Thiruchchikkaaran's Blog

ரமதான் நோன்பு அனுபவங்கள் – 3

Posted on: August 11, 2010


ரமதான் நோன்பு அனுபவங்கள்- 3

  இஸ்லாமியர் ரமதான் நோன்பு நிகழ்வை சுமையாக எண்ணாமல் சுவையாக எண்ணி வரவேற்கின்றனர்.

  கடவுளின் மீது மிகுந்த பயபக்தி வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். பயபக்தியோடு கடவுளின்  மீதும் அன்பும் உடையவர்களாக இருக்கின்றனர். ரமதான் நோன்பு என்பது கடவுளுக்காக இருக்கப் படும் நோன்பாக அவர்கள்  அதை விருப்பத்துடனே   நோற்கின்றனர்.

என்னைக் கேட்டால் ரமதான் நோன்பின் முக்கிய பகுதி நீர் அருந்தாமல் இருப்பதுதான். உணவு அருந்தாமல் என்னால ஒரு நாள் கூட உண்ணாவிரதம்  இருக்க முடியும். ஆனால் நீர் அருந்தாமல் இருப்பது சிறிது கடினம் – சிறிது கடினம் மட்டுமல்ல- மிகவும் கடினம் ஆகும்.

நான்கு வருடங்களுக்கு முன்னாள் ஒரு ரமதான் மாதம் நெருங்கும் போது என்னுடைய நண்பர்கள நோன்புக்கு தயாரானார்கள். நீங்கள தான் மத நல்லிணக்கவாதி யாயிற்றே, எல்லா மதங்களையும் பற்றி அறிந்து கொள்வதில் முனைப்பு கட்டுகிறீர்களே, நீங்கள் என் இராமதானில் நோன்பு இருக்கக் கூடாது என்றனர். count me in  என்றேன்.

எப்போது நோன்பு திறக்க் வேண்டுமோ அதற்க்கு 15 நிமிடங்கள்  முன்பாகவே எனக்கு போன் பண்ணி சொல்லி விடுங்கள் என்றேன். அதிகாலை போன் பண்ணி , சாரி நண்பா , நோன்பு திறந்தாகி விட்டது என்றான். அப்படினா…. அப்படினா இதுக்கு மேலே எதுவும் சாப்பிட குடிக்கக் கூடாது என்றான். கவுத்திட்டியேடா, என்று சொல்லி பல் விளக்கி, குளித்து உடை அணிந்து பணிக்கு சென்றேன்.

எட்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது. எத்தனையோ நாள் சா[ப்பிடாமல் இருந்திருக்கிறோம், இன்றைக்கு எப்படி ஆனாலும்  நோன்பு இருப்பது என உறுதியாக இருந்தேன். பத்து மணிக்கு களைப்பாக இருந்தது. எனக்கு அப்போது கட்டுமானப் பிரிவில் பணி. வெய்யில் வேறு சுள் ளென்று   அடித்தது.

வெய்யில் வேறு சுள் ளென்று   அடித்தது.

ஒரு மணிக்கு தலை  சுற்றி நிஜமாகவே கண்ணைக் கட்டுவது போல இருந்தது.  சைட் ஆபீசுக்கு சென்று சேரிலே உட்கார்ந்தேன்.  ஆபீஸ் பாய் வந்து பெப்சி வைத்தான். வேண்டாம் என்று சொல்லி விட்டு, அரை நாள்  லீவு  போட்டு விட்டு  வண்டியை எடுத்து வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன்.

ஆறு மணிக்கு நண்பர்  போன் செய்து நோன்பு முடிந்து விட்டது ஜூஸ் குடிங்க. டேட்ஸ் சாப்பிடுங்க என்றார். பிரிட்ஜில் இருந்து ஜூசை  எடுத்து  குடித்து விட்டு உடுப்பி ஹோட்டலுக்கு சென்று இட்டில், மசால் தோசை அடித்தேன் (வீட்டில் தாயார் உட்பட அனைவரும் வெளியூர் சென்று இருந்தனர்) .

இரண்டாவது நாளும் விரதம் இருப்பது என்று முடிவு செய்து , அதற்க்கு முன்னேற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தேன். 

 (தொடரும்)

Advertisements

5 Responses to "ரமதான் நோன்பு அனுபவங்கள் – 3"

உண்ணா நோன்பு என்பது தன்னைத்தானே துன்புறுத்தும் ஒரு masochism மன நோய். இதற்கு வக்காலத்து வாங்காதீர்கள்

அன்புக்குரிய எழில்,

நோன்பு என்பது கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. நமக்கு மிகவும் தேவையான அத்யாவசியமான உணவு, நீர் போன்றவை கூட அருந்தாமல் இருப்பது கட்டுப்பாட்டை உருவாக்குகிறது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போனறவற்றை கூட விட்டுவிட கூடிய கட்டுப் பாட்டை பெறலாம். மலைக்கு மாலை போட்டுக் கொள்ளுபவர்கள். நாற்பது நாள் மது அருந்தாமல் இருக்கின்றனர். அதை அப்படியே கண்டியூ செய்வது நல்லது. ஆனால் பலர் மலைக்கு சென்று திரும்பி வரும் வழியுலேயே தண்ணி அடிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

is there any scientific proof ?

அன்புக்குரிய எழில்,

அறிவியல் ஆதாரம் வேண்டும் என்றால் இது விடயமாக சைக்காலஜி துறை நிபுணர்கள் தான் கருத்து சொல்ல முடியும். நமக்கு வேண்டிய விரும்பிய ஒன்றை அது அருகில் இருந்தும் அதை பயன்படுத்தாமல் இருப்பது ஒருவரின் மன உறுதி அதிகமாவதையே காட்டுகிறது. உதாரணமாக எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும், நான் அதிக அளவில் இனிப்பு உண்கிறேன். அதைக் குறைக்க முயலுகிறேன். அவ்வப்போது ஒரு வாரம் இரண்டு வாரம் இனிப்பை உண்ணாமலே இருக்கிறேன். அப்போது மன ரீதியாக வலிமையாக உணர்கிறேன். ஆனால் திரும்பவும் இனிப்பை உண்ண ஆரம்பிக்கிறேன், அப்போது கொஞ்சம் வலிமை குறைந்தது போல எண்ணுகிறேன். வீட்டிலே சுவீட் செய்து வைத்தால் அதை அதிக அளவில் உண்கிறேன். வீட்டிலே நம்மைத் திட்டுகிறார்கள், என்ன கட்டுப் பாடு இல்லையா , இவ்வளவு கட்டுரை எழுதுகிறாய் என்று பெரியவர்களும் திட்டுகிறார்கள். எல்லோருக்கும் சுவீட் வேணும்டா , நீயே மொத்தத்தையும் காலி பண்ணி விடாதே என்கிறாகள். இது அவமானவாகவும் இருக்கிறது.

நான் ஏகாதசி அன்றும், ரமதான் போதும் உண்ணா விரதம் இருக்கிறேன். இது கட்டுப் பாட்டையும் தருகிறது. மத நல்லிணக்கமாகவும் அமைந்து விடுகிறது.

அதே நேரம் நான் நோன்பு இருந்ததால் எனக்கு கடவுள் சக்தி கொடுத்தார் என்று சொல்லவில்லை. நோன்பு இருப்பது எனது சொந்த முயற்சி மூலம் எனது மன வலிமையை உயர்த்துகிறது என்பதே நான் சொல்லுவது. எப்படி ஒருவன் தினமும் டம்ப் பெல்லஸ் எடைகளை தூக்கி உடற் பயிற்சி செய்யும் போது அவன் உடல் தசைகள தானாக் வலிமை பெறுகிறதோ அதைப் போல நோன்பு போன்ற கட்டுப் பாடுகள் ஒருவனின் மன வலிமையை அதிகரிக்குமா என்பதே நான் சொல்லுவது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: