Thiruchchikkaaran's Blog

இந்து மதம் என்பது என்ன? பகுதி – 2.

Posted on: August 11, 2010


இந்து மதம் என்பது என்ன? 
 இந்து மதம் என்பது மனிதன் தன் நிலையை உயர்த்திக் கொள்ள உதவி செய்யும் மதம் ஆகும்.  மனிதனின் நிலை அவ்வப் போது  மாறுதல்களுக்கு உட்பட்டதாகவும், துன்பங்களால் தாக்கப் படுவதாகவும் உள்ளது.  துன்பங்களில் இருந்து முழு விடுதலை பெற்ற நிலையை ஒரு மனிதன் அடையவே இந்து மதம் உதவுகிறது.
 
தன்ன யார் தான் எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் என்பது பற்றி எல்லாம் தெரியாத நிலையிலே இயற்கையின் கையில் சிக்கு புயலில் சிக்கிய காகிதமாக மனிதன் தவிக்கிறான். துன்பங்களும் , இன்பங்களும் அவ்வப் போது மாறுகின்றன. குழந்தையாக  இருக்கும் போது தன்னுடைய பாதுகாப்பு,  மகிழ்ச்சி  உணவு ஆகியவற்றுக்கு அன்னையை நாடி இருக்கிறான். 
  

சிறு வயதில் விளையாட்டுப் பொருட்கள் அவனுக்கு இன்பம் தருவதாக உள்ளன.  எப்போது வாரம் முடிந்து சனிக் கிழமை வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டு விடு முறை வந்தவுடன் பேட்,  ஸ்டம்ப், பந்து போன்ற பொருட்களை சேகரித்துக் கொண்டு நண்பர்களை  நோக்கி ஓடுகிறான்.

காளைப் பருவம் வந்ததும் பெண்களிடம்  அதிக கவனம் செலுத்துகிறான். ஒரு நாள் ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு காதல் கொள்கிறான். அந்தப் பெண் இல்லாவிட்டால் என்னால் வாழவே முடியாது, இதயம் நின்று விடும் போல இருக்கிறது என்கிறான். அந்தப் பெண்ணைப் பார்பதற்கு முன்பு வரை எப்படி வாழ்ந்தான்? இப்போது புதியதாக இதயம் துடிப்பதற்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

வயதாகி விட்டால் விளையாட்டு, பெண்கள எல்லாம் பின்னுக்கு தள்ளப் பட்டு விடுகின்றன. முதுமையும், நோயும் அவனைப் பீடிக்கின்றன. எனக்கு ஒன்னும் வேண்டாம், இந்த நெஞ்சு வலி இல்லாமல் இருந்தால் போதும், மூட்டு வலி இல்லாமல் இருந்தால் போதும் என்கிற நிலைக்கு தள்ளப் படுகிறான்.

 இப்படியாக பல்வேறு விடயங்களில்  மயங்கி ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான நிலையை அறியும் முயற்ச்சியில் ஈடுபடுவதில்லை.

இதையே பண்டைய தமிழ்  சித்தர்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்

       நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு

வந்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப்    

        போட்டுடைத்தாண்டி

என்று பாடுகிறார்.

ஒவ்வொரு நூலுக்கும் ஒரு கதாநாயகன் என்று சொல்லப் படும் ஒரு ஹீரோ இருப்பார். அவரை  சுற்றியே அந்த நூல் எழுதப் பட்டு இருக்கும். இந்து மதத்தின் முக்கிய நூல்களான உபநிடதங்களும், பகவத் கீதையும், சித்தர் பாடல்களும் மனிதனைப் பற்றியே, அவனுடைய அநாதரவான   நிலயைப் பற்றியே,  விடுதலை அடைய முயலும் அவனின் முயற்சி மற்றும் அதில் அவன் அடையும் வெற்றி ஆகியவை பற்றியே முக்கியமாகக் குறிப்பிடுகின்றன.  மனிதன் தன்னுடைய முழு வலிமையை , சுதந்திரத்தை அடைந்து, தன் நிலையை தானே தீர்மானிக்கும் வல்லமை உடையவனாக உச்ச கட்ட சுதந்திரம், வலிமை, அன்பு, கருணை ஆகியவற்றை அடையும் நிலையே கடவுள் நிலையாக குறிபிடப்பட்டுள்ளது.  

இவ்வாறாக கடவுளை (இப்போதைக்கு) மற,  மனிதனை (முதலில் ) நினை, மனிதனே கடவுள், மனிதனின் உயிராக இருப்பதுவே (ஆத்மா, soul  என்று  சொல்லப் படும்) கடவுளாக இருக்கிறது ,  ஒவ்வொரு மனிதனின் உயிராகவும் இருக்கும் பொருளே அண்டம்  எல்லாம் வியாபித்தும் பல்வேறு உருவங்களில் இருப்பதாகவும், உருவமே இல்லாத நிலையிலும் இருப்பதாகவும், அதுவே கடவுள் என்றும் சொல்லுகிறது.  தனியாக கடவுள் என்று ஒன்று இல்லை, இல்லாதததை தேடி அலைய வேண்டாம், இருப்பதை மேம்படுத்திக் கொள், அதுதான் கடவுள்  என்று தைரியமாக சொல்லும் மதமாக இந்து மதம் உள்ளது. அப்படிக் கடவுளின் தன்மையை உடையவர்களாக , அந்த மன நிலையை அடைந்தவர்களாக   தங்களை உயர்த்திக் கொண்டு, மக்களுக்காகப் போராடி, மக்களுக்காக தியாகம் செய்து , உதாரண புருஷர்ககளாகவாழ்ந்தவர்களை மரியாதை செய்து, வழி பட்டு, அவர்களின் கொள்கைகளை கைக் கொண்டு இந்துக்கள் தங்களைஆன்மீக ரீதியில் உயர்த்திக் கொள்ளும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர்.  

Advertisements

12 Responses to "இந்து மதம் என்பது என்ன? பகுதி – 2."

கிருத்துவர்கள் இப்படிதான் வழிபடுகிறார்கள், இதுதான் இஸ்லாம் , இது தான் இந்து மதம், இப்படி மற்றவர்களை பற்றி , உண்மையான முடிவுகளாக தன் முடிவுகளை சித்தரிப்பதில் திருச்சி பெரிய ஆள்தான். அது தான் இங்கும் தென்படுகிறது.

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கலாமே.

”துன்பங்களில் இருந்து முழு விடுதலை பெற்ற நிலையை ஒரு மனிதன் அடையவே இந்து மதம் உதவுகிறது.

Why do we need liberation from our sorrows and joys ? Are they not part of our life on earth ? Are they not in the scheme of God for us? Why do Hindus want to escape ?

Go through all. And pass away. Enjoy when you get enjoyments. Pass through sorrow – if you can overcome them, overcome. If not, grin and bear it.

There are sorrows which none can prevent. Grin and bear them.

அநாதை ஆனந்தன் என்று ஒரு பழைய தமிழ்ப் படம் உண்டு. அதிலே வில்லனாக நடித்திருப்பார் திரு. ஆர். எஸ். மனோகர். ஒரு சாடிஸ்ட் வில்லனான அந்தப் பாத்திரத்திலே அவர் ஒரு கால் வூனாமான நொண்டியாக இருந்தாலும் பல கொடுமைகளை செய்பவராக இருப்பார். அவருடைய பொழுது போக்கு கோழிக் குஞ்சுகளை வைத்து விளையாடுவது. ஒரு அறையில் பல கோழிக் குஞ்சுகளை வைத்து இருப்பார். அவர் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தானியங்களை அங்கே இறைப்பார் . அவற்றை உன்ன கோழிக் குஞ்சுகள் ஓடி வரும் போது அவற்றின் தலையிலே நன்கு சூடான் இரும்பு பட்டையால் அடிப்பார். குஞ்சுகள் அலறி ஓடும்.

இயற்கையோ அல்லது விதியோ, அல்லது நியதியோ, மாயையோ அல்லது சாத்தானோ அல்லது கடவுளோ நீங்கள் எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் – இது நமக்கு அவ்வப் போது சில சலுகைகளை, வெற்றிகளை, இன்பங்களை வழங்கி நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கும் போது அவ்வப் போது பலவேறு துன்பங்களையும் தவணை முறையில் வழங்கி கடைசியில் ஒட்டு மொத்தமாக மரணத்தையும் வழங்குகிறது.

நான் இதோடு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்கிறேன். இன்பம் வருகிற போது இனப்மாய் இருக்கிறேன். துன்பம் வரும் போதும் அதையும் அனுபவித்துதான் தீர வேண்டும் அது எங்களுக்கு ஓகே என்று நீங்களோ , வேறு யாராவதோ நினைத்தால் நாங்கள் உங்களை வற்புறுத்தவோ, கட்டாயப் படுத்தவோ இல்லை. உங்களுக்கு எது திருப்தியோ அப்படி செய்யுங்கள்.

அதே நேரம் காட்டிலே வாழ்ந்த முனிவன் சித்தன் முதல் புத்தன், சங்கரர் , விவேகானந்தர் வரை இந்தியாவின் ஆன்மீகமும் தத்துவமும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைவது பற்றியே. அதற்க்கு முயற்சி செய்வது தவறு இல்லை. வெற்றி கிட்டினால் லாபம். இவரக்ள யாருக்கும் எந்த தொதரவும் கொடுக்கவில்லை. பிற மதங்களை இகழவோ, பிற மதக் கடவுள்களை நிந்திக்கவோ இல்லை. அமைதியான முறையில் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள, காத்துக் கொள்ள, விடுதலை பெற முயலுகின்றனர். தாங்கள் வெற்றி பெற்றதாகவும் அவர்கள அறிவித்து உள்ளனர்.

”இப்படியாக பல்வேறு விடயங்களில் மயங்கி ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான நிலையை அறியும் முயற்ச்சியில் ஈடுபடுவதில்லை.

Hilarious argument !

As a child, as an adolescent, as a young person, as a married person, as a retired person in old age, man or woman passes through differerent or gradation of joys and sorrows in life.

What is wrong with them all? Why do you call these things false ? And why do you say, a man must call them false and see truth? Why should he take efforts to reach the illusion, which you call, Truth?

Basis?

முதலில் எது illusion எது உண்மை என்பதை சரியாக புரிதல் செய்ய வேண்டும்.

நாமே இப்போது குழந்தைகளோடு விளையாடுகிறோம். அவர்கள குழந்தையாக இருக்கும் போது நமக்கு மிக மகிழ்வு அளிக்கும் வகையில் உள்ளனர். அவர்கள் வயதான பிறகு நம்மோடு இருப்பார்களா என்பது தெரியாது. அப்படியானால் நம்மோடு மகிழ்ச்சியுடன் விளையாடிய சிறுமி எங்கே? என்ன ஆனாள்?

அந்த சிறுமியை நீங்கள் கையில் வைத்துக் கொண்டு குருவியையும், காக்கையையும், அணிலையும், பூக்களையும் காட்டி அதற்க்கு மகிழ்ச்சியை வூட்டி அதை சிரிக்க வைத்து, நீங்களும் மகிழ்ந்த காலம் எங்கே. அந்த சிறுமி எங்கே, வலைக் கையில் வைத்து மகிழ்ந்த தகப்பன் எங்கே. அந்த மகிழ்ச்சி எங்கே. எதுவுமே இல்லை. சிறுமியும் வளர்ந்து பெண் ஆகி விட்டாள். தகப்பனும் வயது முதிர்ந்து இறந்து விட்டான். இன்னும் சில நாட்களில் அந்த சிறுமியும் (இப்போது பெண்) இறந்து விடுவாள். இறப்புக்குப் பின் அந்தப் பெண் , அந்த தகப்பன் இவர்களின் உயிர் தொடர்ந்து வாழ்கிறதா, அந்த உயிர்களின் நிலை என்ன? நாமே பிள்ளைப் பருவத்திலே சிறந்த பாராட்டுப் பெற்ற மாணவனாக இருந்திருக்கக் கூடும். இப்போது அந்த சிறுவன் எங்கே, அவன் துடி துடி துடிப்பு எங்கே?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கான விடை தேடிதான அன்று முதல் இன்று வரை பலரும் முயலுகின்றனர். மாறுவது உணமையானது அல்ல. அழியக் கூடியது உணமிஆயனது அல்ல. அழியாத மாறாத நிலை ஒன்று இருந்தால் அது உண்மை நிலையாகும். அந்த நிலைக்கு ஒருவன் தன உயிரை உயர்த்தினால் அவன் துன்பங்களை கடந்த , முழு வலிமையான நிலையை சுதந்திரமான நிலையை அடைகிறான். அந்த நிலையை நான் இன்னும் அடையவில்லை. எனவே அப்படி ஒரு நிலை இருப்பதாக நான் அறுதியிட்டு , உறுதியாக்கக கூற முடியாது. அதே நேரம், புத்தர், சங்கரர், சித்தர்கள உள்ளதட அனைவரும் தாங்கள் அந்த நிலையை அடைந்ததாகவும், ஒவ்வொருவரும் அந்த நிலையை அடைவதே துன்பங்களில் இருந்து விடுதலை பெற வழி என்றும் சொல்லி உள்ளனர். அந்த நிலையை அடைய முடியும் என , முயற்சி செய்யுங்கள் என நமக்கு confidence & hope அளிக்கின்றனர். அதையே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

என்னைப் பொருத்த வரையில் நான் முன்பு துன்பம் வந்தால் மிகவும் கலங்குவேன். இப்போது தத்துவ ஆராய்ச்சி மற்றும் மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடு பட்ட பின் இடையூறுகள் வரும்போது அவற்றை முன்னை விட அதிக நம்பிக்கையுடன் எதிர் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்ல இயலும், மற்றபடி துன்பங்களை முழுமையாக வென்ற நிலையை நான் அடையாததால் அதற்க்கு இப்போதே நான் சாட்சி அளிக்க இயலாது. நானே நேராக, காணாத , அறியாத , அனுபவிக்காத ஒன்றுக்கு நான் சாட்சி அளிக்க இயலாது.

// மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கலாமே.//

சர்தான் போங்யா…வேற வேலயில்ல‌…!

//Why do we need liberation from our sorrows and joys ? Are they not part of our life on earth ? Are they not in the scheme of God for us? Why do Hindus want to escape ?
.//

துன்பத்தில் இருந்து தப்பித்தல் என்பது ஓடி ஒளிவது அல்ல. ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அல்ல.
மகிழ்ச்சியில் ஒரேஅடியாக மூழ்கி விடாமலும் துன்பத்தில் ஒரேஅடியாக துவண்டு விடாமலும் இரு வேறு நிலைகளுக்கு சாட்சியாக பார்வையாளனாக இருத்தல், இது தற்காலிகம் என்ற புரிதலை நினைவில் வைத்து இருத்தல். இதையும் தாண்டிய இன்ப நிலை எது ( நிரந்தரமானது ) எது இதை விடவும் மோசமான துன்ப நிலையாக இருக்க முடியும் என்பதை நினைவில்கொள்வது.

இதுவரை திருச்சிக்காரன் உட்பட எந்த நல்லவர்களும் பதிலளிக்காத கேள்விகள் இங்கே காத்திருக்கிறது; இதனை நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்கவில்லை; இந்த சங்கடங்கள் தீர்க்கப்படுமானால் மெய்யாகவே மத நல்லிணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

அன்பு நண்பர் சில்சாம் அவர்களே,

நீங்கள் அவசரப் பட வேண்டாம். உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. எல்லா சந்தேகங்களும் தீர்க்கப் படும். நாம் பல கட்டுரைகளை வெளியிடுகிறோம் அல்லவா. உங்களுடைய கேள்விளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் தரும் கட்டுரைகள் நம்முடைய தளத்திலே வெளியாகும். எத்தனை பேர் மத நல்லிணக்கப் பாதைக்கு வருகிறார்களோ அந்த அளவுக்கு உலகம் அமைதியுடன் இருக்கும்.

ச்சும்மா கலக்கறீங்க‌…தலைவரே…இன்னாத்தே வயித்ததான்..பக்கத்து தெருவுக்கு வழிகேட்டா உலக மேப்பைப் பத்தி பேசறீயளே..!

உங்க பேரு இன்னாங்க சார்?
அது எனக்கு தெரியும்,ஆமாமா சீக்கிரமே சொல்லிடுவேன்…சீக்கிரமே இதப்பத்தி ஒரு பெரிய விளம்பரம் போட்டு எங்கப்பாவையும் கூட்டிக்கொண்டு வந்து எம் புள்ளையையும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு அறிவிச்சுடறேன்…கொஞ்சம் பொறுத்துக்குங்கோ’என திருச்சிக்காரன் சொல்லல..அவருக்கு பக்கத்து ஊருக்காரங்க சொல்றாங்க’ன்னு திருச்சிக்காரன் சொல்றார்..!

ஆகா…அருமையான பதில்…!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: