Thiruchchikkaaran's Blog

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம் !

Posted on: September 18, 2010


சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும், மத வெறி, இனவெறி , சாதி வெறி நீங்கி சாதிக் காழ்ப்புணர்ச்சியும் , பாலின அடக்குமுறையும்  இல்லாத நாகரிக சுமுதாயம் அமைய வேண்டும் என்பது நமது முக்கிய குறிக்கோள் ஆகும். அதற்க்கு ஆன்மீகம் முக்கிய பணி ஆற்றும் சக்தி உடையது என்பதும் நமது நம்பிக்கை ( we are confident & hope ful ).

காசி விஸ்வநாதர் ஆலயமோ, திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயமோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ, சபரி மலை ஐயப்பன் கோவிலோ… கடவுளை வணங்கும்   யாரும் அருகில் இருப்பவர் எந்த சாதி என்று கேட்பதும் இல்லை, அதைப் பற்றி நினைப்பதும் இல்லை.

இவ்வாறாக  இந்து மதம் வர்ணாஸ்ரமக் கட்டுப் பாட்டின் பிடியில் இருந்து விடு பட்டு தன்னுடைய சமரச ஆன்மீகக்கருத்துக்களை அனைவரின் மீதும்  , சூரியன் தன ஒளிக் கிரகணங்களை அனைவரின் மீது செலுத்துவது போல செலுத்தி வருகிறது.  

இந்த நிலையிலே அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால், சமத்துவ சமுதாயம் அமைய ஒரு உதவியாக இருக்கும். இந்து மதம் ஜனநாயக மதமாக மக்கள் மதமாக இருப்பது, இன்னும் முழுமையாக்கப்  படும்.

இந்த நிலையிலே இன்று காலை  அர்ச்சகர் பயிற்சி பெரும் மாணவர்கள அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக  வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணமலையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் , பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்ததுமான செய்திகளை நாம் அறிகிறோம்.

அவர்களுடைய கோரிக்கையிலும் நியாயம் இருக்கிறது, அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததும் ஒரு ஆக்க பூர்வமான செயலே.  பெரியார் இந்து மதத்தை விமரிசித்து வந்தாலும், அவருடைய கேள்விகளும், விமரிசனங்களும் ஒரு இந்து மத மாணவனுக்கு, இந்து மதத்தின் உண்மையான கருத்துக்களை மூடி மறைத்து வந்த கருத்துக்களை விலக்கி, உண்மையான இந்து மதத்தை , பகுத்தறிவு ஆராச்சி அடிப்படையிலான இந்து மதத்தை அறிய  உதவியாகவே இருக்கும்.

 பெரியாருடைய முடிவுகள் பலவற்றோடு ஒத்த கருத்துக்கள எனக்கு உண்டு, அவருடைய முடிவுகள் பலவற்றோடு மாறு பட்ட கருத்தும் எனக்கு உண்டு.

இந்த மாணவர்களின் கோரிக்கை நிறைவேறட்டும், விரைவில் அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகட்டும் என  வாழ்த்துகிறோம்!

Advertisements

15 Responses to "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம் !"

நல்ல கட்டுரை.

இந்த அர்ச்சகர் தொழிலை மனப்பூர்வமாக செய்தால் நன்றாக இருக்கும்.

தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு சமஸ்கிருதத்தில் அர்ச்சனையா????—என்று கூறி பிராமணர்கள் தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி,

பின் தமிழ் அர்ச்சனை விரும்புபவர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறி,

பின் அனைத்து ஜாதியினரும் சம்ஸ்கிருத வேதமந்திரம் கற்றுக்கொண்டு அர்ச்சகர் ஆகலாம் என்று கூறிய தமிழக அரசுக்கு நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்.

விவேகானந்தரும் அனைத்து ஜாதியினரும் சமஸ்கிருதம் கற்று பிராமண நிலை அடைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சமஸ்கிரதம் கற்பது நல்லதே. அதே நேரம் ஒருவன் இந்துவாக இருப்பதற்கோ, பிராமணன் என்று கருதப் படும் படியான வாழ்க்கை வாழ்வதற்கோ சமஸ்கிரதம் தெரிந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. பிராமணன் என்னும் வாழ்க்கை முறையை யார் வேண்டுமானாலும் வாழலாம், அது பற்றி ஏற்கனவே கட்டுரை வெளி இட்டு இருக்கிறோம், தொடர்ந்து இன்னும் பல கட்டுரைகள் வெளி வரும்.

// அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததும் ஒரு ஆக்க பூர்வமான செயலே. பெரியார் இந்து மதத்தை விமரிசித்து வந்தாலும், அவருடைய கேள்விகளும், விமரிசனங்களும் ஒரு இந்து மத மாணவனுக்கு, இந்து மதத்தின் உண்மையான கருத்துக்களை மூடி மறைத்து வந்த கருத்துக்களை விலக்கி, உண்மையான இந்து மதத்தை , பகுத்தறிவு ஆராச்சி அடிப்படையிலான இந்து மதத்தை அறிய உதவியாகவே இருக்கும்.//

வழி மொழிகிறேன்.

அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு போகும் பார்பன அர்ச்சகர்களை கண்டித்து ஒரு கட்டுரை போடுங்களேன் …

என்ன செய்வது, நான் என்ன கட்டுரை போட்டாலும் உங்களுக்கு திருப்தியாகாது போல இருக்கிறதே! நீங்கள் வக்காலத்து வாங்கும் மத வெறியையும், வெளிப் படுத்தும் சாதித் துவேசத்தையும் ஒத்துக் கொண்டு அதை ஆதரித்து கட்டுரை போட்டால் தான் உங்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் போல இருக்கிறதே!

மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, அர்ச்சகர் பயிற்சி
மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 240 மாணவர்களும் கோயில்களில் அச்சர்களாக
நியமிக்கக் கூடாது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பிற சாதியினர் இதை சரியாக
செய்யமாட்டார்கள் என, மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளனர்.

உச்சநீதிமன்றமும் பிற சாதியினர் அர்ச்சகராகும் சட்டத்திற்கு இடைக்காலத் தடை
விதித்துள்ளது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் வாதத்திற்கு வராமல்
தள்ளிப்போடப்பட்டு வருவதால், பயிற்சி முடித்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி
வந்தனர்.

தொடர்ந்து இன்று திருவண்ணாமலையில் வீதி தோறும் நடந்து சென்று, தங்களுக்கு
ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றி துண்டு பிரசுரகங்கள் மூலம் மக்களிடம் தங்களது
குறைகளை கூறி வருகின்றனர் என்றார்.

மேலும், மதுரையில் நுழைவுப் நுழையப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மதுரை
மீனாட்சி அம்மனுக்கும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நாங்கள் பூஜைகள்
செய்யப்போகிறோம். இதற்கு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

என்ன பிரச்னை ஓடிகிட்டு இருக்கு… பார்பன அர்ச்சகர்களை எதிர்த்தே இந்த மாணவர்கள் போராடுகின்றனர். ஆனால் திருச்சியார் சம்பந்தமே இல்லாமல் இப்படி மூடி மறைகிறார். உண்மையை எழுதினால் சாதி துவேசம் என்று கதை அளப்பது…
// அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததும் ஒரு ஆக்க பூர்வமான செயலே. பெரியார் இந்து மதத்தை விமரிசித்து வந்தாலும், அவருடைய கேள்விகளும், விமரிசனங்களும் ஒரு இந்து மத மாணவனுக்கு, இந்து மதத்தின் உண்மையான கருத்துக்களை மூடி மறைத்து வந்த கருத்துக்களை விலக்கி, உண்மையான இந்து மதத்தை , பகுத்தறிவு ஆராச்சி அடிப்படையிலான இந்து மதத்தை அறிய உதவியாகவே இருக்கும்.//

கதை அளப்பது யார் என்பது படிப்பவர்களுக்கு தெரியும். சாதி வெறுப்புணர்ச்சி துவேசக் கருத்துக்களை சொல்வது யார், யார் சமத்துவ சமரசக் கருத்துக்கள் உள்ளவர்கள என்பது படிப்பவர்களுக்கு தெரியும்.

//தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 240 மாணவர்களும் கோயில்களில் அச்சர்களாக
நியமிக்கக் கூடாது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பிற சாதியினர் இதை சரியாக
செய்யமாட்டார்கள் என, மதுரை பாட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளனர்.//
இது நானாக இட்டு கட்டி எழுதவில்லை. பார்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. சாதி வெறியற்ற திருச்சியார் என்ன சொல்கிறார் இதற்க்கு.

புதியதாக நியமிக்கப் படும் அர்ச்சகர் பணிக்கு அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பது நமது மனப் பூர்வமான விருப்பம் ஆகும்.

இப்போது பணியில் இருக்கும் அர்ச்சகர்கள ஓய்வு அடையும் வரையில் அவர்கள பணியில் தொடரலாம் என்பதும் எனது கருத்து. அரசுப் பணியில் என்ன ஓய்வு வயதோ, அந்த ஓய்வு வயதில் அர்ச்சகர்களும் ஓய்வு அளிக்கப் பட்டு அவர்களுக்கும் கிராஜுட்டி, பென்சன் முதலான ஓய்வு கால வாழ்வாதாரங்கள் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்பதும் நமது கருத்து.

காலியாக இருக்கும் இடங்கள் எல்லா பிரிவு மாணவர்களாளும் நிரப்பப் பட வேண்டும் என்பதை நம்முடைய விருப்பமாக முன்பே சொல்லி இருக்கிறோம். மதுரை பட்டர்கள் தொடுத்த வழக்கு என்னவென்பது பற்றிய சரியான ஆவணக்க்ள நமக்கு கிடைத்தால் அதைப் பற்றி நாம் ஆராயலாம்.

எப்படி இருப்பினும் காலியாக இருக்கும் அர்ச்சகர் பணி இடங்களுக்கு எல்லாப் பிரிவு மாணவர்களையும் நியமிப்பதை எதிர்ப்பது சரியல்ல என்பதை நம் சொல்ல விரும்புகிறோம்.

புதியதாக வரும் அர்ச்சகர்களுக்கு , சீனியர் அர்ச்சகர்கள் மனப் பூர்வமாக பயிற்சி அளித்தது விட்டு, தங்கள் பணிக் காலம் முடிவு அடைந்த வுடன் ஓய்வு பெறுவதுதான் சிறப்பாக இருக்கும் என்பதே நாம் சொல்ல விரும்புவது.

மற்ற சாதியினரை கேவலபடுத்தும் இந்த பார்பன அர்ச்சகர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்வதை விட்டுவிட்டு அவர்களுக்கு திட்டங்கள் போட்டு ராச மரியாதை செய்ய வேண்டுமா.. நல்லாதான் இருக்கு திருச்சி நீதி.
http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/

நீங்கள் குறிப்பிட்டு உள்ள சுட்டியை முழுமையாகப் படித்து விட்டு , அதன் பேரில் கருத்து சொல்லுவேன்.

மற்ற படி, யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கால வாழ்வாதார ங்கள் வழங்கப் படக் கூடாது என்று சொல்வது மனித நேயத்துக்கு எதிரானது. வயதான காலத்திலே ஒரு வரைக் குடுமபத்துடன் தெருவில் விடுவது சரி அல்ல, என்ற கருத்திலேயே எழுதினேன். நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் வெறுப்பு உணர்ச்சியில் மனித நேயக் கண்ணோட்டத்தை மறந்து விடக் கூடாது.

இந்தக் கட்டுரையைப் படித்தோம், வழக்கின் ஆவணங்கள் தொடர்பான சுட்டி எதுவும் கிடைக்கவில்லை. இருந்தால் அனுப்பவும்.

பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள
ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே

தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே
மாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.

குருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.
இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட
மலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/

Please follow

(First 2 mins audio may not be clear… sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

Online Books
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: