Thiruchchikkaaran's Blog

அயோத்தி – நேற்று, இன்று , நாளை ! (part 2)

Posted on: October 2, 2010


I refer the following comment directed at me at tamilhindu.com

http://www.tamilhindu.com/2010/10/ayodhya-verdict-and-a-stigma-removed/comment-page-4/#comment-19238

(Thiruchchikkaarans earlier comment referred as follows)
//இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது இஸ்லாமியர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை அனைவரும் உணர முடியும்.

இந்த இடிப்பை திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என சில நண்பர்கள் சொல்லி, அதற்காக வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர். இது நமக்கு ஒப்புமை இல்லை. ஒருவரை மிதித்து விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?
//

(Reply to Thiruchchikkaarans comment)

திருச்சிக்காரன்,

ஒருவரை மிதித்துவிட்டு சாரி சொன்னால் சரிஆகிவிடும். வேறென்ன செய்ய முடியும்? ஆம்புலன்சையா கூப்பிட முடியும்? மேலும் பல்லாயிரக்கணக்கான மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்ட ஹிந்துக்களுக்கு மிதிபடுதலின் ரணம் நீங்கள் சொல்லித் தெரியவேண்டியதல்ல. எதிர்பாராமல் இடித்ததாக யாரும் சொல்லவில்லை. உயிரைப் பணயம் வைத்தும், தியாகம் செய்தும் செய்த கரசெவைப் பெரும்பணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் கொச்சைப் படுத்துகிறீர்கள்.
தயவு செய்து பெருந்தியாகத்தை உங்கள் செக்யூலர் விளம்பரத்துக்காக மாற்றி எழுதுவதை நிறுத்துங்கள்.

Thiruchchikkaarans  Reply:

//மேலும் பல்லாயிரக்கணக்கான மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்ட ஹிந்துக்களுக்கு மிதிபடுதலின் ரணம் நீங்கள் சொல்லித் தெரியவேண்டியதல்ல.//

அன்றைக்கு இந்துக்கள் மிதிபடுதல்களைச் சகித்துக்கொண்டு கஷ்டப் பட்டார்கள் என்றால், பதிலுக்கு இன்றைக்கு இருப்பவர்களை மன வருத்தம் அடைய செய்வது, ரணமாக்குவது சரியா?

//எதிர்பாராமல் இடித்ததாக யாரும் சொல்லவில்லை. உயிரைப் பணயம் வைத்தும், தியாகம் செய்தும் செய்த கரசெவைப் பெரும்பணியை நீங்கள் வீட்டிலிருந்தபடியே அலட்டிக்கொள்ளாமல் கொச்சைப் படுத்துகிறீர்கள்.//

சொன்னதால் தான் எழுதி இருக்கிறோம்.

இந்த இடிப்பு நிகழ்வில் பங்கு பெற்ற பல பிரபலமானவர்களே, இந்த இடிப்பு எதிர்பாராத விதமாக நடந்து விட்டடது என்று சொன்னதை பத்திரிகைகளில் படித்த நினைவு இருக்கிறது.

I further refer the comment of Sri. Jattayu at the following article.

//http://www.tamilhindu.com/2010/09/ayodhya-a-turning-point-in-history/
//
ஜடாயு

30 September 2010 at 3:01 pm
அன்புள்ள திருச்சிக்காரன்,

பாபர் கட்டிடம் அந்தக் குறிப்பிட்ட நாளில் இடிக்கப் பட்டது ஒரு *அசாதரணமான* வரலாற்றுத் தருணம். ராமஜன்ம பூமி இயக்கத்தை அதுவரை வழிநடத்தி வந்த தலைவர்களே எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு அது, திட்டமிடப் பட்ட நிகழ்வு *அல்ல* என்பதை மனதில் கொள்ளவும். லிபர்ஹான் கமிட்டி அறிக்கையும் அதைத் தெளிவுபடுத்துகிறது..

அயோத்தி இயக்கத் தலைவர்களிடையே இதற்கான இரண்டு வகை எதிர்வினைகள் இருந்தன.

உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, அசோக் சிங்கல் போன்றவர்கள் இந்த நிகழ்வுக்காக நாங்கள் சிறிதும் வருந்தவில்லை (dont regret) என்றார்கள்.
ஹெச்.வி.சேஷாத்ரி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள், அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு (highly regrettable) என்றார்கள். நான் ஆர்.எஸ்.எஸ், அத்வானி கட்சி.//

திரு. ஜடாயு மட்டும் அல்ல, பல முக்கியஸ்தர்கள இது எதிர்பாராமல் நடந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.

******************

 நீங்கள் என்னைக் குறி வைத்து எழுதுகிறீர்கள்.

இந்த முறையும் பொருட்படுத்தாமல் இருந்திருப்பேன். ஆனால் இந்து மதத்தை பற்றிய அக்கறை எனக்கு இருக்கிறது.

இந்து மதம் என்பது பிறரை அச்சுறுத்தும் மதமாக என்றுமே இருந்தது இல்லை.

மிகப் புராதனமானது இந்து மதம். சகிப்புத் தன்மை, அரவணைக்கும் தன்மை ஆகியவை உள்ள மதமாக இந்து மதம் உள்ளது. இந்து மதத்தின் முக்கியக் கருத்துக்களை இங்கே நினைவு படுத்த கூடாது என்று நீங்கள் கருதினால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள்.

திரு. ஜடாயு எந்தக் பின்னூட்டதிற்கு பதில் பின்னோட்டம் அளித்தாரோ அந்தப் பின்னூட்டத்தையும் இங்கே மறுபடி எழுதி இருக்கிறேன். படித்து விட்டு என்னை செக்யூலர் என்று சொல்வீர்களோ, அல்லது தனிப் பட்ட முறையில் விரோதத்தைக் காட்ட உபயோகப் படுத்துவீர்களோ , அல்லது இன்னும் எந்தப் பட்டம் கட்ட முடியுமோ முயலுங்கள்.

//29 September 2010 at 10:26 pm
அன்பிற்குரிய திரு. ஜடாயு,

இந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா, அதை இடித்து மசூதி கட்டினார்களா என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. இந்த நிலத்திற்கான டைட்டில் பற்றிய தீர்ப்பு நாளை வெளியாக இருக்கிறது.

இந்த தீர்ப்புக்காக காத்து இருக்காமல் அவசரப் பட்டு வேகம் காட்டி மசூதியை உடைத்ததால் இந்து மதத்திற்கு, இந்துக்களுக்கு , இராமரின் கொள்கைக்கு , அவரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து இருக்கிறீர்களா?

இராமரின் முக்கிய சிறப்பே அவர் அயோத்தியின் ஆட்சியை விட்டுக் கொடுத்ததுதான். கைகேயி கேட்டு இருந்தால் எப்போதிக்குமாக கூட ஆட்சியை விட்டுக் கொடுத்து இருப்பார். சரி, அவர் விட்டுக் கொடுத்ததைப் போல எல்லோரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் – ஆனால் இப்படி அடாவடியாக உடைப்பது இராமரின் கொள்கைக்கு பொருத்தமானதா?

ஸ்லாம் டாக் மில்லியனர்- அது ஒன்னும் சிறந்த படம் போல எனக்குத் தோன்றவில்லை. ஆனால் விருது எல்லாம் குடுத்து இருக்கிறார்கள். அதிலே கூட இராமரைப் பற்றி ஒரு கேள்வி கேட்பது போலவும், அது சம்பந்தமாக கலவரம் நடந்தது போலவும், ஒரு சிறுவனை இராமர் போல வேடமிட்டு நிற்க வைத்து காட்டி இருப்பார்கள்.

சரி, இராமரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டது – அதை விடுங்கள். அதை விட முக்கியம் அவருடைய கொள்கைகள். இராமர் தன்னை பற்றிக் கவலைப் படுவதை விட, எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதியவர்.

இராமர் இருந்திருந்தால் அவர் இப்படி தனக்கு கோவில் கட்டுவதாக சொல்லிக் கொண்டு அனுமதியின்றி இடித்ததை ரசித்து இருப்பாரா? அந்த மசூதி அல்லது சிலர் சொல்வது போலக் கட்டிடம் இடிக்கப் பட்டதால் இலட்சக் கணக்கான இஸ்லாமியரக்ள மன வருத்தம் அடைந்துள்ளனர். அந்த மன வருத்தம், இராமரே அதைப் பார்த்து மிக வருந்தி இருப்பாரா இல்லையா என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

இராமர் ஆயுதம் ஏந்தியது காப்பதற்கு தான், அப்பாவிகளைக் காப்பதற்கு தான். அப்பாவியான ஒருவரை தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார். குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?அந்த மசூதியின் மீது கடப்பாறையை பாய்ச்சியது இராமனின் பினாமினா (Phenomena) மீது பாய்ச்சியது போலத்தான்.

உலக்குக்கே வழி காட்ட வேண்டிய நிலையில் இந்து மதம் உள்ளது. வெண்ணை பொங்கும் நேரத்திலே தாழியை உடைக்க வேண்டுமா? இதில் விவேகானந்தரையும் இழுக்கிறீர்கள். இந்துக்கள் சர்ச்சுக்கு செல்கிறார்கள. மசூதிகளைக் கட்டித் தருகிறார்கள், அது நல்லது என்று விவேகானந்தர் சொல்லவில்லையா? உடைக்கப் பட்ட கோவில்களை தான் திருப்பி எழுப்ப சொன்னார். மசூதி அல்லது சமாதி என்று சொல்லப் படுகிற இடத்தை பலவந்தமாக உடைத்து அதிலே கோவில் கட்டலாம் என்று சுவாமி ஒரு போதும் எண்ணக் கூட மாட்டார்.

இந்து மதமும் அடாவடி, அராஜக செயல்களை நம்பும், இறங்கும் மதம் என்று ஆக்கி விட்டால், நாளைய தலை முறையினர் மன்னிக்க மாட்டார்கள். உலகத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் , ஒளியையும் உண்மையையும் தரக் கூடிய ஒரு மதத்தை சரியாக சிந்திக்காமல் தவறான பாதைக்கு கொண்டு போக வேண்டாம். அப்படிக் கொண்டு போவது எளிதல்ல.//

இதுதான் நான் எழுதிய பின்னூட்டம். இந்தப் பின்னூட்டம் என்னைத் திட்ட உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் .

நான் தெளிவாக சொல்லிக் கொள்வது என்னவென்றால் மசூதியோ அல்லது கட்டிடமோ அது அனுமதி இல்லாமல், அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இடிக்கப் பட்டது இராமரின் கொள்கைகளுக்கு எதிரானது, இராமர் இருந்திருந்தால் அதில் மிக்க மன வருத்தம் அடைந்து இருப்பார் என்பதுதான்.

கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான்.

அதற்குப் பதிலாக ஒரு தோளில் சீதையையும், மறு தோளில் இராவணன் மனைவி மண்டோதரியையும் தூக்கி வரவில்லை. இராமனின் கொள்கை என்ன வென்று அனுமனுக்கு நன்றாகத் தெரியும்.

போரிலே ஆயுதம் இழந்த நிலையில் இராவணன் நின்றபோது கூட “இன்று போய் நாளை வா” என்று சொன்னவர் இராமன் .

தன்னை துன்புறுத்திய அரக்கிகளை கூட ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னாவர் சீதை அவர்கள்.

அப்படிப் பட்டவர்களின் பேரால் அப்பாவிகளின் மனதில் அச்சத்தை உண்டு பண்ணுவது சரியான இந்து மதம் அல்ல என்று நான் சொல்கிறேன். அது இந்து மதத்திற்கு விரோதமானது என்பதை நான் சொல்லுகிறேன்.

நான் இன்னும் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இப்போது இராமரே அயோத்தியை ஆண்டு கொண்டு இருந்தால், தீர்ப்பு வரும் முன்னே அந்த மசூதி இடிக்கப்படும் போல ஒரு நிலை உருவாவதை இராமர் அறிந்தால், தான் ஒருவராக தனியே நின்று அந்த மசூதியை சுற்றிலும் தன்னுடைய அஸ்திரங்களை மழை போல பொழிந்து, அந்த மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார் என்பதுதான்.

கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு , அந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகள் இடித்தால் அதில் யாருமே ஆட்செபிக்கவோ, மன வருத்தம் அடையவோ, அச்சப் படவோ எதுவும் இல்லை. அரசாங்கம் அவ்வப் போது பல வழிபாட்டு தளங்களை, பொது இடங்களில் இருந்து அகற்றி வருகிறது.

இதை எல்லாம் நன்றாகப் படியுங்கள், படித்து விட்டு என்னை இன்னும் என்ன சொல்ல வேண்டுமோ உங்கள் விருப்பம் போல சொல்லிக் கொள்ளுங்கள்.

Addendum- 1:

//இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரணம் ஏற்பட்டதென்றால் அது அவர்களின் பார்வைக் கோளாறு; அவர்கள் வரலாற்றை படித்து, அவர்கள் ஏற்படுத்திய ரணங்களை நினைத்துப பார்த்து மன அமைதி அடையட்டும்//

 பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிலர் செய்த தவறுக்கு இன்று சிலரை ரணப்  படுத்துவது என்ன நியாயம்? இன்று இருப்பவர்கள ரணம் ஏற்ப்படுத்தவில்லை.

//அதில் உயிர்த்தியாகம் செய்த கரசேவகர்களைக் கேளுங்கள். அவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். பிரபலமானவர்கள் எதிர்பாராதது என்று சொன்னது ஹிந்துக்களுள் அன்று பொங்கிய தன்மானத்தைக் குறித்து இருக்கலாம். ஏனென்றால் அதுதான் எதிர்பாராதது. //

நான் ரெபர் செய்ததைப் படித்தீர்களா, அதில் தெளிவாக இருக்கிறது. உங்களுக்குப் புரியாவிட்டாலும் படிப்பவர்களுக்குப் புரியும்.

//இராவணின் அரசாங்கச் சட்டப்படி இராமன் மேல்தான் தவறு. tresspass செய்த அனுமன் மேல்தான் தவறு. //

உங்களுடைய ஒப்புமை  சரி அல்ல.  இந்தியா நம் தாய் நாடு,  இப்போது தீர்ப்பு அளித்த உயர் நீதி மன்றம் அதே இந்திய  அரசாங்கத்தின் ஒரு பகுதிதான். அது தீர்ப்பு வழங்கும் வரை காத்து இருக்காமல் அடாவடியாக இடித்து இருக்கிரார்கள.

//ராமர் கோவிலை இடித்தற்குப் பதிலாக, நாங்கள் ஜும்மா மசூதியை இடிக்கவில்லை. பாபர் கல்லறையைத்தான் இடித்தோம். ஜும்மா மசூதி தான் மண்டோதரி. //

உங்கள் பதிலே நீங்கள் செய்த செயல் எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.

இடித்ததற்கு பதில் இடிப்பு செய்து இருக்கிரீர்கள.

தூக்கி சென்றதற்கு பதிலாக தூக்கி வருவதைப் போல. மண்டோதரியை தூக்கி வருவதற்கு பதில் வேறு ஒரு பெண்ணை தூக்கி வந்து இருக்கிறார்கள்.

மொத்தத்திலே இந்த செயல் இது இராவணத் தனமே என்பதைக் காட்டுகிறது.

//இலங்கபுரியை எரித்தது அனுமன் இல்லையா ? வேறு யார் ?//
இராவணன் சீதையை தூக்கி சென்றதால் தான்,  அவரைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்றான். அனுமன் வாலில் தீ வைக்கப் பட்டது.

சீதையை விட்டு விடச் சொல்லி அனுமன்  கேட்ட போது இராவணன் அதை ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒத்துக் கொண்டு இருந்தால் அனுமன் எதுவும் செய்து இருக்கப் போவது இல்லை.

அபலையாக இருந்த சீதையை தூக்கி வந்த இராவணனுக்கு பாடம் கற்பிக்கவும், அவனுடைய  அக்கிரம  செயல்களுக்கு துணை போனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் அனுமன் இலங்கா  தகனம் செய்தான்.  

ஒரு அபலையைக் காக்க அனுமன் செய்த முயற்சிகளை, இன்றைக்கு  பல்வேறு அப்பாவிகளின் உயிர் அழிப்பிற்கும் , மன உடைதலுக்கும் காரணமான முயற்சிகளுடன் ஒப்பிட்டு அனுமனைக் கொச்சைப் படுத்துகிறீர்கள்.

 அப்பாவியான ஒருவருக்கு கூட  தீங்கு நினைக்கவில்லை அனுமன். அப்படித் தீங்கு நினைத்திருக்கக் கூட மாட்டான் அனுமன்.

இதை மீண்டும் சொல்கிறேன்.

அப்பாவியான ஒருவருக்கு கூட  தீங்கு நினைக்கவில்லை அனுமன். அப்படித் தீங்கு நினைத்திருக்கக் கூட மாட்டான் அனுமன்.
 
இதை  உங்களால மறுக்க முடியுமா?

இங்கே இந்த இடிப்பு சம்பந்தமாக நாட்டில் எழுந்த கலவரங்களில் அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப் பட்டு, உடைமைகள் அழிக்கப் பட்டு, அப்பாவிகள் அச்சுறுத்தப் பட்ட செயல்களை- ஒரு அபலைப் பெண்ணைக் காக்க முயன்ற   அனுமனின் செயலோடு ஒப்பிட்டு அனுமனைக் கொச்சைப்  படுத்துகிறீர்கள்.

இராவணன் இறந்து ஐநூறு ஆண்டுகள் கழித்து, அவனுடைய உறவுகாரப் பையனை போய்த் தாக்கவில்லை அனுமன்.

அனுமன் கட்டுப் பாடு உள்ளவன்.  சர்வாதிகார, காமக் கொடூர , பயங்கர வாதிகளுக்கு எதிராக அவன் நிகழ்த்திய சாகசங்களை,  அப்பாவிகளின் மனதை காயப் படுத்தும் இடிப்பு செயலுடன் ஒப்பிடுவது தவறு.

//திருச்சிக்காரன், உங்கள் போன்ற சுயனலவியாதிகளால்தான் ஹிந்து சமூகத்தின், ஹிந்து தியாகிகளின் செயல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன.//

இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ வைத்து பட்டம்  பதவி நான் தேடவில்லை. இந்து மதத்தையோ, வேறு எந்த மதத்தையோ வைத்து நான் ஒரு  பைசா கூட சம்பாரிக்கவில்லை.

பேருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களைப் போட்டுக் கொண்டு நான் இந்து மதத்திற்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லிக் கொள்வது யார்.

//திருச்சிக்காரன், உங்கள் போன்ற சுயனலவியாதிகளால்தான் ஹிந்து சமூகத்தின், ஹிந்து தியாகிகளின் செயல்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன.//

இந்து சமூகம்  என்பது என்ன?  சில அமைப்புகள் மட்டும் தான் இந்து சமூகமா? ஒட்டு மொத்த இந்து சமூகமும் இடிப்பு   செயலை ஆதரிப்பது போலக்  காட்டி ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீதும் பழி போடாதீர்கள்.

//பல ஹிந்துக்களை குறைசொல்லி விளம்பரம் தேடுகிறீர்கள்.//

எந்த ஒரு இந்துவையோ, எந்த ஒரு மனிதனையோ நான் குறை சொல்லவில்லை.  அவர்கள் தவறான வழிகாட்டுதலினால் தவறான பாதைக்கு செல்லக் கூடாது என்பதற்காக எழுதுகிறேன்.

//மற்றவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்//

நான் எப்போது பின்னூட்டம் போடுவேன், எப்போது சான்ஸ் கிடைக்கும் , நாம் புகுந்து திட்டலாம் என்ற நோக்கம் மாறினால் பொன்னான நிறம் மிச்சம் ஆகும்.

 

Addendum- 2:

ஒரு விடயத்திற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இராமர் பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எதையும் நீங்கள் மறுக்கவில்லை.

இராமர் மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்ப்பவர் என்பதையும், அப்பாவிகளின் மனம் காயப் படுத்தப் படுவதை இராமர் ஒப்ப மாட்டார் என்பதையும் நீங்கள் புரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

விரைவிலே அனுமனையும் நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள.

இலக்குவன், சீதை, அனுமன்…. முதல் துளசி தாசர், இராமதாசர்…. காந்தி வரை எல்லோரும் இராமரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் தான். இராமரின் கொள்கைக்கு மாறான வகையில் அவர்கள் மனம் ஒரு போதும் எண்ணாது.

இராமரின் கொள்கை தான் உலகில் சமாதானத்தையும். இணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியது. நாம் அதைப் பின்பற்றாமல் உலகுக்கு அதை எடுத்துக் காட்ட முடியாது. படிப்பது இராமாயணம், இடிப்பது அடுத்தவரின் வழிபாட்டு தளம் என்ற வகையிலே செயல் பாடாமல் சரியான இராமரின் பாதைக்கு வாருங்கள் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி செலுத்தி விடை பெறுகிறேன்.

Addendum -3

திரு. கார்கில் ஜெய் அவர்களே

 //திரேத்தா யுக இராமர் மசூதிக்கு சேதாரம் வராமல் காத்திருக்கலாம். //
மீண்டும் நன்றி செலுத்துகிறேன். இராமரை ஓரளவுக்கு   புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.

இராமர் இன்று ஆட்சியில் இருந்தாலும் , இன்றைய கால கட்டத்தில்  இருந்தாலும் மசூதிக்கு சேதாரம் வராமல் காத்து இருப்பார்.

 இன்னும் தெளிவாக சொன்னால்,  இன்றைய கால கட்டத்தில் இராமர் இருந்து, அவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், யாரவது ஒருவர் அவரிடம் இந்த மசூதி அல்லது அமைப்பை காத்து கொடுங்கள் என்று கோரினால், யார் மீதும் அம்பு பட்டு விடாமல்  இலாகவமாக அஸ்திர மழை பொழிந்து,  சுற்றிலும் அரணாக அமைத்துக் கொடுத்து இருப்பார். அவர் தான் இராமர்.  அவருக்கு கோவில் கட்டப் போகு  முன் அவரைப் பற்றிப் புரிந்து  கொள்ளுங்கள். 

இராமரை இந்துக்கள் நம்பிக்கை அடிப்படையில் கடவுளாக வணங்குகிறார்கள்.  கொள்கை அடிப்படையிலும், அதே நேரத்தில் கடவுளாகவும் இராமரை அணுகிய அவருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களான துளசிதாஸ், இராமதாஸ், தியாகராசர் போன்றவர்கள், இராமர் அன்றும் இன்றும் எப்போதும் அதே குணாதிசயமும் பண்பும் அன்பும், கருணையும், நியாயமும்,  உடையவராகவே சொல்லுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள்.  இராமர் என்றும் மாறாதவர், சனாதனமானவர் என்பதே அவர்களின் கருத்து. 

கிரிஷ்ணரை பற்றியும் நீங்கள் தயவு செய்து  புரிந்து கொள்ள வேண்டும்-  சமோஹம் சர்வ பூதேஷு, என்று சொல்லி இருக்கிறார். நான் எல்லோரிடத்தும் சமமாக  இருக்கிறேன், எனக்கு வேண்டாதவர் என்று யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

// கோழையும் அயோக்கியனுமான இராவணன் சீதையை அநியாயமாக தூக்கி சென்றான். // அநியாயமாக தூக்கி வந்தாலும் இராவணன் காதலால் தூக்கி வந்தான். இராவணன் ஒரு நல்ல வீரன். சிவ பக்தன். உங்கள் கற்பனையில் உள்ளதுபோல் கோழை இல்லை. இன்று பொய் நாளை வா என்றவுடன் ஓடிவிடவோ அல்லது ‘எனக்கில்லன்னா அவனுக்கும் கிடைக்கக் கூடாது’ என்று சொல்லி சீதையை கொன்றுவிடவோ செய்த சாடிஸ்ட் இல்லை. ஆக சம்பந்தமில்லாத விஷயமான ராவணனை, எவ்வளவோ மோசமான, காரணமேயில்லாமல், இலாபமில்லாமல், ஹிந்துக்களை துன்புருத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு கோவிலை இடித்த சாடிஸ்ட் பாபரோடு, தொடர்பு படுத்துவது உங்களுக்கே வந்த கலை.//

இராவணனுக்கு  இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள். அவனால் சீதை அவர்களுக்கு வாழ் நாள் முழுதும் ஏற்பட்ட துன்பம் உங்களுக்கு பொருட்டாக தெரியவில்லை. அவனால் எத்தனை  பெண்களின் கற்பு சூறையாடப் பட்டது என்பதையும் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை.

 நான் பாபரைப் போற்றவில்லை. பாபர் கோவிலை இடித்தாரா என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலாது. அப்படி இடித்து இருந்தாலும் அதற்க்கு இந்நாளைய இஸ்லாமியரை அச்சப் படும் படி செய்வது சரி அல்ல என்பதே நான் சொல்லிக் கொள்வது
//இராமன் குடிகாரன், ஹிந்து திருடன் என்பதைச் சொல்லும் உங்கள் திராவிட, செக்யூலரிச தத்துவங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு //

இராமர் குடித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும்,  இராமர் குடிபழக்கம் உடையவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை எனபதையும் லாஜிக் அடிப்படையில் தெளிவாக பல தளங்களில் விளக்கி எழுதி வருகிறோம். இராமர் குடி, ஆட்டம், பாட்டம் என்று சொகுசாக வாழ்ந்து இருந்திருந்தால் காட்டுக்குப் போ என்று சொன்னவுடன், அத்தனை சொகுசுகளையும் விட்டு விட்டு எப்படிப் போக மன வந்திருக்கும்.  ஒரு இளவரசன் குடி, ஆட்டம், என்று இருந்திருந்தால் சரி, சரி ஆட்சி வேண்டாம், அப்படியே அயோத்தியில் என்மாளிகையில் தங்கி நான் என் லைபை என்ஜாய் பண்ணிட்டு போறேன் என்று கைகேயியிடம் சொல்லி இருந்திருப்பார்.  எனவே இராமர் குடி காரன் என்று சொல்வது காழ்ப்புணர்ச்சி  பிரச்சாரமே.  மற்றபடி இராமரைபிறர் வைத்தாலும்  கட்டுப் பாடுடன் அமைதி காப்பதே கொள்கையாகை விட்டது.  எதுவும் வேண்டா என்று இராமருக்கு பணிவிடை செய்ய காட்டுக்கு சென்ற சீதை அவர்களைப் பார்த்தே ஒரு குடிமகனார் குறை கூறினார். இராமர் ஆட்சில் இருந்தும், இலக்குவனோ, பரதனோ, அனுமனோ… யாருமே அந்தக் குடி மகனை திட்டவோ, துன்புறுத்தவோ இல்லையே. அகழ்வாரை  தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரை பொறுத்தல் தலை என்பது கொள்கை .

//ஹிந்து துரோகிகளால் ஹிந்துத்தியாகிகளை எதுவும் செய்துவிட முடியாது//

நீங்கள்  விருப்பம் போல திட்டிக் கொள்ளலாம்.

Addendum: 4
இராமரின் கொள்கைகள் இன்றைக்கும், என்றைக்கும் பொருத்தமானவை.

இராமரின் கொள்கைகள் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானவை. 

அன்று  உலகத்தில்  நல்லவர்கள இருந்தனர், இன்று அப்படி இல்லை என்று பலர்  நினைக்கிறார்கள் . அன்றும் கைகேயி அவர்கள் ஆசையில் விழுந்து அநீதி செய்து விட்டார். அன்றும் இராவணன் போன்றவர்கள் அடாத செயலகளை செய்தனர்.

இன்றைக்கு மத சகிப்புத் தன்மை இல்லாத மத வெறிக் கொள்கையில் மூளை சலவை எய்து கொண்டவர்களையும், உலகம் முழுதும் தன கண்டிரோலில் வைக்க நினைக்கும்  எதேச்ச் சதிகார சக்திகளையும் சேர்த்து எதிர் கொள்ள வேண்டியுள்ளது. 

இவர்களை எல்லாம் எதிர் கொள்ள நாம் உபயோகப் படுத்த வேண்டியது அதே இராமனின் முறைதான்.  வெல்லும் வலிமை இருந்தும் கடுமை காட்டாத கருணாகரன் இராமரின் வழியே  நாகரீகத்துக்கு இட்டு செல்லும்.
காட்டு மிராண்டி தனத்துக்கு பதில் காட்டு மிராண்டி தனம் செய்வது உலகத்தில் நன்மையை அளிக்காது. 

இராமனின் விட்டுக் கொடுக்கும் தியாகமே மனிதத்தை வாழ வைக்கும் வழி ஆகும்.  இராமரின் கொள்கைகள் என்றுமே அவுட் டேடட் ஆகாது.

  கிரிஷ்ணரின் கொள்கைகளும் மனதில் வெறுப்பில்லாத , எல்லோரயும் நட்புடன் நோக்கும் கொள்கையே.

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்),

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக ),

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

 க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

மனதிலே வெறுப்புக்  கருத்துக்களை வைத்துக் கொண்டு,  பிறரை பகையுடன் நோக்கிக் கொண்டு,  மனதில் கருணைக்குப் பதில் பிறரை  அச்சுறுத்தும்  வகையில் செயல் படும் போக்கை கடைப் பிடித்தால் அதை  கிருஷ்ணர் விரும்புவாரா?  விரும்ப மாட்டார்.

Advertisements

3 Responses to "அயோத்தி – நேற்று, இன்று , நாளை ! (part 2)"

அயோத்தி: நடந்தது இதுதான்

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி திரு. அருள் அவர்களே.

உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்கள் இந்த பிரச்சினையின் முக்கியக் கோணத்தை பார்க்க மறுக்கிறீர்கள்.

அது என்ன வென்றால் சர்ச்சைக்குரிய பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்டதில் ஒரு கோவிலின் சிதிலங்கள் அங்கே இருப்பது தெளிவாக இருக்கிறது.

அயோத்தி தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகும், தொடர்ந்து தளத்திற்கு வந்து உங்களின் கருத்துக்களப் பதிக்குமாறு கோருகிறேன்.

//1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல): //

இதை நீங்கள் எப்படிக் கண்டு பிடித்தீர்கள். இந்திய மக்கள் எல்லோரிடமும் கருத்துக் கேட்டீர்களா?

சரி இராமன் வெறும் பத்து பேரால மட்டுமே தெய்வமாக வழி படப் படுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பத்து பேர் அவர்களுக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிரார்கள. அந்தக் கோவிலை இடித்தோ, அல்லது அது சிதிலமானால் அந்த இடத்தை ஆக்கிரமித்து வேறு மத்தவர் கட்டிடம் கட்டுவது எந்த சட்டப் படி சரியாகும்.

//2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.//
துளசி தாசர் இராமரின் வரலாற்றையே இந்தியில் எழுதி உள்ளார். துளசி தாசர் தன்னுடைய சம கால வரலாற்றை எழுதவில்ல்லையே.

//3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.//

இராமர் அந்த இடத்தில் பிறந்தார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதே கோர்ட்டாரின் கருத்து.

//4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். //
பிற மதங்களின் வழிப்பட்டு முறைகளை இஸ்லாமிய அரசர்கள வெறுத்து இருக்கின்றனர். அவர்கள பல கோவில்களை கொள்ளை அடித்தும் உள்ளனர், அழித்தும் உள்ளனர் என்பதாக வரலாறு இருக்கிறது. தாலிபானக்ள புத்தர் சிலைகளை பீரங்கி வைத்து உடைத்தனரே.

(ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.- can you give any reference in this)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.//

The idols could have been placed in 1949. They night have keen to continue the worship which their fore fathers had been doing years ago!

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
We strongly condemn the demolition of Masjidh

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் – அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.
We think the court has given a good verdict

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.:

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

மொத்தத்திலே இந்து மதத்தின் மீது வெறுப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் உங்கள் நெஞ்சில் நிரம்பி உள்ளதால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியாமல் நீங்கள் இருப்பதாகவே தெரிகிறது, அதற்க்காக் எல்லோரையும் குற்றம் சொல்லுவது புலனாகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: