Thiruchchikkaaran's Blog

அமைதி செய்வோம் அயோத்தி தீர்ப்பு நாளில்!

Posted on: September 21, 2010


அயோத்யா பிரச்சினையில் சர்ச்சைக்குள்ளான நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய தீர்ப்பை 24ம் தேதி அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் லக்னௌ கிளை அறிவிக்க உள்ளது.  60வருசமா நடக்குதாம் இந்த கேசு. அப்படியும் தீர்ப்பை தள்ளி வைக்கணும் னு பெட்ட்சன் போட்டி இருக்கிறாங்க. தள்ளி வைக்க முடியாது, நாங்க தீர்ப்பை குடுத்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கின்றனர் கனம் கோர்ட்டார்.

நாம் அனைவரையும்  கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து இந்த தீர்ப்பு நாளிலும், அதற்குப் பிறகும் அமைதியாக இருங்கள் என்பதுதான்.  குறிப்பாக சமந்தப் பட்ட இரண்டு பக்க “செயல் வீரர்களையும் ” , அவர்களை வழி நடத்தி செல்லும் தலைகளையும் கேட்டுக் கொள்கிறோம். கண்ணுங்களா, இதை சாக்கா வச்சு உங்க கை வரிசையைக் காட்டாதீங்க.

நம்ப  சொந்த நில விவகாரமாகக் கூட கேசை சந்திக்கிறோம். தீர்ப்பு சாதகமாக வந்தாலும் வருது . பாதகமாக வந்தாலும் வருது. அதுக்காக சண்டை போடுரோமா, இல்லையே. இப்ப இந்த தீர்ப்புக்கு மட்டும் ஏன் சண்டை போடனும்? நான் இதை சொல்வது, இரண்டு தரப்பாருக்கும் தான்.

இதிலே முதலாவதாக நான் இந்துக்களின் பிரதிநிதிகளாக தங்களை நினைக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்ன வென்றால்,  எந்த இராமருக்கு நீங்கள் கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, நீங்கள் உண்மையிலேயே இராமர் மீது மதிப்பு வைத்தவர் என்றால் அவரது கொள்கை என்ன வென்று சற்று எண்ணிப் பாருங்கள்.

கடந்த காலத்தில் நீங்களின் இராமரின் கொள்கைக்கு எதிராக செய்த பல்வேறு அடாவடி, அராஜக செயல்களால் இராமரின் கொள்கைக்கும், அவரது புகழுக்கும் எவ்வளவு கெடுதல் விளைவிக்க முடியுமோ அவ்வளவு கெடுதல்  விளைவித்து இருக்கிறீர்கள்.

நான்  உங்கள் ஒவ்வொருவரையும் கேட்பது என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சில் கை வைத்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், இராமரின் பெயரை வைத்து உங்களையும், உங்கள் இயக்கத்தையும் வளர்த்துக் கொண்டு, சமூக பொருளாதார, அரசியல் ரீதியில் உங்களையும் உங்கள் இயக்கத்தையும் வளர்க்க இராமரின் பெயரைப் பயன் படுத்தினீர்களா இல்லையா என்று, அப்படி இல்லை என்றால் இந்த விவகாரத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இராமரோ, தனக்கு உரிமையாக  வர வேண்டிய பதவியை கொடுக்க வேண்டும் என்று கைகேயி  கேட்டுக் கொண்ட போது,  மலர்ந்த முகத்துடன் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதுவே எனக்கு முக்கியம் என்று சொல்லி வனம் சென்றார். அந்த தியாக திருவுருவத்தின் செல்வாக்கை பயன் படுத்தி நீங்கள் பதவி பெற வேண்டும் என்று கணக்குப் போட்டீர்களா இல்லையா?  

அப்பாவியான ஒருவரையும் தண்டித்ததில்லை இராமன். கங்கையிலே குளிக்க  சென்றபோது, தன்னுடைய அம்பில் யாரும் விழுந்து காயம் பட்டு விடக் கூடாதே என்று அதை கீழே மண்ணில் குத்தி வைத்து விட்டு சென்றார்.  குளித்து வந்து அம்பை எடுத்த போது மண்ணுக்குள் புதைந்து இருந்து தேரை அம்பால் குத்தப் பட்டு இருந்ததை கண்டு மனம் வருந்தவில்லையா? ஆயதங்களை ஏந்தியவர்களில் நான் இராமன் என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடு, நியாயம் காத்தவர் இராமன்.

 அவருக்கு கோவில் கட்டுவதாக சொல்லி தூண்டப் பட்ட கலவரங்களில் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு? இராமரின் பெயரால்  மக்களிடம் உணர்வை எழுப்ப உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இலக்குவன் கொடுத்தாரா? பரதன் கொடுத்தாரா? சுமேந்திரர் கொடுத்தாரா?

இராமர் காட்டுக்குப் போன நிலையில் கூட அவர்கள் கட்டுப்பாட்டுடன் அமைதி காத்தது கூட உங்களுக்கு நினைவில் இருக்காது.

தெருவிலே ரவுடித் தனம் செய்வதற்கு, கட்சிப் போர்வையையும்,  சாதிப் போர்வையையும், இனப் போர்வையையும் தனக்கு பாதுகாப்பாக உபயோகிப்பது போல இராமரையும், இந்து மதத்தையும்  போர்வையாக உபயோகிப்பது சரியா?

எனவே நீங்கள் தீர்ப்பு  அன்றோ, அல்லது அதற்குப் பிறகோ,  இந்த அயோத்தி விவகாரம்  தொடர்பாக கலவரத்திலோ, வன்முறையிலோ, அடாவடியிலோ   ஈடுபட்டால் அது இராமரின் கொள்கைகளையும், இந்து மதத்தையும், இந்துக்களையும், இந்தியாவையும் , இந்தியர்களையும்  கெடுத்ததாகவும் துரோகம் செய்ததாகவுமே அமையும். இது வரையில் செய்த சேதாரம் போதும் என்று சொல்லிக் கொள்கிறோம். 
 
அதே போல தீவிர வாதப் போக்கை கடைப் பிடிக்கும் இசுலாமிய இயக்கங்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எந்த தீவிர வாத த்தை நம்புகிறீர்களோ, அதுவே உங்களுக்கு மாபெரும் ஆபத் தாக முடியும். உங்களுடைய தீவிரவாத வெறித் தனத்திற்க்காக கோடிக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களின் வாழ்க்கையில் கண்ணீரை உருவாக்காதீர்கள்.  நான் சாதாரண முஸ்லீம்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீங்கள் தைரியமாக் மத நல்லிணக்கப் பாதையில் பீடு நடை போடுங்கள். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுங்கள். தீவிரவாதிகள் சமூகத்தில்  நுழைய இடம் கொடுக்காதீர்கள் .    
Advertisements

3 Responses to "அமைதி செய்வோம் அயோத்தி தீர்ப்பு நாளில்!"

திரு.திருச்சிக்காரர் அவர்களே,

சரியான சமயத்தில் சரியாகவும்,அருமையாகவும் சொல்லப்பட்டக் கட்டுரை.

மிக்க நன்றி, திரு, தனபால் அவர்களே.

மிக நல்ல கட்டுரை.., ரத யாத்திரை , விநாயகர் ஊர்வலம் இதெல்லாமே கலவரத்தை தூண்டி மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஆட்சியை பிடிக்க இந்துத்துவ அமைப்புகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: