Thiruchchikkaaran's Blog

இராமர் இன்று இருந்திருந்தால்…………!

Posted on: October 9, 2010


 

இந்து மதம் மற்றும்   இராமர்,  தொடர்பாக நாம் சில தளங்களில் எழுதிய கருத்துக்கள் பற்றிய விவாதங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் பிற தளங்களில் ஓரளவுக்கு மேல் அதிக பின்னூட்டங்களை இட்டு அந்த தளத்தின் நிர்வாகிகளுக்கு  அயர்ச்சியையும், சோர்வையும் உருவாக்க  நாம் 
விரும்பவில்லை.  அதே நேரம் இந்து மதம் அதன் தன்மையை விட்டு வேறு ரூட்டிலே போவது என்பது உலக அமைதிக்கு நல்லது அல்ல என்கிற அக்கறையும் நமக்கு இருக்கிறது.
 எனவே  இந்த விவாதம் தொடர்பாக அன்புக்குரிய நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நாம் இந்த தளத்திலேயே விடை தருவோம். நண்பர்களுக்கு நம்முடைய தளத்துக்கு வர தயக்கம் இருக்க அவசியம் இல்லை  என நினைக்கிறோம். நண்பர்கள் நம்முடைய தளத்திற்கு வந்தாலும், வராவிட்டாலும்   படித்தாலும் படிக்காவிட்டாலும்,   நம்முடைய தளத்திலே தொடர்ந்து விளக்கங்கள் அளிக்கப் படும்.
முதலில் விவாதத்தின் பின்னனி என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில்,  நிலத்துக்கு கீழே கோவிலின் சிதிலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரியத்திடம் நிலத்துக்கான டாகுமென்டோ,  நிலம் வாங்கியதற்கான ஆதாரமோ இல்லை. எனவே முன்பு கோவில் இருந்த இடத்தை கோவில் கட்ட எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு பகுதியை வக்பு போர்டிடமும் கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.

நாம் இதை வரவேற்று இருக்கிறோம். கோவில் கட்டி சந்தோசமா கும்பிட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் நம் கருத்து. ஆனால் இந்த தீர்ப்பு வரும் வரை காத்து இருந்து, அரசாங்கமே நிலத்தைப் பிரித்துக் கொடுத்து , கோவிலுக்காக ஒதுக்கப் பட்ட இடத்தில் உள்ள பாப்ரி கட்டிட பகுதிகளை அகற்றி கொடுத்து இருந்தால், அது சட்டப் படி நடந்த ஒன்றாக இருக்கும்.  அதிலே இஸ்லாமியர்களும் மன வருத்தப் பட ஒன்றுமில்லை.

உதாரணமாக  எனக்கு கோவையில் ஒரு நிலம் இருக்கிறது, அந்த இடத்தை எனக்கு தெரியாமலே சில விசமிகள் யாரோ ஒருவரிடம் விற்று விட்டார்கள், வாங்கியவரும் காங்கிரீட் போட்டு வீடு கட்டி விட்டார் என்றால், நான் கோர்ட்டிலே வழக்கு தொடுப்பேன். கோர்ட் சொல்லும் படி அந்த நிலம் என்னிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என்றால் , அந்த நிலத்தை என்னிடம் ஒப்ப்டைத்துதானே ஆக வேண்டும். இவ்வளவு ஆசையாக கட்டியது என மன வருத்தம் இருக்கலாம். ஆனால் நியாயம் என் பக்கம் இருக்கும் போது, நான் அநியாயமாக நடந்து கொண்டதாக அவர் நினைக்கவோ, வருந்தவோ முடியாது.

இவாறாக நியாப் படி நடந்து கொள்ளாமல் அவசரப் பட்டு இடித்தது ஒரு அடாவடி செயலாகி விட்டது , அதனால் இஸ்லாமிய சமூகத்தை  சேர்ந்த சகோதரர்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர் , எனவே பொறுமையாக இல்லாமல் அடாவடியாக இடித்தது தவறு என்று எழுதினோம்.

அவ்வளவுதான். அன்பு நண்பர்கள் எல்லாம் ஒரே அடியாகப் பாய்ந்து விட்டனர் நம் மீது. ஒகே யார். நம் பக்கம் நியாயம் இருக்கும் போது எந்தப் பாய்ச்சலுக்கும் நாம் என் அஞ்ச வேண்டும்.

இதிலே சில நண்பர்கள் இந்த பாப்ரி மஸ்ஜித் அல்லது அமைப்பு என்பது திட்டமிட்டு இடிக்கப் படவில்லை, அது எதிர்பாராத விதமாக நடந்து விட்ட செயல் என்று எழுதினார்கள. அந்த அளவுக்கு அவர்களிடம் நாகரீகம் இருக்கிறது. அது உண்மையிலே எதிர்பாராத விதமாக நடந்தது என்றால், நாம் மன வருத்ததோடு அகலலாம்.

ஆனால் நம்மை எப்படி  கட்டம் கட்டலாம் என்று காழ்ப்புணர்ச்சி யுடன் காத்திருந்த நண்பர்கள  சிலர்,  இடித்தது எதிரபாராமல் நடக்கவில்லை என்றும் , நான் கரசெவகரை கொச்சைப் படுத்துவதாகவும் எழுதி பிள்ளையார் சுழி போட்டனர். 

 நாமோ தொடர்ந்து இதிலே சட்டப் படி  மட்டும் அல்லாமா, இராமருடைய கொள்கைப் படி  இது தவறு என்று எழுதினோம். இடிப்பு செயல் இந்து மதக் கோட்பாட்டுக்கு விரோதமானது என்றும் எழுதினோம்.  இந்துக்கள்  இந்து மதக்கோட்பாடுகளின் படி செயல் படுவதுதான் சரி என்றும் எழுதினோம்.

 இந்து  மதத்தைப்  பற்றி, இராமரின் கொள்கைகளைப் பற்றி நாம் தொடர்ந்து விளக்கிவருகிறோம் அல்லவா?

நாம் எழுதிய முக்கியக் கருத்துக்கள் வருமாறு:

இந்து மதம் என்பது பிறரை அச்சுறுத்தும் மதமாக என்றுமே இருந்தது இல்லை.

மிகப் புராதனமானது இந்து மதம். சகிப்புத் தன்மை, அரவணைக்கும் தன்மை ஆகியவை உள்ள மதமாக இந்து மதம் உள்ளது.

 

உலக்குக்கே வழி காட்ட வேண்டிய நிலையில் இந்து மதம் உள்ளது. இந்துக்கள் சர்ச்சுக்கு செல்கிறார்கள. மசூதிகளைக் கட்டித் தருகிறார்கள், அது நல்லது என்று விவேகானந்தர் சொல்லவில்லையா?

 

இந்து மதம் அடாவடி, அராஜக செயல்களை நம்பும், இறங்கும் மதம் என்று ஆக்கி விட்டால், நாளைய தலை முறையினர் மன்னிக்க மாட்டார்கள். உலகத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் , ஒளியையும் உண்மையையும் தரக் கூடிய ஒரு மதத்தை சரியாக சிந்திக்காமல் தவறான பாதைக்கு கொண்டு போக வேண்டாம். அப்படிக் கொண்டு போவது எளிதல்ல.//

            

 

இராமரின் முக்கிய சிறப்பே அவர் அயோத்தியின் ஆட்சியை விட்டுக் கொடுத்ததுதான். கைகேயி கேட்டு இருந்தால் எப்போதிக்குமாக கூட ஆட்சியை விட்டுக் கொடுத்து இருப்பார். சரி, அவர் விட்டுக் கொடுத்ததைப் போல எல்லோரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் – ஆனால் இப்படி அடாவடியாக உடைப்பது இராமரின் கொள்கைக்கு பொருத்தமானதா?

 

இராமர் ஆயுதம் ஏந்தியது காப்பதற்கு தான், அப்பாவிகளைக் காப்பதற்கு தான். அப்பாவியான ஒருவரை தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார். குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?அந்த மசூதியின் மீது கடப்பாறையை பாய்ச்சியது இராமனின் பினாமினா (Phenomena) மீது பாய்ச்சியது போலத்தான்.

நான் தெளிவாக சொல்லிக் கொள்வது என்னவென்றால் மசூதியோ அல்லது கட்டிடமோஅது அனுமதி இல்லாமல், அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இடிக்கப் பட்டது இராமரின் கொள்கைகளுக்கு எதிரானது, இராமர் இருந்திருந்தால் அதில் மிக்க மன வருத்தம் அடைந்து இருப்பார் என்பதுதான்.

கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான்.

அதற்குப் பதிலாக ஒரு தோளில் சீதையையும், மறு தோளில் இராவணன் மனைவி மண்டோதரியையும் தூக்கி வரவில்லை. இராமனின் கொள்கை என்ன வென்று அனுமனுக்கு நன்றாகத் தெரியும்.

போரிலே ஆயுதம் இழந்த நிலையில் இராவணன் நின்றபோது கூட “இன்று போய் நாளை வா” என்று சொன்னவர் இராமன் .

தன்னை துன்புறுத்திய அரக்கிகளை கூட ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னாவர் சீதை அவர்கள்.

அப்படிப் பட்டவர்களின் பேரால் அப்பாவிகளின் மனதில் அச்சத்தை உண்டு பண்ணுவது சரியான இந்து மதம் அல்ல என்று நான் சொல்கிறேன். அது இந்து மதத்திற்கு விரோதமானது என்பதை நான் சொல்லுகிறேன்.

நான் இன்னும் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இப்போது இராமரே அயோத்தியை ஆண்டு கொண்டு இருந்தால், தீர்ப்பு வரும் முன்னே அந்த மசூதி இடிக்கப்படும் போல ஒரு நிலை உருவாவதை இராமர் அறிந்தால், தான் ஒருவராக தனியே நின்று அந்த மசூதியை சுற்றிலும் தன்னுடைய அஸ்திரங்களை மழை போல பொழிந்து, அந்த மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார் என்பதுதான்.

இன்னும் தெளிவாக சொன்னால், இன்றைய கால கட்டத்தில் இராமர் இருந்து, அவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், யாரவது ஒருவர் அவரிடம் இந்த மசூதி அல்லது அமைப்பை காத்து கொடுங்கள் என்று கோரினால், யார் மீதும் அம்பு பட்டு விடாமல் இலாகவமாக அஸ்திர மழை பொழிந்து, சுற்றிலும் அரணாக அமைத்துக் கொடுத்து இருப்பார். அவர் தான் இராமர். அவருக்கு கோவில் கட்டப் போகு முன் அவரைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள்.

கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு , அந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகள் இடித்தால் அதில் யாருமே ஆட்செபிக்கவோ, மன வருத்தம் அடையவோ, அச்சப் படவோ எதுவும் இல்லை. அரசாங்கம் அவ்வப் போது பல வழிபாட்டு தளங்களை, பொது இடங்களில் இருந்து அகற்றி வருகிறது.

 

இதில் என்ன தவறு இருக்கிறது நண்பர்களே, எனக்கு இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. காந்தி இப்போது இருந்தால் இப்போதும் உண்மையே பேசுவார், இக்காலத்திலும் தன வாரிசுகளைப் பதவியில் வைக்க மாட்டார் என்று எழுதினால் தவறா நண்பர்களே?
கொள்கையை எடுத்து விளக்கினால் கோவம் வருகிறது.
(தொடரும்)

 

 

Advertisements

13 Responses to "இராமர் இன்று இருந்திருந்தால்…………!"

திரு திருச்சிக்காரர் அவர்களே,

///அப்படிப் பட்டவர்களின் பேரால் அப்பாவிகளின் மனதில் அச்சத்தை உண்டு பண்ணுவது சரியான இந்து மதம் அல்ல என்று நான் சொல்கிறேன். அது இந்து மதத்திற்கு விரோதமானது என்பதை நான் சொல்லுகிறேன்.///

மிகச் சரியான வாக்கியம் சார்,

///எனவே பொறுமையாக இல்லாமல் அடாவடியாக இடித்தது தவறு என்று எழுதினோம்.///

இந்தப் பாபர் கட்டிடம்/மசூதி இடிப்பு மிகத் தவறு.ஆனால் அந்த வரலாற்றுத் தவறினால் இப்பொழுது இப்படி ஒரு நல்ல வழி பிறந்துள்ளது.ஆனால் இந்த நல்ல வழி பிறந்து விட்டதால் அந்தத் தவறை நியாயமாக்க நம் இந்து சகோதரர்கள் முயல்கிறார்கள்.

///ஆனால் இந்த தீர்ப்பு வரும் வரை காத்து இருந்து, அரசாங்கமே நிலத்தைப் பிரித்துக் கொடுத்து , கோவிலுக்காக ஒதுக்கப் பட்ட இடத்தில் உள்ள பாப்ரி கட்டிட பகுதிகளை அகற்றி கொடுத்து இருந்தால், ///

சார்,வரலாற்றில் இடம்பெற்ற பாபர் கட்டிடப்பகுதிகளை அகற்றும் தைரியம் இப்பொழுதுள்ள எந்த அரசாங்கத்திற்கும் இருக்கிறதா? என்பது கேள்விக்குரியதே.

நன்றி தனபால் சார்,

பிராக்டிகலாக யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.

இன்றைக்கு இந்து மதத்தின் உயிர் நாடியாக இருப்பது கோவில்களே. கோவில்கள், அவற்றுக்கு அருகில் உள்ள குளம் என இயற்கையும், தெய்வீகமும் கலந்த சூழ்நிலை மக்களின் மனதில் நம்பிக்கையை (hope), அமைதியை உண்டு பண்ணுகின்றன.

எனவே இந்து மதத்திற்கு கோவில்கள் முக்கியமே. அதே நேரம் கொள்கையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கஜினி தொடங்கி அவரங்க சீப் காலம் வரை பல கோவில்கள் கொள்ளை அடிக்கப் பட்டும், சீரழிக்கப் பட்டும் உள்ளன (அதற்காக நாம் இன்றைய இஸ்லாமிய சகோதரர்களை குறை சொல்லவில்லை). ஆனால் அந்தக் கால கட்டத்தில் கூட இந்து மதம் அழியவில்லை. முன்பு பாரசீகமாக இருந்த இப்போதைய இரான் தன்னுடைய ஆதி மதமான சொராஸ்டிரிய மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாற வைக்கப் பட்டது . ஆனால் இந்தியா பல அடக்குமுறைகளையும் சமாளித்து தன்னுடைய ஆன்மீகத்தையும் விட்டுக் கொடுக்காமல் உள்ளது.

நீங்கள் சொல்வது போல அரசு நீதி மன்ற உத்தரவை கிடப்பில் போட்டிருப்பதற்க்கான வாய்ப்பே அதிகம். ஆனாலும் நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த சொல்லி உண்ணா விரதம் மேற்கொள்ளும் முறையும் உள்ளது. நாட்டிலே ஒரே நேரத்திலே கோடிக் கணக்கானவர் உண்ணா விரதம் இருந்தால், அதுவும் நீதி மன்ற தீர்ப்பை அமுல் படுத்த சொல்லி அரசே சட்டப் படி நட, அரசே நீதி மன்ற தீர்ப்பை புறக்கணிக்காதே என்று சொல்லி காந்தீய முறையில் உண்ணா விரதம் இருந்திருந்தால் எந்த அரசாங்கமாக இருந்தாலும் என்ன செய்து இருக்க முடியும்?

அங்கு கட்டிடம் இருந்ததற்கான ஆதாரம் தான் இருக்கிறதே தவிர கோவில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இருபதாக கண்டறியப்படவில்லை. காவி கும்பல் தாஜ் மகால கூட கொவில இடித்து கட்டப்பட்டது என்றுதான் சொல்கிறது. காவிகளுக்கு தேவை கலவரம் உண்டாக்குவது அது வரை அதுங்க ஓயாதுங்க.

அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட தூண்கள் கோவிலின் தூண் வடிவமைப்பில் உள்ளன. அபிசேக நீர் வழிந்தோடும் அமைப்புகள் கூட இருந்ததாக கண்டறிந்துள்ளனர்.

தமிழ் நாட்டில் பல நண்பர்கள் இதை எல்லாம் பற்றி சிந்திக்காமல் கோர்ட் தீர்ப்பை விமரிசிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் அதை விமரிசிக்கினறனர்.

நமக்கு தமிழ் நாடு, தமிழ் நாட்டில் நிலவி வரும் சூழல் பற்றி வேண்டுமானால் தெரியும். பல நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் தமிழ் நாட்டில் எப்படிப் பட்ட நிகழ்வுகள் நடை பெற்று இருக்க கூடும் என்று வேண்டுமானால் ஓரளவு – அதுவும் ஓரளவுதான்- நம்மால யூகிக்க முடியும்.

அந்த இடம் ராம பிறந்த இடம் எனவும், அந்த இடத்தில் ராமருக்கு கோவில் இருந்ததாகவும், சிதிலமடைந்த கோவிலின் மீது பாப்ரி மசூதி அல்லது பாப்ரி ஸ்ட்ரக்சர் கட்டப் பட்டதாகவும் தலை முறை, தலைமுறையாக அயோத்தி பகுதியில் வசிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மக்களால் பேசப் பட்டு வந்திருக்கிறது.

கோவில் இடிக்கப்பட்டு அதன் மேலே மஸ்ஜித் கட்டப் பட்டது என்பது என்பது உண்மையா என்று இருக்கிறது, அயோத்திப் பகுதியிலே பல நூற்றாண்டுகளாக வசித்து வரும் இந்து மற்றும் இஸ்லாமிய குடும்பத்தவருக்கு தெரியும். அதாவது அவர்கள் பெற்றோர், மூதாதையர் உண்மையில் நடந்ததை தங்கள் வமசத்தினருக்கு சொல்லியிருக்க கூடும்.

அயோத்தி நகரில் வசிக்கும் இஸ்லாமிய மற்றும் இந்து சமூகத்தினர் தங்களுக்குள்ளே இந்தப் பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டு இருக்கலாம்.

இந்த சர்ச்சைக்குரிய மசூதி அல்லது அமைப்பு இருந்த இடம் முன்பு கோவிலாக இருந்தது, இராமர் கோவிலாக இருந்தது என்று அயோத்தியை சேர்ந்த சிலர் நூறு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

நமது மாமன் மச்சான் உறவினர்கள் எல்லாம் அயோத்தி பகுதியில் ஆயிரக் கணக்கான வருடங்கள் வசித்து வந்தது போலவும், அவர்கள நம்மிடம் பிரச்சினை என்ன என்று பிட்டு பிட்டு வைத்தது போலவும் பிரச்சினையின் பரிமாணங்களை அறிந்தது போலவும் சும்மா, கயிறு திரித்து எழுதுவது நகைச்சுவை புனைவாகவே கருதப் படக் கூடும்

கோர்ட் நன்கு ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ஆதாரங்களை ஆராய்ச்சிகளை கவனத்தில் கொள்ளாமல் இரண்டு பிரிவினருக்கும் இடையில் இன்னும் அதிக மோதலை உருவாக்கி வேடிக்கை பார்க்க வேண்டாம். நமக்கு இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்புணர்ச்சியையும் காட்டாது போல ஆயிற்று, அவங்களுக்கு இடையிலே இன்னும் அதிகமாக மூட்டி விட்டது போலவும் ஆயிற்று என்று அடுத்தவர் தோட்டத்து மாமரத்தில் ஒரே கல்லில் பல காய்களையும் அடித்து அவன் மண்டையையும் உடைத்து போல ஆயிற்று என்கிற ரீதியில் செயல் பட வேண்டுமா?

இராமர் கோவில் விவகாரத்தை தங்களின் அரசியல், பொருளாதார ஆதாயத்திற்காக பலர் உபயோகப் படுத்திக் கொண்டதைப் பற்றிய கட்டுரைகள் நமது தளத்தில் வெளியாகும்.

//////அங்கு கட்டிடம் இருந்ததற்கான ஆதாரம் தான் இருக்கிறதே தவிர கோவில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இருபதாக கண்டறியப்படவில்லை. காவி கும்பல் தாஜ் மகால கூட கொவில இடித்து கட்டப்பட்டது என்றுதான் சொல்கிறது. காவிகளுக்கு தேவை கலவரம் உண்டாக்குவது அது வரை அதுங்க ஓயாதுங்க.///////

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=103771

ஏதோ வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசகூடாது, அங்கே கோவில் இருந்ததை ஒப்புக்கொண்டுதான் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அது பற்றிய அடுத்த கட்ட விவாதத்துக்கான பதிலாக இந்த கட்டுரை தினமலரில் வெளியிடப்பட்டுள்ளது,

உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கலவரம் உண்டாக்குகிறார்கள் என்று எல்லாம் கூறகூடது. நீங்கள் பேசுவதுதான் கலவரம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் பேசுவது போல உள்ளது.
எல்லோரும் ஒத்துக்கொண்டு அதனை தாண்டி வேறு விசயத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் போது கலவரத்தை ஆரம்பிக்கும் முகமாகவே உங்களின் வார்த்தைகள் தெரிகிறது.

கோவில்கள் அழியும் வரை கலவரம் உண்டு பண்ண நினைக்கும் நீங்கள் தான் (edited) ஓயமாட்டீர்கள் போல உள்ளது.

ஏய் யப்பா ரொம்ப டென்ஷன் ஆவரிங்க போல.. மக்கள் பேசி கொண்டார்களாம் அங்கு கோவில் இருந்தது என்று. உடனே நீதி மன்றம் தீர்ப்பு சொல்லிட்டாம். காவி கும்பலோட அடுத்த வேல என்னான்னு தெரியுமா..அட உங்களுக்கு தெரியாததா.. நான் அத சொன்னா திசை திருப்புவீர்கள். அதனால் காத்திருங்கள்.

மக்கள் பேசிக் கொள்வதை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கவில்லை. அகழ்வாராய்ச்சியையில் கிடைத்த சான்றுகள் உள்ளன. நிலத்தை வாங்கியதற்கான ரசீது போன்ற ஆவணங்கள் எதையும் வக்பு வாரியம் கொடுத்தாக இல்லை.

இவ்வளவும் உள்ள போதும், உங்களைப் போன்றவர்கள் இந்துக்களின் பக்கம் நியாயம் இருந்தாலும் அதைப் பார்க்க மறுக்கிறீர்கள. இதனாலதான் இந்துக்களில் கணிசமானவர்கள், தங்களைப் பார்த்து மற்றவர்கள் போங்கடா என்று போங்கு அடிக்கிறார்கள் என்று எண்ணி பரிவாரங்களின் பக்கம் சாய்கிறார்கள். நீங்கள் காவிக் கும்பல் என்று அழைக்கும் பிரிவினர் இன்னும் அதிக செல்வாக்கும் , வலிமையும் , வெற்றியும் பெறக் காரணம் உங்களைப் போன்றவர்கள் சாதாரண இந்துக்களின் நியாத்தைப் பார்க்க மறுத்து, இந்து மதத்தின் மீது காரணம் இல்லாமல் வெறுப்புணர்ச்சி காட்டுவதால்தான்.

////ஏய் யப்பா ரொம்ப டென்ஷன் ஆவரிங்க போல////

நான் ஒன்றும் டென்சன் எல்லாம் ஆகலை, என்னுடைய ஒரு வார்த்தை தணிக்கை செய்யப்பட்டது, உங்களுக்கு நான் டென்சன் ஆனது போல தெரிகிறது. நான் ஒன்றும் தவறான வார்த்தை எல்லாம் உபயோகிக்க வில்லை, நான் உங்கள் இயக்க கொடியினுடைய வண்ணத்தைதான் குறிப்பிட்டு இருந்தேன். நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். யாரையும் தாக்கி டெண்சனால் தவறாக எழுதியது கிடையாது. என்னை பற்றிய புரிதல் சரியாக இருக்கவேண்டும் என்பதற்குதான் இவ்வளவு விளக்கமும். இது வெறும் கருத்து விவாதம் யாரையும் புண்பட நான் எழுதியதும் இல்லை எழுதபோவதும் இல்லை. கருத்துக்கு பதில் கருத்து மட்டுமே என் வழக்கம்.

//////அட உங்களுக்கு தெரியாததா/////

சத்தியமாக எனக்கு தெரியாது சகோதரரே, நான் ஒரு சராசரி இந்து.
உங்களளவு கூட நான் எந்த இந்து இயக்கத்தினுடைய கொள்கைகளும் அறியாதவன். சகோ திருச்சி சொல்வது போல எம் பக்கம் நியாயம் இருந்தும் உங்களுக்கு கண்கள் மறைக்கப்பட காரணம் என்ன?

இந்து மதத்தின் மீது காரணம் இல்லாமல் வெறுப்புணர்ச்சி காட்டுவதால்தான். உங்கள் நடுநிலைமை தவறி பேசுகிறீர்கள்.

மக்கள் பேசுவதை வைத்து தீர்ப்பு வழங்க அவர்கள் என்ன வட்ட செயலரா? தொல்லியல் துறையின் ஆய்வுமுடிவுகள் அடிப்படையில் கொடுத்த தீர்ப்பு.

சகோ திருச்சி,
நான் அப்படி என்ன தணிக்கை செய்து விடும் அளவு எழுதிவிட்டேன், அவர் ஒரு வண்ணத்தை குறிப்பிட்டார், நானும் ஒரு வண்ணத்தை குறிப்பிட்டேன். அவரை மட்டும் அனுமதிக்கும் நீங்கள் என் வார்த்தையை ஏன் தணிக்கை செய்தீர்கள்.நான் ஏதோ தவறாக எழுதியது போல பிறர் நினைக்கும் நிலை ஆகிவிட்டது.

அன்புக்குரிய நண்பர் சதீஷ் அவர்களே,

நீங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதுங்கள். கருப்பு என்று மட்டும் எழுதினால் அது திராவிடர் கழகத்தவரை குறிப்பதாகவும் அமையலாம். அல்லது ஒரு பைபிளின் அட்டையின் வண்ணத்தை குறிப்பிடும் வகையிலும் இருக்கலாம். நீங்கள் குறிப்பிடுவது பைபிளை குறிப்பிடுவதாக கருதப் படக் கூடும். எனவே நீங்கள் திராவிடர் கழக சட்டையைக் குறிப்பிடுவதானால் தெளிவாகக் குறிப்பிட்டால் அதை வெளியிடுவதில் நமக்கு வருத்தமில்லை.

மேலும் காவி கும்பல் என்று குறிப்பிடுவது பரிவார இயக்கங்களை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஆனால் கருப்பு என்றால் அது திராவிடர் கழகத்தினர் என்று புரிதல் செய்யக் கூடிய அளவுக்கு திராவிடர் கழகத்தினர் இன்றைக்கு ஆக்டிவாக இல்லை என்று நான் கருதுகிறேம்.

உலகில் எந்த இடத்தை தோண்டி பார்த்தாலும் அங்கு ஏதோ ஒரு கட்டிடம் உள்ளே இருப்பது ஆச்சரியம் அல்ல. அதே போல் அங்கு பாபர் இடித்ததாக சொல்லபடும் ராமர் கோவில் என்று அந்த அகழ்வாரைச்சியில் சொல்லப்படவில்லை. பாபர் இடிததர்க்கான ஆதாரமும் இல்லை. உண்மையை நாம் சொன்னால் திசைதிருப்புவதே தொழிலாகிவிட்டது இந்த கும்பலுக்கு.

சரி பாபர் இடித்த இராமர் கோவிலோ, அல்லது இடிக்காத கோவிலோ, அல்லது வேறு கோவிலோ, மொத்தத்திலே அந்த இடத்திலே கோவில் இருந்திருக்கிறது. அந்த கோவில் இருந்த நிலத்தை கோவில் உரிமையலார் அல்லது நிர்வாகத்தினரிடம் இருந்து வாங்கியதற்கான ஆதாரம் வக்பு போர்டிடம் இல்லை. எனவே அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப் பட்ட தாகவே கருத முடியும். கோவில் இருந்த நிலத்தை இந்துக்களிடம் கொடுங்கள் அவர்களுக்கு எந்தக் கோவில் கட்டிக் கொள்ள வேண்டுமோ அப்படிக் கட்டிக் கொள்வார்கள. அயோத்திப் பகுதியில் இருந்தவர்களுக்கு அவர்கள் அப்பன் பாட்டன் வாழையடி வாழையாக சொல்லி இருப்பார்கள. இங்கே கொட்டாம் பட்டியிலே சைக்கிள் டயர் வைத்து விளையாடிக் கொண்டிரிந்த என்னைப் போன்றவர்களை விட அயோத்திப் பகுதி மக்களுக்கு அங்கே முன்பு என்ன கோவில் இருந்தது என்று நன்றாகத் தெரியும். திருச்சி மலைக் கோட்டையில் உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது. அந்தக் கோவில் சிதிலம் அடைந்து இருந்தாலும் அந்த மலை உச்சிக்கு முன்னால எல்லோரும் விநாயகர் சாமி கும்பிடப் போவார்கள் என்று சொல்லி இருப்பார்கள.

உலகில் எந்த இடத்தை தோண்டிப் பார்த்தாலும் கட்டிடம் இருக்கும் என்றால் உலகிலே மக்கள வசிக்காத எத்தனையோ இடங்கள் உள்ளன. இந்தியாவில் கூட மக்கள் இது வரை கட்டிடம் கட்டாத எத்தனையோ நிலம் உள்ளதே. ஆனால் இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்யக் காரணம், இந்த இடம் சர்ச்சைக்குரியது என்பதால் தான். எத்தனயோ மசூதிகள் உள்ளன. இந்த பாப்ரி அமைப்பை விட புகழ் வாய்ந்த மசூதிகள் இந்தியாவில் பல உள்ளன.

ஆனால் இந்த இடம் பல நூறு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அயோத்தி பகுதி இந்துக்கள் அந்த இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளனர். பாபர் இடித்தாரா என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது . கோவில் சிதிலங்களின் மீது மசூதி கட்டப் பாட்டு உள்ளது என்பதி மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

இதை எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் அதை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் மத நல்லிணக்கத்துக்கு எதிரான மத வெறி கருத்துக்களுக்கு மறைமுக வக்காலத்து வாங்குவது தளத்தைப் பார்வை இடும் அனைவரும் அறிந்ததே.

இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தப் பிரச்சினையை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வரக் கூடாது என்பதில் பலர் முனைப்பு காட்டுவது மக்கள அறிந்ததே.

அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!
http://www.vinavu.com/2010/10/11/ayodhya-cartoons/

///// ராமர் கோவில் என்று அந்த அகழ்வாரைச்சியில் சொல்லப்படவில்லை. ////

அனால் கோவில் இருந்தது என்று ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை குறிப்பிடுகிறது.
///உலகில் எந்த இடத்தை தோண்டி பார்த்தாலும் அங்கு ஏதோ ஒரு கட்டிடம் உள்ளே இருப்பது ஆச்சரியம் அல்ல. /////

அதில் கொஞ்சம் இயற்கையவும்,கொஞ்சம் இயற்கை சீற்றத்தாலும் இடிந்திருக்கும். அனால் பாதிக்கு மேல் பாபர் போன்ற மத வெறியகளல்தான் இடிக்கப்பட்டிருக்கும்.

///பாபர் இடிததர்க்கான ஆதாரமும் இல்லை///

கொலை செய்தவன் சாட்சி எங்கே என்று கேட்பது போல இருக்கிறது.

பாபர் இடித்த கோவில்களின் எண்ணிக்கையும், கொன்று குவித்த இந்துக்களின் எண்ணிக்கையும் வரலாற்றில் ரத்தகரையாக இருப்பது தெரிந்து இருந்தும், அவருக்கு சப்பை கட்டு கட்டும் உங்கள் கூட்டத்தை என்ன சொல்வது?

////உண்மையை நாம் சொன்னால் திசைதிருப்புவதே தொழிலாகிவிட்டது இந்த கும்பலுக்கு./////

நீங்கள் சொல்வது உண்மை தான் என்று ஆகிவிடாது.இங்கே பார்வை இடும் நண்பர்களுக்கு தெரியும் யார் திசை திருப்புகிறார்கள் என்று

இது போல யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கார்டூன் போடலாம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: