Thiruchchikkaaran's Blog

அயோத்தி – நேற்று, இன்று , நாளை!

Posted on: October 1, 2010


அயோத்தி – நேற்று, இன்று , நாளை ! 

அயோத்தி விவாகரத்தில் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது.   இந்த தீர்ப்பில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை எனக் கருதலாம். 

இந்த தீர்ப்பில் வக்பு வாரியதின் கோரிக்கையான, முழு நிலமும் அதற்க்கு வழங்கப் பட வேண்டும் என்பதை, கோர்ட் தள்ளுபடி செய்து விட்டதால் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லி உள்ளது  சொல்லியுள்ளது.  ஹிந்து மகா சபையும் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக சொல்லி உள்ளது.

 மற்றபடி பொதுவாக பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளன.

இந்த தீர்ப்பையும் அதற்கான காரணிகளையும் நாம் அனைவரும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

இதிலே இஸ்லாமிய சகோதரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால், இந்த நிலத்தில் இருந்த பாப்ரி அமைப்பு   ஆனது,  கோவிலின் இடிபாடுகளின் மீது எழுப்பப்  பட்டு உள்ளது என்பதை, அதற்க்கான ஆதரங்களை தொல் பொருள் ஆராய்ச்சி கழகம்  வழங்கி உள்ளதை ஏற்று  கோர்ட் ஒத்துக் கொண்டுள்ளது.

அந்தக் கோவிலானது இடிக்கப் படாமல் அது  தானாகவே சிதிலம் அடைந்து இருந்தாலும், அந்த சிதிலத்தின் மீதுதான் பாப்ரி அமைப்பு கட்டப் பட்டு உள்ளது.

எனவே ஒரு கோவிலின் மீது பாப்ரி அமைப்பை கட்டியது  சரியல்ல ((அந்தக் கோவில்  சிதிலம் அடைந்த நிலையில்  இருந்தாலும்). அந்தக் காலத்தில் இதை எதிர்த்துக் கேட்க முடியாமல் இருந்திருக்கலாம், அதற்கு இன்றைய இஸ்லாமிய சகோதரகள பொறுப்பு அல்ல.   எனவே இஸ்லாமிய சகோதரர்கள், தங்களின் இந்து சகோதரர்களுக்கு  நீதி  கிட்டியதாகவே உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் நான் இந்து சகோதரகளை கேட்டுக் கொள்வது என வென்றால், இஸ்லாமிய சகோதர்களை அரவணைத்து அவர்களை சகோதராராகவே  நடத்த வேண்டும். அவர்களுக்கு மன வருத்தமோ, அநீதியோ நடக்கும் படி  விடக் கூடாது.

இந்த தீர்ப்புக்கா காத்து இருந்திருந்தால், தீர்ப்பின்  படி அரசாங்கமே (கோர்ட்டின் ஆணைப் படி ) நிலத்தைப் பிரித்துக் கொடுத்து இருக்கும். அரசாங்கம்  பல வழி பாட்டு தளங்களை பல இடங்களில் இடித்து உள்ளது.  ஆனால் அதற்க்கு முன்பே இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது இஸ்லாமியர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை அனைவரும் உணர முடியும்.

இந்த இடிப்பை  திட்டமிட்டு இடிக்கவில்லை, எதிர்பாராத விதமாக இடிக்கப் பட்டு விட்டது என  சில நண்பர்கள் சொல்லி, அதற்காக  வருத்தப்படுகிறோம் என்று எழுதி உள்ளனர்.  இது நமக்கு ஒப்புமை இல்லை.  ஒருவரை மிதித்து   விட்டு சாரி என்று சொன்னால் சரியாகி விடுமா?

அயோத்தி தீர்ப்பு பற்றிய பல கட்டுரைகள் தொடர்ந்து நம்முடைய தளத்தில் வெளியாகும். 

அதே நேரம் நாம் சொல்லுவது என்னவென்றால் இந்தியர்கள அனைவரும் சகிப்புத் தன்மை, சமரசம், சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை கைக் கொண்டால், எல்லோரும் ஒருவரை ஒருவர் நண்பர்களாகவே நோக்குவோம். அந்த நிலையில் சர்ச்சைகள் வராது, வந்தாலும் எளிதில்  தீர்ந்து விடும்.

Advertisements

12 Responses to "அயோத்தி – நேற்று, இன்று , நாளை!"

// இந்த நிலத்தில் இருந்த பாப்ரி அமைப்பு ஆனது…கோவிலின் மீது பாப்ரி அமைப்பை கட்டியது சரியல்ல…இந்தக் பாப்ரி அமைப்பு இடிக்கப் பட்டது //

ஊர் முழுக்க அல்லோலகல்லோலப்பட்டது இந்த ஒரு வார்த்தைக்கு தான்; “பாப்ரி மஸ்ஜித்” என்று இஸ்லாமியர்கள் சொல்ல நம்ம ஆட்களோ அது “மஸ்ஜித்” அல்ல‌…தொழுகையில்லாத பாழடைந்த கட்டிடம் என்று கூறி பிரச்சினையை வளர்த்தது தனிகதை;

நம்முடைய அருமை மதநல்லிணக்கவாதியும் சமதர்ம சன்மார்க்க “புளி”யுமான திருச்சிக்காரன் மிக எச்சரிக்கையுடன் பாப்ரி அமைப்பு எனக் கூறுகிறார்;இதிலேயே அவருடைய சுயரூபம் தெரிகிறது; “பாப்ரி மஸ்ஜித்” என்று கூறாமல் “பாப்ரி அமைப்பு” என்று ஏதோ சங்கக் கட்டிடம் போலக் குறிப்பிடுவதை நடுநிலையாளர்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

(பின்குறிப்பு:”புலி” எனும் வார்த்தை “புளி” என்று எழுத்துப்பிழையாகிவிட்டது;தேவைப்பட்டால் திருத்திவாசிக்கவும்.)

பாப்ரி அமைப்பு என்றால் அது மசூதி இல்லை என்று அர்த்தம் கொள்ள தேவை இல்லை.

“மசூதி ஆனது கோவிலின் இடிபாடுகளின் மேல் கட்டப் பட்டது” என்கிற வாக்கியமாக எழுதினால் அது ஒரு ஒரு கடுமையான வாக்கியமாக இருப்பதால் பாப்ரி அமைப்பு என்று எழுதினோம்.

இனி வரும் கட்டுரைகளில் தேவைப் படும் போதெல்லாம் பாப்ரி மசூதி என்று குறிப்பிடுவோம். தேவையான இடங்களில் பாப்ரி அமைப்பு என்றும் குறிப்பிடுவோம்.

எப்படி வாய்ப்பு கிடைக்கும் பூசலை உருவாக்கலாம் என்று நினைக்கும் தந்திரங்களை எதிர்கொள்ளும் வண்ணம் கவனமாக எழுத வேண்டியுள்ளது

அயோத்தி தீர்ப்பு மிகச்சிறப்பாக, அனைவருக்கும் பாதகமில்லாமல் வழங்கப்பட்டத் தீர்ப்பு. தீர்ப்பை ஏற்று அமைதி காத்த அனைவரையும் பாராட்டுவோம்.

திருச்சிக்காரன், நன்றாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!

தோழர் திருச்சிக்காரன் அவர்களே…

இது சட்ட அடிப்படையிலான ஆதாரங்கள் மற்றும் தீர விசாரித்து தரப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லை… கட்டபஞ்சாயத்துக்கள் கூட இதை விட சிறப்பாக அமையக்கூடும்.

ஒரு இடம் யாருக்கு சொந்தம் என்று சர்ச்சை வருவது சிவில் வழக்காகும். இதில் தீர்ப்பளிப்பதற்கு கவனிக்கவேண்டியது ஆவணங்களும், அனுபவ பாத்தியதையும் மட்டுமே. அந்த வகையில், பாபர் மஸ்ஜித் இடம் 450 ஆண்டுகாலம் கம்பீரமாக மஸ்ஜிதாக நின்றதே அது முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதற்கு நிலையான சான்றாகும். எப்போது ஒரு மத ரீதியான கதையை ஆதாரம் என நம்பி, பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதோ, அப்போதே முஸ்லிம்களுக்கு தெரியும் நமக்கு நீதி கிடைக்காது என்று.

மேலும் பாபர் மஸ்ஜித் இடத்தில் இந்து கோயில் இருந்ததை தொல்பொருள் துறை நிரூபித்து விட்டதாம்! தீர்ப்பளித்த நீதிபதியில் ஒருவர் கூறுகிறார். ஆனால் தொல்லியல் துறை என்ன கூறுகிறது..?

”தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

சரி! ஒரு வாதத்திற்கு தொல்லியல் துறை கோயிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று கூறினால் கூட, பூமிக்கு மேற்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள்தான் அளவுகோல் என்றால், பட்டாக்கள் எதற்கு; பாத்தியதைகள் எதற்கு..? மேலும், எந்த கட்டடத்தின் அடிப்பகுதியை தோண்டிப் பார்த்தாலும் அவற்றில் ஏதேனும் எச்சம் கிடப்பதற்கு வாய்ப்புண்டு. சோமநாதபுரம் கோயில், பள்ளிவாசலை இடித்து விட்டுத்தான் கட்டப்பட்டது என்கிறேன் நான். அங்கும் அகழ்வாராய்ச்சி நடத்துங்கள்.

மேலும், பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்று பங்காக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்ட மூன்று நீதிபதிகளும், கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மஸ்ஜித் எழுப்பப் பட்டதா என்பதில் முட்டிக்கொள்கின்றனர்; முரண்படுகின்றனர்.

நீதிபதி சுதிர் அகர்வால்;
அந்த கட்டிடம், ஏற்கனவே அங்கிருந்த முஸ்லிம் அல்லாத மத வழிபாட்டுத் தலத்தை (உதாரணம்: இந்து கோவில்) இடித்து விட்டு கட்டப்பட்டது.

நீதிபதி டி.வி.சர்மா;
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்தில் மசூதியை பாபர் கட்டினார்.

நீதிபதி எஸ்.யு.கான்;
மசூதியை கட்டுவதற்காக எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கோவில்கள் அழிந்து விட்டிருந்தன.

மேலே உள்ள நீதிபதிகளின் வாதத்தை பாருங்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் கட்டடம்[பாபர் மஸ்ஜித்] கட்டப்பட்டது என்கின்றனர் இருவர். இன்னொருவர் இல்லை என்கிறார். இதில் எது உண்மை என்று அவர்களுக்கே வெளிச்சம். மேலும், மசூதியை கட்டுவதற்காக எந்த கோயிலும் இடிக்கப்படவில்லை என்ற நீதிபதி கான் கூற்றுப்படி பார்த்தால், அங்கே ராமர் கோயில் இருக்கவில்லை என்றும், இல்லாத ஒன்றுக்காக அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெளிவாகிறது. எனவே பாபர் மஸ்ஜித் இடம் முழுக்க முழுக்க முஸ்லிம்களிடமே வழங்கப்பட்டிருக்கவேண்டும் அதுதான் நீதி. ஆனாலும் நீதி கொல்லப்பட்டிருக்கிறது.

இது, சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆதாரத்துக்கும் எதிராக அப்பட்டமாய் பட்டப்பகலில் பலர் பார்க்க கொஞ்சம்கூட வெட்கம் இன்றி குற்ற உணர்வின்றி நடத்தப்பட்ட காட்டுமிராண்டி கற்பழிப்பு வன்முறை போர்.

குற்றுயிரும் குலையுயிருமாய் பிறப்புறுப்பு கிழிந்துபோய் ரத்தம் ஓட நடுத்தெருவில் அம்மணமாய் செத்துக்கிடக்கின்றாள்… மூன்று கோட்செக்களால் கற்பழிக்கப்பட்டு வீசி எறியப்பட்ட நீதிதேவதை… கண்கள் மட்டும் இன்னும் அதே கட்டப்பட்டநிலையில்…

இந்த பிறேதத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் எப்போது கருமாதி என்று தெரியவில்லை.

Dear Mr. UFO,

I thank you for your participation. We will continue our discussion.

இப்போ ஒரு இடம் ஒருத்தருக்கு வேணும் என்றால் முதலில் அதை வன்முறை செய்து இடித்துவிடவேண்டும். பிறகு ஏதாவது கதை சொல்ல வேண்டும் ராமரு பீமரு என்று. அப்புறம் தொல்லியல் துறை ஆராய்ந்து இதற்க்கு முன் அந்த இடத்தில ஏதோ கட்டிடம் இருந்தது என்று அறிக்கை கொடுக்கும். நீதிபதிகள் இடித்த கதையை,இடுக்கப்பட்ட கட்டிடத்தை , வன்முறையை அதை தொடர்ந்து நடந்த கலவரத்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு …..அட போங்கடா நீங்களும் உங்க நீதியும்..(edited).

(பலரும்) பார்பன கும்பலும் , பார்பன அடிவருடிகளும்மே இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இந்த மசூதி இடிக்கப் பட்டது மிகவும் தவறானது, அடாவடியானது என்பதை பலமுறை சொல்லி இருக்கிறோம்.

இந்த வழக்கு நிலத்தின் டைட்டில் யாருக்கு என்பது! இது ஒரு சிவில் கேசே.

மற்றவை கிரிமினல் கேசுகள. அவற்றை சம்பந்தப்பட்ட அரசுகள் தொடர்ந்து முனைப்புடன் நடத்த வேண்டும்.

அதே நேரம் தொல்லியல் துறை நிபுணர்கள் உட்பட பலரும் அங்கே போய் ஆராய்ந்து தங்கள் கண்டறிந்ததை விளக்கி யுள்ளனர். இது பற்றி தொடர்ந்து கட்டுரை கள் வெளியாகும்.

தொல்லியல் துறை நிபுணர்கள் நியாயம் இல்லாதவர்கள் என்பது போல எழுதுவது , நியாயம் அல்ல.

அவரவர்கள் தீர்ப்பு இப்படித்தான் வர வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டு , அப்படி இல்லாத போது கொச்சைப் படுத்தி பேசுவது சரி அல்ல.

இந்த தீர்ப்பை பிரபல கவிஞரான ஜாவித் அக்தர் வரவேற்று இருக்கிறார் . அவர் பார்ப்பன அடி வருடியா?

மதக் காழ்ப்புணர்ச்சி சாதிக் காழ்ப்புணர்ச்சி ஆகிவற்றை மனதில் வைத்து இருந்தால் எந்த தீர்ப்பும் திருப்தியாக இருக்க முடியாது.

இரண்டு பக்கமும் உள்ள மத அடிப்படைவாதிகளை வலுப்படுத்தும் விதமாக உங்கள் கருத்து அமைந்து உள்ளது.

மசூதி இடிக்கப் பட்டது, இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மனசாட்சி யிலும் விழுந்த அடி என்பதாகவே நாம் உணர்கிறோம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வழிபாட்டு தளமும் பாது காக்கப் பட வேண்டும். டிஸ்பூட் இருந்தால் கோர்ட்டின் மூலம் மாத்திரமே தீர்ர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுமே நம் நிலைப் பாடு.

Dear Tiruchikkaaran, At the outset I would like to appreciate your interest in the Ayodhya dispute. You may be aware of the Calcutta Quran petition by Chandmal Chopra. NO COURT CAN SIT ON JUDGEMENT ABOUT A MATTER OF FAITH. Please do not view the Ayodhya dispute as a property suit. The detailed analysis of Justice Agarwal has highlighted this point. Mr. UFO and many others who have commented about Ayodhya dispute are unaware of the efforts and hardship undergone by the Hindus for centuries to establish the right of Hindus over the Ramajanmabhoomi. Our ancestors have fought 78 times and about 4 lakh Hindus have sacrificed their lives for establishing our right over that sacred place. The wrong propoganda by the media and the mis-guided secularists have repeatedly spoiled the atmosphere by mentioning this dispute as a contentious issue between Hindus and Muslims. What relationship does the alien invader Babur has with Indian Muslims? When the Indonesian Muslims adore Rama as Prabhu Ramachandra Ji, why not the Muslims in India?

//NO COURT CAN SIT ON JUDGEMENT ABOUT A MATTER OF FAITH.//

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இப்போது சென்னையில் எனக்கு ஒரு பிளாட் (plot) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். யார் வேண்டுமானாலும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து எங்களுடைய FAITH அடிப்படையில் எந்த கோர்ட்டும் தலை இடக் கூடாது என்று சொல் முடியுமா?

சட்டம், நீதி எல்லாம் அம்போ தானா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: