Thiruchchikkaaran's Blog

தன்னுடைய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைவராக பெரியார் நியமிக்காதது ஏன்?

Posted on: September 22, 2010


ஒடுக்கப்  பட்ட பிரிவை சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராக வர வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினாரா?

பார்ப்பனர்கள் இருபது சதவீதம் உள்ள உத்திர பிரதேசத்திலேயே ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த திரு.  மாயவதி அவர்கள் முதல்வராக அமர்ந்து சிறப்பு செய்து இருக்கிறார்.

ஆனால் தமிழ் நாட்டில் ஒடுக்கப் பட்ட பிரிவை யாரும் சேர்ந்த இது வரை  முதல்வராக வர முடியவில்லையே ஏன்?

பார்ப்பனர்கள மீது உள்ள வெறுப்பைக் காட்டுவதிலே முக்கியக் கவனம் செலுத்தி இருக்கிறார் பெரியார்.

சமூக  இணைப்பை உருவாக்குவதற்கு பதிலாக சாதி உணர்வை தூண்டுவதாக அமைந்து  விட்டது அவருடைய பிரச்சாரம்.

சாதி வெறியின் காரணமாக ஒரு மனிதன்  இன்னொரு மனிதனின் வாயில் மலத்தை திணிக்கும் கொடுமை தமிழ் நாட்டிலே தான் நடக்கிறது.

பல்வேறு பிரிவினரும் டேய் நான் … இந்த சாதிடா, எங்க சாதி அப்படிப்பட்ட சாதி என்று பெருமை பேசிக் கொண்டு பிற பிரிவினரை சிறுமைப் படுத்தும் நிலையே உள்ளது.

நாங்க ஆண்ட சாதிடா , அப்பிடிடா , இப்படிடா என்று உதார் விடும்படியான காட்சிகளைப் பார்க்கிறோம்.

 ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக வந்தால் எல்லா பிரிவினரும் ஆளும் மக்கள தான் என்பதை தெரியப் படுத்தி இருக்க முடியும் அல்லவா?  

தன்னுடைய  இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒடுக்கப்  பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைவராக பெரியார்   நியமித்து தானே ஒரு உதாரணமாக இருந்து இருக்கலாம் அல்லவா? தனக்கு பிறகாவது ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் இருக்கும் வண்ணம் ஒருவரை நியமித்து விட்டு செய்தாரா? 

தன்  கொள்கையை  பெரியார் உண்மையிலே தன்னுடைய இயக்கத்தில் அதை செயல் படுத்தினார?

மலை போன்ற செல்வத்தை ( கோடிகளோ, பல நூறு கொடிகளோ….) சொத்துகளைக் கொண்ட  இயக்கத்திற்கு தான் ஒருவர் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்கிற நினைப்பிலே செயல் பட்டு இருக்கிறார். 

மற்ற பிரிவினர் அந்த இயக்கத்தை வளர்க்கவில்லையா?

பல கோடி வருமானம் உள்ள இயக்கத்தை, பல இலட்சம் பேர் உறுப்பினராக உள்ள ஒரு இயக்கத்தை சமூக நீதி அடிப்படையிலே எல்லோருக்கும் சுழற்ச்சி முறையிலே வழங்காமல் தான் மட்டுமே ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற வகையிலே செயல் பட்டு  இருக்கிறார்.

தான் எந்த ஒரு சாதியை வெறுத்தோமா, அந்த சாதியை கீழே இறக்கினால் போதும், மற்றவர்கள் எப்படியாவது இருக்கட்டும் என்கிற போக்கையே காண்கிறோம். 

தனக்குப் பிடிக்காத ஒரு சாதியினரை சிறுமைப் படுத்தி கீழிறக்கினால்  போதும் என்கிற நோக்கத்திலே மட்டுமே பெரியார் கவனம் செலுத்தி வந்தாலே , அதிலேயே எல்லோரின் கவனமும் இருக்குமாறு செய்து விட்டதாலே,  இப்போதும்  தமிழ் நாடு சாதி உணர்வும், சாதி வெறியும் சாதீய அடக்கு முறைகளும் நிறைந்து காணப் படுகிறது.

எனவே பெரியாரின் சாதீயக் காழ்ப்புணர்ச்சிப் பிரச்சாரமானது தமிழ் நாட்டிலே சமத்துவ சமுதாயம் அமைய பெரிய தடையாக அமைந்து விட்டது என்பதை  சுட்டிக் காட்ட வேண்டியதாக உள்ளது.

இணைப்பு -1

சாதிகளற்ற சமத்துவ  சமுதாயம் தொடர்பான முந்தைய முக்கிய  பதிவுகள்:

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

Advertisements

45 Responses to "தன்னுடைய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைவராக பெரியார் நியமிக்காதது ஏன்?"

பல்லாயிரம் கோடி சொத்துகளைக் கொண்ட இயக்கத்திற்………………

அப்பா திருச்சி. திருச்சியோட மானத்தைக் கப்பல்லே ஏத்தாதப்பு! திருச்சி பெரியார் வாழ்ந்த இடம். போய் பெரியார் மாளிகையை,அங்கே நிற்கும் பழைய அவருடைய வேன்,எல்லாத்தயும் கொஞ்சம் பாரு. பல்லாயிரம் கோடீன்னா எத்தனை சைபர்னு தெரியுமா?

தலைமையெல்லாம் எப்படி வரும்னு தெரியுமா?

ஒருதரம் பெரிய அதிகாரிகள் பெரியாருக்கு. வரவேற்புக் கொடுத்தார்கள் .. அங்கே சொன்னார்,இத்தனை பேர் இருக்கிறீர்களே சென்னை உயர்நீதி மன்றத்திலே ஒரு தழ்த்தப்பட்ட நீதிபதி உண்டா,நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள் என்றார். முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியை அங்கே அமரவைத்தார்கள்.
குருடர்கள் யானையைப் பார்த்த கதையாக உள்ளது உமது எழுத்தெல்லாம். கொஞ்சம் படித்து விட்டு எழுதுங்கள். தெரியாததை உளறக்கூடாது.அது தான் உமக்கும் நல்லது.

நண்பர் தமிழன்,

நீங்கள் தயவு செய்து சென்னைக்கும் வந்து பாருங்கள்.

//சென்னை உயர்நீதி மன்றத்திலே ஒரு தழ்த்தப்பட்ட நீதிபதி உண்டா,நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள் என்றார்.//
நல்லது , இதை வரவேற்கிறோம். நாம் கேட்டது முதல்வர் பதவியைப் பற்றி, அதோடு அவரது இயக்கத்துக்கான தலைமைப் பதவியைப் பற்றி !

//பல்லாயிரம் கோடீன்னா எத்தனை சைபர்னு தெரியுமா?//

முன்பு பல கோடி , இப்ப பல்லாயிரம் கோடி – சரியா அண்ணா? அல்லது பல் நூறு கோடிகள், போதுமா? பல்லாயிரம் கோடிகள் மதிப்பு இருக்கும் என்பதாக நினைத்தே மகிழ்ச்சியோடு இருப்பார்கள. அவர்கள மகிழ்ச்சியை நீங்கள் கெடுத்து விட்டீர்கள்!

இன்னமும் பார்பன அர்ச்சக ரவுடிகள் கோவிலுக்குள் மற்ற அர்ச்சக மாணவர்களை விட மறுகின்றனர். தில்லையில் தேவாரம் பாட சென்றவரை அடித்து உதைத்தனர். அதற்க்கு காரணமாக அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை என்றும் வெளிப்படையாக கூறுகின்றனர். இவர்களோடு சமத்துவ சமுதாயம் தமிழர்களுக்கு தேவை இல்லை. பெரியார் பெயரை கேட்டாலே பார்பனர்களுக்கு எரியத்தான் செய்யும். என்ன செய்வது…

ஆலயங்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தனிக் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மற்றபடி ஒரு சில அர்ச்சகர்களுக்காக ஒரு பிரிவினரை கட்டம் கட்ட முடியாது. இரண்டு சீக்கியர்கள் செய்த கொலைக்கு எப்படி மொத்த சீக்கிய சமுத்தாயத்தையும் பொறுப்பாக்க முடியாதோ அதைப் போலத் தான் இதுவும்.

மற்றபடி இவர்களோடு சமத்துவ சமுதாயம் தேவை இல்லை, அவர்களோடு தேவை இல்லை என்றால் , ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொன்று சொல்வார்கள். உதாரணத்துக்கு சிலர் நாகப்பதனி (இது உதாரணத்துக்காக சொல்லப் படத்து) பிரிவு மக்களோடு சமத்துவ சமுதாயம் அமைக்க முடியாது என்று சொல்லலாம். இப்படி ஒவ்வொருவரும் சொன்னால் சமத்துவ சமுதாயமே அமைக்க முடியாது. அவரவர்கள் சாதிக்குள்ளே மட்டும் தான் சமத்துவ சமுதாயம் அமைத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனியாக சாலைகளோ, மேம்பாலங்களோ, ஆலைகளோ , சந்தைகளோ அமைத்துக் கொள்ள முடியுமா? ஒரு மதத்தினர் தாங்களே தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொண்டு, தங்கள் பிரிவு மக்களிடமே அதை விற்றுக் கொண்டு வாழ முடியுமா? எல்லோரும் சேர்ந்துதான் வாழ வேண்டும்.

சேர்ந்து வாழ அன்பு, நட்பு, நல்லிணக்கம்…. ஆகியவையே தேவை. வெறுப்புணர்ச்சி சேர்ந்து வாழ தடையை உருவாக்குகிறது. உங்களிடம் சாதிக் காழ்ப்புணர்ச்சியும் , குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராம் கடும் வெறுப்பும் துவேசமும், சாதி வெறியும் மட்டுப் படுத்த முடியாத அளவுக்கு இருப்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம்..

சமத்துவ சமூகத்துக்கு பெரிய தடையாக சாதித் துவேசமும், சாதி வெறியும் வளரும்படியாக வே பெரியாரின் கருத்தும், பிரச்சாரமும் அமைந்து விட்டது என்று எழுதி இருக்கிறோம். அதற்க்கு சரியான் உதாரணமாக உங்கள் கருத்துக்கள் உள்ளன. பெரியார் ஏற்றிய சாதி துவேச , சாதி வெறியை உங்ககளைப் போன்றவர்க்ளைடம் இருந்து எடுத்து சமத்துவ சமுதாயம் அமைக்கப் படும்௦- உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ . மக்கள் பிரிந்து மோதிக் கொள்வதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது!

ஒரு பிரிவினரை மட்டும் ஒதுக்குங்கள், அவர்களுடன் சமத்துவ சமுதாயம் தேவை இல்லை என்று நீங்கள போய் இன்னொரு பிரிவினரிடம் சொல்லிப் பாருங்கள், அவர்கள் மெதுவாக உங்களை ஏற இறங்கப் பார்த்து , இவர் இவ்வளவு சாதி வெறி உடையவராக இருக்கிறாரே, இந்த சாதி வெறியை நாளைக்கு நம்மிடம் காட்ட மாட்டார் என்ன நிச்சயம், என்று எண்ணி உங்களை விட்டு விலகி செல்வார்கள.கட்டம் கட்ட நினைப்பவன் கட்டம் கட்டப் படுவான். வெறுப்புக் கருத்துக்களை விட்டு, அன்புக் கருத்துக்களை கைக் கொள்ளுங்கள். சமரச, நல்லிணக்க, நாகரிக சமத்துவத்தில் இணையுங்கள்.

உங்களிடம் ஒரு சாதி மீதான பாசம் வெளிப்படையாக தெரிகிறது. அதுவும் அந்த சாதி தான் வெளிப்படையாக மற்ற சாதிகளை ஏற்க மறுக்கிறது. அந்த சாதி தான் எல்லா மக்களையும் ஏமாற்றி தான் மட்டும் பதவிகளை சலுகைகளை அனுபவித்து வந்தது. அந்த சாதி தான் தமிழின வெறுப்பு கொள்கை உடையதாக இருக்கிறது. ஆதலால் தமிழர்களுக்கு அந்த சாதியுடன் சமரசம் தேவை இல்லை. தமிழரை எதிரியாக இழிவாக கீழாக நினைக்கும் அந்த சாதியுடன் சமரசத்திற்கு இட மில்லை.
எல்லோரும் அப்படி இல்லை என்றால், தமிழ்நாடு பிராமண சங்கம் மூலமாக எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தை ஆதரிக்கட்டும். காம கொலைகாரன் ஜெயேந்திரனுக்காக வீதியில் இறங்கிய பார்பனர்கள் இந்த அர்ச்சக மாணவர்களுக்காக இறங்கட்டும்.அதன் பிறகு நாமும் அவர்களை சேர்த்து கொள்வோம் சமத்துவ சமுதாயம் அமைக்க.

எந்த ஒரு பிரிவினரை யாரவது வெறுத்தாலும், கட்டம் கட்டினாலும் நான் அதைக் கண்டித்தே வந்து இருக்கிறேன். நான் எழுதியவற்றை நீங்கள் படித்து பாத்துக் கொள்ளலாம். அயோத்தி தீர்ப்பு கட்டுரையில் இசுலாமியருக்கு எதிராக வெறுப்புணர்ச்சி பரப்பப் படக் கூடாது என்பதை வலி யுறுத்தி இருக்கிறோம்.

நீங்கள் தொடர்ந்து ஒரு சாதி பிரிவினரின் மீது உங்களின் காண்டுவெறியை காட்டி வருகிறீர்கள். அதனாலே அது தவறு என்று தொடர்ந்து எழுதி வருகிறோம்.

உங்களின் சாதி துவேசத்தை, சாதி வெறியை மறைக்கும் வண்ணம் என் மீது குற்றம் சொல்லுகிறீர்கள்.

தமிழரை அவர்கள எதிரியாக நினைப்பதாக எப்படி சொல்லுகிறீர்கள். அவர்களும் தமிழர்கள் தானே. அவர்களின் தாய் மொழியும் தமிழாகத் தான் இருக்கிறது. உங்களின் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பாக இருக்கிறது. அது சாதி வெறி நாட்டன்மைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களின் வாயில் பீ திணிக்கும் கொடூர செயலை செய்தது யார்? பார்ப்பனர்களா? இல்லையே. அப்படிப் பட்ட கொடூர பீ திணிப்புக் காரர்களைக் கூட நீங்கள் குறை சொல்லவோ, சமத்துவ சமுதாயத்தில் சேர்க்க மாட்டோம் என்று சொல்லவோ இல்லை. இவ்வாறாக உங்களின் பார்வை, எண்ணம் எல்லாமே எப்படியாவது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வெறுப்பை தூண்ட வேண்டும் என்கிற சாதி வெறியாகவே இருக்கிறது.

உங்களுடைய சாதி வெறி, சாதித் துவேச கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு, சமர, சமத்துவ, நாகரிக சமுதாயத்துக்கு ஏற்புடையது அல்ல.

தமிழ் நாடு பிராமணர் சங்கம் ஒட்டு மொத்த பார்ப்பனர்களின் பிரதி நிதி அல்ல. என்னுடைய பல பார்ப்பன நண்பர்கள் அதில் உறுப்பினர் இல்லை. அந்த அமைப்பு அவர்களைக் கட்டுப் படுத்தாது. ஜெயேந்திரருக்கு ஆதரவாக தெருவில் இறங்கியவர்கள் – அவர்கள தெருவில் இறங்கவில்லை- ஒரு மண்டபத்தில் உண்ணா விரதம் இருந்தனர் (அது கூட முதலில் ஒரு பள்ளியில் உண்ணா விரதம் இருந்தனர் , பிறகு அங்கே இருந்து கெட் அவட் சொல்லி விட்டதால் வேறு இடம் சென்றனர் என்று நினைவு ) அதிக பட்சம் போனால் ஐநூறு பேர் இருப்பார்கள். அவ்வளவுதான்.

அர்ச்சக மாணவர்கள் பிரச்சினை பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு தெரியவில்லை. பொதுவாகவே இப்போது பல பார்ப்பனர்கள் ஆன்மீகம், கோவில் போன்ற விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

அர்ச்சக மாணவர்கள் பிரச்சினையில் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று எதிர் பார்க்கலாம். இதிலே போராடுவது என்றால் எல்லா மக்களும் போராட வேண்டும் என்று சொன்னால் சரி. தனியாக பார்ப்பனரை மட்டும் கட்டம் கட்டி போராடு என்று சொல்லிக் கட்டளை போடுவது அடாவடியாக உள்ளது.

எல்லா சாதி துவேச கருத்துக்கும் அடிப்படையாக இருப்பது இந்த பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கோட்பாடே. அதன் தொடர்ச்சிதான் வாயில் பீ திணிப்பது , தனி குவளை எல்லாமே. அவ்வாறு செய்யும் நாய்களை நடு ரோட்டில் வைத்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இந்த கோட்பாட்டை மாறாமல் கட்டி காக்க அணைத்து வேலைகளையும் மதத்தின் மூலம் ஏற்பாடு செய்தது பார்பனர்.ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர் மீது காழ்புணர்வை செலுத்துகின்றனர். பார்பனர் ஆனது சாதியையும் கீழாக நினைத்து தாங்களே மேலானவராக நினைகின்றனர். அந்த மேலாண்மைக்கு பிறர் வந்து விடுவார்கோளோ என்கிற பயம் மற்ற சாதியரை அனுமதிக்க மறுக்கிறது. கோவில்களில் இருந்து ஆரம்பிப்பது எல்லாவற்றுக்கும் முடிவு கட்டும். ஆதலால் ஆலய தீண்டாமை செய்யும் பார்பன அர்ச்சகர்களை சட்டம் தண்டித்து அந்த மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.
//தமிழரை அவர்கள எதிரியாக நினைப்பதாக எப்படி சொல்லுகிறீர்கள். அவர்களும் தமிழர்கள் தானே. அவர்களின் தாய் மொழியும் தமிழாகத் தான் இருக்கிறது//
அவர்களும் தமிழர்களா..??? தமிழருக்கும் வடமொழிக்கும் என்ன சம்பந்தம்? யாரால் வட மொழி தமிழகத்திற்குள் வந்தது எப்படி வந்தது? ஏன் வட மொழி பார்பனர்களுக்கு மட்டும் உரியதாக இருக்கிறது ? மற்ற மக்களுக்கு ஏன் வடமொழி தெரியவில்லை.? வட மொழியை எதிர்க்கும் ஒரே ஒரு பார்ப்பானராவது உண்டோ..?

நன்றி, இப்போது முன்னேற்றம் தெரிகிறது, தொடர்ந்து விவாதிப்போம். பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கூடாது என்பதை உறுதி செய்வோம், வளரும் போதும் எல்லோரிடமும், சமரச, சமத்துவ, நல்லிணக்க நாகரிக கருத்துக்களைப் பரப்பினால் வேறுபாடுகள் முற்றாக நீங்கும். இது பெரிய பணி. மற்றபடி வட மொழி தொடர்பாக தனிப் பின்னூட்டம் இடுவேன், Bear for few hours.

தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள தமிழர்களே என்றும், அவர்களின் தாய் மொழி தமிழே என்றும் நாம் கருதக் காரணம் என்னவென்றால்,

தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்த தாய் தன் குழந்தையுடன் பேசும் போது தமிழிலே பேசுகிறார். நான் பலரைக் கவனித்து விட்டேன். தமிழே மட்டுமே பேசுகின்றனர்.

தமிழ் நாட்டில் பல தலை முறைகளாக வாழும் சவுராஷ்டிர , தெலுங்கு பிரிவு மக்கள் சரளமாக தமிழ் பேசுகின்றனர். ஆனால் வீட்டில் தங்கள் குழந்தையுடன் பேசும்போது அவர்கள் தாய் மொழியில் பேசுகின்றனர். தமிழில் பேசுவதில்லை

அதே போல தமிழ் நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருக்க இயலாது.

எண்ணிக்கையில் மிகக் குறைவாகவும் உடல் வலுவில் குறைவாகவும் உள்ள ஒரு பிரிவினர், தமிழ் நாட்டுக்கு வந்து தங்களை உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் தமிழர்கள் அதை ஒத்துக் கொண்டு அவர்களை நாட்டிலே , சமூகத்திலே அனுமதித்து இருப்பார்களா?

அதிலும் தமிழ் சமுதாயம் எப்படிப் பட்ட சமுதாயம் – நாகரீகம், கல்வி, சமயம், பண்பாடு, வீரம், கொடை
ஆற்றல், செல்வம் எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பரந்த சமுதாயம். இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் மிகத் தொன்மையான இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ் மொழி.

அரசர்கள், அமைச்சர்கள், தளபதிகள, வீரர்கள் , வணிகர்கள், சமய அறிங்கர்கள், புலவர்கள் எல்லோரும் தமிழர்கள். இப்படிப் பட்ட சமுதாயத்திலே வெளியில் இருந்து பிறர் வந்து புக முடியுமா? அப்படி வந்தவர்களை அரசர்கள , அமைச்சர்கள் கூட மரியாதை செய்வார்களா? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி அதற்காக எளிய வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பியவர்கள் பார்ப்பனர்கள ஆக்கப் பட்டு இருக்கக் கூடும். தமிழ் நாட்டில் உள்ள கணிசமான பார்ப்பனர்கள் கருப்பு நிறம் உடையவர்கள. வேதம் கற்க வடமொழிப் புலமை வேண்டும் என்பதால் அவர்கள வட மொழி கற்று இருக்கலாம். வேதம் ஓதுதல் , பூசனை ஆகியவற்றுக்கு மட்டுமே சமஸ்கிரதம் பேசி இருக்கிரார்கள. மற்றபடி அவர்கள் வாழ்க்கையில் உபயோகப் படுத்தியது தமிழே. இந்த விவரம் பல பார்ப்பனர்களுக்கே தெரியாது. பெரியார் திட்டியதில் பயந்து தாங்கள் வட நாட்டில் இருந்து வந்தார்கள் என நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

பிரிட்டிஷ் காரன் வந்த உடனே பார்பனர்களுக்கு சில்வர் டன்க் முளைக்கவில்லையா. பின்ன என்ன வட மொழியிலையா அவன்கிட்ட பேச முடியும். அதே போல்தான் பிழைக்க போன எல்லா இடங்களிலும் அந்தந்த மொழிகளை பேச கற்றுக்கொண்டனர். அதனால் தான் வடமொழி செத்தது. செத்து போன மொழியை புனிதபடுத்தி மற்ற மொழிகளில் புகுத்தினர்.
உடல் வலு இல்லாத அப்பாவி தீட்சிதர்கள் தான் சிவனடியார் ஆறுமுக சாமியை அடித்து உதைத்தனர். நாட்டில் உள்ள கணிசமான பார்ப்பனர்கள் கருப்பு நிறம் உடையவர்களா .??? உங்களுக்கே தெரியும் உண்மை.
//வேதம் கற்க வடமொழிப் புலமை வேண்டும் என்பதால் அவர்கள வட மொழி கற்று இருக்கலாம்.//
வேதம் எப்படி வடமொழியில் வந்தது? யாருடைய மொழி வடமொழி ? அதை கற்க வடமொழி புலமை வேண்டும் என்றால் அது வடமொழி வேதம் தானே. பார்பனர்களை போலவே அவர்கள் மொழியும் மற்ற மொழிகளின் மேல் ஏறித்தான் வாழ்கிறது.

//நாட்டில் உள்ள கணிசமான பார்ப்பனர்கள் கருப்பு நிறம் உடையவர்களா .??? உங்களுக்கே தெரியும் உண்மை.//

I told about the பார்ப்பனர்கள் of tamil nadu.

நான் எழுதியது // தமிழ் நாட்டில் உள்ள கணிசமான பார்ப்பனர்கள் கருப்பு நிறம் உடையவர்கள.//

அதில் தமிழ் என்பதை எடுத்து விட்டு, பாதியை மட்டும் வெட்டி ஒட்டி சுட்டிக் காட்டுவது அறிவு நாணயமா?

//தன்னுடைய இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைவராக பெரியார் நியமித்து தானே ஒரு உதாரணமாக இருந்து இருக்கலாம் அல்லவா?//

நீங்க‌ள் அவ‌ர் வாழ்ந்த‌ கால‌ க‌ட்ட‌த்தின் சூழ்நிலையை வைத்து பார்க்க‌ வேண்டும். அவர் பத‌வி என்பதே போராட்டம். முதுகில் குத்தியவர்களும் உண்டு.அவ‌ர் ப‌த‌வியை வைத்து த‌ன் வாரிசுக‌ளுக்கு சொத்து சேர்த்தாரா?.த‌ன‌க்கு ஏதாவ‌து ப‌த‌வி ப‌ட்ட‌ம் சேர்த்தாரா?. அவ‌ர் கால‌ க‌ட்ட‌த்திற்கு அவ‌ர் ஒரு க‌ண்டிப்பான ,பிடிவாத‌ம் நிறைந்த‌ த‌லைவ‌ர்தான். அவ‌ர் அப்ப‌டி செய்து இர்ந்தால் கூட‌ அத‌னை ஒரு போலி நாட‌க‌மாக‌வே பார்த்து( விமர்சித்து) இருப்பார்க‌ள்

//தனக்கு பிறகாவது ஒடுக்கப் பட்ட பிரிவை சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் இருக்கும் வண்ணம் ஒருவரை நியமித்து விட்டு செய்தாரா? //

அவ‌ர் கால‌ க‌ட்ட‌த்தில் பிற்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ,தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் அவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் இல்லை,இருவ‌ருமே க‌ல்வி,வேலை வாய்ப்பு, ச‌முதாய‌ அந்த‌ஸ்து ஒரே அள‌விலேயே இருந்த‌ன‌ர்.
ம‌துரை மீனாட்சி அம்ம‌ன் கோயிலில் தாழ்த்த‌ப் ப‌ட்டோர் ம‌ட்டும‌ன்றி பிற‌ சாதியின‌ரும் த‌டுக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ன‌ர் எனபதே வ‌ர‌லாறு.

ஒரு அர‌சிய‌ல்/ம‌த‌ த‌லைவ‌ர் இற‌க்கும் போது வாரிசுப் போட்டிக‌ள் எழுவ‌தும்,பிரிவினைக‌ள் தோன்றுவ‌தும் இய‌ல்பு. அதில் ஜெயிக்கும் அள‌விற்கு அந்த‌ சூழ்நிலையில் பிற‌ சாதியின‌ர் இல்லை.
நீங்க‌ள் பெரியாரை உதார‌ண‌ புருஷ‌ராக‌ இருக்க‌ வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்க‌ள்.அவ‌ர் அவரும் த‌ப்பு த‌வ‌றுக‌ள் நிறைந்த‌ சாதார‌ண‌ ம‌னித‌ர்தான்.

இன்னும் அம்பேத்காரை பிற‌ சாதியின‌ர் ம‌த்ப்ப‌து இல்லை.அவர் சட்டமாமேதை, அரசியலமைப்பு சட்டம் எழுதியவர் என்றெல்லாம் அறியப் படுவது இல்லை. ம‌ஹாராஷ்ட்ராவில் அவ‌ர் புத்த‌க‌ங்க‌ள் வைத்து இருந்தாலே குற்றம் என்று கைது செய்யப் படுகிறார்கள். அவரைக் கூட அருன் ஷோரி விமர்சித்து புத்தகம் எழுதினார்.
பெரியார் மீதான உங்கள்‌ விம‌ர்ச‌ன‌ம் உண்மையான‌து ஆனால் ந‌டைமுறைக்கு சாத்திய‌மில்லாதது.

Dear sankar,

நம்முடைய பணி அனைவரையும் அன்பின் அடிப்படையில் இணைப்பதே. பிரிப்பது அல்ல. அதே நேரம் நீங்கள் உங்களை அறியாமலே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிரீர்களோ என தோன்றுகிறது.

//அவ‌ர் கால‌ க‌ட்ட‌த்தில் பிற்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் ,தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கும் அவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் இல்லை,இருவ‌ருமே க‌ல்வி,வேலை வாய்ப்பு, ச‌முதாய‌ அந்த‌ஸ்து ஒரே அள‌விலேயே இருந்த‌ன‌ர்.//

இது உண்மையா என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் நாட்டின் பல கிராமங்களில் பார்ப்பனர்கள் யாரும் கிடையாது. அங்கே எல்லாம் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் ஒடுக்கப் பட்ட மக்களுடன் சம அந்தஸ்து கொடுத்து நடத்தினார்களா என்று பதில் சொல்லுங்கள். எல்லோருக்கும் தெரியும். உத்தப் புறம் பிரச்சினை இன்று நேற்று ஏற்ப்பட்டதா, உத்தப் புறத்தில் கடந்த ஆண்டு காலமாக பிற படுத்தப் பட்டவர்களை சம அந்தஸ்துடன் நடத்தி இருந்தார்களா?

//அவ‌ர் ப‌த‌வியை வைத்து த‌ன் வாரிசுக‌ளுக்கு சொத்து சேர்த்தாரா?//

சொத்து சேர்த்தார் என்பது உண்மை, வாரிசு இருக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

//பெரியார் மீதான உங்கள்‌ விம‌ர்ச‌ன‌ம் உண்மையான‌து //நன்றி

ஆனால் ந‌டைமுறைக்கு சாத்திய‌மில்லாதது- எது சாத்தியம் இல்லாதது? உண்மையான சமூக இணைப்புக்கு, சமத்துவ சமுதாயத்துக்கு பாடுபட்டு இருக்க முடியாதா

திரு சங்கர் அவர்களே,

//நீங்க‌ள் அவ‌ர் வாழ்ந்த‌ கால‌ க‌ட்ட‌த்தின் சூழ்நிலையை வைத்து பார்க்க‌ வேண்டும்///

மிகச் சரியான வாக்கியம்.இதைப் போலவே நீங்கள் விமர்சிக்கும் கருத்துக்கள் எதுவானாலும் மேற்கண்ட புரிதல் உங்களுக்கு இருக்குமானால் அது நல்லது.

AC , குளிர்சாதனப் பெட்டி, ,மற்றும் ,தொழிற்ச் சாலை புகைகள், கழிவுகள், மணல் கொள்ளை, போன்றவற்றால், இந்த பூமியையும் ஓசோன் படலத்தை சிதைத்த செயலுக்காக, வருங்கால சந்ததியினர் நம்மை மிகக் கேவலமாக விமர்சிப்பது நிச்சயம்.ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே கால கட்டத்தின் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு விமர்சிப்பதில் அதிக அக்கறைக் காட்டாமல் ஆக்கப் பூர்வமாக சிந்திப்பார்கள்.அப்படி கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு விமர்சனத்தில் அக்கறைக் காட்டாமல், ஆக்கப் பூர்வமாக சிந்தித்தவர் விவேகானந்தர்.ஆனால் பெரியார் அப்படி அல்ல..

//எனவே பெரியாரின் சாதீயக் காழ்ப்புணர்ச்சிப் பிரச்சாரமானது தமிழ் நாட்டிலே சமத்துவ சமுதாயம் அமைய பெரிய தடையாக அமைந்து விட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியதாக உள்ளது.//

சமத்துவ சமுதாயம் என்றால் என்ன ? பீ அள்ளுகிறவன் மூக்கைப் பிடிக்காமல் அள்ளிக் கொண்டே இருக்க வேண்டும், மணி ஆட்டுகிறவன் மட்டும் பட்டப்படிப்பு படிக்கனும், டாக்டர் ஆகனும் வக்கில் ஆகனும் என்பதா ?

இதைத்தான் கடமையைச் செய் (பெரிதாக) பலன் எதையும் எதிர்பார்க்காதே என்பதா ?

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம்

இந்திய‌ ச‌முதாய‌ம் ப‌ல‌ சாதிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌தாக‌ உள்ள‌து. இந்த‌ சாதி அமைப்பு உருவான‌து ப‌ற்றி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் கொடுக்க‌ப் ப‌ட்டு உள்ளன‌. ந‌ம்முடைய‌ ஆய்வு இந்த‌ சாதி பிரிவினை முடிய‌வும், ஒரே ச‌முதாய‌மாக‌ உருவாக‌வுமான‌ வ‌ழி முறைக‌ளைப் ப‌ற்றிய‌து ஆகும்.

இந்த‌ சாதி என்ப‌து எங்கே இருக்கிற‌து? அது ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் இருக்கிற‌து. ஒவ்வொரு ம‌னித‌னும் குழ‌ந்தையாக‌ கேட்க‌, பேச‌ ஆரம்பிக்கும் நாளில் இருந்து, அவ‌னை சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌க் குழ‌ந்தையிட‌ம் நீ இந்த‌ சாதி, நாம இந்த‌ சாதிடா, என்று ம‌ன‌திலே ஏற்றுகின்ற‌ன‌ர்.

ந‌ம‌க்கு வேண்டிய‌ சாதி, வேண்டாத‌ சாதி ஆகிய‌ சாதிக் குறிப்புக‌ளும் த‌ரப் ப‌டுகின்ற‌ன‌.வ‌ள‌ர‌, வ‌ள‌ர‌ ம‌ற்ற‌ சாதிக‌ளுட‌னான‌ மோத‌ல் போக்கை க‌டைப் பிடிப்ப‌தை வீர‌மாக க‌ருதும் போக்குக்கு அவ‌ன் த‌ள்ள‌ப் ப‌டுகிறான்.

சாதிப் பிரிவினை ம‌றைய‌ ந‌ம்முடைய‌ வ‌ழி, ஒவ்வொரு ம‌னித‌னையும் க‌ன‌வான் ஆக்குவ‌து தான். க‌ண்ணிய‌மும், சினேக‌ ம‌ன‌ப் பான்மையும் உடைய‌ ஒருவ‌ன் இன்னொரு ம‌னித‌னை நோக்கும் போது, அவ‌னுக்கு த‌ன்னால் ஏதாவ‌து உத‌வி செய்ய‌ முடியுமா, என்றுதான் எண்ணுவான். அவ‌னை ம‌ரியாதையுட‌ன் எதிர் கொள்வான். எந்த‌ அளவுக்கு ஒரு ம‌னித‌ன் க‌னவானாக‌ இருக்கிறானோ, அந்த‌ அள‌வுக்கு ச‌முதாய‌த்துக்கு ந‌ல்ல‌து.

எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து, ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

வெறுப்புக் கருத்துக்களை வைத்து அல்ல, அன்பை வைத்துதான் சமத்துவ சமுதாயம் உருவாக்க முடியும். எனவே நம்முடைய திட்டம் மக்களை செம்மைப் படுத்துவது.

சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சாதி வெறி சுவரை உடைப்பது அரசின் கையில் உள்ளது. மக்களின் மனங்களில் உள்ள சாதி வெறி சுவரை உடைப்பதே நம் பணி!மக்கள் மனதில் உள்ள சுவர் உடையாத வரை செங்கல் சுவர்கள் உடைந்தும் நிலையான பலன் இருக்காது.

அரசாங்கத்தின் கையிலே சட்டமும், ஆட்சியும், அதிகாரிகளும், புல்டோசரும் உள்ளன.நம்மிடம் அன்பும், நாகரீகமும் தான் உள்ளன. நீங்களும் நானும் தான் இருக்கிறோம்.அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. நாம் நம் பங்கை செய்கிறோம்.

ஆனால் சாதிகளை அழிக்க இங்கெ யாருக்குமே மனம் இல்லை. எல்லோரும் சாதியை தங்களுக்குப் பாதுகாப்பாக கருதுகின்றனர். நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்று என்றால் சாதி சனம் வரும் என்று எண்ணுகின்றனர். சட்டம் , ஒழுங்கு, நீதி இவை நம்மைக் காக்கும் என்று எண்ணவில்லை. சட்டத்துக்கும் நீதிக்கும் வலிமை இல்லாத சூழல் உள்ளது.

தமிழ் நாட்டிலே யாரும் தான் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியைப் போடவில்லை. ஆனால் தக்க நேரத்திலே அதை வெளிப்படுத்தி, தன்னுடைய பெயரோடு சேர்த்து போஸ்டர் அடிப்பார்கள்.

தமிழ் நாட்டிலே எந்த அரசியல் வாதியும் சாதி அழிவதை அனுமதிக்கப் போவது இல்லை.

உங்களுக்கும் எனக்கும் வேறு வேலை உண்டு. இங்கெ எழுதுகிறோம். எழுதுவதோடு செய்யவும் செய்கிறோம். சாதி அமைப்பு அழிவதால், உங்களுக்கோ எனக்கோ பைசா நஷ்டமில்லை.

ஆனால் அரசியலின் ஆணி வேறாக சாதி மத வேறுபாடு ஆக்கப் பட்டு விட்டது. தேர்தலில் தோற்றால் பல கோடிகள் நஷ்டம். வென்றால் பலப் பல கோடிகள் லாபம்!

எனவே நமக்கு முன்னே உள்ள பணி எவ்வளவு சிக்கலானது என்று எண்ணுங்கள். ஆனால் நம்பிக்கையை விடாதீர்கள்.

இப்போது பிரச்சினையின் காரணத்தையாவது புரிந்து இருக்கிறோம். தீர்வு, மக்களின் மனதில் அன்பை, நாகரீகத்தை உருவாக்கி அவர்களை கனவான் (Gentle man) ஆக மாற்றுவதுதான். இது ஒரு நாளிலோ, ஒரு வருடத்திலோ முடிந்து விடாது.

ஆனால் கல்வி அறிவு பெற்றவர்களே, மெத்தப் படித்தவர்களே காழ்ப்புணர்ச்சிக்கு, வெறுப்புணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். எனவே நம்முடைய வேலை அதிகமாகிறது. இதை சட்டம் போட்டோ, ஆணையிட்டோ நிறைவேற்ற முடியாது. நாமே நடந்து காட்டியும், பிரச்சாரம் செய்தும் தான் நிறைவேற்ற முடியும்.

சாதிகளற்ற சமத்த்துவ சமுதாயம்

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/08/casteless-homogenious-soceity-1/

//அர்ச்சக மாணவர்கள் பிரச்சினை பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு தெரியவில்லை. பொதுவாகவே இப்போது பல பார்ப்பனர்கள் ஆன்மீகம், கோவில் போன்ற விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.//

ஆமங்க ஐயா, ஒரு நாளிதழில் கருணாநிதி ‘என் ஆட்சியை கவிழ்க்க பார்பனர்களின் சூழ்ச்சி’ என்று உளறி இருந்தால் எல்லாப் பார்பனர்களுக்கும் உடனெயே தெரிந்துவிடும், அதே நாளிதழில் ‘அர்சகமாணவர்கள் போராட்டம்’ பற்றி செய்தி வெளியாகி இருந்தால் எல்லா பார்பனர்களுக்கும் தெரியாமல் போய்விடும்.

கர்நாடகாவில் பாப்பான்கள் கன்னடத்திலும்.,ஆந்திராவில் பாப்பான்கள் தெலுகுவிலும் பேசுவார்கள்.அதுக்கு என்ன பேரு?

திராவிடர் கழகத்துல சுழற்சி முறையில் பதவி கொடுத்தா பறையன் பல்லன் என்கிற ஜாதி இழிவு ஒழிந்து விடுமா? அது ஒரு சமுதாய இயக்கம் அதை வழிநடத்த நல்ல திறமையும் தகுதியும் உடையவர் யாராக இருந்தாலும் தலைவர் ஆகலாம். அங்கே வழங்கபடுவது பதவி அல்ல பொறுப்பு .அவ்வாறு பொறுப்பு வழங்க பட்டாள் மேலும் மேலும் உழைக்க வேண்டி இருக்கும்.பெரியாரின் சொத்து எதோ தானாக வளரவில்லை.ஒவொரு கருப்பு சட்டையின் உழைப்பும் இருக்கிறது.

எதோ பெரியாரின் சொத்துகள் தானாக வளர்ந்து விட்டதாக நினைத்து விடவேண்டாம்.அதை வளர்பதற்கு எவளவு தடைகள் வந்தன தெரியுமா ?

இதோ படியுங்கள் …

பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 6,7,8 பக்கங்களில் இருந்து
——————————————————————————————————
தந்தை பெரியார் மறைவுக்கு பின் அன்னை மணியம்மையார் மறைவு காலத்தில் ,இந்த வருமான வரி பாக்கி 17 லட்சத்திலிருந்து 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது .
1978 (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்த ,என்னை செயலாளராக ஆக்கிய பிறகு இந்த வருமான வரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம்.
அது மட்டுமா தந்தை பெரியார் காலத்தில் இந்த வருமானவரி துவங்கி நடைபெற்றது.
அவர்கள் மறைவுக்கு பின்னர் “எமெர்ஜென்சி ” முழுமையாக பயன்படுத்தி ,இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் “சாமி ஆடி ” பழிவாங்கும் தன்மையில் ஆட்டம் போட்டனர் .
சொத்துக்கள் மீது அட்டாச்மென்ட் ,டிரஸ்ட் சொத்துகளிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும் ,வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு – முடக்கம் இவளவும் பெரியார் திடலிலே பகிரங்கமாக அட்டாச்மென்ட் நோட்டீஸ் ஒட்டல் வேலை ,-இவளவும் நடந்தன.
அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா(மணியம்மையார்) மறைந்து ,நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ,டிரஸ்டினை எதிர்த்து வழக்கு போட்டனர்.(திருவாரூர் கே.தங்கராசு,டி.எம்.சண்முகம்,கு.கிருட்டிணசாமி).
அரசே தலையிட்டு வருமானங்களை எல்லாம் பெறுபவர் (official receiver) போட வேண்டும் என்றும்,அரசே இந்த அறக்கட்டளையை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.
அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில் ,எம்.ஜி.ஆர். அவர்கள் ,அம்மாவால் விளக்கபட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும் பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல் களுக்கு வழக்கறிஞர் உதவி – உபயம் கூட செய்தது!
நான் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உயர் நீதி மன்ற வழக்கு ,அதோடு கூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல் முறையீட்டு (Icome Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அதற்க்கு முதலில் வருமான வரித்துறை அதிகாரி ,அதற்கடுத்து மேல் அதிகாரி,அதற்கடுத்த நிலையில் (Icome Tax Assistant Commissinar) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில் தான்,மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல் (அதற்கடுத்து இருண்டு மேல்படிகள் உயர்நீதிமன்றம்,உச்ச நீதி மன்றம் என்பவையே !)
அதில் இரண்டு “மேல் ஜாதி ” நீதிபதிகள் என்பவர்கள் விசாரித்தனர். மேல் சாதி உணர்வுக்கு ஆட்படாமல் ,அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978 இல் வழங்கினர்
1.ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் ஏற்கப்பட்டது.
2 .பெரியாருடையது “அறக்கட்டளை தான் ” என்று வருமான வரித்துறையினர் ஏற்று கொள்ள வேண்டும் என்பது இரண்டு முக்கிய வெற்றிகளாகும்.
அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி (with retrospective effect) இதை அறக்கட்டளையாக (public charitable trust) ஆக வருமான வரித்துறை அங்கிகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
————————————————————-
பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 12 ஆம் பக்கத்தில் இருந்து
——————————————————-
அதற்க்கு பிறகு 1997 இயக்க கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்திலிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவி வந்த வழக்கறிஞர் திரு.துரைசாமி யும் நமது டிரஸ்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் “ரிட்” ஆக சென்னை உயர்நீதி மன்றத்தில் போட்டனர் .அதை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதி பத்மநாபன்
இவர்களது வாதங்கள் ஏற்க்க கூடியவை அல்ல என்பதை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு ,அதற்க்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்.
இது 1996-97 நடைபெற்றது தீர்ப்பு வெளிவந்தது.
தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சி பணிகள் தொடர்கின்றன.
இந்த வழக்குகளின் தொல்லை ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,நமது இரு அரகட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் நல்ல வளர்ச்சி பெற்று ,சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
———————————————
தலைவர் என்றால் ஆடம்பர ஊர்தியில் செல்ல இதும் ஒன்றும் அரசியல் கட்சி அல்லவே..

வாய் புளிக்குதா மாங்காய் புளிக்குத என்று தெரியாமல் உளற கூடாது..

இவ்வளவு விவரம் சொல்கிறீர்களே, பேச்சு வார்த்தையில் மறந்து போய் இன்றைய தேதியில் இயக்கத்தின் மொத்த சொத்து என்ன என்று சொல்லி விடாதீர்கள் அண்ணே!

சரி நீ யாருக்கு ஆதரவா எழுதுற திருச்சி காரா..அரசியல் நீ யாரை ஆதரிக்கிறாய்..நீ தாழ்த்த பட்டவர்களுக்காக ..செய்த தொண்டு என்ன..?முதலில் அதை சொல்லிவிட்டு உங்கள் கட்டுரையை திருப்புங்கள்.நான் ஜட்டி போட்டாதான் மற்றவன் ஜட்டி போடலைன்னு விமர்சனம் பண்ண முடியும்…நீ கலப்பு திருமணம் செய்து இருக்கியா..பெரியார் புடிகலேன்னா அம்பேத்கர்வது உனக்கு பிடிக்குமா..அம்பேத்கார் பிடிக்குமா..நீ ஒரு பகுத்தறிவு வாதி என்று உன் பாகத்து வீட்டு காரனுக்கவது தெரியுமா..? உங்க வீட்ல சாமி ரூம் இருக்க ? இல்லை தைவர்கள் புகை படம் இருக்க..அம்பேத்கர் பிறந்த நாளையாவது கொண்டடி இருக்கியா..இருந்த புகை படம் எடுத்து போடு அதை விட்டு சும்மா இப்படி அளப்பாரிய கொடுக்க கூடாது வடிவேலு மாதிரி ஓகே வ..இதுக்கெலாம் முதல் பதில் சொன்னால் தான் உனக்கு தகுதி உண்டு பெரியாரை விமர்சிக்க இல்லை என்றால்.பொதி கொள் .

எனக்கு பெரியார் பிடிக்கவில்லை என்றால் நான் எழுதுவது வேற மாதிரி இருக்கும்.

நான் தாழ்த்தப் பட்டவர்களுக்கு செய்யும் தொண்டு என்ன என்றால், எல்லோரும் தங்கள் மனதில் உள்ள சாதி உணர்வை நீக்க வேண்டும், எல்லோரும் பிறரை மதிக்கும் படிக்கு தங்கள் மன நிலையை உயர்த்த வேண்டும் என்பதுதான்.

பிறர் மதிக்கும்படி பண்பாக நடந்து கண்டு நாகரிக, சமரச , சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதுதான். பெரியார் வாழ்ந்த மாநிலத்திலே தான் எல்லா வாயிலே பீ திணிப்பதும் , உத்தப் புறமும் நடக்கிறது.

சமத்துவ சமுதாயம் அமைப்பது எல்லோரின் நன்மைக்காக தான். சமத்துவ சமுதாயத்தினால் பலன் அடையப் போவது ஒடுக்கப் பட்ட மக்கள் அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தான். குறுகிய பார்வையை விடு

என்னைப் பொறுத்தவரையில் நான் எந்த சாமியையும் பார்க்கவில்லை. எந்த சாமிக்கும் சாட்சி கொடுக்கவில்லை. இதை எந்தக் கடவுளின் முன்னாலும் சொல்லத் தயார். இதை என் வீட்டிலும் சொல்லி வருகிறேன். நான் கூட்டுக் குடும்பத்தில் தான் வசிக்கிறேன். என் அறையில் இருப்பது புத்தர் படம் மட்டுமே. தனி வீடு கட்டிய பின் உங்களைக் கூப்பிட்டுக் காட்டுகிறேன். அம்பேத்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு. அவர் இந்தியா உருவாக்கிய தலைவர். இந்தியர் அனைவரும் அவருக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக் காரனிடம் பகுத்தறிவை சொல்வது அந்தக் காலம். . இணையத்தின் மூலம் பலரைத் தொடர்பு கொண்டு சொல்லுவதுதான் இந்தக் காலம். என்னைப் பொத்து என்று சொல்கிறீர்கள. கடவுளை குறை சொன்னால் நம்பிக்கையாளருக்கு கோவம் வருவது போல பெரியாரை விமரசித்தால் உங்களுக்கு கோவம் வருகிறது. பெரியாரை சொன்னால் கோவம் வருகிறது, தாழ்த்தப் பட்டவருக்கு கிராமத்தில் விடுதலை வாங்கி கொடுத்து விட்டீர்களா? நீங்கள் சமத்துவ சமுதாயம் அமைக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். கடைசி வரை திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் இருக்க வேண்டுமா?

//பொதி கொள்// நீ முதலில் பண்புடன் எழுதக் கற்றுக் கொள் !

திரு திராவிடன் அவர்களே,

நீங்கள் பெரியாரைக் கடவுளாக்கி நீங்கள் பெரியார் பக்தன் ஆகிவிடீர்களே, ஆத்திகவாதிக்குத்தான் தன் கடவுளைக் குறை சொன்னால் கோபம் வரும்.பகுத்தறிவு வாதி என்றால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்.அது உண்மையா? பொய்யா?? என்று ஆராய்ந்து பொய் என்றால் சரியான பதிலை அளிக்கலாம்.அதை விட்டு விட்டு இப்படிக் கோபப்பட்டு பகுத்தறிவை மட்டுமல்ல,அறிவை இழந்து அநாகரீகமாக திட்டலாமா சொல்லுங்கள்.

http://thamizhoviya.blogspot.com/2009/03/blog-post_192.html

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_29.html

http://thamizhoviya.blogspot.com/2009/10/3.html

http://thamizhoviya.blogspot.com/2009/10/4.html

http://thamizhoviya.blogspot.com/2009/06/7.html

http://thamizhoviya.blogspot.com/2010/01/7_18.html

http://thamizhoviya.blogspot.com/2009/09/2_29.html

http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_7581.html

http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_23.html

http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_3741.html

http://thamizhoviya.blogspot.com/2008/05/blog-post_8538.html

http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_7295.html

இவற்றை எல்லாம் சற்று ஊன்றி படிக்கவும்,,

ஆரிய சத்துரு என்கிற அன்பு நண்பர் அவர்களே,

நீங்கள் காட்டிய முதல் சுட்டியில் உள்ள கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையில் பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இருந்த அவல நிலையை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஆனால் தாழ்த்தப் பட்டவர்களுடன் அருகருகே வசிக்கும் பிற சாதியினரிடம் , தாழ்த்தப் பட்டவரை சமமாக நடத்துங்கள் என்று சொன்னதாக அந்தக் கட்டுரையில் எதுவும் இல்லை.

மாறாக காந்தியைக் குறை சொல்ல அதை பயன் படுத்திக் கொண்டு இருக்கிறாரே அன்றி, எந்த இடத்திலும் பிற சாதியினரைப் பார்த்து தாழ்த்தப் பட்ட மக்களை அவமானப் படுத்தாதீர்கள, அவர்களை நம் சகோதரர்களாகக் கருதுங்கள் என்று சொன்னதாக இல்லை.

மேலும் பெரியாரே ஒரு பெரிய மிட்டா மிராசுதாராக இருந்து கொண்டு, என்னவோ அவரை சேரியில் ஏழ்மையிலும் அவமானத்திலும் உழன்ற ஒடுக்கப் பட்ட சமுதாயத்தினர் நிலையில் இருந்தது போல காட்டிக் கொண்டு நாம், நாம் என்று தன்னையும் அந்த ஏழைகளில் ஒருவராக காட்டிக் கொண்டு அறிவு நாணயமற்று எழுதி இருக்கிறார்.

இவ்வாறாக நீங்கள் ரெபர் செய்த சுட்டிகளில் முதல் சுட்டியானது, நாம் கட்டுரையில் எழுதியதை உறுதி செய்வதாக இன்னும் தெளிவாக காட்டுவதாக உள்ளது.

இவ்வகையில் என் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வண்ணம் இந்த சுட்டியை அனுப்பியதற்கு நன்றி. தொடர்ந்து நேரம் கிச்டைக்கும் போது பிற சுட்டிகளையும் படித்து கருத்து தெரிவிப்போம்.

மேலும் பெரியார் இந்து மத வேதங்களைப் படித்ததாகத் தெரியவில்லை. அப்படிப் படிக்காமலே அவற்றைப் பற்றிக் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? வேதங்கள் பிறப்பு அடிப்படையில் ஒருவனுக்கு சிறப்பு உருவாவாதாக எந்த இடத்திலும் இருப்பதாக சொன்னதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் இல்லை.

எனவே இந்து மதம் பற்றி பெரியார் சொல்வதை அப்படியே ஏற்க இயலாது.

//மேலும் பெரியார் இந்து மத வேதங்களைப் படித்ததாகத் தெரியவில்லை. //
அப்போ நீங்க சொல்றதை ஏற்கலாமா?

யார் சொன்ன கருத்தையும் அப்படியே நம்பாமால் அதில் உண்மை இருக்கிறதா என சிந்திப்பதே பகுத்தறிவு. என் கருத்து மட்டும் என்ன விதி விலக்கா?

சமஸ்கிருதம் தெரிந்தால் தான சார் அவர் வேதத்தைப் படிப்பார்.இந்து மதத்தைப் பற்றி முழுதாகத் தெரிந்து கொள்ளாமலே விமர்சனம் செய்திருக்கிறார்.என்ன பகுத்தறிவோ, என்னவோ!

திரு பிரதீப் அவர்களே,

///வேதம் எப்படி வடமொழியில் வந்தது? யாருடைய மொழி வடமொழி ? ///
வரலாற்றுக்கு முற்ப்பட்ட காலத்திலிருந்தே இந்தியப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் தவத்தின் மூலம் கண்ட உண்மைகளையும்,சில வழிபாட்டு முறைகளையும்,வேதங்களாக தந்தனர்.அப்படி வேதங்களைத் தந்தவர்கள் பிராமணர்கள், சத்திரியர்கள் , சூத்திரர்கள், மற்றும் பெண்கள்.வேதங்களைத் தொகுத்த வியாசரே சூத்திரர் தான்.கார்க்கி,மைத்ரெயீ போன்றவர்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் தந்த விஸ்வாமித்திரர் ஒரு சத்திரியர்.

வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்திலிருந்தே சமஸ்கிருதமும், தமிழும் இந்தியாவில் இருந்திருக்கிறது.இரண்டும் மிகத் தொன்மையானது.சமஸ்கிருதத்தில் தமிழும்- தமிழில் சமஸ்கிருதமும்,காதலித்து கலப்பு மனம் புரிந்த காதலர்கள் போல் கலந்தது.இரண்டிற்கும் சிநேகமே இருந்தது. வேதத்தையும்,பிராமணர்களையும் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் உயர்வாகவே கூறுகின்றன.எந்த சங்ககால,தொன்மையான தமிழ் நூல்களிலாவது சமஸ்கிருதத்திர்க்கோ,பிராமணர்களுக்கோ எதிராக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா???நமக்குக் கிடைத்த வரலாற்று உண்மையின் படி மிகத் தொன்மையான காலத்திலிருந்தே சம்ஸ்கிருத மொழியும் தமிழும் இணக்கமாக இணைத்தே இருந்திருக்கிறது.

தமிழின் முதல் இலக்கண,மற்றும் இருப்பதிலேயே தொன்மையான நூலான தொல்காப்பியத்திலேயே தொல்காப்பியர் சம்ஸ்கிருத வார்த்தைகள் பலவற்றைக் கையாள்கிறார்.சமஸ்கிருதம் ஒரு ஆக்கிரப்பு மொழி என்றால் தமிழுக்கு இலக்கண நூல் வகுத்தவர் அதை ஏன் நிராகரிக்கவில்லை.
பிராமணர்கள் தமிழத்தை ஆக்கிரமித்து சமஸ்கிருதத்தை திணித்தார்கள் என்பதற்கு உங்களால் தமிழ்,அல்லது திராவிட இலக்கியங்கள் எதிலிருந்தாவது சிறு ஆதாரம் காட்ட முடியுமா???.

///அதை கற்க வடமொழி புலமை வேண்டும் என்றால் அது வடமொழி வேதம் தானே.///

என்ன சார் சொல்கிறீர்கள்.வேதம் சமஸ்கிருதத்தில் உள்ளது.அவை அதிக அளவில் உள்ளது.மிகச் சிறிய அளவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.இனி வரும் காலத்தில் அதிக அளவில் மொழி பெயர்க்கப் படும்.இப்பொழுது வேதம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள சம்ஸ்கிருத அறிவு அவசியாமாகிறது.எங்கள் தமிழும் சமஸ்கிருதமும் வரலாற்றுக்கு முற்ப்பட்டக் காலத்திலிருந்தே சிநேகத்துடன் இணைந்து இருந்து வந்திருக்கிறது.
ஆனால் எங்கோ எப்போதோ இருந்த ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட புராணத்துக்கும் தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்?அதில் உள்ள கலாச்சாரத்திர்க்கும் இங்குள்ள கலாச்சாரத்திர்க்கும் என்ன சம்பந்தம்.? தமிழ் இந்துக் கடவுளையும்,உருவ வழிபாட்டையும், எங்கள் ஆன்மீகப் பண்பாட்டையும் எதிர்த்து அழிக்க நினைக்கும் நீங்கள் தான் தமிழர்கள் மேல் ஏறி சவாரி செய்ய வந்திருக்கிறீர்கள்.

நாங்கள் ஒன்றும் மத மாற்றும் நரித்தனத்திர்க்காக அனைத்து உலக மொழிகளிலும் எங்கள் வேதத்தை மொழி பெயர்க்க வில்லை.அதனால் வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள சமஸ்கிருதம் கற்க வேண்டியுள்ளது.

திரு தனபால் அவர்களே,

உருவ வழிபாட்டுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டுபவர்க்ளைக் கண்டித்தால் நண்பர் திரு. பிரதீப் அவர்களுக்கு ரொம்பக் கஷ்டமாகி விடும், அவங்களுக்கு வக்காலத்து வாங்கியே எழுதுவார். கடைசியில் வேறு வழியே இல்லாமல், சிலை வழி பாட்டை கண்டிப்பது தவறு என்கிற ரீதியில் ஒரு பின்னூட்டத்தை எழுதி விட்டு முடித்து விடுவார்.

அது மட்டும் அல்லாமல், இனப் படுகொலைகளை புனிதப் படுத்த்துபவர்களை யும் , மத வெறியைப் பரப்புபவர்களையும் நாம் திருத்த முயலவதால், நம் மீது கோவம் கொண்டு இவர்கள ஆர். எஸ். எஸ். என்று பழி போடுவார். மத வெறிக் கருத்துக்களுக்கு முடிந்த வரை வக்காலத்து வாங்கி வருகிறார் என்பதையே நாம் அறிகிறோம். அதே போல தன மத வெறியை மறைக்க சாதி வெறியை தூண்டியும் எழுதி வருகிறார் என்பது வருத்தத்திற்கு உடைய விடயமே.

now i understood, periyarism is a sub division of chiristianity. that is why periyarist having no problem on chiristian gods and chiristians are supporting periyaarism even periyaar is against to god.

//எங்கோ எப்போதோ இருந்த ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட புராணத்துக்கும் தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்?அதில் உள்ள கலாச்சாரத்திர்க்கும் இங்குள்ள கலாச்சாரத்திர்க்கும் என்ன சம்பந்தம்.? தமிழ் இந்துக் கடவுளையும்,உருவ வழிபாட்டையும், எங்கள் ஆன்மீகப் பண்பாட்டையும் எதிர்த்து அழிக்க நினைக்கும் நீங்கள் தான் தமிழர்கள் மேல் ஏறி சவாரி செய்ய வந்திருக்கிறீர்கள்.//

perfect and brilliant.

அன்பு நண்பர் சதீஷ் அவர்களே,

//now i understood, periyarism is a sub division of chiristianity. that is why periyarist having no problem on chiristian gods and chiristians are supporting periyaarism even periyaar is against to god. //

நம்முடைய தளத்தின் கொள்கை என்னவென்றால் மத நல்லிணக்கமே. நமது பாதை வெறுப்புணர்ச்சியைக் குறைத்து அன்பை உருவாக்கி மக்களை சமரச சமத்துவத்தில் இணைப்பதே.

எனவே நாம் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த சகோதரர்களையும் நமது சகோதராராக நினைக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். இன்னும் சொல்லப் போனால் அவர்களுடன் சேர்ந்து பிராத்தனை நாம் முனைப்பு காட்டுகிறோம். நாம் கிறிஸ்தவ மதத்தையும் வெறுக்கவில்லை. கிறிஸ்தவ கடவுள்களையும் வெறுக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதம் என்ற பெயரிலே இயேசு சொல்லாத பல விடயங்களை, இயேசுவின் சமரசக் கருத்துக்களுக்கு எதிரான முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை, மத சகிப்புத் தன்மையை அழிக்கும் மத வெறிக் கருத்துக்களை, சமூக அமைதியைக் குலைக்கும் துவேசப் பிரச்சாரத்தை இங்கே பரப்புவதால், அந்த மத வெறி விசத்தை முறிப்பதே நாம் செயும் பணியாகும்.

எனவே என்னுடைய நோக்கம் பெரியாரிஸ்ட்டுகள் வெறுப்பற்ற முறையில் மக்களை இணைக்கும் படிக்கான சமரசக் கருத்துக்களைக் கொள்ள வேண்டும் என்பதும், சாதி உணர்வு நீங்கி சமத்துவம் தழைக்க வேண்டும் என்பதுவே.
அவர்களை பார்த்து நீ கிறிஸ்தவக் கடவுளைத் திட்டினாயா என்று கேட்டால், இதோ திட்டுகிறே பார் என்று சடங்காக அந்தக் கடவுள்களையும் திட்டப் போகிறார்கள்.

அதே நேரம் நீங்கள் சொல்வது போல சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையில் மத வெறிப் பிரச்சாரத்தைக் கைக் கொள்ளும் கிறிஸ்தவ மதத்தை சிலர், ஆஹா, பெரியார் இந்து மதத்தை திட்டி இருக்கிறார், இந்துக் கடவுள்களை திட்டி இருக்கிறார், நாம அப்படியே அவரைப் பாராட்டுவது போல பேசி இந்து மதத்தை வீழ்த்தி விட்டு, அப்படியே நைசாக நம்ப மத வெறிக் கருத்துக்களை மக்களின் மனதில் திணிக்கலாம் என்று மனப் பால் குடிப்பது உண்மையே.

ஆனால் அதற்காக நாம் நம்முடைய நல்லிணக்க கோட்ப்பட்டை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.

மத வெறியர்களின் கையில் இருப்பது நம்பிக்கை தான். நான் சொல்வதை நம்புங்க, அப்படியே நம்புங்க என்று சொல்லி, அவன் நம்ப ஆரம்பித்தால் அவன் மனதில் உள்ள சகிப்புத் தன்மையை அளித்து மத வெறி விடத்தைப் புகுத்தி விடுவார்கள்.

அதனால் நாம் பகுத்தறிவு என்கிற கோட்பாட்டை வலுப் படுத்துவோம். நம்பிக்கை என்கிற பெயரில், நாசகார இன அழிப்பு, மத வெறிக் கருத்துக்கள மக்களின் மனதில் திணிக்கப் படுவதை சுட்டிக் கட்டுவோம்.

எந்த அளவுக்கு மக்கள சிந்திக்கிறார்களோ , அந்த அளவுக்கு மத வெறிக் கருத்துக்கள், இனப் படுகொலைக் கருத்துக்கள் புறக் கணிக்கப் படும்.

இதுவே பெரியாரால் கிடைத்த நன்மை. பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலப் படுத்தி இருக்கிறார். கடவுள் இல்லை என்று சொல்லும் தைரியத்தை செய்து காட்டி இருக்கிறார். அதை இன்னும் வலுப் படுத்தி மத வெறிக் கருத்துக்களை மட்டுப் படுத்துவோம்.

பெரியாரிஸ்ட் டுகளை முழுமையான பகுத்தறிவாளர் களாக சாக்ரடீஸ் போல, புத்தரைப் போல, சித்தர்களைப் போல, விவேகானந்தரைப் போல அவர்களை வளர்ச்சி அடைய செய்வதுதான் நம் நோக்கம்.

//அதே நேரம் நீங்கள் சொல்வது போல சகிப்புத் தன்மையை அழிக்கும் வகையில் மத வெறிப் பிரச்சாரத்தைக் கைக் கொள்ளும் கிறிஸ்தவ மதத்தை சிலர், ஆஹா, பெரியார் இந்து மதத்தை திட்டி இருக்கிறார், இந்துக் கடவுள்களை திட்டி இருக்கிறார், நாம அப்படியே அவரைப் பாராட்டுவது போல பேசி இந்து மதத்தை வீழ்த்தி விட்டு, அப்படியே நைசாக நம்ப மத வெறிக் கருத்துக்களை மக்களின் மனதில் திணிக்கலாம் என்று மனப் பால் குடிப்பது உண்மையே.//

my intention is to explain this only.nothing else behind.

//ஆனால் அதற்காக நாம் நம்முடைய நல்லிணக்க கோட்ப்பட்டை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. //
not only me, most of the hindus not interested to insult others gods and their philosophies.

and periyarist are only dare to insult us and oppose our beliefs and gods

whenever periyarist are teasing our sentiments our chiristian brothers are enjoying to support them.
they should understand that both of us sailing towards same destination with different boats. if they understand this,then they can understand that the periyarist are against on destination not on the boats.

all hindus are interested in religious harmony and ready (practicing) to keep away from interfering others beliefs.but others are not,they are love to say our gods are satthan and our vehdas useless for getting convert the innocent people.

why they cannot be friendly with a hindu and wants him to follow his way.dont they consider others as human.

//பெரியாரிஸ்ட் டுகளை முழுமையான பகுத்தறிவாளர் களாக சாக்ரடீஸ் போல, புத்தரைப் போல, சித்தர்களைப் போல, விவேகானந்தரைப் போல அவர்களை வளர்ச்சி அடைய செய்வதுதான் நம் நோக்கம்.//

wish you all the success

//அவர்களை பார்த்து நீ கிறிஸ்தவக் கடவுளைத் திட்டினாயா என்று கேட்டால், இதோ திட்டுகிறே பார் என்று சடங்காக அந்தக் கடவுள்களையும் திட்டப் போகிறார்கள்//

they never do so. sorry still you are innocent.
again i would like to say i am not interested in insulting others baby.

even if they do so,
//சடங்காக அந்தக் கடவுள்களையும் திட்டப் போகிறார்கள்//
you understand this at least, happy to hear.

1951 ஆண்டுக்கு முன்பு சட்டத்தில் கல்வி துறையில் இட ஒதுக்கீடு என்பதே கிடையாது.வேலை வாய்ப்புகளில் மட்டும் தான் உண்டு.தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாக தான் கல்வி துறையில் இட ஒதுக்கீட்டுக்கு அன்றைய நேரு தலைமையிலான அரசு அரசியல் சட்டத்தில் முதல் திருத்தும் செய்தது. இதன் அடிபடையில் பிற்படுத்த பட்ட மக்களுக்கு 25 % ,தாழ்த்த பட்ட மக்களுக்கு 16 % ஆக மொத்தம் 41 % ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்று அய்யா அவர்கள் அண்ணா காலத்திலேயே குரல் கொடுத்தார்.பிறகு கலைஞர் ஆட்சி பொறுப்பினை ஏற்று 8 % அதிகரித்து 49 % ஆக மாற்றினார்.பிற்படுத்த பட்ட மக்களுக்கு 25 % லிருந்து 31% ,தாழ்த்த பட்ட மக்களுக்கு 16 % லிருந்து 18% உயர்ந்தது. பிறகு வந்த எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை புகுத்தினார். அப்போது திராவிடர் கழகம் வருமான வரம்பு ஆணையின் நகலை தமிழகம் எங்கும் எரித்து அதன் சாம்பலை தலைமை செயலகத்துக்கு அனுப்பியது.அப்போது பெரியார் இல்லை.அதன் பிறகு வந்த நாடாளு மன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.தோல்விக்கான காரணம் எம்.ஜி.ஆர். க்கு புரிந்தது.வருமான உச்ச வரம்பு ஆணையை வாபஸ் பெற்றதோடு பிற்படுத்த பட்ட மக்களுக்கான 31% ஐ 50% ஆக உயர்த்தினார்.இதன் மூலம் 68% ஆனது மொத்த இட ஒதுக்கீட்டின் விளைவு .பிறகு உச்ச நீதி மன்ற ஆணையின் படி கலைஞர் அவர்கள் மலை வாழ் மக்களுக்கு 1% அளித்து 69% ஆக மாற்றினார்.எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலிருந்தே மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இயங்கிய வன்னிய சங்கம் வன்னியர்களுக்கு இட ஒதுக்க்கீடு கேட்டு கிளர்ச்சி செய்து வந்தது.இதனால் கலைஞர் அவர்கள் மிகவும் பிற்படுத்த பட்டவர்களுக்கு 20% இட ஒதுகிட்டை பிற்படுத்த பட்டவர்களுக்கான 50% லிருந்து பிரித்து கொடுத்து வன்னியர்களின் வாழ்கையில் ஒளியேற்றினார்.

இவை எல்லாம் இல்லை என்றால் தமிழன் இன்னும் தற்குறியாய் தான் அலைந்து இருப்பான். இவை திராவிடத்தின் கொடை அல்லாவா.
நீங்கள் என்ன திறந்த வெளி போட்டியிலா படித்து வந்தீர்கள் (open competition). திராவிடத்தால் வந்த இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு அதனை குறை குறுவது நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றதாகும். முதலில் நீங்கள் சாதி சான்றிதழை கிழித்து விட்டு திறந்த வெளி போட்டியில(open competition). படித்து வந்து அப்புறம் பேசவாருங்கள்.அதுவரை பேச உங்களுக்கு தகுதி இல்லை

இட ஒதுக்கீடு என்கிற கோட்பாடு இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. கர்நாடாகா, ஆந்திரா மகாராஷ்டிரா … இப்படி எல்லா இடங்களிலும் உள்ளது. இதிலே பெரியார் சொன்னார், நேரு கேட்டார் என பில்டப் குடுக்கிறீர்கள். முதலில் இந்தியாவில் இட ஒதுக்கீடு வரலாறைப் படியுங்கள். 1882 – Hunter Commission appointed. Mahatma Jyotirao Phule made a demand of free and compulsory education for all along with proportionate reservation/representation in government jobs.
1891-The demand for reservation of government jobs was made as early as 1891 with an agitation in the princely State of Travancore against the recruitment of non-natives into public service overlooking qualified native people.

1901-Reservations were introduced in Maharashtra in the Princely State of Kolhapur by Shahu Maharaj. Reservations in the princely states of Baroda and Mysore were already in force.

1908-Reservations were introduced in favour of a number of castes and communities that had little share in the administration by the British.

1909- Provisions were made in the Government of India Act 1909

1919- Montagu-Chelmsford Reforms introduced.

1919 – Provisions were made in the Government of India Act 1919

1921-Madras Presidency introduces Communal G O in which reservation of 44 per cent for non-Brahmins, 16 per cent for Brahmins, 16 per cent for Muslims, 16 per cent for Anglo-Indians/ Christians and eight per cent for Scheduled Castes.

1935-Indian national congress passes resolution called Poona Pact to allocate separate electoral constituencies for depressed classes.

1935 – Provisions in Government of India Act 1935.

1942-B.R. Ambedkar established the All India Depressed Classes federation to support the advancement of the scheduled castes. He also demanded reservations for the Scheduled castes in government services and education.

1946- 1946 Cabinet Mission to India proposes proportionate representation with several other recommendations.

1947-India obtained Independence. Dr. Ambedkar was appointed chairman of the drafting committee for Indian Constitution. The Indian constitution prohibits discrimination on the grounds only of religion, race, caste, sex and place of birth [4]. While providing equality of opportunity for all citizens, the constitution contains special clauses “for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes”[4]. Separate constituencies allocated to Scheduled Castes and Tribes to ensure their political representation for 10 years.(These were subsequently extended for every 10 years through constitutional amendments).

1947-1950- Debates of the Constituent Assembly.

26/01/1950-The Constitution of India came in force.

1953-Kalelkar Commission was established to assess the situation of the socially and educationally backward class. The report was accepted as far as Scheduled Castes and Scheduled Tribes were concerned. The recommendations for OBC’s were rejected.

இப்படியாக வேலை வாய்ப்பில், அரசியலில் என்று படிப்படியாக இட ஒதுக்கீடு கொண்டு வரப் பட்டு, அப்படியே கல்விக்கும் விரிவு படுத்தப் பட்டுள்ளது. பெரியார் காங்கிரேசில் இருந்த போதே நீதிக் கட்சி தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு கொண்டு வந்து விட்டனர். பெரியாரை நான் ஒட்டு மொத்தமாக குறை சொல்ல வில்லை. அவருடைய கேள்வி கேட்கும் துணிவு , போராட்டக் குணத்தை மதிக்கிறேன். ஆனால் எல்லாமே பெரியார் தான் எல்லாம் என்று பெரியாரில் ஆரம்பித்து பெரியாரிலே முடித்து விடுவது சிந்தனையாளர்கள் உருவாவதை தடுக்கும்.

Excellent Reply Sir.

//இவை எல்லாம் இல்லை என்றால் தமிழன் இன்னும் தற்குறியாய் தான் அலைந்து இருப்பான். இவை திராவிடத்தின் கொடை அல்லாவா.//

ஆந்திர, கர்நாடக,கேரளா மாநிலங்களில் எல்லாம் கூட நிறைய பேர் படித்து நல்ல நிலையில் உள்ளனர். அங்கேயும் இட ஒதுக்கீடு உள்ளது. அங்கே யாரும் தற்குறியாய் அலைய வில்லை பெரியார் அங்கே பிறக்கததினால்.

தான் திராவிடன் என்பதை எந்த ஒரு ஆந்திர, கர்நாடக,கேரளா மாநில மக்களும் ஏற்றுக்கொள்வதில்லை.
சமஸ்க்ரிதத்திர்க்கு எதிரானவர்களாக கூறிக்கொள்ளும் நாம் மட்டுமே அந்த சம்ஸ்கிருத வார்த்தையை விடாமல் பிடித்து கொண்டுள்ளோம்.

தமிழர்களுக்கான ஒரு இயக்கத்தின் பெயரை சமகிருதத்தில்தான் வைத்துள்ளோம். சமஸ்க்ருதம் எதிர்ப்பது என்பது கொள்கை முடிவானால் நாம் ஏன் சமஸ்கிருதத்திலேயே நம் கழகத்திற்கு பெயர் வைத்துள்ளோம். இதற்கும் ஏதாவது ஒரு சப்பை பதில் நம்மிடம் இருக்கும். எல்லவிதத்திலுமே நமக்கு லாஜிக் உதைக்கிறது.

நாமும் உபயோகிக்காத சில தூய தமிழ் சொற்கள் மலையாள மொழியுளும் உண்டு. நம்மை பாண்டி என்று ஏளனம் செய்தாலும் அதிகம் நம் சொற்கள் தான் அவர்களின் அன்றாட பயன்பாட்டு சொற்கள். நம்மை தான் அவர்கள் முதல் எதிரியாக பார்க்கிறார்கள். பிற மாநிலத்தவரை அல்ல. நாமும் அவரும் திராவிடர் நாம் தமிழ் சொற்களை அதிகம் உபயோகிக்கிறோம் என்று கூட அவர்கள் நம்மிடம் நினைப்பது இல்லை.(திராவிட ஒற்றுமையை அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது)

சமஸ்கிரித சொற்களே பெரும்பாலும் மூன்று மாநிலத்தாரும் உபயோகிக்கிறார்கள் எனவே தான் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்று ஒப்பு கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.

வட இந்தியர்களிடம் திராவிட என்றால் என்ன என்றே தெரியவில்லை ராகுல் திராவிடா ( அது நம்ம அகராதியில் ஆரியர் என்று அழைக்கப்படும் சமுகத்தின் ஒரு பிரிவு என்பது உங்களுக்கே தெரியும்) என்று தான் கேட்கிறார்கள்.

திராவிடம் என்ற வார்த்தையே கிட்டத்தட்ட தமிழர்களை மட்டும் குறிப்பிட தமிழர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகவே தெரிகிறது.

சம்ஸ்கிருத மொழி நம் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றால்,லாசிக்காக பார்க்கும் பொழுது,திராவிட கழகமும் (இந்த பெயராலேயே) அந்த அடிமைத்தனத்தை உறுதிபடுத்த நாம் வைத்திருக்கும் அடையாளங்கள் தான் . அடிமை சின்னம் நமக்கு எதற்கு?இதற்காக நிச்சயம் வெட்கப்படத்தான் வேண்டும். எதிர்ப்பு என்று வந்த பின் எதற்கு பெயரை மட்டும் (முக்கியமானது) அதிலே வைத்து கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் மொழி பற்று, தனிதமிழ், எல்லாவற்றிலும் தமிழ் பற்றி எல்லாம் நாம் பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். முன்னுக்கு பின் முரணான கொள்கை உள்ளவர்கள்.

இந்த பகுத்தறிவு வளர்ந்ததெல்லாம் கேள்விகள் கேட்காததினாலே.

//வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?//

i read this from thamil oviya, where the above sentence were mentioned? in which vedha ? which puranaa? what is the page number? would any one give the details please.

without knowing sanskrit how do you say this is quoted in scriptures? ok give us proof.

vivekanandha is against to thamilans? in his speech or writings did he mentioned any where like dhiravidans are raatchasaas? please provide that details too. this is really to be seriously taken care and take action against that book where ever it mentioned like this.

//புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.//

this too i read from tamil oviyaa, is there any evidence to proove that bhudar born before krishnaa?
or
any evidence to prove the krisna story written after budha got succeeded.

this above questions are not to argue,for understanding the facts only.i do not have any answer for this.

is there any hindus still believing on yaagaas and varnaasrama systems?

what is the meaning of practicing this ?
leader post is only for leaders son.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: