Thiruchchikkaaran's Blog

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார்! இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்.

Posted on: October 14, 2010


ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,

நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,

இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

………….

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்

வூற்றாய்  உயிராய் உலகத்தின் ஒளியாய்

உத்தமர் தோன்றி விட்டார்!

நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

நண்பர்களே, நான்  மாணவப் பருவத்திலே  சில  வருடங்கள் விடுதியில் தங்கிப் படித்து  இருக்கிறேன்.

விடுதியிலே தினமும்  காலையில் ஒலி பரப்பப் பட்ட பாடல்களில் ஒன்றுதான்  இது.  (இந்தப் பாட்டை எந்த சுட்டியில் சென்றால் கேட்கலாம் என்பது தெரியவில்லை. .நண்பர்கள யாரவது அதற்க்கான சுட்டியை அளித்தால் கட்டுரையில் சேர்ப்பேன்)

சிறுவனாக இருந்த போது ஆன்மீகத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை, என்றாலும் அக்காலத்தில்  நாம் கேட்ட பாடல்கள் , தகவல்கள் நம் நெஞ்சில்   பதிந்து விட்டன.  பிற்காலத்தில் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, பள்ளியில் பயின்றபோது நமக்கு கிடைத்த பைபிள் உள்ளிட்ட  நூல்களை தேடி படிக்க ஆரம்பித்தோம், பள்ளிப் பருவத்தில் கேட்ட பாடல்களையும் நினைவுக்கு கொண்டு வர முடிந்தது.

இயேசுகிறிஸ்து உலக சமய வரலாற்றில்  மிக முக்கியமானவர்களில் ஒருவர். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பக்தியுடன் இயேசுவை கடவுளாக கருதி வழிபடுகின்றனர்.

இந்து மதத்தை சேர்ந்த சில அறிஞர்களும் இயேசு கடவுளின் அவதாரமாக கருதப்படக் கூடியவர் என்று சொல்லி இருக்கின்றனர். பல இந்துக்களும் அவ்வப் போது சர்ச் முதலான இடங்களுக்கு சென்று இயேசுவை வணங்குகின்றனர். இசுலாமியர் இயேசுவை ஒரு இறை தூதர் (prophet) என்று கருதுகின்றனர்.

இயேசு அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்களின் கடுமையான சட்டங்களையும், கோட்பாடுகளையும் விட்டு மனிதாபிமானத்துடன் வாழ அறிவுறுத்தினார். யூதர்களின் சமூக , சமய கோட்பாடுகளை  உடைத்தெறியும் வண்ணம் புரட்சிகரமான கோட்பாடுகளை அவர் பிரச்சாரம் செய்தார்.

File:Ecce homo by Antonio Ciseri (2).jpg

”கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், உன் கண் இரக்கம் காட்ட வேண்டாமே” என்பது போன்ற கடுமையான கோட்பாட்டுகளை  மறுத்து இரக்கம் காட்டுங்கள் என்றார்.

Mathews 5:38: கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

யூதர்கள் தங்கள் இனம் வாழ வேண்டும் என்பதற்காக பிற இனங்களை இன அழிப்பு செய்து அவர்களின் இடங்களை தாங்கள் கைப்பற்றி வாழ திட்டமிட்டு செயல்பட்டதாக யூதர்களின் நூல்கள் மூலமாக நாம் அறிகிறோம் அல்லவா. அதற்க்கு கடவுளே திட்டமிட்டு இன அழிப்பு செய்து கொடுத்த தாகவும், எதிரி உடன்படிக்கை செய்ய வந்தால் கூட அவனோடு உடன் படிக்கை செய்யாதே, இரக்கம் காட்டாமல் அவனை அழித்து விடு என்று கடவுளே சொன்னதாக கோட்பாடுகளை உருவாக்கி வைத்திருந்தனர்.  (இதை எல்லாம் நாமாக  சொல்லவில்லை, நூல்களில் உள்ளதையே நாம் எழுதுகிறோம்)

ஆனால் இயேசு கிறிஸ்துவோ சமரசக் கோட்பாட்டை, விட்டுக் கொடுக்கும் கோட்பாட்டை முன் வைத்தார்.

40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

அதோடு ஒரு இனத்தை வாழ வைக்க, பல இனங்களை அழிப்பவராக, பொறாமை காராராக சித்தரிக்கப் பட்ட கடவுள் கோட்பாட்டிற்கு பதிலாக கருணையே வடிவான தந்தை கோட்பாட்டை இயேசு கிறிஸ்து முன் வைத்தார்.

சமரச மறுப்புக் கோட்பாடுகளையும் , இனப் படுகொலை  செயல்களும், அதற்க்கு வசதியான கடவுள் கோட்பாட்டையும் வைத்திருந்த யூதர்களுக்கு,  இயேசு வின் கருத்துக்கள் பிடிக்கவில்லை.

அவர் தன்னை யூதர்களின் இராஜா என்று சொல்லிக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டி, அவரை சிலுவையில் அறைந்து விட்டனர்.

இயேசுவின் கருத்துக்களாலும், அவர் சிலுவையில் அறையப்  பட்டதால்  அவருக்கு அனுதாபம் உருவாவதையும்  கண்ட  சிலர், யூதர்களின் பழைய  இரக்க மறுப்பு   பிடிவாதக் கொள்கைகளை, இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளோடு சேர்த்து  கலந்து பழைய துருத்தியில் பழைய ஒயி னோடு, புதிய ஒயினையும் சேர்ப்பது போல சேர்த்து  கலந்து உலகம் முழுவதும் பரப்ப ஆரம்பித்து விட்டனர்.  இயேசு வே புதிய ஒயினை புதிய துருத்தியில் வையுங்கள்  என்று கேட்டுக் கொண்டதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின்  கோட்பாட்டுக்கு மாறான கருத்துக்கள அவர் பெயராலே உலகம் முழுவதும் பரப்பப் படுகின்றன.

இந் நேரத்திலே சமரச  விட்டுக் கொடுக்கும், கோட்பாட்டை சொல்லிய இயேசு கிறிஸ்துவின் சரியான கருத்துக்களை, சமரச மறுப்பு,  மத வெறிக் கோட்பாடுகளால் பீடிக்கப் பட்டவர்களிடம் இருந்து மீட்டு, சரியான இயேசு  கிறிஸ்துவை உலகம் முழுவதும் அறியச் செய்யும் கடமையில்  நாம் இறங்கிய பின் கலப்பையில் கையை வைத்த பின் பின்னே பார்க்கக் கூடாதே என்கிற இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டின் படியே செயல்படுவோம்.

34 Responses to "ஆதவன் உதிக்கும் முன் எழுவீர், நம் ஆண்டவர் தோன்றி விட்டார்! இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்."

Matthew 10 Chapter
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.

36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.

40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

மத்தேயு
26 அதிகாரம்

51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.

52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

மத்தேயு 9:13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

Mathews 5:
43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

உண்மையான கிறிஸ்துவத்தை உலகத்திற்கு சொல்லிக்கொடுக்க போவதாக சொன்னீர்களே,
நான் குறிப்பிட்ட வசங்களில்(Matthew 10:34-40). இயேசுவானவர் என்ன சொல்ல வருகிறார் என்று சொல்லிதருகிரீர்களா?

We cant rule out the contradictions in what is written as told by Jesus Christ.

However whenever there are condradictions, we look into what point is the main motto, what is the main tone and which point is more empahasaised.

//இயேசுவின் கருத்துக்களாலும், அவர் சிலுவையில் அறையப் பட்டதால் அவருக்கு அனுதாபம் உருவாவதையும் கண்ட சிலர், யூதர்களின் பழைய இரக்க மறுப்பு பிடிவாதக் கொள்கைகளை, இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளோடு சேர்த்து கலந்து பழைய துருத்தியில் பழைய ஒயி னோடு, புதிய ஒயினையும் சேர்ப்பது போல சேர்த்து கலந்து உலகம் முழுவதும் பரப்ப ஆரம்பித்து விட்டனர். இயேசு வே புதிய ஒயினை புதிய துருத்தியில் வையுங்கள் என்று கேட்டுக் கொண்டதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.//
Any proofs to substantiate this claim your yours??

Yes, We will detail this in many articles.

அடுத்ததாக,”காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமா தான் இருக்கு” என்ற பிரபல பாடலின் அடிப்படையில் கட்டுரையை எதிர்பார்க்கவும்…இருட்டுக்கடை அல்வா தெரியும் திருட்டுக் கடை அல்வா தெரியாதே…போலிகள் எச்சரிக்கை…முன்னாள் இந்து தான் விட்டு வந்த மார்க்கத்தின் அலங்கோலங்களை தோலுரிப்பதற்கும் முனியாண்டி விலாஸ் மாஸ்டர் கார்த்திகை மாத மகாத்மியங்களைப் புகழுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கும் போல‌….திருடன் கையில சாவிய கொடு வீடு பத்திரமா இருக்கும்’னு எங்க தாத்தா சொல்வாரு..!

//அதோடு ஒரு இனத்தை வாழ வைக்க, பல இனங்களை அழிப்பவராக, பொறாமை காராராக சித்தரிக்கப் பட்ட கடவுள் கோட்பாட்டிற்கு பதிலாக கருணையே வடிவான தந்தை கோட்பாட்டை இயேசு கிறிஸ்து முன் வைத்தார்.//

யாரை, யாருக்கு தந்தையாக கூறினார்? வேத வசங்களுடன் விளக்கம் தர முடியுமா? இதற்காக ஒரு புதிய கட்டுரை வரும் என்று கூறி காலம் தாழ்த்தாமல், பதில் சொல்லவும்.
நன்றி,
அசோக்

இயேசு கிறிஸ்துவின் கடவுள் கோட்பாடு என்ன வென்றால், கடவுள் என்பவர் அனைவருக்கும் பிதா, என்பதுதான்.

மத்தேயு
அதிகாரம் 6:

7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

ஆனால், இந்த வசனங்களை அவரை மாத்திரமே தேவனாக ஏற்றுக்கொண்ட, அவர் சீஷர்களுக்குதானே சொன்னார். மற்றவர்க்கு சொல்லவில்லையே.
யாரோ ஒருவர், யாருக்கோ கூறியதை நீங்கள் சொந்தம் கொண்டாடலாமா? இந்த வசனங்கள் சொல்லும், யார் தேவனுக்கு புத்திரர் என்று:
கலாத்தியர் 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
எபேசியர் 1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

இயேசுவின் மூலம் மாத்திரமே ஒருவன் தேவனுக்கு புத்திரனாக முடியும். இயேசுவை தன் சொந்த ரட்சராக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, இந்த புத்திர சுவிகாரத்தை பெற முடியும்.
Thanks,
Ashok

John14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

Without Accepting Jesus, no one comes to the father.

இதே விடயம் பற்றி நான் முன்பே பதில் சொல்லி விட்டேன்.

//நானே வழியும்//

மனைவியை தள்ளி வைத்து தவிக்க விடக் கூடாது, அயலானுக்கு கெடுதல் செய்யக் கூடாது, அயலானுக்கு உதவ வேண்டும், விபச்சாரம் செய்யக் கூடாது போன்ற நெறிகளை பின்பற்றாதவர் உய்வது கடினம்,

வழியே முக்கியம் . வெறுமனே இயேசுவை கனம் செய்தால் பலன் இல்லை.

Luke 6 :46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

47. என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.

48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.

//மனைவியை தள்ளி வைத்து தவிக்க விடக் கூடாது, அயலானுக்கு கெடுதல் செய்யக் கூடாது, அயலானுக்கு உதவ வேண்டும், விபச்சாரம் செய்யக் கூடாது போன்ற நெறிகளை பின்பற்றாதவர் உய்வது கடினம்//
உங்களை விவாகரத்து, விபச்சாரம், போன்றவற்றை செய்யவா அழைத்தோம்?
ஏதோ, இயேசுவை ஏற்றுக்கொண்டவுடன், அனைவரும் விவாகரத்து செய்து கொண்டு, விபச்சாரம் செய்ய போய்விடுவது போல பேசுகிறார் திருச்சி.
நீங்கள் சொல்வதை பார்த்தல், தினம் தினம் கிறிஸ்துவர்கள் அனைவரும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்துவிட்டு வந்து “ஆண்டவரே ஆண்டவரே” என்று கூக்குரலிடுவது போல் உள்ளது.
ஒவ்வொரு இந்துவை போலதான் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் வாழ்க்கை சுமைகள் உள்ளன.

“நானே வழி” என்பதற்கு இதுதான் அர்த்தமா? காமெடி பண்ணறீங்க சார்.
நான் உங்களுக்கு வழி சொல்கிறேன் என்று இயேசு சொல்லவில்லை. “நானே வழி” என்று கூறினார்.

Also, he said that “I AM THE ONLY WAY”. This claim means, that there is NO OTHER WAY.

ஐயா, நான் சொல்லாததை எல்லாம் சொன்னது போல எழுத வேண்டாம்.

நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முதலில் இயேசு கிறிஸ்து சொன்னதையாவது சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நானே வழி என்பதற்கு என்ன அர்த்தம், நான் சொன்ன கொள்கைகளைப் பின்பற்றுங்கள் என்பதுதான் அர்த்தம். அதை பலமுறை தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லி விட்டார். பல முறை இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை எடுத்து சொல்லி, அவர் சொன்னதாக உள்ள வசனங்களை மேற் கோள் காட்டி இருக்கிறோம்.

Mathews
Chapter 7,
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. //

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

//Luke 6 :46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?//

நீங்கள் நினைப்பது போல இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து, பிற மதங்களை எல்லாம் கண்டித்துக் கொண்டு இருந்தால், இயேசு கிறிஸ்து அதனால் மகிழ்ச்சி அடைந்து நானே வழி என்று, கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போவார் என்று எண்ணினால் அது தவறு. அதற்காகவே பல முறை தெளிவாக சொல்லி இருக்கிறார். இன்னொரு வசனத்தையும் தருகிறேன், இதுவாவது உங்களை மனம் திறம்ப செய்கிறதா என்று பார்ப்போம்.

//32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

33. செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;

43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.

44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.

45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்//

//ஆனால், இந்த வசனங்களை அவரை மாத்திரமே தேவனாக ஏற்றுக்கொண்ட, அவர் சீஷர்களுக்குதானே சொன்னார். மற்றவர்க்கு சொல்லவில்லையே.//

உங்களைப் போல எந்தக் கண்டிசனும் இயேசு கிறிஸ்து போடவில்ல, தன்னுடைய கொள்கைகளை கடைபிடிக்க சொன்னார் அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வது போல இன்னாருக்குத்தான் கடவுள் பிதா , மற்றவர்களுக்கு அவர் பிதா இல்லை என்று சொன்னாதாக இல்லை, நமக்கு தெரிந்த வரையில் இல்லை.

//யாரோ ஒருவர், யாருக்கோ கூறியதை நீங்கள் சொந்தம் கொண்டாடலாமா? //
நான் எதற்கும் சொந்தம் கொண்டாடவில்லை நண்பரே. இயேசு கிறிஸ்துவின் கோட்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தினேன். நான் சொன்னது சரியே.

///இந்த வசனங்கள் சொல்லும், யார் தேவனுக்கு புத்திரர் என்று:
கலாத்தியர் 3:26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
எபேசியர் 1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.//

இவை எதுவும் இயேசு கிறிஸ்து சொன்னது இல்லையே.

//இயேசுவின் மூலம் மாத்திரமே ஒருவன் தேவனுக்கு புத்திரனாக முடியும். இயேசுவை தன் சொந்த ரட்சராக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, இந்த புத்திர சுவிகாரத்தை பெற முடியும்.//

இதை உங்களின் கோட்பாடாக கருதலாம்.

யார் வேண்டுமானாலாம், தேவனை பிதா என்று அழைக்கலாம் என்பது உங்கள் கோட்பாடாக வேண்டுமானால் இருக்கலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல. சத்திய வேதம் அதை சொல்லவில்லை.

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு.

இயேசு கிறிஸ்துவின் கடவுள் கோட்பாட்டின் அடிப்படையையே அறிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

மனிதன் பிதா என்று அழைத்தாலும் , அழைக்காவிட்டாலும், பிதாவுக்கு எதிராக முறுவளித்தாலும் , கருணை உள்ள பிதா தன மகனுக்காக காத்து இருப்பார், வழியை நோக்கி காத்து இருப்பார் என்பதுதான்
இயேசு கிறிஸ்துவின் கோட்பாடு .

உங்களைப் பொறுத்தவரை எல்லோரும் பிதா உரிமை கொண்டாட முடியாது.

ஆனால் இயேசு கிறிஸ்துவை பொறுத்த வரையில், பிதா எப்போதும் தன மகன்களுக்காக காத்து இருப்பார், ஒரு போதும் புறக்கணிக்க மாட்டார் என்பதுதான்.

ஒருவர் அடாத செயல் செய்து அது சுட்டிக் காட்டப் பட்டால், தன்னுடைய குறையை மறைக்கும் விதமாக நான் இந்த மொழியை பேசுபவன் என்பதால் தானே என்னை குற்றம் சாட்டுகிறீர்கள், நான் இந்த பகுதியை சேர்ந்தவன் என்பதால் தானே என்னை குறை சொல்லுகிறீர்கள என்று பேச்சை மாற்றுவதை நாம் பல முறை பார்த்து இருக்கிறோம் அல்லவா.

மத சகிப்புத் தன்மை இல்லாத காரணத்தினால், வெறுப்புக் கருத்துக்களுக்கு இடம் கொடுத்த காரணத்தினால், தான் கைக் கொண்ட மார்க்கத்தை மாத்திரமே நிலை நிறுத்த வேண்டும் என்கிற ஆவேசத்தினால், மத வெறியைக் கட்டுப் படுத்த முடியாமல் பிற மதங்களை எல்லாம் இழிவு படுத்தியும், திட்டியும், பழித்தும் சிறுமைப் படுத்தும் மத துவேச மத வெறிச் செயல்களை நாம் வருத்ததுடன் கவனித்து வருகிறோம்.

பிற மதங்களுக்கு எதிராக மத வெறியைப் பரப்ப சாக்குப் போக்கு சொல்லுவதை மக்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவர் முன்னாள் சமணரோ, முன்னாள் கிறிஸ்துவரோ, முன்னாள் இந்துவோ , இதையெல்லாம் சொல்லுவது மத வெறியை மூடி மறைப்பதற்கே

// யாரை, யாருக்கு தந்தையாக கூறினார்? வேத வசங்களுடன் விளக்கம் தர முடியுமா? இதற்காக ஒரு புதிய கட்டுரை வரும் என்று கூறி காலம் தாழ்த்தாமல், பதில் சொல்லவும். அசோக் //

நண்பர் திருச்சி திருச்சி, திருச்சி திரிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்;அவர் முட்டாளோ பைத்தியமோ இல்லை,காரிய பைத்தியமும் காரண முட்டாளுமாக இருக்கிறார்;ம்…ம்..நடக்கட்டும்..!

//இயேசுவின் மூலம் மாத்திரமே ஒருவன் தேவனுக்கு புத்திரனாக முடியும். இயேசுவை தன் சொந்த ரட்சராக ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, இந்த புத்திர சுவிகாரத்தை பெற முடியும்.//

// இவை எதுவும் இயேசு கிறிஸ்து சொன்னது இல்லையே…இதை உங்களின் கோட்பாடாக கருதலாம்.//

நண்பர் அசோக் அவர்களே வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திலேறப் போகிறது; பைபிள் முழுவதையும் அனுசரித்து வாதிடாமல் இயேசு கூறியதாக சொல்லப்பட்டவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிலும் சில வசனங்களை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குபவரிடம் நாம் எதையும் சாதிக்கமுடியாது; அதேநேரம் ஜலந்திரன் மனைவியைக் கெடுத்த மாபாவியைக் குறித்து கேட்டால் அதற்கு புதுவிளக்கங்கள் கொடுப்பர்;

இவிங்க சங்காத்தமே வேணாஞ்சாமியோவ்..!

//இயேசு கூறியதாக சொல்லப்பட்டவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதிலும் சில வசனங்களை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்குபவரிடம் நாம் எதையும் சாதிக்கமுடியாது;//

இதை நீரே சொன்னீர்

நன்றி நண்பரே, நான் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் படித்துக் கொண்டு தொங்குகிறேன் என்பதை நீரே சொன்னீர்.

அதே நேரம் நான் இயேசு கிறிஸ்துவின் பல வசனங்களை மேற்கோள் காட்டுகிறேன். சில நண்பர்கள, யாரோ சொன்ன வசங்களை அதிக அளவிலும் இயேசு கிறிஸ்துவின் வசனங்களை ஒன்றிரண்டை மாத்தரமே மேற்கோள் காட்டும் படியாகவும் உள்ளதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து வின் உண்மையான கருத்துக்களை நாம் பிரச்சாரம் செய்கிறோம் என்பதை நீங்கள் உள்ள படியே புரிந்து கொண்டு அறிவித்ததற்கு நன்றி.

இயேசு கிறிஸ்து அல்லாமல் வேறு யார யாரோ சொன்னதை எல்லாம் பலரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பரப்புவது சரியா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மனம் திரும்புவார்களா?

அதேநேரம் ஜலந்திரன் மனைவியைக் கெடுத்த மாபாவியைக் குறித்து கேட்டால் அதற்கு புதுவிளக்கங்கள் கொடுப்பர்;

இவிங்க சங்காத்தமே வேணாஞ்சாமியோவ்.

ithu yaru trichy st joseph father thana soleringa

// உங்களை விவாகரத்து, விபச்சாரம், போன்றவற்றை செய்யவா அழைத்தோம்? ஏதோ, இயேசுவை ஏற்றுக்கொண்டவுடன், அனைவரும் விவாகரத்து செய்து கொண்டு, விபச்சாரம் செய்ய போய்விடுவது போல பேசுகிறார், திருச்சி…//

ச்சும்மா கலக்குறீங்க அசோக்; இதுபோன்ற வாதத்தைக் கிறித்தவனால் கூட முன்வைக்க முடியாது; ஒரு முன்னாள் இந்து மட்டுமே இதுபோல தர்க்கரீதியாக வாதிடமுடியும்; ஏனெனில் அடிபட்டவனுக்கே அடியும் அதன் வலியும் தெரியும்..!

(N.B:மேற்கோள் காட்டி,பின்னூட்டத்தின் இறுதியிலுள்ள பெட்டியில் மட்டுமே கருத்துக்களைப் பதிக்கவும்; பெரும்பாலும் கடைசியான பின்னூட்டத்தையே வாசகர் கவனிப்பார்; நடுவிலுள்ள பின்னூட்டங்கள் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.)

ஐயா நான் யாரையும் குறை சொல்லவில்லை.

இயேசு கிறிஸ்து சொன்னதையே சொன்னேன். விபச்சாரம் செய்யாதீர்கள், மனைவியை தள்ளுதல் சீட்டு கொடுக்காதீர்கள், அயலானுக்கு கெடுதல் நினைக்காதீர்கள், அயலானுக்கு நல்லது நினையுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னதையே நான் சொன்னேன். இப்படி சொல்வது யாரையும் குறை சொல்வதாக அர்த்தம் செய்வது என் மீது ஏதாவது குற்றம் சாட்டி என்னைக் கட்டம் கட்டும் முயற்சியே. திருடாதே, பாப்பா திருடாதே என்று பாடல் உள்ளது. எல்லா பாப்பாக்களும் திருடர்கள என்று சொல்வதாக அர்த்தம் இல்லை. தீமையை விட்டு விலகு என்று அரத்தமே.

// நன்றி நண்பரே, நான் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் படித்துக் கொண்டு தொங்குகிறேன் என்பதை நீரே சொன்னீர். //

நீங்கள் இயேசுகிறித்துவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் நான் அதுபோல ஒருபோதும் சொல்ல வாய்ப்பில்லை; ஆனால் இயேசு கூறியவண்ணம் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாராமல் யாரையோ குற்றஞ்சாட்டுவதாக எண்ணிக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்;

“என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் அவைகளைக் காட்டிலும் பெரிதானவைகளைச் செய்வான்” என்றார், இயேசு; அவர் பிதாவின் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்து ஞானமுழுக்கு எடுத்தார்; பிதா கட்டளையிட்ட மார்க்கத்தை உபதேசித்தார்; முடிவில் தாம் அறிவித்த மார்க்கத்தின் மீட்புக்காக தமது இன்னுயிரை பாவப் பரிகார பலியாகத் தந்தார்; அதுமாத்திரமல்ல,தொழத் தக்க சாகா நிலையில் மீண்டும் உயிரோடெழுந்தார்; இந்த அற்புத செய்தியை உலகெங்கும் உபதேசிக்கவும் கட்டளையிட்டார்; இதனடிப்படையில் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறோம்; அவரையல்லாமல் முக்தியடைதல் அதாவது பரம்பொருளைக் காண்பது இயலாது என்றும் இயேசுவானவரே திட்டவட்டமாக கூறியிருக்கிறார்;இது தான் கிறித்தவ போதனையின் சாராம்சம்;இதில் சிறிதும் கலப்படமில்லை;

இதோ உங்களுக்கு இராஜ்யத்தின் இந்த சுவிசேஷத்தை மீண்டுமொரு முறை சொல்லிவிட்டேன்; இனி உங்கள் இரத்தப்பழிக்கு நான் பொறுப்பாளியல்ல; யூதர்கள் இயேசுவின் தேவத் தன்மையையும் அவர் மேசியா என்பதையும் ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பண்ணி அவரைக் கொலைசெய்தது போலவே அவர்களுடைய கிரியைகளில் பங்குபெற நீங்களும் அவரை ஒரே வழியாக ஏற்க மறுக்கிறீர்கள்;

யோவான்.14 முழுவதும் இயேசுவின் உபதேசம் தானே,அதில் அவர்தானே தம்மைத் தவிர வேறு வழியுமில்லை, சத்தியமுமில்லை, ஜீவனுமில்லை என்று கூறினார்? அதனை ஏற்க என்ன தயக்கம்?

கருவாட்டுக் கடைக்கு பக்கத்தில் பூக்கடையும் இருந்துவிட்டு போகட்டுமே என்பீர்களா?

தயவுசெய்து கவனிக்கவும்…
/// பைபிள் முழுவதையும் அனுசரித்து வாதிடாமல்///

///இயேசு கூறியதாக சொல்லப்பட்டவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு///

///அதிலும் சில வசனங்களை மட்டும் ///

/// பிடித்துக்கொண்டு தொங்குபவரிடம்…///

பைபிள் முழுவதையும் அனுசரித்து வாதிடாமல் என்றால், எப்படி அனுசரிக்க முடியும்?

பைபிள் முழுவதையும் எப்படி அனுசரிக்க முடியும்- பைபிளோ அல்லது வேறு எந்த நூலோ- மத சகிப்புத் தன்மை இல்லாத கருத்துக்களை, இனவாதத்தை ஆதரிக்கும், இனப் படுகொலையை நியாயப் படுத்தும் கருத்துக்களையோ, பிற மத வழிபாட்டு முறைகளை வெறுக்கத் தூண்டும் கருத்துக்களையோ. எப்படி அனுசரிக்க முடியும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமே, மத சகிப்புத் தன்மை இல்லாத மத வெறியும், இனவாத இன அழிப்பு செயல்களும் தானே? இவற்றை நியாயப் படுத்தும் கருத்துக்களை எப்படி ஒத்துக் கொள்ளவோ, அனுசரிக்கவோ முடியும்?

இயேசுவே பைபிளில் சொல்லப் பட்டுள்ள பல கடுமையான கோட்பாடுகளை, மறுத்து, அவற்றை வரிக்கு வரி அப்படியே சுட்டிக் காட்டி அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி இருக்கிறாரே.

இயேசு எந்த கோட்பாடுகள் வேண்டாம் என்று விலக்க விரும்பினாரோ, அந்த கோட்பாடுகளை அவர் பெயராலேயே பரப்பி விட்டனர் . இதை நாம் தெளிவாக பல கட்டுரைகள் மூலம் விளக்குவோம்.

இயேசு கிறிஸ்துவை யார் ஏற்றுக் கொள்ளவில்லை, இந்த உலகமே இயேசு கிறிஸ்துவை, காந்தியை, புத்தரை புரிந்து கொண்டு, அவர்களின் தன்னலமற்ற செயல் பாட்டை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறது.

இயேசு கிறிஸ்து மட்டுமல்ல, புத்தர், காந்தி … உட்பட பலர் கூறிய கருத்துக்களையும் நாம் ஆராய்ந்து அவற்றால் மனித சமுதாயத்துக்கு உண்டாக்கக் கூடிய நன்மைகளை விளக்கியே வருகிறோம். இயேசு கிறிஸ்து , காந்தி, புத்தர், சாக்ரடீஸ் உட்பட அனைவரையும் நாம் ஏற்றுக் கொண்டே இருக்கிறோம். எந்த ஒரு கருத்தும் மக்களின் நன்மைக்காக உதவுகிறதா , எந்த அளவுக்கு உண்மையை ஒட்டி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அறியும் பகுத்தறிவுப் பாதையில் இருந்து மாறவில்லை.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டாதாக சொல்லும் பலர் அவரை எந்த அளவுக்கு அன்பு செலுத்தி , மரியாதை செய்கின்றனரோ அதற்க்கு எந்த வகையிலும் குறையாத அளவுக்கு நாம் இயேசு கிறிஸ்துவை மரியாதை செலுத்துகிறோம், அன்பு செய்கிறோம்.

இயேசு கிறிஸ்துவிடம் எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் அன்பு செலுத்துகிறோம்.

தயவு செய்து இயேசு கிறிஸ்துவையும், அவரது கொள்கைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்காக மீண்டும் ஒரு முறை அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

நானே வழி என்பதற்கு என்ன அர்த்தம், நான் சொன்ன கொள்கைகளைப் பின்பற்றுங்கள் என்பதுதான் அர்த்தம். அதை பலமுறை தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லி விட்டார். பல முறை இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை எடுத்து சொல்லி, அவர் சொன்னதாக உள்ள வசனங்களை மேற் கோள் காட்டி இருக்கிறோம்.

Mathews
Chapter 7,
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. //

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

//Luke 6 :46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?//

நீங்கள் நினைப்பது போல இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து, பிற மதங்களை எல்லாம் கண்டித்துக் கொண்டு இருந்தால், இயேசு கிறிஸ்து அதனால் மகிழ்ச்சி அடைந்து நானே வழி என்று, கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போவார் என்று எண்ணினால் அது தவறு.

அதற்காகவே பல முறை தெளிவாக சொல்லி இருக்கிறார். இன்னொரு வசனத்தையும் தருகிறேன், இதுவாவது உங்களை மனம் திறம்ப செய்கிறதா என்று பார்ப்போம்.

//32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

33. செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.

37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?

38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?

39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;

43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.

44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.

45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்//

தயவு செய்து இயேசு கிறிஸ்துவையும், அவரது கொள்கைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

கேட்கச் செவி உள்ளோர் கேட்கட்டும்!

Matthew 10:40. உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

மேல சொல்லப்பட்ட வார்த்தைகள் யேசுவினால், அவர் சீஷர்களுக்கு, அவர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது சொல்லப்பட்டது.
ஆனால், நீங்கள் அவர்கள் வார்த்தையை ஏற்க்கவில்லை. அதனால் நீங்கள் ஏசுவையும், அவர் பிதாவையும் நிராகரிக்கரீர்கள்.
இயேசுவை நல்ல மனிதர் என்று ஏற்றுக்கொள்வது பிசாசும் கூட செய்கிறான். நீங்கள் இயேசுவை நல்லவர் என்று ஏற்றுக்கொள்வதை ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியத்தை செய்ததை போல சொல்கிறீர்கள். எந்த பாவத்தையும் செய்திராத இயேசுவை, பெண்டாட்டி பிள்ளையை விட்டு ஓடிப்போன புத்தர், தந்தை மரிக்கும்போதும் சிற்றின்பத்தில் திளைத்த காந்தியுடன் இணை வைப்பது மாபாவம்.

அன்புக்குரிய நண்பர்களே,

நான் எழுதிய கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லலாம். நாம் மாற்றுக் கருத்துக்களை பதிவு இட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் நான் சொல்லாத கருத்தை நான் சொன்னது போல எழுதி அதற்க்கு பதில் கொடுப்பது போல எழுதுவது முறை அல்ல.

நான் ஒரு கருத்தை சொன்னதாக இருந்தால் நான் எழுதியதை அப்படியே மேற்கோள் காட்டி , அதற்க்கு பதில் தெரிவிப்பதுதான் அறிவு நாணயம் ஆகும்.

நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னது போலக் காட்டுவது சரி அல்ல. அப்படி எழுதப் படும் பின்னூட்டங்கள் என்னை தனிப்பட்ட முறையில் குறி வைத்து, நம்முடைய கவனத்தை கட்டுரையின் கருத்தில் இருந்து விலக்கியும், என்னை குறி வைத்தும் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க பார்க்கின்றனர்.அது நடக்காது கண்ணா.

நான் எழுதியதாக ஒரு கருத்தை சொல்வது என்றால் என்னுடைய வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டி எழுதுங்கள்.

please read the link with comments

http://www.tamilpaper.net/?p=583

இயேசு & நாமும் கடவுளின் திருக்குமரன்
‘இயேசு கடவுளின் ஒரே திருக்குமரன்’ என்று தவறுதலாக கூறுகிறது. ஆனால் பைபிள் ‘என்னை வரவேற்பவர்கள் எந்தனை பேரோ அவர்கள் எல்லாம் கடவுளின் திருக்குமரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்’ (யோவான் 11 -12 ). கூறுகிறது. நமோ பல குழந்தைகளை பெற முடியும் போது, கடவுளால் முடியாத! கடவுள் என்ன மலட!
நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று புரிந்து கொள்ளாதபோதுதான் இந்த கஷ்டம். இயேசு நல்ல திருக்குமரன். ஆனால் நாமோ அவரை போல் ஆகவேண்டும். அப்போது நாமும் கடவுளின் குழந்தைகளில் ஒருவராக கனகிடபடுவோம்.
‘மேல்லுலகில் கடவுள் நல்லவராக இருப்பதுபோல், நீயும் நல்லவராக இரு’ (மத்தேயு 5 -48 ). என்று இயேசு கூறுகிறார். பின்பு ‘ஒரே திருக்குமரன்’ எதில் ‘ஒரே’ என்கிற வார்த்தை சரிஇல்லை. பழைய ஏற்பாடு படிதால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் அனைவரும் உண்டாக்கப்பட்ட குழந்தைகள் என அழைக்கப்பட்டனர் என காணலாம். ‘உண்டாக்கப்பட்ட ஒரே’ என்பது சர்ச் கொள்கைதான்.
பகவத்கீதாவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் ‘நானே எல்லோரின் தந்தை’ (14 – 4 ).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: