Thiruchchikkaaran's Blog

கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரி அம்மா , பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா, பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!!

Posted on: October 11, 2010


“சென்னைக்கு அலுவல் நிமித்தமாக செல்கிறேன். அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என்ன'”, என்று  வட இந்தியவை சேர்ந்த  நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார். 

மகாபலிபுரம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். மெரீனா பீச்சுக்கும் சென்று வாருங்கள் என்றேன்.

  போன வாரம் அவரை சந்தித்தேன். சென்னைக்கு சென்று வந்தீர்களா என்றேன். 

சென்னை இஸ் நைஸ், மகாபலிபுரம் குடைவரைக் கோவில்கள்  அதிசயமான கலை.  மெரீனா பீச்சும் நன்றாக இருந்தது. அலைகள் வேகமாக வருகின்றன என்றார். 

அதே நேரம் நான் குறிப்பிட்டு சொல்ல  வேண்டியது இன்னும்  ஒன்று உண்டு என்றார். 

“நாங்கள் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியது அதிகாலை  மூன்று மணிக்கு ,  வூரே அடங்கி இருந்தது. எங்கள் டாக்சி ரோட்டிலே வேகமாக சென்றது.  அந்த பின்னிரவு நேரத்திலும் எங்களை உற்சாகப் படுத்தியது என்ன தெரியுமா?

வழி முழுவதும் சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப் பட்ட  தேவியின் பெரிய படங்கள் எங்களுக்கு ஒரு நம்பிக்கையும் , மகிழ்ச்சியும் தருவதாக இருந்தன” என்றார்.

அந்த தேவியின் பெயர்,  கருமாரி அம்மன் என்றேன்.

”தமிழ் நாட்டில் பலரும் நாத்தீகவாதிகள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மக்கள் எவ்வளவு பக்தியாக இருக்கிறார்கள்.  எங்களை ஒவ்வொரு நாளும் காலையில் எங்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர், ஆட்டோவை ஓட்டும் போது வழியில்   தேவியின் கோவில் வரும்போதெல்லாம் வணங்கிக் கொண்டே சென்றார். உண்மையான பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.

     

“காலையும்  மாலையும் நல்ல அருமையான பாடல்கள் ஒலிக்கின்றன, தமிழ் மொழி எனக்கு தெரியாததால் நான் அவற்றை உணர முடியவில்லை” என்று சொல்லி விட்டு ஒரு ட்யூனை  ஹம் செய்து காட்டினார்.

இது தமிழ் நாட்டில்  மிகவும் பிரபலமான பாடல்

”கற்பூர  நாயகியே கனகவல்லி, 

காளி மகமாயி கருமாரி அம்மா!

பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,

பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!!”

அந்தப் பாடலை பாடிக் காட்டினேன். 

“இந்தப் பாட்டுதான், இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அந்தப் பாட்டின்  பொருளை அவருக்கு சொன்னேன். அந்தப் பாட்டை எனக்கு அனுப்புங்கள் என்றார்.  அவருக்கு அனுப்பி விட்டேன்.

இங்கேயும் பதிவு செய்து இருக்கிறேன். கீழ்காணும் சுட்டியில் கிளிக் செய்து பாட்டைக் கேட்கலாம்.

http://www.raaga.com/player4/?id=12045

“இந்த தேவி உற்சவம் மிக சிறப்பாக நடக்கிறது. நாங்கள் ஒரு நாள் சென்று வரும்போது  அப்படியே வண்டியில் இருந்து இறங்கி தேவியை வணங்கினோம், எத்தனை மக்கள் கூட்டம்,” என்று ஆச்சரியப் பட்டார் அந்த வட இந்தியாவை சேர்ந்த நண்பர்.

தமிழ் நாட்டில் கருமாரி அம்மன் வழிபாடு முக்கியமானது.

சென்னையில் ஆடி மாதத்தில் கருமாரி அம்மன் வழிபாடு சிறப்பாக நடை பெறுகிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பங்கு பெரும் விழாவாக கருமாரி அம்மன் விழாக்கள் உள்ளன.

தமிழர்கள் தாயை தெய்வமாக வழிபடுபவர்கள். தங்கள் தெய்வத்தை தாயாக கருதி வழிபடுபவர்கள்.  உலகின் மிக சிறப்பான வழிபாட்டு முறைகளில் கருமாரி அம்மன் வழிபாட்டு முறையும் ஒன்றாக இருக்கிறது.

”நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும், அம்மா

நெஞ்சினில் உன் திருநாமம்  வழிய வேண்டும்,

கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்,

பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்.

…..

மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா

மடி மீது பிள்ளை என்னை தள்ளலாமா?'”

இப்படியாக கடவுளை தன்   அன்னையாகவே கருதி பாடி இருக்கிறார். 

இவ்வாறாக வழிபாடும் அப்பாவி பக்தர்களே இந்து மதத்தின் வேர்கள் , விழுதுகள் எல்லாமுமாக இருக்கின்றனர்.

துறவு என்பதும் இந்து மதத்தின் முக்கியமான ஒரு ஆன்மீக முறையே. மிகப் பழைமையான துறவு முறை இந்து மதத்தின் துறவு முறையே. ஆனாலும் பெரும்பாலான மக்கள் இல்லறத்தவராக வாழ்கின்றனர். 

தத்துவ அடிப்படையிலே புத்தர் யாகங்களை விட ஆசையே வெல்லும்  துறவும் , தியானமும் ஆன்மீக  உயர்வுக்கு அதிகம்  உதவக் கூடியவை என்கிற கோட்பாட்டை நிலை நிறுத்தி விட்டு சென்றார். புத்த மதத்திலே துறவிகள்  ஓசையில்  மனக் குவிப்பு செய்தல் போன்ற தியானப்  பயிற்ச்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் சாதாரண மக்களின்  கடவுள் வழிபாடு கோட்பாட்டை  பவுத்தர்கள் இல்லாமல் செய்து விட்டனர் என்பதை சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதனால் இல்லறத்தவர்கள் தங்கள் ஆன்மீக தேடலுக்கு வழி தெரியாமல் திகைத்து நின்றனர்.

இத்தகைய கால கட்டத்திலே ஆதி சங்ககரர் தத்துவ அடிப்படையில் பவுத்தர்களை ஓவர் டேக் செய்து தன்னுடைய தத்துவ வெற்றியை நிறுவினார். அதே கையேடு அப்பாவி மக்களின் அன்னை வழிபாட்டை மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைத்தார். 

எல்லாம் ஒன்றே என்னும் அத்வைதக் கோட்பாட்டினால் தத்வத்திலே தங்கம் வென்ற ஆதி சங்கரர், அந்த நிலையை அடைய அன்னை ஆதி பராசக்தி  வழி பாட்டை முக்கிய  வழி களுள் ஒன்றாக வைத்தார். 

“அங்கம் ஹரே புளக பூஷன மாஸ்ரயந்தி”  என்றும்,

“பஜே சாரதாம்பா மஜாஸ்ரம் மதம்பாம்” என்றும் தேவி வழிபாட்டில் , அன்னை வழி பாட்டில்  எந்த தடையும் இல்லாத படிக்கு அதை முக்கிய வழி பாட்டு முறை ஆக்கினார்.

இந்தியா முழுவதும் தேவி வழிபாடு மீண்டும் திரும்பியது.

  இன்றைக்கு கருமாரி அம்மனை வழிபாடு செய்யும் சாதாரண மக்கள் உண்மையான ஆதி சங்கரரின் சீடர்கள என்று சொன்னால் அது மிகச் சரியான கருத்து.

Advertisements

71 Responses to "கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரி அம்மா , பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா, பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!!"

//”தமிழ் நாட்டில் பலரும் நாத்தீகவாதிகள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மக்கள் எவ்வளவு பக்தியாக இருக்கிறார்கள். எங்களை ஒவ்வொரு நாளும் காலையில் எங்களை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர், ஆட்டோவை ஓட்டும் போது வழியில் தேவியின் கோவில் வரும்போதெல்லாம் வணங்கிக் கொண்டே சென்றார். உண்மையான பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள்” // உண்மையில் ஆருதலான வரிகள்.கேட்பதற்கே இதமாக இருக்கிறது. தங்கள் நண்பருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Ram,

Nice to see your coments after long time. I think he reflected the truth.

மெய்ப்பொருளை விட்டுவிட்டு சாலையோரங்களில் மாக்களைப் போல எதையோ பணிந்துகொள்ளுபவனும் நாத்திகனே…இறைத் தன்மையை இயற்கையில் கண்டு இரசிப்பதற்கும் அதையே இறைவனாக்குவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுண்டு;

இது இயற்கையுமல்ல, பாவக் கரங்களால் செய்யப்பட்ட அருவருப்பான விக்கிரகம்… அதன் கண்களும் தொங்கும் நாக்கும் பயங்கரமானது… இன்னும் ஆயிரம் கண்கள் எங்கெல்லாம் இருக்குமோ… அதை ஒரு குழந்தையிடம் தெய்வமாகக் காட்டினால் நிச்சயம் வணங்கியே தீரும்; காரணம் பூச்சாண்டி காட்டியே சோறு ஊட்டுகிறோம்; இந்த சிறுவயது அச்சமானது சாகும்வரை போகிறதில்லை என்பதே உண்மை.

அண்மையில் நான் ஊட்டிக்கு சென்று வந்தேன்; நான் தங்கிவிட்டு வந்த ரூம் நானாகுமா? என்னை வணங்கவேண்டுமானால் என்னைக் குறித்து விசாரித்து என்னிடம் வரவேண்டும்; அப்போது தான் என்னுடைய உறவு என் பக்தனுக்குக் கிடைக்கும்..!

யார் அது ஆண்டவனா பேசுவது, அடடே நமது சகோ. கிளாடி அவர்களா, வரவுக்கு நன்றி,

ஆண்டவனாகவே மாறி விட்டீர்கள் போல இருக்கிறதே, அல்லது ஆண்டவன் சார்பாக பேசும் லேட்டஸ்ட் மெசியா நீங்களா? மெய்ப் பொருள் , மெய்ப் பொருள் என்கிரீர்கள. மெய்ப் பொருள் என்றால் அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். ஒரு நிரூபணமும் இல்லாமல் யாரோ எழுதியதை வைத்துக் கொண்டு மத சகிப்புத் தன்மை இல்லாமல் அப்பட்டமான மத வெறியை கக்குகிறீர்கள்.

த‌மிழ் நாட்டில் க‌ருமாரி வ‌ழிபாடு சிற‌ப்பாக‌ ந‌டை பெறுவ‌தை ச‌கித்துக் கொள்ள‌ முடிய‌வில்லை உங்களால், மத சகிப்புத் தன்மை இல்லாமல் அப்பட்டமான மத வெறியை கக்குகிறீர்கள்.

நல்ல வேலையாக கருமாரி அம்மன் வழிபாட்டில் பிற மதங்களுக்கு எதிரான மத வெறித் தூண்டுதல் துளியும் இல்லை. கருமாரி வழிப்பாடு செய்பவன் பிற மதங்களின் வழிபாட்டு முறைகளை பாராட்டி வந்த கட்டுரையை படித்தால் , சகிப்புத் தன்மை இல்லாமல் மத வெறி விடத்தை பாய்ச்சுவதில்லை.

இப்படி வெறுப்புக் கருத்துக்கள இல்லாத கோட்பாடுகளை கொண்டிருப்பதால் தான் கருமாரி வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் இன்னும் அதிக பாராட்டுதலுக்கு உரியவை ஆகின்றன.

எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போதே இவ்வளவு மத வெறியைக் கக்குகிறீர்களே, இன்னும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால், எது இந்த நாட்டில் பிற மதத்தினர் வழிபாடு நடத்த அனுமதிப்பீர்களா என்பது சந்தேகமே. உங்களை இந்த அளவுக்கு உங்களை மூளை சலவை செய்து இருக்கிறார்கள். குருசெடு போர்கள என்ற பெயரில் கோடிக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப் படு விட்டனர். இன்னும் பாலஸ்தீனிலும், இராக்கிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த மத வெறி விசத்தை பாய்ச்ச் உங்களைப் போன்றவர்களை உபயோகிக்கின்றனர்.

அப்பாவி தொழிலாளி காலை முதல் மாலை வரை முதுகு ஓடிய வேலை செய்து இரவு நேரத்தில் வீட்டில் குடும்பத்துடன் வாழ்கிறான். அந்த எளிய வாழ்க்கை வாழும் அப்பாவியை பாவி என்று சொல்லி கொச்சைப் படுத்துகிறீர்கள். அவன் கரமும் பாவக் கரமல்ல, அவன் கரமும் உழைக்கும் கரம், அவன் கரத்தால் செய்யப் பட்ட விக்கிரகமும் எந்தப் பாவத்துக்கும் உரியதாக இல்லை.

பிற மதங்களுக்கு எதிரான மத வெறிக் கருத்துக்களால், விட்டுக் கொடுக்கும் கருத்துக்களுக்கு எதிரான பிடிவாதக் கருத்துக்களால் மேலை நாடுகளில் குடும்ப வாழ்க்கை முறை அழிந்து டேட்டிங் எனப்படும் விபச்சார வாழ்க்கை முறை உருவாக்க‌ப் ப‌ட்ட‌துதான் மிச்ச‌ம். அவ‌ர்களை திருத்த‌ வ‌க்க‌ற்று, இங்கே வாழும் அப்பாவியை பாவி என்று வாய் கூசாம‌ல், ம‌ன‌ சாட்சி இல்லாம‌ல் ப‌ழிக்கிறீர்க‌ள்.

வேடிக்கை….., வெட்க‌ம்……, வேத‌னை….., விப‌ரீத‌ம்!

// யார் அது ஆண்டவனா பேசுவது, அடடே நமது சகோ. கிளாடி அவர்களா, வரவுக்கு நன்றி, ஆண்டவனாகவே மாறி விட்டீர்கள் போல இருக்கிறதே, அல்லது ஆண்டவன் சார்பாக பேசும் லேட்டஸ்ட் மெசியா நீங்களா?

… மத வெறிக் கருத்துக்களால் மேலை நாடுகளில் a விபச்சார வாழ்க்கை முறை உருவாக்க‌ப் ப‌ட்ட‌துதான் மிச்ச‌ம். அவ‌ர்களை திருத்த‌ வ‌க்க‌ற்று… //

எத்தனை எகத்தாளம்… கீழ்த்தரமான எழுத்துக்கள்…விபச்சாரி ஆண்கள் இல்லாமல் வந்துவிட்டாளா? இதைப் போன்ற கீழ்த்தரமான தாக்குதல்களுக்கு அஞ்சியே ஒதுங்கவேண்டியதாகிறது;அறிவுபூர்வமான ஒரு சிந்தனைக்கு பாலியல்ரீதியான சொற்களால் தாக்கினால் பெண்கள் அஞ்சிவிடுவார்கள் என்று நினைத்தீர்களா? இதுதான் நாகரீக சமுதாயத்தின் இலட்சணமா?

அண்ணன் திருச்சிக்காரன் அவர்களை சமதர்மவாதி என்றெண்ணியே இங்கே எனது கருத்தை பதித்தேன்; நீங்கள் சந்தர்ப்பவாதி என்று நானறியவில்லை; அயோத்தி மேட்டரில் தர்மஅடி வாங்கியதும் பலருடைய மனங்குளிர எதையாவது செய்தாகவேண்டிய கட்டாயம் உங்களூக்கு..!

மதவெறி யாருடைய எழுத்துக்களில் இருக்கிறது என்பதை வாசகர் சொல்லட்டும்;ஒரு பெண் தெய்வத்தை எப்படி ஆராதிக்கவேண்டும் என்ற வழிமுறைகள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை;அந்த ஆத்தா பின்னாலேயே பூஜைக்கு வந்த பக்தைகளைத் தின்னும் காட்டுமிராண்டிகளுக்கு நீங்கள் சாமரம் வீசுகிறீர்களே..!

ஒரு கட்டுரையை ‘ஹிட்’டாக்க ச்சும்மா ஹீட்டான வார்த்தைகளைக் கக்குவது நல்ல எழுத்தாளருடைய இலட்சணமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்; நீருபணம் கேட்கும் உங்களுக்கு கற்பூர நாயகிக்கு நிரூபணம் கேட்கத் தோன்றவில்லையா?

நெற்றியிலே பட்டையையும் கழுத்திலே கொட்டையும் போட்டுண்டு அரசாங்க இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு பக்தி வேடமிடும் பகல் வேடதாரிகளுக்கு இனியும் வக்காலத்து வாங்கினால் வரலாறு உங்களை மன்னிக்காது;

நாங்கள் அடிபட்ட வேதனையில் அலறுகிறோம்;நீங்களோ வியர்வையில் நெய் கலந்த கொழுப்பில் பேசுகிறீர்கள்;எவனோ எவனையோ விரட்டிண்டு போனானாம்;வியர்வை பெருக்கெடுத்து நெய்யாக வழிந்ததாம்;அதில் யாகம் செய்ய எவனோ தடைசெய்தானாம்;உடனே எவனுக்கோ கோபம் வந்ததாம்;நீங்கள் போய் அவன் சிலை மீது நெய் ஊற்றி அவனை சாந்தப்படுத்தி லோகத்தை வாழ வைப்பீர்களாக்கும்…சர்தான்…போங்கய்யா… இன்னும் பல சகோதரிகள் எழும்பி உங்களுக்குப் போதித்தாலும் திருந்தமாட்டீர்கள்,போல‌.

ஒரு ஏழை தொழிலாளி செய்யும் சிலைக்கு தொழத் தக்க தெய்வத்தன்மை இருக்குமானால் அதனை நிறுத்தி ஒரு ப்ராமணன் பல்வேறு அனுஷ்டானங்களைச் செய்து சுத்திகரிக்கவேண்டிய அவசியமென்ன? அது எப்போது தீட்டுப்பட்டது, கல்லாக இருந்தபோதா, தொழிலாளியின் கைபட்ட போதா?

இதன் வேத காரணமே பாவத்தன்மையை வெளிப்படுத்தும்;
சிலை மாத்திரமல்ல,எந்த பொருளுமே கழுவுவதாலேயே சுத்தமாக விளங்கும்;ஆனால் இங்கே புனிதப்படுத்துதல் என்ற நடைமுறையைக் குறித்து சொல்லுகிறேன்;யோசியுங்கள்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரி கிளாடி அவர்களே,

நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் வருத்தப் படுகிறீர்கள.

பூஜைக்கு வந்த பெண்களை தின்னும் கள்ள மனிதர்களை நான் விமரிசித்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் என் சகோதரியாகவே கருதுகிறேன். எனவே எந்த பெண்ணாக இருந்தாலும், அவர்கள் அபலையாக்கப் படக் கூடாது, அவமானப் படுத்தப் பட கூடாது என்பதில் எனக்கு அக்கறை உண்டு.

நான் எந்த இடத்திலும் பெண்களை குறை சொல்லவில்லையே, ஆண்கள் நல்லவர்கள என்றும் சொல்லவில்லையே. பெண்கள் மட்டும் கேட்டவர்கள் என்றோ, ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள என்றோ நான் எந்த இடத்திலும் எழுதவில்லையே.

நான் முன்பே சொன்னது போலஉலகில் உள்ள எல்லா பெண்களையும் நான் என் சகோதரியாகவே, தாயாகவே நோக்குகிறேன் கருதுகிறேன், (என் மனைவியைத் தவிர பிற பெண்களை சகோதரியாகவே, தாயாகவே நோக்குகிறேன் ) !
அவ்வகையில் உங்களின் மீதும் எனக்கு மிக்க மரியாதை உண்டு.

நாம் சிந்தனையாளர்களை சிந்தனையாளர்களாகவே பார்க்கிறோம். சிந்தனை என்பது உண்மையை தேடி செல்வது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சிந்தனை, சொல்லப் படும் கருத்து எந்த அளவுக்கு உண்மையை ஒட்டி இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தக் கருத்து வலுப் படும்.,

நீங்கள் பிற மதங்களின் தெய்வங்களை சகிப்புத் தன்மை இல்லாமல் நிந்தனை செய்து பிற மதங்களுக்கு எதிரான கருத்துக்களை தயங்காமல் சொல்லி விடுகிறீர்கள. அதற்க்கு பதிலாக நாம் உண்மைகளை எழுதினால், பெண் என்பதால் அஞ்ச வைக்கப் பார்க்கிறீர்கள் என்று எழுதி விடுகிறீர்கள். இதைக் கண்டு திகைத்து நிற்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக் கூடாதே என்றார் இயேசு கிறிஸ்து, இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இயேசுவின் விட்டுக் கொடுக்கும் கருத்துக்களுக்கு எதிரான பிடிவாதக் கருத்துக்கள் அவர்கள மனதிலே புகுத்தப் பட்டதால அது அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்து, கணவன்மனைவி விவாகரத்து செய்கின்றனர். இது முறையற்ற வாழ்க்கை வாழ்வதில் கொண்டு போய் விடுகிறது. இவ்வாறு வாழ்பவர்களை திருத்தி மனம் திரும்ப செய்வதை விட்டு விட்டு, இங்கே கல் செதுக்கி உழைத்து வாழும் அப்பாவி மனிதனை பாவி என்றும் அவர் கரங்களை பாவக் காரங்கள் என்றும் பழிப்பது சரியா என்று தான் நான் கேட்டேன். நான் ஓரிரு நாட்களுக்கு முன்னாள் இதே கருத்தை சகோ. சில்சாமிடமும் சொன்னேனேன். ஆனால் அதையே உங்கள் பின்னூட்டதிற்கு பதிலாக எழுதும் போது, அது உங்களால சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை.

மற்றபடி கருமாரி அம்மன் உட்பட எந்தக் கடவுளையும் நான் பார்க்கவும் இல்லை. அதற்காக நான் சாட்சி கொடுக்கவும் இல்லை. நம்முடைய அனாலிசிஸ் எப்படிப்பட்டது என்றால், ஒருவர் ஒன்றை தெய்வமாகக் கருதி வழி படும் போது, அந்த வழிபாடு அவரது மனதிலே எந்த வகையான விளைவுகளை உருவாக்குகிறது, அது அவர் மனதிலே அமைதியை, நட்பை, அன்பை உருவாக்குகிறதா, அல்லது வெறுப்பு கோட்பாடுகளின் பக்கம் அவரைத் தள்ளுகிறதா, அதனால் பிறருக்கு, மக்களுக்கு, சமூகத்துக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் என்ன என்பதைப் பற்றியதே ஆகும்.

நல்லிணக்க அடிப்படையிலே நான் சர்ச்சுக்கு சென்று இயேசு கிறிஸ்துவை வழி பாடவும், மசூதிக்கு சென்று அல்லாஹ்வினை வழிபடவும் தயார். அது வெறுப்புணர்ச்சி அற்ற மன நிலையை , சமூகத்தை உருவாக்கும், நல்லிணக்கத்தில் சிநேகத்தில் மக்களை இணைக்கும் வழியாகும். நான் எந்தக் கடவுளையும், வழி பாட்டு முறையையும் இகழவும் இல்லை, யாருக்கும் சாட்சி கொடுக்கவும் இல்லை.

அயோத்தி விவகாரத்தில் நான் தர்ம அடி வாங்கியதை நீங்கள் படித்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவாக பெண்கள் மீதும், அவ்வகையில் உங்கள் மீதும் நான் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். எனவே நான் கனவிலும் கருதாத ஒன்றை கருதத்தக்க வெளியிட்டது போல எழுதிக் காட்டி , நீங்களும் அண்ணனாகிய எனக்கு தர்ம அடி கொடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்து விடை பெறுகிறேன்.

அன்பு அண்ணன்

திருச்சிக்காரன்

சகோ திருச்சி,

கற்பூர வாசனையை நீங்கள் எல்லா ஜீவனுக்கும் நுகர செய்யும் பொருட்டு வீணாக நேரத்தை செலவழிகிரீர்கள் என்று நினைக்கிறேன்.
அந்த வாசனை எல்லா ஜீவனுக்கும் புரியாது.

கருமாரியம்மன் கோவிலில் ஐயர் கிடையாது மந்திரம் கிடையாது, நெய் வழியும் பொங்கலும் கிடையாது. ஐயர் உள்ள கருமாரியம்மன் கோவில்கள் எல்லாம் அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவில்கள்.
இதனை புரிந்து கொள்ளகூடிய தன்மை எல்லோருக்கும் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

அய்யர் இல்லாத அம்மன் கோவில்களே இங்கு 99 சதம். கூழ்தான் இங்கே சிறப்பு, பொங்கல் இருந்தாலும் நெய் போடும் அளவு எல்லாம் யாரும் இங்கே இல்லை,

இவர்களுக்கு சாமரம் வீசமுடியுமா?

நீங்கள் பாட்டுக்கு அன்னையை பற்றி கட்டுரை எழுதிவிடுகிரீர்கள், அதிலே இன்னும் பக்தர்கள் தமிழ்நாட்டிலே கருமாரி வழிபாடு செய்வதையும் அதனுடைய சிறப்பையும் எழுதி விடுகிறீர்கள். இதனை படிக்கும் பிறர் வைத்தெரிச்சலில் இங்கு வந்து எதாவது புலம்ப வைத்து விடுகிறீர்கள் மதனல்லினக்கத்திற்கு எதிராக சண்டை வளர காரணம் ஆகிவிடுகிறீர்கள், இனிமேல் நீங்கள் இது போல கட்டுரை எழுதி பிறர் வைதேறிச்சலை எல்லாம் கிளப்பி மத வெறி கருத்துகளை பிறர் கூற வைத்து விட்டு அதனை குத்தி காட்டாதீர்கள் .

கூலி தொழிலாளி அவன் எவ்வளவு நேர்மையாய் இருந்தாலும் அந்த சர்வாதிகாரியை பணியாவிட்டால் பாவியே, அவன் கரங்கள் பாவபட்டவையே என்பதை உங்களுக்கு புரிய வைக்க எவ்வளவு முயன்றாலும் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

கொலை செய்தாலும் பாவி ஆகாமல் இருக்க வழி சொன்னால் ஏற்க மறுக்கிறீர்கள்.

// சகோ திருச்சி, கற்பூர வாசனையை நீங்கள் எல்லா ஜீவனுக்கும் நுகர செய்யும் பொருட்டு வீணாக நேரத்தை செலவழிகிரீர்கள் என்று நினைக்கிறேன்.அந்த வாசனை எல்லா ஜீவனுக்கும் புரியாது. //

கற்பூர வியாபாரி திருச்சி…விமர்சிப்போர்…….!

// கருமாரியம்மன் கோவிலில் ஐயர் கிடையாது மந்திரம் கிடையாது, //

ஆனால் உடுக்கை அடித்து குறிசொல்லும் பூஜாரிகள் உண்டு; இவர்கள் மரத்தடிகளையும் ஆற்றங்கரைகளையும் ஆக்கிரமித்து ஏகபோக உரிமையில் கோவில் கட்டுவார்கள்;இவர்களில் பல கொலைகாரர்களும் முன்னாள் ரௌடிகளும் கொள்ளையர்களும் அடக்கம்;இவர்கள் எந்த வேதத்துக்கும் சாஸ்திரத்துக்கும் கட்டுப்படமாட்டார்கள்;இவர்களை யாரும் எதிர்க்கவும் முடியாது;அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் கறுப்பு பணத்துக்கு காவலாளிகள் இவர்களே;இவர்களாலேயே இந்து மார்க்கத்தின் உயர்தத்துவங்கள் கடைசரக்கானது;

(உதாரணத்துக்கு, தொங்கா… ஸாரி… …?)

// கொலை செய்தாலும் பாவி ஆகாமல் இருக்க வழி சொன்னால் ஏற்க மறுக்கிறீர்கள். //

கொலைகாரன் ஆட்டோ சங்கர் பாவியாக மரித்தான் நீதிமானாக எழுந்திருப்பான்;அதைச் சொல்லுகிறீர்களா,சதீஷ்?

//கற்பூர வியாபாரி திருச்சி…விமர்சிப்போர்…….!(edited)//

“கழுதைக்குத் தெரியுமா,கற்பூர வாசனை?” என்ற பழமொழி பொதுவானது தானே அதனடிப்படையிலேயே சதீஷ் மறைமுகமாகத் தாக்குகிறார்; கழுதையானது எங்கள் தேசிய விலங்கு அதைக் குறித்துப் பேசுவது அத்தனை மாபாபமா அண்ணா?

சகோ.கிளாடி அவர்களே,

அவர் நேரடியாக சொன்னதை நேரடியாக நாம் எடுத்துக் கொள்ளலாமே. யூகங்கள் தேவை இல்லை.

அதே நேரம் நீங்கள் சொன்ன ஒரு தகவல் எனக்கு ஆர்வத்தை அளிக்கிறது.

கழுதை நம் நாட்டில் தேசிய விலங்கா?

புலி தான் நம் நாட்டின் தேசிய விலங்கு என்று நினைத்தேன்!

// கழுதையானது எங்கள் தேசிய விலங்கு…//

// கழுதை நம் நாட்டில் தேசிய விலங்கா? //

இரண்டு வரிகளுக்குமுள்ள வித்தியாசத்தை கவனியுங்களேன்…நீங்கள் எங்களைத் தள்ளிவிட்டதால் வெறுத்துப் போய் கண்டகண்ட மிருகங்களையும் தொழுவதை விட்டுவிட்டு கழுதையைப் போற்ற துவங்கி விட்டோம்…ஆமா,இன்னும் நிறைய இருக்கு’ங்ணா..!

சகோ. கிளாடி அவர்களே,

மிருகங்களை தொழுதால் வணங்கினால் என்ன தவறு?

ஒரு இனத்தை வாழ வைக்க பல இனங்களை அழித்து, அவர்களின் வாழ்விடங்களைப் பறித்துக் கொடுக்க திட்டம் போட்டு செயல் படுத்தியதாக – இதை நாம் சொல்லவில்லை, சில நூல்கள சொல்லுகின்றன- சொல்லி அப்படிப்படவராக ஒருவரைக் காண்பித்து , அவரையே வணங்கலாம என்று சொல்லும்போது,

அப்பாவி அபலைப் பெண்ணை, அயோக்கிய காம கொடூர சர்வாதிகாரி ஒருவரிடமிருந்து காப்பாற்ற, தன்னலம் கருதாமல், எந்த பலனும் எதிர்பார்க்காமல் உழைத்த ஒருவர் அவர் மிருக வடிவமாக இருந்தாலும் அவரை ஏன் வழிபட கூடாது?

ஒருவர் எந்த வடிவில் இருக்கிறார் என்று பார்ப்பதை விட எந்த அளவுக்கு தன்னலம் கருதாமல், நல்ல செயல்களை செய்கிறார்களோ, அவர்களை தொழுவதுதானே சரி?

அன்புள்ள சகோதரி கிளாடி,
நான் உங்களுக்கு அண்ணனா அல்லது தம்பியா என்று தெரியவில்லை அனால் நிச்சயம் உங்கள் சகோதரன்தான்.

///கொலைகாரன் ஆட்டோ சங்கர் பாவியாக மரித்தான் நீதிமானாக எழுந்திருப்பான்;அதைச் சொல்லுகிறீர்களா,சதீஷ்?/////

இதற்கு என்ன அர்த்தம் எனக்கு விளங்கவில்லை, ஆடோ சங்கர் கதையை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, அப்படி ஒரு கொலைகாரன் இருந்தது மட்டும் தெரியும், பள்ளி நாட்களில் கேள்வி பட்டிருக்கிறேன்,
நான் சொன்னது எந்த பெரிய பாவம் செய்தவனும் இரட்சிப்பு பெற்றுவிட முடியும் கர்த்தரை பணிந்தால், ஆனால் எத்தனை நல்லவனும் ஒரு குற்றமும் செய்யதவனும் பாவி ஆகி விடுவான் கர்த்தரை பணியாவிட்டால்.இதனை குறிப்பிட்டே நான் எழுதினேன். ஆ சங்கர் நீதிமானாக எழுந்திருப்பான் என்று நீங்கள் கூறிய பிறகே தெரியும், இது உண்மையா? ஒரு கொலைகாரன் நீதிமானாக எழுந்திருப்பான் என்பது என்ன அர்த்தம் விளக்கினால் தெரிந்து கொள்வேன். இப்பவும் எனக்கு கர்த்தர் மேலே கோபம் இல்லை மற்றவரை பாவி என்று கூறும் மனிதர் மேலே தான் வருத்தம்.

என்னை பொறுத்தவரை பிரம்மம்=சிவா= கிருஷ்ணன்= கருமாரி= கத்தார்= இயசு= கிளாடி= திருச்சி=சதீஷ்
கடைசி மூவரும் இன்னும் தன நிலையை உணரவில்லை, உணர்ந்தபின் ஒன்றும் இல்லை, சுருக்கமாக கடவுளே இல்லை.

அந்த நிலை உணர ஒவ்வோர் வழி இதிலே என்ன நான் பாவி.கடவுள் இல்லை என்பதே உண்மை ஆனால் அது என்னை நான் உணர்ந்த பின்பே.

இதனை பற்றி நான் விளக்கினால் இங்கே தப்பான அர்த்தங்களும், குதர்க்க கேள்விகளும் எழக்கூடும். இதை விளக்கும் அளவு எனக்கு அறிவு இல்லை.

பூசாரி கற்பழிக்கிறார் என்று கூறுகிறீர்கள்,
அதனால் இந்து மதம் தாழ்ன்த்தது ஆகிவிடுமா?அந்த தவறை ஆதரிப்பவன் அல்ல நான் அவன் யாராக இருந்தாலும் குற்ற செயல் தண்டனைக்கு உரியதே, அதுவும் இறை பனி செய்வதாக சொல்லி கொண்டு பிறை ஏமாற்றி நடித்து இது போல குற்றம் செய்பவர்களுக்கு சாதாரண மனிதனை விட கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.அவனுக்கு சாமரம் வீசும் எண்ணம் என்னை போன்றர்க்கு கிடையாது.ஆனால் ஒரு நடத்தை கேட்டவனின் குற்றத்துக்கு மதம் பழியை ஏற்க முடியாது.
இன்றைய தினமலரை பாருங்கள் அதிலே உங்கள் மதத்தினுடைய ஒரு பாதிரியார் ஒரு கண்ணியச்த்திரியை கற்பழித்த வழக்கு பற்றிய செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் அதனால் அந்த பூசாரியின் தவறை கிறித்தவ மதத்தின் மேல் ஏற்றுக் கொள்வீர்களா?
கேடு கெட்டவன் எல்லா மதத்திலும் இருக்கிறான். எந்த ஒரு மனித தவறும் மதத்தின் மேல் போய் படியகூடாது.
மதத்தின் பெயரை சொல்லி செய்யப்படும் தவறுகள் பல உள்ளன,அவற்றை தவிர.
மரத்தடியில் அமர்ந்து குறி சொல்பவன் அஞ்சுக்கும், பத்துக்கும் பிழைப்பு நடத்துபவன். அவனுக்கு எது அரசியல் செல்வாக்கு? கருப்பு பணம் எல்லாம்?அவன் அதிக பட்சம் ஒரு பக்தனிடம் பத்தோ இருவதோ பணம் வாங்குவான் அதற்கு மேல் அங்கு வருபவனுக்கும் கொடுக்கும் சக்தி இருக்காது.இவனும் இதற்கு மேல் தவறு செய்வதில்லை. அவன் கடவுளை காட்டுகிறேன் என்று கூட சொல்ல மாட்டன்.
அப்படி ஒருவன் சொன்னால் அங்கே போகும் ஒன்னு அரை கூட அந்த பக்கம் போகாமல் நின்று விடும்

நீங்கள் குறிப்பிடும் படியான சில பணக்கார சாமியார்கள் இருக்கலாம். கர்ப்பரேட் சாமிகளை நம்புவனை திருத்த வண்டிய அவசியம் இருப்பதனை நானே உணர்ந்திருக்கிறேன்.
என்னால ஆனா விழிப்புணர்வை நண்பர்களிடத்து செய்தே வருகிறேன்.

///நீங்கள் எங்களைத் தள்ளிவிட்டதால்////
மன்னிக்கவும், நாங்கள் உங்களை தள்ளி விட வில்லை. நீங்கள் தான் எங்களை பாவிகள் என்று தள்ளி வைக்கிறீர்கள்.

///வெறுத்துப் போய் கண்டகண்ட மிருகங்களையும் தொழுவதை விட்டுவிட்டு கழுதையைப் போற்ற துவங்கி விட்டோம்…ஆமா,இன்னும் நிறைய இருக்கு’ங்ணா..!//

எப்படியோ நீங்களும் இயற்கை வழிபாட்டை நோக்கி போய் கொண்டுள்ளீர்கள்.
நாங்கள் கண்ட கண்ட மிருகத்தையும் வணங்குவதில்லை.

///இந்து மார்க்கத்தின் உயர்தத்துவங்கள் /////

ஒப்பு கொண்டதற்கு நன்றி

///இந்து மார்க்கத்தின் உயர்தத்துவங்கள் கடைசரக்கானது;/////

அதனை மீட்டெடுக்கவே போராடுகிறோம். கவலை வேண்டாம் நிச்சயம் மீட்டெடுப்போம்.

///இந்து மார்க்கத்தின் உயர்தத்துவங்கள் கடைசரக்கானது;/////

உண்மையில் உங்கள் மதம் தான் தெருசரக்கு ( காய் கரி போல).
போல வீடு வீடாக விற்பனை பிரதிநிதிகளுடன், இலவச இணைப்புகளும் (பணம் …..) சேர்த்து விற்கபடுகிறது.

டெலி மார்க்கெட்டிங் கூட உள்ளது எல்லாம் உங்கள் மதம் தான்.

//உண்மையில் உங்கள் மதம் தான் தெருசரக்கு //
உண்மைதான், வீடு வீடாக, ஊர் ஊராக கிறிஸ்துவத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளது.
ஆனால் விற்ப்பனைக்கு அல்ல, இலவசமாக.

when we believe in Jesus and repent from sins we ll get eternal life But cant escape from the punishment in this world for sins.wen we live holy life we will get eternal life Jesus said one who believe in Jesus and live pure life will get eternal life .please consult any good christian who lead holy life u ll find truth also seek Gods help to understand bible May God bless u

Welcome Mr. Edwin,
Thanks for your participation.

Dear Edwin,

//when we believe in Jesus and repent from sins we ll get eternal life //
I agree with the above. That we should repent from SIN and have to believe in Jesus to have eternal life.

//But cant escape from the punishment in this world for sins.//
Can you please provide the biblical evidence for this?

//wen we live holy life we will get eternal life//
Is anywhere bible says that it is possible to live a HOLY life without Jesus??

Please read the scriptures and pray about it.

Thanks,
Ashok

Thank you Thiruchchikkaaran,for allowing me to share my thoughts in your site with a person who is considering Christ.

Dear Brother Ashok,

You are always welcome.

thanks to brother edwin

///when we believe in Jesus and repent from sins we ll get eternal life But cant escape from the punishment in this world for sins////

first time hearing this truth from a chiristian, but you guys says,believe in jesus will release from all bad debts.

////wen we live holy life we will get eternal life Jesus said one who believe in Jesus and live pure life will get eternal life////

acceptable logic.

////please consult any good christian who lead holy life u ll find truth also seek Gods help to understand bible May God bless u//////

hope you are a good chiristian, for my understanding would you please brief me the fact about sin and sinners as in bible.does it says to call others are sinners.does it says others religious practices are vain or against to truth.
is there any quotes in bible says to convert entire world with the follower of jesus.

did anywhere emphasized non chiristians are inferior

is there any wordings says to twist the quotes of hindu vedhas as you like for the sake of propagating jesus.

Edwin:But cant escape from the punishment in this world for sins.

Ashok: Can you please provide the biblical evidence for this?

எட்வின் சொன்னது மிகச் சரியான கூற்றாகும்; எப்படியெனில் வெளிப்படையானதொரு பாவக் காரியத்தைச் செய்து குற்ற உணர்வில் இருப்பவன் தான் செய்த குற்றத்துக்காக அந்தரங்கமாக வருந்தினால் மட்டும் போதாது; சம்பந்தப்பட்டவருக்கு நீதி கிடைக்க ஏதுவாக தன் குற்றத்தை அந்தந்த நாட்டு குற்றவியல் சட்டங்களுக்குட்பட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்;அதன்படியான தண்டனையையும் அனுபவிக்கவேண்டும்;

உதாரணமாக ஒரு பத்திரிகையில் விசித்திரமான ஒரு செய்தியை வாசித்தேன்; கள்ளக் காதலுக்காக தனது இளம் மனைவியைக் கொன்றான், ஒருவன்; அவள் காணாமல் போனதாக எல்லோரையும் நம்பவைத்தான்;புது மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தான்;

வருடங்கள் உருண்டோடினாலும் அந்த கொலைக்கார கணவனால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை;பத்து வருடத்துக்குப் பின்னர் அண்மையில் காவல் நிலையத்தில் சென்று சரண‌டைந்தான்;

காவல்துறையில் எதற்கும் ஆதாரம் வேண்டுமே,அவன் காட்டிய இடத்தில் ஒரு பாழுங்கிணறு…அதுவும் புதர் மண்டியிருக்க அதில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை;கிடைத்த ஒரு சில எலும்புத் துண்டுகளை வைத்து மரபணு சோதனை மூலம் அவனுடைய குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கித் தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பானது;

அந்த கணவன் சொல்கிறான்,”என் மனைவி தினமும் என் கனவில் வந்து ஓயாமல், ‘ஏன் மாமா என்னை கொலைசெய்தே’ என்று கதறுவது என்னால் தாங்கமுடியவில்லை,எனவே சரணடைந்தேன் ” என்று;

ஆம்,வேதமும் இதையே போதிக்கிறது,”உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும்” என்று; நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளியாகத் தீர்க்குமானால் தேவன் அதைக் காட்டிலும் பெரியவராக இருக்கிறார்” என்றும் வேதம் சொல்லுகிறது;

இந்த கிறித்தவர்கள் எல்லோரையும் பாவி என்று கூறி அவமானப்படுத்துகிறார்களே என்று சிலர் வருத்தப்படுகின்றனர்; ஆனால் அரசாங்கமோ சாதாரண எயிட்ஸ் வியாதி பிரச்சாரத்துக்காக கோடிகோடியாக செல‌விட்டுக் கொண்டிருக்கிறது; இதைக் குறித்து யாரும் வருத்தப்படுகிறதில்லை;

பாவத்தின் கொடூரத்தினையுணர்ந்த வேதம் அது உருவாகும் தலைமைபீடமான சிந்தையை மாற்றிட துடிக்கிறது;

நான் இன்னும் எளிமையாக ஒரு மதநல்லிணக்கக் கருத்தைச் சொல்லுகிறேன்;இந்துமார்க்கத்தில் பாவத்தைக் குறித்த அச்சம் அதிகமாக இருக்கிறது;கிறித்தவத்திலோ பாவத்தை மேற்கொள்ளும் வழிமுறையும் அதற்கான தீர்வும் எளிமையாக இருக்கிறது;

கிறித்தவத்தில் பாவத்தைக் குறித்த அச்சம் சிறிதும் இல்லை; ஆனால் இந்துமார்க்கத்தின் பாவத்தைத் தொலைக்கும் சிக்கலான கடுமையான நடைமுறைகளைப் பெரிதாக விமர்சிக்கிறார்கள்;

யார் தேவனுடைய பார்வையில் நீதிமான்கள் தெரியுமா, பாவத்துக்காக வருந்தி விடுதலைக்காக ஏங்கும் கிறித்தவரல்லாதோரே;

ஆண்டவர் சொல்லுகிறார், “மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களையல்ல, தான் செய்த குற்றத்துக்காக வருந்துகிற ஒரே ஆத்மாவை மீட்க வந்தேன்” என்று;

“தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலையென்றால் வெறும் சிலைதான் என்று கவிஞன் பாடினான்; அப்படியே அதன் முன் மனதுருகி தன்னைத் தந்து வழிபட்டு தன் பாவம் தொலைக்கத் தொழும் பக்தனையே ஆண்டவராகிய இயேசு தேடிவந்து,”நீ பாவியல்ல, நீயே நான் தேடும் நீதிமான்” என்கிறார்;

எனவே நம்முடைய குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டாலும் அதற்குரிய தண்டனையைப் பெற நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதே சரியானது;

இன்னும் கேட்டால் இறையுணர்வே பாவ உணர்வையும் அதற்கான பரிகாரத்தைத் தேடும் மனதையும் தருகிறது; இந்த நிலையிலேயே சமூகத்தால் “விபச்சாரி” என்று பட்டம் கட்டம் கட்டப்பட்ட சகோதரியை நோக்கி, “உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று கூறினார்,இயேசுவானவர்;

இதன்படி அவள் ஆன்மா குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலையாகி தூய்மையானது;ஆனாலும் அந்த பாவத்தினால் வரக்கூடிய அவள் விளைவுகளை சந்தித்தாக வேண்டும்;அதனை மேற்கொள்ள- அது பொருளாதாரக் குறைவுகளோ, வியாதி, வருத்த, பெலவீனங்களோ விசுவாசத்தினாலும்- பாவத்தைவிட்டு விலகி ஜீவிப்பதாலும் மட்டுமே வெற்றி பெறமுடியும்;

இத்தனை நீளமாக நீட்டி முழக்குவதைத் தவிர்க்க எட்வின் இரத்தின சுருக்கமாக எழுதிவிட்டார்..!

இந்து மார்க்கத்தினர் யாரும் பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. பெரும்பாலன இந்துக்கள பாவம் செய்வதும் இல்லை. அவனவன் தன வயிற்றுக் கஞ்சிக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் முதுகொடிய உழைக்கிறான். இரவில் தன குடும்பத்தோடு அமைதியாக உண்டு உறங்குகிறான். இதிலே ஒரு பாவமும் இல்லை. இவர்களை பாவி என்று அழைப்பதுதான் பாவம்.

சிலர் சில பல தவறுகளை செய்தாலும், அவர்கள தாங்கள் அதற்குரிய தண்டனைகளை பெறுவோம் என்று அறிந்து அதை எதிர் கொள்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவை நாம் அன்பு செய்வோம். அது பிரதி பலன் பாராத அன்பு. ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், பதிலுக்கு எங்கள் பாவங்களை நீங்கள் மன்னியுங்கள்” என்று இயேசுவிடம் பேரம் பேசவோ, காசுக் காரரைப் போல வியாபாரம் செய்யவோ விரும்பவில்லை.

// இந்து மார்க்கத்தினர் யாரும் பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. பெரும்பாலன இந்துக்கள பாவம் செய்வதும் இல்லை. //

அப்படியானால் உலகிலேயே மாசு நிறைந்த நீர்நிலையாக கங்கை மாற என்ன காரணமோ..?

சமநிலையிலிருந்து நேர்மையுடன் எழுதினாலும் கண்மூடித்தனமாக திசைதிருப்பும் வண்ணமாக பதிலளிப்பது ஏற்புடையதல்ல‌.

கங்கை நதி பலவிதமான தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளால் மாசுபடுத்தப் பட்டுள்ளது தெரியாதா நண்பரே. அவற்றை சரி செய்து கங்கை நதியை தூய்மைப் படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.

நீங்கள் நடுநிலையாக எழுதுங்கள், வரவேற்கிறோம். திசை திருப்பவில்லை.

எந்த தொழிற்சாலை கழிவில் இருந்து பிணங்கள் வருகிறது ஐயா?
நடுநிலையாக எழுதுங்கள்.

மேற்கோள் காட்டி,பின்னூட்டத்தின் இறுதியிலுள்ள பெட்டியில் மட்டுமே கருத்துக்களைப் பதிக்கவும்; பெரும்பாலும் கடைசியான பின்னூட்டத்தையே வாசகர் கவனிப்பார்; நடுவிலுள்ள பின்னூட்டங்கள் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.

கங்கையில் முழுகினால் பாவம் தொலையும் என்றும் அங்கே உயிர்போனால் மோட்சம் கிடைக்கும் என்றும் வாழ்நாளில் ஒருமுறையாவது யாத்திரை செல்லும் இந்துக்கள் என்ன பாவத்தை அங்கே தொலைக்க முயற்சிக்கிறார்கள்? கர்ம பாவத்தையா, ஜன்ம பாவத்தையா..?

முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம்…கைப்பிடி சோற்றில் மறைக்கவே முடியாதய்யா..!

இயேசுகிறித்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திரிப்பதுடன் ஸ்வர்க்க லோக பாக்கியத்தையும் தரும்;

ஆனால் அகோரிகளுக்கு தங்கள் மாம்சத்தைத் தின்னக் கொடுப்பதால் ஒருபோதும் சிவலோகப் பதவியையடையவே முடியாது..!

கங்கையில் நீராடுவது, தங்களுக்கு ஆன்மீக உயர்வைத் தரும், புண்ணியத்தை தரும் என்று இந்துக்கள் நம்புகின்றனர் என்பது ஓரளவுக்கு சரியே.

கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்றும் பல இந்துக்கள நம்புகின்றனர். ஆனால் அதே நேரம் பெரும்பாலான இந்துக்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

நீங்கள் தமிழ் நாட்டிலோ, கர்நாடகாவிலோ, குஜராத்திலோ, மாராட்டியத்திலோ, ஆந்திராவிலோ சென்று எத்தனை இந்துக்கள் பாவத்தை தொலைக்க கங்கையில் மூழ்கினார்கள் என்று கேட்டுப் பாருங்கள். கிட்டத் தட்ட சதவீதம் பேர் கங்கையில் மூழ்க வேண்டும் , பாவம் போக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களில் பலர் எந்த பாவமும் செய்தும் இருக்க மாட்டார்கள். பாவமே செய்யாத போது, அதைப் பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை.

இயேசு கிறிஸ்துவை அன்பராக, விருப்பமானவராக, எங்களில் ஒருவராக கருதுகிறோம். இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகனாக, கடவுளாகவே கருதுவதில் இந்துக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இப்படி பிரதி பலன் பாராமல் அன்பு செலுத்துவது இயேசு கிறிஸ்துவை பாவங்களை கழுவி சுத்திகரிக்க உதவுவபவராக பார்ப்பதை விட உயர்வான அன்பாகும்.

அகோரி என்று சொல்லப் படும் பிரிவினரின் வழிகளும், முறைகளும் இந்து மதத்தின் அடிப்படை கொள்கைகளை விட்டு பெரிய அளவில் மாறுபட்டு உள்ளன. இவர்ளைப் போன்றவர்களைப் பற்றி சொல்லும்போது சுவாமி விவேகானந்தர், வீழ்ச்சி அடைந்த புத்த மதத்தில் வெளி நாட்டை சேர்ந்த நாகரீகம் இல்லாத மக்கள் புகுத்திய முறை என்று சொல்லி இருக்கிறார். ஆதி சங்கரர் உட்பட பலரும் தங்களால முயன்று அளவுக்கு பரிசுத்தமான இந்து மதத்தை மீட்டுக்க முன்றனர், இன்று வரையிலும் முயற்சி தொடர்கிறது என்று சொல்லி உள்ளார். இந்துக்கள் கிட்டத் தட்ட நூறு கோடியினர் உள்ளனர் அகோரி என்று சொல்லப் படுபவர்கள், சில ஆயிரம் கூட இல்லை. பெரும்பாலா இந்துக்களுக்கு அகோரி பிரிவினர் இருப்பது கூட தெரியாது.

gangai oru punniya nadhi than ithil ell allavum santhagam illai

// இந்துக்கள் கிட்டத் தட்ட நூறு கோடியினர் உள்ளனர் அகோரி என்று சொல்லப் படுபவர்கள், சில ஆயிரம் கூட இல்லை //

நூறு கோடி இருப்பது உண்மையானால் வெறும் சில இலட்சங்கள் கூட இல்லாத மதமாற்றக் குழுவைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமென்ன‌?

// பெரும்பாலா இந்துக்களுக்கு அகோரி பிரிவினர் இருப்பது கூட தெரியாது //

இந்துக்களுக்கு அகோரிகளைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்வது தவறு; அண்மையில் சன்டிவியில் அதைப் போட்டு வெளுத்துவிட்டனர்;

அப்பாவி இந்துக்களைப் பாவத்தின் அடிமைத்தனத்திலேயே தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சியிலேயே கற்பூரமும் விபூதியும் பூசணிக்காயும் தேங்காயும் விற்கிறது;

இயேசுவானவர் தமது சொந்த சரீரத்தில் செய்து முடித்தவற்றைத் தொடரச் செய்வதால் பரம்பொருள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்;

விண்ணக அரசுக்கு எதிராக தனி அரசு நடத்துவது மாவோயிஸ்டுகளின் காட்டுமிராண்டித் தனத்தை விட மோசமானதாகும்.

// உதாரணமாக ஒரு பத்திரிகையில் விசித்திரமான ஒரு செய்தியை வாசித்தேன்; கள்ளக் காதலுக்காக தனது இளம் மனைவியைக் கொன்றான், ஒருவன்; அவள் காணாமல் போனதாக எல்லோரையும் நம்பவைத்தான்;புது மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தான்;

வருடங்கள் உருண்டோடினாலும் அந்த கொலைக்கார கணவனால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை;பத்து வருடத்துக்குப் பின்னர் அண்மையில் காவல் நிலையத்தில் சென்று சரண‌டைந்தான்;

காவல்துறையில் எதற்கும் ஆதாரம் வேண்டுமே,அவன் காட்டிய இடத்தில் ஒரு பாழுங்கிணறு…அதுவும் புதர் மண்டியிருக்க அதில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை;கிடைத்த ஒரு சில எலும்புத் துண்டுகளை வைத்து மரபணு சோதனை மூலம் அவனுடைய குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கித் தரவேண்டியது காவல்துறையின் பொறுப்பானது;

அந்த கணவன் சொல்கிறான்,”என் மனைவி தினமும் என் கனவில் வந்து ஓயாமல், ‘ஏன் மாமா என்னை கொலைசெய்தே’ என்று கதறுவது என்னால் தாங்கமுடியவில்லை,எனவே சரணடைந்தேன் ” என்று;

ஆம்,வேதமும் இதையே போதிக்கிறது,”உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும்” என்று; நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளியாகத் தீர்க்குமானால் தேவன் அதைக் காட்டிலும் பெரியவராக இருக்கிறார்” என்றும் வேதம் சொல்லுகிறது. //

நான் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைக் குறித்த பாதிப்பு உங்களுக்குள் ஏற்படாவிட்டால் இங்கே உங்களுடன் போராடுவதே வீண்முயற்சியாகும்;இதைக் குறித்த கருத்தாக ஒரு வரியும் எழுதாதபோதே நீங்கள் எந்த அளவுக்கு மதவெறியும் முரட்டாட்டமும் நிரம்பிய செவிட்டு விரியன்கள் என்று தெரியவருகிறது;

“செல்லாத்தா” பாம்பாக மாறி பால் போன்ற உங்கள் உள்ளங்களை பாங்காகக் குடித்துவிட்டாள் போலும்; அதே பாம்பின் தன்மையினால் அதை வணங்கத் தூண்டப்படுகிறீர்கள்;

வருத்தம்.. வெட்கம்.. வேதனை..!

இது ஒரு குற்றம் . சட்டப் படி குற்றம். சட்டப் படி குற்றம் . குற்றம் செய்தவனை அவன் மனசாட்சியே வாட்டுகிறது. குற்றம் செய்தவன் சட்டத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறான். சட்ட திடங்க்க்ளுக்கு கட்டுப்பட்டு, யாருக்கும் தீங்கு விளைவிக்காத வாழ்க்கையி மனிதன் வாழ முடியும். அப்படிப்பட்ட வாழ்க்கையை இந்தியாவில் பலரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோரையும் அந்த நிலைக்கு கொண்டு வரவே முயற்சிகள் மேற் கொள்ளப் படுகின்றன. மனதில் வெறுப்பு ம், பிடிவாதமும் இருந்தால் மோதல் உருவாகிறது. மனதில் அன்பும், விட்டுக் கொடுக்கும் சமரசப் போக்கும் இருந்தால் ஒரு மனிதன் யாரையும் துன்புறுத்தப் போவதில்லை. இதிலே எதற்கு தேவனை தொல்லைப் படுத்த வேண்டும்?

புற்றில் இருக்கும் பாம்பிற்கு பால் வார்ப்பது, முட்டை வைப்பது ஆகியவற்றை சமய சடங்காக கிராமத்தில் செய்து வருவது உண்மையே. பாம்புக்கு தேவையான பால், முட்டை ஆகிவற்றை அதற்க்கு கொடுத்து விட்டால் அவற்றை அது உண்டு விட்டு, அமைதியாக இருந்து விடும் என்கிற தையும் புரிந்து கொள்ள வேண்டுய்ம்.

பாம்பு புற்றில் பால் , முட்டைகளை போட்டாலோ, பாம்பை வழிபட்டாலோ பிறருக்கோ, நாட்டுக்கோ, சமூகத்துக்கோ, மனிதத்துக்கோ … எந்த ஒரு சிறு தீங்கும் இல்லை. செல்லாத்தா பாம்பாக வந்து பாலை குடிப்பதாக கருதினாலும் (அது ஒரு அசம்ப்சனே என்றாலும்) அதனாலும் யார் மனதிலும் எந்த வெறுப்புணர்ச்சியோ, பகைமையோ உருவாவது இல்லை. சமூகத்துக்கு, மனிதத்துக்கு தீங்கு இல்லை.

செல்லாத்தாவை வணங்கும் பெரும்பாலான பக்தர்கள பிற மத ங்களின் மீது சகிப்புத் தன்மை உள்ளவராக, பிற மதங்களை வெறுக்காதவராக, மத வெறி இல்லாதவராக உள்ளனர்.

மத வெறியால் பீடிக்கப் பட்டவர்களே, பிற மதங்களுக்கு எதிராக விசக் கருத்துக்களை கக்கி, பிற மத தெய்வங்களை இகழ்ந்து சமுதாயத்தில் அமைதி இன்மையை உருவாக்குகின்றனர். குருசெடு போர்களில் கொன்ற உயிர்கள போறாத? பாலஸ்தீனில் செய்த கொடுமைகள் போராதா? கானானியரை , எபூசியரை, ,,, இன அழிப்பு செய்தது போதாதா? மத வெறியை விட்டு சமரசப் பாதைக்கு மனம் திரும்புங்கள்.

மத சகிப்புத் தன்மை இல்லாத மத வெறிக் கோட்பாடுகள், இனப் படுகொலைக்கு ஆண்டவனே செய்து கொடுத்தாக காட்டி, இன அழிப்பை ஓகே செய்து அப்ப்ரூவல் தருதல், இவைகளே மனித சமூகத்தை அளிக்க கூடிய அஞ்சக் கூடிய விடம்

//// இந்துக்கள் கிட்டத் தட்ட நூறு கோடியினர் உள்ளனர் அகோரி என்று சொல்லப் படுபவர்கள், சில ஆயிரம் கூட இல்லை //

நூறு கோடி இருப்பது உண்மையானால் வெறும் சில இலட்சங்கள் கூட இல்லாத மதமாற்றக் குழுவைப் பார்த்து பயப்படவேண்டிய அவசியமென்ன‌?////////

மிகவும் வலிமையான உடல் இருந்தாலும் கொடிய நோய் கிருமிகளை கண்டு பயப்படுவது ஏன்? நோய் கிருமிகள் கண்ணுக்கே தெரியாத அளவு சிறியதாக இருப்பினும்,
மேலும் மதமாற்ற குழுவை பார்த்து யாரும் பயப்படுவதை விட எச்சரிக்கை உணர்வுடன் செயல் படவே விழிப்புணர்வு தரபடுகிறது.

///நான் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைக் குறித்த பாதிப்பு உங்களுக்குள் ஏற்படாவிட்டால் இங்கே உங்களுடன் போராடுவதே வீண்முயற்சியாகும்;/////

என்ன சொல்ல வருகிறீர்கள், கொலை செய்தவனுடைய குற்ற உணர்ச்சி அவனை ஒரு மேனியாவில் தள்ளி அவனை சரணடைய வைத்தது கொலை செய்தவன் தண்டனை அடைய வேண்டியது நியதியே, இதிலே திருச்சிக்கு என்ன பாதிப்பு ஏற்பட வேண்டும்.மாறாக சட்டத்தில் இருந்து தப்பியவன் தர்மத்தினிடம் இருந்து தப்பமுடியாமல் தர்மம் தண்டனை பெற்று தந்தது என்று தர்மத்தின் மேல் நம்பிக்கை அல்லவே அதிகரிக்கும்.

ஏன் அவன் கர்த்தரை பணிந்து இருந்தால் அவனுக்கு காவல் துறையில் சென்று சரணடையும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சொல்ல வருகிறீர்களா?

கொலையில் பிரியும் உயிர் தன மனதில் என்ன என்ன ஆசைகளை வைத்திருக்கும்,அது தன வாழ்வில் அடையவேண்டிய இலட்சியங்களும் கனவுகளும் என்ன என்ன இருந்திருக்கும். ஒருவன் மற்றவன் உயிரை கொன்று பிராயச்சித்தமாக ஒரு பாவமன்னிப்பு மேலும் தன்னை தூக்குக்கு கொடுத்தாலும் அல்லது சிறை தண்டனை பெற்றாலும் அவனால் கொலை செய்யப்பட்ட வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் உடைய அந்த உயிருக்கு ஈடாகுமா?

/////எட்வின் சொன்னது மிகச் சரியான கூற்றாகும்; எப்படியெனில் வெளிப்படையானதொரு பாவக் காரியத்தைச் செய்து குற்ற உணர்வில் இருப்பவன் தான் செய்த குற்றத்துக்காக அந்தரங்கமாக வருந்தினால் மட்டும் போதாது; சம்பந்தப்பட்டவருக்கு நீதி கிடைக்க ஏதுவாக தன் குற்றத்தை அந்தந்த நாட்டு குற்றவியல் சட்டங்களுக்குட்பட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்;அதன்படியான தண்டனையையும் அனுபவிக்கவேண்டும்;///////

ஏன் குழப்புகிறீர்கள் சகோதரரே? பின்னர் ஏன் எந்த வெளிப்படையானதொரு அல்லது வெளிப்படை இல்லாத ஒரு பாவக் காரியத்தைச் கூட செய்யாமல் குற்ற உணர்வு இல்லாதவர்களையும் கூட பாவி என்று கூறுகிறீர்கள்.
மேலும் இங்கே பேசுவது மனித சட்டங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனின் தீர்ப்பு பற்றி, தர்மப்படி ஒருவனுடைய குற்றத்திர்க்கான எதிர்வினை என்ன? அட்வான்ஸ் புக்கிங்ல் rape பண்ணும் மைனர் கு மணிகள் அவர்கள் வாழும் நாட்டின் சட்டத்தில் கொலைக்கும் வெறும் அபராதம் தான் தண்டனை அல்லது 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்று இருக்கும் போது என்ன செய்வார்கள். நாட்டின் சட்டத்தை மதிப்பது வேறு,
அரபி நாடுகளில் கொலைக்கு, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் பாவ மன்னிப்பு கொடுத்தல் அவன் நாட்டின் சட்டப்படி விடுதலை செய்யபடுவான். அல்லது blood money என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்தால் சட்டப்படி விடுதலை .
கொலை செய்த ஒருவன் அப்படி ஒருவன் வெளியேறிவிட்டு (அந்த அந்த நட்டு சட்டப்படி) பாவமன்னிப்பும் கேட்டு கொண்டால் அவன் செய்த கொலை தர்மப்படி நியாயமாகிவிடுமா? அல்லது அந்த கொலைபாவம் அவனை தொடருமா?

அவன் கர்த்தரை பணிந்து விட்டதால் பாவி அல்ல என்று ஆகிவிடுவானா?
மேலும் பிறந்ததிலிருந்து எந்த தவறும் செய்யாத மிகவும் கண்ணியமான வாழ்க்கை வாழும் ஒருவன் கர்த்தரை பணியவில்லை என்ற ஒரே காரணத்தினால் பாவி என்று ஆகிவிடுவானா?

பாம்புகளை தேவையின்றி கொல்லாதீர்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் வேறு வழி இல்லாத பட்சத்தில் அடியுங்கள்.
அவை விவசாயிகளின் நண்பன் ஒரு பாம்பு தன வாழ்நாளில் உண்ணும் எலிகளால் அவற்றால் ஏற்படும் நெற்கதிரின் இழப்புகள், மற்றும் பயிர்களின் நாசம் தடுக்கபடுகிறது.என்று பள்ளிகள் தோறும் ஒரு பாம்பினை பிடித்து அதன் விஷப் பல்லை பிடுங்கி அதனை கையிலே வைத்து விளக்கம் தரும் ஒரு நண்பரை எனக்கு தெரியும்.மேலும் யார் வீட்டிலாவது பாம்பு புகுந்து விட்டால் அதனை பிடித்து உயிருடன் எதாவது வயற்காட்டில் கொண்டு விட்டு விடுவார். அவர் ஒரு இறை மறுப்பாளர் ஆனால் எந்த கழகத்தையும் சார்ந்தவரல்ல.

பாம்பை அடித்து விட்டு விட்டால் மீண்டும் அது நம்மை வஞ்சம் தீர்க்க வராது, பாம்பு கடித்தால் உடனே எப்படி முதலுதவி செய்து மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும். என்று விவரமாக மாணவர்களிடம் கூறுவார்.
சுண்ணாம்பு தடவுதல் மந்திரித்தல் எல்லாம் செய்யகூடாது (பாம்பு கடிக்கு மந்திரிக்கும் பாதிரியார்களும் உண்டு என்பதையும் சொல்லி கொள்கிறேன்) என்று விளக்குவார்.

அவர் மேலும் கொடுத்த தகவல் பாம்புக்கு பால் வைத்தல் உபயோகமற்றது பாம்பினால் எந்த திரவத்தையும் குடிக்கும் அளவு அதனுடைய வாய் அமைப்பு கிடையாது அதனால் விழுங்க மட்டுமே முடியும். முட்டையை விழுங்கும்.

இவை ஏன் கருத்துகள்

இந்து மதத்தில் பாம்பு குறியீடே, (மேலும் விவரங்களுக்கு பாம்பாட்டி சித்தரின் பாடல்களை படிக்கவும்) பாம்பை படத்தில் வணங்கும் எவனும், புற்றுக்கு போய் பால் உற்றும் எவனும் பாம்பை நேரில் கண்டால் வணங்க மாட்டன். ஒன்று கொல்வான் அல்லது ஓடுவான்.

அந்த புற்றை வணங்குபவன் ஆரம்ப நிலையில் உள்ளவன் பாமரன் ஆனால் ஒட்டு மொத்த இந்து சமூகமும் பாம்பை வணங்குவது இல்லை, பாம்பை தாழ்வான ஒன்று என்றும் கருதுவது இல்லை. அந்த வழிபாடு செய்பவனையும் ஒன்றும் குறை சொல்வதில்லை. ஒரு சிறு தெய்வ வழிபாடாக ஏற்றுகொள்கிறது. ஆனால் பாம்பை வணங்கவிட்டால் புற்றில் போய் பாலை ஊற்றவிட்டால் ஒருவனுக்கு நரகம் என்றும் பாவம் என்றும் யாரும் கூறுவதில்லை.

பாம்பை வணங்குவது சிறு தெய்வ வழிபாட்டில் அடங்கும்.

சிறு தெய்வ வழிபாடே (அது இறுக்க்கிறதா இல்லையா என்பது எல்லா மத கடவுளுக்கும் பொருத்தமான கேள்வி ) பேரிறை வழிபாட்டின் ஒரு பகுதியாக சுதந்திரம் கொடுக்க பட்டுள்ளது. சிறு தெய்வ வழிபாடு தேவை இல்லை நேரடியாக இறைவனை சரணடை என்பது வேத மதம் காட்டும் நெறி (சகோ திருச்சி, சகோ தனபால் தவறு இருப்பின் திருத்தவும்) . ஆனால் சி தெ வழிபாட்டை குறை சொல்வதும் இல்லை.
நாம் எப்படி இறைவனை வணங்கினாலும் அது இறுதியில் பேர் இறையை சென்றே அடைகிறது, நாம் எப்படி வணங்குகிறோமோ அந்த உருவிலேயே வந்து நம்மை ஆண்டுகொள்கிறது என்பது இங்கே தத்துவம். (இது உள்ளன்புடன் செய்யும் எந்த பக்திக்கும் பொருந்தும் )

வள்ளலார் கூறியதும் கிட்டத்தட்ட அதே ஆனால் அவர் கொடுத்த இறை உருவம் ஜோதி.

////தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலையென்றால் வெறும் சிலைதான் என்று கவிஞன் பாடினான்/////

thanks we are following first line.

////கங்கையில் முழுகினால் பாவம் தொலையும் என்றும் அங்கே உயிர்போனால் மோட்சம் கிடைக்கும் என்றும் வாழ்நாளில் ஒருமுறையாவது யாத்திரை செல்லும் இந்துக்கள் என்ன பாவத்தை அங்கே தொலைக்க முயற்சிக்கிறார்கள்? கர்ம பாவத்தையா, ஜன்ம பாவத்தையா..?////////
அகோரிகள் பிணம் தின்கிறார்களா என்பது ஒரு கேள்வி அல்லது சித்தரிக்கப்பட்ட ஒரு செய்தா என்பது மறு கேள்வி.

ஓகே தின்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் அதனை பினப்ற்றுமாறு இங்கு யாரையும் கூறவில்லை. அது அநாகரிகமே, அவர்களை யாரவது வணங்குகிறோமா? அவர்களை போற்றுகிறோமா? அவர் என்ன இந்து மதத்தின் தலைவரா? அல்லது பிணம் தின்னதவ்ர்கள் எல்லாம் பாவிகள் என்று கூறுகிறாரா? அல்லது அவர்களை எல்லாம் மதித்து யாரவது வணங்குகிறார்களா?

ஜப்பானில் இறந்து பிறக்கும் குழந்தைகளை மற்றும் சிதைந்த கருவினை சமைத்து உண்பதாக ஒரு மெயில் வந்தது. பேண்டு ஷர்ட் போட்ட தொழிற் துறையில் முன்னணியில் உள்ள ஒரு நாட்டில் பண்பாடு கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிகொள்ளும் ஒரு சமுகத்தில் பிறந்தவர்கள் செய்யும் இந்த செயல் அதனை விட கேவலமானது அல்லவா?

கங்கையில் முழுகினால் உடனே பாவம் போய் ஒருவன் புனிதன் ஆகிவிட மாட்டான். மேலும் ஒரு இந்து கங்கை நீரில் நீரடியே தீரவேண்டிய கட்டாயம் எல்லாம் கிடையாது, அங்கு நீராடினால் புண்ணியம் என்பதும் அங்கே இறந்தால் மோட்சம் என்பதும் நம்பிக்கை. மாறாக அப்படி செய்யாவிட்டால் நரகம் அப்படி செய்யதவன் பாவி, என்று யாரும் கூறவில்லை.எப்படி பாவத்தை நம்பிக்கொண்டு அதனை எல்லோரிடமும் திணித்து கொண்டு ஒரு கூட்டம் அலைகிறதோ அது போல ஆனால் அடுத்தவரை ஏதும் குறை சொல்லாத ஒரு கூட்டம் அங்கே உயிரை விட்டால்தான் புண்ணியம் என்று நம்பிக்கொண்டு அங்கே போய் விழுகிறது. ஆனால் நிச்சயம் அந்த கூட்டம் அங்கே வராதவர்களை எல்லாம் பார்த்து பாவிகளே என்று கூறுவது இல்லை.
எல்லோருமே தெய்வத்தின் குழந்தைகளே கண்ணியமாக நேர்மையாக வாழும் எவனும் கடவுளை வணங்காவிட்டாலும் அவன் பாவி ஆகிவிட மட்டன். கடவுளை பற்றி கவலையே படாத ஒருவன் தன கடமைகளை மட்டும் செய்து வாழ்ந்து கொண்டு யாரையும் எவ்விதத்திலும் புண்படுத்தத ஒருவன் பாவி ஆகமாட்டான். அவன் ஒன்றும் நரகிற்கு போகமாட்டன். கடவுள் இல்லை என்றும் கடவுளை எதிர்ப்பதும் கூட ஒன்றும் ஒருவனை பாவி ஆக்கிவிடாது அடுத்தவர் மனதை நோகடிக்கும் வார்த்தைகளும் அடுத்தவரை பாதிக்கும் செயல்களும் எப்படி விழுந்து விழுந்து பாவ மன்னிப்பு கேட்டாலும், எப்படி விழுந்து விழுந்து கடவுளை வணங்கினாலும் நிச்சயம் பாவ செயலே ஆகும.

நாகர்கள் என்ற மனிதர்களை கொன்று தின்னும் ஒரு கூட்டம் வாழ்ந்ததாக கூறுகிறார்கள் அவர்கள் கூட இப்போது அங்கே உட்கார்ந்து கொண்டு சாமியார் (போலி சாமியார்) போர்வையில் பிணங்களை தின்னலாம்.
எப்படியோ அது ஒன்றும் அங்கிகரிக்கப்பட்ட ஒரு பழக்கமோ முறையோ அல்ல.

மேலும் வேறு ஒரு வலைதளத்தில் அகோரிகள் யாரும் பிணம் தின்னுவதில்லை என்று பொருள்பட ஒரு கட்டுரை படித்தேன். சன் டிவியின் நிகழ்ச்சி பொய் என்றும் அகோரிகளின் கதையை வேறு விதமாகவும் சித்தரித்திருந்தார்கள்.
அதிக பிணங்கள் எங்கே எரிக்க பட்டாலும் புதைக்க பட்டாலும் அந்த இடம் நாரிதான் போகும், அந்த இடமும் பின தொழிற்சாலைதான்.
காசிகரை அதிக பிணங்கள் வருவதால் மிக கோரமாக கட்சி அளிக்கிறது.
எல்லா இந்துக்களும் அங்கே சென்றுதான் சாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

தன்னை உணர்ந்த,அல்லது உணர துடிக்கும் ஞானி எந்த உயிரையும் கொன்று அதனுடைய பிணத்தை கூட தின்னமாட்டன்.
ஜீவகாருண்யமே மோட்சத்தின் முதல்படி என்பது வள்ளலார் வாக்கு,
கொல்லன் புலால் உன்னான் சிறப்பினை வள்ளுவன் கூறிவிட்டான்.
புலால் மறுப்பை திருமூலரும் கூறிவிட்டார்.
புலால் உண்பவர்களும் விரத காலங்களில் புலால் உண்பதில்லை.

இப்படி இருக்க மனித பிணத்தை உண்பதனை யார் ஏற்பார்கள்.
மனிதனை போன்ற கொடிய மிருகமே (மிருகம் என்று கூட சொல்லகூடாத அளவு கடும் செயல் செய்யும் ஒரு ஜந்து மனிதனே) உலகில் இல்லை எனலாம், அவன் தின்னாத பிணம் எது?

தயவு செய்து தப்பாக விளங்கி கொள்ள வேண்டாம் நான் எழுத வந்தது புலால் மறுப்பு பற்றி அல்ல, அது அவரவர் சொந்த விருப்பம், நானும் புலால் உண்பவன் தான். புலால் உணவே ஏற்காத ஒரு மதம் மனித பிணத்தை தின்னும் பழக்கத்தை நிச்சயம் அங்கீகரிப்பதில்லை.

தொடர்ந்து கண்ணியமான வகையிலே விளக்கமாக கருத்துக்களை வழங்கி வரும் திரு. சதீஷ் அவர்களுக்கு பாராட்டையும், நன்றிகளையும் தெரிவிக்கிறோம்.

திரு. சதீஷ் தன்னுடைய மதம் சார்பான விளக்கங்களை எடுத்து சொல்வதில் கவனம் செலுத்துகிறாரேயன்றி, பிற மதங்களை எல்லாவற்றையும் இகழ வேண்டும் என்றோ , பிற மதத்தை நிறுவியவர்களை எப்படியாவது சிறுமைப் படுத்திக் காட்ட வேண்டும் என்றோ அவர் துடிக்கவில்லை.

அவரது நல்ல கருத்துக்களையும், பணியையும் தளத்தின் சார்பாக பாராட்டுகிறோம்.

சகோ திருச்சி

உங்களின் அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கு மெரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம், வள்ளார் பிராற்கு வாய் கோபுர வாசல்,சித்தம் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்.

இவர்கள் கூட இந்த வரிகளில் தனியாக கடவுள் என்று ஒருவனோ ஒருத்தியோ இல்லை என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.
இறைவன் என்று ஒன்று இருந்தால் அது ஒரு நிலையாக இருக்கமுடியுமே அன்றி ஒரு நபராக இருக்க முடியாது

இல்லாத கடவுளை இருக்கும் உபகரணங்களால் தேடும் முயற்சி,
இதில் முடிவில் யாரும் என்ன காணபோகிறோம் என்பது யாருக்கும் தெரியாது.யாரும் சாட்சி கொடுக்க முடியாது (சகோ திருச்சி அனுமதிக்கவும்).
பின்னர் எதற்கு அடித்துக்கொள்ளவேண்டும்.
பெரியார் சொன்னது போல அப்படி ஒரு கடவுள் இல்லாமல் கூட இருக்கலாம்.
அவர் சொன்ன விதம் இந்துக்களுக்கு மட்டும் எதிரான நிலை இவை மட்டும் தான் எனக்கு பிடிக்காதே ஒழிய அவர் சொன்னதே தவறு என்பது என் கருத்து அல்ல.அவர் கூறியதும் கூட உண்மையிருக்க சாத்தியங்கள் உண்டு.ஆனால் அவர் கடவுள் இல்லை என்பதற்கு கூறிய காரணங்கள் (எந்த வலுவான காரணமும் சொல்லவில்லை) அவரும் அவரின் வாரிசுகளும் செயல்படும் விதம் இவைதான் எனக்கு எற்ப்பில்லை.
மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
நன்றி

நண்பரே.. நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வராமல் இருந்தேன்.
கற்பூர நாயகியே கனகவல்லி – பாடல் பதிவு என்னை இழுத்து வந்தது.
பின்னூட்டங்களை படித்தபோது… வழக்கம் போல பதிவாளர் கிலாடி அவர்களின் பதிவு..
“ஆஹா.. வந்துட்டங்கயா..வந்துட்டாங்க.. ” என்று சொல்லவைத்தது.
நல்ல போதனைகள் , நல்ல கருத்துக்கள், நல்ல எண்ணங்கள் எல்லா மதத்துக்கும்
பொதுவானவை. ஆனால் அவைகள் கிருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது போல
பேசுவது… இவருக்கு வழக்கமே.
அதே சமயம். தனி மனித ஒழுக்கம் என்பது வேறு. மத நம்பிக்கை என்பது வேறு.
எல்லா மதங்களும் நல்லதையே சொல்கின்றன. ஒழுக்கத்தையே போதிக்கின்றன.
அனைத்து மதங்களை சார்ந்த மனிதர்களும் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும்
என்பதையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன.
ஆனால் மதங்களை சார்ந்திருக்கும் மனிதர்கள் தவறுவதற்கு அவர்கள் வணங்கும் தெய்வத்தை எப்படி
பொறுப்பாக்க முடியும்.
சகோதரி கிளாடி அவர்கள்..”நெற்றியிலே பட்டையையும் கழுத்திலே கொட்டையும் போட்டுண்டு அரசாங்க இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு பக்தி வேடமிடும் பகல் வேடதாரிகளுக்கு …” நண்பர் திருச்சிக்காரன் வக்காலத்து வாங்குவதாக எழுதி இருக்கிறார்.
என்னமோ.. இந்து மதத்தில் மட்டும் தான் இப்படிப் பட்ட பகல் வேடதாரிகளும் பக்தைகளைத் தின்பவர்களும் இருக்கிறார்களா.
அங்கியும், ஜபமாலையும், பைபிளும் சுமந்து வரும் பாதிரியார்களில் கூட சிலர்.. (நான் சிலர் என்று தான் எழுதி இருக்கிறேன்.. கவனிக்கவும்.) அப்படி இப்படி தவறுகள் செய்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றனவே. அதற்க்கு கர்த்தர் தான் காரணம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்.? அதுபோலதான் இதுவும். மனிதர்கள் எல்லோரும் முழுக்க முழுக்க நல்லவர்களும் அல்ல. கேட்டவர்களும் அல்ல. நல்லது கேட்டது இரண்டும் கலந்ததுதான் மானிடம்.
எந்தத் தவறுமே செய்யாமல் மனிதன் இருந்தால் அவன் மனிதன் அல்ல. அவன் தெய்வம். அதனால் தான் இயேசு கிறிஸ்துவும் “உங்களில் பாவம் செய்யாதவர் யாராவது இருந்தால் அவர்கள் இந்தப் பெண்மீது கல்லெறியுங்கள்” என்று சொன்னார்.
அப்படி இருக்க.. ஒரு மனிதன் செய்யும் தவறுக்கு அவன் கடைப்பிடிக்கும் மதத்தையும், அந்த தெய்வத்தையும் நிந்திப்பது உலக மகா அபத்தம்.
சகோ. கிளாடி அவர்கள் கூட இப்படி மனித நேயம் மறந்து பிற மதத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு கருத்துக்கள் சொல்லி வருகிறீர்களே.
படிக்கும் இந்துசமய சகோதரர்கள்/சகோதரிகள் மனதை நோகச் செய்கிறீர்களே.. இதை கிறிஸ்தவம் கற்றுக்கொடுத்ததா என்ன? அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் மதத்தை சேர்ந்த நீங்கள் அறிந்தோ..அறியாமலோ.. செய்யும் இந்த பாவத்தை உங்கள் கர்த்தர் மன்னிப்பாராக.

அன்புக்குரிய மணியன் சார் அவர்களே,

உண்மையிலே இன்று காலையிலே நினைத்தேன், மணியன் சார் நம்முடைய தளத்தில் பின்னூட்டமிட்டு பல மாதங்கள் ஆகி விட்டதே, ஒரு வேலை நம்முடைய கட்டுரைகள் சிறப்பாக இல்லையோ என நினைத்தேன். நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பழைய எம். ஜி. ஆர் படப் பாடல் நினைவுக்கு வருகிறது.

திரு chillsam அவர்களே,

///இயேசுகிறித்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திரிப்பதுடன் ஸ்வர்க்க லோக பாக்கியத்தையும் தரும்///

ஆப்பிரிக்க பழங்குடி இனங்களில் ஒருவர் இறந்தால் அவரின் மாமிசத்தை உண்பதன் மூலமும், ரத்தத்தை குடிப்பதன் மூலமும், இறந்தவரின் குணங்கள் தங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை உண்டு.இறந்தவன் வீரனாக இருந்தால் அவனின் வீரம் அவணுடைய மாமிசத்தை உண்பதன் மூலம் தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

இந்த ஆப்பிரிக்க பழங்குடியினரின் பழக்கத்தையே கிருஸ்தவர்களும் பின்பற்றுகிறார்கள்.இயேசு பாவங்களை மன்னிக்கும் குணமுள்ளவர் என்பதால், இயேசுவின் மாமிசத்தை உண்பதன் மூலமும், ரத்தத்தை குடிப்பதன் மூலமும்,தங்கள் பாவம் மன்னிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

திரு. தனபால் அவர்களே,

மன்னிப்பு என்பதை பொறுத்தவரையில் இயேசுவின் சரியான கருத்து என்ன என்பதை அவரே பல முறை சொல்லி உள்ளார். நாம் நமக்கு எதிராக அடாது செய்த ஒருவரை நாம் மன்னிக்க வேண்டும் என்பதுதான்.

ஒருவன் மற்றவனை மன்னித்தால் அவனை பிதா மன்னிப்பார் என்பதுதான் இயேசு சொன்னது.

Mathews 18

21. அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

22. அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

23. எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

24. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.

25. கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.

26. அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

27. அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

28. அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.

29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

30. அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

31. நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

32. அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

33. நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,

34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

35. நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

ஒருவன் மற்றவனை மன்னித்தால் அவனை பிதா மன்னிப்பார் என்பதுதான் இயேசு சொன்னது.

தன்னுடைய கொள்கைப் படியே இயேசு கிறிஸ்து தனக்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள முதல், அவரை விட்டு விலகி விட்டவர்கள், அவரை சிலுவையில் ஆராய்ந்தவர்கள முதலிய அனைவரையும் அவர் மன்னித்து விட்டார்.

இதை காரணமாக வைத்து பாவம் செய்தால் இயேசு கிறிஸ்து மன்னித்து விடுவார், நாம் சொர்க்கத்துக்குப் போய் விடலாம் என்று மனப் பால் குடிப்பவர்களின் மயக்கத்தை போக்கவே இயேசு கிறிஸ்து தெளிவாக

Mathews 5

29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் மீறி சிலர் பாவப் பிரச்சாரத்தை பல் இடத்திலும் செய்வார்கள என்பதற்காக இன்னும் ஒருமுறை

Mathews 18.

8. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

9. உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்
எனவே பாவம் செய்தால் தண்டனை நிச்சயம் , மன்னிப்பு என்பது, நமக்கு எதிராக அடுத்தவர் தவறு செய்தால் நாம் அதை மன்னிக்க வேண்டும்.

பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்று சொல்லி மனிதனின் மனதில் இருக்கும் தவறு செய்வதற்கு எதிரான மன வலிமையை ஒரே அடியாக அழித்து விடுவதால் அவன் குற்றம் (பாவம்) செய்வதற்கு எதிரான தன்னுடைய Resistance power, attitude ஐ இழக்கிறான். அதனால் பாவி ஆக்கப் படுகிறான்.

அதனால் தான் இயேசுவே, ”நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு , பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர் உங்கள் மார்க்கத்தவர் ஆனா பின் உங்களை விட இரட்டிப்பு பாவிகள் ஆக்குகிறீர்கள்” என்பதை தெளிவாக இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே.

ஒருவனை முழுமையாக தங்களின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர அவனை பாவி என்று சொல்லி, அவனைக் குழப்புவது. அவனால் பாவம் செய்யாமல் வாழ முடியாது என்று சொல்லி அவனிடம் இருக்கும் மன வலிமையை அழிப்பது, அப்புறம் பரவாயில்லை உன் பாவங்கள் எல்லாம் மன்னிக்க்கப் படும் அது ஒரு பிரச்சினை இல்லை என்று சொல்வது போல சொல்லுவது. எல்லாவற்றையும் கேட்கும் அவன் தடுமாறுகிறான். சரி நடக்கிறபடி நடக்கட்டும், கடைசியில பாத்துக்கலாம் என்று கையறு நிலைக்கு போய் விடுகிறான். பாவம் செய்யாமல் தடுக்கும் மன சாட்சியே குழப்பம் அடைந்து பாவம் செய்யும் சூழ் நிலை வந்தால் எதிர்த்து நிற்கும் திறனை இழந்து விடுகிறான். தசம பாகம் கிடைத்தவர்கள் அதைப் பெற்றுக் கொள்கின்றனர்.

எனவே நீங்கள் தெளிவோடு இருங்கள். பாவம் செய்யாத படிக்கு நம் மன நிலையை நாம் உயர்த்துவோம். இந்த உலகில் உள்ள அனைவரையும் சகோதர , சகோதரியாக நாம் நினைத்தால் நம்மால யாருக்குமே இன்னல் ஏற்படுத்த முடியாது. எந்தப் பாவமும் நடை பெறாது. நாம் எந்த தண்டனைக்கும் பயந்து பாவம் செய்யாமல் இல்லை. நம்முடைய பாவம் அடுத்தவருக்கு கஷ்டத்தை உண்டு பண்ணி விடுமோ என்று அடுத்தவரின் மீதுள்ள அன்பால் பாவம் செய்யாமல், தவறு செய்யாமல் குற்றம் செய்யாமல் இருப்போம்.

கற்பூர நாயகியே கனகவல்லி – ஒரு அருமையான பாட்டு.

இறை சக்தியை தாயாக போற்றும் ஒரு பாட்டு. ஒரு தாய் தன் மகனின் குறைகளுக்காக
அவனை ஒதுக்கிவிடமாட்டாள். மாறாக அவனும் நன்றாக வாழவே வேண்டும் என்று
நினைப்பாள். அப்படிப் பட்ட தாயாக தெய்வத்தை நினைக்கும் போது நமக்கு ஒரு
நம்பிக்கை பிறக்கிறது. என் அம்மா என்ற ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. இப்படி நெருங்குவதம்
மூலம் பாமர மக்களுக்கும் கருமாரி சகல சக்தி படைத்த ஒரு தெய்வம் என்ற நினைப்போடு.. அப்படி
பட்ட அம்மா என் அம்மா என்ற பந்தம் ஏற்பட்டு கரைகிறபோதே அவர்களது பாவங்களும் கரைந்து
போய்விடுகின்றன.

“அன்புக்கே நான் அடிமை ஆகவேண்டும்..

அறிவுக்கே என் காது கேட்கவேண்டும்.

வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்.

வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்கவேண்டும்.

பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்.

பரிவுக்கே எந்நாளும் பணியவேண்டும்.

என் பக்கம் இவை எல்லாம் இருக்கவேண்டும்.

என்னோடு நீ என்றும் வாழவேண்டும்.”

என்னோடு அன்னைவடிவில் தெய்வம் வாழவரவேண்டும் என்று கேட்பதில் கள்ளமில்லா
மனம் தெரிகிறது.

ஒரு குழந்தைதானே தாயிடம் இப்படி கேட்கமுடியும்? தன் தாயிடம் தானே என்னை விட்டு
ஒரு கணம் கூட நீ விலகாமல் என் கூடவே இருக்கவேண்டும் என்று கேட்கமுடியும்.
இந்த பாவத்தை பாடலில் எவ்வளவு அற்புதமாக – எளிமையான வரிகளில் – கவிஞர் அவிநாசிமணி
அவர்கள் எழுதி இருக்கிறார்.

இந்துக்களான எங்களுக்கு மட்டும் என்று அல்ல. இந்த பாவனை அனைவருக்கும் பொதுவானது.
சகோ. கிளாடி அவர்களும் நண்பர் செல்சன் அவர்களும் கன்னி மரியன்னை தங்களுடன் என்றும்
இப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமே.

அதை விடுத்து இந்த இடத்தில் மத துவேஷம்,
மனித துவேஷம், ஆகியவற்றை ஏன் கொட்டவேண்டும்.
அனைவரும் யோசிக்கவேண்டும். நான் முன்பே சொன்னது போல அனைத்து மார்க்கங்களிலும் உள்ள
உயர்ந்த கருத்துக்களை நாம் அனைவரும் எடுத்துக்கொள்வோம்.

மரித்த பிறகு நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பதை விட உயிரோடு இருக்கும் போது எப்படிப் பட்ட வாழ்வு வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.
– அன்பன் மணியன்.

அன்புள்ள இனிய நண்பருக்கு,

வெகு நாட்களாகிவிட்டன. இடையில் ஊரில் இல்லை. பின்னர் வெளியூர் சென்றதன் காரணமாக வயிறும் குடலும் கெட்டுப் போய் இப்போது தான் சாவகாசமாக மீண்டு வருகிறேன்.

சென்னை வந்த வடநாட்டு பக்தர் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டதில் வியப்பில்லை. நானும் புது இடத்தில் காணும் என் ஊரில் காணாத விஷயங்களைக் கண்டால் இதே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொள்வேன். ஊட்டி செல்லும் வழியெல்லாம் (மைசூர், பந்திபூர் வழியாக)காடாக வளர்ந்திருக்கும் செடிகளும் மரங்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் மலர்க்காடுகளாக காட்சி தருவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. சென்னையிலும், தில்லியிலும் நான் வளர்த்த பூச்செடிகளையும் மரங்களையும், நான் அகன்ற சில மணிகளில் வெட்டிச் சென்றது யார் என்றே தெரியாமல் போனது. அப்படி ஒரு மனம், கலாசாரம்,

ஆனால் எனக்கென்னவோ, இந்த ஒளி அலங்காரங்கள் படாடோபத்தைத் தான் சொல்வதாக தோன்றுகிறது. அப்படி பார்க்கக் கூடாது, அது அவர்கள் அறிந்த அவர்கள் வழியிலான குதூகலமும் கொண்டாட்டமும் என்றால்,அதற்கு பதில் அளிக்க நான் தயங்குவேன். ஆயிரம் சின்னச் சின்ன கோயில்க்ள் பாழடைந்து கிடக்க, இன்னம் சில வருடங்களில் அவை இல்லாமலேயே போகக்கூடும், தங்கத் தேர், தங்கப் பல்லக்கு, வகை வகையான ஏராளமான நகைகள் என்று ஒரு சில பணக்காரக் கோயில்கள் செய்யும் அட்டகாசம் பக்தியின் பாற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆயுள் பூராவும் தெய்வ நிந்தனையை ஆபாச மொழியில் செய்துகொண்டிருக்கும் ஒரு தலைவன், தன் கட்சியினர் கோயில் நிலங்களை அபகாரித்து, கோயில் டிரஸ்டிகளாக கோயில் வருமானத்தைச் சுரண்ட வழிசெய்த மனிதன், மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டதால, திருக்குவளை அம்மன் கோயிலுக்கு மனைவியரோடு போனதால், தஞ்சைக் கோயிலுக்கு பிரதான கோபுர வாசல வழிச் செல்லாது வடக்கு வாசல் வழிச் சென்றதால், உள்ளூர நம்பிக்கையாளன் என்று வாதிட முடியுமா? உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் திருப்பதி வேங்கடமுடியானிடம் அபார பக்தி கொண்டிருக்கிறார்கள். தினம் கோடி கோடியாக பணமும் நகைகளும் குவிகின்றன. ஆனால் பெருமாளுக்கு அருகில் தினம் நின்று சேவை செய்யும் அர்ச்சகர்கள் பெருமாளின் நகைகளைத் திருடி வருகின்றார்கள். இது தொடர்ந்து வருஷக் கணக்கில் நடந்து வருகிறது.

எது பக்தி, எதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது, யாரை தெய்வம் நிந்திக்கும் தண்டிக்கும் என்பதெல்லாம் எனக்குச் சரிவர தெரிவதில்லை.

எவனோ தான் பெற்ற மூன்று பச்சிளங்குழந்தைகளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டுப் போகிறான். அக்குழந்தைகளை கண்டதும் அவற்றுக்கு பால் கொடுத்து ஒரு நாள் முழுதும் அக்கறையோடு பார்த்துக்கொண்டது, தன்க்கே குடும்பப் பொறுப்புள்ள ஒரு குப்பை கூட்டி பஸ் ஸ்டாண்டை சுத்தஃம் செய்யும் ஒரு மனிதன். நிறையப்பேர் கூடும் அந்த இடத்தில் வேறு யாருக்கும் அந்த பாசம் தோன்றவில்லையா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை ஸ்வாமி. தெய்வ பக்தி பற்றி அவவளவு சுலபத்தில் எனக்கு ஒரு முடிவுக்கு வரத் தோன்?றவில்லை. ஒரே இலவசமாக கோடிக்கணக்கான மக்களுக்கு அள்ளி வீசும் ஒரு அரசியல் தலைவன் மக்க்ளிட்ம் கொண்ட அன்பால் தான் அப்படிச் செய்கிறான் என்று நான் நம்ப மறுப்பது போலத்தான்.

அன்புக்குரிய வெங்கட் சுவாமிநாதன் ஐயா அவர்களே,

உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளியூர் செல்லும் போது மட்டும் அல்ல, உள்ளூரில் இருந்தாலும் கூடுமானவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

என் வீட்டில் இருப்பவர்கள் இன்றைக்கு சமைக்க வேண்டாம் வெளியில் சாப்பிடலாம் என்று முடிவு எடுத்தால் கூட நான் அவர்களோடு சென்று ஓட்டலில் வெறுமனே உட்கார்ந்து விட்டு வந்து விடுவேன். வீட்டிற்கு வந்து எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரில் அரிசி வைத்து தனியாக எனக்கு மட்டும் உணவுதயாரித்து சாப்பிட்டு கொள்கிறேன். காரணம் வெளியிலே அவர்கள உபயோகிக்கும் எண்ணெய் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை.

நான் பணி நிமித்தமாக சில வருடங்களுக்கு முன் சீனாவின் ஷங்காய் நகரில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்தேன். வீட்டிலே புளிக் காய்ச்சல் செய்து எடுத்துப் போய் இருந்தேன். அங்கே இருந்த அலுவலகத்தில் இருந்த சீனப் பெண்மணி நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்றார். நான் என் ரூமிலே செய்து கொள்வேன் என்றேன். அன்று அந்தப் பெண்ணும், இன்னும் இரண்டு நண்பர்களும் என் ரூமிற்கு வந்து நான் என்ன செய்கிறேன் என்று பார்த்து விட்டு, ஒரு வாய் புளிய சாதமும், தயிர் சாதமும் டேஸ்ட் பார்த்து விட்டு போனார்கள். அங்கே தயிரும் கிடைக்கவில்லை, உரை வூர்ரி சமாளித்தேன்.தேவைப்பட்டால் சாம்பாரோ ரசமோ செய்து கொள்ளலாம்.

போன வாரம் நண்பர் வீட்டில் கொலுவுக்கு அழைத்து இருந்தார்கள். சுண்டல் மட்டும் இல்லாமல் இட்டிலி , சாம்பார், பூரி , கிழங்கு என்று கொலுவுக்கு அழைத்து விருந்து வைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. நான் தொடக் கூடவில்லை. நீங்க என்ன அவ்வளவு ஆச்சாரமா என்று என்னைக் கேட்டார்கள். ஆச்சாரமும் இல்லை, அனாச்சாரமும் இல்லை, உங்கள் வீட்டில் செய்து போடுங்கள் , சாப்பிடுகிறேன் என்றேன். ஒரு பிரபலமான உணவு விடுதியின் பேரை சொல்லி , அங்கே ஆர்டர் பண்ணினதுங்க என்றார். அம்மா ஆளை விடுங்கள் கேஸ்ட்ரிக் , அல்சர் மட்டுமல்லாமல் எனக்கு பிஸ்துலா தொல்லை வேறு இருக்கிறது. அரை மணி நேரம் நாசுவைக்கு ஆசைப் பட்டு இரண்டு நாள் கஷ்டப் பட முடியாது என்று சொல்லி விட்டேன்.

விடயத்துக்கு வருகிறேன். முன்னதாக, இன்றைக்கு கொலுவில் நீங்கள் பாட வேண்டும் என்றுதான் எல்லோரும் காத்திருக்கிறோம் என்று சொல்லி, எனக்கு ஷாக் கொடுத்தனர். என்ன பாடுவது என்று யோசித்த போது, கற்பூர நாயகியே கனகவல்லி பாடலையே பாடுங்கள். எங்களுக்கும் அந்தப் பாடல் ஓரளவு தெரியும், நீங்கள் பாடும் போது, உங்களுடன் சேர்ந்து பாடுகிறோம் என்று சொல்லி, அவர்கள வீட்டிலே இருந்த புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டனர். எல்லோரும் சமத்துவமாக அருகருகே அமர்ந்து ,

காற்றாகி கனலாகி கடலாகினாய்,

கருவாகி, உயிராகி, உடலாகினாய்!

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,

நிலமாகி ,பயிராகி உணவாகினாய்!

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,

போற்றாத நாள் இல்லை தாயே உன்னை,

பொட்டோடும் பூவோடும் வைப்பாய் எம்மை!”

என்று பாடினார்கள்.

ஏழை பணக்காரர் என்பது போன்ற எந்த பேதமும் இல்லாமல், சாதி , மொழி பேதமில்லாமல் எல்லோரும் அருகருகே அமர்ந்து சமத்துவமாக பாடி கற்பூர நாயகியை நினைத்து வழிபட்டனர் . இவாறாக மக்களை இணைக்கும் சக்தி உடையதாக சக்தி வழிபாடு உள்ளது.

அன்புக்குரிய வெங்கட் சுவாமிநாதன் ஐயா அவர்களே,

//ஆனால் எனக்கென்னவோ, இந்த ஒளி அலங்காரங்கள் படாடோபத்தைத் தான் சொல்வதாக தோன்றுகிறது. அப்படி பார்க்கக் கூடாது, அது அவர்கள் அறிந்த அவர்கள் வழியிலான குதூகலமும் கொண்டாட்டமும் என்றால்,அதற்கு பதில் அளிக்க நான் தயங்குவேன். ஆயிரம் சின்னச் சின்ன கோயில்க்ள் பாழடைந்து கிடக்க, இன்னம் சில வருடங்களில் அவை இல்லாமலேயே போகக்கூடும், தங்கத் தேர், தங்கப் பல்லக்கு, வகை வகையான ஏராளமான நகைகள் என்று ஒரு சில பணக்காரக் கோயில்கள் செய்யும் அட்டகாசம் பக்தியின் பாற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.//

பெரும்பாலான கருமாரி அம்மன் கோவில்கள் சிறிய வருமானம் உள்ள சிறிய கோவில்களே. சென்னையின் பல பகுதிகளிலும் இத்தகைய கோவில்களை நாம் காணலாம். இவர்கள் தாங்களே பணம் சேர்த்து ஆடி மாதம் சீரியல் செட்டு போட்டு அம்மனின் வடிவை அனைவரும் அறியச் செய்கின்றனர். பலர் கோவிலுக்குப் போக நேரம் இல்லாமல் உள்ளனர். பணி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது இந்த ஒளியானது அவர்களுக்கு ஒரு தெய்வீக நினைவை உண்டு பண்ணுகிறது. “கற்பூர நாயகியே கனக வல்லி” போன்ற பாடல்கள மனதில் நம்பிக்கையையும் அமைதியையும் உண்டு பண்ணுபவையாக உள்ளன. இதில் பெரிய படாடோபம் இருப்பதாக தெரியவில்லை , நல்ல பலனே இருப்பதாக தெரிகிறது.

இந்த சீரியல் விளக்கால் அலங்கரிக்கப் பட்ட அம்மன் உருவமும் பாடலும் சேர்ந்து ஆக்க பூர்வமான அமைதியான ஆன்மீக சிந்தனையை உருவாக்கும் ஒளியும் ,ஒலியுமாக இருப்பதாகவே நான் தாழ்மையுடன் கருதுகிறேன்.

சகோ. திருச்சிக்காரர் அவர்களே,

///அதனால் தான் இயேசுவே, ”நீங்கள் பிறரை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு , பூமியையும் சமுத்திரத்தையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர் உங்கள் மார்க்கத்தவர் ஆனா பின் உங்களை விட இரட்டிப்பு பாவிகள் ஆக்குகிறீர்கள்” என்பதை தெளிவாக இயேசு கிறிஸ்துவே சொல்லி இருக்கிறாரே///

அருமையான இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்.ஆனால் இதற்க்கு இந்த மத பிரச்சாரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்.?

என்னைப் போன்றோர் மதம் மாற அன்புக்குரிய வெங்கட் சுவாமிநாதன் ஐயா அவர்களைப் போன்றோரே காரணம்…அதாவது அதுபோன்ற சிந்தனையே எங்களை மதம் மாறவைத்தது..!

// என‌க்கு பிஸ்துலா என‌ப் ப‌டும் மூல‌ வியாதி ப‌த்தாண்டாக‌ உள்ள‌து. அறுவை சிகிச்சை செய்தும் குண‌ம் ஆக‌வில்லை. என் ஆச‌ன‌ப் ப‌குதியில் இருந்து சீழும் , இர‌த்த‌மும் நாள் முழுதும் வெளியேறுகிர‌து. அதோடுதான் நான் ச‌ந்தி நிய‌ம‌ம் , ம‌ன‌க் குவிப்பு முத‌லான‌ எல்ல‌வ‌ற்றையும் செய்கிரேன். அது த‌வ‌றா? //

http://www.tamilhindu.com/2009/12/vedas-belong-to-all-castes-2/

இதுபோன்ற வியாதிகள் வரக் காரணமே விக்கிரக வழிபாடுதான்; இதைக் குறித்த நேரடியான போதனையும் எச்சரிக்கையும் பைபிளில் உண்டு; சிருஷ்டிக் கர்த்தாவை சரணடைந்ததுமே இதுபறந்து போய்விடும்..!

சகோ. கிளாடி அவர்களே,

என்னுடைய நோயில் இருந்து நான் விடுபட வேண்டும் என்கிறஉங்கள் நல்லெண்ணத்துக்கு மிக்க நன்றிகள்.

மனிதனாகப் பிறந்த யாரும் – அவர் பணக்காரனோ, ஏழையோ,வெள்ளையரோ, கலர்டோ, விக்கிரக ஆராதனைக் காரரோ,விக்கிரகம் அல்லாதவற்றை ஆராதிப்பவரோ- எல்லா மனிதர்களும், பிணி , மூப்பு, சாக்காடு போன்ற துன்பங்களையோ, இன்னும் அவர்களது குடும்பத்தவருக்கு வரும் இன்னல்களையோ, தடுக்க வலிமை இல்லாமல் உள்ளனர் என்பதை பகுத்தறிவின் மூலமே அறிந்து கொள்ளலாம். எல்லா மதத்தவருக்கும் உடல் வியாதி வருகிறது. எந்த ஒரு கடவுளும், இது வரை எந்த ஒரு மனிதனையும் சாகாமல் காப்பாற்றவில்லை, நோய் வராமலோ, மூப்பே வராமலோ தடுக்கவில்லை.

மூல நோயை விட மோசமானது, மத சகிப்புத்தன்மையை இழந்ததால் மத வெறியால் பீடிக்கப் படுவது! அறிந்தே அந்த நோய்க்குள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.

/////இதுபோன்ற வியாதிகள் வரக் காரணமே விக்கிரக வழிபாடுதான்; இதைக் குறித்த நேரடியான போதனையும் எச்சரிக்கையும் பைபிளில் உண்டு; சிருஷ்டிக் கர்த்தாவை சரணடைந்ததுமே இதுபறந்து போய்விடும்..!//////

என்ன கூறுகிறீர்கள் சகோ. கிலாடி,
விக்ரக வழிபாட்டினர் எல்லோரும் இது போன்ற நோயை பெறுவார்கள் என்கிறீர்களா?
இந்தியாயவில் எத்தனை பேருக்கு இது இருக்கிறது ?நீங்கள் சொல்வது உண்மையானால் இந்தியாவின் என்பது சதவிதத்தினர் இது போல கஷ்டப்பட வேண்டுமே.
மேலும் கிறித்தவர் (சிருஷ்டி கர்த்தாவை பணிந்தவர்) யாருக்குமே இந்த நோய் வரவே இல்லையா?
ஏன் இப்படி எல்லாம் பூச்சாண்டி காட்டுகிறீர்கள்? அப்படி பூச்சாண்டி காட்டி தான் கிறித்தவத்தை வளர்க்க போகிறீர்களா?

சகோ திருச்சிக்கு அவரின் உடல் வேதனையை விட உங்கள் வார்த்தைகளே அதிக வேதனை தரும். அடுத்தவரின் பிரச்னையை பயன்படுத்தி அதற்கு தீர்வு தருவதாக பொய் சொல்லி ஏன் மதம் மாற்ற நினைக்கிறீர்கள்.
இதுதான் உங்கள் கர்த்தரை பரப்ப உங்கள் கர்த்தரின் மேல் நீங்கள் வைத்துள்ள விசுவாசமா? இது தான் பகுத்தறிவா?

ஆஹா.. இதனால் சகலமானவர்களும் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்..
பரந்து விரிந்த இந்த பாரத தேசத்தில் பிறந்திருக்கும் நாம் அனைவரும் மிகுந்த துரதிருஷ்ட சாலிகள்.
அதிலும் குறிப்பாக இந்து மதத்தில் இருக்கும் விக்கிரக ஆராதனை புரியும் நாம் அனைவரும்
கொடுத்துவைக்காதவர்கள். (எனக்கு ஒன்று புரியவில்லை. விக்கிரக ஆராதனை புரிவது தவறு என்றால்
தேவாலயங்களில் கன்னி மேரி அன்னை கையில் மகவை ஏந்தியது போன்ற சிற்பங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவே.
அவற்றின் முன்னாள் மண்டியிட்டு பிரார்த்தனை புரிவதெல்லாம்.. எந்த ஆராதனையில் சேர்த்தியோ.)
விஷயத்துக்கு வருகிறேன்.
நமக்கெல்லாம் மூலம், கேட்டை, பூராடம் உள்ளிட்ட வியாதிகள் வருகின்றனவே. அதற்க்கு காரணத்தை சரியாக
மருத்துவர் .. மன்னிக்கவும்.. சகோ.. கிளாடி அவர்கள் கண்டுபிடித்துசொல்லிவிட்டார். அவை எல்லாம் வருவதற்கு காரணம்
விக்கிரக வழிபாடுதான்.. என்று சொல்லி விட்டார்.
நாமெல்லாம் வேறுவேறு காரணங்கள் சொல்வோம். உடல்ரீதியாக, அறிவியல் ரீதியாக சொல்லப்படும் காரணங்கள் எல்லாமே
சரியல்ல என்பதை அம்மையார் நமக்கு உணர்த்திவிட்டார். அவருக்கு என் வந்தனம்.
இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, உணர்ந்து கொள்ள வேண்டியது எல்லாம் என்னவென்றால் மேலை நாடுகளில் – அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா ஆகிய தேசங்களில் கிறிஸ்துவை
வணங்கி வருகிறார்களே. அவர்களுக்கு எந்த விதமான வியாதி வெக்கைகள் எதுவுமே வருவதில்லை. அனைவரும் பூரண
தேக சவுகரியத்துடன் இருந்து வருகிறார்கள்.
அங்கெல்லாம் மருத்துவமனைகளே கிடையாது. மருத்துவர்கள் கிடையாது. மருத்துவம் சம்பந்தமான ஆராய்சிகள் எதுவுமே
கிடையாது. ஏனென்றால் அங்கு தான் வியாதிகளே இல்லையே. உலகப் புகழ் பெற்ற ப்ரூக்ளின் மருத்துவமனை என்று எல்லாம் சொல்கிறார்களே அதெல்லாம் நாமாகவே சொல்லிக்கொள்வதுதான்.
“எய்ட்ஸ்” என்னும் கொடிய ஆட்கொல்லி வியாதியை முதல் முதலில் உலகுக்கு மேலைநாடுகள் தானே அறிவித்தன. அப்படி என்றால்
அங்கு யாரவது அதனால் பாதிக்க பட்டிருந்தால் தானே அது சாத்தியம். – என்று விதண்டாவாதம் புரிபவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது.
அவர்கள் இயேசுவை வணங்குவதால் கிடைத்த அபூர்வமான ஞான திருஷ்டியை வைத்துக்கொண்டு “இந்த வியாதிகள் எல்லாம் விக்கிரக ஆராதனை புரியும் பாரத தேசத்தவர்களுக்கே வரும் என்பதால் அவர்களுக்காக கண்டுபிடித்து சொன்னதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டும் அல்ல. மேடம் கியூரி ரேடியத்தை கண்டுபிடித்ததும் புற்றுநோய் என்னும் கொடிய நோய் நம்மை தாக்கும் என்பதற்காகத தானே தவிர.. அங்கெல்லாம் கான்சர் வந்து அவதிப் படுபவர்கள் யாருமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
அப்படி என்றால் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் நம் மக்கள் தான்.
ஆஹா.. இப்படி வியாதியே இல்லாத தேசத்தில் பிறக்கவோ வாழவோ கொடுத்துவைக்காத நாம் துரதிர்ஷ்ட சாலிகள் தானே.
அது மட்டும் அல்ல. இந்த வியாதிகளுக்கும், இன்ன பிற வியாதிகளுக்கும் விக்கிரக ஆராதனை செய்யாத(?!) அந்த அயல் தேசத்தவர்கள் கூட இப்படி எல்லாம் புதிய புதிய மருந்துகளையும், சிகிச்சைகளும் மண்டையை உடைத்துக்கொண்டு கண்டுபிடித்து வருகிறார்களே. அவர்களெல்லாம் சேர்ந்து சகோ. கிளாடி அவர்களின் சுலபமான நோய்க் காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும்
அறிந்துகொள்ளவில்லையா? அம்மணி. உடனே உங்கள் கண்டுபிடிப்பை ஐக்கிய நாடுகள் சபைக்கோ, அல்லது உலக மருத்துவ சபைக்கோ அனுப்பி வைக்கவும். கோடிகளைக் கொட்டிக்கொண்டு ஆராய்ச்சி என்று இறங்கி ஊண் உறக்கம் மறந்து மருத்துவ உலகில் ஆராய்ச்சியில் ஈடுபடும் அவர்களது நேரமும் மிச்சமாகும். காசும் மிச்சமாகும்.
கூடவே உங்களுக்கு நோபல் விருதும் பரிந்துரைக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆல் தி பெஸ்ட் மேடம்.
– மணியன்

அருமை நண்பர் வெங்கட் அவர்களுக்கு.
உங்கள் சந்தேகங்கள் பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
ஒளி அலங்காரங்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.
அந்த அலங்காரங்கள் நீங்கள் சொல்வது போன்ற பெரிய கோயில்களில் மட்டும் இல்லை.
அவர் அவர் வசிக்கும் இடத்தில் உள்ள – அந்த இடத்தில் மட்டுமே பிரபலமாக இருக்கும்
கோயில்களிலும் நடக்கின்றன. நான் வசிக்கும் கோவையில் வெங்கிட்டாபுரம் என்ற ஒரு
பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் அண்ணா வீதி என்று ஒரு தெரு இருக்கிறது. அங்கு
“சக்தி விநாயகர்” – என்ற பெயரோடு ஒரு பிள்ளையார் இருக்கிறார். அந்தக் கோவிலில் கூட
விநாயகர் சதுர்த்தி வண்ண வண்ண ஒளி அலங்காரங்களோடு கொண்டாடப் படுகின்றன.
ஆடிமாதம் என்றால் அங்கு இருக்கும் வன துர்கை அம்மனுக்கு அதே போல வண்ண விளக்கு
அலங்காரங்களோடு அந்தப் பகுதி மக்கள் திருவிளக்கு பூஜை எல்லாம் செய்து ஜமாய்க்கிறார்கள்
இந்தக் கோவில் என்ன உலகப் பிரசித்தி பெற்ற கோவிலா என்ன? இதுபோலவே ஒவ்வொரு ஏரியாவிலும்
உள்ள கோவில்களில் அந்தப் பகுதி மக்கள் உற்சாகத்துடன் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். காரணம் என்ன?
“எங்க பிள்ளையார்”, “எங்க அம்மா” என்ற எண்ணம், நம்பிக்கை – அவர்கள் ரத்தத்துடன் இயல்பாக கலந்துவிட்டிருக்கிறது.
நமது வீட்டில் நமது அம்மாவுக்கு பிறந்த நாள் என்று தெரிந்தால் நாம் எப்படி உற்சாகத்துடன் அதை கொண்டாடுவோம்.
ஊருக்கு தெரியாவிட்டாலும் நம்ம மனசுக்குள் “எங்க அம்மாவுக்கு பர்த் டே” என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி உண்டாகுமே.
அதுவே ஒரு கொண்டாட்டம் தான். அதுபோலவே தங்கள் பகுதி அம்மனுக்கோ, வினாயகருக்கோ ஒரு விழா எடுப்பது
அவர்களுக்கு உற்சாகம் தரும் ஒன்று. நமது மதத்தில் தான் தெய்வம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடுவது.
இதுவே தான் ஒளி அலங்காரங்களுக்கு காரணம்.
அதுபோல “உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் திருப்பதி வேங்கடமுடியானிடம் அபார பக்தி கொண்டிருக்கிறார்கள். தினம் கோடி கோடியாக பணமும் நகைகளும் குவிகின்றன. ஆனால் பெருமாளுக்கு அருகில் தினம் நின்று சேவை செய்யும் அர்ச்சகர்கள் பெருமாளின் நகைகளைத் திருடி வருகின்றார்கள். இது தொடர்ந்து வருஷக் கணக்கில் நடந்து வருகிறது.” எதை “எதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது, யாரை தெய்வம் நிந்திக்கும் தண்டிக்கும் என்பதெல்லாம் எனக்குச் சரிவர தெரிவதில்லை.” – என்று சொல்லி இருக்கிறீர்கள்.
இதற்கு என் விளக்கம். தன் இருப்பை உணர்ந்துகொண்டு தன்னிடம் பக்தி செலுத்தும் அதே சமயம் இயன்றவரை நல்லதை செய்து வாழும் – அப்படி நல்லது செய்யமுடியாவிட்டாலும் கெடுதலை செய்யாமல் வாழும் மனிதரை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது.
இதற்கு மாறாக வாழ்பவர்களை தண்டிக்கிறது. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் திருவேங்கடமுடையானிடம் உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் கொண்டிருக்கும் பக்தியை பற்றி. அவர்களுக்கு அவன் அள்ளி அள்ளி கொடுப்பதால் தானே அவர்கள் கோடிக்கணக்காக அவனிடம் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
அதுபோல அவன் சன்னதியில் சேவை செய்யும் அர்ச்சகர்கள் பெருமாளின் நகைகளை திருடுவதை அவன் காட்டிக்கொடுத்துவிடுகிறானே. தன்னிடம் சேவை செய்பவர்கள் என்பதற்காக அவர்கள் திருடுவதை நாம் அறியாமல் மறைத்தாவிடுகிறான். செய்த்தித்தாள்களிலும், இன்ன பிற ஊடகங்கள் வாயிலாக அவற்றை வெளிக்காட்டி விடுகிறானே.
கருவறைக்குள் தவறு செய்யும் தேவநாதன்களையும் அந்த தெய்வம் விட்டுவிடுவதில்லை. காட்டிக்கொடுத்து தலை குனிய வைத்துவிடுகிறதே. அதைத்தான் தெய்வ நீதி என்கிறோம். அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொள்ளும். என்றெல்லாம் சொல்கிறோமே. தவறு செய்பவன் தன் மகன் என்றால் மறைப்பதோ மறுப்பதோ மனிதர்களுக்கு தான் தெரியும். தெய்வம் அப்படி இல்லை.
அதனால் தான் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்று வள்ளுவர் கூட குறிப்பிடுகிறார்.
அடுத்து மனித நேயம் பற்றி சொல்லி இருகிறீர்கள். ”
எவனோ தான் பெற்ற மூன்று பச்சிளங்குழந்தைகளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டுப் போகிறான். அக்குழந்தைகளை கண்டதும் அவற்றுக்கு பால் கொடுத்து ஒரு நாள் முழுதும் அக்கறையோடு பார்த்துக்கொண்டது, தன்க்கே குடும்பப் பொறுப்புள்ள ஒரு குப்பை கூட்டி பஸ் ஸ்டாண்டை சுத்தஃம் செய்யும் ஒரு மனிதன். நிறையப்பேர் கூடும் அந்த இடத்தில் வேறு யாருக்கும் அந்த பாசம் தோன்றவில்லையா?” – என்று கேட்டிருக்கிறீர்கள்.

இங்கு மனித நேயம் அனைவருக்கும் இருக்கிறது. நிறையப் பேர் கூடும் இடத்தில் யாரோ ஒருவன் தான் நாள் முழுதும் பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டு போகும் குழந்தைகளை நாள் முழுதும் கவனித்துக் கொள்கிறான். உண்மைதான்.

இன்றைய அவசர உலகில் ஒவ்வொரு மனிதனையும் அவனவன் வாழ்வை பற்றிய கவலையே பெரிதாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது. அப்படி இருக்க இப்படி ஒரு சூழலில் மனிதாபிமானத்தை காட்டுவதில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம்.

“ஐயோ.. பாவம். யார் பெற்ற பிள்ளையோ” என்ற அளவோடு சிலர் நின்றுவிடுவார்கள். அவர்களது மனித நேயம் அந்த அளவோடு அமைந்துவிடுகிறது.

அதே சமயம் நிர்க்கதியாக விடப்பட்ட குழந்தைகள் மீது ஒருவன் கருணை காட்டி தன் சக்திக்கும் மீறிய அளவில் உதவுகிறான் என்றால்.. தெய்வம் அங்கு அவன் வடிவில் வந்து அந்த குழந்தைகளை பாதுகாக்கிறது.

“அட .. இது கூட எனக்கு தோன்றாமல் போயிடுச்சே” என்று அப்போது சிலர் நினைப்பார்கள். இன்னும் சிலர். “அய்யா. என் பங்குக்கு இதை வைத்துக்கொள்..” என்று தன்னால் இயன்றதை கொடுத்து உதவவும் முன்வரலாம்.

நண்பரே.. நான் மிகைப் படுத்தவில்லை. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை முன்னூறு வருடம் ஆண்டார்கள். ஆனால் அவர்களை விரட்ட அஹிம்சை என்னும் ஆயுதத்துடன் ஒரே ஒரு மகாத்மாவைத்தானே கடவுள் நமக்காக அனுப்பி வைத்தான்..

– மணியன்.

இங்கு இல்லாத தெய்வங்களை உருவங்களில் புனைந்து வகுத்து புகுத்தி ஃப்யூஸ் ஆகக் கூடிய பல்புகளாலும் அநித்தியமான (கள்ள) மின்சாரத்திலும் அலங்கரித்து வழிபடுகின்றோம்;அவை தெய்வங்களல்லாதிருந்தும் மெய் தெய்வத்தின் பால் ஏற்பட்ட ஏக்கத்தினால் ஏதோ ஒன்றை தெய்வமாக நிறுத்தி வழிபட்டு நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்கிறோம்;

ஆனால் மெய் தெய்வமோ தமது அடையாளமாக தனது சிருஷ்டியான சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இயக்கிக் கொண்டிருந்து தம்மில் தாம் மகிமையடைகிறார்;

இங்கு அவலட்சணமானவைகளுக்கே அலங்கரிப்பு அவசியம் என வேதம் சொல்வது எத்தனை உண்மையல்லவா..?

சகோ. கிளாடி அவர்களே,

மத நல்லிணக்க கோட்ப்பாட்டை வலியுறுத்தி இந்த தளத்திலே பல முறை எழுதி இருக்கிறோம்.

எவரும் அமைதியான முறையிலே தாங்கள் கடவுள் என்று கருதுபவரை அமைதியாக வழிபட்டுக் கொள்ளலாம், அதில் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. நல்லிணக்க அடிப்படையிலே நாம் குருத்வாரா, மசூதி, சர்ச், கோவில் உட்பட எல்லா வழிபாட்டு தளங்களிலும் சென்று அவர்களின் வழிபாட்டில் பங்கெடுத்து வருகிறோம், எல்லோரும் இதே போல எல்லா வழிபாட்டு தளங்களுக்கும் செல்ல வேண்டும் என்று நாம் கட்டாயப் படுத்தவில்லை.

நேற்று கூட ஒரு பென்தொகொஸ்தே பிரிவினரின் நிகழ்ச்சயில் கலந்து கொண்டேன். இதுவே நமது முறை.

சகோ. கிளாடி தான் விரும்பும் தெய்வத்தை வழிபடலாம். நாங்கள் குறுக்கிடவில்லை. உங்களுடைய வழிபாட்டில் கலந்து கொள்ளவும் நாங்கள் தயார்.

உங்களின் தெய்வத்தையும் வழிபடத் தயார் என்கிறோம், நல்லிணக்க அடிப்படையிலே. ஆனால் உங்களுக்கு அதோடு திருப்தியில்லை , பிற மதத்தவரின் தெய்வங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை. பிற மத தெய்வங்களை இகழத் துடிக்கிறீர்கள்.

பிற மதத்தவரின் தெய்வங்களைப் பார்த்தவுடன் பலருக்கு மத வெறி அதிகமாகிறது . மத சகிப்புத் தன்மை இல்லாததால் உருவான மத துவேசத்தை , மத வெறியைக் கக்குகின்றனர்.

உங்களின் தெய்வம் மட்டும் தான் உண்மை என்று ம் மற்ற தெய்வங்கள் இல்லாத தெய்வங்கள் என்றும் நீங்கள் சொல்ல விரும்பினால், உங்களுடைய தெய்வம் இருக்கிற தெய்வமானால் அதற்க்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் எங்கே.

உண்மை என்று எழுதினால் உண்மை ஆகி விடுமா?

உங்களுடைய இருக்கிற தெய்வத்தை வைத்து, சந்திரனையும், சூரியனையும் இயக்குகிற தெய்வத்தை வைத்து, தொடர்ச்சியாக சந்திரன் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி, மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக் இப்படி ஒளி விடும்வடி செய்து காட்டுங்கள், அப்படி செய்து காட்டுபவர் யாராக இருந்தாலும், அவர் சொல்லும் தெய்வத்தை மெய் தெய்வம்மாக எல்லோரும் அங்கீகரிப்பார்கள்.

நிரூபணம் இல்லாத , சரி பார்த்துக் கொள்ள படாத இயலாத ஒரு கோட்பாட்டைக் கைக் கொண்டு , மத சகிப்புத் தன்மையை இழந்து மத வெறியை வெளிப்படுத்த வேண்டாம்.

அருவருப்பாக மட்டுமல்லாமல் அபாயகரமானதாகவும் இருப்பது மத சகிப்புத் தன்மையை இழந்ததால உண்டான மத வெறியே.

// பிற மதத்தவரின் தெய்வங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை.//

http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post_21.html

// உங்களுடைய இருக்கிற தெய்வத்தை வைத்து, சந்திரனையும், சூரியனையும் இயக்குகிற தெய்வத்தை வைத்து, தொடர்ச்சியாக சந்திரன் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி, மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக் இப்படி ஒளி விடும்வடி செய்து காட்டுங்கள், அப்படி செய்து காட்டுபவர் யாராக இருந்தாலும், அவர் சொல்லும் தெய்வத்தை மெய் தெய்வம்மாக எல்லோரும் அங்கீகரிப்பார்கள். //

அண்ணா,நீங்க கேட்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;ஒரே சிரிப்பாக வருகிறது;உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இறைவன் முடிவுசெய்துவிட்டால் அதனைப் பார்த்து இறைவனை ஏற்றுக்கொள்ள இந்த உலகில் எந்த உயிரினமும் இருக்காது;ஏன் இந்த உலகமே இருக்காது;அறிவுபூர்வமான கேள்வியைத் தான் கேட்கிறீர்களா?
http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post_9967.html

சகோதரி கிளாடி அவர்களே,

ஒரு அறிவியல் கோட்பாட்டை உண்மை என்று சொன்னால், அதை பல வகையிலும் நிரூபிக்க வேண்டியதாக உள்ளது. மீண்டும் , மீண்டும் நிகழ்த்திக் காட்ட வேண்டி உள்ளது.

எந்த விதமான நிரூபணமும், சரி பார்ப்பும் இல்லாமல் வெறுமனே கடவுள் என்று எதை செய்தாலும் சொன்னாலும் யாரும் கேள்வி கேட்க கூடாது கடவுள் மீது பழியைப் போட்டு தங்கள் வசதியான வகையில் சொல்லி, செயல் பட்டுக் கொண்டார்கள. யாரோ சொல்லியதை, எழுதியதை கொண்டு வந்து எந்த நிரூபணமும் இல்லாமல் எங்கள தலையில் கட்டப் பார்க்கிறீர்கள். சரி நல்ல கருத்துக்களாக இருந்தாலும் பரவாயில்லை. மத சகிப்புத் தன்மையை அழிக்கும் மத வெறிக் கருத்துக்கள், இனப் படுகொலையை நியாயப் படுத்தும் இனவாதக் கருத்துக்கள்…. இப்படியாக மனித சமூகம் அழியத் தேவையான கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டு, எங்களைப் பார்த்து சிறுபிள்ளைத் தனம் என்கிறீர்கள்.

நாங்கள் சூரியனை கருப்பாகவோ, நிலவை இரத்தமாக்கவோ சொல்லவில்லை. நிலவை எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி விட சொல்கிறோம். இதனால் எந்த உயிருக்கும் எந்தக் கெடுதியும் வந்து விடாது. கள்வர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.

ஆனால் இதையோ,அல்லது இது போன்ற எந்த ஒரு செயலையோ செய்ய வைக்க உங்களால இயலாது.உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்றே. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே நிரூபிக்கப் படாமல் உள்ளது. இதிலீன் தெய்வம் தான் மெய்த் தெய்வம் என்கிற சண்டைக்கு போய் விட்டீர்கள். நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு மத்தியக் கிழக்குப் பகுதியில் சொல்லியிருக்க வேண்டியதை, இப்போது இங்கே வந்து சொல்கிறீர்கள்.

தெளிவாக சொல்கிறோம், உங்களுடைய தெய்வம் மட்டுமே மெய்யான தெய்வம் என்றால் நான் மேலே சொன்னபடி செய்ய சொல்லி , முழு நிலாக எல்லா நாட்களும் ஒளி விடச் செய்யுங்கள்.

அதை விட்டு விட்டு வெறுமனே சால்ஜாப்பு, பயமுறுத்தல், இரத்தம், சங்காரம் இதையெல்லாம் சொன்னால் இந்தக் காலத்திலே வேடிக்கையாக கேட்பார்களே தவிர , பயப் பட மாட்டார்கள்.

எத்தனை சங்காரங்கள், இரக்கமற்ற படுகொலைகள்,….. எல்லாவற்றையும் செய்து விட்டு அதை எல்லாம் கடவுள் செய்யச் சொன்னார் என்று புனிதமாக்கிய டெக்னிக்கை புரிந்து கொள்ளுங்கள்.

மனதில் கொஞ்சமாவது நியாயமும், இரக்கமும் உள்ளவர்கள், இந்த இரக்கமற்ற சங்காரங்க்களை, உடன்படிக்கை செய்ய வாய்ப்பு கூட கொடுக்காமல் பெண்கள், கிழவர்கள்…குழந்தைகளைக் கூட விடாமல் கொன்று தீர்த்த கொடுமையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

சில நாட்களாக நான் இந்தப் பக்கம் வரவில்லை. மன்னிக்கவும். இங்கு பலரின் கருத்துக்கள் கருத்துக்களாகவே எனக்குத் தோன்
ரவில்லை. அதை நினைத்துத் தான் நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு பொறுமை அதிகம், அவ்வளவு பொறுமை எனக்கில்லை என்று சொல்லியிருந்தேன். இங்கு மனம் திறந்த கருத்துப் பரிமாற்றத்துக்காக ஒரு களம் தரப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் பண்பட்ட மனம் இல்லாதவர்கள் தங்கள் வெறுப்பையே உமிழ்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தாலும் தம் வெறுப்பைத் தான் எடுத்துச் செல்கிறார்கள். அன்பர் க்ளாடி இதற்கு எடுத்துக்காட்டு. மேடை கிடைத்தது என்று பெந்தகோஸ்துக்கள் போடும் அட்டகாசமான, ஆபாசம் நிறைந்த வசைகளும், இரைச்சல்களும் போன்றுதான் க்ளாடின் இங்கு களம்புகுந்துள்ள ஆடும் ஆட்டமும் இருக்கிறது. அவர் பெருமைப்பட சில தனிப்பட்ட ஆத்மாககளை கிறுத்துவத்தில் காணலாம்மே தவிர நிறுவனமாக அவர்கள் செய்யும் வன்முறையும், பண்பாடற்ற செயல்களும் அவர் நல்ல மனதுள்ளவராக இருந்தால் வெட்கப் படம் தருணங்களையே நிறைய கொடுக்கும். முதலில் வேளாங்கண்ணி கோயில் திருவிழாக்களின் தீப அலைங்காரங்கள் மட்டுமல்ல இன்னும் பல ஆடம்பர கொண்டாட்டங்களையும் நினைவுக்குள் இறுத்திப் பின் மற்றவர்களாஈ குறைகூற வாய் திறக்கவேண்டும். மருந்து தாரேன், படிப்பு தாரேன், கிறித்துவனாகு என்று வழியற்றுத் தவிக்கும் ஏழைகளை வற்புறுத்தி மத மாற்றம் செய்வது ஒரு அவலம் மிக கேவலம். அதை சுனாமி புயலின் நாசத்தின் போது, “இது மத மாற்றம் செய்வதற்கு அரிய வாய்ப்பு” என்று படையெடுத்தவர்கள் மனிதாபிமானத்தால் வந்தவர்கள் அல்ல. அவர்கள் நிறுவனம், மதம், அக்குருக்க்ள்மார் எல்லோரும் கேவலத்தின் சொரூபங்கள். க்ளாடிஸ் முதலில் அமைதி காப்பதும், அந்த அமைதி காக்கும் கணங்களில், சுயசிந்தனையும் சுய விசாரணையும் மேற்கொள்ளுதல் நல்லது. ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. க்ருஸேட் களில் வளர்ந்த மதம்.எலிஃபெண்டா குகை சிற்பங்களை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான குறிகளாகக் கொண்ட மத வெறி அந்த மதத்தினருக்கு இருந்தது. பாமியான் புத்த சிறபங்களை நாசம் செய்த வெறியர்களுக்கு ஒரு மதம். இவர்களுக்கு வெறியூட்ட இன்னொரு மதம். எலலாவற்றிற்கும் தூண்டுதலாக இருப்பது இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் குடிகொண்டிருக்கும் வெறுப்புணர்வு.

Dear Mr.thiruchchikkaaran இங்கே Mr.வெங்கட் சாமிநாதன் தான் அறிந்திராத ஒரு நம்பிக்கையைக் குறித்து வெறுப்பை உமிழ்வது தெரியவில்லையா?

நான் உளையான பாதாள‌ சாக்கடையிலிருந்து விடுபட்டு சத்திய வேத மார்க்கத்தில் சேர்ந்து சுதந்தரமான சுயாதீன வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்; வாஸ்து ஜோதிடம் சாஸ்திரம் தோஷம் பரிகாரம் போன்ற அனைத்து அடிமைத்தனங்களிலிருமிருந்து விடுதலை பெற்ற அனுபவங்களை சகமனிதன் என்ற அன்பினால் பாசத்துடன் சொல்லவருகிறேன்; இது தூஷணமா, இந்து வெறியர்கள் செய்வது தூஷணமா என்று அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரிய சகோ. திரு.கிளாடி அவர்களே,

மன உளைச்சலை உண்டாக்குவது யார்?

நாங்கள் தெருவிலே நடந்து போகும்போது எங்களை அணுகி, எங்களிடம் வந்து நீங்கள் எல்லாம் பாவிகள், நான் சொல்லுகிற கடவுளை கும்பிடாவிட்டால் நீங்கள் எரி நரகம் போவீர்கள் என்று தொல்லை தருவது யார்?

எந்த ஒரு இந்து மத ஸ்மிருதியிலாவது ஒரு இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் காப்பேன் என்று எழுதியதாக உள்ளதா, என்னைக் கும்பிடாவிட்டால் எரி நரகம் போவீர்கள் என்று சொல்லியதாக உள்ளதா?

பல கோடிக்கும் மேலான பெரும்பாலான இந்துக்கள் இந்த வாஸ்து, ஜோதிடம், தோஷம்… இதைப்பற்றி எல்லாம் கவலைப் படுவதோஅக்கறை கொள்வதோ இல்லை.

இந்து மதத்தின் ஸ்மிரிதிகள் எதிலும் வாஸ்து, ஜோதிடம் பார்க்க சொல்லி சொல்லவில்லை. அதைப் பற்றிய குறிப்பும் இல்லை.

எனவே இந்து மதத்தை மக்கள் பின்பற்றுவதை சகித்துக் கொள்ள இயலாமலே , பாதாள சாக்கடை என்று எல்லாம் நீங்கள் தூஷிககிறீர்கள்.

இந்த தளத்திலே இயேசு கிறிஸ்துவை சிறப்பிக்கும் பாடல்களையும், அல்லாஹ்வினை சிறப்பிக்கும் பாடல்களையும் பற்றி நாம் விளக்கி உள்ளோம். யாராவது அவற்றை சகித்துக் கொள்ளாமல் இகழ்ச்சியாக எழுதி இருக்கிறார்களா, என்று பாருங்கள்.

ஆனால் உங்களுக்கோ கருமாரி அம்மனை மக்கள் வழிபடுவதை பற்றி எழுதியவுடன் , அதை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் அந்த அம்மனை வழிபடக் கூடாது என்று கண்டித்து எழுதுகிறீர்கள்.

இவ்வாறாக உங்களின் மத சகிப்புத் தன்மையால் உருவான மத வெறியின் தாக்கத்தால், அதற்க்கு எதிர்வினையாகவே பலரும் எழுதுகிறார்கள்.

எனவே நீங்கள் கருமாரி அம்மனை பற்றிய கட்டுரையில் என் கடவுள் மட்டும் தான் உண்மை, பிற கடவுள்கள் என்று ஆதாரம் இல்லாமல் பிற மதங்களை சகித்துக் கொள்ள இயலாத மத வெறியை வெளிப் படுத்துவதற்குப் பதிலாக

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கட்டுரையில் , இயேசு கிறிஸ்துவை சிறப்பித்து பின்னூட்டம் எழுதி இருக்கலாம்.
அப்போது யாரவது இயேசு கிறிஸ்துவை இகழ்ந்து எழுதி இருந்தால் நானும் அதைக் கண்டித்து இருப்பேன்.

இயேசுகிறித்துவைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதுவதற்கு பதிலாக அவருடைய அடியவர்களை விமர்சிப்பதற்கும் அரைகுறையாக பைபிளை வியாக்கியானம் செய்வதற்கும் அந்த கட்டுரையைப் பயன்படுத்திக் கொண்டீர்கள்;ஆனால் அம்மனைக் குறித்த கட்டுரையில் அதன் வழிபாட்டாளர்களை விமர்சித்து ஒருவரியும் இல்லை;உங்கள் கையில் தராசு இருக்குமானால் அது முழுவதுமாக சுமுத்திரையாக எந்த பக்கமும் சாயாமல் இருக்கவேண்டும் என்பதை நினைவில் நிறுத்திடுங்கள்,நானே உங்களைப் புகழுவேன்.

என்னுடைய வரிகளை மேற்கோள் காட்டி இது சரி, இது தவறு என்று எழுதுங்களேன். அதை செய்யாமல் வெறுமனே எதோ காரணம் சொல்வது போல உள்ளது. கருமாரி அம்மனை வழிபடுபவர்கள், பிற மதத்தினரின் தெய்வங்களை இகழ்ச்சி செய்வதில்லை. அப்படி செய்தால் அதையும் கண்டிப்பேன். அவர்கள் அப்படி செய்யாத பட்சத்தில் அவர்களை எதற்க்காக விமரிசிக்க முடியும்?

நீங்கள் மத சகிப்புத் தன்மையைக் கைக் கொண்டு, பிற மதங்கள் செல்வாக்குடன் இருப்பதை சகிக்க முடியாமல், அவரகளின் தெய்வங்களை இகழ்வதை விட்டால் எல்லோருமே உங்களைப் புகழ்வார்கள்.

சகோ திருச்சிக்கு,
குழந்தையின் மன நிலையில் உள்ளவர்களுடன் (ஒரு வேளை குழந்தையோ என்னவோ? ) ஏன் நீங்கள் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்கிறீர்கள் ?
சாமி கண்ணை குத்திடும் ஒழுங்கா சாமிய கும்பிடு என்ற ரேஞ்சுக்கு எப்போ சகோ கூறினாரோ அப்பவே அவர் இன்னும் குழந்தை என்று முடிவு செய்து விட்டேன். ஆரம்ப நிலை பக்தி அப்படிதான் இருக்கும் பக்குவம் வளர வளர எல்லாம் சரியாகும், மனதில் எல்லாம் சமமாகும். அவர் இன்னும் ஆன்மிகத்தில் பல படிகளை கடந்து விரைவில் சமநோக்குள்ள சிறந்த ஆன்மிக வாதியாக முன்னேற என் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

// கருமாரி அம்மனை வழிபடுபவர்கள், பிற மதத்தினரின் தெய்வங்களை இகழ்ச்சி செய்வதில்லை. //

அன்பரே நாம் ஏற்றுள்ள நம்பிக்கையின்படி இறைத் தன்மையை உணராது கல்லுக்கும் மண்ணுக்கும் ஆராதனை செய்வதே சர்வ சக்தியான சிருஷ்டிகருக்கு செய்யும் இகழ்ச்சி தான்;அதனைக் கண்டிப்பதும் விழிப்புணர்வு உண்டாக்குவதுமே எமது தொழுகையாகும்.

சகோ. கிளாடி,

அவரவர்கள் என்ன இறை நம்பிக்கையை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் – அது அடுத்தவருக்கு தொல்லை தராத வகையிலே, அடுத்தவரை மனம் நோகும்படி இகழ்ச்சி செய்யாத வரையிலே.

மற்றவரின் மத நம்பிக்கையை இகழ்ச்சி செய்ய என்னுடைய மத நம்பிக்கைப் படி நான் செய்கிறேன் என்று சொல்லுவதை நாகரிக சமுதாயமும் விரும்பாது, சட்டமும் அனுமதிக்கவில்லை.

தாலிபான்களும், அல் காயிதா காரர்களும் செய்கிற செயல்களும் அவர்களின் மத நம்பிக்கைப் படியே அமைந்து உள்ளதாக அவர்கள் சொல்லுகின்றனர். ஒழுக்கமில்லாத காபிர்களை திருத்தவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அது அவர்களின் மத நம்பிக்கை படியே உள்ளதாகவும் அவர்கள சொல்லுகின்றனர். அவர்கள அப்படி செய்வது சரி என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

மொத்தத்திலே சகிப்புத் தன்மை இனமியால் வன் தீவிரவாதத் தாலும், எழுத்தினாலே செய்யப்படும் மென் தீவிர வாதத் தாலும் மத வெறி வெளிப்படுத்தப் பட்டு, சமூக இணக்கம் கேட்டு, அமைதி குலைகிறது. சகிப்புத் தன்மையே மனிதத் தை வாழ வைக்கும்.

glady அவர்களே,

///அன்பரே நாம் ஏற்றுள்ள நம்பிக்கையின்படி இறைத் தன்மையை உணராது கல்லுக்கும் மண்ணுக்கும் ஆராதனை செய்வதே சர்வ சக்தியான சிருஷ்டிகருக்கு செய்யும் இகழ்ச்சி தான்;அதனைக் கண்டிப்பதும் விழிப்புணர்வு உண்டாக்குவதுமே எமது தொழுகையாகும்.///

நீங்கள் விழிப்புணர்வு ஏற்றுகிறேன் என்று கூறி மதம் மாற்றப்பட்டவர்களும் அங்கேயும் அதே தான் செய்கிறார்கள்.இதை நான் பலமுறை எழுதிவிட்டேன்.வேளாங்கண்ணி மாதா கோவிலில் நடப்பது என்ன? இந்து கோவில்களின் திருவிழாவை அப்பட்டமாக காப்பி அடித்து அதே ஆராதனை அல்லவா செய்யப்படுகிறது.!!! அவர்களை கண்டித்தும் விழிப்புணர்வு உண்டாக்குவதும் உமது தொழுகை அல்லவா? செய்ய வேண்டியது தானே???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: