Thiruchchikkaaran's Blog

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி 1

Posted on: September 25, 2010


 

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி  1  

( மீள் பதிவு ) 

இந்திய‌ ச‌முதாய‌ம் ப‌ல‌ சாதிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌தாக‌ உள்ள‌து. இந்த‌ சாதி அமைப்பு உருவான‌து ப‌ற்றி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் கொடுக்க‌ப் ப‌ட்டு உள்ளன‌.

ந‌ம்முடைய‌ ஆய்வு இந்த‌ சாதி பிரிவினை முடிய‌வும், ஒரே ச‌முதாய‌மாக‌ உருவாக‌வுமான‌ வ‌ழி முறைக‌ளைப் ப‌ற்றிய‌து ஆகும்.

 இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து? அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து. ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌ கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர். ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.

சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னுக்கு த‌ன்னால் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான். எந்த‌ அளவுக்கு ஒரு ம‌னித‌ன் க‌னவானாக‌ இருக்கிறானோ, அந்த‌ அள‌வுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து. எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து,  ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது. வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும்.

எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது. மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!

மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது. அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.

நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

ஆனால் சாதிகளை அழிக்க பலருக்கு மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர். சட்டம் , ஒழுங்கு, நீதி இவை நம்மைக் காக்கும் என்று எண்ணவில்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் வலிமை இல்லாத சூழல் உள்ளது.

 தமிழ் நாட்டிலே யாரும் தான் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியைப் போடவில்லை. ஆனால் தக்க நேரத்திலே அதை வெளிப்படுத்தி, தன்னுடைய பெயரோடு சேர்த்து போஸ்டர் அடிப்பார்கள்.

தமிழ் நாட்டிலே எத்தனை அரசியல் வாதிகள் மனப் பூர்வமாக  பூர்வமாக சாதிகள மறைந்து ஒன்றுபட்ட  சமுதாயம் உருவாக வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது கணிக்க அரிதான ஒரு விடயம்.அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

எனவே நமக்கு முன்னே உள்ள பணி எவ்வளவு சிக்கலானது என்று எண்ணுங்கள். ஆனால் நம்பிக்கையை விடாதீர்கள்.

இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம்.

தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது.

 இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.

 

Advertisements

15 Responses to "சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் -பகுதி 1"

//ஆனால் சாதிகளை அழிக்க பலருக்கு மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர். //

மிகவும் உண்மையான வார்த்தைகள். இதைப் பல பேர் என்னிடமும் கூறியிருக்கிறார்கள்.

//தமிழ் நாட்டிலே எத்தனை அரசியல் வாதிகள் மனப் பூர்வமாக பூர்வமாக சாதிகள மறைந்து ஒன்றுபட்ட சமுதாயம் உருவாக வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது கணிக்க அரிதான ஒரு விடயம்.//

நிச்சயம் ஒருத்தர் கூட கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் தானே போட்டியிடுகிறார்கள்.

நன்றி சகோதரர் திரு. அன்பு அவர்களே,

தளத்துக்கு வருகை தந்து கருத்துப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

இந்த தளத்தில் உள்ள பலவேறு கட்டுரைகளையும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து, உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யும் படி கோருகிறேன்.

//ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது.

இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.//

ஆமாங்க. அடல்ஸ் ஒன்லி திரைப்பட போஸ்டர்களைப் போல் சென்னையில் பல வாடகை வீட்டுக்களுக்கு முன்பாக ‘பிராமின் ஒன்லி’ போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பார்பனர் நடத்தும் உணவு விடுதிகளில் அவ்வாறு இல்லை.

இப்படி யாரவது போர்டு மாட்டி இருந்தால் அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்கேயாவது இப்படி போர்டு மாட்டி இருந்தால் அதை புகைப் படம் எடுத்து அனுப்பலாம். எந்த தெரு, எந்தப் பகுதி என்பதை சுட்டிக் காட்டும் வகையிலே புகைப் படம் இருக்க வேண்டும். இப்படி ஆதாரத்தோடு எடுத்து உங்கள் தளத்திலேயே கட்டுரை வெளியிடலாமே.

வெறுமே கட்டுரை வெளியிடுவதோடு நிற்காமல் இது வன் கொடுமை சட்டத்தின் கீழ் வரக் கூடியதா என்று வழக்கரிங்கர்களிடம் கலந்து ஆலோசிக்கலாமே. அப்படி இருந்தால் காவல் துறையில் புகார் செய்யலாமே.

இதை எல்லாம் செய்ய கால தாமதம் செய்ய வேண்டியதில்லை. நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?

அதே நேரம் எதுவாக இருந்தாலும் சட்ட பூர்வமாக செய்ய வேண்டும், சட்டத்தை மீறி எதுவும் செய்வது நமக்கு உடன் பாடில்லை.

எப்படி இருந்தாலும் இப்படி போர்டு போட்டு வைப்பது அநகாரிக செயல் என்பதை ஆதரத்தோடு கட்டுரை வெளி இடுவதில் தவறு இல்லை. நீங்கள் வெளியிடுங்கள். நானும் தனிக் கட்டுரையாகப் போட்டு , உங்கள் கட்டுரைக்கு இணைப்பு கொடுக்கிறேன்

கட்டுரையின் நோக்கம் சாதிகளற்ற சமத்துவம.

அதே நேரத்தில் பார்ப்பனர் என்று சொல்லப் படுபவர்கள மீது வெறுப்பு பாராட்டி திட்டி தீர்த்தால் போதும் என்ற ரீதியில் செயல் பட்டால் அங்கே ஒடுக்கப் பட்டவரின் வாயில் பீ திணிப்பவன் திணித்துக் கொண்டே இருப்பான், எது நடந்தாலும் அவங்க பார்ப்பானைத் தான் திட்டுவாங்க, என்கிற ரீதியில் எண்ணம் உணடக்குவது சமத்துவத்துக்கு உதவாது.

அதற்காக பிற பிரிவினரை எதிர்க்க வேண்டும், திட்ட வேண்டும் என்று நான் சொல்லவில்லை, நம்முடைய நோக்கம் இணைப்பே.

எல்லோரையும் அன்பு செய்யுங்கள், சாதி அடிப்படையில் இழிவு செய்வது அநாகரீகமான , மனிதாபிமானம் இல்லாத செயல் என்பதை எல்லோருக்கும் புரிய வையுங்கள்.

சாதி எண்ணாம் மக்கள மனதில் மறைந்து அன்பும், மரியாதையும் , பண்பும் வளர வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறோம்.

வழக்கம் போல பார்ப்பனக் காழ்ப்புணர்ச்சியை மட்டும் காட்டி எழுதி இருக்கிறீர்கள். முற்போக்காக சிந்தியுங்கள்.

நண்பர் அன்பு ஒரு சிறப்பான முற்போக்கு கட்டுரையை தந்து இருக்கிறார்.

http://kurippugal.wordpress.com/2010/09/17/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

திரு கோவி.கண்ணன் அவர்களே,

///சென்னையில் பல வாடகை வீட்டுக்களுக்கு முன்பாக ‘பிராமின் ஒன்லி’ போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.///

இது எனக்கு ஒன்றும் தவறாகத் தெரிவில்லை.(சில விதிவிலக்குக்களைத் தவிர்த்து )பிராமணர்கள் அசைவத்தை உண்பதில்லை.அதன் மனமும் கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை.இதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.நான் பணிபுரிந்த ஒரு அலுவலத்தில் ஒரு விருந்து ஏற்ப்பாடு செய்யப்பட்டது. அந்த விருந்தில் அசைவ பிரியாணி,மற்றும் அசைவ வகைகள் இருந்தன.அந்த அலுவலகத்தில் ஒரு பெண் மட்டும் பிராமின் வகுப்பைச் சேர்ந்தவர்.அவர் விருந்துக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தான் கொண்டுவந்த சாப்பாட்டை சாப்பிட்டிருந்தார்.நாங்கள் அலுவலகத்திலேயே அசைவ உணவை உண்டோம்.அந்த அசைவ உணவின் வாசம் தாங்க முடியாமல்,அந்தப் பெண் அலுவலகத்திற்குப் பின் சென்று வாந்தி எடுக்க நேரிட்டது.

ஒரு வீட்டிற்கு யாரை குடி வைக்க வேண்டும் என்பது அந்த உரிமையாளரைப் பொறுத்தது.அதனால் இதைப் போன்ற அசைவ வாசத்தை விரும்பாமலும், தன் வீட்டில் அசைவம் சமைக்கப் படுவாதை விரும்பாததுமே இதற்க்கு முக்கியக் காரணமாகப் படுகிறது.இந்த அசைவ விசயமே முக்கியக் காரணம்.

இரண்டாவது தான் ஜாதி அபிமானம் .இதையும் மறுக்க முடியாது.நாங்கள் வசிக்கும் பகுதியில் பல ஜாதியினர் வீடு கட்டியுள்ளனர்.அவர்கள் போர்டு எழுதி வைக்காவிட்டாலும் பெரும்பாலும் தங்கள் சாதியினருக்கே வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர்.(நான் இருப்பது தென் மாவட்டத்தில்.)
.என்னைப் பொறுத்தவரை இவன் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்க்காக வெட்டிக் கொலை செய்வது தான் மிகப் பெரியத் தவறு.

அதனால் நீங்கள் கூறும் இந்த போர்ட் சமாச்சாரம் கண்டிக்கும் அளவுக்குத் தவறல்ல என்பது என் கருத்து.

‘பிராமின் ஒன்லி’ என்று இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை .ஆனால் இஸ்லாமியார்களுக்கு வீடு தர பொதுவாகவே பல இந்துக்கள் மறுக்கிறார்கள் என்பது நான் அறிந்த உண்மை.

// சென்னையில் பல வாடகை வீட்டுக்களுக்கு முன்பாக ‘பிராமின் ஒன்லி’ போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பார்பனர் நடத்தும் உணவு விடுதிகளில் அவ்வாறு இல்லை. //

பிராமணனின் வீட்டிற்கு குடித்தனம் செல்வோர் கருவாட்டு குழம்பை விரும்புபவராக இருந்தால்..?

ஆனால் பிராமணர் உணவு விடுதியில் நிச்சயமாக அசைவ வாசனை இருக்காதல்லவா..?

மேலும் தற்காலத்தில் “ப்ராமின் ஒன்லி” என்ற போர்டைக் காட்டிலும் நாகரீகமாக “ஒன்லி வெஜிடேரியன்” என்றே இருக்கிறது;ஆனால் பிராமணர்கள் இந்த தேசத்தில் விதைத்துள்ள விஷ வித்துக்கள் வேரறுக்கப்பட இன்னும் நூறு ஆண்டுகளானாலும் ஆச்சரியமில்லை.

ஒரு பிராமணன் யாகத் தீயில் பொசுங்கிக் கொண்டிருக்கும் பசுவின் இறைச்சியை புசித்து போதை தரும் சோம பானத்தை பருகினாலே யாகம் வெற்றிகரமாக நிறைவேறும் என்ற வேதப் பிரமாணத்தைக் கைக் கொண்டாலே அனைத்து குழப்பங்களும் நிறைவேறும்;

பௌத்தம் மற்றும் ஜைன மார்க்க எழுச்சியைக் கட்டுப்படுத்தவே இன்றைய ப்ராமணர்கள் சைவத்துக்கு மாறினர் என்பது வரலாறு.

திருச்சிக்காரன் இதற்கும் ஆதாரம் கேட்கவேண்டாம்;ஆதாரம் தேவையானால் திரும்ப அஞ்சாம் கிளாஸ் சேர்ந்து பள்ளிப்படிப்பையும் பிறகு கல்லூரி படிப்பையும் முடித்து வாருங்கள்;அதுவரை காத்திருக்கிறோம்.

சாதிகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைப்பதே நமது நோக்கம்.

பார்ப்பனர்கள் என்பவர்கள சாதியை உருவாக்கினார்களா என்பது பற்றி பல முறை நாம் விளக்கம் விளக்கம் கொடுத்து இருக்கிறோம். சாதிகள் என்பவை தொழில் அடிப்படையில் உருவாகி இருக்கிறது, ஒரு தொழிலை செய்யும் மக்கள் தாங்கள் ஒரு சமூகமாக வாழ ஆரம்பித்து சாதிகள் உருவாகி உள்ளன.

அப்படி பிரிந்த மக்கள் இப்போது எல்லா பிரிவினரும் எல்லா தொழில் துறைகளிலும் ஈடுபடுகின்றனர். எல்லாத் தொழிலையும் செய்கின்றனர். எனவே சமத்துவ சமுதாயம் உருவாக இது சரியான சூழ்நிலை. மக்கள் இணைப்பு வேகமாக நடை பெறுகிறது. அது தொடரட்டும்.

அக்காலத்தில் அவரவர்கள தொழிலுக்கும், இடத்துக்கும் ஏற்ப சாதிகளை உருவாக்கிக் கொண்டு உள்ளனர். செட்டியாரை எடுத்துக் கொண்டால், நகரத்து செட்டியார், மனை செட்டியார், கோமுட்டி செட்டியார்…. என்று எத்தனை பிரிவுகள்.

ஆசாரியினரை எடுத்துக் கொண்டால் பொன் ஆசாரி, மர ஆசாரி… இப்படி பல பிரிவுகள். இப்படி அவரவர் தொழிலுக்கும், வசிக்கும் இடத்துக்கும் ஏற்ப சாதிகள் வெவ்வேறு கால கட்டத்திலே உருவாக்கி இருக்கின்றன.

அக்காலத்தில் பணம் சம்பாரிப்பதில் அதிக ஈடுபாடு காட்டாத , ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு காட்டியவர்கள் பார்ப்பனர் ஆக அமைக்கப் பட்டனர்.

சமூகத்தின் தலைவன் அரசன், மற்றும் அமைச்சர் அதிகாரிகள்.

செல்வத்தை வைத்து இருந்தவர்கள் சில சாதியினர்.

பார்பான் என அழைக்கப் பிரிவினர், சண்டை சச்சரவில் ஈடு படாமால், எளிய வாழ்க்கை வாழ்ந்ததால் அவர்கள் மதிக்கப் பட்டனர்.

இவ்வளவு சாதிகள், இருக்கின்றன எனக் கணக்கு எடுக்கப் பட்டதே பிரிட்டிசார் காலத்தில் தான். அதற்க்கு முன்பு மக்கள தாங்களாக பிரித்துக் கொண்டதுதான் சாதிகள்.

இவற்றை எல்லாம் வந்து பார்ப்பனர்கள் உருவாக்கிக் கொடுத்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அக்காலத்தில் பார்ப்பனர்கள் எல்லா சமூகத்தினரி தொழில் பிரிவுகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே சாதிகள் என்பவை மக்களால் உருவாக்கிக் கொள்ளப் பட்டவை என்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. வெவேறு கால கட்டத்தில் வெவ்வேறு சாதிப் பிரிவுகள் உருவாக்கி உள்ளன. இதற்க்கு உதாரணமாக தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்களில் ஐயர் மற்றும், ஐயங்கார் பிரிவுகள் பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே உருவாகி இருக்கின்றன. இராமனுஜரை ( விசிஷ்டா துவைதக் கோட்பாடு) பின்பற்றியவர்கள் தங்களை ஐயங்கார் என அழைத்துக் கொண்டுள்ளனர். ஆதி சங்கரரை பின்பற்றியவர்கள் (அத்வைதக் கோட்பாடு) அயர் எனவும் இரண்டு சாதிகளாக பிரிந்து கொண்டுள்ளனர். எனவே வெவ் வேறு கால கட்டத்தில் பல்வேறு சாதிகள் உருவாகி உள்ளன.

மேலும் சாதிப் பிரிவினைகள் நிரந்தரமாக இருந்ததால் அதிக பலன் அடைந்தது விவசாயம், தொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டவர்களே. ஏனெனில் அவர்களுக்கு தங்களின் பண்ணைகளில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது உறுதி செய்யப் பட்டது.

நாம் இதை எல்லாம் எழுதுவது ஏன் என்றால், இப்போது சமூகத்தில் ,அரசியலில் முக்கியத்துவம் இல்லாத ஒரு பிரிவை கட்டம் கட்டி தாக்குவதால், மற்ற பிரிவை சேர்ந்த சாதி உணர்வாளர்கள் , அதை தங்களுக்கு கேடயமாக வைத்துக் கொண்டு, தாங்கள் சாதி உணர்வுடன் இருப்பது தவறு இல்லை எனற எண்ணத்திலே செயல் படும் படி ஆகி விடக் கூடாது என்பற்க்கே. எல்லோர் மனதிலும் இருந்க்கும் சாதி உணர்வு அகற்றப் பட வேண்டும், அதற்கு வெறுப்புணர்ச்சி மறைந்து அன்புணர்ச்சி உறவாக வேண்டும் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டுகிறோம்.

சாதி அடிப்படையிலான வெறுப்புணர்ச்சி யை, சாதிக் காழ்ப்புணர்ச்சியை கை விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

///அக்காலத்தில் அவரவர்கள தொழிலுக்கும், இடத்துக்கும் ஏற்ப சாதிகளை உருவாக்கிக் கொண்டு உள்ளனர்///

இதையே பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.இதுவே உண்மை.கொஞ்சம் பகுத்தறிவை பயன்படுத்தினாலே இது எளிதில் புலனாகும்.

நன்றி, திரு. தனபால் அவர்களே

ஆதாரம் கேட்க வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி விடுகிறீர்கள்.

எல்லா வகுப்பிலும் ஓரளவாவது வரலாறு படித்திருக்கிறேன், அது ஓரளவுக்கு நினைவிலும் இருக்கிறது. வரலாறு என்பது பள்ளியில் படிப்பதோடு முடிந்து விடாது. .

பார்ப்பனர்களின் உணவுப் பழக்கங்கள் இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியாக இருந்திருக்கவில்லை.
அவை வெவ்வேறாக இருந்திருக்கின்றன.

சமண, பவுத்த மதங்களுக்கு முன் பார்பனர்கள் அசைவ உணவு உண்டார்கள என்பதற்கான ஆதாரமோ , குறிப்போ அஞ்சாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருக்கிறதா? அதை ஸ்கேன் செய்து அனுப்பினால் எல்லோரும் தெரியும் படியாக அறிக்கை செய்யலாம்.

ஆனால் நீங்கள் ஆதாரம் கேட்க வேண்டாம் என்று சொல்லியதில் இருந்தே ஆதாரம் இருக்கிறதா என்கிற ஐயத்தை உருவாக்குகிறது.

//பௌத்தம் மற்றும் ஜைன மார்க்க எழுச்சியைக் கட்டுப்படுத்தவே இன்றைய ப்ராமணர்கள் சைவத்துக்கு மாறினர் என்பது வரலாறு.//

நீங்கள் தனியாக வரலாறு எழுதுகிறீர்களா? அதைப் படிக்க மறுபடியும் காலேஜ் போக வேண்டுமா?

வேள்விகளில் உயிர்ப் பலி இல்லாத வேள்விகளே அதிகம். விஸ்வாமித்திரர் தாங்கள் வேள்வி செய்யும் போது தாடகையும் , மாரீசனும் அனைத் வேள்வி குண்டத்திலே மாமிசத்தைப் போட்டு வேள்வியின் புனிதத்தைக் கெடுப்பதாகவும், இன்னும் பல வகையிலும் தொல்லை தந்து தங்களை வேள்வி செய்ய விடாமல் தடுப்பதாகவும் எனவே வேள்வியைக் காக்க , இராமனை தன்னுடன் அனுப்புமாறும் கோருகிறார். இவ்வாறாக பெரும்பாலான வேள்விகள் உயிர்ப் பலி இல்லாத வகையில் இருந்ததை அறிகிறோம்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால் “Vegetarian only” இல்லங்க வைக்கணும்.

“Vegetarian only” என்ற போர்டை வைப்பதுதான் சரியானது.

Bhramins only என்று போர்டு வைப்பது சரியல்ல, அது சாதீய உணர்வை தக்க வைத்துக் கொள்வதாகவே இருக்கும்.

அதே நேரம் என்கிற போர்டை இது வரை நான் எங்கும் பார்க்கவேயில்லை. நானும் சில வருடங்களுக்கு முன் சென்னையிலே வாடகைக்கு வீடு தேடி அலைந்து இருக்கிறேன். ஆனால் Bhramins only இப்படியான ஒரு போர்டை நான் பார்த்தது இல்லை.

வானம் எனக்கொரு போதி மரம்
சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் , என்று பெயர்கள் பாவனையில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன இளைஞர்களில் பலர் ஐயர்களையும்,செட்டி களையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு – ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?

நல்லையா தயாபரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: