Thiruchchikkaaran's Blog

பிறப்பு, இறப்பு , மறு பிறப்புக் கோட்பாடு!

Posted on: September 12, 2010


இந்திய தத்துவங்களின் அடிப்படையாக இருப்பது பிறப்பு மறுபிறப்பு சுழற்ச்சிக் கோட்பாடு ஆகும்.

  அறிவியலைப் பொறுத்த வரையில் ஒரு மனிதனின் உடல் மரணம் அடைவதை அதனால் உறுதி செய்ய இயலும்.

 உடல் இறந்த பின் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருக்கிறதா என்பதைப் பற்றி நாளது  வரையில் அறிவியல் கருத்து எதுவும் சொல்லவில்லை.

இந்த துறையில் அறிவியல் நிரூபிக்கப்படக் கூடிய உண்மைகளை தெளிவிக்கும் வரையில் , மனித சமுதாயம் பலவேறு மதங்கள் முன் வைக்கும் கோட்பாடுகளை வைத்து ஒரு அனுமானத்தை உருவாகிக் கொள்கிறது.  

ஜெருசலேம் பகுதியில் உருவான  மதங்களின் கோட்பாட்டுப்   படி ஒவ்வொரு உயிரையும் முதன் முதலாக கடவுள் படைக்கிறார் என்றும் (அதாவது அதற்க்கு முன் அந்த உயிர் இல்லை)  , அந்த உயிர் ஒரு உடலை எடுத்து இவ்வுலகில்   ஒரு முறை வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறது என்றும், பிறகு கல்லறையில் சில  காலம் இருக்கிறது என்றும், பிறகு ஜட்ஜ்மென்ட் டே எனப் படும் நாளில் அந்த உயிருக்கு தீர்ப்பு வழங்கப் பட்டு அது நரகத்திற்க்கோ அல்லது சொர்க்கத்திற்க்கோ செல்லும் என்றும் பிறகு அது அங்கேயே பெர்மனென்ட் ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்திய  பகுதியில்  உருவான மூன்று முக்கிய மதங்களான, இந்து, பௌத்த , சமண மதங்கள், உயிர் பல பிறவிகளை எடுத்து மீண்டும் மீண்டும்  பல முறை இவ்வுலகில் பிறந்து இறக்கின்றன என்கிற கோட்பாட்டை அழுத்தமாக சொல்லுகின்றன.

ஒவ்வொரு உயிரும் தாங்கள் ஒரு பிறவியில் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் நல்லது கெட்டது  அந்த உயிருக்கு கிடைக்கிறது என்று சொல்லப் பட்டு உள்ளது. ஒரு உயிர் ஒரு பிறவியில் எந்த அ ளவுக்கு நல்லது செய்கிறதோ அந்தளவுக்கு அடுத்த பிறவியில்  அது நன்மைகளைப் பெறுகிறது என்று சொல்லி உள்ளனர். 

 கடவுள் மனிதனை ஒரே ஒரு பிறவியில் ஒரே ஒரு முறை தான் படைக்கிறார் என்றால் எந்த ஒரு காரணத்துக்காக ஒரு குழந்தையை குருடனாகவும், இன்னொரு குழந்தையை உடல் குறைபாடு இல்லாதவனாகவும் படைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. எதற்கு ஒரு குழந்தையை ஏழை வீட்டிலும் , இன்னொரு குழந்தையை பணக்காரன் வீட்டிலும் பிறக்க வைக்க வேண்டும்?

பிறப்பு இறப்பு தொடர்ந்து நடைபெற்றால்,  ஒரு உயிர் பல பிறவிகள் எடுகிறது என்றும் , அது ஒரு பிறவியில் சில உயிர்களின் கண்ணைக் கொடூரமாக குத்திக் கொடுமைப் படுத்தி இருக்கலாம் என்றும், அப்படிக் கொடுமைப் படுத்தப் பட்ட உயிர்கள் நியாயம் கேட்பதால் கடவுள் அடுத்த பிறவியில் அந்த ஒரு உயிரை குருடாகப் படைக்க வேண்டிய, நீதி வழங்க வேண்டிய  கட்டாயத்தில் இருப்பதாக கருதினால் அதில் ஒரு நியாயம் உள்ளது, ஒரு லாஜிக் உள்ளது.

அப்படி இல்லாமல் கடவுள் முதல் முறையாக ஒரு உயிரைப் படைக்கிறார் என்றால், அவர் பாட்டுக்கு தன மனம் தோன்றிய வகையில் ஒரு உயிரைக் குருடனாகவும் , ஒரு உயிரை

முடவனாகவும் , இன்னொரு உயிரை ஐசுவரியவானாகவும் படைக்கிறார் என்றால், எல்லோருக்கும் தந்தையானவர்  அப்படி  ஒரு உயிருக்கு வெண்ணையையும் ஒரு உயிருக்கு சுண்ணாம்பையும் தருவாரா?

ஒரே ஒரு பிறவிதான் – என்கிற கோட்பாடு கடவுளை இரக்கமற்ற கொடியவராக , சர்வாதிகாரியாக காட்டுகிறது. 

 நாம் சில திரைப் படங்களில் பார்த்து இருக்கிறோம்.  ஒரு கொள்ளக் கூட்டத் தலைவன் தன்னிடம் வேலை செய்பவனிடம் ஒரு ஆளைக் கொலை செய்யச் சொல்லி துப்பாக்கியைத் தருவான். அந்த ஆள் குறி பார்த்து சுடாமல் தவறு செய்து விட்டால் , கொள்ளைக் கூட்ட பாஸ் கடும் கோபம் கொள்வான்.  எப்படிடா சரியாக சுட முடியாமல் விட்டு விட்டாய் என்பான்.  இவனோ பரிதாபமாக குறி தவறி விட்டது பாஸ் , இந்த ஒரு முறை என்னை மன்னியுங்கள் என்பான். பாஸ் அவனைப் பார்த்து அப்படிடா குறி தவறும், நீ ஓடு, நான் சுடுகிறேன், குறி தவறுதா பார்க்கலாம்  என்பான். வேண்டாம் பாஸ் , வேண்டாம் பாஸ் என்று கதறிய படியே ஓடுவான். பாஸ் ஆறு குண்டுகளையும் எங்கேன்க்ஹோ சுடுவான். டேய் , நீ தப்பிச்சு விட்டடா என்பான்.  பரிதாமாக இருந்தவன் சிரிக்கும் போது கொள்ளைக் கூட்ட பாஸ் வேறு துப்பாக்கியை எடுத்து அவனி சுடுவான்.  கொள்ளைக் கூட்ட பாஸ் கூட அவன் கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை என்கிற காரணத்துக்காக அவனைத் தண்டிக்கிறான்.

ஆனால் கடவுள் தான் மனிதனைப் படைக்கிறார் என்றும், மனிதனுக்கு ஒரே ஒரு பிறவிதான் என்றும் உள்ள கோட்பாட்டின் படி பார்த்தால் கடவுள் எந்த விதக் காரணமும் இல்லாமல் ஒரு உயிரைத் தண்டித்து அவனை குருடனாகப் படைக்கும் கல் நெஞ்சக்கார கொடியவர் என்றல்லவா ஆகி விடுகிறது?

கடவுள் என்று ஒருவர் இருக்கக் கூடுமானால், அவர் எல்லையற்ற அன்பும், கருணையும் கொண்ட நல்லவர் என்று கருதப் படக் கூடுமானால், அப்படிப் பட்ட பிதா எந்த ஒரு உயிரையும் அவசியம் இல்லாமல் கஷ்டத்துக்கு உள்ளாக்க மாட்டார் என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

எனவே பிறப்பு இறப்பு, மறுபிறப்பு சுழற்சிக் கொள்கையே  கடவுளின் நியாயயமும்  , நீதியும் , கனிவும், அன்பும் உடைய தன்மைக்கு பொருத்தமாக உள்ளது என்பதை அறியலாம்.

Advertisements

42 Responses to "பிறப்பு, இறப்பு , மறு பிறப்புக் கோட்பாடு!"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///அப்படி இல்லாமல் கடவுள் முதல் முறையாக ஒரு உயிரைப் படைக்கிறார் என்றால், அவர் பாட்டுக்கு தன மனம் தோன்றிய வகையில் ஒரு உயிரைக் குருடனாகவும் , ஒரு உயிரை
முடவனாகவும் , இன்னொரு உயிரை ஐசுவரியவானாகவும் படைக்கிறார் என்றால், எல்லோருக்கும் தந்தையானவர் அப்படி ஒரு உயிருக்கு வெண்ணையையும் ஒரு உயிருக்கு சுண்ணாம்பையும் தருவாரா?

ஒரே ஒரு பிறவிதான் – என்கிற கோட்பாடு கடவுளை இரக்கமற்ற கொடியவராக , சர்வாதிகாரியாக காட்டுகிறது.///

///எனவே பிறப்பு இறப்பு, மறுபிறப்பு சுழற்சிக் கொள்கையே கடவுளின் நியாயயமும் , நீதியும் , கனிவும், அன்பும் உடைய தன்மைக்கு பொருத்தமாக உள்ளது என்பதை அறியலாம்.///

மிகச் சரியான,சிறப்பான பதிவு சார்.எனக்கும் இதே கருத்து உண்டு சார்.

தயவுசெய்து ஜெருசலேம் பகுதியில் உருவான மதங்களுக்கு எதிராக வெறுப்புக் கருத்துகளைப் பரப்பாதீர்கள்.

பங்கெடுப்புக்கு நன்றி, நண்பர் திரு ஆசாமி அவர்களே,

ஜெருசலேம் பகுதியில் உருவான மதங்களை ஆக்க பூரவமான கண்ணோட்டத்திலே அணுகுகிறோம், அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், அந்த மதங்களின் வழிபாட்டிலே மனப் பூரவமாக கலந்து கொள்கிறோம் என்பதே நமது நிலைப் பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த கட்டுரையானது ஒரு கோட்பாட்டை லாஜிக் அடிப்படையில் அணுகி ஆராய்ச்சி செய்வதாக அமைந்து உள்ளது. பிற மதங்களுடன் நல்லிணக்கமாக இருப்பது, ஆக்க பூர்வமாக அணுகுவது என்பது ஒரு விடயம் , ஒரு கோட்பாட்டை பகுத்தறிவு முறையிலே ஆராய்வது என்பது ஆராய்ச்சியே ஆகும். இந்தக் கட்டுரையில் நாம் தெரிவித்த கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பினால் அதற்க்கு தடை இல்லை.

மேலும் இந்திய நாட்டின் தத்துவங்கள், இந்து மதம் பற்றி சில கேள்விகளை சில நண்பர்கள முன் வைத்துள்ளனர். அவற்றுக்கு பதில் அளிக்கும் முன் இந்து மதத்தின் அடிப்படைகளை விளக்க வேண்டியது அவசியமாக இருப்பதாலேயே இந்தக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறோம்.

உலகில் உள்ள எல்லா மக்களும் இராமன் , புத்தர் , இயேசு கிறிஸ்து, அல்லாஹ் …. ஆகியோரை மனப் பூர்வமாக மரியாதை செய்தால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். அதில் முன்னோடியாக நாம் செயல்படத் தயாராக இருக்கிறோம்.

ஓரிறை கொள்கை உடைய மதங்களில் போய் , பல இறை நம்பிக்கை உள்ள திருச்சியார் போவது,வழிபடுவது பிரச்னை இல்லை அவரது கோட்பாட்டிற்கு. அதே போல் ஓரிறை கொள்கை உடையவர்களை பல தெய்வ வழிபாடிற்கு கூப்பிட்டால் எப்படி வருவார்கள். உடனே அவர்கள் வெறியர்கள் என்று தங்கள் வெறியை காட்டுவார்கள் காவிகள்.

//ஓரிறை கொள்கை உடைய மதங்களில் போய் , பல இறை நம்பிக்கை உள்ள திருச்சியார் போவது,வழிபடுவது பிரச்னை இல்லை அவரது கோட்பாட்டிற்கு.//

பங்கெடுப்புக்கு நன்றி பிரதீப் அவர்களே,
முதலில் நான் தெரிவிக்க விரும்புவது என்ன என்றால் நான் உறுதி செய்யப் பாடாத , நிரூபிக்கப் படாத எதையும் அவசரப் பட்டு “நம்புவதை”‘ தவிர்க்கிறேன். காந்தப் புலத்தில் மின் கடத்தி குறுக்கு வெட்டாக கடந்தால் மின்னோட்டம் உருவாகிறது , இதை நமப் வேண்டியதில்லை, சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கடவுளோ. பல கடவுளோ, உருவம் இருக்கிறதோ, இல்லையோ முதலில் கடவுள் இருக்கிறது என்பதை , சரி பார்த்துக் கொள்ளப் பட கூடிய வகையிலே நிரூபியுங்கள்! அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அவருக்கு மனதுக்குப் பிடித்த கடவுளை அமைதியாக வழிபடுங்கள். நான் எந்தக் கடவுளையும் இகழவில்லை. நல்லிணக்க அடிப்படையிலே எல்லோரின் வழிபாட்டிலும் கலந்து கொள்கிறேன், யாரின் வழிபாட்டு முறையையும் வெறுக்க வில்லை. எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களைப் பாராட்டி, வரவேற்கிறேன். இந்தக் கொள்கையில் நேர்மையாக இருக்கிறேன்.

மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.

பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.

அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.

அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.

இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/15/religious-harmony/

மத நல்லிணக்கம் உலக அமைதிக்கு, உலக சமுதாயத்துக்கு, மனித குலத்துக்கு நல்லது. மத நல்லிணக்கம் எல்லா மதங்களின் வளர்ச்சிக்கும் உதவும். நாம் மத நல்லிணக்கத்தைப் பின்பற்றினாலும், பின்பற்ற விட்டாலும் அந்தக் கொள்கைக்கு லாபமோ ,நஷ்டமோ இல்ல. மத நல்லிணக்கத்தைப் பின்பற்றினால் நமக்குத்தான் நல்லது. மத நல்லிணக்கம் காலத்தின் கட்டாயம். இல்லையேல் உலகெங்கும் மத வெறி நீறு பூத்த நெருப்பு போல புகைந்து கொண்டு அவ்வப் போது தலை காட்டும் .

நான் எதுக்கு கடவுள் இருக்கு என்று நிரூபிக்க வேண்டும். சரி நிரூபிக்கபடாத கடவுளை எதுக்குங்க வணங்கரிங்க.. இப்படிதான் காவி கும்பல் ஆயிரகனக்கனவர்கள் முஸ்லிம்களின் பெயரால் ஊடுருவி பல குண்டுவெடிப்பு கலவரங்களை நடத்தி கொண்டிருக்கின்றனர். ஆதாரத்துடன் உள்துறை அமைச்சரே வெளிபடுத்தினார். எந்த நல்லவனும் இதை பற்றி வாயை திறக்கவில்லை. ஆதலால் அவரவர் அவரவர் கடவுளை வணங்கினால் போதும். சமத்துவம் பேசிகிறோம் என்று சொல்லிவிட்டு தமில்ஹிண்டு.காம் கும்பலுடன் சேர்ந்துகொண்டு வெறி பரப்ப வேண்டாம்.

நீங்கள் எந்தக் கடவுளையும் நிரூபிப்பதும், நிரூபிக்காததும் உங்கள் விருப்பம்.

நான் நிரூபியுங்க‌ள் என்று சொன்ன‌து – தாங்கள் சொல்லும் கடவுள் மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள் என்றும், பிற மதத்தினரின் கடவுள்கள் எல்லாம் பொய்யான கடவுலக்ள என்றும் சொல்லி பிற‌ ம‌த‌ங்களை இக‌ழ்ந்து ம‌த‌ வெறி விட‌த்தை க‌க்குப‌வ‌ர்களிட‌ம் தான்.

அவ‌ர‌வ‌ர் அவ‌ர்வ‌ர் க‌ட‌வுளை வ‌ண‌ங்கிக் கொள்ள‌ட்டும், எல்லா ம‌தத்தின‌ரின் தெய்வ‌ங்களையும் வ‌ண‌ங்கியே ஆக‌ வேண்டும் என்று க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. அதை தெளிவாக‌ சொல்லி இருக்கிரொம். ஆன‌ல் பிற ம‌தத்தினரின் வ‌ழி பாட்டு முறைக‌ளை இக‌ழாம‌ல், வெறுக்காம‌ல் நாக‌ரீக‌மாக‌ , ச‌கிப்புத்த‌ன்மையுட‌ன், ந‌ல்லிண‌க்க‌மாக‌ வாழ்வ‌து ம‌னித‌ ச‌முதாய‌த்தின் அமைதிக்கு அவ‌சிய‌ம் ஆகும்.

//சரி நிரூபிக்கபடாத கடவுளை எதுக்குங்க வணங்கரிங்க.. //

காந்தியை வ‌ண‌ங்குகிரோம், புத்த‌ரை வ‌ண்ங்குகிரோம், இராம‌ரை வ‌ணங்குகிரொம், இயெசுவை வ‌ண‌ங்குகிரோம் … இப்ப‌டியாக‌ ப‌ல‌ரை வ‌ண‌ங்குகிரோம் என்றால் அவ‌ர்களின் கொள்கையை, த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ செய‌லை நினைவு கூறும் வ‌கையிலே வ‌ண‌ங்குகிரொம், அவ‌ர்க‌ள் வான‌த்திலே க‌ட‌வுளாக‌ இருக்கிறார்களா என்ப‌து ந‌ம‌க்கு தெரியாது, பார்க்க‌வில்லை, இப்போது இருக்கும் யாரும் பார்த்தாக‌ சொல்ல‌வும் இல்லை, பார்க்காத‌ நிரூப‌ண‌ம் இல்லாத‌ ஒன்றுக்கு நாம் சாட்ஷி கொடுக்க‌வும் இல்லை.

//ஆதாரத்துடன் உள்துறை அமைச்சரே வெளிபடுத்தினார்//

இந்த‌ உல‌க‌த்தில் உள்ள‌ ஒவ்வொருவ‌ருக்கும் , ச‌ம‌ உரிமை, முழுப் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும், ம‌த‌, இன‌, மொழி, பிராந்திய‌ , சாதி, அடைப்ப‌டையில் வேறுபாடு காட்ட‌ப் ப‌ட‌க் கூடாது என்ப‌தே ந‌ம்முடைய‌ கொள்கை. யார் தீவிர‌ வாத, ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டாலும்
அவ‌ர்கள் த‌ண்டிக்க‌ப் ப‌ட‌ வேண்டும், என்ப‌தே ந‌ம‌து தெளிவான‌ கொள்கை. உள் துறை அமைச்ச‌ர் கையில் அதிகார‌ம் இருக்கிர‌து, சி.பி. ஐ இருக்கிர‌து, ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும். இந்து ஒருவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌ வாத‌ செய‌லில் ஈடு ப‌ட்டால் அவ‌னை விட்டு விட‌ வேண்டும் என்று சொல்ல‌வில்லை, வ‌ன்மையாக‌ த‌ண்டியுங்க‌ள் என்றுதான் சொல்கிரொம்.

//சமத்துவம் பேசிகிறோம் என்று சொல்லிவிட்டு தமில்ஹிண்டு.காம் கும்பலுடன் சேர்ந்துகொண்டு வெறி பரப்ப வேண்டாம்.//

த‌மிழ் இந்து த‌ளத்திலும், வேறு ப‌ல‌ த‌ள‌ங்க‌ளிலும் ப‌ல‌ நாம் ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ க‌ருத்துக்க‌ளையே எழுதி வ‌ருகிரோம்.

நீங்க‌ள் உண்மைக்கு மாறாக‌ என்னை வெறி ப‌ர‌ப்புவ‌தாக‌ சொல்வ‌து, உங்க‌ளின் ம‌த‌வெறி உண‌ர்வு ம‌க்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப் ப‌டுமோ என்கிற‌ அச்ச‌த்தால் எழுந்த‌தாக‌வே உள்ள‌து.

ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ம் கூடாது என்று சொல்வ‌து உங்க‌ளின் ம‌த வெறியையே காட்டுகிற‌து. உங்களின் ஆவெச‌த்துக்கும், மிர‌ட்ட‌லுக்கும் அஞ்சி, ம‌த‌ வெறிக்குப் ப‌ணிய‌ முடியாது.

//காந்தியை வ‌ண‌ங்குகிரோம், புத்த‌ரை வ‌ண்ங்குகிரோம், இராம‌ரை வ‌ணங்குகிரொம், இயெசுவை வ‌ண‌ங்குகிரோம் … இப்ப‌டியாக‌ ப‌ல‌ரை வ‌ண‌ங்குகிரோம் என்றால் அவ‌ர்களின் கொள்கையை, த‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ செய‌லை நினைவு கூறும் வ‌கையிலே வ‌ண‌ங்குகிரொம், அவ‌ர்க‌ள் வான‌த்திலே க‌ட‌வுளாக‌ இருக்கிறார்களா என்ப‌து ந‌ம‌க்கு தெரியாது, பார்க்க‌வில்லை, இப்போது இருக்கும் யாரும் பார்த்தாக‌ சொல்ல‌வும் இல்லை, பார்க்காத‌ நிரூப‌ண‌ம் இல்லாத‌ ஒன்றுக்கு நாம் சாட்ஷி கொடுக்க‌வும் இல்லை. //

ஒருவருடைய கருத்துக்காக அவரை வணங்குதல் வேறு. அது மரியாதை நிமித்தம் செய்யப்படும் வணக்கமாகும் (salute ). ஆனால், ஆராதிப்பது (worship ), வேண்டுதல் (prayer ) போன்றவை ஒருவருடைய கருத்துக்காக செய்யப்படுவதல்ல.
சும்மா, வார்த்தைகளை வைத்து ஜாலம் செய்யாமல், மனசாட்சியுடன் பதில் சொல்லவும்.

நான் எந்த க் கடவுளையும் பார்க்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது என் மனதில் உள்ள முக்கியமான, நான் விடை காண விரும்பும் ஒரு கேள்வி.

உயர்திரு திருச்சி ஐயா,
உங்களுடைய கருத்துகள்,மற்றும் கட்டுரைகள் சிலவற்றை படித்து இருக்கிறேன் சிறப்பாக சிந்திக்கிறீர்கள்.
உங்களுடைய இந்த கட்டுரை லாஜிக் ஆக இருந்தாலும், பிற மதங்களை சேர்ந்த நம் சகோதரர்கள் முகம் சுளிக்க வாய்ப்பு உள்ளதால் சிறிது தர்ம சங்கடமாகத்தான் உள்ளது.அனால் அவர்கள் நம்மை துற்றுவதில் கூட கொஞ்சமும் யோசிப்பதில்லை.அது அவர்கள் இயல்பு.
நாம் நமக்கு எதிரான பிற மதங்களின் தாக்குதல்களுக்கு மட்டும் விடை அளிப்பதே சிறப்பானதாக தெரிகிறது.
உங்கள் மீது வெறுப்பு கொண்டோர் வலை உலகில் நிறைய இருப்பதால் உங்களை பற்றி பிற தளங்களில் அவதூறாக எழுதுகிறார்கள் அதனை அனுமதிப்பவர்களும் உங்களுடன் உங்கள் தளத்திலேயே விவாதம் செய்யும் நண்பர்களே.உங்களை பன்றி என்று கூட ஒரு நண்பர் மற்றொரு நண்பரின் தளத்தில் ( அவரும் இந்த தளத்துக்கு மிகவும் பரிச்சயமானவர்தான்) எழுதுகிறார். எனக்கு அவர்மீது கோபம் இல்லை, இருந்தாலும் ஏன் நாம் மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டும் நமக்கு இந்த மதங்கள் தேவைதானா எனும் அளவுக்கு முகம் சுழிக்க வைத்தது.இவற்றை பார்க்கும் போது உண்மையான நாத்திகமே மேல் என்று என்ன தோன்றுகிறது. மதமே தேவை அற்ற ஒரு கொடிய அமைப்பாக தோன்றுகிறது,எல்லா மதங்களையும் உடனே அழிக்க வேண்டும் போல் கூட தோன்றுகிறது.ஆனால் ஒரு சிலர் மட்டுமே தவறானவர்கள் என்று நினைக்கும் போது சற்றே ஆறுதல் ஏற்படுகிறது.

கடவுள் ஒவொருவரின் தனிப்பட்ட விஷயம் மனிதம் மட்டுமே எல்லோருக்கும் பொதுவான அவசியமான விஷயம்.மனிதத்துக்கு மேல் மதம் கொண்டாட பட கூடாது.அடுத்தவர் மதத்தை இகழும் குணத்தை தாங்கள் கண்டித்து வருவது மிகவும் வரவேற்க தக்கது. ஆனால் நீங்கள் இப்போது எழுதியுள்ளது அடுத்தவரின் ஊனத்தை எடுத்து சொல்வது போல உள்ளது. நாம் ஏன் அவர்களை போல் நடக்கவேண்டும்.
நீங்கள் பலமுறை நாம் நம்மை பற்றியும் மற்றவர்கள் கருத்துக்கள் பற்றியும் தெளிவாக அறிந்து இருந்தால் அதுவே நம்மை மற்றவரின் தாக்குதல்களில் இருந்து காக்க உதவும் என்று எழுதுவீர்கள் அது சிறந்த கருத்து. இன்றைய உடனடி தேவை நாம் நம் கருத்துக்களையும், மற்றவர் செய்யும் அவதூறுகளையும் நம் மக்களுக்கு தெளிவாக எடுத்து செல்வது மட்டுமே.
அவர்களுக்கும் நமக்குமான ஒப்பீடுகளை தருவது சரியானதாக தெரியவில்லை. என் கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

அன்பு நண்பர் திரு. சதீஷ் அவர்களே

காமெடியன் என்றும், காமடியன் கூட இல்லை முட்டாள் என்றும், உளறுபவன் என்றும் ச் சீ என்றும் எழுதுகிறார்கள், வாயில் இருந்து வருவதுதான் ஒருவனை தீட்டுப் படுத்தும் என்று இயேசு கூறியதை அறிந்தும் இப்படி பலர் செயல படுகின்றனர்.
பன்றி என்று எழுதியதைப் படிக்கவில்லை. எங்கே எழுதியிருக்கிறார்கள என்று தெரியப் படுத்தினால் படித்து தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

ஒரு உண்மையான , நேர்மையான சிந்தனையாளன் மக்களுக்கு நன்மை தரக் கூடிய கருத்துக்களை தயங்காமல் முன் வைக்க வேண்டிய கடமையில் இருக்கிறான். அப்போது அவன் பல இகழ்ச்சிகளையும் இடையூறியும் சந்திக்க நேரிடலாம்.

விவேகானந்தர், காந்தி, பாரதியார், ஆதி சங்கரர், இயேசு, சாக்ரடீஸ், ,புத்தர், கிருஷ்ணர் உள்ளிட்ட பலரும் பல இகழ்ச்சிகளையும் இடையூறுகளையும் சந்த்திதவர்கள் தான்.

நான் அவர்கள அளவுக்கு பெரிய சிந்தனையாளன் இல்லை. அதனால் எனக்கு அதிக பட்சம் இப்படி, பன்றி, உலருபவன் போன்ற பட்டங்களோடு முடிந்து விடும் என நம்புகிறேன்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

இது தான் அந்த தளம்.

//CHILLSAM

நண்பர் அசோக்குமார் அவர்களே நல்லவேளையா உள்ளே வந்தீங்க… கண்டதும் உள்ளே வந்துட்டதால கொஞ்சம் கதவை மூடவேண்டியதாயிடுத்து… நீங்கபாட்டுக்கு ஆரம்பிச்சு வெச்சுட்டு போயிட்டீங்க நான் சமாளித்து வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது… நீங்க ஒண்ணு செய்யுங்க,அவிங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அதனால தான் சும்மாவேனும் சமாளிக்கிறாங்க‌, நல்லா பொட்டையும் புண்ணாக்கையும் வடைமாலையையும் லட்டையும் பஞ்சாமிர்தத்தையும் பொங்கலையும் கூழையும் சுண்டலையும் தின்னு வெப்பானுங்க அதுக்கு மேல எதுவும் தெரியாது, நாமதான் அவிங்களுக்கு பொறுப்பா எதாவது சொல்லிக்கொடுக்கணும்… எனவே நீங்க நேரடியா விஷயத்துக்கு வாங்க‌… அதாவது ஒவ்வொரு கேள்விக்கும் நீங்களே பதிலை சொல்லிடுங்க‌… அத மறுத்து சொல்றவங்கள பெறகு பாத்துக்கலாம்..!

__________________
“Taking care for every Soul through Counseling”
Ashokkumar
Member>>>முன்னேறிச் செல்க..!

Posts: 12
Date: August 21st

Printer Friendly

திருச்சிக்காரன் போன்றோரின் விதண்டாவாதங்களை பார்க்கும் பொது, பன்றிகளின் முன்னாள் முத்துக்களை சிதரவிடுகிறோமோ என்றே தோன்றுகிறது. //

கண்டதும்—- இது யாருக்கு சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.
இதை நீங்கள் படிக்கவில்லையா?

மனித நேயத்தை விட, மனிதனையும் பிற உயிர்களையும் மதிப்பதை விட, இந்து மதமோ,கிறித்தவ மதமோ, கிரிஷ்ணரோ அல்லது ஏசுவோ சிறந்தவை ஆகா முடியாது.
அவரவர் அவரவர் எல்லைக்குள் இறையை தேடிக்கொண்டு அடுத்தவரை மதித்து வாழும் நற்பண்பை உள்ளவரை விட எந்த மதவாதியும் சிறந்தவர் ஆக முடியாது.
இறையை தேடாதவர் ஆயினும் அடுத்தவரை மதித்து வாழும் நற்பண்பை உள்ளவரை விட எந்த மதவாதியும் சிறந்தவர் ஆக முடியாது.
அன்பே (எல்லோரிடத்தும்) சிவம் ஆக முடியும் அல்லது கிறித்து ஆக முடியும்.

நாம் அவர்களின் தூற்றுதலகளை மட்டுமே எதிர்போம்,நம் மீதான அவதூறு மற்றும் பொய் பழிகளை முறியடிப்போம். பதிலுக்கு அவர்களை போல் நாமும் நடக்க வேண்டாம்.பங்காளி சண்டை என்றாவது ஒரு நாள் திருமணம் அல்லது மற்ற விசேசங்களில் நிச்சயம் மறைந்து போகும்.

//விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். //
ஒரு சின்ன வேண்டுகோள் துளசி பற்றி இப்படி ஒரு இழித்துரை தயவு செய்து இது சம்பந்தப்பட்ட புராண கதையை விளக்குங்கள்,இதனை பற்றி நான் அறிதிருக்கவில்லை.

இந்த‌ துள‌சி என்று சொல்ல‌ப் ப‌டுவ‌து நாம் ப‌ல‌ரும் அறிந்த‌ வ‌கையிலே ப‌ல‌ ம‌ருத்துவ‌ குண‌ ங்க‌ளை உடைய‌ ஒரு சிற‌ந்த‌ தாவ‌ர‌மே. அது பெண்ணாக‌ இருந்திருந்தால் இந்த‌ க‌ற‌ப்ப‌லிப்பு நிக‌ழ்வு உண்மையாக‌ இருந்திருந்தால் அதை செய்த‌வ‌ர் யார‌க‌ இருந்தாலும் மூர்த்தியாக‌ இருந்தாலும் ம‌னித‌னாக‌ இருந்தாலும் நாம் அதைக் க‌ண்டிக்கிறோம், எதிர்க்கிரோம்.ஆனால் உண்மையா என்று ஆராய‌ வேண்டும். க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ இய‌லாது. இவ‌ர்க‌ள் வேத‌த்திலே இந்த‌ நிக‌ழ்வு இருக்கிர‌து என்று சொல்கிரார்க‌ள். நாமும் ரிக், ய‌ஜுர், சாம‌, அத‌ர்வ‌ண‌ வேத‌ங்களில் தேடியும் கிடைக்க‌வில்லை. ப‌க‌வ‌த் கீதையிலும் இல்லை.

தெளிவாக‌ இந்த‌ அதிகார‌ம், இத்தனாவ‌து சொல் என்று குறிப்பிடாம‌ல் சும்மா பாட்டி வ‌டை சுட்டாங்க‌, காக்கா வ‌ந்த‌து என்ப‌து போல‌ ஜ‌லேந்திர‌ன் என்ரு ஒருவ‌ன் இருந்தானாம் என்று எழுதி உள்ள‌ன‌ர். என‌வே எங்கே இருக்கிற‌து என்ப‌தை தேடி நாம் ஆராய‌ வேண்டும். ஆனாலும் இது ஒரு முக்கிய‌ விட‌ய‌ம். நாம் நிச்ச‌ய‌ம் இது ப‌ற்றி விவாதிப்போம். விரைவில் க‌ட்டுரை வெளியிட‌ப் ப‌டும்.க‌ற்ப்ப‌லிப்பு த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.

Padma purana is one of the major eigteen puranas of Hinduism. And the Padma purana talks about Tulsi (Vrinda) Story.
The below paragraph I copy and paste it from Wikipedia:
According to Hindu mythology, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu – the preserver in the Trinity – to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva. Vrinda cursed Vishnu to become black in colour and he would be separated from his wife. Thus, he was transformed into the black Shaligram stone and in his Rama avatar, his wife Sita was kidnapped by a demon-king and thus separated from him. Vrinda then burnt herself on her husband’s funeral pyre or immolated herself due to the shame. The gods or Vishnu transferred her soul to a plant, henceforth which was called as Tulsi. As per a blessing by Vishnu to marry Vrinda in her next birth, Vishnu in form of Shaligram – married Tulsi on Prabodhini Ekadashi. To commemorate this event, the ceremony of Tulsi Vivah is performed.[3][4][6]

//த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.//
Kandiyungal.

இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது.

ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த ஸ்மிருதி வகையை சேர்ந்ததே ஆகும்.

இதில் ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது. இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது. ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த சிமிருதி வகையை சேர்ந்ததே ஆகும். ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது.

இந்த துளசி என்பது ஒரு தாவரம் ஆகும். அது பூசனைக்கு பயன் படுத்தப் படும் பொருள்களில் முதன்மை வகிக் கிறது. அது பல மருத்துவ குணங்களை உடையது. அது மிகவும் புனிதமாக கருதப் படுகிறது என்பதும் உண்மையே.

இப்போது நீங்கள் சொல்லும் படிக்கான விடயத்திற்கு வருவோம்.

பிருந்தா என்பவர் ஜலேந்திரன் என்பவற்றின் மனைவி என்றும், அவரின் கர்ப்பொழுக்க வலிமையால் ஜலேந்திரனை யாரும் வெல்ல முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதிலே ஜலேந்திரன் என்பவர் பலரையும் தொல்லைப் படுத்தி வந்ததால் அவரை வென்று அழிக்க வேண்டிய கட்டாயத்தில் விஷ்ணு அல்லது நாராயணன் என்று சொல்லப் படுபவர் இருந்ததாக சொல்லப் படுகிறது.

இதற்காக அவர் ஜலேந்திரன் போல வேடமிட்டு துளசியை ஏமாற்றிக் கரப்பளித்ததாக சொல்லப் படுவது உண்மையானால பரவாயில்ல வேறு என்ன பண்ணுவாரு பாவம் என்று விட்டு விட முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே.

இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். யாருக்கும் அஞ்ச வேண்டியவோ, வேடம் போடா வேண்டியவோ அவசியம் இல்லாத அளவுக்கு வலிமையும் முழு கண்ட்ரோலும் உள்ளவராகவே சொல்லப் படுகிறார். எல்லாமே அவராக இருப்பதாக சொல்லப் பட்டு உள்ளது. அவர் அவ்வப்போது (ஒவ்வொரு யுகத்திலும்) அவதாரங்கள் எடுப்பதாகவும் பகவத் கீதை சொல்கிறது.

(தொடரும்)

அடுத்தவன் மனைவியை, அவள் புருஷனின் வேடமணிந்து, கற்பழித்து, அவளை தற்கொலைக்கு தூண்டியது பேய்தனமா? தெய்வீகமா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் திருச்சிக்காரன்.

இதுல என்ன அண்ணனே மன சாட்சி, நாம் தான் தவறு என்று சொல்லி இருக்கிறோமே. நாம அது சரி என்று சொன்னால் தானே மனசாட்சியை கேட்க வேண்டும். நம்முடைய தெளிவான பதிலை ஏற்க்கனவே சொல்லி இருக்கிறோம். இந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்குமானால், அது ஒரு தவறு, குற்றம், அதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது என்பதை திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம்.

நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் தானே அவர் இனவாதம் செய்யலாம், இனப் படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தலாம், ஒரு இனத்துக்கு தான் முன்னுரிமை என்று சொல்லாலாம் , எல்லாம் சரிதான் என்று சொல்லுபவர் அல்ல நான். துளசியார் ஏமாற்றிக் கற்பழிக்கப் பட்டு இருந்தால் அது தவறுதான், அப்படி செய்தவர் மனிதராக இருந்தாலும், அரக்கராக இருந்தாலும், தேவராக இருந்தாலும் அது தவறுதான், வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு நான் சொல்லும் இன்னொரு தகவல் என்ன என்றால், இந்த நாராயணர் என்று சொல்லப் படுபவர் இந்து மதத்தின் முக்கியக் கடவுளாக வோ, ஆதி கடவுளாகவோ சொல்லப் பட்டதாக இல்லை. இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாராயணர் முக்கியமாக வணங்குகின்றனர் என்பது உண்மையே.

ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை. கீதையில் வைகுந்தம், பாற்கடல்… பற்றி எல்லாம் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அதே நேரம் நாராயணர் என்று சொல்லப் படுபவர் விருந்தா எனப் படும் பெண்ணை ஏமாற்றிக் கரப்பளித்தார் என்று சொல்லப் படும் ஒரு குற்றச் சாட்டு அது உணமியா என்று தெரியவில்லை, புனைவாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அது உண்மையாக இருந்தால் கண்டிக்கிறேன் , எதிர்க்கிறேன்.

நான் கேட்டது ஒரு மார்க் கேள்வி. பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் “அசுரத்தனமா” அல்லது “தெய்வீகமா”? நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைப்பது ஏனோ?

ஒரு ஆராய்ச்சி என்று வரும் போது நம்முடைய் கருத்துக்களை விளக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. ஒற்றை வார்த்தையிலோ, வரியிலோ பதில் சொல்ல இது என்ன கட்டைப் பஞ்சாயத்தா?

ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து அது சரியா இல்லையா, என்று சொல்லுகிறோம்.

ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து அதன் மீதான கருத்தை முன் வைக்கிறோம்.

முதலில் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வேதங்களில் இருக்கிறது என்றால் அதை ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வேதங்களில் இருக்கிறது என்று சொல்லி விட்டு புராணத்தை எடுத்துக் காட்டுகிறார்கள. இவரக்ள எந்த விஷ்ணுவை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள வாழ்ந்த காலத்தில் துளசி என்ற பெயரில் ஒரு பெண் வசித்து இருக்கக் கூடும். விஷ்ணு என்று ஒரு அரசன் ஆட்சி செய்து இருக்கக் கூடும். அல்லது இவர்கள சொல்லும் விஷ்ணு எனப் படுபவர், வைகுந்தத்தில் வாசம் செய்பவர் என சொல்லப் படும் நாராயணர் என்று இருந்தாலும் , அவர் இப்படி கற்பழிப்பு செயலில் ஈடு பட்டு இருந்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இன அழிப்பு செய்தாலும் பரவாயில்லை, ஒரு இனத்தை இரட்சிக்க வந்தேன் என்று சொன்னாலும் பரவாயில்லை என்று கை கட்டி, வாய் பொத்தி மண்டியிடவில்லை நாம்.

ஐயா,
நான் கேட்கும் கேள்வி பத்மபுராணத்தில் வரும் கதாப்பாத்திரத்தை பற்றியே. பத்மபுராணம் உண்மையா என்று கேட்கவில்லை. அல்லது அதில் வரும் விஷ்ணுதான் நாராயணனா என்று கேட்கவில்லை. எதற்க்காக நீங்கள் இப்படி மழுப்புகிறீர்கள். நேர்மையான மக்கள் இப்படி மழுப்பவேண்டிய அவசியம் இல்லையே.
பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் செய்தது அசுரத்தனமா அல்லது தெய்வீகமா?
உண்மை சுடும் என்று பயமாய் இருந்தால், பதில் அளிக்க வேண்டாம்.

அசோக்,

இந்த கேள்விக்கு தெளிவான பதில் அளித்தாகி விட்டது. ஏமாற்றிக் கற்பழிக்கும் கொடும் செயலை செய்தது யாராக இருந்தாலும், அது ஒரு அயோக்கிய கொடூர செயலே. அதற்கு தக்க தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இதிலே உண்மை சுட என்ன இருக்கிறது?

அப்போ இந்த விஷ்ணு செய்தது, அரக்கதனம்தான்னு ஒத்துக்கிட்டீங்க.
அதைத்தாங்க நிறைய சுவிஷேஷர்களும் சொல்லறாங்க. அவங்க இதை சொல்ல தேவை இல்லைதான், ஆனாலும் அவங்க அப்படி சொல்றது தப்புன்னு தெரியலை. இப்போ பாருங்க நீங்க கூட இந்த விஷ்ணுங்கரவரு செய்தது தப்பு, கண்டிக்கதக்கதுன்னு சொல்லறீங்க.

விஷ்ணு என்பவர் மீது குற்றச் சாட்டு வைக்கப் பட்டு உள்ளது. அது உண்மையா என்று பார்க்க வேண்டும். உண்மையாக இருந்தால் தவறுதான். இது காரண காரியத்தின் அடிப்படையில் சொல்லப் படுவது. நீங்கள் சொல்லும் சுவிசெசகர் எந்த விதக் காரணமும் இல்லாமல் பிற மதங்களின் மீது உள்ள வெறுப்பு உணர்ச்சி காரணமாக , தங்களுடைய மத வெறி காரணமாக பிற மதங்களின் தெய்வங்களை இகல்கினறனர். சரஸ்வதி தேவி விக்கிரக ஆராதனையில் எந்த தவறும் இல்லை. சரசவதியரும் எந்த தவறும் செய்ததாக இல்லை. அவரை வணங்குபவரும் நல்ல எண்ணங்களையே அதனால் பெறுகின்றனர். ஆனால் இதையும் சுவிசெசகர் கண்டிக்கின்றனர். அது ஏன்?

ஐயா திருச்சிக்காரரே,

ஒரிறைக் கொள்கை மற்றும் அருவம் (அதாவது உருவற்ற இறை) இந்துத்துவத்தில் இல்லை என்று சொல்வோர்கள் முட்டாள்கள். தன்னைத்தான் தோண்டி கடவுளைக் கண்ட மகான்களைக் காண நேர்ந்தால் அவர்களிடம் கேளுங்கள். சிதம்பரத்திலும் ஆவுடையார்கோயிலிலும் உருவங்களா கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன ?

இல்லை.

அருவங்கள்தான். இஸ்லாம் போற்றிச் சொல்கின்ற அருவ வழிபாடுதான்.எனவே இந்துத்துவத்தில் அருவ வழிபாடு உண்டு.ஆகையால், இஸ்லாமின் தாய் மதம் இந்துத்துவம் எனச்சொல்வீர்களா?

இதெல்லாம் புரியாமல் மதவெறியர்கள் தங்கள் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை வேறுபடுத்தி சண்டையிட வைத்துக் குளிர் காய்கிறார்கள்.

திரு அபூ (தமிழாக்கம் சரியா) அவர்களே,

இந்து மதத்திலே அருவ வழிபாடு, ஒருமை கொள்கை (அத்வைதம் ) எல்லாம் இருக்கின்றன.

இப்போது பிரச்சினை என்ன வென்றால் – உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒருமை கொள்கை, இருமைக் கொள்கை மும்மை கொள்கை – இப்படி பல வழிகளில் ஆத்மீக தேடல்களில் ஈடுபடுபவர்கள் ஒருவர் மற்றவரையோ, அவர்களின் வழிகளையோ வெறுக்க வேண்டியதில்லை, அந்த வெறுப்பு மிக அபாயமான விளைவுகளை தரக் கூடியது என்பதுதான். வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோம், எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள உள்ளன, அவற்றை முன்னிலைப் படுத்தி, நல்லிணக்கத்தை வளர்ப்பது நன்மையை தரும். சகிப்புத் தன்மை இன்மையை பகைமையை உருவாக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?

சத்யமேவ ஜெயதே

Wish a happy engineers day

இன்று பாரத ரத்னா உயர் திரு மோக்ஷ குந்தம் விஸ்வேஸ்வரையா
(1860 -1962 ) இந்தியாவின் முதல் பொறியாளர் அவர்களின் பிறந்த நாள்.

http://www.karnataka.com/personalities/visvesvaraya

//Jalandara was married to Tulasi devi and drew strength from her purity and chastity. So firm was her chastity that even Lord Shiva could not defeat Jalandara in battle and all the demigods went to Lord Vishnu for help.

At this time, Lord Vishnu went to Tulasi devi assuming the form of her husband, Jalandara. When Tulasi devi greeted Him, thinking Him to be her husband, her chastity was momentarily broken. Taking advantage of this the demigods killed Jalandara. //
http://www.salagram.net/parishad95.htm

today starts search on tulsi story and this is what i read about tulsi still search is going on, i will get back again with more details.

//எனவே பிறப்பு இறப்பு, மறுபிறப்பு சுழற்சிக் கொள்கையே கடவுளின் நியாயயமும் , நீதியும் , கனிவும், அன்பும் உடைய தன்மைக்கு பொருத்தமாக உள்ளது என்பதை அறியலாம்.//

பார்பன பிறவி அதாவது பிராமணப் பிறவி தான் கடைசி பிறவியாமே, இது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ?

திரு.கோவி. கண்ணன் அவர்களே,

இந்த பிறப்பு , இறப்பு சுழற்ச்சிக் கோட்பாடானது இந்து, பவுத்த , சமண மதங்கள் முன் வைக்கும் கோட்பாடாகும். அந்தக் கோட்பாட்டை ஆராய்ந்து இருக்கிறோம், அவ்வளவே. விவேகானந்தர் சிக்காகோவில் பேசும் போது மனக் குவிப்பு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டவன் , ஆழ்ந்து சிந்திக்கும் போது அவனுக்கு அவனுடைய முந்தைய பிறவிகளும் நினைவுக்கு வரும் என்றும் தன்னால் தன் முந்தைய பிறவிகளை நினைவு கூற முடிந்ததாகவும், நீங்களும் முயன்றால் முடியும் என்றும் , அவையிலே சொல்லி இருக்கிறார். எனக்கு அந்த அளவுக்கு பயிற்ச்சியும் இல்லை, பலரையும் போல நினைவு தெரிந்த நாள் முதல் தெரிந்ததுதான். எனவே இந்த பிறப்பு , இறப்பு சுழற்ச்சிக் கோட்பாட்டை என்னுடைய அனுபவத்தினால் உறுதி செய்யவில்லை, கோட்பாட்டை ஆராய்ந்து இருக்கிறோம், அவ்வளவே, அதற்க்கு சாட்சி கொடுக்கவில்லை.

பார்ப்பனர் என சொல்லப் படுபவர் பற்றி, – வேகாமாக சுற்றும் சக்கரத்தில் ஏறும் யாரும் மைய விலக்கு விசைக்கு ஆளாவது போல சுழற்சி வலையில் சிக்கிய எல்லோரும் அதில் சிக்கி தவிப்பதாக சொல்லப் பட்டுள்ளது, பார்ப்பனர் என்பவருக்கு ஸ்பெசல் ப்ரோவிசன் எதுவும் இல்லை. இது பற்றி ஆதி சங்கரர் கூறும் போது , பார்ப்பனன் என்று தன்னைக் கருதிக் கொள்பவன், நான்கு வேதங்களையும் கற்று ஓதினாலும், காலையும், மாலையும் நூறு முறை மூச்சுப் பயிற்சி எடுத்தாலும், தன்னுடைய உயிரின் உண்மை தன்மையை அறியாத வரையிலே ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் அவன் சுழற்ச்சி வளையத்தில் இருந்து விடுபடுவது இயலாது என்று சொல்லி இருக்கிறார்.

திருச்சிக்காரரே,

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

மேற்கண்ட கொடுமையை இன்றைக்குத் தான் பார்க்க நேர்ந்தது.

“நாராயண பரம் பிரம்மா தத்வம் நாராயண பர:”, “விச்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் ப்ரபும்”, “தத் விஷ்ணோ: பரமம் பதம்” முதலான சுருதி வாக்கியங்களைக் கேட்டிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.

புருஷோத்தமன் நாராயணன் அன்றி வேறு யார்? சங்கரருடைய கௌடபாதீய (மாண்டூக்ய) காரிகா பாஷ்யத்தை எல்லாம் நீங்கள் படித்திருப்பீரா என்பது தெரியவில்லை. அதில் நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள மங்கள சுலோகத்தில் “த்விபதாம் வரம்” என்று வருவதை “புருஷோத்தமன்” என்று சங்கரர் பாஷ்யம் செய்து, “நாராயணன் என்ற பெயரை உடைய கடவுள்” என்று அறுதியிடுகிறார்.

“ஹரிர் யதைக: புருஷோத்தம ஸ்ம்ரிதௌ” என்று ரகுவம்சத்தில் காளிதாசனும் கூறுகிறான். இதற்கு அர்த்தம், “ஹரி ஒருவனே புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறான்” என்பது. இதையெல்லாம் கண்ணிருந்தும் காணாமல் இப்படி எழுதிகிறீரே! அத்துடன் ஒருபக்கம் சமரசம் போதித்துவிட்டு இன்னொருபக்கம் “நாராயணன் முழுமுதற் கடவுளாகக் கருதமுடியாது” என்று எழுதலாமா?

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

சுத்தம்! அர்ஜுனன் கிருஷ்ணனை “விஷ்ணு”, “கேசவன்”, “ஹரி”, “அச்யுதன்” என்றெல்லாம் கூறுகிறார். சஞ்சயரும் கிருஷ்ணனை விஷ்ணு என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். ஆதி சங்கரரும் கீதா பாஷ்யத்தில் கிருஷ்ணரை “ஆதி கர்த்தா நாராயணன் எனப்படும் விஷ்ணு” என்று தான் அடையாளம் காட்டியிருக்கிறார். இதெல்லாம் தெரியாது போலும்.

அது சரி, பகவத் கீதை மகாபாரதத்தின் பகுதி தானே? மகாபாரதத்தில் எத்தனை இடங்களில் நாராயணன் தான் கிருஷ்ணனாக அவதரித்தான் என்று கூறப்பட்டிருக்கிறார் என்று தெரியுமா?

ராமாயணத்தில் வால்மீகி மிகத் தெளிவாக ராமன் விஷ்ணுவின் அவதாரமே என்று கூறுகிறார் (பால காண்டம், யுத்த காண்டம் மட்டுமல்ல. அயோத்தியா அகண்டத்திலும் உண்டு). கம்பரைக் கேட்கவே வேண்டாம், அவர் காவியம் முழுவதிலும் திருமால்/நாராயணன்/விஷ்ணு தான் ராமனாகவும் பிறந்தார் என்று கூறியுள்ளார்.

சங்க இலக்கியங்களிலும் திருமால் தான் கண்ணனாக அவதரித்தார் என்று வருகிறது. சிலப்பதிகாரத்திலும்,

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

என்று வருகிறதை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

எந்த கவியும், எந்த பாஷ்யகாரரும், எந்த ஆச்சாரியாரும் எங்கு தேடினாலும் “இராமனும் கண்ணனும் விஷ்ணுவின் அவதாரமே” என்பதைக் கூறாமல் விடுவதில்லை. நம் நாட்டில் எந்த இலக்கியம், சிற்பம் முதலியனவற்றை எடுத்துக்கொண்டாலும் அதில் நாராயணன் தான் கண்ணனாகவும் இராமனாகவும் அவதரித்ததாகவும் உள்ளது.

இதை எல்லாம் காணாமல் ஏதோ “ஆராய்ச்சி” செய்கிறேன் என்று கண்ணனையும் இராமனையும் விஷ்ணு/நாராயணரின் அவதாரம் அல்ல என்று கூறுவது எவ்வளவு பேதைமை!

அன்புக்குரிய திரு. கந்தர்வன் அவர்களே,

இந்துக்களை பொருத்தவரையில் காளி, துர்க்கை, பாலாஜி, முருகன், ஐய்யப்பன், விநாயகர் … இப்படி அன்புடன் வழிபடும் தெய்வங்கள் உண்டு. இதிலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மூவரில் விஷ்ணு, சிவன் ஆகியவர் சிறப்பாக வழி படப் படுகின்றனர்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்த்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடுப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள்.

இந்த உலகிலே தன்னை கடவுள் என அறிவித்துக் கொண்ட ஒரே ஒருவராக கண்ணன் இருக்கிறார். தானே பல அவதாரங்களை எடு ப்பதாக அவர் சொல்லி விஸ்வ ரூபம் காட்டியதாக சொல்லியதை எல்லாம் நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். எந்த தெய்வத்தையும் நாம் இகழவில்லை. விஷ்ணு சந்நிதியில் நீந்கள் ஒரு அங்க பிரதக்ஷிணம் செய்தால் நான் இரண்டு முறை செய்ய தயார் என்று முன்பே சொல்லி இருக்கிரோம்.

மேலும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஆராயவும், இல்லை என மறு த்து சொல்வதையும் இந்து மதம் தடுக்கவில்லை.

திருச்சிக்காரன் அவர்களே,

நான் மத நல்லினக்கத்திற்கோ ஒற்றுமைக்கோ எதிராக ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் கூறிய இரண்டு (மன்னிக்கவும் – அபத்தமான, உண்மையற்ற) செய்திகளைத் தான் எதிர்க்கிறேன்.

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக , எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார். //

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

இதைத் தான் வாபஸ் வாங்கிக்கொள்ளச் சொன்னேன்.

திரு. கந்தர்வன் அவர்களே, இந்த வாக்கு வாதம் தேவை இல்லாதது. இதை நாம் ஏற்க்கனவே விவாதித்த்து இருக்கிறூம்.

கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

இராமரை பரப் பிரம்மத் தின் வடிவம் என்றே துளசி தாசர், சங்கரர், தியாகராஜர் ஆகியோ ர் பாடுகின்றனார். நம்மப் பொருத்த வரையில் நாம் எந்தக் கடவுளையும் இகழவில்லை. எந்தக் கடவுளையும் பார்க்கவும் இல்லை.

கடவுள் எந்று ஒருவர் இருந்தால் அவர் சீதையாக , அனுமனாாக, நளனாக , குகனாக வந்திருந்தால் அது அந்தக் கடவுளுக்கு தான் பெருமை. சீதை யோ, இலக்குவனோ, பரதனோ, அனுமனோ… கடவுளாக இருப்பதாக இருந்தால் அந்த கடவுள் பட்டததினால அவர் களுக்கு புதிய சிறப் போ, பெருமையோ இல்லை.

// கிரிஷ்ணர் கீதையில் எந்த இடத் திலாவது நான் வைகுந்தத்தில் இருக்கிறேன் என்றோ, பாற்கடலில் மிதக்கிறேன் என்றோ சொன்னதாக நான் படித்த அளவில் இல்லை.

திருச்சிக்காரரே,

கீதையை பிரமாணமாக எடுத்தால் மகாபாரதம் முழுவதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் – ஒத்துக் கொள்வீர் என்று நினைக்கிறேன்.

“ஏஷ நாராயண ஶ்ரீமான் க்ஷீரார்ணவ நிகேதன: |
நாகபர்யங்கம் உத்ஸ்ரிஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் ||”

என்பது பகவத் கீதையை ஒரு பகுதியாகக்கொண்ட மகாபாரத சுலோகம். இதன் அர்தம், “இந்த ஶ்ரீமன் நாராயணன் பாற்கடலில் இருப்பவன். தன்னுடைய நாகப் படுக்கையை விட்டு மதுரா நகரத்திற்கு வந்துள்ளான்” என்பது. இதை இடைச்செருகல் என்று தள்ள முடியாது, ஏனென்றால் ராமானுஜர் கீதா பாஷ்யத்தில் இவ்வாக்கியத்தை மேற்கோளாக எடுத்துள்ளார்.

அத்துடன் கீதையின் முதல் அத்தியாயத்திலேயே அர்ஜுனன் கிருஷ்ணனை “மாதவன்” என்று அழைக்கிறான். கிருஷ்ணனுடைய சங்கு பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது. இதெல்லாம் பாற்கடல் விஷ்ணு இல்லாமல் வேறு யார்?

அன்புக்குரிய சகோதரர் திரு. கந்தர்வன் அவர்களே,

பகவத் கீதை என்றால் பகவானின் பாட்டு, பகவானின் குரல் என்று பொருள் என்கிறார்கள்.

நீங்களோ வேறு யாரோ கிரீஷ்ணறை நாராயணனின் அவதாரம் எனக் கொண்டால், அப்படிக் கருதுவதற்க்கு உங்களுக்கு உரிமை உண்டு. சமததுவ வீரர், மஹா ஸ்ரீமன் இராமனுஜாருக்கு என் வணக்கங்கள்

///////பார்பன பிறவி அதாவது பிராமணப் பிறவி தான் கடைசி பிறவியாமே, இது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ?/////

திரு.கோவி. கண்ணன் அவர்களே,
அப்படி உங்களுக்கு கூறிய மேதை யார்? அது எந்த வேத அல்லது புராண இதிகாசத்தில் அல்லது தமிழ் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாம்? விவரமாக வரிகளுடன் தெரிவித்தால் புரிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுன் தானே

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டோர்
கள்ளுன்ன வேண்டான் தானே களிதருந்
துள்ளி நடப்பிகுஞ் சோம்பும் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையோருக்கே

பிராணன் மனத்தோடும் பேராதடக்கி
பிராண னிருகிற் பிறபிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
என்றுதான் தமிழில் ஒருவேதம் சொல்கிறது. இது பிரணயாம முறையில் பிறவி களைய திருமூலர் காட்டும் வழி. இது எல்லோருக்கும் பொதுவானது அன்றி பார்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்று கூறவில்லை. மானிட பிறவிக்கும் பொதுவான வழியே

// ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிரிஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.//

ஆனால் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை 30 பாசுரங்களும் நாராயணனே என கூறுகின்றன

எல்லாம் புரிந்து கொள்வதில் தவறில்லை ,நல்ல பதிவு .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: