Thiruchchikkaaran's Blog

நீதி இன்னும் உயிரோடு இருக்கிறது, இந்த நாட்டில்!

Posted on: September 11, 2010


அப்பாவி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா   ஆகிய மூவரும் துடிக்க துடிக்க எரித்துக் கொல்லப் பட்ட தருமபுரி பஸ் எரிப்பு நிகழ்வில், குற்றம் சாட்டப் பட்ட (அதிமுக கட்சியை சேர்ந்த) நெடுஞ்செழியன் , ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்து இருக்கிறது.

மரண தண்டனை என்பது மகிழ்வூட்டும் விடயம் அல்ல.

ஆனால் மரண தண்டனை என்பது – அப்பாவி மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துபவர்களின்களின் வெறித் தனத்தை மட்டுப் படுத்தும் வாய்ப்பாக – அமைய வாய்ப்பு உள்ளது.

‘நம்மை யாருடா கேக்குறது, நாம செய்வதை  செய்வோம்” என்ற வகையிலே வெறியாட்டம் போடும் வன்முறை மனப் பாங்கு மட்டுப் படுத்தப் பட ஒரு deterrent  ஆக மரண தண்டனைகள் அமைய வாய்ப்பு உள்ளது.

ஆயுள் சிறைத்  தண்டனை  வழங்கப் பட்டால் 14  வருடத்திலே வெளியில் வந்து விடுகின்றனர். நன்னடத்தை காரணமாக பத்தாண்டுகளில் வெளியில் வந்து விடலாம் என்று சொல்லப் படுகிறது. தலைவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசுகள் இன்னும் சீக்கிரத்திலேயே சிலரை விடுதலை செய்து விடுகின்றன. இவ்வாறாக இரண்டு அல்லது நான்கு அல்லது ஆறு வருடத்திலேயே கொலை குற்றம் செய்து ஆயுள் தண்டனை பெற்ற வர்கள்    வெளியே வந்து விட வாய்ப்பு இருக்கிறது.

எனவே கொலை செய்வது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண நிகழ்வாக அமைந்து விடுகிறது.   “டேய் , நான் ஏற்கெனெவே ஒரு தலையை சீவிட்டு உள்ளே போயிட்டு வந்தவன்டா” என்று சொல்வது,  கொலை செய்தது  ஒரு குவாலிபிகேசன் போல ஆகி விட்ட நிலையாகக் கூடும்.

இப்படி பட்ட நிலையில் கொடூர  கொலைகளை செய்தவர்களுக்கு மரண தண்டனை உறுதி என்ற நிலை ஏற்ப்பட்டால் அவர்கள மனதிலே கொலை செய்தால் நாம் தூக்கிலடப் படுவோம் என்கிற ஒரு எண்ணம் – கொலை செயலை செய்யாமல் இருக்க deterrent   ஆக அமைய வாய்ப்பு உள்ளது.

சில நாடுகளில் செய்யப் படுவது போல மரண தண்டனையை பொது மக்கள் கூடும் இடத்திலே சாலை சந்திப்புகளிலே நிறைவேற்ற  வேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கிறோம்.  அப்போது தான் அனைவருக்கும் நன்கு புலனாகும்.

இந்த கொலை சம்பவத்தில் கொலை செய்தவர்கள் தங்கள்  கட்சித் தலைமையின் கவனத்துக்கு தாங்கள் வர வேண்டும்  என்பதை நோக்கமாக வைத்து இந்த அராஜக செயலை செய்திருக்கக் கூடும்.  மக்கள்  வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன, தங்கள் அரசியல் தான் தங்களுக்கு முக்கியம் என அராஜக செயலில் ஈடுபட துணிபவர்கள்,  இனி அப்படி செய்யு முன் இந்த தீர்ப்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இறந்த அப்பவி மாணவிகளின் நினைவு, நம் சொந்த சகோதரிகளே இறந்தது போல துக்கம் தொண்டையை அடைக்கும் உணர்வை ஏற்ப்படுத்துவாக உள்ளது.  அவர்கள சிறப்பாக படித்து நாட்டுக்கு, மக்களுக்கு உதவும் வகையிலே புதிய கண்டு பிடிப்புகளை அளித்து  இருக்கக் கூடும், ஒரு சிறந்த குடும்பத் தலைவியாக, அன்னையாக பரிணமித்து இருப்பார்கள். அவர்கள் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் .

Advertisements

5 Responses to "நீதி இன்னும் உயிரோடு இருக்கிறது, இந்த நாட்டில்!"

///நெடுஞ்செழியன் , ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்து இருக்கிறது///அந்த கொடூர செயலுக்கு சரியான தண்டனை கிடைத்தது,இது போல் மீண்டும் மனிதர்களுடன் பேருந்து எரிப்பு சம்பவம் நிகழாது என்றே கருதுகிறேன்.

பாவம் செய்யாத மூன்று மாணவிகளின் மரணத்திற்கு காரணமான அவர்கள் செய்த பாவத்திற்கான சம்பளத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் குடும்பத்தினரின் நிலை தான் பரிதாபமானது.

இந்த திருச்சிக்காரன் ரொம்ப மோசம், ஸ்கூல் படிக்கும்போதும் இப்படித்தான் நினைச்சா வர்றது நினைச்சா போறது, லீவ் லெட்டர் குடுக்கறதே இல்ல, அதனாலதான் இங்கே வந்து கஷ்டப்படறாரு, நல்லா வேணும்…அனுபவிக்கட்டும்..!

Dear Mr. Chillsam,

School, college, office …. we have commitment. Running the blog is also a commitment in a way. I thought I can publish the articles, but the time became a constraint.

I thank you for your continued participation.

//பாவம் செய்யாத மூன்று மாணவிகளின் மரணத்திற்கு காரணமான அவர்கள் செய்த பாவத்திற்கான சம்பளத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.// தனபால் ஐயா கிறிஸ்தவர்களைப் போல பேசுகிறார். மதம் மாறிவிட்டாரா?

திரு Asami அவர்களே,

அவர்கள் கர்மபலனை அனுபவிக்கிறார்கள். வார்த்தைகள் தான் வேறே தவிர அர்த்தம் ஒன்றுதானே???இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாதவர்களே மதம் மாறுவர்.நான் இந்து மதத்தை சரியாக தெரிந்திருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: