Thiruchchikkaaran's Blog

சகிப்புத்தன்மை இல்லாமல் மத வெறியைக் கக்கும் சகோதரர்களே , தீவிரவாத மத வெறிப் போக்கை கை விட்டு மனம் திரும்புங்கள்!

Posted on: September 14, 2010


யார்  வேண்டுமானாலும் அவரவர் மனதிற்குப் பிடித்த வகையில் அவரவர்கள் கடவுளாக கருதுபவரை அமைதியாக வழிபடுவதே சரியானது என்பதை நாம் பலமுறை எழுதி இருக்கிறோம். காரணமே இல்லாமல் பிற மதத்தவரின் கடவுள்களையோ, வழிபாட்டு முறைகளையோ இகழ்வது சமூக அமைதியைக் குலைத்து   மோதலை உணடாக்குகிறது. மத நல்லிணக்க அடிப்படையிலே நாம் இராமர், புத்தர்,  இயேசு கிறிஸ்து, அல்லாஹ் அனைவரையும் வழி படத் தயார் எனவும், உலகில் பலரும் நல்லிணக்கப் பாதைக்கு வந்தால் உலகின் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பதையும் நாம் குறிப்பீட்டு இருக்கிறோம்.

அதே நேரம் எல்லோரும் எல்லாக் கடவுளையும் கும்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தி மத நல்லிணக்கத்தை நாம் திணிக்கவில்லை. மனிதத்தின் நலம் கருதிய பகுத்தறிவின் அடிப்படையிலே, அன்பின் அடிப்படையிலே அவரவர்கள் மனப் பூர்வமாக நல்லிணக்கப் பாதைக்கு வந்தால் போதுமானது , அது வரையில் மத வெறியைக் கை விட்டு  பிற மதங்களின்  வழி பாட்டு முறைகளை, தெய்வங்களை இகழாமல் இருக்க வேண்டும் என்கிற வேண்டு கோளை வைக்கிறோம்.

இப்படிப்பட்ட நேரத்திலே அமைதியாக இருக்கும் இந்திய சமுதாயத்திலே மத வெறியை பரப்பும் வகையிலே, ”விக்கிரக ஆராதனை செய்பவரோடு சேரவும் புசிக்கவும் கூடாது” என சகிப்புத் தன்மை இல்லாமல் மத வெறியைக் கக்கி படி சிலர் எழுதி உள்ளனர்.

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=34&topic=1920&Itemid=287

சிலை வடிவில் கடவுளை வழிபாடு செய்வதால் (விக்கிரக ஆராதனை செய்வதால்) நாட்டுக்கோ சமுதாயத்துக்கோ  மக்களுக்கோ எந்த தீமையும் இல்லை என்பதை நாம் பல முறை தெளிவாக விளக்கி இருக்கிறோம். 

விக்கிரக ஆராதனை செய்யும் பெருமபான்மையான  நண்பர்கள் பிற மார்க்கத்தினரின் கடவுளகளை இகழ்வது இல்லை.

ஆனாலும் விக்கிரக ஆராதனை செய்யும்  அப்பாவிகளின் மேல் மத வெறி விடத்தைக் கக்குகின்றனர் சிலர்.  அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

கொரிந்தியர் 5:10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.

I கொரிந்தியர் 5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

கொரிந்தியர் என்பவர் எழுதியதாக சொல்லப் படும் ஒரு கருத்தை காட்டி விக்கிரக ஆராதனை செய்பவரோடு கலந்திருக்கக் கூடாது என்கிற சகிப்புத் தன்மையை கைவிட்டு,  சமூகத்தில் பிரிவினை உருவாக்கும் வகையில் மத வெறிப் பிரச்சாரத்தை செய்வது சரியா தோழர்களே?

 ரமதானுக்கு வாழ்த்து தெரிவிக்க  ஆரம்பித்து பிறகு  விநாயகர் மேல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டி கடைசியில் பெரும்பானமியான இந்தியர்கள் மேல் மத வெறி தீவிரவாதத்தை பேனா மூலம் காட்டி உள்ளனர்.

சகிப்புத்தன்மை இல்லாமல் மத  வெறியைக்  கக்கும்   சகோதரர்களே,  தீவிரவாத மத வெறிப் போக்கை கை விட்டு  மனம் திரும்புங்கள்!

இதிலே நம்முடைய அன்புக்குரிய சகோதரர் சில்சாமும் பங்கு பெற்று இருக்கிறார். ஆனால் ஆரம்பத்திலே  ரமதானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவிக்கலாமா என்று ஆரம்பித்து இருக்கிறார். ஆனால்  அதற்குப் பிறகு வந்த சில பின்னூட்டங்கள் அவரது சிந்தனையின் போக்கை மாற்றி விட்டது போல உள்ளது. திரு. சில்சாம் தொடர்ந்து மத நல்லிணக்கப் பாதைக்கு வர வாழ்த்துகிறோம்.

Advertisements

69 Responses to "சகிப்புத்தன்மை இல்லாமல் மத வெறியைக் கக்கும் சகோதரர்களே , தீவிரவாத மத வெறிப் போக்கை கை விட்டு மனம் திரும்புங்கள்!"

திருச்சிக்காரன் ஐயா,

அப்படியே மதவெறிக் கருத்துகளை பரப்பும் தேவப்ரியாஜிக்கும் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள்.

ம‌த‌ வெறிக் க‌ருத்துக்க‌ளை யார் ப‌ர‌ப்பினாலும் அவ‌ர்க‌ள் பெரும்பான்மையான‌ இந்திய‌ ம‌க்க‌ளால் புறக்க‌ணிக்க‌ப் ப‌டுவார்க‌ள்.

அவங்க புறக்கணிக்கிறது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீங்க, அத சொல்லுங்க.

தேவப்ரியாஜி மத வெறிக் கருத்துக்களை சொல்லி இருப்பதாக நீங்கள் கருதினால் அவர் எந்த இடத்தில் அவ்வாறு சொன்னார் என்று குறிப்பீட்டு சொன்னால் அப்போது நாம் அதைக் கண்டிப்போம்.

நம்முடைய தளத்திலே சில நண்பர்கள் எழுதிய கருத்துக்கள அவை மத வெறியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை மட்டுறுத்தி இருக்கிறோம். பைபிள் உட்பட எந்த ஒரு நூலையும் முற்றாக புறக்கணித்து விடாமல் அவற்றில் நல்ல கருத்துக்கள உள்ளனவா என்று தேடுவதே ஆக்க பூர்வமான அணுகுமுறை , தேவப்ப்ரியாஜி அப்படி செய்வது போல எனக்கு தோன்றவில்லை.

அதே நேரம் திரு. தேவப்ரியாஜி என்னை விட பைபிளில் அதிக புலமை பெற்று இருக்கிறார் என்றே கருதுகிறேன்.அவர் அதிக விவரம் அறிந்து இருக்கிறார், பல ஆராய்ச்சிகள செய்து இருக்கிறார். எனவே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். பிறகு அவற்றின் மீதான நமது கருத்தை வெளிப் படுத்துவோம்.

யார் வேண்டுமானாலும் அவரவர் மனதிற்குப் பிடித்த வகையில் அவரவர்கள் கடவுளாக கருதுபவரை அமைதியாக வழிபடுவதே சரியானது என்பதை நாம் பலமுறை எழுதி இருக்கிறோம்./////

ம‌த‌ வெறிக் க‌ருத்துக்க‌ளை யார் ப‌ர‌ப்பினாலும் அவ‌ர்க‌ள் பெரும்பான்மையான‌ இந்திய‌ ம‌க்க‌ளால் புறக்க‌ணிக்க‌ப் ப‌டுவார்க‌ள்////

மதம் குறித்த உங்கள் சிந்தனை வெகுளியானது. நீங்கள் குறிப்பிட்ட தளத்தின் சிந்தனையோ கொடூரமானது. மதங்களின் சுயரூபங்களை உணருங்கள்.

நண்பர் ஓசை அவர்களே,

சொல்ல வரும் கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

//கொரிந்தியர் என்பவர் எழுதியதாக சொல்லப் படும் ஒரு கருத்தை காட்டி விக்கிரக ஆராதனை செய்பவரோடு கலந்திருக்கக் கூடாது என்கிற சகிப்புத் தன்மையை கைவிட்டு, சமூகத்தில் பிரிவினை உருவாக்கும் வகையில் மத வெறிப் பிரச்சாரத்தை செய்வது சரியா தோழர்களே?
//
கொரிந்தியர் என்பவர் எழுதியது இல்லை இது, அபோஸ்தலர் பவுல் எழுதியது. மேலும் 1கொரிந்தியர் 5 :10 இல் அவர் கூறியதையும் பாரும். அதில், உங்களை வெறுத்து ஒதுக்க சொல்லவில்லை. கூடி குலாவ வேண்டாம் என்றே எச்சரிக்கிறது. எங்கள் வேத வார்த்தைகளை நாங்கள் கடைபிடிக்க கூடாதா? உங்களுடன் கூடி குலாவியே தீரவேண்டுமா?
Ashok

இந்தியாவில் இருக்கும் விக்கிரக ஆராதனை செய்யும் நூறு கோடி இந்தியர்களுடன் சேர்ந்து குலாவி வாழ நீங்கள் விரும்பாத படிக்கு கொரிந்தியரோ அல்லது பவுலோ தங்களின் மத சகிப்புத் தன்மை இல்லாத கருத்தை உங்களின் எண்ணத்தில் திணித்து விட்டனர்.

பிற மதத்தினர் மீது காரணம் இல்லாமல் விலகி செல்வது , சமூகத்தில் பிரிவினையை உண்டு பண்ணுவதாக , மக்களை வேறு படுத்துவதாக உள்ள‌து. அது ச‌மூக‌த்தின் சுமூக‌ நிலையைக் குலைத்து, வெறுப்பை உருவாக்கி ச‌மூக‌ மோத‌லை உருவாக்குகிற‌து.

உலகில் உள்ள எல்லா மக்களும், இந்துக்கள் , முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள, யூதர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன நல்லிணக்கமாக வாழும் நிலையை உருவாக்க முயலுவோம். யாது வூரே யாவரும் கேளீர். எல்லா மத விழாக்களிலும் மகிழ்ச்சியுடன் பங்கெடுப்போம். சிநேகம் நிலவட்டும். வெறுப்பு மறையட்டும். மத வெறி மறையட்டும். மத நல்லிணக்கம் செழிக்கட்டும்.

மதசகிப்புதன்மை எங்கு குறைந்து போயிற்று? சகித்துக்கொண்டுதானே இருக்கிறோம். உம்முடன் எல்லாவற்றிலும் நான் ஒத்துபோகத்தான் வேண்டுமா? நீர் வழிபடுவதை நானும் வழிபடவேண்டுமா? நீர் ஏற்றுக்கொண்டதை நான் நிராகரிக்கவேகூடாதா? நான் விரும்பும் உணவை வெறுக்கும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். இன்னும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். கருத்துவேருபாடுகளுக்கும் வெறுப்புக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. அன்புடன் மக்களுக்குடன் பழகும் கிருஸ்துவர்களை, வெறுப்பாளர்களாக நீர் பிரச்சாரம் செய்ய ஆசை படுகிறீர். அது நன்றாக தெரிகிறது.

இந்துக்கள்( பார்பனர்கள் தவிர்த்து) ,கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் நட்புடனும் சகிப்பு தன்மையுடனும் தான் வாழ்கின்றனர்.பார்பனர்கள் தான் மற்ற இந்துக்களையே தாழ்வாக நினைகின்றனர்.அவர்கள் தான் தங்கள் சகிப்புத்தன்மையற்ற குணத்தை மற்றவர்கள் மீது திணித்து ஏதோ எல்லா மதத்தவரும் சண்டையிடுவது போல தோற்றத்தை வெறுப்பை வளர்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது. இந்தியா ஒரு சமத்துவ சமுதாயமாக விளங்கும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்துக்கள, முஸ்லீம்கள, கிரிஸ்தவர்கள, பவுத்தர்கள் எல்லோரும் உலகம் முழுவதும் நல்லிணக்கத்துடன் வாழ் வேண்டும் என்பதே நம்முடைய குறிக்கோள்.

இந்த நேரத்திலே விக்கிரக ஆராதனை செய்பவருடன் கலக்கவோ, உணவு அருந்தவோ கூடாது என மத வெறி நஞ்சை சிலர் கக்கும் போது அதற்க்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது உங்களுக்கு அப்படிப்பட்ட மத வெறியின் மீது உள்ள பாசப் பிணைப்பையே காட்டுகிறது.

அதை மறைக்க சாதி வெறியை உபயோகிக்கிறீர்கள்.

நீங்கள் போன மாதம் சென்னையிக்கு வந்து இருந்தால் உங்களுக்குப் புரிந்து இருக்கும், சென்னை முழுவதும் கருமாரி அம்மனின் விக்கிரக ஆராதனை எவ்வளவு சிறப்பாக நடை பெற்றது என்றும், அதிலே பார்ப்பனர் அல்லாதவர்களின் பங்கெடுப்பையும் நீங்கள் அறிந்து இருக்க முடியும்.

உண்மையில் இன்றைய கால கட்டத்திலே பார்பனர்கள் என சொல்லப் படுபவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பாதையும் , பார்ப்பனர் அல்லாதவர் என்று சொல்லப் படுபவர்கள் ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதையும் எல்லோரும் அறிவர்.

நூறு கோடிக்கும் மேலான அப்பாவி இந்தியர்களின் விக்கிரக ஆராதனையை தேவையே இல்லாமல் கண்டித்து, , வெறுத்து கலக்கக் கூடாது என எழுதும் மத வெறிக்கு வக்காலத்து வாங்கும் மத வெறியையும் மீறி இந்தியா அமைதிப் பூங்கவாகவே இருக்கும். இந்தியா ஒரு பொது பால்ச்தீன்மாகவோ, குருசெடு போர்கள நடக்கும் காலமாகவோ ஆகி விடக் கூடாது என்பதே நமது அக்கறை.

சிலை வழிப்பாட்டை அந்த கட்டுரை இழிவு படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே. ஆனால் பொதுவாக மக்கள் ஒருவருடன் ஒருவர் பினைப்புடனே ஒன்றுபட்டே வாழ்கின்றனர். பார்பன சாதி மட்டுமே சமுதாயத்தில் எல்லோரையும் ஏற்றுகொள்ள மறுத்து தனித்து வாழ்கிறது. மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டுகிறது. மக்களிடம் வன்முறையை தூண்டிவிட குண்டுகள் வைக்கின்றனர்.மலேக்கான், அஜ்மீர், முதலிய இடங்களில் குண்டு வைத்ததற்கான ஆதாரம் அம்பலமானது. அதை பற்றி இன்னும் ஒரு பார்பன இணையமும் வாய்திறக்கவில்லை. இதுவே ஒரு முஸ்லிம் செய்திருந்தால் ….எல்லா முஸ்லிமும் தீவிராதி போல் ஒரு மாயையை ஏற்படுத்துவார்கள். தமில்ஹிண்டு.காம் மில் பாபர் மசூதி இடிப்பை பாபர் நினைவு சின்னம் நீக்கிய நிகழ்வாக சொல்கிறார்கள். தொடர்ந்து அதில் பங்கு பெரும் சமத்துவத்தை விரும்பும் திருச்சியார் வாய் திறந்ததாக தெரியவில்லை.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/05/tale-of-two-kings-babri-masjid/

பாப்ரி மசூதி பற்றி நாம் முன்பே கட்டுரை வெளி இட்டு நம்முடைய நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இருக்கிறோம். இசுலாமியர் உட்பட அனைத்து மார்க்கதினரையும் நல்லிணக்கத்தில் சமத்துவ சமரசத்தில் இணையவே முயலுகிறோம். ரமதான் நோன்பு நோற்கிறோம்.

இசுலாமியரை எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது யார்? எல்லா இசுலாமியரையும் உடைகளை கழட்டி சோதனை செய்து அவமானப் படுத்துவது யார்? உங்கள் பின்னூட்டங்களில் மத வெறிக்கு வக்காலத்து மறை முகமாகவும், சாதிக் காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாகவும் தெரிகிறது. சமத்துவ , சமரச, நாகரிக மனப் பக்குவத்துக்கு விரைவில் வருவீர்கள் என நம்புகிறோம்.

திருசியாரே நீங்கள் பார்பனரா..? ஏன் கேட்கிறேன் என்றால் அவர்கள் தான் தங்கள் பிரச்சனையை உலக பிரச்சனையாக காட்டுவார்கள்.மற்ற இந்துக்களை இழிவுபடுத்தும் பார்பன வெறியை எதிர்த்து ஒரு கட்டுரை கூட வரவில்லையே.. அதான்..! மத கொள்கைகள் வேறு நட்புடன் சமரசத்துடன் பழகுவது வேறு. இந்தியர்கள் அப்படிதான் வாழ்கின்றனர்.

நான் ஒரு மனிதன் . சாதி பிரிவினைகளை விட்டு இந்தியர்கள் இணைய வேண்டிய நேரத்திலே நீங்கள் மீண்டும், மீண்டும் உங்களை அறிந்தோ அறியாமலோ சாதி யை நிலை நிறுத்தும் படியாக எழுதி வருகிறீர்கள்.

இது சின்னப் பிரச்சினையா. எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போதே பெரும்பான்மயான மக்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் அவர்களோடு கலக்காதே என்கிறார்கள. இன்னும் பெரும்பான்மையான மக்களாக இருந்தால் இது சட்டமாகவே ஆகி இருக்குமே.

மத சகிப்புத் தன்மை இல்லாத கருத்துக்கள் ஆபத்தானவை. மத வெறிக்கு உங்களின் மனதில் உள்ள பாசப் பிணைப்பையே இது காட்டுகிறது. உலகத்தை உலுக்கிய மத வெறி இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று சொல்லுகிறோம்.

பார்ப்பன சமூகம் என்று சொல்லப் படும் சமூகத்தை சேர்ந்த காஞ்சி தேவநாதனின் அசிங்க செயலை கண்டித்து கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

பார்பன சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் விரோத தன்மைக்கு காஞ்சி தேவனாதனை பற்றி கட்டுரை வெளியிட்டால் போதும். ஆனால் ஒரு கிருத்துவ இணையத்தில் பரப்பிய வெறியிற்கு ஒட்டுமொத்தமாக குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம். தினம் தினம் வெறியூட்டும் கருத்துக்களை ,மற்ற மதங்களை இழிவு படுத்தும் கருத்துக்களை கக்கும் http://www.tamilhindu.com பற்றிய ஒரு கட்டுரை கூட வரவில்லையே…

(குறிப்பு: சாதியை சொல்வது ஒன்றும் தவறில்லையே ..அதை வைத்து அடித்துகொள்வது தான் தவறு )

உங்களைப் பொறுத்த வரையில் சாதி தவறில்லை, சாதிக் காழ்ப்புணர்ச்சி தவறில்லை, மத வெறி தவறில்லை… …. ஆனால் நாம் இந்த கொள்கையை கடைபிடிக்க இயலாது. நம்முடைய கொள்கையானது சமரச சமத்துவ, நல்லிணக்க , நாகரீக சமுதாயமே. தமிழ் இந்து தளத்தில் வெளியிடப்படும் பல்வேறு கட்டுரைகளுக்கும் ஆன நம்முடைய கருத்துகளை, விமர்சங்களை அந்த தளத்திலேயே பதிவு செய்து வருகிறோம்.

ஒட்டுமொத்தமாக எல்லோரையும் குறை சொல்லவில்லை என்பதை பலமுறை எழுதி இருக்கிறோம்.

பார்ப்பன சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப் படுபவர் யாரும், பிறருடன் சேர்ந்து உண்ணக் கூடாது, கலக்கக் கூடாது என்று செயல படுவதாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ எனக்குத் தெரிந்த வரையில் இல்லை. நீங்கள் அறிந்த வகையில் யாராவது அப்படி செய்தால் , ஆதாரத்துடன் தெரியப் படுத்தினால் நிச்சயம் கண்டிப்போம்.

//மதசகிப்புதன்மை எங்கு குறைந்து போயிற்று? சகித்துக்கொண்டுதானே இருக்கிறோம். உம்முடன் எல்லாவற்றிலும் நான் ஒத்துபோகத்தான் வேண்டுமா? நீர் வழிபடுவதை நானும் வழிபடவேண்டுமா?//

அப்படியா சொல்லியிருக்கிறார். ஏன் உங்களுக்கு விளங்கவில்லை? சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்லும்போதே, எங்களின் வழி உங்களுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் யாரும் உங்களின் வழியில் குறுக்கிடுவது இல்லை. ஆனால், நீங்கள் தான் தேவையில்லாமல் எங்கள் கடவுளை விமர்சிப்பது, கேவலப்படுத்துவது என்று ந்டந்து கொள்கிறீர்கள். இல்லை என்று மறுக்க முடியுமா?

//அன்புடன் மக்களுக்குடன் பழகும் கிருஸ்துவர்களை, வெறுப்பாளர்களாக நீர் பிரச்சாரம் செய்ய ஆசை படுகிறீர்.//

அன்புடனா, இல்லை நோக்கத்துடனா? ஆங்காங்கே நடைபெறும் சுவிஷேக்கூட்டத்தில் ‘சாத்தனிடமிருந்து விலகியிருங்கள்’ என்று கூறுகின்றனரே…இங்கே ‘சாத்தான்’ என்று யாரை குறிப்பிடுகின்றனர் என்று விளாக்குவீர்களா?

//சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்லும்போதே, எங்களின் வழி உங்களுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.//
உமக்கு சகிப்புத்தன்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை போல் இருக்கிறது. தமக்கு பிடிக்காத விருப்பமில்லாத விஷயங்களை, அடுத்தவர் நலன் கருது போருத்துக்கொள்வதுதான்.

// நீங்கள் தான் தேவையில்லாமல் எங்கள் கடவுளை விமர்சிப்பது, கேவலப்படுத்துவது என்று ந்டந்து கொள்கிறீர்கள். இல்லை என்று மறுக்க முடியுமா?//
உங்கள் கடவுள்களை நாங்கள் கேவலப்படுத்தவில்லை. உங்கள் புராணங்கள் சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். அடுத்தவன் மனைவியை, அவன் இல்லாதபோது மாறுவேடத்தில் சென்று கற்பழிப்பது கேவலமான செயல்தானே.

//ஆங்காங்கே நடைபெறும் சுவிஷேக்கூட்டத்தில் ‘சாத்தனிடமிருந்து விலகியிருங்கள்’ என்று கூறுகின்றனரே…//
நான் மேல குறிப்பிட்டுள்ள வேஷதாரிகளைதான்.

//உமக்கு சகிப்புத்தன்மை என்றால் என்னவென்றே தெரியவில்லை போல் இருக்கிறது.//

ஆமாம்…உமக்குத்தான் நல்லா தெரியும் போல.

//பிடிக்காத விருப்பமில்லாத விஷயங்களை, அடுத்தவர் நலன் கருது போருத்துக்கொள்வதுதான்//

அதான், நான் சொன்னதுக்கு ஒத்துக் கொண்டீற்களே!!! 🙂

//அடுத்தவன் மனைவியை, அவன் இல்லாதபோது மாறுவேடத்தில் சென்று கற்பழிப்பது கேவலமான செயல்தானே.//

கண்டிப்பாக. அதற்காக அவனை மன்னித்தோமா? சிறார்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய பாதிரியை பற்றின உண்மையை வெளியே தெரியாமல் அமுக்கிய போப் பெனடிக்ட், அவனுக்கு தண்டனையாக வெறும் ‘transfer order’ கொடுத்து, அவன் அதன் பின் தான் இறக்கும் வரையில் சுமார் 200 சிறார்களை மீண்டும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினானே, அதை போலவா?

இல்லை, தன்னிடம் பாவமன்னிப்பு கேட்ட 13 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து, ஊட்டிக்கு ‘தப்பி’ வந்து, இன்னும் சுகமாக வாழவைத்தோமா?

//நான் மேல குறிப்பிட்டுள்ள வேஷதாரிகளைதான்.//

அப்போ அந்த வேடதாரிகளை தவிர்த்து மற்றவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா? கொஞ்சம் லாஜிக்காக பேசுங்கள்.

முதலில் போப்புக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உமக்கும் கிருச்துவத்துக்கும் என்ன சம்பந்தமோ அதே அளவுதான் போப்புக்கும் கிருச்துவத்துக்கும். போப் கிருஸ்துவத்தின் பிரதிநிதியல்ல.

//அதான், நான் சொன்னதுக்கு ஒத்துக் கொண்டீற்களே!!! //
உண்மைதான். விக்ரக ஆராதனை எனக்கு பிடிக்காதுதான். இருப்பினும் சகித்து கொள்கிறேன். எந்த கோவிலுக்கும் சென்று உங்கள் ஆராதனையை தடுக்கவில்லை. அதனால் மதசகிப்புத்தன்மை இல்லை என்ற உமது குற்ற்றச்சாட்டு பொய்.

உங்கள் கூற்றுப்படி, போப்பாவது தவறு செய்த கத்தோலிக்க பாதிரிக்கு transfer கொடுத்தார். ஆனால், நீங்கள் அடுத்தவன் பொண்டாட்டியை கற்பழித்தவனை கோவிலில் வைத்து தெய்வம் என்று கொண்டாடுகிறீர்கள்.

//அப்போ அந்த வேடதாரிகளை தவிர்த்து மற்றவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா? கொஞ்சம் லாஜிக்காக பேசுங்கள்.
//
நீங்கள் வழிபடுபவர்களில் புனிதமானவராக யாராவது ஒருவரை சொல்லுங்களேன்.

இந்துக்கள் வழிபாடும் தெய்வங்களுக்கு எண்ணப் புனித க் குறைவு வந்து விட்டது? கருமாரி அம்மன், சரஸ்வதி, லக்ஷ்மி, ஹனுமார், இராமர், சீதை, இலக்குவன், சிவன், முருகன், விநாயகர்…. உள்ளிட்டோருக்கு என்ன புனிதக் குறைவு?

First tell me, how are they qualified to be worshipped. Then I will tell you, why they cannot be.

நன்றி அசோக் அவர்களே, தனிக் கட்டுரைகளாக வெளியிடுவோம்.

//First tell me, how are they qualified to be worshipped. Then I will tell you, why they cannot be.//

நீங்க யாருங்க Qualification எல்லாம் கொடுக்கிறது? இயேசுவை வணங்குவதற்கு என்ன Qualification நீங்க வெச்சிருக்கீங்க?

“தன்னை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருத்தரை வணங்குகிறீர்களே, இது என்ன் Qualification” அப்படீனு கேக்கெ தோனும். ஆனா, கேக்க மாட்டேன்…அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாதே?

//முதலில் போப்புக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. //

தோடா…டிஸ்க்ளெய்மரு…சரி! போப் கத்தோலிக்க மதத்தலைவர். அப்போ வேற பிரிவினர் உள்ள ஃபாதர்கள் எத்தனை பேர் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆக்கியிருக்கிறார்கள் என்று தெரியாதா? என் கூட வாங்க. எங்க ஊருல இருக்கிற பாதிரிமாருங்க என்னவெல்லாம் செஞ்சாங்கனு சொல்றேன். நான் சொல்றத நம்பலைன்னா, சர்சுல இருக்குற உங்க (சர்ச்சில் இருக்கும்) Brothers/Sisters சொன்னா நம்புவீங்களா? போங்க பாஸு…

//உங்கள் கூற்றுப்படி, போப்பாவது தவறு செய்த கத்தோலிக்க பாதிரிக்கு transfer கொடுத்தார்.//

இதோடா…200 குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தவனுக்கு transfer பெரிய்ய்ய்ய்ய தண்டனை. நல்லது.

//ஆனால், நீங்கள் அடுத்தவன் பொண்டாட்டியை கற்பழித்தவனை கோவிலில் வைத்து தெய்வம் என்று கொண்டாடுகிறீர்கள்.//

!!!???

ஒத்துப் போக வேண்டும் என்று சொல்லவில்லை. மத அடிப்படையில் பிற மதங்களை எல்லாம் கட்டம் கட்டி அவற்றை ஒதுக்கும் படி, பிற மதங்களை பின்பர்ருபவர்களைடம் விலகி செல்லும் படி பிரச்சாரம் செய்வது சமூகத்திலே வெறுப்பை, பிளவை, மோதலை உருவாக்கும் என்பதை பல முறை எழுதி விட்டோம்.

எல்லாக் கிறிஸ்துவர்களும் வெறுப்புக் கருத்துக்கள், பிரிவினைக் கருத்துக்கள் உள்ளவர்கள, சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்று நான் சொல்லவில்லையே. இவ்வளவு அப்பட்டமாக பிற மதத்தினரை கலக்காமல் விலக்கி வைக்குமாறு பிரச்சாரம் செய்யப் படுவதை சுட்டிக் காட்டுகிறோம். இந்தியாவில் நூறு கோடி விக்கிரக ஆதாரனையாளர்கள் இருக்கும் போதே இவ்வளவு மத வெறியைக் கொட்டுகின்றனர்.

இயேசு கிறிஸ்து ஒரு போதும் இப்படிப் பட்ட விலக்கி, கலந்து கொள்ளாமல் ஒன்றாக உணவு அருந்தாமல் இருக்கும் படியான கருத்துக்களை சொன்னது இல்லை. கிறிஸ்தவர்களை வெறுப்புக் கருத்துக்களின் பிடியில் இருந்து விடுவித்து உண்மையான இயேசு கிறிஸ்துவின் கொளகைகளை அவர்களுக்கு விளக்கி சமரச சமத்துவ உலக சமுதாயம் அமைப்போம்.

அன்புடன் மக்களுடன் பழகும் கிறிஸ்துவர்களை நாங்கள் வரவேற்கிறோம். பிற மதத்தினரோடு கலக்காமல் உணவு அருந்தாமல் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சகிப்புத் தன்மை இல்லாத கிரிஸ்துவர்களைக் கூட நாம் வெறுக்கவில்லை. அவர்களை இயேசு கிறிஸ்துவின் சமரச பாதைக்கு கொண்டு வருவதே என் ஆசை விருப்பம் எல்லாம்.

//இவ்வளவு அப்பட்டமாக பிற மதத்தினரை கலக்காமல் விலக்கி வைக்குமாறு பிரச்சாரம் செய்யப் படுவதை சுட்டிக் காட்டுகிறோம்.//
I have pointed out the below verse. The verse says to mingle with and not shun away from anyone. But, we dont want to be confirmed with those people.
//கொரிந்தியர் 5:10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.//
The way of Jesus is Love and Truth, but not COMPROMISING.

I கொரிந்தியர் 5:10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.

//I கொரிந்தியர் 5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.//

திரு பவுலாரின் மத சகிப்பின்மைக் கருத்துக்களை, இயேசு கிறிஸ்துவின் பெயரால் எங்கள் தலையில் கட்டி, இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக செயல் பட வேண்டாம்.

இயேசு கிறிஸ்துவின் கற்பிதமான ஒவ்வொரு மனிதனையும் நேசிக்கும் , ஒரே ஒரு மனிதனைக் கூட கஷ்டத்தில் விடாமல் விடுதலை அடைய வைக்க உறுதியாக இருக்கும் பிதாவின் கற்பிதத்தை, இன அழிப்பு கடவுள் தத்துவத்தோடு இணைய விட்டு புதிய ரசத்தை பழைய துருத்தியில் வைத்து ரசத்தையும் கெடுத்து துருத்தியையும் பீறிட்டுப் போகும்படிக்கு செய்த அடிகளார்களின் செய்கைகளை எல்லாம் மக்கள் முன்பு எடுத்து வைப்போம்.

Thiruchchikkaaran,
Prevention is better than cure. Apostle Paul wrote this, because he was able to see much deeper than you. If we are casual friends (Paul suggests(1Corinthians 5:10) to be just a casual friend with everyone), we might meet sometime and have a coffee together and part away. There will not be any HADRED in this relationship.
If we were close family friends, I will be expected to part take in your poojas and all. Which will create unnecessary problems. I cannot worship your Vishnu or Shiva (your puranas only telling all wrong things about them). And I don’t want to pretend to be worshipping them, because I am not a hypocrite. Apostle Paul is very right in what he has said. And in deeper sense that will bring more peace to the society than what you are saying.
Ashok

//Apostle Paul is very right in what he has said.//- In your perception and plane of thinking.

//And in deeper sense that will bring more peace to the society than what you are saying.//-
Totally intolerant, divisive, separatistic, contempt forother religions…… this will not bring peace, these religios chaunism has been producing conflict and bloodshed as history has been witnessing so far and even today.

<em>// I cannot worship your Vishnu or Shiva (your puranas only telling all wrong things about them). //</em>

ok , you need not worship Vishnu as he has been facing allegations of cheating and molestation , I dont know whether these charges are true, still I give the benefit of doubt to you.

But there is no such allegetions against Siva. More over there are many other Hindu Gods like PARASAKTHI AMMAN, SARASWATHI, LAXMI,HANUMAN, RAMAR, GANESAN, MURUGAN…. etc. You need not even worship them, but atlease show tolerance towards their worship. But it seems that you are trying to find some excuse to cover up the intolerance for other religions.

//But there is no such allegetions against Siva. More over there are many other Hindu Gods like PARASAKTHI AMMAN, SARASWATHI, LAXMI,HANUMAN, RAMAR, GANESAN, MURUGAN…. etc. //
Ohhh really?? Can you please tell about the birth story of your Ayyappa. That will show what Siva is.
And all Hindu Gods that you are claiming are really gods? My your puranas are showing them in a different light.

PARASAKTHI AMMAN, SARASWATHI, LAXMI,HANUMAN, RAMAR, GANESAN, MURUGAN…. etc மீது புனிதக் குறைவு இல்லை என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு பண்பட்ட , நாகரிக , நல்லிணக்க மன நிலையிலே நீங்கள் இருப்பதிப் பாராட்டுகிறேன். /

/And all Hindu Gods that you are claiming are really gods? My your puranas are showing them in a different light.//

இந்துக் கடவுள்கள் உட்பட எந்தக் கடவுளையும் நான் பார்த்தது இல்லை. பார்க்காத ஒன்றுக்கு நான் சாட்சி அளிப்பது இல்லை.

// Can you please tell about the birth story of your Ayyappa. That will show what Siva is. //

சிவனின் சக்தியும் , விஷ்ணுவின் சக்தியும் இணைந்து ஐயப்பன் உருவானதாக சொல்கிறார்கள்.

சிலர் ஐயப்பனை உருவாக்கும் பொருட்டு விஷ்ணு மோகினியாக மாறியதாகவும் , ஐயப்பனை உருவாக்கும் பொருட்டு சிவன் அந்த மோகினியுடன் உறவு கொண்டதாகவும் சொல்கிறார்கள. அவர்கள சொல்வது போல சிவன் அந்த மோகினியுடன் உறவு கொண்டு இருந்திருந்தாலும், அது கடமைக்காக செய்யப்பட்ட ஒரு செயலே. சிவன் மோகினியைக் கர்ப்பளிக்கவில்லை. காமத்துக்காக அல்லாமல் கடமைக்காக செய்த ஒரு செயலினால் எந்த புனிதக் குறைவும் இல்லை எனவே கருதலாம்.

நண்பர் அசோக் அவர்களுக்கு, இங்கே நமது நேரத்தை செலவிடுவதனால் எந்த பயனும் இருக்கும் போலத் தெரியவில்லை; எனவே வேறு ஏதாவது உபயோகமான வேலையைப் பாருங்கள்; ஒரு இரகசியம் தெரியுமா, நம்மூலம் பிரபலமான அண்ணன் திருச்சிக்காரர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் “சமரச சன்மார்க்க மதநல்லிணக்க சமய சார்பற்ற சகிப்புத்தன்மை” கட்சியின் சார்பில் “வேப்பமரம்” சின்னத்தில் நிற்கப் போகிறாராம்.

நண்பர் திரு . சில்சாம் பூத் மேனேஜராக இருந்தாலும் ஆச்சாரியம் இல்லை.

திருச்சியார்..வாங்க சார் வாங்க எப்படியிருக்கீங்க?

விக்கிரக ஆராதனை தயானந்தரே கண்டித்திருக்கிறார். அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ.

அன்புக்குரிய திரு.பெர்னாண்டோ அவர்களே, உங்கள் வருகைக்கும் விசாரிப்புக்கும் நன்றிகள். விக்ராஹா ஆராதனை செய்பவர்கள் அமைதியாக தங்கள் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் பிற வழிப்பாடு முறைகளை வெறுக்கவோ அல்லது குறை சொல்லவோ இல்லை. அவர்கள் வணங்கும் விக்ரஹங்களும், அவர்கள் மனதில் வெறுப்பு உணர்ச்சி உருவாகும் எந்த ஒரு கோட்பாட்டை போதிக்கவோ தூண்டவோ இல்லை. அப்படி இருக்கும் பொழுது, விக்ராஹா ஆராதனைய கண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? தயானந்த சரஸ்வதி, விக்ராஹா ஆராதனை கண்டித்தாலும் அது எந்தவிதமான காரணத்திலே அடிப்படையிலேயே கண்டித்தார் என்பதை தெளிவாக்கவில்லை. ஆரம்பத்திலே விக்ராஹா ஆராதனையை எள்ளி நகையாடிய, தானும் பின்னாலே உருவ வழிபாட்டின் மூலமாக, மிக உயர்ந்த ஆண்மீக நிலை அடைந்த ஒருவரின்(ராமகிருஷ்ண பரமஹம்ச) காலடியில் அமர்ந்து அவர் மூலமாகவே உயரிய ஆண்மீக நிலையை அடைந்ததாக சுவாமி விவேகானந்தர் கூறி உள்ளார். நான் அருவ வழிப்பாட்டை கண்டிக்கவில்லை. அருவ வழிப்பாட்டில் ஆர்வமாக இருக்கிறேன். அருவ வழிப்பாட்டில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன். உருவ வழிபாடு மனகுவிப்புக்கு உதவும் வகையில் உள்ளது. உருவத்திலே மனதை குவிப்பது எளிது என்கிற உண்மையை மறுக்க இயலாது. உருவ வழிபாடு பல்லாயிரம் வருண்டங்களாக முக்கிய வழிபாட்டு முறையாக உள்ளது. அதை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

//விக்கிரக ஆராதனை தயானந்தரே கண்டித்திருக்கிறார். அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ.//

தயானந்தர் கண்டித்தாரா தெரியவில்லை. அப்படியே கண்டித்திருந்தாலும், அது எந்த காரணத்தின் அடிப்படையில் என்று தெரியவில்லை.

இருந்தாலும்…கண்டிக்கட்டும். ஆனால், அதற்காக விக்கிரக ஆராதனை செய்பவரை ஒன்றும் வெறுக்கவில்லையே? அவனை சாத்தானாக உருவகம் செய்யவில்லையே. வித்தியாசம் புரிந்திருக்கும்.

//அவனை சாத்தானாக உருவகம் செய்யவில்லையே. வித்தியாசம் புரிந்திருக்கும்.
//
கிருஸ்துவர்கள் விக்ரகங்களை “சாத்தான்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை ஆராதிக்கிரவர்களை அப்படி கூறியதே இல்லை. இப்போது இதில் தெரிகிறது யார் வீண் பழி போடுகிறார்கள் என்று.

//கிருஸ்துவர்கள் விக்ரகங்களை “சாத்தான்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை ஆராதிக்கிரவர்களை அப்படி கூறியதே இல்லை.//

அப்படியா? நல்ல சுத்துராய்ங்கையா பூவ…

பிரதீப்.. பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருட்டு என்று சொல்லுமாம்.

உம்மைப் போன்ற ஆட்கள் தான் மதுரைக்கு அந்தப் பக்கம் உட்கார்ந்து கொண்டு நாட்டமை செய்கிறீர்களே? அங்கே எங்கு பார்ப்பனர்கள் வந்தார்கள்? அப்படியே சகோதரத்துவம் பழகுகிறீர்கள் பாருங்கள். சூப்பர்.

பூனை கண்ணை மூடிகிட்டா இருட்டுன்னு உங்க கிட்ட வந்து சொல்லிச்சா தல …. நாடு முழுக்க குண்டு வைக்கிறது, கோவிலுக்குலேயே விபச்சாரம் செய்வது…நகரதிர்க்குள்ளேயே தீண்டாமையை கடைபிடிப்பது இதை சொன்னால் என்னைத்தான் கேப்பியா அவனும் அப்படிதான் என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிக்கிறீர்களே …

உயர்திரு திருச்சி ஐயா,
அவர்கள் இஷ்டம் விக்ரக வழிபாட்டினருடன் உணவு உண்ணாமல் இருந்துவிட்டு போகட்டும். அவர்களிலேயே வேளங்கன்னியில் அன்னை புனித மரியாளை வணங்குபவர் இருக்கிறார்கள் அவர்களுடனும் இவர்கள் கலந்திருக்க மாட்டார்களா? பெண்டகோஷ்ச்டேல் சபையிலும் சிலர் சிலுவையை (சிலுவை என்ற விக்ரகத்தை) அதன் மேல் பட்டு துணி சாற்றி வணங்குகிறார்கள்.

முழு அருவ வழிபாடு இந்து மதத்திலும் ஒரு அங்கம் அதை பயில்பவர் எவரும் உருவ வழிபாட்டினரை விட்டு விலகி வழ வேண்டும் என்று சட்டம் போட்டதோ, உதாசீனப் படுத்தியதோ வரலாறு இல்லை.

சுட்ட பின் சட்டுவமும்,சட்டியும் வேண்டாம் அனால் சுடும் வரை வேண்டும் என்று உள்ளவரும் மற்றவரை தாழ்வென்று சொன்னதில்லை.

சாகும் வரை உருவ வழிபாட்டிலே மூழ்கியவர்களும் பிறவற்றை தாழ்வென்று கூறவில்லை.

கிறித்தவ இந்து சண்டை,இந்து முஸ்லிம் சண்டை,இந்துக்களுக்குள் சண்டை,முஸ்லிம்களுக்குள் சண்டை,க்ரித்தவர்களுக்குள் சண்டை என்று கேட்டும் படித்தும் இருக்கிறோம் ஆனால் பார்ப்பனருக்கும் பிறருக்கும் சண்டை என்று கேட்டோ,படித்தோ இல்லை.அப்படி எதாவது இருந்தால் தெரியப் படுத்துங்கள். (நான் கேட்பது அடி உதை, வெட்டு குத்து ரேஞ்சுக்கு )

திரு. திருச்சிக்காரர் அவர்களே,,

தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைக்க கிருஸ்த்தவர்களால் பயன்படுத்தப்பட்ட தந்திரமே இந்த மத மாற்றம்.இந்த மத மாற்றக் கொள்கையை செயல் படுத்தவே தன் கடவுள் , தன் மதம் மட்டுமே உண்மை மற்றவை,மற்ற மதக் கடவுள் சாத்தான் என்றும்,மற்ற மதங்கள் சாத்தானின் மார்க்கம் என்றும் கூறினார்.

இந்த மத மாற்றக் கொள்கையே மத நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது.இந்த மத மாற்றக் கொள்கையினாலேயே கர்த்தர் கிறிஸ்தவர்களை மட்டும் காப்பாற்றும் ஒருதலைப் பட்ச்சமானவராகக் காட்டப்படுகிறார்.இந்த மதமாற்ற கொள்கையினாலேயே ஒரு இந்து பச்சிளம் குழந்தையைக் கூட,அது கிருஸ்துவமதக் குழந்தையாக இல்லாத காரணத்தால் அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளாத, இரக்கமற்ற கடவுளாக கர்த்தர் கிருஸ்த்தவ மத மாற்றும் ஏஜெண்டுகளால் காட்டப்படுகிறார்.

கிருஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் இந்த மத மாற்றத்தை கைவிடாதவரையில் மத நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை.

அடேங்கப்பா! என்ன ஒரு அறிவு, என்ன ஒரு ஆராய்ச்சி… சும்மா சொல்லக்கூடாது. உங்க கற்பனை சூப்பர்.
நம்ம நாட்டை வெள்ளைகாரங்ககிட்ட அடமானம் வைச்சது கிருஸ்துவர்களா? நம்ம தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியை சுட்டது கிருச்த்துவனா (அவன் ஒரு அக்மார்க் இந்து)? நம் நாட்டை அந்நியர்களிடம் காட்டிகொடுத்தவர்களில் கிருச்த்துவர்களின் பங்கு என்ன என்று தெரியுமா?
சும்மா எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் வந்து கதை அளக்க வேண்டாம் அன்பரே.

உலகில் நடைபெற்ற/நடை பெற்றுக்கொண்டிருக்கிற எதையும் தெரியாமல் பேசவேண்டாம் அசோக்கு. கொஞ்சம் உலக வரலாற்றையும் பாருங்கள்.

//தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைக்க கிருஸ்த்தவர்களால் பயன்படுத்தப்பட்ட தந்திரமே இந்த மத மாற்றம்.//

இது உண்மை. உதாரணம், கிழக்கு தைமூர், இன்று அஸ்ஸாம், சிக்கிம் போன்ற இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நடப்பவை…இன்னும் நிறைய சொல்லலாம்…

// பெண்டகோஷ்ச்டேல் சபையிலும் சிலர் சிலுவையை (சிலுவை என்ற விக்ரகத்தை) அதன் மேல் பட்டு துணி சாற்றி வணங்குகிறார்கள். //

சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்,சதீஷ்;நாங்கள் வேதத்தைக் கடைபிடிக்கிறதில்லை என்பதே உண்மை.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38278602

அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும் என இறைவனை மன்றாடும் நிலையிலிருக்கும் என் போன்றோர் இவ்வளவு தான் செய்யமுடியும்,”கற்க கசடற‌..!”

chillsam,

உங்களின் அந்த தளத்தில் இயேசுவின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்ற வாதம். ஆனால், இயேசுவின் உருவம் இப்படி இருக்காது என்று சில வருடங்கள் முன்பு படித்திருக்கிறேன். அதேபோல, அவர் உருவம் எப்படி ‘இருந்திருக்கவேண்டும்’ என்று ஒரு மாதிரி உருவமும் போட்டிருந்தார்கள்.

இத நான் சொல்லலைங்க. சொன்னதும் உங்க ஆளுங்க தான்.

திரு அசோக் குமார் கணேசன் ,

///நீங்கள் வழிபடுபவர்களில் புனிதமானவராக யாராவது ஒருவரை சொல்லுங்களேன்///

சகிப்புத்தன்மை இல்லாமல் மத வெறியைக் கக்கும் சகோதரர்களே , தீவிரவாத மத வெறிப் போக்கை கை விட்டு மனம் திரும்புங்கள்!

.

என்னங்க தனபால், தெரியாமத்தானே கேக்கிறேன். உங்களுக்கும் அவர்களில் புனிதமானவர்கள் யாரும் தெரியவில்லையா?

திரு அசோக் குமார் கணேசன் அவர்களே,

///என்னங்க தனபால், தெரியாமத்தானே கேக்கிறேன். உங்களுக்கும் அவர்களில் புனிதமானவர்கள் யாரும் தெரியவில்லையா?///

அனைத்துக் கடவுள்களுமே புனிதமானவர்கள் தான்.இந்து மத வேதம் கடவுளை புனிதமானவராகவேக் காட்டுகிறது.வேதங்களில் உள்ள கடவுள் பற்றிய உண்மைகளை அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த ,மக்களின் மன நிலைக்குத் தக்கவாறு புராணங்களில் சொல்லப்படுகிறது.புராணங்கள் வேதங்களில் உள்ள கடவுளையும்,அவரின் குணங்களையும் விளக்க வந்தவைகளே,அவற்றில் இக்காலத்திருக்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கலாம்.அவை புராணங்களை எழுதியவர்களாலும் வந்திருக்கலாம்,இடைச்செருகலாகவும் இருக்கலாம்,மேலும் பல ஆபாச கதைகள் புத்த மதம் வீழ்ச்சியுற்ற பொது புத்த மதத்தினரால் ஏற்படுத்தப் பட்டது.இதை பல வரலாற்று ஆசிரியர்களும்,மற்றும் விவேகானந்தரும் கூறியிருக்கிறார்.சில கதைகள் சில கருத்துகளையும்,சில கதைகள் சில அறிவியல் உண்மைகளைக் கூறவும் சொல்லப்பட்டன.எந்தக் புராணங்களில் வரும் கதையும் வேதத்தோடு ஒத்துவரும் வரையில் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் .வேதத்திற்கு முரண்பட்டால் அவற்றை நிராகரிக்க வேண்டும் இதுவே விதி.அதன்படி வேதத்தில் ஆபாசக் கருத்துக்களோ,கொடூரமானக் காட்டுமிராண்டித்தனமான கருத்துக்களோ இறைவனின் குணங்களாக சொல்லப்படவில்லை.எனவே அனைத்து கடவுளும் புனிதமானவர்களே.எங்களுக்கு வேதமே அத்தாட்சி.புராணங்கள் வேதத்துக்கு அடுத்தபடியே,அதுவும் வேதத்தோடு எந்தவிதக் காரணமும் இல்லாமல் முரண்படும் பகுதிகள் இந்துக்களால் நேர்மையாக ஒத்துக்கொள்ளப் பட்டு நிராகரிக்கப் படும்.

ஆனால் ஒரு நிமிடம் இதே கேள்விகளை நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள்.பைபிளில் கூறப்படும் யாஹ்வே (கர்த்தர்),ஜெஹாவோ,இயேசு கிறிஸ்து போன்ற கடவுள்கள் புனிதமானவர்களா??? உங்கள் யாஹ்வே (கர்த்தர்),ஜெஹாவோ,இயேசு புராணமான பைபிள் கடவுளை கொடூரமான ,ஈவு இரக்கமற்ற ,ஒரு அநாகரீகமான ஒரு சர்வாதிகாரியாக அல்லவா காட்டுகிறது. ???.அப்படியென்றால் கடவுள் அவ்வளவு கொடூரமானவரா ???கடவுள் கொடூரமானவர் இல்லை என்று கூறினால் பைபிளின் குறிப்பிட்ட பகுதி பொய் என்று ஆகிவிடும்.பைபிளின் குறிப்பிட்ட பகுதி உண்மை என்றால் கடவுள் கொடூரமானவர் என்பது உண்மை என்றாகிவிடும்.நாங்கள் கடவுளுக்குப் பொருந்தாத புராணக் கதைகளை நிராகரிக்கத் தயாராக இருக்கிறோம்.உங்களால் கடவுளைக் காட்டுமிராண்டியாகக் காட்டும் பைபிள் பகுதிகளை நிராகரிக்க முடியுமா???முடியாது.ஏனெனில் உங்கள் பைபிளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் புராணங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவீர்கள். உங்கள் புராணங்களில் வரும் தேவர்களையும் நீங்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்வீர்கள் இல்லாவிட்டால் விட்டு விடுவீர்கள். ஏன் என்றால் அனைத்தும் கற்பனையே. உங்கள் வசதிக்காக நீங்கள் உருவாக்கியவைகள்.
என் தேவன் என்றும் மாறாதவர், மெய்யான தேவன். மேலும், சத்தியவேதம் கர்த்தரை கொடூரமானவராக எங்கும் காட்டவில்லை. உமது புரிதல் தவறாக உள்ளது. பாவத்தில் திளைக்கும் உனக்கு பரிசுத்தம் கொடூரமாக உள்ளது. ஒன்னாம் வகுப்பு மாணவனுக்கு கணித மேதைகளின் கணக்குகள் புரியாது. அதைபோல், வளர்ச்சியே எல்லாத, சாகும் தருவாயில் உள்ளதை போன்ற உமது ஆன்மாவுக்கு, பல ஆன்மீக உண்மைகள் புரியாமல் இருப்பதும், கடினமாகவும், கொடூரமாகவும் தெரிவதும் இயற்கையே.
நீர் உண்மையிலேயே வேதத்தை புரிய விரும்பினால், சில்சாம் தளத்தில் உமது கேள்விகளை பதிக்கலாம். எனக்கு தேவன் வெளிப்படுத்தியவற்றை உமக்கு கூறுகிறேன். கர்த்தருக்கு சித்தமானால், உமது கண்கள் திறக்கப்படலாம், உண்மை உமக்கு புரியலாம்.
நீர் வெறுமனே தூஷணைகளை மட்டுமே கூற வந்தீரானால்.
இங்கேயே தூற்றிக்கொண்டு சந்தோஷமாய் இருங்கள்.

இந்து மதத்தில் அத்தாரிட்டியாகக் கருதப் படுவது, உபநிடதங்களும், கீதையும், உபநிடதங்களை ஒரு பகுதியாகக் கொண்ட ரிக் , யஜூர், சாமம் , அதர்வணம் என்று சொல்லப் படும் நான்கு வேதங்களுமே.ஸ்மிருதி என சொல்லப் படும் இவற்றில் இருப்பதை யாரும் மாற்றவில்லை. உப நிடதங்களும், கீதையும், உயிர், சக்தி, இயற்க்கை, வாழ்க்கை…. பற்றிய தத்துவ உண்மைகளை ஆராய்ந்து அறிவிக்கும் சிந்தனைகளை உடையனவாக இருக்கினனறன.

புராணங்கள் என்பற்றில் பல புலவர்களால எழுதப் பட்டவை. புலவர்களோ, கொடியிடை, நூலிடை என்பது போல பில்டப் கொடுக்கின்றனர். நூலிடை என்பது எல்லாம் உண்மையில் சாத்தியமா? எனவே புராணங்களில் எழுதப் பட்டவற்றை வரிக்கு வரி, சம்பவத்துக்கு சம்பவம் சரியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே தான் ஸ்மிருதிக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டு உள்ளது.

//நீங்கள் உங்கள் புராணங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவீர்கள். உங்கள் புராணங்களில் வரும் தேவர்களையும் நீங்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்வீர்கள் இல்லாவிட்டால் விட்டு விடுவீர்கள். ஏன் என்றால் அனைத்தும் கற்பனையே. உங்கள் வசதிக்காக நீங்கள் உருவாக்கியவைகள்.//

இது உங்களின் கற்பனையே.

புராணங்களில் இருப்பவை எல்லாம் முழுக்க முழுக்க நடந்ததா என்பதை அறுதி இட்டு உறுதியாக கூற இயலாது. ஆனால் அவற்றில் கூறப்படுபவை உண்மையாக நடந்த சமபவங்கள் காப்பியமாக இருக்க வாயப்புகள உள்ளன. இண்டிகா எனப் படும் நூல் சந்திர குப்தா மவுரியரின் ஆட்சியை குறிப்பிடுவது போல, கலிங்கத்துப் பரணி இராசேந்திர சோழனின் வெற்றியை சொல்வது போல புராணங்களும் உண்மை நிகழ்வுகள் புலவர்கள தங்கள் கவித்துவத்துடனும் கற்பனையுடனும் சொன்னதாக இருக்கலாம்.

//நீங்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்வீர்கள் இல்லாவிட்டால் விட்டு விடுவீர்கள்.//

செய்த செயல் நியாயமாக இருந்தால் யார் செய்தாலும் ஏற்றுக் கொள்வோம், அநியாயமாக இருந்தால் அதை செய்தவர் கடவுளாக இருந்தாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) அதை எதிர்ப்போம்.

கடவுள் செய்ததால் கொடூரமான இனப் படுகொலைகள் சரியானதே என்று சொல்லவோ, தூதுவர் என்பதால் இனப் படுகொலைகளை செய்து விட்டு கன்னிப் பெண்களை மட்டும் ரவுண்டு கட்டி தூக்கி சென்றதை நியாயப் படுத்தவோ மாட்டோம்.

//மேலும், சத்தியவேதம் கர்த்தரை கொடூரமானவராக எங்கும் காட்டவில்லை. உமது புரிதல் தவறாக உள்ளது. பாவத்தில் திளைக்கும் உனக்கு பரிசுத்தம் கொடூரமாக உள்ளது. //

திரு. தனபாலின் புரிதலில் என்ன தவறு உள்ளது?

ஒருவரின் வாழ்விடங்களையும் , நிலங்களையும் ஆக்கிரமிக்க இனப் படுகொலைகளை நிகழ்த்தி, அந்த இனத்தில் ஒருவரும் இல்லாமல் வெட்டிப் போடுவதுதான் பரிசுத்தமா,

//உபாகமம்
7 அதிகாரம்

1. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,

2. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.//

அமலோக் இன அழிப்புக்கு திட்டம் தீட்டுதல் :

//19. உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும்தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.//

பாசான் நாட்டில் இன அழிப்பு :

எண்ணாகமம்
21 அதிகாரம்

34. கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார்.

35. அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
ஒரு இனத்தின் ஆண்கள் அனைவரையும் வெட்டிக் கொன்று , பெண்களில் திருமணம் ஆனவர்களை வெட்டிக் கொன்று, திருமணம் ஆகாத , இது வரை ஒரு முறை கூட உடல் உறவில் ஈடுபடாத கன்னிப் பெண்களை மட்டும் ரவுண்ட் கட்டி தூக்கி வந்து கற்பழித்தல்: கர்டசி- திரு மோசஸ் –

//எண்ணாகமம்
31 அதிகாரம்

8. அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

9. அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

10. அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

11. தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

12. சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

13. மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

14. அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

15. அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?

16. பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

17. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.

18. ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.//

//எண்ணாகமம்
33 அதிகாரம்

49. யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

50. எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

51. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,

52. அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

53. தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

54. சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

55. நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.

56. அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.//

மிச்சம் மீதி ஒருவரையாவது விட்டுவைத்தால் அவன் திரும்ப வந்து சண்டை போடுவான் , அதனால் ஒருவன் விடாமல் எல்லோரயும் துரத்த சொல்லி இருக்கிறார்.

//சீகோன் பட்டின இன அழிப்பு

உபாகமம்
2 அதிகாரம்

31. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.

32. சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.

33. அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து,

34. அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம்.

35. மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
36. அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.//

அவர் ஒரு தூசனையும் செய்யவில்லை. நீங்கள் மறுப்புக் காட்டாமல் ஒத்துக் கொள்ளச் சொன்ன நூலில் உள்ள கருத்துக்களைப் படிக்கும் யாரும் கதி கலங்கும் படியான கொடுமைகள் உள்ளனவே.

திரு CHILLSAM அவர்களே,

//சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்,சதீஷ்;நாங்கள் வேதத்தைக் கடைபிடிக்கிறதில்லை என்பதே உண்மை///

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன்.ஒவ்வொருவருக்கும் சிந்தனைகள், கருத்துக்கள்,போன்றவை வேறுபாடும்.ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வழியில் இறைவனை வணங்குகிறார்கள்.அவ்வாறே கிருஸ்தவத்திலும் சிலர் கன்னி மேரி சிலையை வணங்குகிறார்கள்,சிலர் இயேசுவை சிலைவடிவிலும்,படத்தின் மூலமாகவும் வணங்குகிறார்கள்,மேலும் சிலர் சிலுவையை வணங்குகிறார்கள்,சிலர் எந்த உருவத்தையும் நினைக்காமல் கர்த்தரை ஜெபத்தின் மூலம் வழிபடுகிறார்கள்.இவற்றிலேயும் பல பிரிவுகள் வந்துவிட்டது.சில பிரிவினரின் பைபிள் கூட சில வேறுபாட்டுடன் காணப்படுகிறது.எனினும் நான் கடைபிடிக்கும் வழி தான் உண்மையானது மற்ற கிருஸ்தவ பிரிவுகள் கடைபிடிக்கும் வழிகள் பைபிளுக்கு முரணானது என்று சில கிறிஸ்தவப் பிரிவினர்கள் எண்ணுகிறார்கள்.

கிறிஸ்தவர்களில் சிலருக்கு உருவ வழிபாடே உகந்ததாக இருக்கும்.சிலருக்கு உருவமில்லாத வழிபாடே உகந்ததாக இருக்கும்,மேலும் இந்திய கிருஸ்தவர்களில் பலருக்கு இந்து மத பாணியில் பத்துநாள் திருவிழா,கொடியேற்றம்,தேரோட்டம்,மொட்டயடித்தல் போன்ற வழிகளில் இறைவனை வணங்குவது தான் உகந்ததாக இருக்கும்.அப்படித்தான் பெரும்பான்மையான கிருஸ்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்கள் வழியில் கர்த்தரையோ,யேசுவையோ,கண்ணிமேரியையோ, உருவத்துடனோ,உருவமில்லாமலோ வழிபட அனுமதிப்பதே நாகரீகமாகும்.அப்படித்தான் இந்து மதம் செய்கிறது.அவ்வாறே மற்ற மதத்தவரையும் அவரவர் வழியில் வணங்குவதை அனுமதிப்பதே நாகரீகமாகும்.இந்துக்கள் உருவவழிபாடு செய்வது தவறானது என்று நீங்கள் கூறினால் கிறிஸ்தவர்களில் 90 % க்கும் அதிகமானோர் உருவவழிபாடு செய்கிறார்களே!!!அது சரியா???

தவறு என்றால் உங்களின் அதிமுக்கிய வேலை கிறிஸ்தவர்களை பைபிள் படி உருவமில்லாத வழிபாடு செய்ய வைப்பது தானே /??நீங்களே பைபிள் படி நடப்பதில்லை .பின் ஏன் நீங்கள் இந்துக்களை மதம் மாற்றுகிறீர்கள்???முதலில் நீங்கள் இதுவரை மதம் மாற்றியவர்களை பைபிள் கூறியபடி உருவமில்லாத வழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.முதலில் சீர்திருத்தம் உங்கள் கிருஸ்தவ மதத்திற்கே அதிக தேவை.

// முதலில் நீங்கள் இதுவரை மதம் மாற்றியவர்களை பைபிள் கூறியபடி உருவமில்லாத வழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.முதலில் சீர்திருத்தம் உங்கள் கிருஸ்தவ மதத்திற்கே அதிக தேவை.//

கிறித்தவத்துக்கு மாறியோரில் பெரும்பகுதியினர் உருவ வழிபாட்டை நம்புகிறவர்களல்லாமல் வேதத்தை மாத்திரமே சார்ந்திருப்பவர்களாலேயே ஆதாயப்படுத்தப்படுத்தப்பட்டார்கள், என்னையும் சேர்த்து; ஏற்கனவே உருவ வழிப்பாட்டிலும் பல்வேறு சடங்குகளிலும் சலித்து சோர்ந்து போனவர்கள் மீண்டும் “மேரி”யாத்தாளுக்கு புடவை சாத்தவும் மண்டியிட்டவாறு மலையேறி வரவும் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்;அங்கே சடாமுடி வளர்த்து- மொட்டையடித்து-அலகுகுத்தி- வேப்பிலை கட்டி டான்ஸ் ஆடி அடைய இயலாத‌ ஆன்ம பெலனை இங்கே மிக எளிமையாக இவையெதுவுமில்லாமலே பெறும் வழிமுறைகள் சொல்லித் தரப்படும்;இது முழுவதும் இலவசம்;சில யோகிகள் எட்டு கிளாஸுக்கு இவ்வளவு யாகத்தையும் யோகத்தையும் வியாபாரமாக்கும் கலையினை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

நீங்கள் அடைந்த ஆன்ம பலனை என்ன என்பதை உங்கள வார்த்தைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாமே.

நீங்கள் பிற மார்க்கத்தினரின் வழி பாட்டு முறைகளையும், தெய்வங்களையும் எந்த அளவுக்கு வெறுக்கிறீர்கள் என்பதை அவற்றை நீங்கள் திட்டுவதிலும், நிந்திப்பதிலும் இருந்தே தெரிந்து கொள்ளலாமே.

ஒருவன் வாயில் இருந்து வருகிற வார்த்தையை வைத்தே ஒருவன் தீர்க்கப் படுகிறான் என்று சொல்லி இருக்க, நீங்கள், ச்சீ என்றும் முட்டாள் என்றும் வைதும் , கடலில் போட வேண்டும் என்று சபித்தும் எழுதுகிற வார்த்தைகளே நீங்கள் அடைந்த ஆன்ம பலனைக் காட்டுகிறதே.

இந்து மத பாணியில் பத்துநாள் திருவிழா, கொடியேற்றம், தேரோட்டம்,மொட்டயடித்தல் போன்ற வழிகளில் இறைவனை கிருஸ்துவர்கள் வணங்குகிறார்களே இது உங்கள் பைபிளுக்கு முரணாக இல்லையா???

சில்சாமோ, நானோ கூறும் கருத்துக்கள் கிருச்துவர்களுக்கோ, இந்துக்களுக்கோ அல்ல. பொதுவாக மனிதர்களுக்கு சத்தியவேதம் கூறியதை கூறுகிறோம்.
நீங்கள் கூறியதும் சரியே, பல கிருஸ்துவர்கள் வேதத்திற்கு புறம்பான காரியங்களை செய்கிறார்கள். அதற்காக அவர்களை எல்லாம் சரி படுத்திவிட்டுத்தான் உங்களிடம் இதை கூறவேண்டும் என்பது பாரபட்சமாகும். நாங்கள் பாரபட்சம் பார்க்க விரும்பவில்லை. அனைவரும் நல்வழிப்படவே பாடுபடுகிறோம்.

எது நல்ல வழி? பிற மதங்களின் மீது வெறுப்பைக் கொட்டி, அவர்களின் வழி பாட்டு முறைகளையும் , தெய்வங்களையும் இகழ்ந்து சமூகத்தில் இணக்க சூழலை கெடுப்பதுதான் நல்ல செயலா?

அப்பட்டமாக சகிப்புத் தன்மை க்கு மாற்றான மத வெறி கருத்துக்களை சொல்லிக் கொண்டு நல்வழிக்காக பாடுபடுகிறோம் என்றால் இந்த பூமி சிரிக்கும்!

சத்தியம் , சத்தியம் ங்கறீங்க,. சத்தியம் என்றால் நிரூபணம் எங்கே.

An Inductor offers resistance to the change in flow of current passes throgh it

என்பதை என்னால் நிரூபிக்க முடியும், உலகில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு முறை கூட சரி பார்க்க இயலாத ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு, சத்தியம் சத்தியம் என்றால் எப்படி?

அதுவும் ஈவு இறக்கம் இல்லாத இனப் படுகொலைகள், ஒரு இனத்தின் தலைவர் அந்த இனத்தை வாழ வைக்க பிற இனங்களை முற்றிலுமாக அழித்து, அவர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்க, அந்த இனத்தின் நிர்வாகிக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து செயல்படுத்திய இனவாத இனப் படுகொலைகளை செயல்களை புனிதம் என்கிறீர்கள். இதுதான் நல்வழியா?

//அனைவரும் நல்வழிப்படவே பாடுபடுகிறோம்.//

எனக்கு புரியலைங்க. நீங்களாகவே அடுத்தவர் பாவிகளாக நினைத்துக் கொண்டு, அவர்களை அந்த பாவத்திலிருந்து விடுவிப்பதாக நினைத்துக்கொண்டு…அனைவரும் தப்பான வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு…Alice in the Wonderland போல… 😉

// நீங்களாகவே அடுத்தவர் பாவிகளாக நினைத்துக் கொண்டு, அவர்களை அந்த பாவத்திலிருந்து விடுவிப்பதாக நினைத்துக்கொண்டு…//

பாபிகளை இரட்சிக்க கிறித்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிறதான ஒரு வார்த்தையின் இறுதியில் தூய பவுல் தன்னையே பிரதான பாவி என்கிறார்;(1.தீமோத்தேயு.1:15) ஆனாலும் அவர் எந்த யூதமத சட்டதிட்டங்களின்படியும் எந்த குற்றமும் செய்யாதவர் என்பதுடன் தண்டிக்கப்பட்டதுமில்லை; பெரும் புகழோடும் செல்வத்துடனும் நம்ம சரவணபவன் அண்ணாச்சி போல இருந்தார்; ஐய்யய்யோ அந்த ஆள் கொலைகாரனல்லவா?அவரை பக்திமான் என்கிறோமே அந்த பக்தியையே வெளிவேடமென்கிறது பைபிள்; அப்படிப்பட்ட சிறந்த அந்தஸ்தில் இருந்த பவுலடிகள் தன்னை வெறுத்து சிலுவையினால் வரும் நிந்தனைகளைச் சுமந்திருக்க ஒரு காரணமுமில்லை;கத்தோலிக்கர்களைப் போல இன்னபிற மதங்களைப் போல பைபிள் எனக்கு ஒரு மனிதனை தெய்வமாக வழங்க அனுமதித்திருந்தால் நான் பவுலடிகளையே தெய்வமாகத் தொழுதிருப்பேன்;அந்த அளவுக்கு எல்லா வகையிலும் தான் ஏற்றுக்கொண்ட மார்க்கத்துக்கு அவர் உண்மையுள்ளவராக இருந்தார்;அவரே தன்னை பாவி எனும் போது அன்றாடம் பல்வேறு பாவசோதனைகளின் வழியே கடந்து செல்லும் நாம் ஒருநாளாவது (கேரளா பார்டர்..?) பாபநாசத்துக்குச் செல்லும் நிலைவரவேண்டாமா?

திருச்சிக்காரன் அவர்கள் தனது தளத்தின் நேரக் கணக்கைத் திருத்தியமைக்க வேண்டுகிறேன்.

இந்த ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை வணங்கிய கடவுள் யார் ????

வருக திரு. இராஜேந்திரம் அவர்களே,

கானானியரரும் , எபூசியரும் … யாரை வழி பட்டாலும் வழிபட்டுக் கொள்ளட்டுமே. அதில் நமக்கு என்ன பிரச்சினை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: