Thiruchchikkaaran's Blog

அயோத்தி தீர்ப்பு நாளில் அமைதி காப்போம், என்றும் அமைதி காப்போம், மனிதத்தைக் காப்போம்.

Posted on: September 29, 2010


 

அயோத்தி தீர்ப்பு நாளில் அமைதி காப்போம், என்றும் அமைதி காப்போம், மனிதத்தைக் காப்போம், என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம். 
தமிழ் இந்து தளத்தில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக நம் அந்த தளத்துக்கு அனுப்பிய ஒரு பின்னூட்டத்தை இங்கே கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.
இந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா, அதை  இடித்து  மசூதி கட்டினார்களா  என்பதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
 இந்த நிலத்திற்கான டைட்டில் பற்றிய தீர்ப்பு நாளை வெளியாக  இருக்கிறது. 
இந்த தீர்ப்புக்காக காத்து இருக்காமல் அவசரப் பட்டு வேகம் காட்டி மசூதியை உடைத்ததால் இந்து மதத்திற்கு, இந்துக்களுக்கு , இராமரின் கொள்கைக்கு , அவரின் புகழுக்கு பின்னடைவு  ஏற்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்ந்து இருக்கிறீர்களா?
இராமரின் முக்கிய சிறப்பே அவர் அயோத்தியின் ஆட்சியை  விட்டுக் கொடுத்ததுதான். கைகேயி கேட்டு இருந்தால் எப்போதிக்குமாக கூட ஆட்சியை விட்டுக் கொடுத்து இருப்பார்.  சரி, அவர் விட்டுக் கொடுத்ததைப் போல எல்லோரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் – ஆனால் இப்படி அடாவடியாக உடைப்பது இராமரின் கொள்கைக்கு பொருத்தமானதா?
ஸ்லம் டாக் மில்லியனர்- அது ஒன்னும் சிறந்த படம் போல எனக்குத் தோன்றவில்லை. ஆனால்  விருது எல்லாம் குடுத்து இருக்கிறார்கள். அதிலே கூட இராமரைப்  பற்றி ஒரு கேள்வி கேட்பது போலவும், அது சம்பந்தமாக  கலவரம் நடந்தது போலவும், ஒரு சிறுவனை இராமர் போல வேடமிட்டு நிற்க வைத்து காட்டி இருப்பார்கள்.
சரி, இராமரின் புகழுக்கு பின்னடைவு ஏற்பட்டது – அதை விடுங்கள். அதை விட முக்கியம் அவருடைய கொள்கைகள்.  இராமர் தன்னை பற்றிக் கவலைப் படுவதை  விட,  எல்லோரும்  மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதியவர்.
இராமர் இருந்திருந்தால் அவர் இப்படி தனக்கு கோவில் கட்டுவதாக  சொல்லிக் கொண்டு அனுமதியின்றி இடித்ததை ரசித்து இருப்பாரா? அந்த மசூதி அல்லது சிலர் சொல்வது போலக் கட்டிடம் இடிக்கப் பட்டதால் இலட்சக் கணக்கான இஸ்லாமியரக்ள மன வருத்தம் அடைந்துள்ளனர். அந்த மன வருத்தம், இராமரே அதைப் பார்த்து மிக வருந்தி இருப்பாரா இல்லையா என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். 
 இராமர் ஆயுதம் ஏந்தியது காப்பதற்கு தான், அப்பாவிகளைக் காப்பதற்கு தான்.  அப்பாவியான ஒருவரை தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க  சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார்.  குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு?அந்த மசூதியின் மீது கடப்பாறையை பாய்ச்சியது இராமனின் பினாமினா (Phenomena) மீது பாய்ச்சியது போலத்தான்.
உலக்குக்கே வழி காட்ட வேண்டிய  நிலையில் இந்து மதம் உள்ளது. வெண்ணை பொங்கும் நேரத்திலே தாழியை உடைக்க வேண்டுமா? இதில் விவேகானந்தரையும்  இழுக்கிறீர்கள். இந்துக்கள் சர்ச்சுக்கு செல்கிறார்கள. மசூதிகளைக் கட்டித் தருகிறார்கள், அது நல்லது என்று விவேகானந்தர் சொல்லவில்லையா? உடைக்கப் பட்ட கோவில்களை தான் திருப்பி எழுப்ப சொன்னார். மசூதி அல்லது சமாதி என்று சொல்லப் படுகிற இடத்தை பலவந்தமாக உடைத்து அதிலே கோவில் கட்டலாம் என்று சுவாமி ஒரு போதும் எண்ணக் கூட மாட்டார்.
இந்து மதமும் அடாவடி, அராஜக செயல்களை நம்பும்,  இறங்கும் மதம் என்று ஆக்கி  விட்டால், நாளைய தலை முறையினர்  மன்னிக்க மாட்டார்கள். உலகத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் , ஒளியையும் உண்மையையும் தரக் கூடிய ஒரு மதத்தை சரியாக சிந்திக்காமல் தவறான பாதைக்கு கொண்டு போக் வேண்டாம். அப்படிக் கொண்டு போவது எளிதல்ல.
 
வரலாற்றின் மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறீர்கள். உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இந்து மதத்தை அது எப்போதும் இருந்தது போல அமைதியான பாதையில் அழைத்து செல்ல முயற்சி செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
அயோத்தி தீர்ப்பு நாளில் அமைதி காப்போம், என்றும் அமைதி காப்போம், மனிதத்தைக் காப்போம், என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம். 
Advertisements

2 Responses to "அயோத்தி தீர்ப்பு நாளில் அமைதி காப்போம், என்றும் அமைதி காப்போம், மனிதத்தைக் காப்போம்."

///அயோத்தி தீர்ப்பு நாளில் அமைதி காப்போம், என்றும் அமைதி காப்போம், மனிதத்தைக் காப்போம்,///

பெரும்பாலானவர்களின் எண்ணமும் இதே தான்.என்ன ஆகுமோ என்ற ஒரு வித அச்சத்தை தவிர்க்க முடியவில்லை.

பின் குறிப்பு : பஸ், ரயில் பயணங்கள், மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்ப்பது புத்திசாலித் தனம்.

ரதயாத்திரை என்ற ஒன்றை ஆரம்பித்ததே கலவரத்தை தூண்டி குளிர்காயத்தான். ப ஜ க விற்கு வேறு ஏதும் கொள்கைகள் என்று இல்லையே. அதனால் ராமன் பெயரை சொல்லித்தான் பிழைப்பு நடத்தியாகணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: