Thiruchchikkaaran's Blog

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் முழுமையானதா?

Posted on: September 20, 2010


 

பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?  இது என்ன, இந்தக் கேள்வி  சின்னப் புள்ளத் தனமா  இல்லை இருக்கு  என்கிறீர்களா?

தமிழ் நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்கிற வார்த்தையை பிரபலம் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது பெரியார் தான்! ஆனால் அதற்க்கு மேலே பெரியார் என்ன செய்தார், பெரியாரின் பகுத்தறிவு எந்த அளவுக்கு ஆழமானது?

இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன.   பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி  பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.File:Periyar during Self respect movement.JPG

கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.

புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். புத்தர் அதற்காக கடுமையாக உழைத்தார். தன்னுடைய சுகங்களையும் துறந்தார். ஆதி சங்கரர் , சாக்ரடீஸ்… போன்றவர்களும் அப்படியே.

ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.

ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?

உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.

சிறந்த பகுத்தறிவு வாதிகளான புத்தர், சாக்ரடீஸ், இயேசு, ஆதி சங்கரர், பட்டினத்தார், விவேகானந்தர்…. போன்றவர்கள அதைத்தான் செய்தனர்.

பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.

இதை நாம் சொல்லுவது ஏன் என்றால்,  தமிழர்கள் பகுத்தறிவு என்றாலே அது பெரியார் சொன்னதுதான் என்கிற ரீதியிலே அரைத்த  மாவையே அரைத்துக் கொண்டு, ஒரு குட்டையிலே மூழ்கிக் கிடைக்காமல், சுதந்திர சிந்தனையாளர்களாக , இப்போதைய கால  கட்டத்திலே மக்களுக்கு தேவையான பகுத்தறிவு சிந்தனைகளை வழங்குபவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!

தொடர்புடைய பதிவுகள்:

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

இணைப்பு – 1:

அன்பு நண்பர்களே, பல நண்பர்கள் நான் ஏதோ பெரியாரை வெறுப்பவன் என்றும், அதனால் பெரியாரைக் குறை சொல்லி எழுதுவதாகவும் கருதுகின்றனர்.   பெரியாரை குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கம் அல்ல. நான் பெரியாரின் கேள்வி கேட்கும் துணிவு, குறுக்கு வெட்டு பார்வை ஆகியவற்றை கண்டு ஆச்சரியப் பட்டவன்.  பெரியாரின் கருத்துக்களை ஒட்டியும், வெட்டியும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்தில் வெளியாகும்.  பெரியார் சம்பந்தமாக நாம் முன்பு இதே தளத்தில்   வெளியிட்ட கட்டுரையைப்  படித்தால் தெளிவாகும். 

அவர்தான் பெரியார்….. , பார் அவர்தான் பெரியார்….

https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/04/periyaar-1/

(தொடரும்)

110 Responses to "பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் முழுமையானதா?"

//பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.//
வாங்க அப்படி வெளியில .. ! பெரியாரை அரைகுறையாக தெரிந்து வைத்துகொண்டு பேசினால் , அல்லது ஒரு பார்பனனால் மட்டுமே இப்படி பேச இயலும். இதில் ஆச்சரியம் கொள்ள எதுவும் இல்லை. பூணூல் வெளியே வந்து பல்லிளிக்கிறது திருசியாரே.

அப்படி போடு. பெரியாரை பற்றி நாம் எழுதி உள்ள கருத்தைப் பற்றி பதில் கருத்து எழுதுவதற்குப் பதிலாக சாதி வெறியையும், சாதிக் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுவார்கள் என எதிர் பார்த்தோம்.

சாதியை விட்டு விடக் கூடாது என்று பாடு படுவீர்கள போல இருக்கிறதே. யோவ் நீ சாதியை விடாத ஐயா, நீ முதலியார், நீ பார்ப்பனர், நீ வெள்ளாளர் , நீ பிள்ளை மார் …. அப்படியே இருங்க ஐயா… அப்பத்தான் நாங்க அதை வைத்து எங்கள் காலத்தை ஓட்ட முடியும் என்று என்று சொல்லுவது போல நிலைமை உள்ளது.

பகுத்தறிவுப் பகலவன்சாதிகளை ஒழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே சாதி துவேசத்தை பரப்பிய தமிழ் நாட்டில் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம் இன்றும் நடை பெறுகிறது. கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, … இந்தியாவில் எங்கும் இப்படி பட்ட அவலம் இல்லை.

பெரியாரை நாம் முற்றாக குறை சொல்லவோ, புறக்கணிக்கவோ இல்லை. தமிழ் நாட்டு சமூக வரலாற்றில் அவருக்கு ஒரு இடம் உண்டு. அதே நேரம் அவரது கருத்துக்களின் வரம்பை எடுத்துக் காட்டுகிறோம்.

அவரது கருத்துக்களில் உள்ள சிறப்பையும் அவ்வப் போது வெளி இட்டு பாராட்டவும் தயங்க மாட்டோம். அப்போது என்ன எழுதுவார்கள்? பூணூல் தூங்குகிறது என்று எழுதுவார்களா? உங்களிடம் உள்ள பூணூல் பள்ளிலக்கவும் தூங்கவும் செய்யக் கூடிய பூணூலா?

சாதியை மட்டும் முன்னிறுத்துகிறார்கள் இவர்கள். அது பிரமினார்கள் மட்டுமே சாதி வித்தியாசம் பார்ப்பது போலவும் பிற சாதியினார்கள் ஏதோ அவர்களுக்கும் மிகவும் ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசுகிறார்கள். “ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம்” பிராமின் இனத்தவரால் செய்யப்பட்டதல்ல. வன்னியர், ரெட்டியார், கவுண்டர்கள், தேவர்கள், பிள்ளைமார், முதலியார் போன்ற உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும், இவர்கள்தான் தலித்துகளை அடக்கி, ஒடுக்கி காலம் காலமாக அடிமைகளாக வைத்துக்கொண்டுளார்கள் என்பதை பெரியாரை அரைகுறை இல்லாமல் முழுமையாகப் படித்தவர்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா..? பிராமினர்களிடம் இருப்பது சாதி “துவேஷம்”. ஆனால் மேற்சொன்ன சாதிகளிடம் இருப்பது சாதி “வெறி”. அதை எப்போது சரி செய்யப்போகிறார்கள் இந்த பெரியாரை “முழுமையாகப்” படித்தவர்கள். பெரியாரை சொன்னதை பிறருக்கு / பிரமினர்களுக்குச் சொல்லும் இவர்கள் எப்போது மேற்சொன்ன சாதியினரை உணரவைக்கப் போகிறார்கள்..? மாட்டார்கள்… ஏனென்றால் அவர்களால் அது முடியாது.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர். சாதி ஒழிப்பு என்றால் அது பிராமின் சாதியை மட்டும் முன்னிறுத்துகிறார்கள் இவர்கள். அது பிரமினார்கள் மட்டுமே சாதி வித்தியாசம் பார்ப்பது போலவும் பிற சாதியினார்கள் ஏதோ அவர்களுக்கும் மிகவும் ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசுகிறார்கள். “ஒரு மனிதன் இன்னொரு மனிதன் வாயில் பீ திணிக்கும் அவலம்” பிராமின் இனத்தவரால் செய்யப்பட்டதல்ல. வன்னியர், ரெட்டியார், கவுண்டர்கள், தேவர்கள், பிள்ளைமார், முதலியார் போன்ற உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும், இவர்கள்தான் தலித்துகளை அடக்கி, ஒடுக்கி காலம் காலமாக அடிமைகளாக வைத்துக்கொண்டுளார்கள் என்பதை பெரியாரை அரைகுறை இல்லாமல் முழுமையாகப் படித்தவர்களுக்கு தெரியுமா அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா..? பிராமினர்களிடம் இருப்பது சாதி “துவேஷம்”. ஆனால் மேற்சொன்ன சாதிகளிடம் இருப்பது சாதி “வெறி”. அதை எப்போது சரி செய்யப்போகிறார்கள் இந்த பெரியாரை “முழுமையாகப்” படித்தவர்கள். பெரியாரை சொன்னதை பிறருக்கு / பிரமினர்களுக்குச் சொல்லும் இவர்கள் எப்போது மேற்சொன்ன சாதியினரை உணரவைக்கப் போகிறார்கள்..? மாட்டார்கள்… ஏனென்றால் அவர்களால் அது முடியாது.

நிறை, குறை எல்லா கொள்கைகளும் உண்டு. ஆத்திகத்தின் குறைகளை மாத்திரம் நாத்திகம் சொல்லும். பகுத்தறிவின் பலவீனங்களை மட்டும்ஆத்திகம் பேசும் . காலங்காலமாக இது தான் நடக்கிறது.

நீங்கள் இருபதாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு 19ஆம் நூற்றாண்டு சூழ்நிலையின் எதார்தத்தை உணராமல் ஒரு கருத்து சொல்கிறீர்கள்.
உங்கள் கருத்தின் படி பெரியார்
1.இந்து மதத்தின் சில (?) குறைபாடுகளை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி எனப் பெயர் வாங்கியவர்.
2.பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.

அவரை விமர்சனம் செய்யலாம்.தவ‌றில்லை. ஆனால் அவருக்கு ஆன்மீக போர்வை போர்த்த வேண்டாம்.

பெண் விடுதலை,சாதி மதம்,மொழி,இன வெறி எதிர்ப்பு,எளிய வாழ்வு,அரசியல் பதவிகளில் விருப்பமின்மை, போன்ற பன்முகத்தை உடைவர் பெரியார்.
அவர் கால சில பிரச்சினைகளை வெளிப்படுத்தி தன்னால் இயன்ற வரை போராடி தீர்வு கண்டவர்.
அவர் கால் நனைத்தற்கே தமிழ் சமூகம் சுய மரியாதையோடு எழுந்தது.நீங்க‌ள் வேண்டுமானால் நீச்ச‌ல் அடித்து க‌ரை சேருங்க‌ள் வாழ்த்துக‌ள்.

//மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.//

நித்யான‌ந்தர் உட்பட பல சாமியார்கள் (மற்றும் கிறித்தவ மத வாதிகள்) கூட இப்படி சொன்னதாக ஞாபகம்.

அன்பு நண்பரே, ஒரு பகுத்தறிவு வாதியின் சிந்தனைகளின் தொகுப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அவர் வாழும் காலத்துக்குப் பொருத்தமானது. இரண்டாவது எக்காலத்துக்கும் பொருத்தமானது.

அதே போல நான் பெரியாருக்கு ஆன்மீகப் போர்வை ஒன்றும் போர்த்தவில்லை, நான் ஆன்மீகப் போர்வை போர்த்தியதாக எந்த அடிப்படையில் எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.

//அவர் கால் நனைத்தற்கே தமிழ் சமூகம் சுய மரியாதையோடு எழுந்தது//

இதை நீங்கள் சென்டிமென்டலாக அணுகுகிறீர்கள். இந்தியா முழுவதும் சாதி வேறுபாடு, சாதி அடிப்படையிலான அவமதிப்புகள் இவை இருந்தன. இந்திய சமுதாயம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே அதை எதிர்த்துப் போராடி வருகிறது. பல அறிங்கர்க்ளும், சீர்திருத்த வாதிகளும், தலைவர்களும் அந்தப் சீர்த்திருத்ததிற்கு வலு வூட்டினார்கள் . அதன் போக்கிலே பெரியாரும் கலந்து கொண்டார். ஆந்திரா, கர்நாடகா , கேரளா இங்கு எல்லாம் மக்கள் சுய மரியாதை சிந்தனை பெறவில்லையா? இந்திய சமுதாயர்த்தின் ஒட்டு மொத்த சீர்திருத்த போக்கின் ஒரு பகுதியே இது.

அதே நேரம் பெரியாரின் போராட்ட உணர்வை குறைத்து நான் மதிப்பிடவில்லை. நானும் அவரது கருத்துக்களினால் இன்புளூயன்ஸ் செய்யப் பட்டவன் தான். பெரியார் தான் பகுத்தறிவு. அதற்க்கு மேல் பகுத்தறிவு இல்லை என்று யாரும் கருதி விட வேண்டாம் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை எழுதப் பட்டது. பெரியாரை குறைத்து மதிப்பிடுவதோ, அவரைக் குறை சொல்லி மகிழ்வதோ என்னுடைய நோக்கம் அல்ல.

//மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.//

நித்யான‌ந்தர் உட்பட பல சாமியார்கள் (மற்றும் கிறித்தவ மத வாதிகள்) கூட இப்படி சொன்னதாக ஞாபகம்.////

புத்தர் , ஆதி சங்கரர், விவேகானந்தர், பட்டினத்தார் போன்ற சிந்தனையாளர்கள் எல்லா சொத்து பத்து , சுகங்களையும் விட்டு மரத்தடியிலே குகையிலே படுத்து உறங்கி, பிச்சை வாங்கி உணடவர்கள். சாக்ரடீசும் பணம் சம்பாரிப்பதி முக்கியமாகக் கருதாமல் நேர்மையான வாழ்க்கை நடத்தியவரே.பட்டினத்தார் அவர் கால சூப்பர் பவரான சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய செல்வந்தராக இருந்தவர். அறநூறு கோடிப் பொன்னை உதறி விட்டு நாலு முலம் வேட்டியோடு தெருவில் சென்றவர். நித்தி போல அவர்கள் பில்லியன்களை சொந்தமாக்கி சொகுசாக வாழவில்லை.

நித்யா புத்தகத்தில் எழுத்தைப் படித்து விட்டு அதை அப்படியே சொன்னார். ஒரு வேளை நீங்கள் என்னை நித்யா வோடு கம்பேர் செய்தால் – நான் எல்லோரையும் போல சாதாரணமானவன். காலையில் காபி குடித்து அலுவலகம் செல்பவன். ஓய்வு நேரத்தில் இந்த எழுத்துக்கள்.

//புத்தர் கூட கடவுளைப் பற்றிக் கவலைப் படாத, கடவுள் கோட்பாட்டை இக்னோர் செய்தவர்தான். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து கொண்டு, அதற்க்கு விடிவு தேட முயற்சியும் செய்து அதற்க்கு ஒரு சொல்யூசனையும் கொடுத்து இருக்கிறார். //

புத்தர் கொடுத்த தீர்வு, உண்மையிலேயே தீர்வா? நடைமுறைக்கு சாத்தியமா? அவரது தீர்வு, அவருடைய நோய், மூப்பு, மரணத்திலிருந்து அவரை காத்ததா? யாரையாவது காத்ததா?
தன் செல்வங்களை துறந்து சந்நியாசி என்ற பெயரில் யார் எதை சொன்னாலும் நம்புவதா?
குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் வெளியேறினால், உடனே அவர் பெரிய மகானாகி விடுகிறார் உங்கள் மனங்களில்.

புத்தர் மனிதர்களின் துன்பத்திற்கான காரணத்தை அறிந்து அவர்களை அதில் இருந்து விடுவிக்க விரும்பினார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதும், ஆசையை வென்றால், துன்பத்தை வெல்லலாம் என்பதும் புத்தரின் கோட்பாடு. அது மிகச் சரியான கோட்பாடே.

வெவேறு கால கடத்தில் வெவ்வேறு ஆசைகள் வருகின்றன.

சிறு வயதில் விளையாட்டு பொருட்களை, விளையாட்டை விரும்புகிறான். அது கிடைக்கவில்லை என்றால் வருத்தப் பட்டு துக்கப் படுகிறான். வாலிபத்தில் தான் விரும்பும் அழகிய நங்கையை அடைய விரும்புகிறான், பிறகு பணம், புகழ் ஆகியவற்றை அடைய விரும்புகிறான். சிறுவனாக இருக்கும் போது, அவனுக்கு விளையாட்டு சாமானுக்கு பதிலாக அவனிடம் பணத்தைக் கொடுத்தால் அவன் அது வேண்டாம், விளையாட்டு பொருளே வேண்டும் என்பான். இவ்வாறாக மனிதனின் ஆசையும், அதனால் ஏற்ப்படும் துன்பமும் அவ்வப் போது மாறி வருகின்றன. துன்பம் உருவாவது ஆசை வலையில் சிக்குவதாலே. ஆசை வலையில் சிக்காமல் தப்பினால் துன்பம் வருவதில்லை. இதன் தொடர்ச்சிக் கருத்தாக் ஆசையுள்ள நெஞ்சமே, தொடர்ந்து பல்வேறு பிறவிகளை எடுப்பதாகவும், தொடர்ந்து துன்பத்தில் சிக்குவதாகவும் புத்தரின் கோட்பாடு உள்ளது.

ஆசையை அழித்த நெஞ்சமானது, விடுதலை அடைந்த நிலையை அடைகிறது, எனவே அதற்குப் பிறகு அது பிறவிகள் எடுப்பதில்லை, பிணி, மூப்பு, சாக்காடு உள்ளிட்ட எல்லா துன்பங்களில் இருந்தும் ஒட்டு மொத்த விடுதலை பெற்ற நிலையை அடைய முடியும் என்பதே புத்தர் வைத்த தீர்வு.

உன்னோடலாம் தர்க்கம் செஞ்சு என்னோட பொன்னான நேரத்த செலவு செய்ய நான் விரும்பல…………
பகுத்தறிவுப் பகலவனைப் பார்த்து நாய் குரைச்சதா நினைசுகிறேன் போ……………..

திரு திருச்சிக்காரர் அவர்களே,

///பகுத்தறிவு என்பது பெரிய கடல். பெரியார் அதன் கரை ஓரமாக நின்று காலை மட்டும் நனைத்துக் கொண்டதோடு முடித்து விட்டார்.///

சரியாகக் கூறினீர்கள்.என்னைப் பொறுத்தவரை பெரியார் ஒரு பகுத்தறிவு வாதி என்று கூறுவதை நான் ஒப்புக்க கொள்ள மாட்டேன்.அவர் கையாண்டது நாத்திகம்.அதற்க்கு ஆராய்ச்சியோ,தேடுதலோ தேவை இல்லை.அவர் தேடியதெல்லாம் நாத்திகத்திற்கு சாதகமான கருத்துக்களையே.

மேலும் அவர் இந்த ஆரியர்கள் எங்கிருந்தோ இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றக் கருத்தை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்த்தாமல்-பகுத்தறிவைப் பயன்படுத்தாமல்- வெள்ளைக் காரன் சொன்னதெல்லாம் உண்மை என்று முழுமையாக நம்பினார்.அந்தக் காலத்தில் அடிமைகளாகிய நாம் அறிவற்றவர்கள், திறமையற்றவர்கள் நமக்கு ஒன்றும் தெரியாது, நம்மை ஆளும் வெள்ளைக் காரன் அறிவாளி, திறமைசாலி என்ற மாயை இருந்தது.அதனால் வெள்ளைக் காரன் சொன்னதை பெரியார் அப்படியே ஏற்றுக் கொண்டார் .

இந்த ஆரியர்கள் விசயத்தில் டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவுடன் ஆராய்ந்து “ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதற்கு துளிகூட ஆதாரம் இல்லை” என்று கூறி இந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்.டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் பேசியிருக்கிறார்.இந்துமதத்தின் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு இந்த ஆரியக் கொள்கை பெரும் வரப் பிரசாதமாக இருந்தபோதிலும்,அதில் உண்மையில்லாததால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

டாக்டர் அம்பேத்கர் இந்த ஆரியக் கொள்கையை பகுத்தறிவுடன் ஆராய்ந்து உண்மையில்லை என்று கூறியதை,பெரியார் துளி கூட ஆராயாமல் பகுத்தறியாமல் ஆரியக் கொள்கை உண்மையே என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்.இதில் யார் பகுத்தறிவுவாதி.

மதங்கள் போதிக்கும் நன்னெறிகளே உலகில் பெரும்பான்மையோரை நல்லவர்களாக வைத்திருக்கிறது.யோகா,பிராணாயாமம், தியானம்,மற்றும் மத சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதால் வரும் உடல், மன நலன்கள் மற்றும் நல்லக் குடும்ப அமைப்பு ,,நல்ல சந்ததி போன்ற நல்ல விசயங்களை அவர் எடுத்துக் கூறவில்லை.மதங்களால் பல நல்ல விசயங்கள் இருந்தும் அவருடைய நாத்திகக் கொள்கைக்காக அதைமுழுமையாக நிராகரித்தார்.

கற்பு ,திருமணம், கர்ப்பம் தரிப்பது,குழந்தை பெறுவது போன்றவை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு,பெண்ணடிமைத்தனம் என்று தவறாகப் புரிந்து கொண்டார்.உலகில் கற்ப்பொழுக்கம் இல்லாத ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவருவதை அறிகிறோம்.அதலால் அங்கே அதிகக் குழந்தைப் பிறப்பை அரசே ஊக்குவிக்கின்றது.கற்ப்பொழுக்கத்தைக் கடைபிடிக்கும் கிழக்காசிய நாடுகளிலேயே மக்கள் சக்தி அதிகம் இருக்கின்றன,அப்படி இல்லாமல் உலகில் அனைவரும் கற்ப் பொழுக்கம் இல்லாமல் வரம்பின்றி ஐநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் கூட இப்பொழுது உலகில் அழியும் உயிரினங்கள் பட்டியலில் மனித இனமே முதலிடம் பெற்றிருக்கும். கற்ப்பொழுக்கமே ஒரு நிலையான குடும்ப அமைப்பைத் தருகிறது.கற்ப்பொழுக்கமில்லாதவர்கள் கணவர்களை மாற்றுவது /கணவன்மார்கள் மனைவிகளை மாற்றுவது போன்ற செயலால் ஒரு நிலையான குடும்ப அமைப்பு இல்லாமல் போகிறது.அதனால் அவர்கள் குழந்தைப் பேரை தவிர்க்கின்றனர்.அல்லது குறைத்துக்கொல்கின்றனர். இதன் காரணமாகவே ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

பெரியார் கூறுவதுபோல் கர்ப்பில்லாமலும்,திருமணம் செய்யாமலும் குழந்தைப் பெற்றுக்கொல்லாமலும் பெண்கள் இருந்தால் இரண்டு தலைமுறையிலேயே மனித இனம் உலகில் அழிந்துவிடாதா??? இதுவா பகுத்தறிவு??? என்னைக் கேட்டால் அவர் ஒரு நாத்திகவாதி மட்டுமே.பகுத்தறிவுக்கும் அவருக்கும் அதிக தூரம்.

//ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும்//
இதைபோல, ஒரு குருடனை குறித்து யேசுவிடம் ஒருக்கேள்வி கேட்கப்பட்டது. அதற்கவர் அளித்த பதிலை பாருங்கள்.

என்ன பதில் என்று எழுதுங்களே , எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே! ஒருவனைக் குருடனாக கடவுள் ஏன் படைத்தார் என்று சொல்லுங்களேன்.

எனக்கு பெரியாரிடம் நிறைய கருத்து வேறுபாடு உண்டு. அதற்காக அவர் மீது வீண் பழி சொல்ல விரும்பவில்லை.
இந்த கட்டுரை, பெரியாரை இழிவு படுத்த எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.

//இந்து மதத்தின் மேலே சில பல மூட நம்பிக்கைகளை தூசியாகப் படிந்து இருந்தன. பெரியார் அவற்றை சுட்டிக் காட்டி பகுத்தறிவுவாதி என்று எளிதாக பெயர் எடுத்து விட்டார்.//
எளிதாக எடுத்துவிட்டாரா? நீங்க அப்படி ஏதாவது ஒரு பேர் எடுத்துகாட்டுங்க பார்க்கலாம்.

//கடவுள் இல்லை என்று சொல்வது எளிதான விடயம், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் கூட சொல்ல முடியும். நானும் சொல்ல முடியும்.//
உம்மை போல, பெயர் சொல்ல கூட பயந்து, ஏதோ ஒரு மூலையில ஒளிஞ்சுகிட்டு, இணையதளத்தில என்ன வேணும்னாலும் சொல்லலாம். ஆனால், மூடநம்பிக்கைகள் நிறைந்த கடந்த நூற்றாண்டில், நம் நாட்டில், தைரியமாக நடுத்தெருவில் நின்று ஊரே கேட்கும்படி சொல்ல தனி தைரியம் வேண்டும்.

//ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.
//
ஹ்ம்ம்… சம்சாரி எல்லாம் சுகவாசி, சந்நியாசி எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்… நல்ல இருக்கையா உம் லாஜிக். தமிழகத்தில் சாதி அடிப்படையில் இருந்த அடிமைகள் குறைந்து உள்ளனரே, அதுவே பெரிய சாதனை. சராசரியாக ஒரு மனிதன் தமிழகத்தில் என்ன செய்கிறானோ அதைவிட பெரியார் நிறைய சாதித்ததாகவே தோன்றுகிறது. கண்டிப்பாக, உம்மை விட நிறையவே சாதித்துள்ளார். பெரியார் தன், காலத்தை சொகுசாக கழித்தார் என்றால், உம் வாழ்க்கையை என்ன சொல்வது?

//உண்மையான பகுத்தறிவுவாதி மனித வாழ்க்கையின் போக்கு , அதன் காரணிகள் ஆகியவற்றை ஆராய்வான். மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட அமைதியான வாழ்க்கை வாழ அவனால் இயன்ற தீர்வை அளிப்பான்.//
பகுத்தறிவுக்கு நீங்கலாக இப்படி ஒரு அர்த்தம் கொடுத்துக்கொண்டால் யார் என்ன செய்ய முடியும்…

//ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்?//
Is the above statement is out of self pity?

//ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?//
How do you know that someone is HAPPY? They might be rich, but that doesn’t mean they are happy? On what basis you claim them to be Happy?

பெரியாரின் மீது நான் மதிப்பு வைத்து இருக்கிறேன். பெரியாரைப் பாராட்டி ஏற்க்கனவே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம். பெரியாரைப் பாராட்டி இன்னும் சில கட்டுரைகளும் வெளியாகும். அதே நேரத்தில் அவருடைய சிந்தனைகளின் வரம்புகளை ஆராய்ச்சி செய்வதோ, கோட்பாட்டை விமரிசப்பதோ அவசியமாகும் பட்சத்தில் அதையும் செய்கிறோம்.

யாராக இருந்தாலும் அவரின் ஒவ்வொரு கருத்தையும் சீர் தூக்கி வரவேற்றோ, விமரிசித்தோ செயல் படுவோம். ஒட்டு மொத்தமாக யார் ஒருவரின் சிந்தனைகளையும் ஆதரிக்க வேண்டும் என்றோ, விமரிசிக்க வேண்டும் என்றோ செயல் படுவது இல்லை.

//பகுத்தறிவுக்கு நீங்கலாக இப்படி ஒரு அர்த்தம் கொடுத்துக்கொண்டால் யார் என்ன செய்ய முடியும்…//

இது வரை சொல்லி வைக்கப் பட்டுள்ளதை அப்படியே ஏற்றுக் கொண்டு அதோடு நின்று விடாமல், உண்மை என்ன என்பதை சுதந்திரமாக விருப்பு வெறுப்பின்றி ஆராய்வதே பகுத்தறிவு.

மனித வாழ்க்கையின் கூறுகளை, போக்குகளை, இன்ப , துன்பங்களை, அதற்க்கான காரணிகளை, மனிதர்கள மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்க்கான முறைகளை ஆராய்வதே பகுத்தறிவு. பகுத்தறிவு என்பது உண்மையைத் தேடுவதாகும். மனித வாழ்க்கை சமபந்தமாக இது வரை சொல்லி வைக்கப் பட்டுள்ளதை அப்படியே ஏற்றுக் கொண்டு அதோடு நின்று விடாமல், உண்மை என்ன என்பதை சுதந்திரமாக விருப்பு வெறுப்பின்றி ஆராய்வது பகுத்தறிவு.

இந்த கருத்து- சொல்லியிருப்பது உண்மையா என்று சரி பார்ப்பது , தானே சுதந்திரமாக ஆராய்வது… இந்த பகுத்தறிவு விளக்கம் இயற்பியல் வேதியியல், வானியல் உள்ளிட்ட எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

//ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்?//
Is the above statement is out of self pity?

இது self pity அல்ல . இது ஆராய்ச்சி செய்யப் பட வேண்டிய முக்கிய விடயம்.

இந்த விடயத்தில் ஆராய்ச்சி செய்யப் பட்வதை நீங்கள் விரும்பவில்லை என நினைக்கிறேன்.

இது விடயமாக மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள தலையில் கட்டப் பட்ட தவறான சித்தாந்தங்களை அவர்கள புரிந்து கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவே நீங்கள் இதை self pity என்று திசை திருப்ப முயல்கிறீர்களோ என்றே தோன்றுகிறது

மார்க்ஸ் என்ற புத்தகத்தில் பெரியார் ஒரு அத்தியாயம். அவர் கலத்தில் அவர் செய்த போராட்டங்களும் சாதனைகளும் ஒரு சில பதிவுகளுக்குள் அடங்கிவிடாது. இந்தக்கட்டுரை வருத்தமளிக்கிறது. பெரியாரை under estimate செய்வதாகவே உள்ளது. மேலும் பெரியார் சொகுசாக வாழ்ந்தார் என்ற வரிகளில் வெறும் காழ்ப்புணர்வு மட்டும்தான் தெரிகிறது. பெரியார் சிந்தனைகளை முழுதாகப் படிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று எழுத வேண்டாமே!

கரையோரமாக கால் நனைத்தது போல் எழுதிவிட்டீர்கள் .பெரியாருடைய கருத்துகள் ஆராய்ச்சிக்கும் வாதத்திற்கும் உட்பட்டவையே .ஆனால் இன்னமும் ஆராய்ந்து நீங்கள் எழுதியிருக்கலாம் .மேலோட்டமாக இருக்கிறது உங்கள் எழுத்து .

அன்பு நண்பர்களே, பெரியாரை குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கம் அல்ல.

நான் பெரியாரின் கேள்வி கேட்கும் துணிவு, குறுக்கு வெட்டு பார்வை ஆகியவற்றை கண்டு ஆச்சரியப் பட்டவன்.

பெரியாரின் கருத்துக்களை ஒட்டியும், வெட்டியும் பல கட்டுரைகள் நம்முடைய தளத்தில் வெளியாகும். பெரியார் சம்பந்தமாக நாம் முன்பு இதே தளத்தில் வெளியிட்ட கட்டுரையைப் படித்தால் தெளிவாகும்.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/04/periyaar-1/

பெரியார் என்ன செய்தார்…திருச்சியார் தன் பூணூலை வெளியே தைரியமாக காட்டி கொள்ள முடியவில்லையே. எந்த சாதிக்காரனும் சாதி நம்பிக்கை ஏன் வெறியே இருந்தாலும் சாதி பெயரை போட்டு கொள்வதில்லையே தமிழ்நாட்டில் . மற்ற இந்திய மாநிலங்களின் கதை உங்களுக்கே தெரியும். மற்ற மாநில மக்கள் போல் தமிழகத்தில் சாதி பெயரை தன் பெயரோடு சேர்த்து போட எத்தனை பேர் தயார்..? சொல்லபோனால் சாதியை உருவாக்கிய பார்புகளே தமிழ் நாட்டுக்குள் போட்டு கொள்வதில்லை.

தமிழ் நாட்டில் இல்லாத சாதி வெறியா, இல்லாத சாதி சங்கமா?

ஆனால் உங்களைப் போல சாதி வெறியில் குளிர் காய நமக்கு விருப்பமில்லை. சாதிகளற்ற சமத்துவ சமுதாயமே நமது குறிக் கோள்.

பெரியாருக்கு மாலை போட்ட அனைத்து அர்ச்சகர்களும் பூணூலை வெளியில் காட்டிக் கொண்டுதான் மாலை போட்டுள்ளனர்.

சாதியை உருவாக்கியது பார்ப்பு என்கிற குற்றச் சாற்றை வைக்கிறீர்கள். அவரவர்கள தொழிலுக்கும், இடத்துக்கும் ஏற்ப சாதிகளை உருவாக்கிக் கொண்டு உள்ளனர். செட்டியாரை எடுத்துக் கொண்டால், நகரத்து செட்டியார், மனை செட்டியார், கோமுட்டி செட்டியார்…. என்று எத்தனை பிரிவுகள். ஆசாரியினரை எடுத்துக் கொண்டால் பொன் ஆசாரி, மர ஆசாரி… இப்படி பல பிரிவுகள். இப்படி அவரவர் தொழிலுக்கும், வசிக்கும் இடத்துக்கும் ஏற்ப சாதிகள் வெவ்வேறு கால கட்டத்திலே உருவாக்கி இருக்கின்றன. அக்காலத்தில் பணம் சம்பாரிப்பதில் அதிக ஈடுபாடு காட்டாத , ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு காட்டியவர்கள் பார்ப்பனர் ஆக அமைக்கப் பட்டனர். சமூகத்தின் தலைவன் அரசன், மற்றும் அமைச்சர் அதிகாரிகள். செல்வத்தை வைத்து இருந்தவர்கள் சில சாதியினர். பார்பான் என அழைக்கப் பிரிவினர், சண்டை சச்சரவில் ஈடு படாமால், எளிய வாழ்க்கை வாழ்ந்ததால் அவர்கள் மதிக்கப் பட்டனர். இவ்வளவு சாதிகள், இருக்கின்றன எனக் கணக்கு எடுக்கப் பட்டதே பிரிட்டிசார் காலத்தில் தான். அதற்க்கு முன்பு மக்கள தாங்களாக பிரித்துக் கொண்டதுதான் சாதிகள்.

ஆனால் இதை எல்லாம் சிந்திக்க உங்களுக்கு மனம் வராது. ஏனெனில் உங்களிடம் குறிப்பிட்ட சாதிக்கு எதிராக கட்டுப் படுத்த முடியாத வெறுப்புணர்ச்சியும், சாதி வெறியும் , சாதிக் காழ்ப்புணர்ச்சியும் உள்ளன. இதில் மதக் காழ்ப்புணர்ச்சி வேறு. கேட்க வேண்டுமா?

சாதி வெறி யாருக்கு இருக்கிறது என்பதை உங்கள் கட்டுரை ஏற்கனவே அம்பலமாக்கிவிட்டது. கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் குறிப்பாக இந்துக்கள்,கடவுள் மறுப்பை ஏற்று கொள்ளாவிட்டாலும் பெரியாரை தமிழகத்தின் தலைவராக தான் எண்ணுகின்றனர்.பார்பனர்களுக்கு தான் பெரியார் பெயரை கேட்டாலே எரியும். நீங்க பார்ப்பு என்று எனக்கு தெரியவந்தது உங்கள் வார்த்தைகளில் இருந்தே. சரிதானே …
மத காழ்புணர்ச்சி வேறா ..அது எந்த மதம்.. ?

சாதி சார்பு அடையாளத்தை மறுக்கிறேன். மனிதனாக அடையாளம் காணப் படுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனவே உன் சாதி என்ன, குளம் என்ன, கோத்திரம் என்ன நாள் என்ன, நட்சத்திரம் என்ன என்று கேட்டு பிற்போக்கு , பிரிவினை வாத பிரச்சாரத்தில் சாதி முறையை நிலை நிறுத்தும் படிக்கான பிரச்சாரத்தில் இறங்க வேண்டாம்.

சாதியை விட்டு விடக் கூடாது என்று பாடு படுவீர்கள போல இருக்கிறதே. யோவ் நீ சாதியை விடாத ஐயா, நீ முதலியார், நீ பார்ப்பனர், நீ வெள்ளாளர் , நீ பிள்ளை மார் …. அப்படியே இருங்க ஐயா… அப்பத்தான் நாங்க அதை வைத்து எங்கள் காலத்தை ஓட்ட முடியும் என்று என்று சொல்லுவது போல நிலைமை உள்ளது.

சாதிகளற்ற சமத்துவ சமரச நாகரிக நல்லிணக்க சமுதாயம் அமைப்பதே நமது குறிக்கோள், எனவே தயவு செய்து எந்த ஒரு சாதிப் பெயரையும் இங்கே குறிப்பிட்டு எழுத வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து சாதிப் பெயர்களைக் குறிப்பிட்டு சாதி வெறியை, சாதி முறையை நிலை நிறுத்த முயல்வது சரி அல்ல, அப்படிப் பட்ட பின்னூட்டங்களை இனி இட வேண்டாம்.

பெரும்பாலான இந்துக்கள் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறீர்கள். அவரை தமிழகத்தின் தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், பெரியார் காமராஜரை ஆதரித்து அண்ணா துரையாரை எதிர்த்து தேர்தலில் பிரச்சாரம் செய்தார். மக்கள் அவருடைய பிரச்சாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டால் அண்ணாதுரையார் வென்றது எப்படி. மற்றபடி தமிழ் நாட்டிலே சிந்தனையாளர்களைடம் பெரியார் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியவர் என்பது உண்மையே. நானும் அவரது கேள்வி கேட்கும் விதத்தைக் கண்டு, குறுக்கு வெட்டு சிந்தனைகளைக் கண்டு வியந்தவன் தான். பெரியாரை என்னுடைய ஆசிரியர்களில் ஒருவராகவே நான் கருதுகிறேன்.

அறிவியல் வளர்ந்த காலத்தில் வெள்ளைக்காரன் போய் விட்டால் நமக்கு குண்டூசி கூட செய்ய தெரியாது என்று கண்டுபிடித்தது பகுத்தறிவு.

அறிவியலை பற்றி என்னவென்றே உலகம் யோசித்திருக்க முடியாத காலத்திலேயே,அல்ட்ரா சொனிக்,ராடர் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே ஆழ் மன அறிவின் மூலம் அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது காட்டுமிராண்டி அறிவு.

வெள்ளைகாரனே நாட்டை ஆளட்டும் என்று சொன்னது பகுத்தறிவு.
நாங்களே நாட்டை ஆள்வோம் வெள்ளையனே வெளியேறு என்றது பகுக்காத அறிவு.

இந்தியாவிலிருந்து தனி திராவிட நாடு பிரிக்க சொன்னது பகுத்தறிவு.
எல்லோரும் ஒன்றாய் இந்தியராய் வாழ்வோம் என்றது,வாழ்ந்து கொண்டிருப்பது சோடை போன அறிவு.

வாழ்க பகுத்தறிவு

//அறிவியலை பற்றி என்னவென்றே உலகம் யோசித்திருக்க முடியாத காலத்திலேயே,அல்ட்ரா சொனிக்,ராடர் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே ஆழ் மன அறிவின் மூலம் அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது காட்டுமிராண்டி அறிவு//

1.ஆழ்மன அறிவு என்றால் என்ன?

2.இந்த அறிவுப் பாடம் எந்த பல்கலை கழகத்தில் (கல்லூரியில்) பயிற்றுவிக்கிறார்கள்?.

3. உங்களுக்கு ஆழ்மன அறிவு உண்டா?.

4. இப்போது ஏதாவது அந்த ஆழ்மன அறிவின் மூலம் ஏதாவது கண்டு பிடித்து சொல்லுங்களேன்?

//அடுத்த கிரகத்தின் சூரியனை சுற்றி வரும் வேகம் முதல், சூரிய குடும்பத்தின் கடைசி கிரகத்தின் விட்டம் வரை கண்டு பிடித்து எழுதி வைத்தது //
1.யார் க‌ண்டு பிடித்து எழுதி வைத்தது? எப்போது? எந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் இடம் பெற்று உள்ளது?.

2.ஆழ்மன அறிவின் மூலம் என்னென்ன காரியங்கள் செய்ய முடியும்?

3.ஆழ்மன அறிவின் எல்லைகள் என்ன?.

//ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்//

இதற்கு மத வாதிகள் சொல்லும் காரணம் அவன் முற் பிறவியில் செய்த பாவம்.எல்லாம் த‌லைவிதி.எல்லாம் ஏற்கென‌வே தீற்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

ஆனால் 1000 பெருக்கு 20 பேர் உடல் குறைபாடுள்ளவர்களக(மன்னிக்கவும் மாற்று திறனாளிகள்) பிற‌ப்பது பல்வேறு காரணிகளை சார்ந்து அமைவது.பெற்றோரின் ஜீன்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் ,பரம்பரை வியாதி போன்றவற்றினால் ஏற்படுவது.

மாற்று திறனாளிகள் என்று சொல்வதே தன்னம்பிக்கை ஏற்படும் விதமாக உள்ளது.அவர்களுக்கு கல்வி,உதவி ம்ற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கினால் எந்த விதியும் ஒன்றும் செய்ய முடியாது.எனக்கு தெரிந்த பல மாற்று திறனாளிகள் நம்மை விட திறமையாக வேலை செய்வார்கள்.

இட‌ ஒதுக்கீட்டின் ப‌ல‌னால் எல்லா சாதியிலிலும் பணக்காரர்கள் உள்ளனர். உயர் சாதியில் கூட ஏழைகள் உள்ளனர். அப்புறம் என்ன தலைவிதியாவது மண்ணாவது?.

எல்லா மக்களுக்கும் உணவு,கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க ஒரு சிறப்பான அரசியலமைப்பு ஏற்பட்டால் இந்த கேள்விகளுக்கே இடமில்லை.

நண்பர் சங்கர் அவர்களே,

கட்டுரைகளைப் பொறுமையாகப் படித்து உங்களின் பார்வையை முன் வைத்ததற்கு நன்றிகள்,

மதம் சொல்வது, தலை விதி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு என்ன காரணம் என்று நாம் என் சிந்திக்கக் கூடாது?

//மாற்று திறனாளிகள் என்று சொல்வதே தன்னம்பிக்கை ஏற்படும் விதமாக உள்ளது.அவர்களுக்கு கல்வி,உதவி ம்ற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கினால் எந்த விதியும் ஒன்றும் செய்ய முடியாது.எனக்கு தெரிந்த பல மாற்று திறனாளிகள் நம்மை விட திறமையாக வேலை செய்வார்கள். //

நன்றி நண்பா, மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை வசதிகள் செய்து கொடுக்கப் பட முடியுமோ, எத்தனை வாய்ப்புகள் தரப் பட வேண்டுமோ அவ்வளவும் தரப் பட்டு அவர்கள வாழ்வு வளம் பெற வேண்டும் என்கிற உங்களின் பரிவை நான் பாராட்டுகிறேன். நானும் அதே கருத்தை உடையவன் தான். ஆனால் ஒரு மனிதன் கண் பார்வை இல்லாமல் பிறந்தால் , அந்தக் குறை பாட்டினால், அவன் தன் வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கும் இடையூறுகள், தொல்லைகள, துன்பங்கள், ஈடு செய்ய முடியாத இழப்பாகவே உள்ளன என்பதை மறுக்க முடியுமா?

//ஆனால் 1000 பெருக்கு 20 பேர் உடல் குறைபாடுள்ளவர்களக(மன்னிக்கவும் மாற்று திறனாளிகள்) பிற‌ப்பது பல்வேறு காரணிகளை சார்ந்து அமைவது.பெற்றோரின் ஜீன்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் ,பரம்பரை வியாதி போன்றவற்றினால் ஏற்படுவது.//

அப்படிப் பட்ட வியாதி உள்ள பரம்பரையில், பிறக்குமாறு ஏன் ஏற்பட்டது?

//எல்லா மக்களுக்கும் உணவு,கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க ஒரு சிறப்பான அரசியலமைப்பு ஏற்பட்டால் இந்த கேள்விகளுக்கே இடமில்லை.//

அரசாங்கம் மனிதர்களின் துன்பங்களை எல்லாம் சரி செய்யும் வலிமை உள்ளதாக இருக்கிறதா? சீராட்டிப் பாராட்டி சிரித்து வளர்த்து சிரித்து விளையாடிய மகன் மூன்று வயதில் இறந்து விடுகிறான்? இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நல்ல அரசாங்கம், நல்ல நிர்வாகத்தை வழங்குவதாக எல்லாக் குடி மகன்களுக்கும் நியாயமான் , பொதுவான வசதிகளை செய்து கொடுத்து, நீதியை , ஒழுங்கை நிலை நாட்டுவதாக இருக்க முடியும், அதற்கு மேல் மனித வாழ்க்கையின் துன்பக்களுக்கான எல்லா தீர்வையும் அது தர இயலும் என்று நம்புவது ஆரம்ப கட்ட சிந்தனையே. இன்னும் தொடர்ந்து சிந்தியுங்கள்.

//ஆனால் பெரியார் மனித வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வு எதையும் காண முயலவில்லை. மனித உயிர் பற்றிய ஆராய்ச்சியையும் செய்யவில்லை. அப்படியே சொகுசாக காலம் கடத்தி விட்டார்.

ஆனால் உண்மையில் மனிதன் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறான்? அதற்கு காரணம் என்ன? ஏன் ஒருவன் குருடனாகப் பிறக்க வேண்டும், ஏன் மற்றொருவன் எந்தக் குறையும் இல்லாமல் செல்வந்தர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறான்?//

என்ன கொடுமைங்க சாரே,

காலுகை நல்லா இருக்கிறவங்களை ஒதுக்கி வைத்து நீ பறையன், பள்ளன் தீண்டத்தகாதவன் என ஊனமாக்கிப் பார்த்தவர்களை மிரள வைத்ததைவிட குருடு, செவிடு ஆராய்ச்சி மனித இனத்துக்கு எந்த விதத்தில் பயன்பட்டு இருக்கு ?

ஒரு மனிதன் ஏழையாகப் பிறக்க, பணக்காரணாகப் பிறக்க எந்தகாரணமாக இருந்தாலும், அவன் அப்படியே அதைத் தொடர அவனே காரணமாக அமைந்துவிடுகிறான் என்பது பெரியார் அறிந்தது தான். பிறப்புக்கு முன்னும் பின்னும் என்ன எழவாக இருந்தாலும் பிறந்த பிறகு செயல்படுத்தும் சமூக வாழ்க்கை என்பது முக்கியமானது. விதிக் கோட்பாடுகளும், கடவுள் கோட்பாடுகளும் வாழ்க்கைக்கு எந்த விததிலும் பயன்படுவதைவிட ஒரு மனிதன் விழிப்புணர்வு பெருவதன் மூலம் பெரும் நன்மைகள் மிக அதிகம். அப்படி விழிப்புணர்வு பெற்றதனால் தான் என்னவோ பார்பனர் அல்லாத பிறரும் கூட பெரியார் என்ன செய்து கிழித்தார் என்பதாக கேள்வி கேட்கும் ‘துணிச்சலுக்கு’ வந்துள்ளனர். அந்த துணிச்சலை முன் மொழிந்தவர் பெரியார் என்பதை மறந்துவிட்டு.

பெரியார் பற்றிய எதிர்ப்பும், ஏச்சுமே, பெரியார் மீது பார்ப்புகளும், இந்துத்துவாக்களும் ஏன் பலமுனை தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பெரியாரைப் பற்றிப் படிக்கப் போய் தான் பெரியார் பற்றி நான் உட்பட பலர் அறிந்து கொள்ள காரணமாக அமைந்தது.

உங்களின் பெரியார் விழிப்புணர்வு சேவை பாராட்டத்தக்கது.

//4. இப்போது ஏதாவது அந்த ஆழ்மன அறிவின் மூலம் ஏதாவது கண்டு பிடித்து சொல்லுங்களேன்?
Reply .//

குதர்க்க வாதிகளிடம் பேசி நேரத்தை வீணாடிக்க கூடாது. உண்மையை சொன்னால் ஹிந்துத்துவவாதி என்ற முத்திரை விழும்.

ஆழ்மன அறிவு எல்லாம் எனக்கு இல்லை, உங்களுக்கு அது என்ன என்றே தெரியவில்லை பாவம். அதனால் நிச்சயம் உங்களிடம் அது இருக்கமுடியாது. நான் குறிப்பிட்ட ஆழமான அறிவு என்பது ஒரு விஞ்ஞானியின் அளவுக்கு ஆழமான சிந்தனை செய்யும் அறிவு திறன்.
இங்கே நான் சொல்லியிருப்பது வெறும் அனுபவ அறிவினால் மட்டுமே.

//பெரியார் பற்றிய எதிர்ப்பும், ஏச்சுமே, பெரியார் மீது பார்ப்புகளும், இந்துத்துவாக்களும் ஏன் பலமுனை தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பெரியாரைப் பற்றிப் படிக்கப் போய் தான் பெரியார் பற்றி நான் உட்பட பலர் அறிந்து கொள்ள காரணமாக அமைந்தது.

உங்களின் பெரியார் விழிப்புணர்வு சேவை பாராட்டத்தக்கது.
Reply //

அவரை பற்றிய உண்மை உலகுக்கு புரிய வேண்டியது அவசியமே. அவரை அவருடைய மறுபக்கத்தை மற்றவர் அறியாமல் இருட்டடிப்பு செய்து வருவது யார் என்றால் அவரின் தொண்டர்களே. இன்னும் கிளறி முழு உண்மையையும் தெரிந்து கொள்ள முயலுங்கள்.
அவரைபற்றிய பல விரிவான உண்மையான கட்டுரைகள் இணையதளத்திலேயே கிடைக்கின்றன தேடி படித்து அவர் பற்றிய உண்மையான அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.

பிரபலமாக வந்து விட்ட நல்லவராயினும் கெட்டவராயினும் அவரை பற்றிய நாலுவித கருத்துக்களும் இருக்கவே செய்யும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக யாரும் இருக்கமுடியாது.அப்படி எதிர்பார்ப்பது அவரை ஆராயாமல் ஏற்றுக்கொள்ள சொல்லி மற்றவர் இடத்தும் திணிப்பது பகுத்தறிவு நிறைந்த அவருடைய அடியார்களே.

வெள்ளைகாரனுக்கு ஆதரவு கொடுத்த ஒருவர் நாட்டை துண்டாக பிரிக்க சொன்ன ஒருவர் இந்த மாபெரும் தலைவர்.

வாழ்க அவர் நாமம் வளர்க அவர் தொண்டர்களின் சேவை.

இவ்வளவு பேசும் அவர் அடியார்களுக்கு எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை இருந்தால் உண்மையான கடவுள் எதிர்ப்பு இருந்தால் உண்மையான வீரம் இருந்தால்.எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?
அப்படி உண்மையாக செய்ய ஆரம்பியுங்கள் உங்கள் கொள்கை உண்மையானது என்று உங்கள் பின்னல் வர பெரிய கூட்டமே இருக்கும் அல்லது நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு விடும் சூழ் நிலை உருவாகும்.
இதற்கு தயவு செய்து நேரடியாக பதில் சொல்லவும்.

//எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை//

எழுத்தப்பிழை மன்னிக்கவும், உங்களிடம் நெஞ்சிலே நடுநிலை இருந்தால் என்று படிக்கவும்.

பெரியாரை சோ ராமசாமி, பார்பன ஜல்லிகலான தமில்ஹிண்டு.காம் இங்கெல்லாம் படிச்சிட்டு வந்து பெரியாரை நான் படித்துவிட்டேன் , அந்த ஆளு விடுதலையை எதிர்த்தார், நாட்டை பிரிக்க சொன்னார் என்று பொதுவாக உளறத்தான் முடியும். இன்னமும் பெரியாரின் தேவை தமிழகத்திற்கு இருபதையே அர்ச்சகர் மாணவர்கள் பிரச்னை காட்டுகிறது.
//இவ்வளவு பேசும் அவர் அடியார்களுக்கு எங்களிடமே நெஞ்சிலே நடுநிலை இருந்தால் உண்மையான கடவுள் எதிர்ப்பு இருந்தால் உண்மையான வீரம் இருந்தால்.எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?//
இவ்வளவு உண்மை பேசும் நீங்கள் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் ஆலய தீண்டாமை செய்யும் பார்பன அர்ச்சகர்களுக்கு என்ன சொல்வீர்கள்.

அன்புள்ள திரு பிரதீப்,
//இவ்வளவு உண்மை பேசும் நீங்கள் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் ஆலய தீண்டாமை செய்யும் பார்பன அர்ச்சகர்களுக்கு என்ன சொல்வீர்கள்.
Reply //

நான் கேட்டது நேரடி பதில் நாம் ஏன் கடவுள் மறுப்பு விசயத்தில் பாரபட்சம் காட்ட வேண்டும். ஒன்று எல்லா கடவுளையும் எதிருங்கள் இல்லாவிட்டால் பேசாமல் இருங்கள்.
தீண்டாமை எதிர்ப்பையும் கடவுள் எதிர்ப்பையும் போட்டு குழப்பி மீன் பிடிக்க பார்க்காதீர்கள் . உங்கள் கொள்கை தீண்டாமை எதிர்ப்பு எனும் பட்சத்தில் நான் நிச்சயம் உங்கள் பக்கமே.இங்கே உள்ள மற்ற தவறுகளை குறிப்பிடுங்கள் அதனையும் ஏற்புடையதாக உள்ள பட்சட்த்தில் உங்களுடன் சேர்ந்து எதிர்க்க தயார்.
நான் கேட்பது தெளிவாக உங்களின் கடவுள் எதிர்ப்பு கொள்கையின் நிலைப்பாடு பற்றி.
எந்த ஆலயத்தினுள் தீண்டாமை பின்பற்றப்படுகிறது,கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.எனக்கு தெரிந்து என் வயதில் எந்த கோவிலிலும் நீ தாழ்ந்த ஜாதி அதனால் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை என்று கேட்டதில்லை. வேண்டுமானால் உங்கள் கழகத்தின் தலைமை பொறுப்புக்கு குறிப்பிட்ட ஜாதிகாரகள் வரவே கூடாது என்று எழுதாத சட்டம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏன் முதலில் மாற்றத்தை உங்களிடம் இருந்து ஆரம்பியுங்களேன். அந்த தலைவர் பதவியை ஒரு பிற்படுத்தபட்டவற்கு கொடுத்து பாருங்களேன். கோவிலுக்குள் ஏற்கனவே அரசு கருவறை வரை எல்லா தரப்பினரும் சென்று அர்ச்சிக்க சட்டப்படி வழி செய்து விட்டது. தீண்டாமை கோவில்களில் மட்டும் அல்ல எந்த இடத்தில் இருந்தாலும் கண்டிக்க வேண்டிய விஷயம்.
தீண்டாமையை உண்மையாக எதிர்த்து செயல்பட்டவர் ராமானுஜர், காந்தி, பாரதியார், இன்னும் பலர்.

நீங்கள் இப்போது புதிதாக பார்ப்பனரை தீண்ட தகாத மனிதராக்க முயற்சி செய்கிறீர்கள். அவரும் மனிதரே அவர் அந்த குடியில் பிறந்தது என்ன பாவம். கமலஹாசன் எவ்வளவுதான் தன்னை நாத்திகராக காட்டினாலும் நீங்கள் உங்கள் பார்ப்பான தீண்டாமையால் தான் அவரை உங்கள் இயக்கத்தில் சேர்க்கவில்லை.

நண்பரே எனக்கு தெரிந்த தகவல்களை தான் தருகிறேன் இதில் ஏதேனும் தவறு இருந்து சரியாக விளக்கினால் எனக்கு உள்ள வெறும்அறிவால் சிந்தித்து பார்த்து உங்களின் பதில் ஏற்புடையதானால் என் தவறுகளை நிச்சயம் திருத்திகொள்வேன்.

மேலும் ஏதோ அர்ச்சகர் மாணவர் பிரச்னை என்றீர்கள்,அதனை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. விளக்கமாக எழுதினால் தெரிந்து கொள்வேன்.

நட்புடன்
சதீஷ்

இனக்காவலர்களே,நாம் தமிழினம்,திராவிட இனம் என்பது உங்களுக்கு உண்மையான கொள்கையாக இருந்தால், நண்பரே தமிழ் நாட்டிலேயே ஒரு ஊரில் பேசுவது, படிக்கும் நாளிதழ் எல்லாமே பிற மொழியிலே
அரசுடமை வங்கியின் பெயர்பலகை பிற அதே தமிழுக்கு தமிழனுக்கு திராவிட இனத்துக்கு சம்மந்தம் இல்லாத பிற மொழியிலே.

இது உங்களுக்கு தெரியாது என்றால் அது நிச்சயம் பச்சை பொய்.
ஏன் அங்கே உங்கள் இன உணர்வு செயல் படவில்லை. அங்கு நடக்கும் மத ரீதியான அடக்கு முறையும் கூட தீண்டாமையை போன்றதொரு கொடிய செயல் இதற்க்கு முற்போக்கு சிந்தனைகளை மட்டுமே கொண்ட பகுத்தறிவாலர்கலான உங்களின் பதில் என்ன என்பதை சொல்லுங்கள். அங்கே சிறு பான்மையாக உள்ளவர்கள் மிக கேவலமாக எந்த உரிமையும் இன்றி நடத்தப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியாது என்று சொன்னால் இனியாவது தெரிந்து கொண்டு எதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். நீங்கள் ஏதும் செய்யத பட்சத்தில் அந்த தவறுகளை கண்டும் கானதிருக்கும் செயல் ஆகும்.

//அந்த ஆளு விடுதலையை எதிர்த்தார், நாட்டை பிரிக்க சொன்னார் என்று பொதுவாக உளறத்தான் முடியும்.//

அவரின் வெள்ளைக்கார ஆதரவு, காங்கிரசின் விடுதலை போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு பெரியார் படத்திலேயே ஓரளவு காட்டப்பட்டுள்ளது.

பெரியாரின் சிலைகள் இன்றளவும் உடைக்கப்படுகின்றன.அவரின் கருத்துக்கள் கொள்கைகள் தூற்றப்படுகின்றன,போற்றவும்படுகின்றன.விமர்சிக்கவும்படுகின்றன.கடவுள் என்ற கருத்துருவாக்கத்தின் மேலுள்ள,மக்களின் நம்பிக்கை ஒழியும் வரை இந்த தூற்றல் தொடரும்.இதன் அர்த்தம் இந்த உலகம் உள்ள வரை இது தொடரும் என்பதாகும்.ஏனெனில் அவருடைய கருத்துக்கள் அவ்வளவு முற்போக்கானவை.மனிதன் பயத்தையும் அவநம்பிக்கையும் இழக்காதவரை பெரியாரைப் போன்ற புரட்சிக்காரர்கள் பழிக்கப்பட்டே வருவார்கள். தற்போதைய அரசியல் தலைவர்கள் தன்னை ஒரு தலைவனாக கொள்கை வீரானாக காட்டிக் கொள்ள தன் கட்சி கொடியுடன் தேச தலைவர்களின் புகைப்படங்களை போட்டு கொள்வார்கள் ஆனால் அவர்களின் கொள்கையை துளியும் பின் பற்ற மாட்டார்கள் இதன் நோக்கம் மக்களை ஏமாற்றுவது.உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது. உங்கள் எழுத்து நீங்கள் பெரிய விளம்பர பிரியர் என்பதை காட்டுகிறது.சமுதாயத்தில் மாற்றம்,சமத்துவம்,முன்னேற்றம்,வளர்ச்சி ஏதாவது காண விரும்பினால் அதை உங்கள் அறிவிலிருந்து உங்கள் வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன்.அப்படி செய்தால் மற்றொரு பெரியாராக நீங்கள் வருவீர்கள்.இதற்கு அர்த்தம் பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல.”உண்மை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது”என்று சொன்னவர்.இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதாது அவரைப் பற்றி நீங்கள் முழுமையாக படிக்கவிலலை அல்லது படிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு மனிதன் பணக்காரனாகவோ குருடனாகவோ வாழ அந்த மனிதனோ அவன் பெற்றோரோ அவன் முன்னோரோ காரணம் என கருதுகிறேன்.மனிதனின் இனப,துன்பகளுக்கான பிறப்பிற்கு கடவுள் தான் காரணம் என்றால் அப்படிப்பட்ட ” (edited)கடவுள்” இந்த உலகத்திற்கு தேவையா என்பதை நீங்கள் துயரப்படும் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டால் சிந்திப்பீர்கள்.அதை விட்டு விட்டு 33 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியை பகுத்தறிவாதியை,புரட்சிக்காரை விமர்சிக்க, பெற்ற தைரியத்தை,உங்களால் முடிந்தால் உங்கள் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் பெற்று,மற்றொரு பெரியாராக,பகுத்தறிவாதியாக,புரட்சியாளராக நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்.

நண்பர் சேகர்,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ரொம்ப சென்டிமென்டலா பீல் பண்றீங்க நண்பரே, கடவுளைக் குறை சொல்லி பேசினால் நம்பிக்கையாளர்கள் எப்படி கோவப் படுவார்களோ, அதைப் போலவே நீங்க மட்டும் அல்ல, பலரும் வருத்தப் படுறாங்க. பகுத்தறிவு வாதி என்றால் உணர்ச்சிகளை பின்னுக்குத் தள்ளி, உண்மையைத் தேடிய சிந்தனையை முன்னுக்கு வைக்க வேண்டும் அல்லவா!

மற்றபடி விளம்பரப் பிரியம் எல்லாம் இல்லை. விளம்பரப் பிரியம் என்றால், பெயர் போட்டோ, தொழில் எல்லாம் போடுவார் தானே!

கொள்கையிலே நேர்மை இருந்தால் பொதுவான கடவுள் எதிர்ப்பை கையில் எடுங்கள். நீங்கள் அதில் உறுதியாக இருந்தால் நியாமான சமநிலையுடன் இருந்தால் நானும் கடவுள் மறுப்புக்கொள்கைக்கு வருகிறேன்.உங்கள் கருத்துகளில் சமநிலை இல்லாத போது அதிலேயே ஏதோ தவறு இருக்கிறது.

இந்து கடவுள்களை மட்டும் எதிர்த்து கொண்டு பொதுவாக கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு. மற்றவர் பக்கம் தலையிடாமல் இருப்பதினால் தான் இந்த பொய் நாட்தீகத்தை ஏற்க முடியவில்லை.

உங்களிடம் விளம்பரம் தேடி ஒரு பிரயோஜனமும் எனக்கு இல்லை.விளம்பரத்திற்காக கடவுள் மறுப்பு பேசிய நண்பர்களை வேண்டுமானால் பார்த்திருக்கிறேன். ஒருவேளை நீங்களும் அந்த ரகமோ.
நான்கூட ஒரு இரண்டு வருடங்கள் கடவுள் இல்லை என்று நம்பியவன் தான். அது ஒவ்வொரு ஆத்திகரும் தனக்கு எதிர்பார்த்த விஷயம் வாழ்வில் கிடைக்காவிடில் செய்வதுதான்,என்ன நான் கொஞ்சம் ஓவராக போய்விட்டேன் அதிலே. வீட்டிலுள்ளவர்களிடம் எரிச்சலுட்டும் அளவு பேசியவன் தான்.கடவுள் மறுப்பு கொள்கைக்காகவே பெரியாரை போற்றியவன் தான். பெரும்பகுதி இந்து மத இளைஞநும் தன டீன் ஏஜ் காலத்தில் நிச்சயம் நாத்திகனாக இருப்பான் நிச்சயம்,பின்னர் தானாக ஆத்திகனாக மாறுவான். அவனால் மட்டும் தான் அப்படி இருக்கவே உரிமை பெற்றிருக்கிறான். பெற்றோர்கள் வருத்தபடுவதொடு நிறுத்தி கொள்வார்கள்.
மற்றவர்கள் நிறுத்தி கொல்வார்கள்.
வேறு மதத்தை சேர்ந்த நாத்திகர்களை காட்டுங்கள்.எனக்கு தெரிந்து நான் பார்த்தோ கேட்டோ இல்லை.பிற சமுகத்தில் அப்படி இருந்தவர்கள் அவர்களின் சமுகத்தால் தண்டிக்கபட்டு பின்னர் திருந்தி இறைவழிக்கு சென்ற ஒரு செய்தியை கேட்டிருக்கிறேன்.

ஆனால் அந்த இறை எதிர்ப்பு கருத்து ஒரே ஒரு இழிச்சவாயன் சமூகத்தினர் வழிபடும் கடவுள்களுக்கு மட்டுமே என்பது உணர்ந்த பிறகு நான் அவர் மேலுள்ள பற்றினை கைவிட்டேன்.
உங்களின் நிலைப்பாடு எதிலும் தமிழ் என்று இருந்தால் தனி மனிதனின் சுயமரியாதையை பெற்று தருவது என்று இருந்தால், ஏன் நான் மேலே குறிப்பிட்ட ஊரின் பிரச்னையில் தமிழ் அழிக்கபடுவதை எதிர்த்து ஒரு குரல் கூட விடவில்லை? அந்த அபலைகள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அவர்களை அடக்கி வைத்திருப்பவரை எதிர்த்து ஒரு சிறிய அறிக்கை கூட விட வில்லை.

//எல்லா மக்களிடமும் உங்களின் உயர்ந்த பகுத்தறிவை பரப்பும் சமத்துவ நோக்கம் இருந்தால் எல்லா மதத்தாரிடம் உங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை சமமாக பரப்ப தாயரா?//

நண்பர் சதீஸ் இத்தள‌த்திற்கு வந்து பாருங்கள். எந்த அளவிற்கு ஆக்க பூர்வபாக மற்ற மதங்களையும் விவாதிக்கிறோம்.

http://senkodi.wordpress.com/2010/08/22/language/#comment-2529

நண்பர் திருச்சிக்காரன் கூட கிறித்தவர்களை விமர்சிப்ப்பார் ஆனால் இயேசு(ஈசா அல்லது ஜீசஸ்) மீது மட்டும் எதோ பாசம் விமர்சிக்க மாட்டார். ஆகவே இக்கருத்து அவருக்கு கூறப் பட்டது என்றே எடுத்துக் கொள்வோம்.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் சிறு அறிவுக்கு எட்டக் கூடிய விஷ்யங்களை பற்றி மட்டுமே விவாதிப்பேன்.

நான் சொல்வது எல்லாம் நானும் பெரியார் செய்த எல்லா விஷயங்களும் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூற மாட்டேன். அவர் காலத்திற்கு அவர் செய்தது சரியாக இருந்திருக்கும். அவர் ஒரு இயக்கத்தின் தலைவர்.சுய விருப்பு,வெறுப்பு,காலத்தின் கட்டாயங்கள் போன்றவற்றிற்கு அவர் விதி விலக்கு அல்ல.

திராவிட இயக்கம் சாதி ரீதியான ஒடுக்கல்களை இந்து மத்தின் மீது போட்ட பொழுது,இந்து மத வாதிகள் சில மத சீர் திருத்தங்களை செய்ய வேண்டியது கட்டாய மாகியது.

உ.ம் 1.தேவதாசி முறை ஒழிப்பு( இதை ஆதரித்து பேசிய தலைவர் யார் சொல்லுங்கோ)

2.பால்ய திருமணம்.

3.தீண்டாமை(வர்ணாசிரம பாதுகாப்பு மாநாடு நட‌த்தியவர்கள் யார்?)

4.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அனைவரும் நுழைந்தவுடன் தீட்டுப் பட்டதாக கூறி இன்னொரு கோயில் ஆரம்பித்தது யார்?

இக்காலத்தில் மனிதர் அனைவரும் தங்களுக்கு நன்மை தரக்கூடிய செயல்களை மட்டுமே தேடுகிறார்கள். எல்லாருக்கும் நன்மை தீமை தெரிகிறது. மற்ற மாநிலங்களை ( கல்வி,வேலை வாய்ப்பு,போக்கு வரத்து,இலவச திட்டங்கள்)விட தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கு காரணம் இந்த அறிவு முன்னேற்றமே.

தோழர் சங்கர் அவர்களே,

முதலில் நான் தெளிவு படுத்த விரும்புவது என்னவென்றால் நான் கிறிஸ்தவர்களை விமரிசிக்கவில்லை என்பதே. கிறிஸ்தவர்கள், இந்துக்கள, இசுலாமியர் ஆகிய எல்லோரையும் மனிதராகவே அனுகுகிறேன்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் முழுப் பாதுகாப்பு, சம உரிமை வழங்கப் படுவதோடு நட்புடன் நடத்தப் பட வேண்டும் என்பதே நமது கொள்கை. மத, மொழி, இன, சாதீய, வர்க்க, பிராந்திய, பாலின வேறுபாடுகளின் அடிப்படையில் யாரும் , தனிமைப் படுத்தப் படவோ, சிறுமைப் படுத்தப் படவோ, கடுமை காட்டப் படவோ கூடாது என்பது நமது கொள்கை.

கிறிஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. கிறிஸ்தவர்களில் சிலர் துரதிர்ஷ்டவசமாக மத சகிப்புத்தன்மைக்கு எதிரான , மத வெறிக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அதற்க்கான காரணம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் அப்படி சொல்லிக் கொடுத்து விட்டார்கள். எனவே அவர்கள மனதில் ஏற்றப் பட்டுள்ள மத வெறி விசத்தை நீக்கத்தான் நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள. அவர்களுடைய மத நூலிலே இப்படிப்பட்ட மத வெறிக் கருத்துக்கள், இனப் படுகொலையை புனிதப் படுத்தும் கருத்துக்கள், பிற மதங்களை வெறுக்கும் படிக்கான சகிப்புத் தன்மை இல்லாத கருத்துக்கள உள்ளன. அதைப் படித்து விட்டு தான் அவர்கள அந்த முரட்டுப் பிடிவாத வெறுப்பு சித்தாந்தங்களுக்கு பலியாகி விட்டனர். நம்முடைய போராட்டம் அந்தக் கருத்துக்களுக்கு எதிராகத் தான். மனிதர்களுக்கு எதிராக அல்ல.

இயேசு மட்டும் அல்ல, புத்தர், காந்தி, சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ் உட்பட பலரின் கருத்துக்கள் என்னை ஈர்த்துள்ளன. ஆனால் யாரின் கருத்தையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் ஒவ்வொரு கருத்தையும் சிந்தித்து , ஆராய்ந்து எது அவசியமோ, அதை ஏற்றுக் கொள்வேன்.

நமக்கு அவர்களுடன் உள்ள உறவு கொள்கை அடைப்படையிலானதுதான்.

சாதி வெறி காரணமாக மனிதனே மனிதன் வாயில் பீ திணிப்பது, சாதி மோதல்கள், குடிசைகள எரிப்பு, தாக்குதல்கள், மது அருந்துதல் … இப்படி பல விடயங்களில் முன்னணியில் நிற்பது தமிழகமே! பஸ்ஸிலே செல்லும் போது பெண்களை அசிங்கமாக தடவுதல் இடித்தல் ஆகிய செயலில் ஈடுபடுவது தமிழகத்திலே தான் .

டில்லி, மும்பையில் பகக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தால் கூட கண்ணியமாக நடந்து கொள்வார்கள.

கல்வி, வேலை வாய்ப்பு, போக்குவரத்து … இதில் முன்னணியில் இருக்கிறதா? கொடுமை சாமி. நான் கூட அரசுப் பள்ளியில் தமிழ் மொழி வாயிலாகக் கல்வி பயின்றவன் தான்.

ஆனால் இன்றைக்கோ… . மிகப் பெரிய பெயருடைய பள்ளிகளில் கூட அப்படியே உரு அடித்து இரு நூறுக்கு இருநூறு மார்க்கு வாங்கினால் போரும் என்று சொல்லி உரு அடிக்க சொல்லி பெண்டு எடுக்கிறார்கள. புத்தகத்தில் கேட்ட கேள்வி அப்படியே வரும். கணக்கிலே கூட 100 செ.மீ என்று இருந்தால் அதே தான் தேர்விலும் வரும். கொஞ்சம் கூட மாறாதாம். கணக்கையும் உரு அடைக்கிறார்கள.

இப்போது ஐ. ஐ.டி. நுழைவு தேர்வில் அதிக இடம் பிடிப்பது, முதல் இடம் வருவது, ஐதராபாத் நகரில் படிப்பவர்களே. என்னுடைய நண்பர்கள் சிலர் இதற்காகவே குடுமபத்தையே அங்கே மாற்றுகிறார்கள.

போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் பதினைத்து ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய பேருந்து களில் பாதி கூட இப்போது ஓட வில்லை. பலரும் சொந்த வாகனத்திலே செல்லுகின்றனர்.

வேலை வாய்ப்பு என்றால், பெங்களூரில் வேலை வாய்ப்பு இல்லையா, மும்பையில் இல்லையா, அகமதாபாத்தில் இல்லையா, டில்லியில் இல்லையா,

பெரிய உறக்கத்தில் இருக்கிறீர்கள்.!

வீடு புகுந்து, தனியே வீட்டில் இருக்கும் பெண்களைக் கொன்று கொள்ளையடிக்கும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு எந்த இடத்திலே இருக்கிறது?

வடநாட்டில் இருந்து சில காண்டிராகடர்க்ள மீட்டிங்கு காக சென்னை வந்து இருந்தனர். காலையில் மீட்டிங்குக்கு முன் அவர்கள் முடி திருத்தம் செய்து கொள்ள விரும்பி, ஹோட்டலை விட்டு வெளியில் வந்து சலூனை தேடி அலைந்தனர். காலியில் எந்த சலூனும் திறந்து இருக்கவில்லையாம், ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனராம், டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து இருந்தன என்றார்கள். குடியில் அநேகமாக முதல் இடம் நமக்கு கிடைக்கலாம.

//ஒரு மனிதன் பணக்காரனாகவோ குருடனாகவோ வாழ அந்த மனிதனோ அவன் பெற்றோரோ அவன் முன்னோரோ காரணம் என கருதுகிறேன்.மனிதனின் இனப,துன்பகளுக்கான பிறப்பிற்கு கடவுள் தான் காரணம் என்றால் அப்படிப்பட்ட ” (edited)கடவுள்” இந்த உலகத்திற்கு தேவையா //

i too agree with you and be against to god ,if you are providing valid reason why some one has to born with a poor parent and another to born at kalainjar or ambaani family?

why a blind baby born to a medically well being parents.
any parent prefers to have a deaf or blind baby?

handicapped persons to be taken care specially and treated like as normal persons (that is different)

question is why they happens to born as handicapped?

nowhere we claims that the god is the reason for some ones illness or sick or poverty,and we never think he is the one creating persons with physically challenged and well beings as he likes.

if you assumes so, then that will be your own theory. by saying this way yourself you are agreeing the existence of god. in your views he is cruel but he exist.

if there is a god like you assume, i will be definitely the first against person to him really.i never ever image such a cruel god.

இந்த உலகம் நிரந்தரம், மனிதனின் வாழ்க்கை இந்த உலகத்தில் மட்டும் தான் என்ற எண்ணத்தோடு பார்ப்பதால்தான் எந்த பிரச்சனை. எல்லோரும், ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கடவுள் ஒருவனுக்கு ஒரு குறையை அனுமதித்து இருக்கிறார் என்றால், அதன்பின் பல காரணங்கள் இருக்கும். தனக்கு கொடுக்கப்பட்டு இருப்பதில் இம்மையில் உண்மையாய் இருப்பவனை, தேவன் மறுமையில் (இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு), கனப்படுத்துவார்.
உடனே, நீ கண்ணில்லாமல் இருந்து பார் உனக்கு அந்த கஷ்ட்டம் தெரியும் என்று சண்டைக்கு வரவேண்டாம். எனக்கு கண் இருக்கிறது, ஆனாலும் ஊனத்தின் வலியை நன்கு அறிந்தவன். தனக்கு இல்லாததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை வைத்து, அதனால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே சாலச்சிறந்தது.

தவறாக நினைக்காதீர்கள், ஒரு நிமிடம் நமக்கு கண் இல்லாமல் இருந்தால் எவ்வளவு கஷ்டப் படுவோம் என்று எண்ணிப் பாருங்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அவரவர் அனுபவித்தால் தெரியும் அந்தக் கொடுமை. எவனோ கஷ்டப் படுகிறான், நமக்கென்ன என்ற ரீதில் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு போ என்று சொல்கிறீர்கள்.

அப்படியாவது பில்ட் அப் கொடுத்து கொடுமைக்கார படைப்பாளனை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கலாம்.

அநீதியை எதிர்க்கிறோம். ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன். ஒருவரைக் கண்ணில்லாதவனாகவும் , ஒரு வரை முடவராகவும், காரணமே இல்லாமல் கஷ்டப் படும்படி படைத்த கடவுளை – அப்படி ஒருவர் இருந்தால்- எதிர்க்கிறேன். அந்தக் அநியாயக் காரருக்கு மண்டி போட்டு, ஜால்ரா போட்டு பிழைக்க விரும்பவில்லை.

நான் அப்படி ஒரு கொடுமைகாரருக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன ஐயா? ஆறு வருடங்கள், பெங்களூரில் ராக்கும் கண் பார்வையற்றோர் பள்ளியில் தினமும் இரண்டு மணி நேரமாவது இருந்திருக்கிறேன். பத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையற்ற நண்பர்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள்.
உங்களை விட படைத்தவனிடம் நன்றியுணர்வோடு உள்ளனர். தங்களுக்கு கண்பார்வை இல்லாவிட்டாலும், தேவன் அவர்களுக்கு கொடுத்த மற்ற கிருபைகளுக்காக நன்றி சொல்கிறார்கள், சாதிக்கிறார்கள்.
திராணிக்கு மேலாக யாரும் சோதிக்கப்படுவதில்லை.

ஏற்கனவே கண் இல்லாமல் படைத்து இருக்கிறானே பாவி, அவனை எதிர்த்தால் இன்னும் என்ன என்ன கஷ்டங்களைக் கொடுப்பானோ என்று அப்பாவி விழியற்றோர் எண்ணி இருக்க கூடும்

எதிர்த்துக் குரல் குடுப்பது கூட சாத்தியம் இல்லாத நிலையில் இருக்கும் அந்த அப்பாவிகளின் நிலையை என்னும் போது வேதனை அதிகரிக்கிறது.

என்ன செய்வது, கண்ணே இல்லாமல் பிறந்து விட்டோம் நாம் என்ன செய் முடியும் என்று இருக்கலாம்.

கொடுமைக்கார சர்வாதிகாரிக்கு ஏஜென்ட் வேலை செய்ய நாட்டிலே ஆட்கள் பஞ்சமா? எரி நரகம்…. தாங்க முடியாது….. என்று திகிலை நெஞ்சிலே ஏற்றி இருப்பார்கள். கண் இல்லாமல் போனாலும் பரவாயில்லை , சோறு தண்ணியாவது கிடைக்குது இல்ல, அதுவும் இல்லை என்றால் உன் நிலைமை என்ன என்று சொல்லி, நன்றி சொல்ல சொல்லி இருப்பார்கள்.

தெருவிலே செல்லும் போது பதவியை பெற்ற ரவுடி ஒருவன் வந்தால், சிலர் பயந்து அவனுக்கு வணக்கம் செலுத்துவது போல ஏற்க்கனவே பலவீனமானவர்கள் , அப்பாவிகள் வணக்கம் செலுத்ததானே செய்வார்கள.

கொடுமைக்கார அநியாய சர்வாதிகாரியின் அநீதியை எதிர்க்கிறோம்

//திராணிக்கு மேலாக யாரும் சோதிக்கப்படுவதில்லை.//

சோதிக்க நீ யார்? எங்களைப் படையுங்கள் என்று கெஞ்சினோமா? கேட்டுக் கொண்டோமா? இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரவாயில்லை ஐயனே என்று சொன்னோமா, எங்களைப் படையுங்கள் என்று ? எவ்வளவு பில்டப் பாருங்கள் , மனிதர்களுக்கு கஷ்டங்களைக் கொடுக்கும் கொடியவனுக்கு!

//உங்களை விட படைத்தவனிடம் நன்றியுணர்வோடு//

என்ன த்துக்கு நன்றியோடு இருக்க வேண்டும்? மனிதர்களுக்கு இத்தனை துன்பங்களைக் கொடுப்பதற்காகவா?

பேசுங்க சார், பேசுங்க, நல்லா பேசுங்க. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி பேசபோறீங்க, மிஞ்சி போனால் இன்னொரு அறுவது அல்லது எழுவது வருடம். அப்புறம் எல்லாம் புரியும். நான் பயமுறுத்தலை, நீங்க பயக்க கூடிய ஆளா, என்ன. தன்மான சிங்கமாச்சே.
இப்போது ஜால்ரா அடிக்க ஆட்கள் வேற கிடைச்சுட்டாங்க.
என்ஜாய்…

//பேசுங்க சார், பேசுங்க, நல்லா பேசுங்க. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி பேசபோறீங்க, மிஞ்சி போனால் இன்னொரு அறுவது அல்லது எழுவது வருடம்.// Most probably , I wont live live after 60 or 70 years.

திரு சேகர் அவர்களே,-

//”உண்மை என்பது மாற்றத்திற்கு உட்பட்டது”///

என்றும் மாறாதது தானே உண்மை என்பது,அப்படி மாற்றத்திற்கு உட்பட்ட உண்மை என்ன என்று ஏதாவது ஒரு உதாரணம் சொல்ல முடியுமா.?

///அவரைப் பற்றி நீங்கள் முழுமையாக படிக்கவிலலை அல்லது படிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.///

இந்துமதத்தில் உள்ள ,அனைத்து வேதங்கள்,உபநிசத்துக்கள்,அதில் உள்ள ஆயிரக்கணக்கான சாகைகள்,சாத்திரங்கள் ,புராணங்கள்,இதிகாசங்கள்,நாலாயிரம் திவ்விய பிரபந்தம்,ஆழ்வார் பாசுரங்கள்,,சித்தர் பாடல்கள்,பெரியபுராணம்,சைவத் திருமுறைகள்,திருவிளையாடல் புராணம்,,மற்றும் பல இந்து சமய நூல்கள் இது போன்ற இந்து மதத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் படிப்பதற்கு இந்த ஒரு பிறவி போதாது.நான்கு வேதங்களைப் முழுதாகப் படிப்பதற்கே இந்த ஒரு பிறவி போதாது என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.அப்படி இருக்க இவை அனைத்தையும் படித்து புரிந்து விட்டா இந்து மதத்தைப் பெரியார் விமர்சனம் செய்தார்.???

கற்பு என்பதும்,திருமணம்செய்வதும்,கர்ப்பம் தரிப்பதும்,குழந்தைப் பெற்றுக்கொள்வதும் பெண்ணடிமைத்தனம் என்று கூறியிருக்கிறாரே பெரியார்.உலகில் உள்ள பெண்கள் அனைவரும் இப்படி இருந்தால் ஒரு நூற்றாண்டிலேயே மனித இனம் அழிவது உறுதி அல்லவா?இதைப் போன்ற மனித இனமே அழியும் கொள்கைக் கூறியவரா பகுத்தறிவுவாதி.???

//நண்பர் சதீஸ் இத்தள‌த்திற்கு வந்து பாருங்கள். எந்த அளவிற்கு ஆக்க பூர்வபாக மற்ற மதங்களையும் விவாதிக்கிறோம். //

நிச்சயம் வருகிறேன் தோழரே.படித்து விட்டு பின்னர் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் அது இன்றைய பெரியாரின் வாரிசுகளின் , திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு அல்லவே தோழரே,செம்படையினராகிய உங்களுடைய செயல்கள் தானே.

//திராவிட இயக்கம் சாதி ரீதியான ஒடுக்கல்களை இந்து மத்தின் மீது போட்ட பொழுது,இந்து மத வாதிகள் சில மத சீர் திருத்தங்களை செய்ய வேண்டியது கட்டாய மாகியது.

உ.ம் 1.தேவதாசி முறை ஒழிப்பு( இதை ஆதரித்து பேசிய தலைவர் யார் சொல்லுங்கோ)

2.பால்ய திருமணம்.

3.தீண்டாமை(வர்ணாசிரம பாதுகாப்பு மாநாடு நட‌த்தியவர்கள் யார்?)

4.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அனைவரும் நுழைந்தவுடன் தீட்டுப் பட்டதாக கூறி இன்னொரு கோயில் ஆரம்பித்தது யார்?//

இன்றைய இந்து சமுதாயம் கொண்டுள்ள தவறான களையெடுக்க பட வேண்டிய எதாவது விஷயங்கள் இருந்தால் கூறுங்கள். போன நுற்றாண்டு வரை சில தவறான பழக்கங்கள் இருந்து அவை திருந்திய நிலையில் அதனை வைத்தே இன்னும் எதற்கு சாடுகிறீர்கள். மேற்கூறிய யாவுமே குறிப்பிட்ட சிலரால் தங்கள் சுயநல நோக்கத்திற்காக ஒரு சமுகத்தை அடக்கி அதிகாரம் செய்த செயல். இவை நீங்கி விட்டன.
தவறு இருப்பின் திருத்தவேண்டியது தானே முறை,பழைய தேவையில்லாத நீங்கள் மேற்கூறிய தீய விஷயங்கள் கழிந்த ஒன்றுதானே. இன்னும் இவை எங்கே நடைமுறையில் உள்ளன கூறுங்கள்.

இன்றைய தேதியில் யாரவது வர்ணாஸ்ரம முறையும், தேவ தாசி முறையும் பின் பற்றுகிரார்களா? பால்ய மணம் செயவிக்கிரார்களா?
அப்படி ஒரு சிலர் அக்காலத்தில் செய்திருந்தாலும் அவர்களின் குடும்ப வாரிசுகளையா நாம் சாடுவது? அவரின் கொள்கை வாரிசுகளை அல்லவா நாம் சாட வேண்டும். அப்படியும் யாரும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை.
இவை நடந்தது எல்லாம் மனிதனின் தவறே அன்றி மதத்தின் கடவுளின் தவறு என்று எப்படி கூறுகிறீர்கள். இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?
ஒரே குற்றத்திற்கு ஒரு அந்தணனுக்கு அதிக தண்டனையும், சத்ரியனுக்கு குறைந்த தண்டனையும் இப்படியே குறைந்து கொண்டே போவதாக தானே கூறுகிறார்கள். பின்னர் வந்தவர்கள் செய்த குறுக்கு வேலை திருத்தப்பட்டு விட வில்லையா?
பெரியார் பிறக்கும் முன்பே சமய சீர்திருத்தம் செய்த ராமானுஜர் இல்லையா? அவர் தீண்டாமைக்கு எதிராக செயல் பட்டது பெரியாரை விட பல நூற்றாண்டு முன்பு அல்லவா?
இப்பவும் சொல்கிறேன் கடவுள் வழிபாடு வேறு (தனி நபர் சுதந்திரம்), மனிதநேயத்துடன் நடப்பது வேறு (எல்லோருக்கும் பொதுவான தேவை).இதிலே வழிபாட்டை வைத்து மனித நேயத்தை அழிப்பவனை யாராக இருந்தாலும் வேருடன் களைவது தான் நாம் செய்ய வேண்டியது,கடவுளையோ வழிபாட்டையோ அல்ல,அந்த ஈன செயல்புரியும் அக்கிரமக்காரனை. ஏனென்றால் வழிபாடு என்பது அந்த கயவர்களுக்கு மட்டுமானது அல்ல. அங்கே தோன்றிய ஒரு புல்லுருவியே அவன்.

மனிதனை மனிதனாக பார்ப்போம் கடவுளை அவன் அவன் விருப்பபடி வணங்கட்டும்,அது அவரவர் உரிமை. . அப்படி வணங்கும் சமுகத்தில்
உண்டாகும் ஏற்ற தாழ்வுகள் எந்த ஒரு மனிதனையும் பாதித்தால் அதனை எதிர்ப்போம். வெறுமனே ஒரு சமுகத்தின் உணர்வுகளை அல்ல .

// இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?//
மனு ஸ்மிருதியை பாரும். பெண்ணின் திருமண வயதை அவர் குறிப்பிட்டு உள்ளார். 14 வயதுக்குள்ளானவர்கள் என்னை பொறுத்தவரை திருமண வயதை அடைந்தவர்கள் அல்ல.

பார்பன நலனுக்கு எது தேவையோ அதை எல்லாம் ஏற்று கொள்வர். எது தேவை இல்லையோ அதை இது வேதத்தில் இல்லை என்று ஒரே போடு போடுவார்கள்.

சதீஷ், எத்தனையோ தலைவர்கள் சமுதாய இழிவு நீங்க போராடினர். யாரும் மறுக்கவில்லை. அதில் பெரியாரின் பங்கு முதன்மையானது. எந்த வித சமரசமும் இல்லாதது. இன்றைய வீரமணி அன் கோ வை வைத்து பெரியாரை அளவிடாதீர்கள். பெரியார் சிந்தனையும் மார்க்சியத்தையும் பிரிக்க முடியாது. பெரியாரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த சிந்தனையின் தேவை விளங்கும். இந்து மதத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் கிருத்துவ தளத்தில் இந்து மதம் பற்றிய இடுகைகளையா பார்ப்பீர்கள்? அது போல் தான் பெரியாரை தெரிந்து கொள்ள திரிச்சிகாரன், தமில்ஹிண்டு.காம் பார்க்காதீர்கள்.
நான் கூட ஆரம்பத்தில் பெரியாரை வெறுத்தவன் தான். பிறகு தான் புரிந்தது பெரியாரின் தேவை.

திரு பிரதீப் அவர்களே,

///இந்து மதத்தை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் கிருத்துவ தளத்தில் இந்து மதம் பற்றிய இடுகைகளையா பார்ப்பீர்கள்? அது போல் தான் பெரியாரை தெரிந்து கொள்ள திரிச்சிகாரன், தமில்ஹிண்டு.காம் பார்க்காதீர்கள்.///

மிகச் சரியாகக் கூறினீர்கள் பிரதீப் அவர்களே.அதே போல் நீங்கள் இந்து மதத்தைத் தெரிந்து கொள்ள உபநிசத்துக்கள் ,பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, திருமந்திரம் மற்றும் விவேகானந்தர் ,அரவிந்தர்,ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்றோரது நூல்களைப் படியுங்கள். பெரியார் புத்தகங்களைக் கொண்டு இந்து மதத்தை தெரிந்து கொள்ளாதீர்கள்.

அப்படி செய்தால் நீங்கள் கூறியது போல் திருச்சிக்காரன்,தமிழ் ஹிந்து .காம் போன்ற தளங்களைப் படித்து பெரியாரைப் புரிந்து கொள்வது போலத்தான், நீங்களும் பெரியார் புத்தகங்களைப் படித்து இந்து மதத்தைப் புரிந்து கொள்வது..

பெரியார் ஒரு சாக்கடை….கோவிலில் மணியாட்டும் பாப்பான்களே உயர்ந்தவர்கள்.இதைச் சொல்ல எதற்கு சுற்றி வளைக்கவேண்டும்.

திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,

///மனு ஸ்மிருதியை பாரும்.///

மனுஸ்மிருதி வேதமல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கும் அது தெரியும்.
ஆனால் உங்கள் பச்சோந்திதனம்தான் புரியவில்லை. நாங்க வேதத்தை பற்றி கேட்டால், புராணங்களுக்கு ஓடுவது. புராணத்தை பற்றி கேட்டால் வேதமே முக்கியம் என்று பல்டி அடிப்பது.
இது நான் உங்களை மட்டும் கூறவில்லை. திருச்சிக்காரன், தமில்ஹிண்டு, etc ., எல்லாம் இப்படிதான்.

//ராவணன், on September 22, 2010 at 22:31 Said:

பெரியார் ஒரு சாக்கடை….கோவிலில் மணியாட்டும் பாப்பான்களே உயர்ந்தவர்கள்.இதைச் சொல்ல எதற்கு சுற்றி வளைக்கவேண்டும்.
Reply //

i agree with your first quote. and not saying the second one absolute.

//Ashok kumar Ganesan, on September 22, 2010 at 22:31 Said:

// இந்து வேதத்தில் எங்காவது பால்ய மணம் செய்யவும், தேவதாசி முறையும், சாதி பார்த்து மனிதனை மதிக்கவும் கூறப்பட்டுள்ளதா?//
மனு ஸ்மிருதியை பாரும். பெண்ணின் திருமண வயதை அவர் குறிப்பிட்டு உள்ளார். 14 வயதுக்குள்ளானவர்கள் என்னை பொறுத்தவரை திருமண வயதை அடைந்தவர்கள் அல்ல.
Reply //

திருமணமே இல்லாமல் 13 வயதிலே பெற்றுகொள்வது எல்லாம் கிறித்தவ நட்டு குழந்தைகளிடம் இப்போது சாதரணமாக நடக்கிறது.இது ஏதோ எங்கோ ஒன்று நடப்பதாக தெரியவில்லை. இந்த தொல்லை தாங்காம லண்டனில் சிறுவர்களுக்கான மினி சைஸ் ஆணுறை தயாரிக்க முடிவு செய்து விட்டார்களாம். தினமலரில் சில தினங்கள் முன்பு வெளியான செய்தி இது.
இன்னும் நிறைய இருக்கிறது சொல்வதற்கு, பல வலைதளங்களே சொல்கின்றன உங்களின் ஏக வேதத்தை பற்றி. ஆனால் நான் இதற்கு மேல் இறங்கி வர விரும்பவில்லை. அந்த தளங்களில் போய் படித்து பதில் எழுதுங்கள்.

திரு தனபால் அவர்கள் கூறியது போல மனு ஸ்ம்ருதி வேதம் அல்ல. நன்றி திரு தனபால் ஐயா அவர்களே.

//திருமணமே இல்லாமல் 13 வயதிலே பெற்றுகொள்வது எல்லாம் கிறித்தவ நட்டு குழந்தைகளிடம் இப்போது சாதரணமாக நடக்கிறது.இது ஏதோ எங்கோ ஒன்று நடப்பதாக தெரியவில்லை. இந்த தொல்லை தாங்காம லண்டனில் சிறுவர்களுக்கான மினி சைஸ் ஆணுறை தயாரிக்க முடிவு செய்து விட்டார்களாம். தினமலரில் சில தினங்கள் முன்பு வெளியான செய்தி இது.//

முதலில், நீங்கள் சொல்லும் நாடுகள் கிறிஸ்துவ நாடுகளே அல்ல. வெள்ளைக்காரன் எல்லாம் கிறிஸ்துவன், அரபி எல்லாம் முஸ்லிம் என்று உலக ஞானம் இல்லாத ஞானசூனியம்தான் சொல்லும்.
பைபிள் எந்த இடத்திலும் விபச்சாரம் செய் என்று சொன்னதில்லை. அடுத்த பெண்ணை இச்சையோடு பார்க்ககூட கூடாது என்றே சொல்கிறது. மனிதர்கள் திமிரெடுத்து செய்யும் காரியதிர்க்கு வேதமோ தேவனோ பொறுப்பாளி ஆக முடியாது.
தவிர, கொல்கொத்தாவிலும், மும்பையிலும் விபசாரத்திற்கு உட்படுத்தப்படும் சிறுமிகளின் எண்ணிக்கையை விட, இந்த மேல்நாட்டு தவறுகள் செய்யும் குழந்தைகள் குறைவே.
பரபரப்புக்காகவும், உம்மை போன்ற வக்கிர புத்தி உள்ளோரின் மகிழ்ச்சிக்காகவும் வெளிவரும் பத்திரிக்கைகள் இந்த மாதிரி விஷயங்களை தான் போடுவார்கள். நீங்களும் அதைதான் தேடி தேடி படிப்பீர்கள்.

நீங்கள் கூறும் அந்த ஸ்ம்ருதியை கொளுத்த தயார். இன்னும் எங்கெங்கு இது போன்ற குப்பைகள் இருந்தாலும் அவற்றை அழித்துவிட்டு உருப்படியான பிற விசயங்களையும் பின்பற்ற தயார்.
இந்து மதம் ஸ்மிருதியை நம்பி இல்லை.
உங்களின் ஒரே வேதத்தில் எண்ணற்ற கன்றாவிகளை காட்டுகிறார்கள் அவற்றை எல்லாம் எரிக்க தயாரா?
உங்கள் தேவனை வணங்கதவர்களை பாவிகளே என்றும், பிறரின் கடவுளை சாத்தானே என்றும் கூற சொல்கிறார்களே. அந்த வழக்கத்தை கொளுத்த தயாரா?
உங்களிடம் உள்ள குறைகளை சீர்திருத்த தயாரா? அடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் துன்பங்கள் அனைத்தும் எங்கிருந்தாலும் அவை அழிக்க வேண்டியவை. நீங்கள் தயாரா?

//நீங்கள் கூறும் அந்த ஸ்ம்ருதியை கொளுத்த தயார். இன்னும் எங்கெங்கு இது போன்ற குப்பைகள் இருந்தாலும் அவற்றை அழித்துவிட்டு உருப்படியான பிற விசயங்களையும் பின்பற்ற தயார்.//
Very Good.

//இந்து மதம் ஸ்மிருதியை நம்பி இல்லை.//
First of all, இந்து மதம் என்றே ஒன்று இல்லை.

//உங்களின் ஒரே வேதத்தில் எண்ணற்ற கன்றாவிகளை காட்டுகிறார்கள் அவற்றை எல்லாம் எரிக்க தயாரா?//
அப்படியா?? எனக்கு ஒரே ஒரு கண்றாவி கூட கண்ணில் படவில்லையே.
நான் ஏன் அதை எரிக்க வேண்டும்?
உம்மை போல, ஒன்றை வழிபாட்டு, பிறகு அதையே கடலில் கரைத்துவிட்டு ஜிங்கு ஜிங்கு ன்னு ஆட்டம் போடும் ஆள் அல்ல நான்.

//உங்கள் தேவனை வணங்கதவர்களை பாவிகளே என்றும், பிறரின் கடவுளை சாத்தானே என்றும் கூற சொல்கிறார்களே. அந்த வழக்கத்தை கொளுத்த தயாரா?//
உண்மையை கூறும் ஒரு பொக்கிஷத்தை யாராவது கொளுத்துவான்களா?

//உங்களிடம் உள்ள குறைகளை சீர்திருத்த தயாரா? அடுத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கொடுக்கும் துன்பங்கள் அனைத்தும் எங்கிருந்தாலும் அவை அழிக்க வேண்டியவை. நீங்கள் தயாரா?//
தயார்.

//அப்படியா?? எனக்கு ஒரே ஒரு கண்றாவி கூட கண்ணில் படவில்லையே.
நான் ஏன் அதை எரிக்க வேண்டும்?
உம்மை போல, ஒன்றை வழிபாட்டு, பிறகு அதையே கடலில் கரைத்துவிட்டு ஜிங்கு ஜிங்கு ன்னு ஆட்டம் போடும் ஆள் அல்ல நான்.// Yes preach to worship the Genocide planner and executor.

//இந்து மதம் ஸ்மிருதியை நம்பி இல்லை.//
First of all, இந்து மதம் என்றே ஒன்று இல்லை.

The eldest religion, still active and vibrant, withstanding the onslaught of chhaunism.

////First of all, இந்து மதம் என்றே ஒன்று இல்லை///

மிகச் சரியாகக் கூறினீர்கள்.இந்து மதம் என்பது முதலில் இதே பெயரில் அழைக்கப்படவில்லை. இந்து மதம் முதலில் சனாதன தர்மம் என்றே அழைக்கப்பட்டது.சனாதன தர்மம் என்றால் .எல்லோருக்குமான, என்றுமுள்ள தர்மம் என்பதாகும்.

ஐரோப்பியர்கள் இந்த தர்மம் என்ற வார்த்தைக்கு சரியான ஆங்கில வார்த்தை இல்லாததால் religion என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.இதனால் தர்மம் என்ற வார்த்தை மதம் என்று ஆனது.

இந்த சனாதன தர்மத்தை பின்பற்றியவர்கள் சிந்து நதிக்கு கிழக்கே வாழ்ந்ததால் அவர்கள் வாழ்ந்த பகுதியைக் குறிக்க சிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். (ஐரோப்பா,அமேரிக்கா போன்ற நாடுகள் மேற்கு திசையில் உள்ளதால் மேற்கு /மேலை (நாடுகள்) என்று திசையின் பெயரை பயன்படுத்துவது போல )

சிந்து மருவி ஹிந்து வாயிற்று.இப்படி தான் சனாதன தர்மம் ஹிந்து மதம் ஆனது.

இது அனைவருக்குமான மதம்,உருவ வழிபாடு செய்பவர்கள்,அருவ வழிபாடு செய்பவர்கள்,போன்ற அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தர்மம் எங்கள் சனாதன தர்மம்.

சரியாக சொன்னீர்கள் தனபால். இந்து மதம் மதமே இல்லை. அது ஒரு மார்க்கமே இல்லை. மார்க்கம் என்பது “பாதை” என்பதாகும். இந்துமதம் ஒரு வெட்டவெளி, விளையாட்டு திடல் போன்றது. இந்த வெட்ட வெளியில் எவ்வளவு வேண்டுமானாலும், விளையாடலாம், ஆட்டம் போடலாம், ஆனால், அது உங்களை எங்கும் அழைத்து செல்லாது.
கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது. ஆனால், மிகச்சரியாக தேவனிடம் அழைத்துசெல்லக்கூடியது.

முதலில் தேவன் இருப்பதைக் காட்டுங்கள், அவர் ஏன் இந்த உலகத்தில் இத்தனை துன்பங்களை வைத்தார் என்பதையும் அவரை சொல்லச் சொல்லுங்கள்.. அப்புறம் பாக்கலாம்.

என் பதில்கள், உண்மையை அறியும் பொருட்டு, நேர்மையாக விவாதம் செய்பவர்க்கே. உம்மை போன்ற மாயமாலக்காரர்களுக்கல்ல. சிலர் முன்னால் இந்த முத்துக்களை சிதரவிட்டால் என்ன ஆகும் என்று என் வேதம் எனக்கு கூறி உள்ளது.

திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,

///சரியாக சொன்னீர்கள் தனபால். இந்து மதம் மதமே இல்லை. அது ஒரு மார்க்கமே இல்லை. மார்க்கம் என்பது “பாதை” என்பதாகும்.///

அனைத்து மதமும்,அனைத்து மார்க்கமும் இந்த சனாதன தர்மத்திர்க்குள் .

///இந்துமதம் ஒரு வெட்டவெளி, விளையாட்டு திடல் போன்றது. இந்த வெட்ட வெளியில் எவ்வளவு வேண்டுமானாலும், விளையாடலாம், ஆட்டம் போடலாம்,///

இந்து மதம் ஒரு மகா சமுத்திரம்.மற்ற மதங்கள் இந்த சமுத்திரத்தில் கலக்கும் ஆறுகள்.

///ஆனால், அது உங்களை எங்கும் அழைத்து செல்லாது.///

எல்லாம் (கடவுள்) எங்களிடமே இருக்கிறது.நாங்கள் ஏன் எங்கோ செல்ல வேண்டும்???

///கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது.///

இது தெரிந்தது தான்.

///கிறிஸ்துவம் அப்படியல்ல, அது மிக குறுகியது. ஆனால், மிகச்சரியாக தேவனிடம் அழைத்துசெல்லக்கூடியது///

ஆம்.கிறிஸ்தவர்களை மட்டும்.ஆனால் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளையுமா???

//போன நுற்றாண்டு வரை சில தவறான பழக்கங்கள் இருந்து அவை திருந்திய நிலையில் அதனை வைத்தே இன்னும் எதற்கு சாடுகிறீர்கள்.//
//மேற்கூறிய யாவுமே குறிப்பிட்ட சிலரால் தங்கள் சுயநல நோக்கத்திற்காக ஒரு சமுகத்தை அடக்கி அதிகாரம் செய்த செயல்.//

//இவை நீங்கி விட்டன.//

இவை நீங்கவில்லை ஒழிக்கப் பட்டன.

யார் அந்த குறிப்பிட்ட சில பேர்?

அந்த சுய நல நோக்கம் என்ன?

நீங்கள் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை,

இதை அடையாளம் காட்டியதே பகுத்தறிவு.

அவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவத்ற்கேஎ அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தியது பகுத்தறிவு.

//இன்றைய இந்து சமுதாயம் கொண்டுள்ள தவறான களையெடுக்க பட வேண்டிய எதாவது விஷயங்கள் இருந்தால் கூறுங்கள்.//

இந்து ம‌த‌மும் அத‌ன் ஒன்று விட்ட‌ ச‌கோத‌ர‌ன் கிறித்த‌வ‌ ம‌த‌மும் செய்ய‌ வேண்டிய‌வை.

1.திரும‌ண‌த்தில் சாதி பார்க்க‌ப் ப‌டுகிற‌து. க‌ல‌ப்புத்திரும‌ண‌ம் செய்ய‌ எந்த‌ ம‌த‌ அமைப்பும் த‌யாராக‌ இல்லை. சாதியை ஒழிக்க சாதித்திருமணம் ஒழிக்கப் பட வேண்டும்.நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன்.இதனை ஒவ்வொருவரும் கடை பிடித்தால் மட்டுமே சாதி ஒழியும்.நீங்கள் தயாரா?

2.ம‌த‌ அமைப்புக‌ளின் த‌லைவ‌ராக‌ உய‌ர் சாதியின‌ர் ம‌ட்டுமே வ‌ர‌ முடிகிற‌து.அர‌சு ஆணை குப்பையில் போட‌ ப‌டுகிற‌து.

இந்து ம‌த்த்தில் பிராம‌ணர்க‌ளே எல்லா பெரிய‌ கோயிலிலும் அர்ச்ச‌க‌ராக‌ இருக்கிறார்க‌ள்.

கிறித்த‌வ‌ ம‌த்த்தில் பெரும்பாலோன பாதிரிகள், பிஷப்கள் தாழ்த்தப் பட்டவர்கள் அல்லாதவரே.இதனை ஒழிக்க என்ன செய்யலாம்.

எல்லா மடங்களும் சாதி ரீதியான அமைப்புகளாகவே செயல் படுகின்றது. எல்லா மடத் தலைவர்களும் சுழ‌ற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும்.

3.கோயில்க‌ளில் வ‌ழிபாட்டுக்கு க‌ட்ட‌ண‌ம் வசூலிப்ப‌தை நிறுத்த‌ வேண்டும்.

4. ம‌த‌ அமைப்புக‌ள் ஒழ்ங்கு படித்தப்பட்டு கர்ப்பரேட் சாமியார்க‌ளை ஒதுக்க‌ வேண்டும்.

//திரு தனபால் அவர்கள் கூறியது போல மனு ஸ்ம்ருதி வேதம் அல்ல//

வேதங்கள் என்பது எது என்பதை ஒரு பட்டியல் இடவும்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கும் இடத்தையும் கூறவும்.

மிக்க மகிழ்ச்சி வரவேற்கிறேன் உங்களின் கருத்துகளை.

வேதமும் வேண்டாம் விட்டொழிப்போம். வேதம் என்பது எனக்கு தெரிந்து ரிக்,யசுர்,சாம,அதர்வண.அவற்றின் தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கும் என்றே எனக்கும் தெரியாது. கிடைத்தால் படிக்க வேண்டும் என்று தேடிக்கொண்டுதான் உள்ளேன். அவற்றில் ஏதானும் தேவை இல்லாத பிறருக்கு தொல்லை தரும் விஷயம் இருந்தால் அதுவும் வேண்டாம். தமிழ் வேதங்கள் ஆன திருமுறைகளும், பாசுரங்கலுமே கூட போதும்.அவற்றை கூட நான் படித்ததில்லை, ஒன்றிரண்டு கேட்டதுடன் சரி.

//1.திரும‌ண‌த்தில் சாதி பார்க்க‌ப் ப‌டுகிற‌து. க‌ல‌ப்புத்திரும‌ண‌ம் செய்ய‌ எந்த‌ ம‌த‌ அமைப்பும் த‌யாராக‌ இல்லை. சாதியை ஒழிக்க சாதித்திருமணம் ஒழிக்கப் பட வேண்டும்.நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன்.இதனை ஒவ்வொருவரும் கடை பிடித்தால் மட்டுமே சாதி ஒழியும்.நீங்கள் தயாரா?//

நான் தயார் எனக்கு திருமணம் ஆகிவிட்டபடியால்,என் வாரிசுகள் விரும்பும் நபரை திருமணம் செய்ய அவர் நல்லவரா என்ற ஒரே தகுதியை மட்டும் பார்த்து திருமணம் செய்விக்க தயார்.

//2.ம‌த‌ அமைப்புக‌ளின் த‌லைவ‌ராக‌ உய‌ர் சாதியின‌ர் ம‌ட்டுமே வ‌ர‌ முடிகிற‌து.அர‌சு ஆணை குப்பையில் போட‌ ப‌டுகிற‌து.

இந்து ம‌த்த்தில் பிராம‌ணர்க‌ளே எல்லா பெரிய‌ கோயிலிலும் அர்ச்ச‌க‌ராக‌ இருக்கிறார்க‌ள்.

கிறித்த‌வ‌ ம‌த்த்தில் பெரும்பாலோன பாதிரிகள், பிஷப்கள் தாழ்த்தப் பட்டவர்கள் அல்லாதவரே.இதனை ஒழிக்க என்ன செய்யலாம்.

எல்லா மடங்களும் சாதி ரீதியான அமைப்புகளாகவே செயல் படுகின்றது. எல்லா மடத் தலைவர்களும் சுழ‌ற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும்.//

இதிலும் நான் முற்றிலும் உடன்படுகிறேன். எங்கேயாவது நீங்கள் இது சம்மந்தமான போராட்டம் நடத்தினால் நான் கலந்து கொண்டு என்பங்கை ஆற்ற தயார். தகுதி எப்போதும் அந்த பதவிக்கான திறமையும்,அதிலுள்ள ஈடுபாட்டையும், அனுபவ அறிவையும் கொண்டே தீர்மானிக்க பட வேண்டும் பிறப்பினால் அல்ல என்பதில் எனக்கு சிறிதும் மாற்று கருத்து இல்லை. உங்களின் இது போன்ற விசயங்களுக்கான போராட்டத்தை நான் பலரிடம் பரப்ப தயார். பெரியார் மடத்தையும் சேர்த்து போராட்டம் இருந்தால் அது மிக சிறந்த நடுநிலை. வாருங்கள் ஒன்று கூடி களை எடுப்போம். உங்களின் தளத்திலே இதற்கான அறிவிப்பிகளை நான் எதிர்பார்க்கிறேன்.

//3.கோயில்க‌ளில் வ‌ழிபாட்டுக்கு க‌ட்ட‌ண‌ம் வசூலிப்ப‌தை நிறுத்த‌ வேண்டும்.//

இதனை செய்து கோவிலின் மானத்தை வாங்குவது அரசாங்கம் தான். அதனையும் எதிர்ப்போம் வாருங்கள்

//4. ம‌த‌ அமைப்புக‌ள் ஒழ்ங்கு படித்தப்பட்டு கர்ப்பரேட் சாமியார்க‌ளை ஒதுக்க‌ வேண்டும்.//

நான் ஒரு போதும் இன்றுள்ள சாமியர்கலையே நம்பியதில்லை பின் என்ன கார்ப்பரடே சாமியார்கள்.

//இந்து ம‌த‌மும் அத‌ன் ஒன்று விட்ட‌ ச‌கோத‌ர‌ன் கிறித்த‌வ‌ ம‌த‌மும் செய்ய‌ வேண்டிய‌வை.//
இன்னொரு பங்காளி எங்கே காணவில்லை ?
ஏன் அந்த மற்றொரு மதத்தில் எந்த குறையும் இல்லை என்பது உங்கள் தீர்மானமா? ஏன் இங்கு பாரபட்சம்.

//அவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுவத்ற்கேஎ அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தியது பகுத்தறிவு.//
ஒருவனை ஒரு இனத்தை திருத்துவது வேண்டுமானால் போற்றத்தக்கது. தான் இன்னார் குடும்பத்தில் பிறந்தவன் என்று கூற கூட பயம் கொள்ள வைத்திருக்கிறது என்றால் அது அராஜகமாகத்தான் தெரிகிறது.

கொலை காரனின் மகன் முன்னேறி போலீஸ் காரனகி என் தந்தை இன்னார் (கொலை காரன்) நான் போலீஸ் என்று சொல்லும் அளவு முன்னேற்றுவது பெருமையான விஷயம். ஆனால் நான் போலீஸ் என் தந்தை என்று யாருமே இல்லை என்று சொல்லும் அளவு ஒருவனை மிரட்டி அடக்கி பயமுறுத்தி வைப்பது அராஜகம். தந்தையை தந்தை என்று சொல்ல முடியாமல் செய்வது பெருமை அல்ல. அவன் கொடிய மிருகமாக இருந்தாலும் அவன் குற்றவாளி என்பது மறுக்க முடியாது ஆனாலும் தந்தை தந்தையே.

//இதை அடையாளம் காட்டியதே பகுத்தறிவு.//

நிச்சயம் பெரியார் போதித்தது வெறுப்பு அறிவு, அழிப்பு அறிவு. அவருக்கு முன்னரே நிறைய உண்மையான பகுத்தறிவாளர்கள் பிறந்து தம் பணியை தொடங்கி விட்டனர்.
இவர் அதிக விளம்பரத்தாலும் அடக்கு முறையாலும் முன்னோரிடமே இருந்த ஒரு சில நல்ல விசயங்களை மட்டும் கையில் எடுத்து கொண்டதாலும் தான் பிரபலமானார்.
சாதி எதிர்ப்பை மூட நம்பிக்கை எதிர்த்த எத்தனையோ ஆத்தீகர்கள் சாதித்து விட்டு எந்த விளம்பரமோ ஒன சைடு வேலையோ செய்யாமல் இன்றும் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் வழிகளை செய்து விட்டு போய் விட்டனர். என்ன அவர்கள் விளம்பரம் செய்து ஆதாயம் அடைய நினைக்கவில்லை. இவர் வாழ்க்கையே விளம்பரமாக்கி ஆதாயம் அடைந்து விட்டார். இப்போது அவரின் அடியார்கள் அடைகின்றனர்.
யாரவது அந்தணராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் (தேவை இல்லை மனிதராக இருப்பதே போதும் என்பது தான் என் எண்ணம். இந்த ஜாதியை வைத்தே எப்போதும் இந்து மதத்தை குறை சொல்வதால் இதனை குறிப்பிடுகிறேன்) இஸ்கான் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேதம பயிற்று வித்து அந்தனராக்கி விடுகிறார்களாம். இனி யாரும் எந்த நிலையம் அடையலாம். சைதன்ய மகாபிரபு பெரியாருக்கு ஒரு 300 முன்னாவது பிறந்தவர். அவரின் இயக்கம் செய்யததா? இவர் செய்து விட்டார்? கீழே உள்ளவர்கள் அப்படியே இருக்க வைத்து அதனை பெரிதாக்கி அதன் மூலம் அரசியல் செய்வதுதான் இவரும் இவரின் வாரிசுகளும் செய்யும் வேலை. கிழே யாரும் இல்லாவிட்டால் இவர்களுக்கு இங்கு பருப்பு வேகாது அதனாலே இன்னும் ஜாதியை விடாமல் பிடித்து வைத்திருப்பது இவர்களின் கூட்டம் தான்.
வாருங்கள் எல்லோரையும் உயர்சாதியாக மாற்றுவோம். ஜாதி என்ற பெயரையே ஒழிப்போம்.

எதாவது வரலாறு தெரிந்து பேசினால் பதில் சொல்லலாம். சும்மா வெறுமனே பெரியாரை வைவதால் பெரியாருக்கு ஒன்றும் இழுக்கு அல்ல. முதலில் இந்து மத வேதங்களை படியுங்கள் பிறகு பெரியாரை படிக்கலாம்.

பெரியார் ஒன்றுமே செய்யவில்லையா?
http://pagalavan.in/archives/100

திரு சங்கர் அவர்களே,

///வேதங்கள் என்பது எது என்பதை ஒரு பட்டியல் இடவும்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கும் இடத்தையும் கூறவும்.///

ரிக்,யஜூர், சாம, அதர்வண என்று வேதம் நான்கு உள்ளன.ஒவ்வொரு வேதத்திலும் கர்ம காண்டம்,ஞான காண்டம் என்று இரு பிரிவுகள் உள்ளன.இந்த ஞான காண்டத்தில் தான் உபநிஷத்துக்கள் உள்ளன.இவைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.அவற்றில் மிக்கியமானவை 108 உபநிஷத்துக்கள் .இவை ராமகிருஸ்ன மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கர்ம காண்டத்தை சேர்ந்த பகுதிகளில் மிகச் சிறிய அளவே இது வரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 108 உபநிஷத்துக்கள் மட்டுமே இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ளப் போதுமானது.வேதங்களை முழுமையாக அறிந்து கொள்ள சமஸ்கிருதம் கற்றால் தான் முடியும்.

Thanks to brother Dhanapal for sharing this valuable information.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமகிருஷ்ண மிசன் ஸ்டால் உள்ளது. அங்கே தனபால் அவர்கள் குறிப்பிட்ட உபநிடதங்களில் சில கிடைக்கின்றன. மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிசன் லைப்ரரி ரெபரென்ஸ் பிரிவில் பல் உபநிடதங்கள துல்லியமாக தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு வைக்கப் பட்டு உள்ளன.

வடமொழி வேதங்கள் பெரிது படுத்தி புனித படுத்தி பார்பனர்களால் காட்டப்பட்டது. பழிவாங்கலும் , சபித்தலும் , அந்த காலத்து முட்டாள்களின் உளறலே. உபநிடதங்கள் மட்டும் தான் ஆன்மாவை பற்றி பேசும். மற்ற எல்லா வடமொழி சம்பந்த பட்டவைகள் ஆபாசங்காகவே உள்ளன. தமிழர்கள் நாகரிக பண்பாட்டுக்கு எதிராகவே உள்ளது இந்த குப்பைகள். இது தான் காரணம் பார்பன தீட்சிதர், அர்ச்சகர் , பார்பன சங்கம், போன்றவர்களின் தமிழ் விரோத போக்கிற்கு.

//உபநிடதங்கள் மட்டும் தான் ஆன்மாவை பற்றி பேசும்.// Yes!

திரு.பிரதீப் அவர்களே,

///மற்ற எல்லா வடமொழி சம்பந்த பட்டவைகள் ஆபாசங்காகவே உள்ளன..///

திராவிட இயக்கத்தினர் தமிழர்கள் எழுதிய பக்தி இலக்கியத்திலேயும் ஆபாசங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.அந்த ஆபாசங்களை உங்கள் மனங்களிலிருந்து நீக்கிவிட்டாலே முக்கால்வாசி ஆபாசம் நீங்கிவிடும். மீதமிருப்பவை அகதிகளாக இங்கு வந்த பார்சிகள் போன்றோராலும்,சில இடைச் செருகல்களாலும் ஏர்ப்பட்டவையே.

///தமிழர்கள் நாகரிக பண்பாட்டுக்கு எதிராகவே உள்ளது இந்த குப்பைகள்///

உபநிசத்துக்களைப் படியுங்கள் .தமிழ் பக்தி இலக்கியங்களையோ,சித்தர்கள் பாடல்களையோ படியுங்கள். உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டதும் இதுவும் ஒன்றே என்று உங்களுக்கே விளங்கும். தென்னிந்திய சித்தர்களுக்கும்,வட இந்திய சித்தர்களும், கூறியவை மொழியில் மட்டுமே வேற்றுமை .தத்துவங்கள், மற்றும் அவர்கள் தவத்தால் கண்ட உண்மைகள் அனைத்தும் 100 % ஒன்றாகவே இருக்கின்றன.தமிழ் சைவத்திருமுரைகளும்,சித்தர்கள் பாடலும் கூறுபவை அனைத்தும் உபநிசத்திலும் உள்ளதே?.கடவுள்,ஆன்மா,ஆன்மாவின் அழிவற்ற தன்மைகள், மறுபிறவி, பிரம்மம், .இந்த உண்மைகள் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் அனைவருக்கும் ஒன்றே தான். இருவரும் வேறு வேறு என்றால் அவர்கள் கருத்து ஒன்றாக இருப்பது எப்படி.?இந்தியாவில் உள்ள வட இந்தியர்களும் ,தென்னிந்தியர்களும் (கலாச்சார), பண்பாட்டு ரீதியில் ஒன்றுபட்டவர்களே.

தென்னிந்திய வட இந்திய ஆன்மீகக் கருத்துக்கள் மொழி அளவில் மட்டுமே வேறு ஆனால் தத்துவங்கள் ஒன்றே.

தமிழர்கள் உருவ வழிபாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் சாமியாடுவது ,ஆடு கோழி வெட்டி சிறு கிராம தெய்வங்களை வணங்குவார்கள்.மேலும் முருகன்,சிவன் போன்ற கடவுளைவும் வணங்குபவர்கள். எங்கள் கலாச்சாரத்தைத் தவறு என்றும், காட்டுமிராண்டித்தனமானது என்றும், சாத்தானின் மார்க்கம் என்றும், நாங்கள் வணங்கும் கடவுளை சாத்தான் என்றும் கூறி எங்கள் கலாச்சாரத்திற்கு சம்பந்தமில்லாத /எதிரான கலாச்சாரத்தையும் எங்கள் தத்துவங்களுக்கு எதிரான தத்துவங்களையும் எங்களிடம் புகுத்தி எங்கள் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி, அழிக்கும் உங்களைப் போன்றவர்களின் பண்பாடுதான் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது.

// முதலில் தேவன் இருப்பதைக் காட்டுங்கள், அவர் ஏன் இந்த உலகத்தில் இத்தனை துன்பங்களை வைத்தார் என்பதையும் அவரை சொல்லச் சொல்லுங்கள்.. அப்புறம் பாக்கலாம். //

ஏன் ஸார் உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா…ஒரு தளத்தின் பொறுப்பு மிகுந்த நிர்வாகியான நீரும் சேர்ந்துகொண்டு எடுத்துக்கொண்ட தலைப்புக்குப் பொருத்தமில்லாத விவாதங்களை வளர்க்க எப்படி மனம் ஒப்புகிறதோ…நண்பர் அசோக் அவர்களிடம் நான் வேண்டிக் கேட்பதெல்லாம் இதுதான்,தாங்கள் ஆவி முறிந்துபோகாதபடி செவிடன் காதில் ஊதும் சங்காக இங்கே இதற்குமேலும் போராடுவதை நிறுத்திவிட்டு தாங்கள் தற்போது வசிக்கும் பகுதியின் அடிப்படை பிரச்சினைகளையும் வாழ்வியல் முறைகளையும் கிறித்துவுடனான தங்கள் இனிமையான நடைமுறை அனுபவங்களையும் கட்டுரையாக வடித்துத் தாருங்கள்;உங்கள் நேரத்தை விட இந்த உலகில் எதுவுமே சிறப்பானதல்ல;ஒரு ரூபாயைக் கூட யோசித்து செலவு செய்யும் நாம் பல சமயங்களில் இதுபோன்ற அறிவுவிருத்திக்கு கொஞ்சமும் உதவாத காரியங்களையும் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொன்னான நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி தற்காலங்களில் எழும்புகிறது;யோசியுங்கள்.

திருச்சிக்காரன் மிகவும் தந்திரசாலி,தொடர்ந்து நம்மை விவாதத்தில் தக்க வைத்துக் கொள்ள அவர் நம்பும் அனைத்து தெய்வங்களின் பல்டி முறைகளையும் நீச்சல் முறைகளையும் கடைபிடிப்பவர்;

இனி நாம் ஒரு தந்திரத்தைக் கடைபிடிக்கலாம்;அவர் என்ன கேட்டாலும் அதற்கு பதிலாக, “அதான் சொன்னேனே ” என்று மட்டும் ஒரு வரி பதித்துவிட்டு ஓடிவிடவேண்டும்;மனுஷன் நொந்துருவாரில்ல‌..?

தப்பிச்சி ஓடியாந்துருங்கண்……………….ணே……………!

அன்புக்குரிய நண்பர் சில்சாம் அவர்களே,

நீங்கள் உங்களின் பல இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொன்னான நேரத்தை இழந்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இதில் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

நான் எந்த தந்திரமும் செய்யவில்லை.

மக்களின் நலம் நாடியே இத்தனையும் செய்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இப்படி ப்ளாக்கில் எழுதுவதால் எங்களுக்கு என்ன லாபம்? எனவே மக்களுக்காக எழுதுகிறோம்.

மற்றபடி நீங்கள் நினைப்பது போல எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது, பகுத்தறிவில் தெரிய முடியாது, நான் கண்டு உணராத ஒன்றை, மீண்டும் மீண்டும் சரி பார்த்துக் கொள்ள முடியாத ஒன்றை நான் வெறுமனே சொல்கிறார்கள என்பதால் அது உண்மை என நான் நம்புவதில்லை. அது எந்தக் கோட்பாடாக இருந்தாலும் சரி, எந்தக் கடவுளாக இருந்தாலும் சரி.

திருச்சிக்காரன் தளக் கட்டுரைகளில் வரும் கருத்துக்களில் உண்மை இருக்கிறது, மக்களுக்கான நன்மை இருக்கிறது… அதனால் மத சகிப்புத்தன்மையை குலைக்கும் படியான கருத்துக்களை இங்கே பரப்ப இயலாது … என்று தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

///தாங்கள் ஆவி முறிந்துபோகாதபடி செவிடன் காதில் ஊதும் சங்காக இங்கே இதற்குமேலும் போராடுவதை நிறுத்திவிட்டு தாங்கள் தற்போது வசிக்கும் பகுதியின் அடிப்படை பிரச்சினைகளையும் வாழ்வியல் முறைகளையும் கிறித்துவுடனான தங்கள் இனிமையான நடைமுறை அனுபவங்களையும் கட்டுரையாக வடித்துத் தாருங்கள்;///

நாங்கள் போராடுவது எங்களிடம் ஏற்கனவே மிகச்சிறந்த மதமும், மிகச் சிறந்த கலாச்சாரமும் இருக்கின்றது. உலகில் பல நாகரீகங்களை அழித்தது போல் எங்கள் நாகரீகங்களையும் இதுவரை அழித்தது போதும்.இனியும் அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் போராடுகிறோம். உலகில் மக்களில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்களாகிய நீங்களே இருக்கிறீர்கள்.போதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் உங்கள் மத மாற்றத்தை.இருக்கும் கிறிஸ்தவர்களையும், கிருஸ்தவத்தையும் காப்பாற்றுங்கள்.

ஆனால் நீங்கள் போராடுவது உலகில் உள்ள அனைத்து நாகரீகங்களையும் அழித்து, கடைசி மனிதன் வரை கிறிஸ்தவனாகும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.என்று கூறுகிறீர்கள்.2050 க்குள் இந்தியாவை கிருஸ்தவ நாடாக்கவேண்டும் என்று மறைந்த போப் ஆண்டவர் கூறுகிறார்.

என்ன செய்ய கிருஸ்தவ மத மாற்றமே உங்களைப் போன்றவர்களுக்கு தசமபாகமாக கிடைக்கிறது.அதனால் அதற்க்கு விசுவாசமாக இருக்கிறீர்கள்.ஆனால் இது நியாயமா???

Thank you Bro.Chillsam,
You are very correct. We cannot help these people, who are destined to hell. The necessary Gospel has been told here, number of times. Now it is between them and the Lord.
I am sure that Dhanapal is going to curse Thiruchchikkaaran on the judgement day.
Ashok

அடாடா …. என்ன மிரட்டல். இப்படி மிரட்டி மிரட்டி பயமுறுத்தியே சிலர் மனதில் மத சகிப்புத் தன்மையை அழித்து , மத வெறியைப் புகுத்தி இருக்கிறீர்கள்.

பகுத்தறிவு வாதிகளான எங்களுக்கு இந்த எரி நரகம்…. எல்லாம் இருப்பது சரி பார்க்கப் பட்டாலன்றி அவற்றை ஒப்ப இயலாது.

ஆனால் நீங்களோ நம்பிக்கை வாதிகள், நியாயத் தீர்ப்பு, எரி நரகம் … இதை எல்லாம் நம்புகிறீர்கள்.

இயேசுவொ, என் கொள்கைகளைப் பின்ப‌ற்றாம‌ல் , வெறும‌னெ என்னைப் பார்த்து, க‌ர்த்தாவே, க‌ர்த்தாவே என்று அழைத்து ப‌ல‌ன் இல்லை என்கிற‌ ரீதியில் சொல்லி விட்டார்.

ஆனால் நீங்களோ, க‌ற்பனைக‌ள் (கொள்கைக‌ள் )முக்கிய‌மல்ல என்ற‌ ரீதியில் நினைத்தும், எழுதியும் செய‌ல் ப‌ட்டும் வ‌ருகிறீர்க‌ள். அதே போல‌ யாரொ எழுதிய‌தை எல்லா ம், இயெசுவின் க‌ருத்துக்களாக‌ காட்டும், பிர‌ ச்சார‌ம் செய்யும் செய‌லையும் செய்கிறீர்க‌ள்.

எனவே என‌க்கொ, த‌னபாலுக்கோ பிர‌ச்சினை இல்லை. நீங்க‌ள் ம‌ன‌ம் திரும்பி, இயெசுவின் விட்டுக் கொடுக்கும், ச‌ம‌ர‌ச‌க் கோட்பாட்டை பின்ப‌ற்றுவ‌து ந‌ல்லது.

//திருச்சிக்காரன் தளக் கட்டுரைகளில் வரும் கருத்துக்களில் உண்மை இருக்கிறது, மக்களுக்கான நன்மை இருக்கிறது… அதனால் மத சகிப்புத்தன்மையை குலைக்கும் படியான கருத்துக்களை இங்கே பரப்ப இயலாது … என்று தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

“அதான் சொன்னேனே…?! ”

// உலகில் பல நாகரீகங்களை அழித்தது போல் எங்கள் நாகரீகங்களையும் இதுவரை அழித்தது போதும்.இனியும் அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் போராடுகிறோம். //

நல்லாத்தான் போராடறீங்க‌…இன்னும் ஒரிஸ்ஸா,பீகார் போன்ற மாநிலங்களீல் இன்னும் 70 சதவீத கிராமங்களில் அடிப்படை வசதிகளான மின்சாரமோ சாலைவசதிகளோ சுகாதார வசதிகளோ கல்வியறிவோ இல்லை;.

மலை கிராமங்களிலோ பழங்குடியினரின் வாழ்க்கை முறை இன்னும் மோசம்…அரசாங்க அதிகாரிகளே புள்ளிவிவரங்களுக்கும் சேவைகளைக் குறித்த பிரச்சாரத்துக்கும் கிறித்தவ மிஷினரிகளையே நம்பியிருக்கும் நிலைமை;

பெரும்பாலான பழங்குடி பெண்கள் மேலாடை அணிவதில்லை;இன்னும் சில இடங்களில் நிர்வாணமாகவே இலைதழைகளைச் சுற்றிக் கொண்டு ஆத்தாவின் ஆடித் திருவிழாவுக்கு தீமிதிக்க வந்தவர்களைப் போல கீழ்த்தரமான வாழ்க்கை வாழுகின்றனர்;

இன்னும் ஆப்பிரிக்க காட்டுவாசிகள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தனர்;இந்த கலாச்சாரத்தையெல்லாம் கிறித்தவர்கள் கெடுத்துவிட்டனரா?

கோவணாண்டிகளுக்கு பேண்ட் கொடுத்தது மாபாவச் செயலா?

நாகரீக மனிதனுடைய வசதிகளும் வாய்ப்புகளும் சராசரி மனிதன் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதுதானே மற்றொரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்?

அது அவன் கலாச்சாரம்,அப்படியே இருக்கட்டும் என்பது வர்ணாசிரமமல்லவா?

அதற்கு வந்த ஆபத்தினாலேயே கிறித்தவ மிஷினரிகள் மீது இத்தனை கோபம் என்பது இரகசியமா என்ன?

இன்னும் தாயத்து விற்பவனுக்கும் சாராயம் விற்பவனுக்கும் தொழில் நஷ்டமாகி கூட்டணி போட்டு எங்களைத் தாக்குகிறான்…இணையதளம் வரை வந்து..!

சாராயம் குடிப்பதை ஒரு சடங்காக பின்பற்றுவது யார்?

மொத்திலே கற்றுக் கொடுப்பது எங்கள இனம், எங்களுக்கு கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம் என்னும் கட்டபொம்மனின் வசனமே நினைவுக்கு வருகிறது

//இன்னும் தாயத்து விற்பவனுக்கும் சாராயம் விற்பவனுக்கும் தொழில் நஷ்டமாகி கூட்டணி போட்டு எங்களைத் தாக்குகிறான்…இணையதளம் வரை வந்து..!//

அப்படியா? தாயத்து விற்பவரும் , சாராயம் காய்ச்சுபவரும் எந்த இணைய தளத்திலே கூட்டணி அமைத்து எழுதுகிறார்கள? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் விரிவாக எழுதுங்கள்.

இப்போது வர்ணாசிரமம் எங்கே இருக்கிறது – கோவிலில் இல்லை, இந்து மதத்தில் இல்லை. திருப்பதி கோவிலிலோ, பழனி கோவிலிலோ வேறு எந்தக் கோவிலிலும் சாமி கும்பிடுபவர்கள் அருகருகே நின்றுதான் சாமி கும்பிடுகிறார்கள். பக்கத்திலே நிற்பவர் எந்த சாதி என்று கேட்பதும் இல்லை, அதைப் பற்றி நினைப்பதும் இல்லை. இந்துக்கள் தங்களைத்
தாங்களே சீர்திருத்திக் கொண்டால், கிறிஸ்தவ குருமார்களுக்கு என்ன கஷ்டம் என்று சுவாமி விவேகானந்தர் அன்று கேட்டது, இப்போதும் பொருத்தமாக உள்ளது.

திரு CHILLSAM அவர்களே,

///நல்லாத்தான் போராடறீங்க‌…இன்னும் ஒரிஸ்ஸா,பீகார் போன்ற மாநிலங்களீல் இன்னும் 70 சதவீத கிராமங்களில் அடிப்படை வசதிகளான மின்சாரமோ சாலைவசதிகளோ சுகாதார வசதிகளோ கல்வியறிவோ இல்லை;.///

சரி…

/// கிராமங்களிலோ பழங்குடியினரின் வாழ்க்கை முறை இன்னும் மோசம்…அரசாங்க அதிகாரிகளே புள்ளிவிவரங்களுக்கும் சேவைகளைக் குறித்த பிரச்சாரத்துக்கும் கிறித்தவ மிஷினரிகளையே நம்பியிருக்கும் நிலைமை;///

நீங்க தானே மதம் மாற்ற மூளை முடுக்கெல்லாம் போறீங்க.ஏன் அந்தப் பழங்குடியினருக்கு யேசுவையை பிரச்சாரம் செய்யாமல் அதாவது மதம் மாற்றாமல் அவர்களுக்கு சேவை செய்ய உங்களால் முடியுமா???

உங்களுக்கு மத மாற்றமே முக்கியம்.இந்த சேவை என்பது மதமாற்றத்திற்கு உதவுகின்ற மிகச்சிறந்தக் கருவி மட்டுமே.

சேவை என்றால் மதமாற்றமில்லாத சேவை செய்யுங்கள்.அல்லது (மத மாற்ற) வியாபாரத்தை செய்கிறோம் என்று கூறுங்கள்.சேவை என்ற வார்த்தையைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

///பெரும்பாலான பழங்குடி பெண்கள் மேலாடை அணிவதில்லை;///

அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம்.அது ஒன்றும் தவறல்ல.இப்பொழுது மிக நாகரீகமான பெண்கள் கூட மேலாடை அணிவதில்லை என்று சொல்லும் படி ,தன் அழகை அனைவரும் பார்க்க, எல்லாம் தெரியும் படி ஆடை அணிகிறார்கள்.

///இன்னும் சில இடங்களில் நிர்வாணமாகவே இலைதழைகளைச் சுற்றிக் கொண்டு ஆத்தாவின் ஆடித் திருவிழாவுக்கு தீமிதிக்க வந்தவர்களைப் போல கீழ்த்தரமான வாழ்க்கை வாழுகின்றனர்;///

அதென்ன இலை தழைகளைக் கட்டிக் கொண்டால் கீழ்தரமானவர்களா???பழங்குடியினர் காட்டில் கிடைக்கும் இலை, தழைகள், மரப்பட்டை,தோல் போன்றவற்றைப் ஆடைகலாகப் பயன் படுத்தினர்.இதில் என்ன கீழ்த்தரத்தைக் கண்டீர்கள்.???அவர்கள் என்ன textile mill வைத்துக் கொண்டா இலை,தழைகளை அணிந்தனர்.???

உடலை மறைக்க இலை, தழைகளை சுற்றிக்கொண்டவ்ர்கள் கீழ்த்தரமானவர்களா???

உடலை மறைக்காமல் அதை வெளிக்காட்ட அதிக விலையில்,குறைந்த ஆடை அணிபவர்கள் கீழ்த்தரமானவர்களா???

அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.இயற்கையை அழிக்காமல் வாழ்கிறார்கள்.அவர்கள் கீழ்த்தரமானவர்களா???

அல்லது,

வீடுகள் கட்ட மணலையும், செங்களுக்காக மண்ணையும், சிமென்ட்டுக்காக மலையையும் அழித்து, வாகனங்கள், தொழிற்ச்சாலைகள் மூலம் புகையை வெளியிட்டும், AC , FRIDGE மூலம் க்லோரோப்ளுரோ கார்பன், ஹைட்ரோப்ளுரோ கார்பன் போன்ற வாயுக்களால் நம் ஓசோன் படலத்தையே சிதைத்தும், காடுகளை வெட்டி மலை வளத்தை அழித்தும், நீர்வளத்தை அழித்தும், நம் பூமியையே வெப்பமடையச் செய்த நாம் கீழ்த்தரமானவர்களா???

இயற்கையை அழிக்காத,இயற்கையைக் கட்டிக் காக்கும் அவர்கள் கீழ்த்தரமானவர்களா???

இந்தப் பூமியை அழிப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா???

இந்தப் பூமியை பாதுகாப்பவர்கள் கீழ்த்தரமானவர்களா??? நீங்களே பதில் கூறுங்கள்.

///இன்னும் ஆப்பிரிக்க காட்டுவாசிகள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தனர்;இந்த கலாச்சாரத்தையெல்லாம் கிறித்தவர்கள் கெடுத்துவிட்டனரா?///

அவர்கள் வளர்த்த நாகரீகங்களைவிட அழித்த நாகரீகங்கள் தான் அதிகம்.கிறிஸ்தவர்களை விட அறிவிலும், பண்பிலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்கிய மாயா, இன்கா போன்ற பல நாகரீகங்களை கிருஸ்தவர்கள் அழித்துவிட்டனர் என்று தான் உலகம் கூறுகிறது.

///கோவணாண்டிகளுக்கு பேண்ட் கொடுத்தது மாபாவச் செயலா?///

கோவணாண்டிகளுக்கு பேண்ட் கொடுத்தது மாபாவச் செயல் அல்ல, அவன் கும்பிட்டக் கடவுளை சாத்தான் என்று கூறி, இயேசுவை மட்டும் கும்பிடு என்று கூறி, அவன் கையில் பைபிளை கொடுத்தது தான் மாபாவச் செயல்.

///நாகரீக மனிதனுடைய வசதிகளும் வாய்ப்புகளும் சராசரி மனிதன் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்பதுதானே மற்றொரு மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும்?///

ஆம் சரி தான். ஆனால் நாகரிக மனிதனிலிருந்து சராசரி மனிதன் வரை உள்ள அனைவரும் கிருஸ்தவராக்குவது தானே உங்கள் நோக்கமாக இருக்கிறது.???

மிஸ்டர் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதா..?
சகிப்புத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதாகப் போடும் வேஷத்தைக் களைந்து போட்டு வெளிப்படையான விவாதத்துக்கு வாரும்;

// மொத்திலே கற்றுக் கொடுப்பது எங்கள இனம் //

இது எழுத்துப்பிழையல்ல,சரியானதுதான்;ஆம்,மொத்து என்பது சட்டியின் குட்டி;அதை சட்டிக்குள் வைத்து ஆட்டும் போது வேலை நடக்கும்;அந்த செயல் காரணமில்லாமல் தொடரும்போது அரைச்சதையே அரைப்பதாகவும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர் புலம்புவார்..!

எந்தவொரு கட்டுரையையும் இதுபோல இந்துகிறித்தவ விவாதமாக மாற்றும் நரித்தனம் உமக்கு அழகல்ல‌; ஆலயத்தில் இருக்கும் வைன் போதையேற்ற அல்ல,பாதை மாற்ற; நீங்களும் தீர்த்தம் கொடுக்கிறீர்கள்,அது என்ன ஜின் ஆகுமா?

‘ கைப்புண்ணுக்கு கண்ணாடியா ‘ என்பார்களே அதுபோல உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேர்மையுணர்வுடன் பதித்திருக்கும் ஒரு பின்னூட்டத்திற்கு இப்படியா பதில் சொல்வது?

உங்களோடு இணைந்து வாழுவதே சாபம்; எனவே இந்த உலகைவிட்டு நீங்கிப்போக யோசிக்கிறோம்; அந்த ஆள் சொன்னபடி சீக்கிரம் வரட்டும் என்று வேண்டுகிறோம்; அவர் வராவிட்டாலும் நாங்கள் கக்கினதை தின்ன திரும்பவும் மாட்டோம்; மீண்டும் செற்றில் உழல துணியவும் மாட்டோம்;

என்னமோ மனகுவிப்பு பயிற்சி அது இது என ரீல் சுத்தறீங்களே அதுவும் மதம் சார்ந்த ஒரு கருத்துதான் என்பதை முதலில் நினைவில் வையும்;

மனம் என்பதே மதத்தின் ஆதாரப் போதனையாகும்;அது பைபிளிலிருந்தே உலகமுழுதும் பரவியது;

இதையும் விவாதமாக்க வேண்டாம்;அது உங்களுக்கு சொந்தமானதென்று எண்ணினால் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள்;நாங்கள் காப்பிரைட் சண்டைக்கு வருவதாக இல்லை;

யோகம் யாகம் தியானம் என இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து கறுப்பு பணங்களின் கொடௌனாக இருக்கும் மோசடியாளர்களிடம் நாங்கள் பங்கு கேட்கவும் மாட்டோம்;

உங்கள் தத்துவங்களில் எல்லாமே தர்மம் தானே;அந்த கர்மாவில் விபச்சாரமும் ஒன்று என்பது எமக்குத் தெரியும்;

ப்ரச்சினை பண்ணாதீங்க‌…உங்க வழிய நீங்க பாருங்க எங்க வழிய நாங்க பார்க்கிறோம்;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36611590

அன்புக்குரிய நண்பர் சில்சாம் அவர்களே,

இதற்க்கு தான் முதலில் உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடு என்று இயேசு கிறிஸ்து சொன்னார். மது அருந்துவதை யார் பின்பற்றுகிறார்கள் என்பதை எண்ணாமல் முதலில் அடுத்தவரை குறை சொல்வதே இதற்க்கு காரணம்.

தளத்தில் வரும் கட்டுரைகள் பல்வேறு பொருளைப் பற்றியதுதான். ஆனால் சில நண்பர்கள் அதிலே புகுந்து, சாவுக்குப் பின் அவரின் ஆத்மா, இவரைத் திட்டும்….. கஷ்டப் படப் போகிறார்…. என்று எல்லாம் எழுதுவதே விவாதத்தை திசை திருப்புகிறது. “மாணிக்க வீணை ஏந்தும்….” கட்டுரையில் உருவ வழிபாடு செய்யக் கூடாது என்று எழுதி விவாதத்தை ஆரம்பித்தது யார் என்று எண்ணிப் பாருங்கள்.

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் பற்றிய கட்டுரையை சில நண்பர்கள தங்களின் மத வாதத்தை, மத சகிப்புத் தன்மை இல்லாத மத வெறியை பரப்பும் முயற்சியில் ஈடு பட்டதாலே தானே விவாதம் இந்த திசையில் செல்கிறது?

//என்னமோ மனகுவிப்பு பயிற்சி அது இது என ரீல் சுத்தறீங்களே அதுவும் மதம் சார்ந்த ஒரு கருத்துதான் என்பதை முதலில் நினைவில் வையும்;//

மனக் குவிப்பு பயிற்சி என்பது உடற் பயிற்சியைப் போன்றதே. மனதை ஒரு முகப் படுத்தி சிந்தனைகளை சிதற விடாமல் செய்கின்றனர்.

இந்த பயிற்சி பற்றி கீதை யில் விவரமாக சொல்லப் பட்டு உள்ளது. பல இந்து மத முனிவர்களும், சித்தர்களும் தனிமையில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர். அதே போல, பவுத்த மற்றும் சமணத் துறவிகளும் இதில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர்.

அதே நேரம் மனக் குவிப்பு என்பது முழுக்க முழுக்க பகுத்தறிவுக்கு ஒப்பான ஒரு செயலே. ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை இருக்கிறது. இவ்வாறாக இருக்கும் மனிதன், தன்னுடைய மனத்தைக் கட்டுப் படுத்த முயலவது பகுத்தறிவுக்கு ஒப்பான செயலே. தொடர்ச்சியாகவும், ஒழுங்காகவும் மனக் குவிப்பு பயிற்சி ஒரு மனிதனின் மனதில் அமைதியை , வலிமையை , அன்பை தருகிறதா என்பதை முயற்சி செய்து பார்த்துக் கொள்ளலாம். இதிலே முயற்சி செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்லுகிறார்கள். நம்ப சொல்லவில்லை. எனவே இது பகுத்தறிவுக்கு ஒப்பான செயலே.

//மனம் என்பதே மதத்தின் ஆதாரப் போதனையாகும்;அது பைபிளிலிருந்தே உலகமுழுதும் பரவியது;//

இப்படி எல்லாம் நீங்கள் எழுதுவதால் தான் , நாங்கள் இதற்க்கு பதில் எழுதினால் வருத்தப் பட்டு கோவப் படுகிறீர்கள். மத்த மதங்கள் எல்லாம் மனிதனுக்கும் மனம் இல்லை என்று சொல்லுகிறதா? மனிதனுக்கு மனம் என்று ஒன்று இல்லை என்று மத்த மனிதர்கள் எல்லாம் நினைத்தார்களா? பைபிள் தான் மனிதனுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதாக சொல்லிக் கொடுத்தா?

//அப்படியா? தாயத்து விற்பவரும் , சாராயம் காய்ச்சுபவரும் எந்த இணைய தளத்திலே கூட்டணி அமைத்து எழுதுகிறார்கள? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் விரிவாக எழுதுங்கள்.//

http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_23.html

// முக்கிய அறிவிப்பு
நமது ‘ ஸ்ரீ நாராயண கேசரி ‘ தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும் //

// இப்போது வர்ணாசிரமம் எங்கே இருக்கிறது – கோவிலில் இல்லை, இந்து மதத்தில் இல்லை. //
நவீன வர்ணாசிரம தர்மம் வர்க்க வேறுபாட்டில் விளங்குகிறது;நானும் நீங்களும் முதலில் ஒரு ஒப்பந்தத்துக்கு வருவோம்;நீங்களோ நானோ கிறித்தவத்தைக் குறித்து ஒருவார்த்தையும் எழுதக் கூடாது;இந்திய சமுதாயத்தையும் குறித்தும் கலாச்சாரத்தைக் குறித்து மட்டுமே ஆராய்வோம்;நீங்கள் சொல்லுங்கள் நான் கற்றுக்கொள்ளுகிறேன்;கேட்கும் விளக்கங்களை விவாதமாக பாவிக்காமல் விளக்கம் சொல்லுங்கள்;அதுமட்டுமே ஆரோக்கியமான விவாதமாகும்.

திரு. சில்சாம் அவர்களே,

வர்ணாஸ்ரம வேறுபாடு என்பது வேறு, வர்க்க வேறுபாடு என்பது வேறு.

நீங்கள் வர்ணாஸ்ரமம் எனப் படும் சாதீய அடிப்படையிலான சமுதாயத்திப் பற்றி சொல்லும்போது கிறிஸ்தவத்தை மட்டும் அல்ல, எந்த மதத்தையுமே சமபந்தப் படுத்த வேண்டாமே. சமூகப் பிரச்சினையை, சமூகப் பிரச்சினையாக் ஆராயலாம் அல்லவா?

நான் இயேசு கிறிஸ்துவை விமரிசிப்பதே இல்லை என்பதை பல்வேறு தளத்திலும் பல்வேறு நண்பர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

// அதே நேரம் மனக் குவிப்பு என்பது முழுக்க முழுக்க பகுத்தறிவுக்கு ஒப்பான ஒரு செயலே. //

சாமி நீங்க எந்த சப்பைக்கட்டும் கட்டவேண்டாம்;இங்கே நீங்கள் கதைக்கும் அனைத்தும் மதக் கருத்து தான்;போதாக்குறைக்கு இந்துத்வாவில் நாத்திகமும் ஒருபகுதி என்று குண்டு போடுகிறீர்கள்;அப்படியானால் பெரியாரையும் வழிபடவேண்டியதுதானே..?

நண்பரே,

நீங்கள் அவசரப் படாமல் சிந்திக்க வேண்டும். மனக் குவிப்பு என்பது ஒரு பொதுப் பயிற்சி.

பிராணாயமம் என்பது மூச்சப் பயிற்சி. அதைப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதை எந்த மதத்தவரும் செய்யலாம். அமெரிக்காவில் பிற மதத்தவரும் அதை உடற் பயிற்சின் ஒரு பகுதியாக செய்கின்றனர்.

அது போலவே மனக் குவிப்பு என்பதும் பொதுப் பயிற்சியே. என்னுடைய சிந்தனையை நான் கட்டுப் படுத்துகிறேன்.

இரண்டாவது நாத்தீகம் என்பது இந்து மதத்தின் ஒரு முக்கிய பிரிவு. இந்து மதம் என்பது உண்மையைப் பற்றி ஆராயும், உண்மைகளை அறியும் , அறிக்கை செய்யும் மதமாக உள்ளது. உண்மையை அறியும் ஆரய்ச்சிக்கு இந்து மதத்தில் தடையே இல்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று உண்மையிலே அறிய முற்படுபவன் , அதிலே முனைப்பாக ஆராய்வான். இந்து மதத்தின் மிக முக்கிய துறவிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் , கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதில் தீவிரமாக முனைப்புக் காட்டினார்.

அவரது இயற்பெயர் நரேந்திரன் என்பது ஆகும். அவர் சிறுவனாக இருந்த போது
அவர் தான் சந்திக்கும் ஒவ்வொரு மத அறிஞரிடமும், அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரிடம் நீங்கள் கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா என்பதை – ஒரு கேலியான கேள்வியாக அல்லாமல், உண்மையை அறிய விரும்பும் கேள்வியாக கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

பெரியார் மரியாதைக்கு உரியவரே, வணக்கத்துக்கு உரியவரே என்பதைப் பல இடங்களில் எழுதி இருக்கிறேன்.

// இப்போது வர்ணாசிரமம் எங்கே இருக்கிறது – கோவிலில் இல்லை, இந்து மதத்தில் இல்லை. //

இதனை சரியாக நான் விளக்கவில்லை;
வர்ணாசிரமத்தின் மற்றொரு பரிமாணமும் பரிணாமமுமே வர்க்க வேறுபாடுகள்;அடித்தட்டு மக்களுடன் இணைந்து கசகசப்பிலும் நெருக்கடியிலும் நின்று சாமி கும்பிட முடியாதோருக்கு என்று சிறப்பு வழியை ஏற்படுத்தி வைத்திருப்பது சாமியின் கட்டளையா மனிதனின் சூழ்ச்சியா..?

// பெரியார் மரியாதைக்கு உரியவரே, வணக்கத்துக்கு உரியவரே என்பதைப் பல இடங்களில் எழுதி இருக்கிறேன். //

அவரை காஞ்சி பெரியவருக்கு இணையாக (தயவுசெய்து திராவிடர் கழகத்தினர் என்னை கோபித்துக் கொள்ளவேண்டாம்…) வைத்து வழிபட ஆயத்தமா என்று கேட்கிறேன்;ஒரு பார்வையில் விவேகானந்தரைவிட பெரியாரே சிறப்பான சமூகப் பணியாற்றியிருக்கிறார்.

//ஒரு பார்வையில் விவேகானந்தரைவிட பெரியாரே சிறப்பான சமூகப் பணியாற்றியிருக்கிறார்.//

அது எந்த பார்வையில் என்று குறிப்பிட்டால் எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

சுவாமி விவேகானந்தர் எந்த உலக மக்களை எந்த அளவுக்கு நேசித்தார் , இந்தியாவை, இந்திய மக்களை எந்த அளவுக்கு நேசித்தார், அதிலும் குறிப்பாக ஒடுக்கப் பட்ட மக்களின் பேரில் எந்த அளவுக்கு மனப் பூர்வமான கவலையும், அக்கறையும் கொண்டு அவர்களை நேசித்தார் என்பதை பலரும் அறிவர், வெளி நாட்டினர் கூட அறிந்து உள்ளனர். சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட வேண்டிய கடமையை நான் செய்யாமல் இருப்பதை நினைவு வூட்டி இருக்கிறீர்கள், அந்த வகையில் நன்றி.

//அவரை காஞ்சி பெரியவருக்கு இணையாக (தயவுசெய்து திராவிடர் கழகத்தினர் என்னை கோபித்துக் கொள்ளவேண்டாம்…) வைத்து வழிபட ஆயத்தமா என்று கேட்கிறேன்;//

காஞ்சி பெரியவருக்கு இணையாக வைத்து வழிபட முடியுமா என்று கேட்டு இருக்கிரீர்கள. ஒருவரை வழிபடுவது , வணங்குவது , மரியாதை செலுத்துவது என்பது அவரவரின் சிந்தனைகளைப் பொறுத்து . தனிப் பட்ட முறையிலே என்னைப் பொறுத்தவரையில் காஞ்சிப் பெரியவர் என அழைக்கப் படும் – சந்திரசெகரேந்திரரையோ, அல்லது ஜெயேந்திரறை யோ, விஜெயேந்திரறையோ- அவர்களின் பேச்சோ, எழுத்தோ, செயல்பாடோ என்னைக் கவர்ந்ததும் இல்லை. நான் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டிய வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.

நான் மரியாதை செலுத்தி, வணக்கம் செலுத்துபவர்களின் பட்டியலில் காந்தி, அம்பேத்கர், பெரியார், சுவாமி விவேகானந்தர், தியாகராசர், பட்டினத்தார், ஆதி சங்கரர், இயேசு கிறிஸ்து, புத்தர், கிருஷ்ணர், நசிகேதஸ், துருவன், மார்க்கண்டேயன், இராமர்… இப்படிப் பட்டவர்களே உள்ளனர். இந்தப் பட்டியலில் என்றைக்குமே சந்திர செகரேந்திரரோ, . ஜெயேந்திரரோ, விஜயேந்தி ராரோ … இருந்தது . இல்லை.

சில் (edited),

பெரியாரை நாங்கள் வணங்குவது இருக்கட்டும். அவர் சொன்ன கருத்தான கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள் என்பதை நீ முதல் ஏற்றுக்கொள்ளவும். அவர் (edited)வை முட்டாள் என்றே சொல்லிவிட்டார். (…Edited)இதெல்லாம் செய்த பின்னர் இந்துக்களுக்கு பெரியாரை வணங்குங்கள் என்று புத்திமது சொல்லவும். அதுவரை பொத்திக்கொள்ளவும்.

//Ashok kumar Ganesan, on September 22, 2010 at 22:31 Said:

நான் அப்படி ஒரு கொடுமைகாரருக்கு ஜால்ரா போடவேண்டிய அவசியம் என்ன ஐயா? ஆறு வருடங்கள், பெங்களூரில் ராக்கும் கண் பார்வையற்றோர் பள்ளியில் தினமும் இரண்டு மணி நேரமாவது இருந்திருக்கிறேன். பத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையற்ற நண்பர்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறார்கள்.
உங்களை விட படைத்தவனிடம் நன்றியுணர்வோடு உள்ளனர். தங்களுக்கு கண்பார்வை இல்லாவிட்டாலும், தேவன் அவர்களுக்கு கொடுத்த மற்ற கிருபைகளுக்காக நன்றி சொல்கிறார்கள், சாதிக்கிறார்கள்.
திராணிக்கு மேலாக யாரும் சோதிக்கப்படுவதில்லை.
Reply //

என்ன நீங்க இப்படி ரெண்டு மணிநேரம் அவங்க கூட இருந்துபுட்டு வந்துடுரிங்க,பேசாம ஒரு நாள் சபிச்சு விடுங்க நண்பரே அவங்களுக்கு கண்ணு வந்து அவங்களும் இந்த உலகத்தை பார்த்துட்டு போகட்டுமே.
உங்களுக்கு ஜபிக்க தெரியலேனா யாரவது தெரிஞ்சவங்கள கூப்பிட்டு ஜபிக்க சொல்லுங்க. ஏன் ஜெபிச்சு கண்ணு பாக்க வைக்க முடியுமுன்னு குருடர்கள் பார்க்கிறார்கள்,செவிடர்கள் கேட்கிறார்கள் அப்புடின்னு நெறைய விளம்பரம் பாக்குறேன், அது எல்லாம் பொய்யா?
என்னங்க உங்க கையிலே மருந்த வச்சுக்கிட்டு அவங்களையும் பாவம் கண்ணு தெரியாம வச்சு இருக்கீங்க? பாத்து எதாவது செய்ங்க,இல்லேனா அந்த பொத்தகம் அதிலுள்ள வசனம் எல்லாம் டுபாகூருன்னு யாரவது சொல்ல போறாங்க நண்பரே.

அப்புறம் அந்த கண்ணு இல்லாத கஷ்டத்தையும் தாங்கும் திறனை (திராணியை ), கொடுமை இல்லாத அந்த கடவுள் எப்படி தீர்மானிக்கிறார்?

அதனை எப்படி அவங்களுக்கு மட்டும் தீர்மானிச்சு சோதிக்கணும். ஏன் மத்தவங்களுக்கு கூடாது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: