Thiruchchikkaaran's Blog

மாயக்காரருக்கும், காசுக்காரருக்கும் இயேசு கிறிஸ்து சாட்டை! “கர்த்தாவே! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” – “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்”!

Posted on: July 29, 2010


உலகில் உள்ள பல்வேறு மதங்களையும் ஆக்க பூர்வமான கோணத்திலே அணுகி, அவைகளில் உள்ள சிறந்த கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தி  மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை உருவாக்கும் அமைதி முயற்சியிலே நாம் அனவைரும்  ஈடு படுகிறோம்.
இந்த நேரத்திலே உலகின் முக்கிய மதங்களில் ஒன்றாக  கிறிஸ்தவ மார்க்கமானது உள்ளதை நாம் அறிவோம்.  சில அன்பர்கள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை புரிந்தோ புரியாமலோ அவற்றுக்கு  மாறான கருத்தக்களை முன்னிலைப் படுத்தி வருவதை  நாம் வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களுக்கு மாறாக, முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை அவர் பெயராலே பரப்பி மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் , பிற மதங்களின் கடவுள்களை எல்லாம் இகழ்வாக பேசுவது சரிதான் என்பது போல பேசியும்  எழுதியும் செயல் பட்டும்  வெறுப்புக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளின் படி நடக்க முடியாத சிலர்,
இயேசுவின் கொள்கைகளை மறைத்து விட்டு , இயேசுவை மட்டுமே கடவுளாக ஒத்துக் கொள்வதுதான் முக்கியம்  என கீதம் இசைத்து வருகின்றனர்.

மேலை நாடுகளில் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னது போல,  கணவன் மனைவி பிரியாமல் கடைசி வரை ஒன்றாக வாழும்  குடும்ப வாழ்க்கை வாழ விரும்பவில்லை, விபச்சார ற்ற அமைதி வாழ்க்கையும் வாழ முடியவில்லை. பசி யாயிருப்பவனுக்கு உணவைக் கொடு என்றால் அதற்குப் பதிலாக அவன் தலயிலே குண்டு போடுகிறார்கள். இந்த காரியங்களை எல்லாம் மறக்கவும், மறைக்கவும் அவர்கள மனசாட்சிக்கு சமாதனம் சொல்லவும், வானத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறார்கள், எல்லோரயும் அவர்களையும் விட இரட்டிப்பு பாவியாக்கவும் செய்கின்றனர்.

தங்களுடைய கொள்கை விரோத செயல்களை கார்ப்பெட்டுக்கு அடியில் மறைத்து விட்டு, இயேசு கிறிஸ்துவை கும்பிடு என்று சொல்பவருக்காக  இயேசு கிறிஸ்துவே சொன்னது,

Mathews
Chapter 7,
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. //
கிறிஸ்து விரோத   காரியங்களை எல்லாம் மறக்கவும், மறைக்கவும் அவர்கள மனசாட்சிக்கு சமாதனம் சொல்லவும், வானத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறார்கள்.  அதற்காக பலரிடம் இருந்து உதவி  பெற்றுக் கொண்டு  வந்து குருடர்கள் பார்வை அடைகிறார்கள், முடவர்கள நடக்கிறார்கள என்று  முழங்குபவர்கள், அப்பாவி மக்களை இன்று ஏமாற்றலாம்.
ஆனால் அவர்களால எத்தனை நாள்ஏமாற்ற முடியுமா ?
//
Mathews,
Chapter 7
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். //
இவ்வளவு தெளிவாக இயேசு கிறிஸ்து சொல்லியும் இவர்கள் கவலைப் படாமல் தொடர்ந்து எக்காலத் தொனியை எழுப்பிக் கொண்டு எக்காளத்துடன்  அற்புதங்களை செய்கிறார்கள் என்றால், அதற்க்கு என்ன அர்த்தம்?  இவர்கள் இயேசு கிறிஸ்து சொல்வதை நம்பவில்லை என்றுதானே அர்த்தம். அட அது கிடக்கட்டும் விடுயா,  இப்ப நாம “அற்புதங்களை “செய்தோமா, அதி க  பேரை கணக்கு காட்டினோமா, கல்லவைக் கட்டினோமா என்று இருக்கிறார்கள் என்று மக்கள் என்ன மாட்டார்களா ? பகுத்தறிவு வாதிகளான நாம் , இயேசு கிறிஸ்துவை கொள்கை அடிப்படியிலே, உணர்வு அடிப்படையிலே அணுகி அவரோடு நமக்கு இருக்கும் ஒற்றுமையை சுட்டிக் காட்டி, இயேசு இந்தியர்களோடு இருக்கிறார், இந்தியர்கள் இயேசுவுடன் இருக்கிறார்கள் என்பதை சொல்லி வருகிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பதாக கூறி அவரையே ஏமாற்ற முயலும் அன்பர்களின் முயற்சி பலிக்குமா?

எனவே நாம் உண்மையிலேயே  அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ” மனந் திரும்புங்கள் ”  என்பதுதான்!

Advertisements

80 Responses to "மாயக்காரருக்கும், காசுக்காரருக்கும் இயேசு கிறிஸ்து சாட்டை! “கர்த்தாவே! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” – “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்”!"

“காதல் ” திரைப்படத்திலே, கதாநாயகி படிக்கும் பள்ளியின் சுற்றுச் சுவரில் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, நான் உன்னை கைவிடுவதுமில்லை” என்ற ஒரு விவிலிய வாசகம் இருக்கும். அதை கதாநாயகி கதாநாயகனை கடந்து செல்லும் போது காண்பிப்பது போல ஒரு காட்சி உண்டு. அந்த இடத்திற்கு அந்த வாசகம் பொருத்தமானது தான். ஆனால் அதனுடைய அர்த்தம், ஒரு காதலனுக்கு காதலி தரும் நம்பிக்கை என சுருக்கி பொருள் கொண்டால் உண்மையில் அது தாவறானதாகும். அது வெறும் காதலன் காதலிக்காக சொன்னதல்ல. அது ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும், பாவிகள், நோயாளிகள், அடிமைகள் போன்ற வறியவர்களுக்காகவும் இயேசு சொன்ன வார்த்தை.

உங்கள் கட்டுரைக்கும் நான் மேலே சொன்ன விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுடைய ஆதங்கம் புரிந்துகொள்ள கூடியதே. ஆனால் நீங்கள் பயன்படுத்திய வசனம் மற்றும் விளக்கம் “குறுகிய பொருளை” மட்டுமே தருகிறது. திருக்குறள் புரியவில்லை என்றால் அதனுடைய உரையை படித்து சரியான பொருளை புரிந்து கொள்ளலாம். அது போல, விவிலியம் புரியவில்லை என்றால் தொடர்புடைய துணை நூல்களை படித்து தெளிவு பெறலாம். எங்கயோ இருந்து ஒரு வசனத்தை புடிங்கி அதற்கு விளக்கம் சொல்லலாம். ஆனால் அது சரியான விளக்கமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பாவம். நீர் கிறிஸ்தவர் இல்லை. ஒருவேளை நீர் கிறிஸ்தவராக இருந்திருந்தால் நான் உமக்கு வேறு சில விளக்கங்கள் தந்திருப்பேன்!!!

Dear Mr. Jeyakar,

Thanks for your visit and opinions.

I have not quoted any thing out of context. I quoted them correctly, its not out of context. Western civilization is indulging in promiscous adultration, divorce and aggression culture, which are against Jesus Christ. To cover up that they are switching to other subjects. If one wants to shay away from truth , what can we do?
Our aim is not to sullify any reliion, but to bring out the good points and truths in them.

There is nothing that much obscure in விவிலியம். Its obvious. What I have written are staright to the point , if one is anxious to accept the truth, its a different matter.

You have mentioned that I am not a Christian. IIf you mean that a ” Christian” means having a Christian name like, Jhon, Jacob, Henry … then I am not a christian.

We will have many articles about the mission of Jesus christ and his principles, to heigh light the truths.

திரு. ஜெயகர் அவர்களே,

ஒவ்வொரு குறளையும் எடுத்து விளக்கம் தருவது போலவே , இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை எடுத்துக் காட்டி விளக்கமும் தருகிறோம்.

அனேகமாக இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களில் உள்ள உண்மைகள் உங்களை சுடுவதால் நீங்கள் அதிலிருந்து கவனத்தை திருப்பும் வண்ணம், காதல் சினிமா, கல்லூரி சினிமா என்று எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.

இந்த தளமானது மக்கள சமூக முன்னேற்ற கருத்துக்களை விவாதிக்கும் தளமாக , சமரச சமத்துவ நல்லிணக்க நாகரீக சமூகத்திக்கு அமைக்க முயலும் தளமாக உள்ளது. இந்த தளம் சினிமா பற்றி விவாதிக்கும் தளம் அல்ல.

நாங்கள பைபிளைப் பற்றியோ, இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ அறியாதவர்களும் அல்ல. கிறிஸ்துவின் பெயாரால் தவறான் கருத்துக்களைப் பரப்பியதால் மேலை நாட்டு சமுதாயம் சீர் கேட்டு விட்டடது. நீங்கள் அவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

//ஒவ்வொரு குறளையும் எடுத்து விளக்கம் தருவது போலவே , இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை எடுத்துக் காட்டி விளக்கமும் தருகிறோம். //

ஒரு குறளை எடுத்து விளக்கம் தருவதற்கும், ஒரு விவிலிய வசனத்தை எடுத்து விளக்கம் தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது நண்பரே.

//அனேகமாக இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களில் உள்ள உண்மைகள் உங்களை சுடுவதால் நீங்கள் அதிலிருந்து கவனத்தை திருப்பும் வண்ணம், காதல் சினிமா, கல்லூரி சினிமா என்று எழுதுகிறீர்களோ என்று தோன்றுகிறது.//

கவனத்தை திருப்ப அல்ல. சரியான பொருளை புரிந்துகொள்ளவே அந்த உதாரணம். அதுவும் புரியவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

//இந்த தளமானது மக்கள சமூக முன்னேற்ற கருத்துக்களை விவாதிக்கும் தளமாக , சமரச சமத்துவ நல்லிணக்க நாகரீக சமூகத்திக்கு அமைக்க முயலும் தளமாக உள்ளது. இந்த தளம் சினிமா பற்றி விவாதிக்கும் தளம் அல்ல.//

ஆமாம். உங்கள் பதிவுகளை படித்து நான் புரிந்துகொண்டேன்!!!

//நாங்கள பைபிளைப் பற்றியோ, இயேசு கிறிஸ்துவைப் பற்றியோ அறியாதவர்களும் அல்ல. கிறிஸ்துவின் பெயாரால் தவறான் கருத்துக்களைப் பரப்பியதால் மேலை நாட்டு சமுதாயம் சீர் கேட்டு விட்டடது. நீங்கள் அவர்களிடம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.//

ஆக பிரசாரம் செய்வது தான் உங்கள் கடுங்கோபத்திற்கு காரணம் இல்லையா :). ஆகவே தான் உங்களிடம் சொல்லுகிறேன் நீங்கள் சொன்ன உதாரணம் தவறானது என்று!!

நண்பர் ஜெயகர்,

எனக்கு கடும் கோபமும் இல்லை, சாதா கோபமும் இல்லை. நானே இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டு தானே இருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவின் சரியான கருத்துக்களை பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்திய சமுதாயம் பல்லாயிரம் வருடங்களாக நேர்மையான குடும்ப வாழ்க்கையை , கணவன் மனைவி சாகும் வரை சேர்ந்து வாழும் வாழ்க்கையை பின்பற்றி வருகிறது. ஒரு கன்னத்தில் அடித்தால் திரும்பி அடிக்கும் வலிமை இருந்தும் மறு கன்னத்தையும் காட்டுபவன் இந்தியனே. தன்னால் முடிந்தளவுக்கு அடுத்தவனுக்கு உதவுகிறான் இந்தியன். இவாறாக இந்தியர்களும், இயேசு கிறிஸ்துவும் கொள்கை அடிப்படையிலே உணர்வு அடிப்படையிலே, இயேசு இந்தியர்களுடன் இருக்கிறார், நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

இதிலே புதியதாக என்ன பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?

வரைமுறையற்ற விபச்சாரக் கலாச்சாரத்தில் வாழும் மேற்க்கத்திய மக்களை நல வழிப் படுத்த முயலுங்கள், அதுவே முக்கியம் , பெயருக்கு ஜான், ஸ்டெல்லா எனப் பெயரை வைத்துக் கொண்டு இருந்தால் மேலை நாட்டவர் உண்மையான கிறிஸ்தவரா?

ஆனால் அவர்கள தங்களின் விபச்சார பழக்கத்தை, விவாகரத்து , வன்முறைப் போர்க் கலாச்சாரத்தை மூடி மறைக்கும் வகையிலே “கர்த்தரைக் கும்பிடாவிடால எரி நரகம் போவாய்” என்று இயேசு கிறிஸ்து சொல்லாத ஒரு கருத்தை இயேசுவின் பெயரால் திணித்து அவர்களின் தவறுகளை மறைத்து அவர்களுக்கு வசதியான ஒரு கோட்பாட்டை உருவாக்கி, அதை அதை கிறிஸ்துவின் கருத்தாக நமக்கு சொல்லிக் கொடுத்து இந்தியரையும் இரட்டிப்பு பாவிகளாக முயல்கின்றனர். எனவேதான் கற்பனைகளைக் கைக் கொள்ளுவதுதான் முக்கியம் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை தெளிவாக எழுதி இருக்கிறோம்.

இதை எல்லாம் அறிந்தே இயேசு கிறிஸ்து “புற சாதியிடம் போகாமல் இஸ்ரவேலரிடம் போங்கள் என்றார்.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் , அவருடைய கருத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை வைத்து, எந்த முரட்டுப் பிடிவாதக் காட்டு மிராண்டிக் கருத்துக்களை இயேசு கிரிஸ்ர்து சீர் திருத்த முயன்றாரோ, அதே கருத்துக்களை அவர் பெயராலேயே பரப்பி, பில்லியன் கணக்கான மக்களை இரட்டிப்பு பாவிகள் ஆக்கி விட்டார்கள்.

எனவே இதை எல்லாம் சரி செய்யவே, நாம் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை உலகில் எல்லோருக்கும் கொண்டு சேர்க்கிறோம், அதாவது சரியான கருத்துக்களை!

திரு. KRA!
இப்போதும் அதே பிதற்றல்கள் தானா? நீங்கள் இப்படி தான் என்பது தெரியும் தான். ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில் கட்டுரைக்கு வெளியே போக மாட்டீர்கள், அது தொடர்பாகவே பேசுவீர்கள் என நினைத்தேன்!

சரி பாஸ். உங்க நல்லிணக்க போராட்டம் தொடரட்டும்!!!

மதவாதிகள் எல்லாம் முற்போக்குவாதிகள் என வேடம்போடும் போது முற்போக்குவாதிகள் மதவாதியாக பேசவேண்டும் போல!!!. ஆமாம் சார், நீங்க RSS என்ற பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்றிருக்கின்றீர்களா? உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!!

“திரு. KRA! “என்று குறிப்பிடுவது யாரை நண்பரே?

எப்படி இருப்பினும் தன்னிலை விளக்கமாக நான் அறியத் தருவது என்னவென்றால் எனக்கும் எந்த ஒரு இயக்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!!

திரு. KRA!
இப்போதும் அதே பிதற்றல்கள் தானா? நீங்கள் இப்படி தான் என்பது தெரியும் தான். ஆனாலும் ஏதோ ஒரு நப்பாசையில் கட்டுரைக்கு வெளியே போக மாட்டீர்கள், அது தொடர்பாகவே பேசுவீர்கள் என நினைத்தேன்!

சரி பாஸ். உங்க நல்லிணக்க போராட்டம் தொடரட்டும்!!!

//மதவாதிகள் எல்லாம் முற்போக்குவாதிகள் என வேடம்போடும் போது முற்போக்குவாதிகள் மதவாதியாக பேசவேண்டும் போல!!!. ஆமாம் சார், நீங்க RSS என்ற பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்றிருக்கின்றீர்களா? உங்கள் கதை, வசனங்கள் முழுவதிலும் RSS மணக்குதே!. ஈ அடிச்சான் காபி என்று சொல்லுவார்களே அதுபோல!!! //

சர்ச்சில் நடக்கும் பிரேயரில் கலந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவுக்கு மனப் பூரவமாக மரியாதை செய்யவும், மசூதியில் நடக்கும் தொழுகையில் மனப் பூர்வமாக பங்கெடுக்கவும் நான் தயார் எனப் பல முறை எழுதி இருக்கிறேன். இதுதான் R.S.S கொள்கையா? அப்படி என்றால் அது நல்ல கொள்கைதானே

நிச்சயமாக நல்ல்ல கொள்கை தான். அவ்வ்வ்வவ்!!!

விபச்சார பழக்கத்தை, விவாகரத்து , வன்முறைப் போர்க் கலாச்சாரத்தை பற்றி பேசும் நீங்கள் தேவரடியார் உருவாக்கி உல்லாசத்தில் திளைத்தது யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . இன்றளவும் கர்நாடக எல்லம்மா கோவிலில் இந்த கொடூரம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் சாதி மதபேதம் இல்லாமல் தத்தெதுத்து பணம் அனுப்புபவன் கூட தான் நீங்கள் சொன்ன ஜான், ஸ்டெல்லா எனப் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் மேலை நாட்டவர்.

ஏன் இங்கு உள்ளவர்கள் கள்ள தொடர்பு கொள்வது இல்லையா மும்பையில் விபசாரம் செய்வது இல்லையா. அதர்க்காக அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று முத்திரை குத்தி விட முடியுமா . நீங்கள் கண்ட ஒரு பகுதியை ஒட்டு மொத்த சமூகமாக உருவப்படுத்தாதீர்கள்.

ஓட்டைகள் எல்லா சமூகங்களிலும் உள்ளது. அதற்கு மத சாயம் பூசி விடாதீர்கள் .

திரு ஜெயகர் அவர்களே,

///22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ///

மேற்கண்ட பைபிள் வசனம் தெளிவாக புரியும் படி உள்ளது.இதைப் போல தானே //எங்கயோ இருந்து ஒரு வசனத்தை புடிங்கி// சர்ச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.அந்த சர்ச் வசனத்தை எப்படி புரிந்து கொண்டோமோ அதைப் போல தான் மேற்கண்ட பைபிள் வசனத்தையும் புரிந்து கொள்கிறோம். மேற்கண்ட வசனத்திற்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன?

உண்மை தான் நண்பர் தனபால் அவர்களே. சுற்று சுவர்களில் இருப்பவை எங்கேயோ இருந்து புடிங்கி எழுதியவை தான். ஆனால் அதில், நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் தந்திருக்கும்அவதூறு விளக்கமெல்லாம் இருக்காதே!!

குறள் என்பது, ஒரு குறளுக்கும் இன்னொரு குறளுக்கும் தொடர்பு இல்லாத வண்ணம் வேறு வேறு பொருள் தருவதாக இருக்கும். ஆகவே ஒரு குறளை எடுத்து விளக்கம் சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் விவிலிய வார்த்தைகள் அப்படி அல்ல. மத்தேயு 7 :22 -23 – யை படித்த நீங்கள் ஏன் 21 – யை படிக்கவில்லை?! அதையும் சேர்த்து படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நண்பர் திருச்சிக்காரன் அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் சாடுகிறார். அது தான் ஏன் என்று புரியவில்லை. நண்பர் அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் “போலி இறைவாக்கினர்களை” குறித்தானது. அது கிறிஸ்துவை நம்பி அவர் வழி (அல்லது பின் தொடர்பவர்கள்) செல்பவர்களுக்கு இல்லை. இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்காக இயேசு சொன்னதல்ல. மாறாக அது போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு சொன்னது.

திரு. ஜெயகர் நான் கிறிஸ்துவின் கற்பனைகளின் வழி நடக்கும் உண்மையான கிறிஸ்தவர்களை சாடவில்லை. .

இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளுக்கு மாறாக விபச்சாரக் கலாச்சாரம், விவாகரத்து கலாச்சாரம், பிற நாட்டவர் மீது தாக்குதல் ஆகியவற்றை பின்பற்றிக் கொண்டு- அதை எல்லாம் மறைக்கும் வகையில் அற்புதங்களை செய்வதாக சொல்லிக் கொண்டு இருப்பவர்களைப் பற்றி – அதாவது இயேசு கிறிஸ்து கற்பிதங்களைக் கைக்கொள்ளாமல் என்று யாரைக் குறிப்பிட்டாரோ- அவர்களை மட்டுமே நாம் குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஒருவன் உன்னை ஒரு மைல் வரச் சொன்னால் இரண்டு மைல் அவனுடன் போ என்று சொல்லும் அளவுக்கு விட்டுக் கொடுக்கும் கருத்தை வலியுறுத்திய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உலகிலே உள்ள பிற மார்க்கங்களை எல்லாம் இகழ்ந்து சமூகங்களுக்கு இடையில் மோதலை உருவாக்குவது சரியல்ல என்று தான் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாக் கிறிஸ்துவர்களும், விபச்சாரக் கலாச்சாரத்தில் ஈடு படுவதில்லை, பல கிறிஸ்தவர்கள் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். பல கிறிஸ்தவர்கள் வன்முறைப் போர்களை வருகின்றனர். பல கிறிஸ்தவர்கள் பிற மதங்களை வெறுக்காமல் சுமூகம் பாராட்டி வருகின்றனர். எனவே எல்லாக் கிறிஸ்தவர்களையும் நான் குறை சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் நான் எந்த ஒரு கிறிஸ்தவரையும் நான் குறை சொல்லவில்லை. கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, அல்லது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளும், நான் அவற்றை சுட்டிக் காட்டியதும், அவர்களுக்கு பொருந்தினாலே அவர்கள் அத்திப் பற்றி சிந்திப்பார்கள். பிழை இல்லாதவர்கள வருத்தப் பட வேண்டியதில்லை.

நான் சொல்லியது எல்லா மதத்தினருக்கும், எல்லோருக்கும் பொருந்தும். பிற மதங்களின் மீது வெறுப்பு பாராட்டுபவர் அவர் எந்த மதத்தினராக இருந்தினாலும், அவர்களை நல்லிணக்கப் பாதைக்கு அழைக்கிறோம். அற்புதங்களை செய்வதாக ஆரவாரம் செய்பவரகள – அவர்கள எந்த மதத்தினராக இருந்தாலும் விழிப்புணர்வோடு இருக்கும் படி மக்களிடம் சொல்லுகிறோம்.

“மதம் மாற்றுகிறார்களே… என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு!!!” என்ற கட்டுரை எழுதிய அதே திருச்சிக்காரன் தானே நீங்கள்?

ஆமாம். அந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களை உங்களுக்கு ready reference ஆக இங்கேயே தருகிறோம். அதிலும் இதே கருத்துதான் சொல்லப் பட்டு உள்ளது.

இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பெரும்பாலானவை இந்திய சமுதாயம் பல்லாயிரம் ஆணடுகளாக பின்பற்றி வரும் கருத்துக்களே. ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு, இறுதி வரை அவளை பிரியாமல் வாழ வேண்டும், அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும், விபச்சாரம செய்யக் கூடாது என்பது போன்ற இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார். இதை எல்லாம் நாம் ஒவ்வொரு இந்துவிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.

யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே , அடிப்படை வாத முரட்டுப் பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது உணமையான கருத்துக்களை, சமரச மறுப்பு முரட்டுப் பிடிவாதக் கோட்பாட்டு பரப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது.

//மனக் குவிப்பு போன்ற ஆன்மீக முயற்சியில் ஈடுபடுங்கள், முருகனையோ, இராமரையோ, காந்தியையோ, பெரியாரையோ நினைத்துக் கொண்டு கண்ணை மூடி மனக் குவிப்பு பயிற்சியில் ஈடுபடுங்கள்.//

இது தான் உங்கள் நல்லிணக்க லட்சணமா? உண்மையாகவே நீங்கள் அனைத்து மதத்திலும் உள்ள நல்ல கருத்துகளை எடுத்து சொல்லுபவராக இருந்தால் கூடவே இயேசு, அல்லா, புத்தர், மகாவீரர் இப்படி பலரையும் சொல்லி இருக்கலாமே!!! ஏன் முருகன், ராமர்… இதில் இன்னொரு ஆகச் சிறந்த காமெடி பெரியாரையும் சொன்னது. ஹிந்து மத கேவலத்தை வெளியே கொண்டு வந்தவரையே ஹிந்து மத காவலனாக நிறுத்தும் கைங்கரியம் யாருக்கும்வராது!!!

Dear Jeyakar,

//ஹிந்து மத கேவலத்தை வெளியே கொண்டு வந்தவரையே//

இந்த வார்த்தைகளானது பிற மதங்களை கண்டிக்க வேண்டும், என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டு இருப்பதையே காட்டுகிறது. உங்களுக்கு போதனை செய்தவர்க்ள உங்களை
அப்பட்டமான மத வெறிக்கு , பிற மதங்களை இகழும் சகிப்புத் தன்மையற்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டதையே இது உணர்த்துகிறது. ஆயினும் உங்களை நாங்கள் வெறுக்கவில்லை.

இந்த நிலையை இந்தியாவில் உள்ள அனைவரும் அடைந்து விடக் கூடாது என்பதற்காகவே முருகர் …உள்ளிட்டவரை மனக் குவிப்பு செய்யும் படி வூக்குவிக்கிறோம். ஏனெனில் முருகரை வழிபாடு செய்பவர்களுக்கு பிற மதங்களை நிந்தின்க்க வேண்டும் என ஒரு போதும் பயிற்று விக்கப் படவில்லை. எடுத்த எடுப்பிலேயே இயேசுவை மனக் குவிப்பு செய்யச் சொன்னால் உங்களை சகிப்த் தன்மை இல்லாதவர் ஆகியோர்களின் கரங்களில் அவர்கள் சிக்கி மத வெறியர் ஆகி விடும் வாய்ப்பு உள்ளது.

ஒருவர் இந்து மதத்தின் கொள்கைகளை சரியாகப் புரிந்து கொண்டு அமைதியான இந்துவாக ஆகும் போது அவர் தானாகவே இயேசு உள்ளிட்ட அனைவரையும் மரியாதை செய்யும் மன நிலையை அடைவர். பெரியார் இந்து மத்தில் முக்கிய சீர்திருத்திக் கொண்டு வந்தவர். பாரதியார், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பலர் இந்து மதத்தின் மேல் சுமத்தப் பட்ட மூட நம்பிக்கைகளை அகற்றும் பணியில் ஈடு பட்டு இருந்தனர். உண்மையிலேயே பெரியாரால் இந்து மதத்திற்கு நன்மையே.

//ஆயினும் உங்களை நாங்கள் வெறுக்கவில்லை.//
“கிறிஸ்தவ பெண்களை எங்கே பார்த்தாலும் அவர்களின் கற்பை சூறையாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பீர்கள்”, அவற்றை சிவப்பு நிற நோட்டீஸ் அடித்து விநியோகிப்பீர்கள், ஆனாலும் நீங்கள் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்,
குடும்பத்தோடு வெட்டி சாய்பீர்கள், கூண்டோடு கொழுத்துவீர்கள், ஆனாலும் நீங்கள் எங்களை எப்போதும் “வெறுக்க” மாட்டீர்கள்,
வழிபாடு கூடங்களை அடித்து நொறுக்குவீர்கள், தீயிட்டு கொழுத்துவீர்கள், ஆனாலும் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்.
ஹிந்து மத சட்டம் கொண்டு சிறுபான்மையினரை ஒடுக்குவீர்கள், ஆனாலும் ஒருபோதும் நீங்கள் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்,

ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என சொல்லியவரை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா? இல்லை, குறுக்கே வந்து விழுந்த மாட்டை தெரியாமல் தேர் ஏற்றி கொன்ற அரசன் மகனை அதே போல் கொல்லவேண்டும் என கற்பிக்கும் அயோக்கிய மனுநீதியை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா?

திரு. ஜெயகர் , நீங்கள் குறிப்பிடுவது போல பெரும்பாலான இந்தியர்கள் நடந்து கொள்வது இல்லை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதே நமது நிலைப் பாடு. அராஜக வன்முறை செயல்கள் இல்லாமல் நாகரிக சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. இதிலே நாம் நேர்மையாக இருக்கிறோம். நான் எந்த பிட் நோட்டீசும் கொடுப்பது இல்லை.

திரு ஜெயகர் அவர்களே,

///“கிறிஸ்தவ பெண்களை எங்கே பார்த்தாலும் அவர்களின் கற்பை சூறையாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பீர்கள்”,///

அப்படியா!!!! எல்லா இந்துக்களும் வேண்டாம் வெறும் 1 % இந்துக்கள் மட்டும் ///கிறிஸ்தவ பெண்களை எங்கே பார்த்தாலும் அவர்களின் கற்பை சூறையாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே ///வைத்து செயல் பட்டிருந்தால் கூட இப்பொழுது இந்தியாவில் இருக்கும் எந்த கிறிஸ்தவ பெண்ணும் கற்புடன் இருக்க முடியாதே!!! ???

///குடும்பத்தோடு வெட்டி சாய்பீர்கள், கூண்டோடு கொழுத்துவீர்கள், ///

எத்தனை கோடி இந்துக்கள் எத்தனைகோடி கிருஸ்தவ குடும்பங்களை வெட்டி சாய்த்திருக்கிறார்கள்???அப்படி என்றால் எப்படி இத்தனை கிறிஸ்தவக் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன???

///வழிபாடு கூடங்களை அடித்து நொறுக்குவீர்கள், தீயிட்டு கொழுத்துவீர்கள், ஆனாலும் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்.///

இவ்வாறு எல்லா இந்துக்களும் செயந்திருந்தால் ஒரே ஒரு வழிபாட்டுக் கூடாரம் கூட இந்தியாவில் இருந்திருக்காது.

///ஹிந்து மத சட்டம் கொண்டு சிறுபான்மையினரை ஒடுக்குவீர்கள், ஆனாலும் ஒருபோதும் நீங்கள் எங்களை “வெறுக்க” மாட்டீர்கள்,///

எந்த ஹிந்து மத சட்டத்தால் எவ்வாறு நீங்கள் ஒடுக்கப்பட்டீர்கள்???

சிறுபான்மையினருக்குத் தான் கல்வி வேலைவாய்ப்பில் சலுகையைக் கொடுத்துவிட்டு இந்துக்கள் போராடவேண்டிய நிலையில் இருப்பது திரு ஜெயகருக்குத் தெரியாதா???

ஏன் இப்படி அப்பட்டமான பொய்களைக் கூறுகிறீர்கள்.இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின் மூலம் நீங்கள் கற்ற பாடம் இது தானா???

// இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார் //

இயேசுவானவர் வெறும் மதப் பிரச்சாரகரல்ல,
அவர் போதித்தவை யூதருக்கு மட்டுமே உரித்தானதுமல்ல;

அவரே சொன்னது போலவும் அவரைக் குறித்த மார்க்கப் பெரியோரின் சாட்சியின் படியும் அவர் உலக இரட்சகர்;காணக்கூடாத இறைவனின் தற்சொரூபியான தொழத் தக்க ஒரே தேவன்;

இன்னும் என்ன சொல்ல‌..?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=41&topicID=37358955

இயேசு கிறிஸ்து வின் நோக்கம் – காணாமற் போன , வழி மாறிப் போன ஆடுககளாக உடன்பாடு செய்யாமல், இரக்கம் காட்டாமல் இன அழிப்பு பாதையில், , மத வெறிப் பாதையில் சென்ற யூதர்களை நன்மைப் பாதைக்கு நாகரீகப் பாதைக்கு கொண்டு வருவதுவே என்பதை இயேசு கிறிஸ்துவே தெளிவாக சொல்லி இருக்கிறார்.

அதே நேரம் இயேசு உலகத்தினர் அனைவரும் வணக்கத் தக்கவர் என்பதையும், அதோடு புத்தர், அல்லாஹ், முருகன் உள்ளிட்ட அனைவரும் உலகத்தவரால் வணக்கப் பட கூடிய தகுதி உடையவர்கள என்றுமே நாம் சொல்லி வருகிறோம். தான் மட்டுமே வணங்கப் பட வேண்டிய தேவன் என்றோ, தன்னை வணங்க்காதவரை எரி நரகத்தில் தள்ளுவேன் என்றோ இயேசு வாழ்ந்த காலத்தில் சொன்னதாக இல்லை, நமக்குத் தெரிந்த வரையில் இல்லை. இயேசுவை மாத்திரமே எல்லோரும் வணங்க வேண்டும் என்று மத வெறியோடு பல போர்களை நடத்து, கோடிகணக் காணவரைக் கொன்று குவித்தது சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டு உள்ளது. அதன் மிச்சச் சொச்சமாக இங்கே மத வாதத்தைப் பரப்புவதை மக்கள் புறக்கணிப்பார்கள.

இயேசு கிறிஸ்துவை உலகத்தவர் அனைவரும் மனப் பூர்வமாக மைரியாதை செய்யும் , வழிபாடு செய்யும் நிலைக்கு உலகை கொண்டு செல்ல உதவக் கூடியது மத நல்லிணக்கமே. முரட்டுப் பிடிவாத பாதையிலே சென்றால் , உங்களை விட முரட்டுத் தனம் காட்டக் கூடியவர்களும் இருக்கிறார்கள். கடைசியில் கல்லறைகளே மிஞ்சும்.

விபசார கலாசாரம் என்ற உங்கள் உள்நோக்கம் கொண்ட கருத்துக்கும், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த வார்த்தையை வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்கும் சொர்பிரயோகத்திற்கும் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நாகரீகமற்ற வாதத்தை முன்னேடுத்துசெல்ல என்னாலும் இயலும்.

வன்மையான கண்டனம் யாருக்கு, எனக்கா அல்லது இயேசு கிறிஸ்துவுக்கா?

இந்திய சமுதாயம் நேர்மையான குடும்ப சமுதாயம், பெரும்பாலான இந்தியர்கள் குடும்பம், அம்மா, அப்பா, பிள்ளை, பேரன் என்று அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர்.

இயேசு கிறிஸ்து விபச்சாரம் செய்யாதே, என்று சொன்னாரா இல்லையா, அதே கருத்தை தான் நாமும் அவர் அப்படி சொன்னாரே, அதை மறந்து விட்டு கண் போன போக்கிலே கால் போகலாமா , கால போன போக்கிலே மனம் போகலாமா என்று மேலை நாட்டு சமூகத்தினருக்கு தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை கேட்க விரும்ப முடியாத நிலைக்கு, இயேசு கிறிஸ்துவைக் கூட சகித்துக் கொள்ள முடியாத நிலைக்கு நீங்கள் செல்லும்படி உங்களுக்கு போதனை செய்து உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

// இந்திய சமுதாயம் நேர்மையான குடும்ப சமுதாயம், பெரும்பாலான இந்தியர்கள் குடும்பம், அம்மா, அப்பா, பிள்ளை, பேரன் என்று அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். //

அப்படியானால் இந்தியாவில் உலகத்திலேயே அதிக விபச்சாரிகளும் எய்ட்ஸ் நோயாளிகளும் இருப்பது எப்படி?

அதற்குக் காரணமாக இருக்கும் மதுக்கடைகளையும் திரைக்கூடங்களையும் மூடிவிடலாமே இன்னும் ஆசையைத் தூண்டும் புராணப் புத்தகங்களையும் கொளுத்திவிடலாமே..?

இது பற்றி பலமுறை விவாதித்து இருக்கிறோம். தனியாக அந்த விவாதங்களை தொகுத்து கட்டுரையாகப் போட்டு விடுவதே சரி.

திரு ஜெயகர் அவர்களே,
///22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ///

“///இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் அது ஒட்டுமொத்த மக்களுக்காக இயேசு சொன்னதல்ல. மாறாக அது போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு சொன்னது.///”

மேற்கண்ட வசனம் இப்படிப்பட்ட ///போலியாக இறைவாக்குரைப்பவர்களுக்கு/// இயேசு கிறிஸ்து சொன்னது தான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

திருச்சிக்காரனுக்கொரு வேண்டுகோள்:
தங்களிடம் தமிழில் ஒரு காரியத்தைக் கேட்டால் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டும் முயற்சியாக ஆங்கிலத்தில் பதிலளிப்பது என்ன வகை நாகரீகம்..?

ஒருவேளை எதிர்தரப்பாரும் வாசகரும் ஆங்கிலமறியாதவராக இருக்கலாமல்லவா..?

இதனை நான் குறிப்பிடக் காரணம் தொடர்ந்து தாங்கள் தமிழில் பதிலளித்துள்ளதும் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளதும் முற்றிலும் வேறாக இருப்பதே.

மற்றபடி உப்புசப்பில்லாத தங்கள் வெற்றுக்கூச்சலுக்கு பதிலளிக்கும் மனநிலையில் நாமில்லை..!

தாங்கள் குறிப்பிட்ட மத்தேயு ஏழாம் அதிகாரத்தின் முதற்பகுதியில் உங்களுக்கும் ‘ஆப்பு’ வெச்சிருக்கார் மகாகணபதியும் ஜகத்குருவும் ‘ஈசுவரன்’ என்று இந்தியரால் புகழப்படுபவருமான இயேசுபெருமானார்;

உம்ம வீட்டு ஒழுக்கை சரிபண்ணுமய்யா,முதலில்..!

ஒரு நல்ல தேசபக்தியுள்ள இந்தியனாக அந்த மாபெரும் பணியிலேயே நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உம்மைப் போல அடுத்த வீட்டு அசிங்கங்களைக் கிளறிக் கொண்டிருக்க நமக்கு விருப்பமில்லை.

http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=37358955

திரு சில்சம் அவர்களே,

///மகாகணபதியும் ஜகத்குருவும் ‘ஈசுவரன்’ என்று இந்தியரால் புகழப்படுபவருமான இயேசுபெருமானார்;///

இது மாதிரி ரொம்ப நாள சொல்லிக்கிட்டே இருக்கிங்களே,இதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.விவாதிக்கலாம். இதையே தான் இந்து மதமும் ஆனால் வேறுவிதமாக “ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர்” என்று கூறுகிறது.

// இதையே தான் இந்து மதமும் ஆனால் வேறுவிதமாக “ஒரே கடவுளையே பலர் பல பெயர்களில் அழைக்கின்றனர்” என்று கூறுகிறது. //

நண்பரே, ஒம்ம இஷ்டத்துக்கு வேதத்தையும் அதன் ஆதாரத்தையும் மாற்றுவதற்கு சகல உரிமையையும் இறைவன் கொடுத்துள்ளார்;ஆனாலும் அதன் ஆதி பொருள் மாறுவதில்லை;

அந்த ஆதிமூலத்தை விட்டு வழுவி -காணப்படாததும் காணக்கூடாததுமான சர்வ வல்ல இறைவனுக்கு உருவம் கொடுத்து- “ஆதிபராசக்தி ” எனும் பால் பொருளற்ற சொல்லை பெண் பாலாக்கி பாம்பு கதை உருவாக்கி பாலூற்றுவதை வேதம் கற்பிக்கவில்லை;

பாம்பு பால் குடிப்பதாக யாரும் நிரூபிக்க இயலாது;
இந்த கொனஷ்டைகளுடன் ஒத்துப்போவது யாராலும் கூடாது..!

நன்றி திரு.Chillsam

அப்புறம் நீங்க சொன்ன கருத்துக்கு இந்த வசனம் சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மத்தேயு 7 :5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

மிக நன்றி, மிகச் சரியான வசனமே.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவருடைய கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப் படுவது என்னுடைய கண்ணில் துரும்பு விழுந்தது போல என்னை உறுத்துவதாலேயே இதனை எழுதுகிறோம்.

துரும்பு ஆக நாம் நினைக்கும் உத்திரம் நமது கண்ணில் விழ வேண்டாமே என்கிற எண்ணத்திலே தான் இத்தனயும் எழுதுகிறோம். சில நண்பர்கள் பிற மதக் கடவுள்களை காரணமின்றி இகழ்ந்து மதங்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்வது போல நாம் செய்ய வில்லை. எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிப் படுத்தி அமைதியை உருவாக்குவதே நம் செயல்.

மதவெறிப் பிரச்சாரக் கோட்பாடுகளும், இயேசு கிறிஸ்து சொன்ன கருத்துக்களை பின்னுக்குத் தள்ளி மோதல் கருத்துக் கோட்பாடுகளும் வேகமாக பரப்ப படும் போது இயேசு கிறிஸ்துவின் சரியான கோட்பாடுகளை எடுத்து செல்லும் பணி நல்ல பணியே !

நல்ல தமிழில் தானே அந்த வசனம் இருந்தது. இன்னுமா புரியவில்லை? உங்களை எங்கள் சுடலைமாடன் தான் காப்பாற்ற வேண்டும் 🙂

திரு ஜெயகர் அவர்களே,

///மத்தேயு 7 :5 வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.///

தங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியாமால் மற்றவர் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கும் பணியை பல நூற்றாண்டுகளாக உலகம் முழுதும் சென்று செய்துகொண்டிருப்பவர்கள் யார்???

// தங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியாமால் மற்றவர் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கும் பணியை பல நூற்றாண்டுகளாக உலகம் முழுதும் சென்று செய்துகொண்டிருப்பவர்கள் யார்??? //

திருப்பதிக்குச் சென்று மொட்டைத்தலையனைத் தேடியவர் நீங்கள் தானா..?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37358955

இயேசுகிறித்துவின் கொள்கை என்பது எதுவுமில்லை;
அவரே கூறிய வண்ணமாக விண்ணுலகிலுள்ள தமது விண்ணுலக தந்தையின் கட்டளையை நிறைவேற்றவே அவர் வந்தார்;

அது ஆதியிலே மனுக்குலம் இழந்த இறைவனுடனான தொடர்பை மீண்டும் புதுப்பிப்பதே;அதற்குத் தடையாக இருந்த பாவத்தை தமது பாவமற்ற திருரத்தத்தினால் நிக்ரஹம் செய்து மனிதனுக்கும் சர்வ வல்ல இறைவனுக்கும் மீண்டும் உறவை ஏற்படுத்தினார்;இதனை லூக்கா.19:10 ல் மிகத் தெளிவாகவும் 13:3 ல் எச்சரிக்கையாகவும் இயேசுவானவர் குறிப்பிடுகிறார்;

மாத்திரமல்ல,இந்த விண்ணுலக ஏற்பாட்டினை அனைத்து இன மக்களுக்கும் பிரச்சாரம் செய்து அழியப் போகும் இந்த உலகிலிருந்து மனுக்குலத்தை மீட்டுக் கொள்ளும் இறைவனின் உலகளாவிய‌ மாபெரும் திட்டத்தினைப் பிரச்சாரம் செய்யவும் கட்டளையிட்டுள்ளார்;இதுவும் பிரதான கட்டளையாக மத்தேயு.28:20 ல் வழங்கப்படுகிறது;

அதனையே நாம் செய்து வருகிறோம்;அதற்கு இந்த தேசத்தில் பிரச்சார சுதந்தரம் இருக்கும் வரையிலும் செய்ய எமக்கு உரிமையுண்டு;ஒரு காரியத்தைப் பிரச்சாரம் செய்யும் போது ஒப்பீடு தவிர்க்க இயலாது.இந்த செய்தியினைப் பெற்றும் விலகிச் செல்வோரும் உண்டு;அதுவும் தவிர்க்க இயலாது;

“ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் ” என்பது இங்கே எடுபடாது;மன்னிக்கவும்.

நான் எழுதி இருப்பதும் தமிழ் தான். நான் அளித்த பதிலும் உங்களுக்குப் புரிந்து இருக்கக் கூடும்.

சுடலை மாடனும், முருகன், இராமன் போன்றவரே, அவருடைய வீரத்துக்கு, மன தைரியத்துக்கு எனது மரியாதைகளும், வழிபாடும் உரித்தாகுக.

சுடலை மாடனை வழிபாடு செய்பவரகள பிற மதங்களை வெறுப்பதுவும் இல்லை, எந்த ஒரு தெய்வத்தையும் இகழ்வதுவும் இல்லை.

// சுடலை மாடனை வழிபாடு செய்பவரகள பிற மதங்களை வெறுப்பதுவும் இல்லை, எந்த ஒரு தெய்வத்தையும் இகழ்வதுவும் இல்லை. //

வழிபாடு செய்வதற்கும் சமதர்ம சமுதாயம் மலர்ந்து காலம் காலமாக இந்த பூமியில் நாமெல்லாரும் சிரஞ்சீவிகளாக வாழ்வதற்கும் நாம் விரும்பினாலும் இந்த இயற்கையும் அதன் ஆதார ஸ்ருதியும் க்ருதியுமான இறைவனும் விரும்ப வேண்டுமே;

சத்தியமென்னவென்றால் இந்த உலகம் அழியப்போவது உண்மை;
அது பொய்யென்றால் பைபிள் என்பதே பொய்யாகிவிடும்..!

திரு CHILLSAM அவர்களே,
// சுடலை மாடனை வழிபாடு செய்பவரகள பிற மதங்களை வெறுப்பதுவும் இல்லை, எந்த ஒரு தெய்வத்தையும் இகழ்வதுவும் இல்லை. //
வழிபாடு செய்வதற்கும் சமதர்ம சமுதாயம் மலர்ந்து காலம் காலமாக இந்த பூமியில் நாமெல்லாரும் சிரஞ்சீவிகளாக வாழ்வதற்கும் நாம் விரும்பினாலும் இந்த இயற்கையும் அதன் ஆதார ஸ்ருதியும் க்ருதியுமான இறைவனும் விரும்ப வேண்டுமே;
சத்தியமென்னவென்றால் இந்த உலகம் அழியப்போவது உண்மை;
அது பொய்யென்றால் பைபிள் என்பதே பொய்யாகிவிடும்..!///

நீங்கள் மேற்கோள் காட்டிய வரிகளுக்கும் உங்கள் பதிலுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே.ஒருவேளை தவறுதலாக paste செய்து விட்டீர்களா?

பைபிள் என்பதே பல்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களின் தொககுப்பே. அதில் பல நல்ல விடயங்களும் உள்ளன, துரதிர்ஷ்ட மாக இனவாதக் கருத்துக்களும் சமரச மறுப்புக் கருத்துக்களும் நல்லிணக்கத்துக்கு எதிரான கருத்துக்களும் அமைந்து வீட்டன.

இயேசு கிறிஸ்துவே , அவருடைய காலத்துக்கு முன் பைபிளில் எழுதப் பட்ட பல கருத்துக்களை சுட்டிக் காட்டி வார்த்தைக்கு வார்த்தை மறுத்து சீர்திருத்தம் செய்ய முயன்று இருக்கிறார்.

திரு CHILLSAM அவர்களே,

///இந்த விண்ணுலக ஏற்பாட்டினை அனைத்து இன மக்களுக்கும் பிரச்சாரம் செய்து அழியப் போகும் இந்த உலகிலிருந்து மனுக்குலத்தை மீட்டுக் கொள்ளும் இறைவனின் உலகளாவிய‌ மாபெரும் திட்டத்தினைப் பிரச்சாரம் செய்யவும் கட்டளையிட்டுள்ளார்;இதுவும் பிரதான கட்டளையாக மத்தேயு.28:20 ல் வழங்கப்படுகிறது;
அதனையே நாம் செய்து வருகிறோம்;///

மாயா, இன்கா நாகரீகங்களை அழித்து இன்னும் பல நாகரீகங்களை அழிக்கக் காத்திருக்கும் , இயேசு கிறிஸ்து எதிர்த்த கற்பு ஒழுக்கமற்ற வாழ்க்கையையே தங்கள் கலாச்சாரமாகக் கொண்ட ஐரோப்பியர்களிடம் சென்று ///மனுக்குலத்தை மீட்டுக் கொள்ளும் இறைவனின் உலகளாவிய‌ மாபெரும் திட்டத்தினைப் பிரச்சாரம் செய்யவும்///.

தங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியாமால் மற்றவர் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கும் பணியை உலகம் முழுதும் சென்று செய்து வரும் ஊழியர்களே.இதுவரை நீங்கள் மதம் மாற்றியவர்களை இயேசு கூறிய ஒழுக்கமான வாழ்வை வாழ பிரச்சாரம் செய்யுங்கள்.

எலிமருந்து இருக்கும் டப்பாவிலிருந்தே எலி குதித்து ஓடினால் யார் எலிமருந்து வாங்குவார்கள்.???

// தான் மட்டுமே வணங்கப் பட வேண்டிய தேவன் என்றோ, தன்னை வணங்க்காதவரை எரி நரகத்தில் தள்ளுவேன் என்றோ இயேசு வாழ்ந்த காலத்தில் சொன்னதாக இல்லை, //

நண்பரே,நுனிப்புல் மேய்வதைவிட்டு வேதத்தை வேதம் என்ற உணர்வுடன் ஆழ்ந்து படித்தால் மட்டுமே வரக்கூடிய ஞானத்துடன் எழுதுங்கள்,உங்களைப் பாராட்டுகிறேன்;

தாங்கள் எம்மிடம் ஐயம் கேட்டாலும் பாராட்டலாம்,உதவலாம்;மாறாக தீர்ப்பாக இதுதான் என‌ எதையோ சொல்ல முயற்சித்தால் கலவரம் வெடிக்கவே செய்யும்;

இயேசுவானவர் மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் சொன்னது என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை;அப்படிப்பட்டவன் அசுரன் ஆவான்;வேதவசனத்தைப் பெற்றவரையோ தேவர்கள் என்கிறார்;(யோவான்.10:35 மற்றும் சங்கீதம்.82:6)

வேத விற்பன்னர்களால் மந்த்ரமூர்த்தியாக வெளிப்பட்டவரே மனு அவதாரமெடுத்து வந்து தம் பணியை நிறைவேற்றி அவர்தம் சீடர் அனைவர் கண் முன்பாக வானத்துக்கு ஏறிப்போனார் என்பது வரலாறு;

இதுபோல இந்த உலகில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் பிறந்த எந்த ஒரு மகானும் அவதாரமும் வெளிப்படையாக வானத்துக்கு ஏறிப்போனதில்லை;இதனை நீர் நம்பாவிட்டால் பைபிளைக் குறித்துப் பேசுவதை நிறுத்தும்;

கதாநாயகர்களையும் காப்பியத்தலைவிகளையும் தெய்வமாகத் தொழும் மௌடீக மார்க்கத்தார் வானத்திருந்திறங்கி மீண்டும் வானத்துக்கு ஏறிப்போனவரை தெய்வமாகத் தொழுவதில் என்ன தடை..?

அவர் தெய்வமில்லாவிட்டால் வேறு யார் தெய்வம்..?

தன் கோபுரம் தன் கண்ணெதிரே நொறுங்கி வீழ்வதைத் தடுக்கத் தெரியாத நாயகனா தெய்வம்..?

அன்பு நண்பரே,

இந்து கோவில் கோபுரம் பராமரிப்பு இல்லாததால் விழுகிறது. ஓஹியோவில் இயேசு கிறிஸ்துவின் சிலை கூட இடியால் தாக்கப் பட்டு சேதாரம் அடைந்தது. இதை எல்லாம் பகுத்தறிவு கண்ணோட்டத்திலே பார்க்க வேண்டும். மதவெறி கண்ணோட்டத்திலே பார்க்கக் கூடாது.

ttp://news.yahoo.com/s/ap/20100616/ap_on_re_us/us_lightning_strikes_jesus_statue

MONROE, Ohio – A six-story A six-story statue of Jesus Christ was struck by lightning and burned to the ground, leaving only a blackened steel skeleton and pieces of foam that were scooped up by …

அது இயேசுகிறிஸ்துவின் சிலையல்ல,
கற்பனை உருவம்;
அதனை யாரும் தொழுவதுமில்லை;
சிலை வணக்கத்தை பைபிள் அங்கீகரிக்கவில்லை;

எனவேதான் முன்பே கூறினேன்,
சொறிபிடித்து மொட்டையடித்தவனுக்கும்
கொழுப்பெடுத்து மொட்டையடித்தவனுக்கும்
வித்தியாசமுண்டு;இந்த எல்லா மொட்டைகளுக்குள்ளும் இருக்கும் மொட்டையடித்த திருடனைத் தேடி திருப்பதிக்குச் சென்றுத் தேடுபவன் முழுமுட்டாள்..!

http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=41&topicID=37358955

// நான் //

இங்கே மட்டும் நான் என்று தப்பிக்கலாமா?
பக்கா அரசியல் வாதியைப் போலப் பேசுகிறீர்கள்;ஒரு பாரம்பரியச் சின்னத்தை இடித்துவிட்டு கொக்கரித்த கூட்டத்தின் தலைவரும் இதையே சொன்னார்;இது மிகவும் கண்டிக்கத்தக்கது ,என.

ஒன்றை இடித்துவிட்டு இன்னொன்றைக் கட்டுவதுதான் நாகரீக சமுதாயத்தின் இலட்சணமா..?

அன்பு நண்பரே , எந்த ஒரு வழி பாட்டு தளத்திற்கும் இடையூறு செய்யக் கூடாது என்பதே நம்முடைய கொள்கை. அதுவே பெரும்பாலான இந்தியர்களின் கொள்கையும். இது விடயமாக நாம் முன்பே கட்டுரைகளை வெளி இட்டு இருக்கிறோம். நாங்கள தான் எல்லோரின் வழி பாட்டிலும் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோமே.

thiruchchikkaaran:
// பைபிள் என்பதே பல்வேறு கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துக்களின் தொககுப்பே. அதில் பல நல்ல விடயங்களும் உள்ளன, துரதிர்ஷ்ட மாக இனவாதக் கருத்துக்களும் சமரச மறுப்புக் கருத்துக்களும் நல்லிணக்கத்துக்கு எதிரான கருத்துக்களும் அமைந்து வீட்டன. //

நண்பா,எச்சரிக்கை… நெருப்புடன் விளையாடவேண்டாம்;
பைபிளை நீர் படிக்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிடாது;
ஆனால் அதன் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வி எழுப்பினால் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் நான் சொல்லிக்கொள்ளவில்லை,கண்டிப்புடன் சொல்லுகிறேன்..!

http://www.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=37358955

அன்பு நண்பரே ,

பைபிளில் எழுதி இருப்பதை நாம் அப்படியே எடுத்து மேற்கோள் காட்டுகிறோம். பைபிளின் வெவேறு பகுதிகளும் வெவேறு கால கட்டத்திலே எழுதப் பட்டதாகவே குறிப்புகள் உள்ளன. அதாவது இயேசு கிறிஸ்து காலத்துக்கு முன்னரே பத்துக் கட்டளைகள் மோசஸ், ஜோஷுவா, சாலமன், தாவீது பகுதிகள் உருவாக்கப் பட்டு விட்டன. இயேசு கிறிஸ்துவுக்கு பின் மத்தேயு , லூக்கா.. பகுதிகள. பிறகு அப்போச்தளுருடைய நடபடிகள் என்பதாக தொக்குக்க்ப பட்டு இருப்பதாக பைபிள் அறிங்கரக்ளே சொல்லுகின்றனர். நாம் எதுவும் தவறாக சொல்லவில்லை என நினைக்கிறேன். பைபிளில் உள்ள கருத்துக்களை தான் அப்படியே எடுத்துக் காட்டி சொல்லுகிறோம். நாமாக
புனையவில்லை.

இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் பைபிளை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதை உலகில் உள்ள எல்லோரும் ஒத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

என்னை மிரட்ட்டலாம். எல்லோரயும் மிரட்ட முடியுமா?

//தக்க பதிலடி கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் நான் சொல்லிக்கொள்ளவில்லை,கண்டிப்புடன் சொல்லுகிறேன்..!//

பதிலடி என்றால் என்ன நண்பா?

சீண்டிவிட்டு சாந்து பூசுகிறீரா..?

// பைபிளில் எழுதி இருப்பதை நாம் அப்படியே எடுத்து மேற்கோள் காட்டுகிறோம். //

வயல்வெளியை மாடு மேய்வதுபோல பைபிளை மேயக்கூடாது;

கழுதைக்கு பைபிள் வெறும் பேப்பர் போலவே தோன்றும்..!

// இயேசுகிறிஸ்து காலத்துக்கு முன்னரே பத்துக் கட்டளைகள் மோசஸ், ஜோஷுவா, சாலமன், தாவீது பகுதிகள் உருவாக்கப் பட்டு விட்டன. //

அவையனைத்துமே தம்மைக் குறித்தே சாட்சி பகர்வதாக இயேசுவானவர் கூறுனார்..!

பைபிளின் ஆரம்பமுதல் முடிவுவரை சிருஷ்டிக்கர்த்தாவின் அருளால் கிடைக்கப்பெற்றது;உதடுகளின் மேலும்கீழுமான பகுதியைப் போன்றது வேதத்தின் முழுமையும்..!

// பதிலடி என்றால் என்ன நண்பா? //

இதுக்குத்தான் விவேக் சொன்னார், “அதான் சொன்னேனே'”என்று…’மைனர் குஞ்சு’ காமெடியில‌..!

ஆனா அதைவிட இது நன்னாருக்கு..!

இல்லை நண்பரே, நான் ஸ்டெடியாகவே இருக்கிறேன்…

// சுடலை மாடனை வழிபாடு செய்பவரகள //

// வழிபாடு செய்வதற்கும் //

Ok..?

திரு ஜெயகர் அவர்களே,

///ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என சொல்லியவரை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா? இல்லை, குறுக்கே வந்து விழுந்த மாட்டை தெரியாமல் தேர் ஏற்றி கொன்ற அரசன் மகனை அதே போல் கொல்லவேண்டும் என கற்பிக்கும் அயோக்கிய மனுநீதியை பின்பற்றினால் சகிப்பு தன்மை இருக்குமா?///

அனைத்து மதமும் இறைவனை அடையும் பாதைகளே,என்றும் அனைத்து கடவுளும் ஒரே கடவுளின் வெவேறு பெயர்களே,என்றும் கூறும் மதத்தால் சகிப்புத் தன்மை வருமா?

என் மதம் மட்டுமே உண்மை,மற்ற மதமெல்லாம் சாத்தானின் வழிகளே என்றும், தன் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுளெல்லாம் சாத்தான்கள் என்று கூறும் மதத்தால் சகிப்புத்தன்மை வருமா???

// என் மதம் மட்டுமே உண்மை,மற்ற மதமெல்லாம் சாத்தானின் வழிகளே என்றும், தன் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுளெல்லாம் சாத்தான்கள் என்று கூறும் மதத்தால் சகிப்புத்தன்மை வருமா??? //

சகிப்புத்தன்மை எனும் வார்த்தையின் உட்பொருளே ஒருவன் தான் சரி என்று நினைப்பதற்கு எதிரானதொரு அறிவிலித்தனமான கருத்தை ஏற்காமலும் தன் கருத்தில் உறுதியுடன் பொறுமையாக இருத்தல் என்பது பொருளாகும்;

இதன்படி இந்த உலகில் யாரேனும் உளனரா என்றால் அதற்கு சர்வ வல்ல இறைவன் மட்டுமே பொருத்தமானவர்; அவர்தாமே தம்மைக் குறித்த – தாம் படைத்த மனிதர்களின் பல்வேறு கூற்றுகளைக் கேட்டுக்கொண்டு பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருக்கிறார்;

உதாரணமாக நண்பர் தன‌பால் அவர்களை முன்பாக வைத்துக்கொண்டே அவருடைய இரு நண்பர்கள் அவரைக் குறித்து உயர்த்தியும் தாழ்த்தியும் பேசிக்கொண்டே போனால் தனபால் என்ன நினைப்பார், யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்; இருவரில் யார் அவரைக் குறித்து சரியாகச் சொல்லிவிட்டார்; அது எதுவாக இருப்பினும் தனபால் யார் என்பது அவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும் அல்லவா?

இதனிடையே தேவையில்லாமல் வடிவேலு காமெடி வேறு நினைவில் வருகிறது; வடிவேலு நன்றாக அடிவாங்கிவிட்டு புலம்புவார், “நாந்தான் செட்டில் பண்ணி அனுப்பிட்டேனே அப்புறமும் ஏண்டா…” என‌!

அதுபோலவே இங்கே மனிதர்களும் இறைவனைக் குறித்து விலாவாரியாகப் பேசி அவருக்கு புகழ்ச்சியையல்ல,இன்னும் இழுக்கையே கொண்டு வருகிறார்கள்;இவர்கள் அழுக்கு களையப்படப்போவதேயில்லை;இது கிறித்தவர்களுக்கும் பொருந்தும்.

மெய்ப்பொருள் காண்பதறிவு..!
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37358955

திரு chillsam அவர்களே,

///மெய்ப்பொருள் காண்பதறிவு..!///

எண்ணற்ற ரிஷிகள் இந்த மெய்ப்பொருளை தவத்தால் கண்டிருக்கிறார்கள்.கண்டது மட்டுமல்ல எல்லாரும் மெய்ப்பொருளை தியானத்தால் உணரமுடியும் என்றும் அதை உங்கள் அனுபவத்தால் உணர்ந்து அறிந்துகொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இறந்து பல லட்சம்/ஆயிரம்/நூறு ஆண்டுகள் கழிந்து என்றோ நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளை நேரில் காணலாம் என்று நாங்கள் கூறுவதை நீங்கள் நம்புங்கள் என்று கூறுகிறீர்கள்.

எதனால் மெய்ப்பொருள் காண்பதறிவு சாத்தியம்.இந்து மதத்தில் கூறப்பட்ட வழியில் இந்த பிறவியிலேயே இந்த “மெய்ப்பொருள் காண்பதறிவு” சாத்தியப்படும்.ஆனால் உங்கள் வழியிலோ அது எப்பொழுது என்று உங்களாலேயே உறுதியாகக் கூறமுடியாது.ஏனெனில் அந்த நியாயத்தீர்ப்பைப் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால் தவத்தின் மூலம் இறைவனை பல ரிஷிகள் , சித்தர்கள், யோகிகள், போன்றோர் தன் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்,

நாங்கள் கூறுவது உண்மையா?? பொய்யா/என்று உங்கள் அனுபவத்தில் உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று இந்து மதம் கூறுகிறது.அதாவது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இந்துமதம் கூறுகிறது.

ஆனால் ” நாங்கள் சொல்வதை அப்படியே நம்புங்கள்” என்று “மெய்ப்பொருள் காண்பதறிவு..”அல்ல ” நம்புவது தான் அறிவு” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

// எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இந்துமதம் கூறுகிறது. //

மனசாட்சி இல்லாமல் உண்மைக்கு மாறான தகவலைக் கூறவும் இந்துமதம் அனுமதிக்கிறதா..?

திருவள்ளுவர் எப்போது இந்துமதத்தில் சேர்ந்தார்..?

இப்படியே பைபிளின் கருத்துக்களையும் சற்று இங்கும் அங்கும் மாற்றி இந்துக்கள் பின்பற்றுகிறார்கள்;

அதாவது நீங்கள் ஜோதிவடிவான பரம்பொருளின் போலியான ரூபத்தை உருவாக்கி அதன் மூலம் மெய்ப் பொருளைக் காணமுடியும் என்கிறீர்கள்;

ஒரு பொய்ப் பொருளின்மூலம் எப்படி மெய்ப் பொருளையடைய முடியும்?

தங்கள் அறியாமையை சுட்டிக் காட்டினால் மத வைராக்கியம் பாராட்டுவதாகச் சொல்லுகிறீர்கள்;

எது தெய்வம் என்று என்னால் சொல்லமுடியாவிட்டாலும் இதுவும் தெய்வம் என்று கூறவோ இதுதான் தெய்வம் என்று கூறவோ எனக்குத் துணிச்சல் இல்லாததால் காத்திருந்தேன்,மெய்ப் பொருளையடைந்தேன்,சரணடைந்தேன்;

நான் இதோ நான் இம்மையிலே அடைந்து விட்ட அந்த மெய்ப் பொருளை எங்கோ எப்போதோ அடைவதாக எண்ணிக்கொண்டிருப்பதற்கு தங்கள் அறியாமையும் காலம் காலமாக செய்து வரப்பட்ட பொய்ப் போதகமுமே காரணம்;

இஷ்டம் போல வாழ்ந்துவிட்டு கெஞ்சி கூத்தாடி மெய்ப் பொருளையடைவதல்ல,இறைவன் வகுத்துத் தந்த நியதி;மெய்ப் பொருளையடைந்து இந்த வாழ்க்கையிலேயே இறைவனுடன் இயைந்த இணைந்த இசைந்த பெருவாழ்வு வாழ்ந்து எழுத்தின்படி மரணமில்லா திவ்யதேசம் அடைவதே யாம் பெற்ற பாக்கியம்..!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37358955

அன்புக்குரிய சகோதரர் சில்சாம் அவர்களே,

திருவள்ளுவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருந்திருக்கிறார் என்றும், திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்த ஒரு முனிவர் என்றும் எனவே யாரும் சிரமப் பட்டு அவரை இந்துவாக சேர்க்க வேண்டியதில்லை என்றும் அறிஞர்கள் சொல்லி இருக்கின்றனர்.

உங்களுக்கு இது விடயமாக மேலதிக விவரங்களை பெற

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

என்ற கட்டுரையை பார்வை இடவும்.

பிரபலமானவர்களை எனக்கும் தெரியும் என்று சொல்லிக்கொள்வது மனிதனிடம் இருக்கக்கூடிய மிகப் பெரிய பெலவீனம்;

இது விவேகானந்தருக்கும் பாரதிக்கும் கூட நடந்தது;அவர்கள் இந்து மார்க்கத்தின் எத்தனையோ மோசடிகளை வெட்டவெளிச்சமாக்கி புரட்சி செய்தபோதும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் அவர்களை போற்றுவது போலப் போற்றி அவர்களுடைய வழிகளைப் புறக்கணிப்பது இந்துக்களுக்கே உரிய சாமர்த்தியம்..!

http://chillsam.activeboard.com/index.spark#comment-37501226

சுவாமி விவேகானந்தர் , பாரதியார் போன்றோர் வெட்ட வெளிச்சமாக்கியது என்ன வென்றால் இந்து மதத்தின் மீது படிந்த தூசிகளை அகற்றி இந்து மதத்தின் சரியான கருத்துக்களை சுடர் விடும் படி செய்ததுதான்.

மற்றபடி இந்துக்கள நியாயமானவராக, பொறுமை உடையவராக, , உள்ளனரே இல்லாமல் சாமர்த்திய சாலிகளாக இல்லை என கருதலாம்.

எனக்கு கடந்த ஒரு வாரமாக உங்கள் பக்கம் திறக்கவில்லை… எதனால்?. சரி போகட்டும்.

கிறிஸ்தவர்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம் புரிகிறது. மற்ற மதங்கள் தவறானவை என போதிக்க கூடாது (குறிப்பாக ஹிந்து). மேலும் மத பிரசாரம் செய்ய கூடாது. இது தானே நீங்கள் சொல்ல நினைப்பது!
நான் புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் நான் உங்களிடம் கேட்க விரும்புவது,

இதை நேரடியாக குறிப்பிட்டு பதிவிடலாமே. எதற்காக இந்த வேஷம்? வண்டி வண்டியாக நீங்கள் அளித்துள்ள பதிலையும் படித்துவிட்டேன். நீங்கள் சொல்லியுள்ள //உலகில் உள்ள பல்வேறு மதங்களையும் ஆக்க பூர்வமான கோணத்திலே அணுகி, அவைகளில் உள்ள “””சிறந்த கருத்துக்களை””” மக்களுக்கு உணர்த்தி மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கி சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை உருவாக்கும் அமைதி முயற்சியிலே நாம் அனவைரும் ஈடு படுகிறோம்.// இந்த கருத்துக்கு சற்றும் தொடர்பில்லாமல் பித்தற்றுகின்றீர்களே நண்பரே. இது தான் நீங்கள் சிறந்த கருத்துகளை மக்களுக்கு உணர்த்தும் முறையா? இது தான் நீங்கள் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முறையா?? இது தான் நீங்கள் சமூகங்களுக்கு இடையே உருவாக்கும் அமைதி முயற்சியா???

உண்மையை சொல்லவேண்டுமென்றால் நான் இங்கே விவாதிப்பதற்காக மறுமொழியவில்லை. உங்கள் கருத்துக்கும் அந்த குறிப்பிட்ட விவிலிய வசனத்திற்கும் முடிச்சி போடுவது உள்நோக்கம் கொண்டது என்பதைச் சொன்னேன். அவ்வளவே. அதன் பிறகு நீங்களும் பல கருத்துகளை சொன்னீர்கள். சொன்ன ஏதாவது ஒரு கருத்தாவது கட்டுரைக்கு சம்பந்தமாக இருந்ததா என்றால் முற்றிலும் இல்லை. பிற மதங்களை தவறு என்று சொல்ல எந்த மதவாதிக்கும் உரிமை இல்லை!! நீங்கள் மேலே விவாதித்த அனைத்து கருத்துகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தை விமரிசனம் செய்து தான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஏற்க முடியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று படியுங்கள். நான் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது என்பதை சுட்டிகாட்டுங்கள். என்னுடைய கருத்துகளில் ஏற்க முடியாதவற்றை மறுப்பு சொல்லுங்கள். நான் தேவை இல்லாமல் உளற விரும்பவில்லை. கிறிஸ்தவம் பற்றி நான் அறிந்தவற்றை நேரடியாக சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், தெளிவும் எனக்கு இருக்கிறது. நன்றி

அன்புள்ள நண்பர் ஜெயகர் அவர்களே,

எனக்கு யார் மீதும் எந்தக் கோவமும் கிடையாது. நம்முடைய கட்டுரை தெளிவானது, நேரானது.

அதில் சொல்லப் பட்டுள்ள வாக்கியங்களை அப்படியே எடுத்து மேற்க் கோள் காட்டி அதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் அதற்க்கு என்னுடைய விளக்கத்தை தர இயலும்.

அதை விட்டு விட்டு எதற்கோ எதையோ முடிச்சுப் போட்டு நீங்கள் எழுதுவது, கட்டுரையின் மையக் கருத்தை விட்டு விலகி செல்வதாகவே உள்ளது. மொத்தத்திலே இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எழுதுவது பரிட்சையில் கேள்விக்கான பதிலை விட்டு விட்டு நமக்கு தெரிந்ததை எல்லாம் எழுதிக் கொடுப்பது போலவே உள்ளது.

நாம் என்ன விமரிசித்து இருக்கிறோம்? இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களை எடுத்து விளக்குக்கிறோம். இயேசு கிறிஸ்துவை மரியாதை செய்யவும், வழி படவும் தயார் என்றும், இயேசு கிறிஸ்து உலக மக்கள எல்லோராலும் மரியாதை செய்யப் பாடவும் வணங்கப் பாடவும் தகுதியானவர் என்றும் இதே தளத்திலே பல முறை எழுதி இருக்கிறோம்.

உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் அன்று இயேசுவை வழிபடவும் , ஈத் திருநாள் அன்று அல்லாஹ்வினை வழிபடவும், தீபாவளி அன்று இராமரை வழி படவும், புத்த பூர்ணிமா அன்று புத்தரை வழி படவும் செய்தால் இந்த உலகத்திலே மத ரீதியிலே வெறுப்போ, பூசலோ , கலவரமோ, தீவிரவாதமோ இல்லாமல் போய் விடும். உலகம் அமைதியாகவும் அன்புடனும் இருக்கும்.

எனவே நாங்கள் நல்லிணக்க கருத்துக்களையே பரப்புகிறோம். இயேசு கிறிஸ்துவும் நல்லிணக்க கருத்துடையவரே. நான் சொல்லும் கடவுளை கும்பிட்டே ஆக வேண்டும் என்றோ, அப்படிக் கும்பிடாவிடால் நீ எரி நரகத்துக்குப் போவாய் என்றோ, இயேசு கிறிஸ்து சொன்னதாக இல்லை.

நான் பசியாக இருந்தேன் , உண்ணக் குடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், குடிக்கக் குடுத்தீர்கள், ehat you have given to a small brother is given to me, வாருங்கள் தேவனுடைய இராச்சியத்தை பெறுங்கள் என்றார்.

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரச் சொன்னால், அவனுடன் இரண்டு மைல் போ என்றார். இப்படியான விட்டுக் கொடுக்கும் சமரசக் கருத்துக்களைக் கூறிய இயேசு கிறிஸ்துவின் பெயராலே அவருடைய சமரசக் கருத்துக்களுக்கு எதிரான வகையிலே பிடிவாதக் கருத்துக்களை , விரோதத்தை உருவாக்கும் கருத்துக்களை கூறுவதும், நீ இந்தக் கடவுளை தான் வணங்க வேண்டும், பிற கடவுள்கள எல்லாம் ஜீவன் இல்லாத வைகள், இந்த முறையில் தான் வணங்க வேண்டும் என்றும், பிற மதங்களை எல்லாம் இகழ்ந்தும் மக்களிடையே விரோதத்தை உருவாக்கும் வண்ணம் வெறுப்புக் கருத்துக்களை பரப்புவதும் நடை பெறுவதாலே இயேசு கிறிஸ்துவின் சரியான கருத்துக்களை, சமரசக் கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்.

அற்புதங்களை செய்ததாக தன்னிடம் வந்து காட்டிக் கொண்டால் தன் ரியாக்சன் என்னவாக இருக்கும், மக்களுக்கு தேவைப் படும் போது உதவி செய்தவரை தான் எப்படி நடத்துவேன் என்பதையும் இயேசு கிறிஸ்து சொன்னததையே நாம் எடுத்துக் காட்டி இருக்கிறோம்.

இதிலே உண்மையான கிறிஸ்தவர்களுக்கு எந்தக் கோபமோ , வருத்தமோ வர வேண்டிய அவசியம் இல்லையே.

இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை சரியாக நான் எடுத்துக் காட்டுவதில் உண்மையான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியே அடைவார்கள்.

எனக்குப் பல கிரிதவத்தையும், இஸ்லாத்தையும் சேர்ந்த பல நண்பர்கள், எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் கூட, அதுவும், மதப் பற்றுள்ளவர்கள் கூட உண்டு. அவர்களும் என்னுடைய கட்டுரைகளைப் படிக்கிறார்கள். அவர்கள் எந்த விதமான ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை.

அதோடு இந்து மதம் தொடர்பாகவும் நான் பல விமரிசனங்களை இதே தளத்திலே எழுதி இருக்கிறேன். அதற்கும் பலமான கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டு இதே தளத்தில் அவை பதிவும் செய்யப் பட்டு உள்ளது.

திரு சில்ல்சம் அவர்களே,
///அது இயேசுகிறிஸ்துவின் சிலையல்ல,
கற்பனை உருவம்;
அதனை யாரும் தொழுவதுமில்லை;///

அப்படி என்றால் எல்லா சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலைகள் எல்லாமே கற்பனை உருவமா????

//எனவே நாம் உண்மையிலேயே அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ” மனந் திரும்புங்கள் “ என்பதுதான்//

கிறிஸ்துவும் கிருஷ்னரும் ஒன்றே என்று ஒரு கருத்து உணடு.
http://hinduism.about.com/od/lordkrishna/a/christ_krishna.htm
ஆகவே ஏசுவின் கொள்கைகள் இந்திய வாழ்க்கை முறைகளை பிரதி பலிப்பதில் ஆச்சரியம் இல்லை
இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்லுஙக‌
//எனவே நாம் உண்மையிலேயே அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ”(இந்தியர்களோடு கொள்கை உறவு கொண்ட இயேசுவிடம்) மனந் திரும்புங்கள் “ என்பதுதான்//

திரு.தனபால் , திரு. மணியன் உள்ளிட்ட நண்பர்களைப் போல திரு. சந்தானமும் நல்லிணக்கக் கருத்துக்களை உடையவராக இருப்பது நம்முடைய கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. நன்றி !

// இந்துக்கள நியாயமானவராக, பொறுமை உடையவராக, , //

இந்துக்களில் நியாயமானவராக,பொறுமையாக இல்லாதோரை என்ன சொல்லுவீர்கள்..?

நான் சொல்ல வந்தது இதையல்ல‌…நீங்கள் என்னத்தான் நன்னெறி,நல்லிணக்கம் என்று கூறினாலும் உங்களுக்குப் பின்னாலே “கோட்சே கூட்டம்” காத்துக்கொண்டிருப்பது எமக்குத் தெரியும்;

இளம் வயதிலேயே விவேகானந்தரும் பாரதியும் மரணிக்காதிருந்தால் அவர்களும் உங்களால் கொலைசெய்யப்பட்டிருப்பர்;உங்கள் பீடாதிபதிகளுக்கு எதிராக யார் என்ன செய்து விடமுடியும்..?

முழுபூசணிக்காயை கைப்பிடி சோற்றில் மறைத்துவிடப்பார்க்கும் தங்கள் ஏற்பாடுகள் பிசுபிசுத்துப்போகும் என்பது உறுதி;

பாரதியை நீங்கள் பின்பற்றுவதாகச் சொன்னால் இன்னும் சாமியாடிகளும் மந்திரவாதிகளும் குறிசொல்பவர்களும் ஏன் ஊரிலிருக்கிறார்கள்;அவர் மரித்து 60 வருடமாகியும் இதனை சாதிக்கமுடியவில்லையா..?

நீங்கள் அதனைச் செய்யாததாலேயே நாங்கள் அதனைச் செய்து சாமியாடிகளின் தோலை உரிக்கிறோம்;நாங்களே பாரதி வழிவந்தவர்கள்..!

விவேகானந்தரை நீங்கள் பின்பற்றுவதாகச் சொன்னால் இன்னும் ஏன் இங்கு விநாயகர் ஊர்வலம் போகிறது..?

துட்டு சாமி எல்லாம் துட்டு…
சாமிதான் இங்கே துட்டு…
துட்டுதான் இங்கே சாமி..!

இவ்வாறான எனது நியாயமான வாதங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மேம்போக்காக ஏதோ சமாளிப்பதைவிட தளத்தை இந்து புகழ்பாடும் தளமாக மாற்றிவிடுங்கள்; உங்கள் பக்கமே நாம் வரமாட்டோம்;

அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கட்டுரையை எழுத உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்பதே எமது கேள்வி;

ஒரு ரௌடி கூட ஒருவரை தாக்குவதற்கு ஒரு பொய்ப்புகார் கொடுத்துவிட்டு பிறகு வந்து தாக்குவான்;அதுபோலவே நாங்கள் உங்களைத் தாக்குவதாக கனவுகண்டு மிரண்டதுபோல எங்கள் புனித வேதத்தைக் கூறுபோட்டு இங்கும் அங்குமாக குருவியைப் போல கொறித்துத் துப்பி கட்டுரை என்ற பெயரில் எதையோ எழுதியிருக்கிறீர்கள்;

இயேசுவானவரே சொன்னது போல வேதத்திலுள்ள ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் நிறைவேறாமற்போகாது;அதன் ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்;

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் சொன்னது போல நீங்கள் குறிப்பிடும் இயேசுவின் போதனைகள் வேதத்தில் சேர்க்கப்பட்டே 2000 வருடங்கள் ஆகிவிட்டது;ஆதியிலிருந்து புனித வேதாகமத்தில் சொல்லப்பட்டவைகளை ஆமோதித்தும் அதையொட்டியும் இயேசுவின் பணியும் அவரது அடியவர்களின் பணியும் நிறைவேறிவிட்டது;அவர்கள் எந்த நாட்டையும் ஆளவுமில்லை;எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்கவுமில்லை;

பிறகு வேதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; மொழிபெயர்ப்புகளில் மாற்றமிருந்தாலும் ஆதாரக் கருத்துக்கள் எதுவும் மாற்றப்படவில்லை;அந்த துணிச்சல் யாருக்கும் கிடையாது;ஏனெனில் இது யாருக்கும் சொந்தமானதல்ல‌;

இந்நிலையில் கொஞ்சமும் பயமில்லாமல் பழைய ஏற்பாட்டின் வாக்கியங்களை விமர்சித்தும் புதிய ஏற்பாட்டின் வாக்கியங்களை தரம்பிரித்தும் அதில் இயேசுவின் கருத்துக்களைத் திரித்தும் வெளியிட்டு யாரைத் திருப்திபடுத்த முயற்சிக்கிறீர்களோ தெரியவில்லை;

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எமது மார்க்க அறிஞர்களிடம் வந்தமர்ந்து விசாரித்து தெளிவடைந்த பின்னரே எதையும் எழுதவேண்டும்.

//இந்துக்களில் நியாயமானவராக,பொறுமையாக இல்லாதோரை என்ன சொல்லுவீர்கள்..?//

இந்துக்களில் யாராவது நியாயமற்ற பாதைக்கு சென்றாலும் அவர்கள அறிந்து சென்றாலும், அறியாமல் சென்றாலும், அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருவதில் முழு முயற்சி செய்வதில் நாம் நேர்மையாக இருக்கிறோம். இது விடயமாக நாம் பலருட வாதாடி வருகிறோம். இந்த தளத்திலேயும் அது நடை பெற்று வருகிறது. இது உங்களுக்கு தெரியாதது அல்ல. என் மீது கோவம் என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதி என்னைக் கவிழ்த்தால் போதும் என செயல் பட வேண்டாம். தயவு செய்து மனசாட்சியை சாட்சியாக வைத்து எழுதுங்கள்.

விவேகானந்தரை நீங்கள் பின்பற்றுவதாகச் சொன்னால் இன்னும் ஏன் இங்கு விநாயகர் ஊர்வலம் போகிறது..? //

ஏன் விநாயகர் வூர்வலம் போனால் என்ன? விநாயகர் வூர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் , பிற மதத்தினருக்கு எதிராக கோசம் போடவோ, செயல் படவோ கூடாது என்பதை வலி யுறுத்தி நாம் முன்பே கட்டுரை எழுதி இருக்கிறோம்.

//இந்நிலையில் கொஞ்சமும் பயமில்லாமல் பழைய ஏற்பாட்டின் வாக்கியங்களை விமர்சித்தும்//

மக்களுக்கிடையே வெறுப்புக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து மதங்களுக்கு இடையே மோதலை உண்டு பண்ணுபவர்களே பயம் இல்லாமல் செயல் படும்போது, மக்களை இணைக்கும் நல்லிணக்கக் கருத்துக்களை முன் வைப்பதற்கு நாம் ஏன் பயப் பட வேண்டும்? பல இனங்களை அழித்து, அவர்களின் இடங்களை ஆக்கிரமித்து அன்று தொடங்கிய இனப் படுகொலையும், ஆக்கிரமிப்புமே இன்றுறு வரை தொடர்ந்து உலக அமைதியை குலைப்பதாக உள்ளது என்கிற வரலாறு உலகோர் அறியாததா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

//புதிய ஏற்பாட்டின் வாக்கியங்களை தரம்பிரித்தும் அதில் இயேசுவின் கருத்துக்களைத் திரித்தும் வெளியிட்டு யாரைத் திருப்திபடுத்த முயற்சிக்கிறீர்களோ தெரியவில்லை;//

இது ஒரு அப்பட்டமான பொய் குற்றச் சாட்டு. இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எழுத்துக்கு எழுத்து மாறாமல் மேற்கோள் காட்டி வருகிறோம்.

நான் மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இயேசு கிறிஸ்து சொல்லாததை எல்லாம் அவர் சொன்னது போலக் காட்டி (உலகில் உள்ள ஒவ்வொருவரும் பாவிகள் என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. ஆனால் அவர் பெயரால் நிறுவனங்களை நிறுவி அவர் பெயராலே போதனைகளை வழங்கி எல்லோரயும் பாவிகள் என்று அழைத்து ) இயேசு கிறிஸ்துவைப் பற்றி எல்லோரும் தவறாக என்னும் படி இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை திரித்து வெளியிட்டு, இயேசு கிறிஸ்துவுக்கு துரோகம் செய்வது யார் என்பதை அவரவர் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

//இயேசுவானவரே சொன்னது போல வேதத்திலுள்ள ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் நிறைவேறாமற்போகாது;அதன் ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்;//

நியாயப் பிரமாணம் என்பது எகிப்தில் இருந்து தப்பி வந்த இஸ்ரவேலர்களுக்கும் , அவர்களை அப்படித் தப்ப உதவி செய்த இஸ்ரவேலர்களின் கடவுளாக மோசஸ் அறிவித்தவருக்கும், இடையிலே போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இது நியாயப் பிராமாணத்திலேயே தெளிவாக உள்ளது. அதைப் பின்பற்றுவதோ, பின்பற்றாமல் இருப்பதோ இஸ்ரவேல் மக்களின் விருப்பம்.

அதில் நாங்கள் குறுக்கிடவில்லை.

இந்தியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ அதில் பங்கு வகிக்கவில்லை.

நாங்கள் எகிப்துக்கு போகவும் இல்லை, அங்கே இருந்து தப்பி வரவும் இல்லை. எகிப்தில் இருந்து தப்ப்விக்கப் பட்ட இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாரையும் நியாயப் பிராமாணம் கட்டுப் படுத்த இயலாது.

// அப்படி என்றால் எல்லா சர்ச்சில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலைகள் எல்லாமே கற்பனை உருவமா???? //

Yes…………..!

// இந்துக்களில் யாராவது நியாயமற்ற பாதைக்கு சென்றாலும் அவர்கள அறிந்து சென்றாலும், அறியாமல் சென்றாலும், அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருவதில் முழு முயற்சி செய்வதில் நாம் நேர்மையாக இருக்கிறோம். //

ஆமாண்ணே…நல்லாபுரியுது…தமிழ்நாடு அரசாங்கமே டாஸ்மாக் வருமானத்தையே நம்பியிருக்கிறதாம்…காலையில் கடையைத் திறந்து புள்ளையாருக்கு நாலணா செலவில ஒர் கற்பூரத்தை ஏற்றிவிட்டு கோடாகோடியாகக் கொள்ளையடிக்கிறார்கள்..சும்மா சொல்லக்கூடாது..உங்கள் முயற்சி அபாரம்…மனுஷன் சுயமாக சிந்திக்காதபடி சரக்கை ஏத்திவிட்டுட்டா அவன் மேல ஏறி சவாரி செய்யலாமில்லே..?

N.B:
இனி எனது பின்னூட்டங்கள் இங்கே பதிக்கப்படாது…
எனதருமை வாசகர்கள் எனது தளத்தில் இதனைத் தொடர்ந்து வாசிக்க அன்புடன் வேண்டுகிறேன்; சிரமத்துக்கு மன்னிக்கவும்.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37358955

// உலகில் உள்ள ஒவ்வொருவரும் பாவிகள் என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. //

Please read Luke.13:2&3
Jesus the savior of the whole World..!
John.1:29
Romans.3:23 & 6:23

அன்புக்குரிய நண்பரே,

உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பாவிகள் தான் என்றோ, எந்த ஒரு மனிதனும் நல்லவனாக நீதிமானாக வாழ் முடியாது என்றோ இயேசு கிறிஸ்து எங்காவது சொல்லி இருக்கிறாரா என்றால் அதற்குப் பதில் சொல்லாமல் வேறு சில வசனங்களை எடுத்துக் காட்டுகிறீர்கள்.

உலகிலே பல நீதி மான்கள் இருந்த போதிலும், பாவிகளை நல் வழிக்கு கொண்டு வருவதற்கே தான் வந்ததாக இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லி இருப்பதி இந்த வசனக்க்ளின் மூலம் அறியலாம்.

இன்னும் தெளிவாக விளக்கும் பொருட்டு இயேசு கிறிஸ்துவின் வசனங்களை தெளிவாகத் தருகிறோம்.

நீதிமானகலாய் இருக்கும் நூறு பேரைக் காட்டிலும் ஒரு பாவி மனந் திரும்புவது குறித்து பரலோகத்தில் அதிக சந்தோசமாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறியதி நீங்கள் படிக்கவில்லையா?

10. பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

11. பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

12. இயேசு அதைக்கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.

13. பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

37. ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

நீங்கள் குறிப்பிட்ட லூக்கா வசனக்களை இங்கே தருகிறேன்.

//
1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.//

இங்கே இயேசு குறிப்பிட்டது -சில நபர்கள் எல்லோருக்கும் பாவப் பட்டம் வழங்குபவர்கள இயேசுவை அணுகி தங்களின் அதே பாவப் பிரச்சாரத்தை, “அவர்கள் பாவிகள் தானே, சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; இவர்கள் அதிக பாவிகள் தானே” என்று பாவப் பிரச்சாரத்தை செய்த போது, இயேசு அவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோரும் அப்படியே தான் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். பிறரை பாவிகள் என்று அழைத்து பாவப் பிரச்சாரம் செய்பவர்கள் மனத் திரும்ப வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் கருத்து என்பதை இந்த வசனங்கள் காட்டுகின்றன

// நாங்கள் எகிப்துக்கு போகவும் இல்லை, அங்கே இருந்து தப்பி வரவும் இல்லை. எகிப்தில் இருந்து தப்ப்விக்கப் பட்ட இஸ்ரவேலர்களைத் தவிர வேறு யாரையும் நியாயப் பிராமாணம் கட்டுப் படுத்த இயலாது. //

உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது; உங்கள் ஊருக்கு இன்னும் கரெண்ட் வரவில்லையா… ஐயோ பாவம்..!
இதைக் குறித்து இன்னும் தெளிவடைய பவுலடிகள் ரோமருக்கு எழுதிய புத்தகத்தை (அது புதிய ஏற்பாட்டின் ஆறாவது புத்தகமாகும்…) முழுவதும் நிதானமாக வாசிக்கவும்;அதற்கு முன் இதைக் குறித்து எதுவும் பேசவேண்டாம்.Thanks.

1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

என்ன நண்பரே இவ்வளவு தெளிவாக இருக்கிறதே. இதிலே பவுல் அடிகள் என்ன சொலவதற்கு இருக்கிறது ? நாங்கள் எகிப்திற்குப் போகவும் இல்லை.அங்கே இருந்து மோசசின் தலைமயில் தப்பி வரவும் இல்லையே. இந்த ஒப்பந்தத்தை எல்லோர் தலையிலும் இறக்க முயற்சி செய்தாலும் முடியாத அளவுக்கு தெளிவாக இருக்கிறது. பவுல் அடிகள் என்ன சொன்னார் என்பதை மேற்கோள் காட்டி விளக்கலாமே.

நீங்கள் சொல்வதைக் கேட்டு இனப் படுகொலைகளை எல்லாம் புனிதமாகக் காட்டினால்தான் அப்பாவிகளின் நிலைமை இன்னும் பரிதாபம் ஆகும்.

// ஏன் விநாயகர் வூர்வலம் போனால் என்ன? விநாயகர் வூர்வலத்தில் செல்பவர்கள் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் , பிற மதத்தினருக்கு எதிராக கோசம் போடவோ, செயல் படவோ கூடாது என்பதை வலி யுறுத்தி நாம் முன்பே கட்டுரை எழுதி இருக்கிறோம். //

விநாயகரும் விவேகானந்தரும் என்ற பொருளில் ஆராய்ச்சி செய்யுங்கள்;சத்தியம் புலப்படும்;

விநாயகர் ஊர்வலம் தவறல்ல,அது இஸ்லாமியரது தொழுகை ஸ்தலம் வழியே சென்றாகவேண்டும் என்பதும் அதுவும் அவர்கள் தொழுகை நேரத்திலேயே செல்வோம் என்பதுவுமே பிரச்சினை;

ஆனால் நீங்கள் கட்டுரை எழுதிய பிறகு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது; விரைவில் உம்மையே தூக்கிக்கொண்டு ஊர்வலமாகப் போய் கடலில் போட்டு வர வாய்ப்புள்ளது..!

// நீதிமானகலாய் இருக்கும் நூறு பேரைக் காட்டிலும் ஒரு பாவி மனந் திரும்புவது குறித்து பரலோகத்தில் அதிக சந்தோசமாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறியதி நீங்கள் படிக்கவில்லையா?

நீங்கள் சொல்வதைக் கேட்டு இனப் படுகொலைகளை எல்லாம் புனிதமாகக் காட்டினால்தான் அப்பாவிகளின் நிலைமை இன்னும் பரிதாபம் ஆகும். //

நீங்கள் எத்தனை பலவீனமானதொரு வாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியவில்லை;

இது சம்பந்தமான ஒரு விளக்கக் கட்டுரை விரைவில் எமது தளத்தில் வெளியிடப்படும்;நாங்கள் புனிதமாகக் கருதும் வேதப்புத்தகத்தை நீங்கள் கற்காவிட்டாலும் பரவாயில்லை;அதனைக் குறைகூறுவதை நிறுத்திவிட்டு உங்கள் மார்க்கத்தைக் குறித்து நான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்;இதுபற்றியும் விரைவில் விளக்கக் கட்டுரை வெளியிடப்படும்.

அன்புள்ள நண்பரே,

நீங்கள் நினைப்பது போல நாங்கள் எந்த ஒரு நூலையும் விமரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே அணுகுவதில்லை. நீங்கள் குறிப்பிடும் புனித நூலில் தான் இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளும் உள்ளன. அவற்றை நாங்கள் பாராட்டி, அவற்றை விளக்கி, இயேசுவை மரியாதை செய்வதோடு, அந்தக் கொள்கைகள் இந்திய சமுதாயத்தின் கொள்கைகளோடு இணக்கமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, உன் கண் இரக்கம் காட்ட வேண்டாம், கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், சூட்டுக்க் சூடு, போன்ற கடுமையான கோட்பாடுகளும் அதே நூலிலே உள்ளன.

அவற்றை எல்லாம் இயேசு கிறிஸ்துவே சுட்டி காட்டி அப்படி செய்ய வேண்டாம் இரக்கம் காட்டுங்கள் என்று மக்களை பண்புள்ள பாதைக்கு அழைத்து சென்று இருக்கிறேர். அதையே தான் நாங்களும் செய்கிறோம்.

ஆனால் இயேசு கிறிஸ்து எந்தக் கொள்கைகளில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று போராடினாரோ, அதே கற்கால இன அழிப்புக் கொள்கைகளை அவரின் பெயராலே மக்களிடம் கொடுத்து இன அழிப்புக்கு புனித அங்கீகாரம் வழங்கி, இன அழிப்பை தொடர் கதை ஆக்கி உலக அமைதியைக் கெடுப்பது, இயேசு கிறிஸ்துவுக்கு எதிரான செயலே. இது தொடர்பாக நாம் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அப்படியே மேற்கோள் காட்டி சரியான விளக்கம் தரும் வகையிலே பல கட்டுரைகளை வெளி இடுவோம்.

விட்டுக் கொடுக்கும் சமரச கருத்துடைய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடத்தப் படுவதால், இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை மேற்கோள் காட்டி, விளக்கி மக்களை அமைதி வழியிலே தொடரும் படி செய்ய வேண்டியது எல்லோரின் கடமையாகும். நாம் எதையும் நாமாக இட்டுக் காட்டி எழுதவில்லை. என்னுடையது வாதம் அல்ல. நாம் சொல்வது உண்மையே. உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் சொல்கிறோம்.

நீங்கள் எங்களிடம் எத்தனை கேள்விகளைக் கேட்டாலும், அதற்க்கு விடை அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இது வரையிலே நம்முடைய தளத்திலே கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்கிறோம். ஏதாவது ஒன்று இரண்டு விட்டுப் போய் இருக்கக் கூடும். அதை சுட்டிக் காட்டினால் அதற்கும் பதில் அளிக்கப் படும். மற்றபடி ஆதாரம் இல்லாமல் , அடிப்படையே இல்லாமல் மதவெறியால் உந்தப் பட்டு செய்யப் படும் வெறுப்பு பிராச்சாரங்க்க்ளுக்கு இடம் அளிக்க முடியாது என்பதை முன்பே சொல்லி இருக்கிறோம்.

நீங்கள் எத்தனை கட்டுரை வேண்டுமானாலும் எழுதுங்கள். உப்பு சாரமற்றுப் போனால் எல்லோராலும் மிதிக்கப் படும் என இயேசு கிறிஸ்துவானவர் சொல்லி இருக்கிறார் அல்லவா? எனவே சாரமான கட்டுரைகளை எழுதினால் அவற்றை பலரும் படிப்பார்கள். வெறுமனே வெறுப்புக் கருத்துக்களை கொட்டி எழுதினால் யாரும் அவற்றை கண்டு கொள்ள மாட்டார்கள்.

// ஏதாவது ஒன்று இரண்டு விட்டுப் போய் இருக்கக் கூடும். //

நீங்க ரொம்…ப்ப நல்லவருங்க‌…!

இந்தப் பின்னூட்டத்தை இட்டதால் உங்களுக்கு ரொம்ப சந்தோசமா? அப்படியானால் ஏதாவது ஒரு வகையில் உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் – அந்த வகையில் எனக்கும் மகிழ்ச்சியே. என்னை வைத்து ஏதாவது காமெடி, கீமெடி பண்ண வேண்டுமானாலும் (முடிந்தால்) பண்ணிக் கொள்ளுங்கள்.

Kingdom of god is within. Don’t get struck in body or mind.
தேவன் ஒளியாக இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கிலம்

ஜெக்கப் தாரகன்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
416B முண்டகல்லேன் kerala
contact 9446101645

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/

Please follow

(First 2 mins audio may not be clear… sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

Online Books
http://www.vallalyaar.com/?p=409

Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

There is no reply from Sri chillsam regarding Mass killing, convertion and capturing other countries by hook or crook. He should answer the misuse of money and other power on other poor nation by one country. One could not see his face on his own eyes. He should see his misdeeds through the mirror (other person views).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: