன்று  இசை. இசையின் மூலம் ஆன்மீக உயர்வைப் பெறுவது இந்திய ஆன்மீகத்தின் ஒரு முக்கிய வழியாகும்.  ஒரு பாட்டை சிறப்பாக பாடுவது என்றால் அது ஒரு புலனடக்க , தன்னடக்க, பயிற்சி யாவதொடு அது ஒரு உடற்பயிற்சியும் ஆகிறது.

 சரியாக பாடப் படும் இசையானது ஒருவனுக்கு ஆன்மீகப் பயிற்சியையும், உடற்பயிற்சியையும் அளிக்கிறது.

 பாடலைப் பாடும்போது ஓசையானது நம்முடைய  வயிற்றில் ஆரம்பித்து உணவுக் குழல், தொண்டை   நாவு  வழியாக ஓசை வருவதால்,  பல உடல் உறுப்புகளும்  சங்கீதத்தை உருவாக்க உதவுகின்றன. இவ்வாறாக உடலின்   உறுப்புகள் உடற்பயிற்சி பெரும்படியாக இருக்கிறது.

“நாபி ஹிருத்கண்ட ரசன நாதாதுல யெல்லு சோபில்லு”  

நாபி, தொண்டை , நாவின் வழியாக குரலெடுத்து உன்னை பாடும் போது மனதில் மகிழ்ச்சி உருவாகிறது என்று இராமரைப் பார்த்துப் பாடுகிறார் தியாகராசர்!

மேலும் ஒருவர் ஒருவர் சரியாக பாடலைப் பாட முயலும் போது அது ஒரு புலனடக்கப்  பயிற்சியாக, தன்னடக்கப் பயிற்சியாக மாறுகிறது.  அதுவே உயர்ந்த கொள்கைகளை மனதில் நிறுத்தி பாடும் போது அது புலனடக்கம், மற்றும் தன்னடக்கத்தின் சிறந்த நிலையை அடைய உதவுகிறது.

 உதாரணமாக “யே.. கலா கலா கண்ணடிச்சா கலக்கலா, தேன் பலாப் பலா … “, என்கிற பாடலை பாடும் போதும் ஒருவர் மனக் குவிப்பு செய்துதான் பாடுகிறார். அதே நேரம் இந்தப் பாடல் பாடுபவர் மற்றும்  கேட்பவர் மனதில் ஒரு ஜாலி மூடை உருவாக்க வாய்ப்புள்ளதால் , மனக் குவிப்பு முழுமை அடைவதில்லை.  

அதே நேரம்

” நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்,

இது நமக்கே உரிமையாம்  என்பதறிவோம்,

பூமியில் எவர்க்கும் இனி அடிமை  செய்யோம்…” என்பது போன்ற  பாடல்கள் ஆக்க பூர்வமான சிந்தனைகளை மனதிலே உருவாக்குகிறது.

ஆன்மீகப் பாடல்களை லயித்துப்  பாடுபவரும், கேட்பவரும் முழு அர்ப்பணிப்புடன் அதில் ஈடுபடுவதால் அவரவர்களின் ஈடுபாட்டை பொறுத்து , அந்த அளவுக்கு புலனடக்கத்தையும், மனக் குவிப்பையும் தரும் ஆன்மீகப்  பயிற்சியாக உள்ளது.

இந்தியாவில் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை தரும் வகையில் ஆன்மீக முன்னேற்றத்திற்காக இசையை பயன் படுத்துவது தொன்று தொட்டு நடை பெற்று வருகிறது. சித்தர்கள் ,  பட்டினத்தார், சம்பந்தர்,  சைதன்யர், தியாகராசர்,  இராமதாசர், புரந்தரதாசர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்  உள்ளிட்ட  பலர் இசைப் பணியையும், ஆன்மீகப் பணியையும் ஒன்றாக இணைத்து செயல்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் உள்ள எல்லா மதங்களும் தங்களுக்கென இசைப் பாடல்களை அந்தந்த வட்டார மொழிகளில் அமைத்து உள்ளன. அவ்வகையில் இஸ்லாத்திலும் சிறப்பான பாடல்கள உள்ளன. இஸ்லாத்தை பொறுத்தவரையில்  அது குறிப்பிட்ட தொழுகை முறையை தவிர வேறு எந்த தொழுகை முறையையும் அங்கீகரிக்கவில்லை. எனவே இசையை பாடல்களை ஒரு தொழுகை முறையாக , வழிபாடாக இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றே  நான் கருதுகிறேன், அதாவது எனக்குத் தெரிந்த அளவில்,இதில் மாற்றுக் கருத்து இருந்தால் நண்பர்கள் தெரிவிக்கலாம்.

உருது மற்றும் இந்தி மொழிகளில் பல ரசிக்கும் படியான இஸ்லாமியப் பாடல்கள் உள்ளன.

தமிழிலே பல இஸ்லாமியப் பாடல்கள், அவற்றில் என்னை கவர்ந்த பாடல்களில் ஒன்று, பலராலும் அறியப் பட்ட  பாடல்

“இறைவனிடம் கையேந்துங்கள்,

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!

பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்,

 அவன் பொக்கிசத்தை மூடுவதில்லை!”

 என்பது!

கடவுளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாமிய கோட்பாட்டின் படி,

” அலை  முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்,

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்!

 தலை வணங்கி  கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்,

தரணி எங்கும் புகழ்  பரப்பும் மகா வல்லவன்!!”

 

என்ற வகையில் பாடல் அமைந்துள்ளது.

“அல்லற்படும் மாந்தர்களே அயராதீர்கள,

அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்!”

என்ற வரிகளின் மூலம், கேட்பவர் மனதில் தங்கள் கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையையும்,   அல்லாஹ் மிகவும் கருணையுள்ளவர் என்கிற கோட்பாட்டையும் தெரிவிப்பதாக உள்ளது. 

இந்தப் பாடலின் பாப்புலாரிட்டிக்கு  இதைப் பாடிய பாடகர் திரு. நாகூர் இ. எம். ஹனீபாவின் சிறந்த குரல் முக்கிய  காரணம் ஆக இருக்கிறது.

 மிகவும் இறுக்கமான இஸ்லாமிய சமூகங்களில்  இசைக்கு அனுமதி இல்லை என்று சொல்லப் படுகிறது.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை கடந்து இஸ்லாமிய அறிஞர்கள் இந்திய சமூக  ஆன்மீக கலாச்சார த்தை பின்பற்றி, இசை மூலம் தங்கள் இறையியல் உணர்வுகளை வெளிப்படுத்தியது , அவர்கள் அறிந்தோ அறியாமலோ நல்லிணக்கப் பாதையில் செயல்  பட்டதாகவும் கருதலாம்!

Advertisements

2 Responses to "அல்லற்படும் மாந்தர்களே அயராதீர்கள், அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்!"

ஆஹா அருமை அருமை
இன்னும் அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் உண்டு.

நன்றி அரபு தமிழன் அவர்களே,

//இன்னும் அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் உண்டு//

என்னென்ன பாடல்கள், அவற்றை சிறப்பு கவனம் கொடுத்து நீங்கள் விரும்பக் காரணம்.. இவற்றை எல்லாம் ஒரு மடலாக வரையுங்கள், அவற்றை நமது தளத்திலே கட்டுரையாகப் போடலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: