Thiruchchikkaaran's Blog

எந்திரன் சூப்பர் ஹிட்! மாபெரும் வெற்றி !!

Posted on: October 12, 2010


அண்ணே புது கட்டுரை எழுதறீங்க போல இருக்கு,  என்ன தலைப்பு அண்ணே? 

சூப்பர் சக்சஸ்…., சூப்பர் ஹிட்….., மாபெரும் வெற்றி … இந்த மூணுல ஒன்னு சூஸ் பண்ணு.

சூப்பர் ஹிட்…. மாபெரும் வெற்றின்னு போடுங்க அண்ணே.

சரி, 

அப்ப தலைப்பு : எந்திரன் படம் சூப்பர் ஹிட்! மாபெரும் வெற்றி!!

**************

உலகம் முழுவதும் திரையிடப் பட்ட இடங்களில் எல்லாம் மாபெரும் வெற்றிச் சித்திரமாக எந்திரன் படம் வெற்றி நடை போடுகிறது.

இலவச பட்டு வேட்டி,  சேலை   கொடுத்தால் அதை வாங்க எப்படி முண்டி  அடித்து செல்வார்களோ,   அதை விட வேகமாக மக்கள்  தமிழ் நாட்டில் எந்திரன் படம் ஓடும் திரை அரங்குகளை நோக்கி செல்லுகின்றனர்.

சென்னையில் ரேபான் குளிர் கண்ணாடி, மற்றும் ரீபாக் காலணிகள் அணிந்த ஜீன்ஸ் போட்ட யுவதிகளும் , யுவன்களும், எந்திரன் படம் ஓடும் தியேட்டரின் வெளியே நின்று, அமேரிக்க கிரீன் கார்டு கூட கிடைத்து விடும், ஆனால்  ஆனால்  எந்திரன் படம் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருக்கிறதே என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர் என்று, செய்திகள வருகின்றன.

மலேசியா, சிங்கப்பூர், லண்டன், துபாய், லாஸ் ஏஞ்சல்ஸ்… உள்ளிட்ட நகரங்களில் எந்திரன் படம் வெளியிடப்பட்ட பகுதிகளில் எல்லாம் டிராபிக் ஜாம் ஆகி விட்டதாக  வெளி நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன (சென்னையிலே  எப்போதுமே டிராபிக் ஜாம் தான் என்பதால் தனியாக குறிப்பிட்டு  சொல்ல வேண்டியதில்லை)!

இவ்வாறாக எந்திரன் படம் மாபெரும் சூப்பர் ஹிட்டாக உலகைக் கலக்கும் அதிரடியாக உள்ளது.

************

கட்டுரை எப்படி வந்திருக்கு பார்த்தியா, கலக்கலா இருக்கு இல்லை.

அண்ணே , ஹி…ஹி… என்னா அண்ணே,  ஹி…ஹி…

…..ஏண்டா இளிக்கிற?

அது ஒன்னும் இல்லை அண்ணே, ஹி…ஹி…படம் சூப்பர் ஹிட்டுன்னு எழுதலைனா ….. உங்க…..ஹி…ஹி… கதை….ஹி…ஹி…அப்படிங்கறதால

…….பன்னாடை ……. பன்னாடை……அதை நீ சொல்லக் கூடாது….அதை நீ சொல்லக் கூடாது!

Advertisements

1 Response to "எந்திரன் சூப்பர் ஹிட்! மாபெரும் வெற்றி !!"

matha pitha rajini daivam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: