Thiruchchikkaaran's Blog

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!

Posted on: October 7, 2010


 

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!

  இராமன் இந்தியாவின் உதாரண புருஷன். இராமனின் கொள்கைகள்   இந்திய சமூகத்தின் அடிப்படையாக இருக்கின்றன.

 இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ இராமனின் கொள்கைகளால் உந்தப்பட்ட குண நலன்களை உடையவராக இருக்கின்றனர்.

சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளில் சொல்வது என்றால்,

 “இராமர் வீர காலத்தின் இலட்சிய புருஷர்,

சத்தியம் மற்றும் ஒழுக்கத்தின் திரண்ட வடிவம்,

 லட்சிய மகன்,

லட்சியக் கணவன்,

லட்சியத் தந்தை,

இவைகளுக்கு மேலாக லட்சிய அரசன்!”.

   File:Burmese Ramayana dance.jpg

பதவி என்பது தோளிலே போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டக் கூடிய வேட்டி போன்றது என்கிற கொள்கையை செய்து காட்டியவர் இராமர்.

தனக்கு என எதையும் அவர் கோரவில்லை.

வெல்லும் வலிமை இருந்தும் , விட்டுக் கொடுத்து தியாகம் செய்த அவரின் கொள்கையும் , செயல்  பாடும் உலகில் அமைதியையும், மக்களின் மனதில் அன்பையும் உருவாக்கும் தன்மை உடையனவாக உள்ளன.

உலகின் மிகப் பழமையான இலக்கியமாக இராமனின் வாழ்க்கை காவியம் உள்ளது. .

இந்தியாவில் மட்டும் அல்லாமல் தாய்லாந்து, பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் இராமரின் வாழ்க்கையானது இசையாக, நாடகமாக சொல்லப் பட்டு வருகிறது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில்  இராமரின் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகள் இராமரின் பெயராலே  பரப்பப் பட்டும் ,  செயல் படுத்தப் பட்டும்  பட்டும் வருகின்றன.
எனவே இராமரின் சரியான் கொள்கைகளை எடுத்து சொல்ல வேண்டியது நம்முடைய கடமை ஆகிறது.  இராமரின் கொள்கைகளை விளக்கும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்திலே  வெளியாகும்.
Advertisements

30 Responses to "ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்!"

இன்று மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இதைக் குறித்து நான் ஏற்று சேவிக்கும் குருபஹ‌வான் ஆன மகாபிரபுவான இயேசுவானவர் கூறுவதென்ன என்று ஆராய்ந்தேன்; பின்வரும் வேதப்பகுதியில் அதைக் குறித்து சில காரியங்கள் கிடைத்தது; அந்த வேதப்பகுதியை வாசித்தபிறகு எனது கருத்தை முன்வைக்கிறேன்.

http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post.html

கிலாடி அவர்களே,

உங்களின் இந்தப் பதிவு இந்த அமாவாசை தர்ப்பணம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாததைக் காட்டுகிறது.

<em>///தர்ப்பணம் செய்வதின் மூலம் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய நல்வினை தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே மைய நோக்கமாக இருக்கிறது. ///</e

இப்படி எந்த வேதத்தில் எந்த சாஸ்திரத்தில் உள்ளது.? உங்களுக்கு அமாவசை தர்ப்பணத்தின் அர்த்தம் தெரியாவிட்டால் அது சம்பந்தமான புத்தகங்களைப் படியுங்கள், (மிகக் குறைவாக ஐந்து ரூபாய்க்குக் கூடக் கிடைக்கிறது).அல்லது சாஸ்திரங்கள கற்றவரை அணுகி கேட்டு விளக்கம் பெறுங்கள்.

தர்ப்பணம் செய்வதே முன்னோர்களின் நல்வினை,தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதர்க்கே என எந்த சாஸ்திரமும் கூறவில்லை.தர்ப்பணம் செய்வது இறந்தவருக்கு நாம் உணவையும், நீரையும், வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆன்ம சாந்திக்காகவும் செய்யப்படுவது , இதன் மூலம் இறந்தவர்கள் சந்தோசமடைவார்கள் என்பதே ஐதீகம்.

///குருபஹ‌வான் இதையே கண்டிக்கிறார்;///

முதலில் இந்த குருபஹ‌வான் என்ற வார்த்தைக்கு வருகிறேன்.இந்துக்கள் கடவுளை,பல உறவு முறைகளில் தந்தையாக, தாயாக, குருவாக, நண்பனாக, காதாலனாக வணங்குவதை விமர்சித்து இறைவனை தந்தையாக மட்டுமே பார்க்க வேண்டும் மற்ற உறவு முறைகளில் வணங்குவது பைபிளுக்கு எதிரானது என்று கிருஸ்தவ ஊழியர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.நீங்கள் இயேசுவை குருபஹ‌வான் என்று இந்துக்களின் தேவ- வேத மொழியான சமஸ்கிருதத்தில் அழைப்பது எனக்கு மகிழ்ச்சியே.அப்படி என்றால் இயேசுவை குருவாக வணங்கத்துவங்கிவிடீர்களா? குருபஹ‌வான் என்றால் சிவனின் அம்சமான, வியாழன் கிரகத்திற்கு அதிபதியான, தக்ஷிணாமூர்த்தி ஆகும்.நீங்கள் தக்ஷிணாமூர்த்திக்கு இயேசுவை இணைவைப்பதாகக் கருதலாமா? அப்படி என்றால் சிவனின் பல அம்சங்களில் ஒன்றாக இயேசு கிருஸ்துவை கருதுகிறீர்களா???

///நீ உன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அதற்கு இணையாக வேறு ஏதோ ஒரு சடங்கை செய்துகொண்டிருக்கிறாய் என்கிறார்;ஏனெனில் பெற்றோரை கனம்பண்ணுவது பத்து கட்டளைகளில் பிரதானமானதாம்;///
பைபிள் பெற்றோரை கணம் பண்ணத்தான் சொல்கிறது. ஆனால் இந்து மதமோ கடவுளுக்கு இணையாகவே தாய் தந்தையரை வைத்து போற்றி பணிவிடை செய்யச் சொல்கிறது. பெற்றோரையும்,விருந்தினர்களையும், கடவுளாகவே பாவித்து பணிவிடை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.உலகில் எந்த மதமாவது பெற்றோரை கடவுளுக்கு ஒப்பாக கூறியதுண்டா??? பெற்றோரை வணங்கி அவர்களுக்கு பணிவிடை செய்பவனுக்கு எந்தக் கடவுளையும் வணங்காமலேயே மோட்சம் கிடைக்கும் என்று இந்து மதம் கூறுகிறது.அதனால் அவன் பெற்றோர் இருக்கும் போதும் பணிவிடை செய்யச் சொல்கிறது ,இறந்த பின்னும் அவர்களுக்காக சடங்குகளைச் செய்யச் சொல்கிறது.

///அமாவாசை இருளில் முணுமுணுவென்று எதையோ ஓதாமல் வெளிச்சத்துக்கு வர ப்ரஜாபதி அன்புடன் அழைக்கிறார்.///
இந்தப் ப்ரஜாபதி என்பவர் யார்??? இயேசு கிறிஸ்துவா? கர்த்தரா? கூறுங்கள். இந்தப் ப்ரஜாபதிக்கு மனைவிகள், மற்றும் பல குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா??? முதலில் இந்தப் பிரஜாபதி பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கூறுங்கள். பிறகு விவாதிக்கலாம்.

கிலாடி அவர்களே,

பிரம்ம தேவனிடமிருந்து முதலில் தோன்றிய ரிஷிகளே, ப்ரஜாபதிகள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரம்ம தேவனிடமிருந்து ஆதியில் 9 ப்ரஜாபதிகள் (ரிஷிகள் ) தோற்றுவிக்கப்பட்டார்கள்.

ஆம் பிரஜாபதி ஒருவரல்ல!!!ஒன்பது பேர்!!!.அவர்கள் நவ ப்ரஜாபதிகள் என்றழைக்கப்பட்டார்கள்.அவர்கள் பிரம்மனிடமிருந்து தோன்றியதால் பிரம்ம புத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் ப்ருகு, புலஸ்தியர், புலஹர், க்ரது, அங்கிரஸ், மரிஷி, தக்ஷன், அத்ரி, வஷிஸ்டர் இவர்களே அந்த ஒன்பது ப்ரஜாபதிகள்.

அந்த 9 ப்ரஜாபதிகளுக்கும் ஒவ்வொரு மனைவிமார்கள் உண்டு.அவர்கள் க்யாதி, பூதி, சம்பூதி, க்ஷமா, ப்ரீதி, ஷன்நதி, ஊர்ஜா, அனசுயா, ப்ரஹூதி என்பவர்களாவர்.

நீங்கள் கூறும் பிரஜாபதி யார்? என்று கூறுங்கள்.அவரின் மனைவியின் பெயரையும் அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கையையும், பெயர்களையும் கூறுகிறேன்.

///அந்த 9 ப்ரஜாபதிகளுக்கும் ஒவ்வொரு மனைவிமார்கள் உண்டு.///

தொடர்ந்து இந்த ப்ரஜாபதியைப் பற்றி தகவல்களைப் படிக்கும் பொது, சில ப்ரஜாபதிகளுக்கு பல மனைவிகள் இருப்பது தெரிய வருகிறது.

///பிரம்ம தேவனிடமிருந்து முதலில் தோன்றிய ரிஷிகளே, ப்ரஜாபதிகள் என்றழைக்கப்படுகிறார்கள். பிரம்ம தேவனிடமிருந்து ஆதியில் 9 ப்ரஜாபதிகள் (ரிஷிகள் ) தோற்றுவிக்கப்பட்டார்கள்.////
dear dhanapal sir,
thanks for explanation about prajabathi. so they are claiming that their guru or god is equal to one of our 9 rishis but not comparable with even our bramah,so parabramam is for away from their god.
my kind request to you my dear dhanapal sir,and thiruchi sir,
why dont you write briefly about, what is vedhas and puranas and upanisadhs and parabramam.

திரு சதீஷ் அவர்களே,

நான் ப்ரஜாபதியைப் பற்றிக் மேலே கூறியவை விஸ்ணு புராணத்தில் வருபவை.ப்ரஜாபதியைப் பற்றி யஜூர் வேத தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டவை இங்கே,

இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம்.நல்ல, வாலிப மிடுக்கு உடைய, அறிவாளியான, சுயக்கட்டுப்பாடுடைய, மன உறுதிகொண்ட, பலசாலியான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்வோம்.அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவிதமான செல்வங்களாலும் நிறைந்த, இந்த பூமி உரியதாக வைத்துக்கொள்வோம்.அந்த இளைஞன் பெரும் இன்பம் ஒரு மனித இன்பம்.அத்தகைய நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் ஒரு மனித -கந்தர்வ இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான். _யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .1.

நூறு மனித -கந்தர்வ இன்பங்கள் சேர்ந்தால் ஒரு தேவ – கந்தர்வ இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான். _யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .2.

இப்படியாக இன்பங்களை அளவிடும் போது…..

“நூறு பிரஜாபதி இன்பங்கள் ஒரு பிரம்ம இன்பம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.”_யஜூர் வேதம், தைத்திரீய உபநிஷத்_சுலோகம்: 2 :9 .10 .

இதிலிருந்து பிரம்மன் என்னும் படைப்புக் கடவுள் 100 பிரஜாபதிக்குச் சமம், என்பது நம் வேத – உபநிஷத்துகளிலிருந்து மிகத் தெளிவாகிறது.

சில கிருஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிருஸ்துவை பிரஜாபதி என்று அழைக்கிறார்கள்.அதாவது பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்ட, பிரம்மாவின் நூறில் ஒருபங்காகிய, மனைவி, மற்றும் குழந்தைகள் கொண்ட , பிரஜாபதியான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று இதற்குப் பொருள் படுகிறது.அதனால் அவர்கள் கர்த்தரையோ, இயேசு கிருஸ்துவையோ பிரஜாபதி என்று அழைத்தால் அழைத்துக்கொள்ளட்டும்.ஆனால் இதை பைபிள் அனுமதிக்கிறதா??? கர்த்தராகிய இயேசு கிருஸ்துவை பிரஜாபதி என்று அழைக்க பைபிளில் கூறியிருக்கிறதா???

இது தான் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைப்பது என்பதா? இந்த சூனியம் வைத்தவர் சாது செல்லப்பா.அவராவது பதிலளிப்பாரா?

superb, thanks a lot sir.

அவர்கள் அவர்களின் கடவுளை சரியாக மதிப்பிட்டுதான் நம் ப்ரஜபதியுடன் ஒப்பிட்டுள்ளர்கள்.அவரின் நிலை அவ்வளவு தான்.

எனக்கு நேர்ந்த சம்பவம் இது, அப்போது நான் கோவையில் இருந்தேன்.
1998 -1999 ல் ஒரு ஆங்கிலோ இந்தியன் டீச்சர் இடம் ஸ்போகேன் இங்கிலீஷ் கிளாஸ் போனேன்,82 வயதான அந்த பெண்மணி நன்றாக சொல்லி கொடுப்பார்கள். அப்போது அவர்கள் என்னிடம் உங்கள் வேதத்தில் பிரஜாபதி என்று எழுதி இருக்கிறது அதுதான் ஜீசஸ்,உங்கள் வேதத்திலேயே இருக்கிறது என்று சொன்னார்கள். எனக்கு அப்போது எதுவும் தெரியாது சரி இருக்கட்டும் என்றேன். மேலும் அவர்கள் ஜீசஸ் தான் ப்ரைம் மினிஸ்டர் நம் கடவுள் எல்லாம் காபினெட் மினிஸ்டர் தான் என்றும் அதனால் அவர்களுடன் வந்து கேரளாவில் உள்ள முருக்கங்குடி வந்து கிறித்துவராக சேரும்படியும் கூறினார்கள். அன்றோடு நிறுத்தி கொண்டேன் என் டியூஷன் ஐ.
பத்து வருடம் கழித்து இப்போது உங்களிடம் விளக்கம் பெற்றுள்ளேன் மிக்க மகிழ்ச்சி,
என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு.

திரு சதீஷ் அவர்களே,

உங்கள் அன்புக்கும், நன்றிக்கும் மிக்க நன்றி சார்,

உங்களைப் போல் தான், 1996 இல் எனக்கும் இதே அனுபவம் ஏற்ப்பட்டது.என்னிடம் அப்பொழுது தான் மதம் மாறிய கிருஸ்தவ நண்பர் ஒரு சிறிய கையடக்க புத்தகத்தைக் கொடுத்தார்.அதன் பெயர் அர்த்தமுள்ள இந்துமதம் என்று இருந்தது.உள்ளே பார்த்தால் இந்த பிரஜாபதி, என்றால் இயேசு தான் என்றெல்லாம் இருந்தது.நான் அப்பொழுது தான் விவேகானந்தரின் சிறிய கையடக்க அளவிலான புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருந்தேன்.அதனால் என்னை,எவ்வளவோ முயன்றும் அவரால் மதம் மாற்ற முடியவில்லை.

இதெல்லாம் அவர்களின் மத மாற்ற தந்திரங்கள்.இந்தத் தந்திரங்கள் நூறு௦௦ ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.அது தான் பிரபலமான ஆரிய திராவிடக் கட்டுக்கதை.மேலும், தாமஸ் என்பவர் தமிழகம் வந்தார் என்பதும், பிராமணரால் கொல்லப்பட்டார் என்பதும்,,திருக்குறள் இயேசுவை பற்றியே கூறுகிறது என்பதும்,அகத்தியர் கூட யேசுவையையே வணங்கச் சொல்கிறார் என்பதும் அவர்கள் கட்டுக் கதையின் தொடர்ச்சிகள்.இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ, தெரியவில்லை.ஏன் இந்த நரித்தந்திரங்கள்?.அகத்தியர் இயேசுவை வழிபட சொல்கிறார் என்றால் ஏன் அவர் சிவனை ,சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்? இது போன்ற சிந்தனையே அவர்களுக்கு எழாதா?ஏன் இந்த ஏமாற்று வேலைகள்.?.அப்படி என்றால் இயேசுவை, பைபிளைக் காட்டி மதம் மாற்றம் செய்ய முடியாது என்று முடிவுகட்டிவிட்டார்களா? இந்த நரித்தந்திரங்களை செய்ய அவர்கள் வெட்கப்படுவதில்லை.எல்லாத்திற்கும் பைபிளை மேற்கோள் காட்டும் இவர்கள் ஏன் பைபிளில் இல்லாத இந்த பிரஜாபதி, பட்டத்தைச் சூட்டுகிறார்கள்.?

ஆனால் இந்த இணைய உலகில் அவர்களின் அனைத்து நரித்தனங்களும் அம்பலப்பத்தப்பட்டு வருகின்றன.மேலும் அம்பலப்படுத்தப் படும்.ராமர் பாலம் கட்ட அணில் உதவியதைப் போல ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்.

LUX சோப் கம்பெனிக்காரன் LUX சோப்பின் தரத்தைக் கூறி வியாரம் செய்வதை விட்டு விட்டு, REXONA சோப் கம்பெனிக்காரனும் LUX சோப்பைத்தான் வாங்கச் சொல்கிறார்கள் என்று நரித்தனமாக கூறி வியாபாரம் செய்வது நல்லாவா இருக்கிறது?

http://thomasmyth.wordpress.com/

இந்த வலை உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.
மேலும் தாமஸ் பற்றிய (கட்டு) கதைகளின் தொகுப்பு ஒன்று என்னிடம் இருந்தது.அதிலே தாமசின் புரட்டு கதைகளை விளக்கி உள்ளார்கள்.
வாட்டிகன் இந்த பொய் பரப்புரையை எற்பதில்லையாமே?

ரிசிகளில் ஒருவருக்கு இணையான கடவுள்,தட்டையான உலகம்,
இதயத்தால் சிந்தனை,அதிகார வெறி கொண்ட கடவுள், தன்னை வணங்கதவர்களை கடும் நரகில் தள்ளும் அன்பான கடவுள், அராபிய சிந்தனைகளையே வாழ்வியலாக கொண்ட நிலை, மதம் மாற்ற எதையும் செய்ய தாயாரான கீழான மனநிலை, மற்றவர் அனைவரையும் பாவிகளாக கருதும் மனப்பான்மை etc ,etc
இவர்கள் பாவம் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள். நிச்சயம் திருந்துவார்கள் என்று நம்புவோம்.
இன்னும் நிறைய எழுதுங்கள் சார் உங்களிடம் நிறைய கற்க விரும்புகிறேன்.
அன்புடன் சதீஷ்

அவர்களின் மதம் வெளிநாட்டு இறக்குமதி ஆகையினால் அவர்கள் இந்துமதமும் ஏதோ ஆரியர்கள் கண்டுபிடித்து இங்கே இருந்தவர்களுக்கு கற்று கொடுத்தது போலவும், ஆரியர்கள் என்ற ஒரு பிரிவினர் எங்கிருந்தோ இங்கே வந்தது போலவும் பொய்யான ஒரு கதையை அவர்கள் சரக்கு விற்கும் பொருட்டு ஏற்படுத்தி உள்ளனர்.அப்படியே இருந்தாலும் இங்கு இருந்தவர்களுக்கு ஆன்மிக உணர்வே இல்லையா? அல்லது இருந்த முறைகள் அழிக்க பட்டனவா?தக்க ஆதாரங்கள் ஏதும் உண்டா?
திருமூலர்,தொல்காப்பியர், சிவவாக்கியர், நந்தீசர்,அவ்வையார்,நக்கீரர் எல்லாம் என்ன ஆரியர்களா?
புறநானுறு, கலித்தொகை எல்லாம் ஆரிய நூல்களா?
முதல் தமிழ் சங்கத்தின் காலம் என்ன?

இவர்கள் சமஸ்கிருதத்தை எதிர்பதற்கு காரணம் யாருக்கும் சமஸ்கிருதம் தெரிந்துவிடகூடாது.அப்போதுதான் இவர்கள் தாங்களாகவே ஒரு தப்பான அர்த்தத்தையும் அதன் மூலம் மத அழிப்பும் செய்து அவர்கள் ஆன்ம அறுவடை செய்ய முடியும் என்பதற்காகதான். எல்லோரும் சமஸ்கிருதம் கற்றுவிட்டால் அவர்கள் தாங்களாகவே உண்மையான பொருளையும், இவர்கள் கூறும் அபத்த பொய்களையும் கண்டு பிடித்து விடுவார்களே என்பதற்குதான் இவர்கள் எல்லாம் எதிர்கிறார்கள்.
நான் கூட கொஞ்ச நாள் இந்த ஆரியர்கள் தியரியை நம்பிக்கொண்டு இருந்தேன்.

ஜெர்மனில் இருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றார்கள்.ஜெர்மன் காரனை நேரில் பார்த்தபின்பு தெரிந்தது அவனுடைய கண்,தோல், முடி, உணவு எல்லாமே இவர்கள் ஆரியர் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவைத்த இனத்திற்கு அப்படியே நேர் எதிர் என்பது தெரிந்தது.
இங்கு அவர்கள் வியாபாரம் செழிக்க என்னவெல்லாம் இன்னும் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.
சார் நீங்கள் இன்னும் விவரமாக எழுதுங்கள்

அன்புடன்
சதீஷ்

நேத்து ராத்திரி யம்மா..!
http://chillsam.wordpress.com/2010/10/10/hindu-festivals/

திரு CHILLSAM அவர்களே,

இதே போல் கிருஸ்தவர்களும் செய்வது உங்களுக்குத் தெரியவில்லையா? ஆமாம் உங்கள் தளத்தின் என் பின்னூட்டங்களுக்கு பதிலே இல்லையே ஏன்? உங்கள் தளத்திற்கு சுட்டி கொடுத்து விவாதிக்க அழைக்கிறீர்கள்.நானும் வந்து பின்னூட்டமிட்டால் ஒரு வரவேற்ப்பு கிடையாது,பதிலே கிடையாது.ஏன்?

திரு CHILLSAM அவர்களே

உங்களுக்கு , இந்து மதக் கடவுள்கள், இந்து மதம் மீது இவ்வளவு வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் ஏன்.?இவ்வளவு வெறுப்பும்,கோபமும் உங்கள் மனதில் இருக்கும் போது அங்கே எப்படி இந்த பிரம்ம புத்திரரான பிரஜாபதியாகிய கர்த்தர் இருக்கிறார் .?

////ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயப்படுத்துவது போல அதிகாலையிலிருந்து இரவு பத்து மணிக்கும் மேலாக ஊரை ஒலியினால் மாசுபடுத்தினர்;//////
பல நாட்கள் தினமும் மைக் செட் போட்டு அல்லேலுய அலறலுடன் எத்தனையோ இம்சை கொடுக்கிறார்கள் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்.ஞாயிற்று கிழமைகளில் அதிகமாக சிறப்பு ஒலி மாசு செய்கிறார்கள், ஏதோ இயேசு வருகிறாராம்,எப்போ என்று மட்டும் தெரியவில்லை நானும் பத்து வருசமா எனக்கு பிடிக்காவிட்டாலும் இதனை பொருத்து கேட்டு கொண்டுள்ளேன்.
ஏதோ வருசத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது உங்களுக்கு பொறுக்கவில்லையா?

/////மிகப் பெரிய சைஸ் பேண்டு (Big Band)கள் மூன்றும் பள்ளிகளில் ‘மார்ச் ஃபாஸ்டு’ க்கு அடிப்பது, அத்துடன் சாவுக்கு அடிக்கும் மேள வாத்தியமும் சேர நெஞ்சை படபடக்கச் செய்யும் இரைச்சலுடனும் பிணத்துக்கு முன்பாக ஆடும் அருவருப்பான கூத்து நடனத்துடனும் சாமி ஊர்வலம் வந்தது;//////

சாமி ஊர்வலத்திற்கு மங்கள மேளம் தான் முழங்குவது வழக்கம் பாண்டு வைப்பது வழக்கம் இல்லை, சாவுக்கு அடிக்கும் மேளம் என்று நீங்கள் சொல்லும் போதே அது பொய் என்பது வெளிச்சம். சாமி எதிரில் டப்பாங்குத்து ஆடுவது தவறான வழக்கம் இப்போது புதிதாக சிலர் அவ்வாறு செய்தால் நிச்சயம் அது கண்டிக்க தக்கது தான், அனால் உங்கள் கூற்று எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

////கூத்து நடனம் ஆடிய இளைஞர்களும் மற்றவரும் நல்ல போதையில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது;/////
நம்பமுடியவில்லை பெருமாள் ஊர்வலத்தில் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடுவது. பெருமாளை வணங்குபவன் நிச்சயம் தண்ணி அடித்து விட்டு ஆட மாட்டன்

///வாசலிலிருந்த நல்ல நிழல்தரும் மரத்தை வெட்டி வீழ்த்தியிருந்தனர்;/////
உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிக்க வேண்டிய செயல், உண்மையாக இருப்பின் வருந்துகிறோம்

/////இது அவர்கள் தேசமல்லவா,//////

உண்மையை ஒப்பு கொண்டதற்கு நன்றி நண்பரே,
அனால் நீங்களும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர் தான் என்பதை நாங்கள் மறக்கவில்லை, அனால் உங்களின் கருத்து தான் இந்த மண்ணுக்கு பொருத்தமில்லாதது, அதிகாரத்துவம் நிறைந்தது, பிறர்க்கு நம்மை அடிமை செய்ய வைக்க நினைப்பது. உண்மையை விட்டு விலகி போக செய்வது. சொந்த ரத்தங்களை பார்த்து பாவிகளே என்று அழைக்க வைப்பது.
நாங்கள் கடவுளின் குழந்தைகள் (நீங்களும் தான்) உங்கள் கடவுளை வழிபடாமைக்காக ஒருவன் பாவி என அழைக்கபடுவதும், தீண்டாமையும் ஒரே அளவு குற்றமுள்ள செயல்கள் தான்

/////மாட்டுக்கு பதிலாக மனிதர்கள் இழுத்துவந்தனர்/////

இருந்த மாடுகள் எல்லாத்தையும் தான் கொன்று தின்றுவிட்டீர்களே, எங்கள் கடவுளை நாங்கள் இழுப்பதில் உங்களுக்கு என்ன வயிற்ரேரிச்சல்.
அதில் அமர்ந்துள்ள மனிதன் பூவோடு சேர்ந்துள்ள நார் போன்றவன்.
அவன் ஏறி ஏறி இறங்கைகொடிருக்க முடியாது ஆகையால் அவனும் அங்கே அமர்த்தப் பட்டிருக்கிறான்.

/////சாமி குட்டிகளை மட்டும் கட்டிக்கொள்ள நம்ம பக்தர்கள் அவருடைய பெண்சாதிகளுடன் அவரையும் சேர்த்து கட்டியிருந்தனர்; விழுந்துவாரோ என்ற நல்ல எண்ணமோ அல்லது தனது ஜோடிகளுடன் ஓடிவிடுவாரோ என்ற கெட்ட எண்ணமோ தெரியவில்லை; அவர் என்னைப் பொருத்தவரை மிஸ்டர் கிருஷ்ணனாக இருக்கவேண்டும்; ஆனால் அவரைக் குறித்து பெருமாள் என புகழ்ந்தனர்;’லாஜிக்’ புரியவில்லை; /////
வெள்ளைகாரனிடம் விலை போன மூளைக்கு, அரேபிய சிந்தனைகளை நம்பும் மூளைக்கு எப்படி லாஜிக் எல்லாம் புரியும்.
குட்டிகள் என்ன ஒரு வக்கிரம் பிடித்த மனது உங்களுக்கு. இதனை உங்கள் வைபவங்களில் பொருத்தி சொல்ல என் மனம் இடம் கொடுக்க வில்லை.
பண்பாடு என்ற ஒரு உன்னத குணத்தை கூட உங்கள் கூட்டம் இழந்து விட்டதே, என் ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே.

இதற்கு சரியான பதில் கொடுத்தால்,உங்கள் அளவுக்கு எழுதினால் அது இங்கே பதிவிடமாட்டார் சகோ திருச்சி என்று தெரியும் அதனால் இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.
இதுவே சகோ திருச்சிக்கும் (சொந்த தர்மத்தில்,சொந்த புத்தியில் வாழ்பவர்),சகோ சில்சமுக்கும் (இசுரேல் கருத்து கொண்டவர்) உள்ள பண்பாட்டின்,நாகரிகத்தின் வித்தியாசம்.

நண்பர்களே,எனது வரிகளில் ஒன்றுகூட-ஒரு எழுத்துகூட மிகைப்படுத்தப்படவில்லை; ஏனெனில் இதனை எனது டைரி பகுதியில் எழுதியிருக்கிறேன்; எனது டைரியில் பொய்களை எழுதும் வழக்கம் எனக்கு சிறுவயது முதலே கிடையாது; எனவே எனதருமை நண்பர் சதீஷ் அவர்கள் ஐயம் கொள்ளவேண்டாம்;

அடுத்த முறை சிரமப்பட்டாவது- துணிச்சலுடன் இந்த காட்சிகளை படமாக்கி வந்து சமர்ப்பிக்கிறேன்; மெய்யாகவே அந்த ஆர்ப்பாட்டங்களைப் படமெடுக்க எனக்கு தைரியமில்லை; காரணம் அத்தனை வெறியுடன் ஆடிக்கொண்டு வந்தார்கள்; இதற்கு நிரூபணம் தேடவேண்டிய அவசியமே இல்லை; இங்கு வரும் நண்பர்கள் அவரவர் பகுதியில் நடைபெற்ற விழாக்களிலிருந்து நான் எழுதியதிலுள்ள உண்மைகளை அறிவார்கள்;

நான் கிறித்தவ மார்க்கத்தைச் சார்ந்தவனாக இருப்பினும் எனது மூதாதையர்கள் வழியாக அறிந்த வண்ணமாக அமைதியான முறையில் இறைவனைத் தொழுவதையே விரும்புகிறேன்;

மற்றவர்களுக்கு சொல்லித்தருமளவுக்கு எனக்கு பெலனில்லை; ஆனால் எனது ஆதங்கத்தைச் சொல்லும் உரிமையுண்டல்லவா?

இந்த ஆர்ப்பாட்டங்களையும் பஜன்களையும் கிறித்தவர்கள் யாரிடமிருந்து கற்றார்கள் என்று நினைக்கிறீர்கள்,சந்தேகமில்லாமல் இந்துக்களிடமிருந்துதான்;

ஏனெனில் யூதத்திலோ,இஸ்லாமிலோ, ஏன் ஆதி கிறித்தவத்திலோ (or) இன்றைய சமகால கிறித்தவ வழிபாட்டுத் தலங்களிலோ இந்த வழக்கமில்லை என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;

இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்து பெருமக்கள் தங்கள் அடிப்படையற்றதும் அப்பிரயோஜனதுமான வழிபாடுகளைவிட்டு மெய்ப்பொருளையடைந்து முக்திவழியினையடைய வேண்டுமென்பதே எனதுள்ளத்தின் அவா.

இறுதியாக நண்பர் தனபால் அவர்களுக்கு நான் பதிலளிக்காததைக் குறித்து எனக்குப் புரியவில்லை; எனது தளத்தில் நண்பர் தனபால் அவர்கள் எப்போது எந்த பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியவில்லை; குறிப்பாகச் சொன்னால் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

Thanks a lot n God bless you.

சில்சாம் அவர்களே,

மத வெறி தெரிகிறது, உங்கள் எழுத்துக்களில்!

மதப் பற்றும், பிற மதங்களுக்கான சகிப்புத் தன்மை இன்மையும் நன்றாகத் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்!

நீங்கள் எல்லாவற்றையும் உங்களின் மதப் பற்று என்னும் வண்ணக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறீர்கள்!

கோவில் திருவிழாவில் ஆடுபவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. அவர்கள உங்களைப் போல மத சகிப்புத்தன்மை இல்லாமல், பிற மதங்களை வெறுக்கவோ, மத வெறி சிந்தனைகளோடு வாழவோ இல்லையே!!

அவர்கள ஆடும் போதோ, பாடும் போதே பிற மதத்தினரின் தெய்வங்களை நிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா, இல்லையே!

நாம் பலமுறை எழுதியது போல இயேசு கிறிஸ்துவின் பெயரால் பல மார்க்கங்களை உருவாக்கிய மேலை நாட்டினர், இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை முற்றாகப் புறக்கணித்து குடும்ப வாழ்க்கையை விட்டு , டேட்டிங் கல்சரைப் பின்பற்றி வாழ்வதால், விபச்சாரம் அங்கே நிலவுகிறது.

நீங்கள் அவர்களைப் போய் திருத்தாமல், கோவில் திரு விழாவில் ஆடுவது தவறு என்று இங்கு வந்து கட்டளைகளைப் போடுகிறீர்கள்.

முதலில் உங்கள் முதுகில் உள்ள உத்திரத்தை எடுங்கள். பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை பற்றி ஆராயலாம்.

உங்கள் தளத்திலேயே கிறிஸ்தவர்கள் விவாக ரத்து செய்யலாமா என்று நீங்கள் விவாதம் நடத்தியது எனக்கு நினைவு இருக்கிறது. இங்கே முன்பு இன்னொரு நண்பர், கணவனின் உடலில் இருந்து நாற்றம் வருகிறது அதனால விவாக ரத்து செய்யலாம் என எழுதி இருக்கிறார். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை நீங்கள் ஏலம் போட்டு விட்டு, குடும்ப சமுதாயத்தை வாழ வைக்கும் இந்து மதத்தை குறை சொல்லி பூமியையும், சமுத்திரத்தையும் சுற்றித் திரிந்து இந்தியரகளையும் பாவியாக்க வேண்டாம் !

இந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மையும், மத வெறியும் உள்ள உங்களுக்கு, பிற மதங்களை வெறுக்க வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் கோவிலில் ஆடிப் பாடுபவரை குறை சொல்ல தகுதி இருக்கிறதா?

உங்கள் மத வெறியை விட்டு விட்டு மத சகிப்புத் தன்மையை மனதில் வைத்து வாருங்கள், அப்ப அடுத்தவர்களை குறை சொல்லலாம்.

திரு chillsam அவர்களே,

///எப்போது எந்த பின்னூட்டமிட்டார் என்பதும் தெரியவில்லை; குறிப்பாகச் சொன்னால் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.///
அது உங்களின் சில்ல்சம் .blogspot முகவரியில்.தமிழ் ஹிந்துவின் முதல் பாவம் பற்றிய கட்டுரைக்கான பின்னூட்டம்.http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_1870.html.ஆனால் இதற்க்கான பதில்கள் இப்பொழுது எனக்குத் தேவை இல்லை.comment moderation வேறு இருக்கும் போது
உங்கள் கவனத்திற்கு வராமலேயே எப்படி இந்தப் பின்னூட்டங்கள் உங்கள் தளத்தில் இடம்பெறுகிறது .யார் அனுமதித்தார்கள்.?

////அருள் தருவதாகச் சொல்லுவதும் பக்தர்கள் வேண்டியது நடக்கும் என்று காத்திருப்பதும் சுயநலம் சார்ந்த பக்தியாகவே தோன்றுகிறது;////
நீங்கள் மட்டும் உங்கள் கர்த்தரை வழிபடாத அப்பாவிகளையும் காக்கும் பொருட்டு பொது நலத்துடனா வழிபடுகிறீர்கள்.

////ஏனெனில் ஒரு தெருவுக்கு சாமி வந்து போவதாலோ சாமியைத் தேடி பக்தன் சென்று வருவதாலோ ஒரு தனிப்பட்ட மனிதனுடைய வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டது போலத் தெரியவில்லை;/////

உங்கள் சாமியையும் தெருவுக்கு அழைத்து வர வேண்டியதுதானே, ஒ அது வந்தால் எதுவும் நடக்காது என்ற உறுதியான எண்ணம் இருப்பதால் அதனையும் எங்கள் முறையுடன் ஒப்பிடுகிரீர்களோ?
நீங்கள் சர்ச்சுக்கோ சபைக்கோ போய் வாழ்வில் என்ன மற்றம் கண்டீர்கள் என்பதுதான் தெளிவாக தெரிகிறதே.

///////கோயிலில் விழாக்கோலம் ஒருபுறம், பக்தன் அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கும் அலங்கோலம் மறுபுறம்; அவன் பெண்டு பிள்ளைகள் அங்கே சாமியை விழுந்து வணங்கிக்கொண்டிருக்க இங்கே இவன் சாக்கடையில் விழுந்து எதையோ தேடிக்கொண்டிருக்கிறான்;//////

குடிகாரன் என்றும் கடவுள் பெயரை சொல்லி குடிப்பதில்லை, நாங்கள் கோவிலில் wine கொடுத்து குடிக்க பழகி விடுவதில்லை, அந்த கருமம் எல்லாம் உங்கள் வழிபாட்டில்தான். மீண்டும் சொல்கிறேன் உண்மையான பக்தன் குடிக்கவே மாட்டன்,குறைந்தபட்சம் வழிபாட்டின் போது குடிக்க மாட்டன். அப்படி குடிப்பவன் அங்கே பொழுது போக்கிற்கு ஆட்டம் போட வந்தவன். குடி இங்கே அனுமதிக்கபடுவதில்லை.

///அந்த காலத்தில் கோயிலில் பரத்தையர் நடனமாடுவர்; இதனை பரதநாட்டியம் என்றும் கூறுவர்; /////

பரத்தையர் ஆடிய நடனம் தான் பரதநாட்டியம் என வழங்கபடுகிறதா? என்னே ஒரு கண்டுபிடிப்பு,நடன கலைஞ்சர்களையும், நடனத்தையும் கேவலப்படுத்ததீர்கள்.

////இந்த நடனத்தால் வசீகரிக்கப்ப‌டும் ரிஷிகளும் மன்னர் பெருமக்களும் அன்றிரவு அவர்களோடு தங்களைப் பகிர்ந்துகொள்வர்;/////

ரிஷிகள் கோவிலுக்கு வருவதில்லை அவர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள். கோவிலுக்கு வந்த எவனும் ரிஷி இல்லை. தாடி வைத்தவன் எல்லாம் ரிஷி இல்லை.

மன்னன் தன் அதிகார பலத்தினால் எது வேண்டுமானாலும் செய்திருப்பான் தன் சுய நலத்தினால்.அது ஒன்றும் கடவுள் பெயரால் செய்யப்படவில்லை. அதுவும் எதோ ஓரிருவர் அப்படி இருந்திருக்கலாம். நாட்டு மக்கள் எல்லோரையும் தன் குழந்தைகளாகவும் தான் அவர்களை காக்கும் தந்தையாகவும் செங்கோல் ஆட்சி செய்த மன்னர்களே இந்நாட்டில் அதிகம்.

/////இன்றோ ஒரு பாவமுமறியாத சிறுமிகளையும் வயதுக்கு வந்த இளங்குமரிகளையும் அதே கோவில் வாசலில் ஆடவிட்டு அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்;////
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடும் சிறுமிகளை பார்த்ததுண்டா? அந்த அளவு இங்கே யாரவது கோவிலில் ஆட விட்டார்களா? அல்லது கலைநிகழ்ச்சி பரதம் என்ற அளவு ஆடினார்களா? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் யோசித்து பாருங்கள். அப்படி இங்கேயும் குத்தாட்டம் போட்டு இருந்தால் அது ஒரு தவறான போக்கின் ஆரம்பம் திருத்தியே ஆகவேண்டும்.
டிவியில் எத்தனை பெண்களை தாய் தந்தையரே கேவலமான நடனம ஆட விட்டு கண்ணீர் மல்க ரசிகிரார்கள் அந்த அளவுக்கா கோவிலில் நடனமாட வைத்தார்கள்.
அப்படியே செய்தாலும் அது மக்களின் குற்றம் கடவுள் யாரையும் அங்கே ஆட சொல்லவில்லை. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு காலத்தில் ஆடினார்கள் அது இன்று வேறு விதமாக திரும்பினால் திருத்தப்பட வேண்டியதுதான்.
இன்றைய நவீன பன்னாட்டு மேற்கத்திய நீங்கள் சார்ந்துள்ள மதத்தினர் கலாச்சாரத்தின் விளைவே இந்த சீர்கேடுகளுக்கு காரணம். கிறித்துவ சபையின் நிகழ்சிகளிலும், தமிழ் சங்கங்களின் நிகழ்சிகளிலும் எல்லா நிகழ்சிகளிலும் மேடை ஏறி சினிமா பாட்டிற்கு நடனம் ஆடுவது ஒரு தவறான வழக்கமாக வளர்ந்து கொண்டுள்ளது. பரதநாட்டியம் கண்ணியமான நடனம் இதை தான் நீங்கள் பரத்தையர் நடனம் என்று கூறுகிறீர்கள்.
பரதம் எதிர்காலத்தை வீனாக்குமா? டிவியில் காட்டும் குத்தாட்டம் எதிர்காலத்தை வீனாக்குமா?

சகோ திரு சிலசம்,

சமுதாய மக்களிடம் (அது யாராக இருப்பினும்) உள்ள தவற்ற பழக்கங்கள் மீது வருத்தம் கொண்டு அவற்றை நீக்கும் பணியானால் நான் வரவேற்கிறேன். நான் இவ்வளவு எழுதி இருக்கிறேன்.மனிதனின் குறையை மதத்தின் மேல் போட எந்த முகாந்திரமும் இல்லை என்று.
உங்கள் முன்னோர்கள் (இந்துக்கள் தானே) அமைதியான வழிபாடு செய்துள்ளனர் என்பதை நீங்களே ஒப்பு கொண்டுள்ளீர்கள்.
குடிப்பவன் குடித்து ரோட்டில் விழுந்து கிடப்பவன் மனிதனே அல்ல, விலங்கு என்று சொன்னால் விலங்குகளை அவமான படுத்துவது ஆகும் அவன் ஒரு கேவலமானவன். ஆனால் அவனை திருத்த வேண்டியதும் நம் கடமையே. மது விலக்கு என்ற ஒன்று வந்தால் அந்த அரசுக்கு என் முழு ஆதரவு உண்டு.

///இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்து பெருமக்கள் தங்கள் அடிப்படையற்றதும் அப்பிரயோஜனதுமான வழிபாடுகளைவிட்டு மெய்ப்பொருளையடைந்து முக்திவழியினையடைய வேண்டுமென்பதே எனதுள்ளத்தின் அவா./////
அப்பிரயோஜனமான வழிபாடு என்று சொல்லாதீர்கள், இந்துக்கள் வழிபாடு முக்திவழியினை அடையவே.அதனால் உங்கள் வழி குறைந்தது என்று யாரும் சொல்லவில்லை, உங்கள் வழி உங்களுக்கு, எங்கள் வழி எங்களுக்கு.
மனித தவறுகள் (இங்கே மட்டுமல்ல எங்கேயும் உள்ள) திருத்தப்பட வேண்டியவையே.

நண்பரே இணைந்து முயற்சிப்போம் சமுக திருத்தத்திற்கு, ஆனால் மதத்தையோ கடவுளையோ இனத்தையோ யாரும் இழிக்க வேண்டாம்.
உங்களுக்கு உங்கள் கிறித்து, எங்களுக்கு எங்கள் கிருஷ்ணன்.
மனிதன், சகோதரன், என்ற உணர்வுடன் வாழ்வோம் சாதி பிரிவும் வேண்டாம் மத சண்டையும் வேண்டாம்.
உங்கள் எழுத்துக்கள் இனி சமுக திருத்தம் பற்றியர்தாக இருக்கட்டும். மத தாக்குதலாக இருக்கவேண்டாம்.
அன்புடன்
உங்கள் சகோதரன் சதீஷ்

////http://indianschristians.wordpress.com/2010/09/26/sex-tarture//////

இந்த குற்றத்திற்கும் கிரித்தவத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ? இது போல பல சம்பவங்களை கிறித்தவ மதத்தை சேர்ந்த சிலர் செய்கிறார்கள் என்னிடம் பல கட்டுரைகள் உள்ளன.அவர்கள் கெட்ட வழியில் செல்வதால் கிறித்தவம் கெட்டது ஒத்து கொள்வீர்களா? இது போன்ற சம்பவத்திற்கும் கிரித்தவத்திற்கும் சம்பந்தம் உண்டு என்றால் நீங்கள் ஒப்பு கொண்டால், மேற்கொண்டு எழுதலாம், நானும் பதில் எழுதுகிறேன்.
மனித தவறினை மதத்தின் தவறாக நான் நினைப்பதில்லை, மதத்தின் பெயரால் ஒருவர் மற்றவர் மீது செய்யும் தவறுகளை தவிர்த்து.

// மத வெறி தெரிகிறது //
எனது வேதனை உங்களுக்கு மதவெறியாகத் தெரிகிறதோ..?

// இயேசு கிறிஸ்துவின் பெயரால் பல மார்க்கங்களை உருவாக்கிய மேலை நாட்டினர் //

இது கொஞ்சமும் நாகரீகமானதாகத் தெரியவில்லை;எனது எழுத்துக்களில் மததுவேஷமோ மதப் பிரச்சாரமோ துளியும் இடம் பெறவில்லை;எனது ஆதங்கத்தையும் வேதனையையுமே சிந்தனைக்காக முன்வைத்துள்ளேன்;இதை எழுத நான் யாராக இருக்கவேண்டும் என்று புரியவில்லை;சாமான்ய மனிதனாக நின்று பகுத்தறிவுடன் யோசித்ததன் விளைவே இந்த கட்டுரை;இது கட்டுரையுமல்ல,எனது சொந்த அனுபவம்;

இதில் அகத்தூய்மையுடன் சிரத்தையுடன் சாமி கும்பிட வேண்டும் என்கிறேன்; மற்றவருக்கு நள்ளிரவில் தொல்லை தராமல் நாகரீகமாக இருக்கவேண்டுகிறேன்;

ஒலிபெருக்கி சத்தமும் அது பயன்படுத்தப்படும் நேரமும் அதற்கு உபயோகிக்கும் மின்சாரமும் உட்பட அனைத்தும் சட்டவிரோதமான‌ மோசடியே; மக்கள் அள்ளித்தரும் காணிக்கையை வைத்து விழா கொண்டாடாமல் மிரட்டி வசூலித்து வட்டி பணத்திலும் சாராய பணத்திலும் கட்ட பஞ்சாயத்து பணத்திலும் போலியானதொரு மாயைதனை பக்தி என்ற பெயரில் பரப்பும் இந்த சமுதாயம் உருப்பட வாய்ப்பே இல்லை..!

Dear Mr. Chillsam,
We can find in your writings the contempt and abuse for the Gods of other religions, and the worshpping practices followed by others.

If you dont have hatredness for other religions, Gods of other religions, your opinions will gain strength.

இந்த கட்டுரையைப் பொருத்தவரையில் போகிற போக்கில் எதையாவது சொல்லுவது சரியாக இருக்காது என்ற காரணத்தால் வரிக்கு வரி நிதானித்து நேர்த்தியானதொரு கட்டுரையினை வரைய முயற்சித்தேன்;அதற்கேற்ற சமயம் வாய்க்காத ஒரே காரணத்தால் உடனடியாக எந்தவொரு பின்னூட்டமும் இடவில்லை;

மற்ற தளங்களைப் போல திசைமாறிச் சென்று தலைப்புக்குப் பொருந்தாத எதையாவது பிதற்ற எனக்கு விருப்பமில்லை; மற்றபடி இங்கு வந்து தமது கருத்தை முன்வைத்துள்ள தனபால் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்;

வேதத்திலும்கூட பதிலளிக்கப்படாத அநேக கேள்விகள் உண்டு;ஒவ்வொரு கேள்விக்கும் பதிலே பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை;

கேள்வியும்கூட பதிலைப் போல செயல்பட்டு அநேகருக்கு பதிலாகும்; நமது கருத்துக்களால் நாம் மேற்கொள்ளாவிட்டாலும் அன்பினால் ஜகத்தை வெல்வோம்..!

http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_1870.html

சகோ சில்சம்,
போலி ஆன்மிகவாதி எல்லா மதத்திலும் உண்டு, மேலும் எந்த மதமும் போலி ஆன்மிக வாதியை ஏற்பதில்லை.நீங்கள் குறிப்பிடும் படிக்கு நள்ளிரவில் பிறருக்கு தொல்லைதரும் ஒலிபெருக்கியினை தவிர்த்தல் குடித்துவிட்டு ஆட்டம் போடுதல் போன்றவை தவிர்க்க வேண்டியவை.
அமைதியான முறையில் ஆன்மிகம் சிறப்பானது தான்.ஒரு சமுக சிந்தனையுடன் இதனை நீங்கள் கூறுவதானால் பின்னர் ஏன் அதிலே கிண்டலை கலந்து கூறுகிறீர்கள்.நீங்களும் இந்த சமுகத்தில் ஒரு அங்கம் ஒரு பொது மனிதன் ஆகா இருக்கும் பொது இங்கே அடிக்கும் தவறான கூத்துகளை மட்டும் கண்டித்து எழுத வேண்டியது தானே.
பின்னர் எதற்கு மதத்திற்கும் கிரிஷ்ணனுக்கும் இத்தனை ஏளனம் செய்து எழுத வேண்டும்.
சரி உங்களவர்கள் செய்யும் வழிபாடு தினமும் நடப்பது பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட கண்டிக்க வில்லை.
அடித்தட்டு நிலையில் உள்ளவனுக்கு சில சமயம் ஆடிபாடி விழா எடுத்து கொண்டாடினால் தான் திருப்தி என்று நினைக்கிறான்.
அது பிறரை தொல்லை கொடுக்கும் அளவு போனால் ஒரு எல்லை வரை தான் பொறுக்க முடியும். ஆனால் தினமும் மைக் வைத்து அல்லேலுயா பாடி எல்லோரையும் தினமும் தொல்லை கொடுப்பவரை அதிகமாக அல்லவா நீங்கள் எழுத வேண்டும், ஏன் உங்கள் ஆட்கள் செய்வதை மட்டும் உங்கள் பகுத்தறிவுடன் யோசித்து எழுத முடியவில்லை.

உண்மையில் சமுக சீர்திருத்தம் வேண்டும் என்று யார் விரும்பினாலும் வாருங்கள் கிழே உள்ள விசயங்களில் ஒன்று சேர்ந்து முயற்சிப்போம் மத உணர்வுகளை புறந்தள்ளி.ஏதோ நம்மால் ஆன அளவு செய்வோம். என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன்.உங்கள் எண்ணங்களையும் பதிவிடுங்கள் முடிந்தவரை முயற்சிப்போம்.

பள்ளிகளில் மற்றும் எந்த மேடையிலும் ஆடும் தைய தக்கா ஆண் பெண் குழந்தைகளின் ஆட்டம்.தேவையற்றது என்பதை பெற்றோர்களுக்கும் பள்ளிகளுக்கும் உணர வைக்க முயற்சிப்போம்.

டிவியின் தொடர்களினால் ஏற்படும் இழப்புகளை தாய்குலங்கள் அறிந்து திருந்துமாறு பிரசாரம்.குறைந்த பட்சம் தெரிந்தவர்களிடம் எடுத்து கூறுவது.
குடிக்கு எதிரான விழிப்புணர்வு,நமக்கு தெரிந்த நபர்களை அருகில் உள்ள மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது. தஞ்சை புது பஸ் ஸ்டான்ட் அருகிலே ஒரு மையம் செயல் படுகிறது அங்கே ஒரு ஆட்டோ காரரிடம் கேட்டால் போதும் அவரே கொண்டு விடுவார்.

மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் வருங்கால இளைஞ்ச,இளைஞ்சிகளை மதுவற்ற, புகையற்ற நல்ல சமுதாயமாக உருவாக்குதல்.
குழந்தைகள் மனதில் யாரையும் மனிதனாக மட்டும் பார்க்கும் அவன் சார்ந்திருக்கும் மதத்தினை கொண்டு எடை போடாத சகோதர மனப்பாங்கினை வளர்த்தல்.
கிராமங்களில் இன்று நடக்கும் நாளைய சமுதாயத்துக்கு எதிரான துரோகமான (நகரங்களில் ஏற்கனவே முடித்துவிட்டார்கள் ) விலை நிலங்களை தரிசாக்குதல் மற்றும் நஞ்சு ஆக்குதல். போன்றவற்றை பொது மக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதிக மரம் வளர்க்கவும், விவசாயம் செய்யவும் ஊக்கபடுத்துதல்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சில இயற்கை வழிமுறை விவசாயத்தை பரப்பி வருகிறார்.
ஒரிஸ்ஸாவில் ஒரு MBA பட்டதாரி விவசஈகளுக்கு இடு பொருள்களும் பண்ணை விளக்க முறைகளும் செய்து கொடுத்து அவர்களின் விலை பொருள்களை தானே பெற்று பதபடுத்தி விற்பனை செய்து அவர்கள வாழ்விலும் ஒளியேற்றி தானும் பெரும் பயனடைகிறார். அவரால் பல கிராம மக்கள் விவசாயத்தால் முன்னேறி உள்ளனர்.
இவர்களளவு முடியாவிட்டாலும் நம்மால் ஆனா உதவிகளும் விழிப்புணர்வும் ஏற்படுத்துதல்.
கிராமத்தில் பள்ளிகளில் மூலம் மாணவர்களுக்கு சில பயனுள்ள மரக்கன்றுகள்,பழ கன்றுகள் கொடுத்து அவர்களை விளையாட்டாக மரம் வளர்க்க ஈடுபடுத்துதல்.
நாம் தேவையான பொழுது மட்டும் பெட்ரோல் வண்டிகளை பயன்படுத்துதல்.
முடிந்தவரை பேருந்தை பயன்படுத்தி புகை மற்றும் சுற்று சூழல் பாதிப்பை கட்டு படுத்துதல்,பெட்ரோல் உபயோகிப்பின் அளவை குறைத்தல்.
மின்சாரத்தை சிக்கனமாக உபயோகித்தல்.
நகரத்தில் வாசித்தால் கூட வீட்டிலேயே வளர்க்க கூடிய நான்கு தொட்டி செடிகளை வளர்க்கலாம்.
முடிந்தவர்கள் வாசிங் மிஷினை தவிர்த்தல், ரெப்ரிஜிரடரை தவிர்த்தல். வீடுகளில் CFL விளக்குகளை பயன்படுத்துதல்.
மழை நீர் சேகரிப்பு அமைப்பை சரியான முறையில் பராமரித்தல்.

உணவு பொருள்களை தேவைக்கு அதிகமாக செய்து வீணாக்காமல் இருத்தல்.
விவசாயீகளை ஊக்குவிக்கும் வண்ணம் இளநீர் குடித்தல், கண்ட கண்ட பானங்களை குடிப்பதை விட இது உடலுக்கும் ஆரோக்கியம்.
குடி,புகை என்பது மிகவும் இழிவான ஒரு செயல் என்று ஒவ்வொரு குழந்தையின் மனத்திலும் ஆழ பதியுமளவு எடுத்து சொல்ல வேண்டும்.

கூத்தடிக்கும் கோவில் திருவிழா என்றாலும் அரசியல் மேடை என்றாலும் சர்ச்சின் விழ என்றாலும் அதனை புறக்கணிப்போம்..

அமைதியாக நடக்கும் எல்லா விழாக்களையும் வரவேற்ப்போம்.

I m satheh now i changed my name as sivanadiyaan,

வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையால், நீங்கள் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள் திரு. சிவனடியான் என்கிற சதீஷ் அவர்களே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: