Thiruchchikkaaran's Blog

வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றது சரியா?

Posted on: July 27, 2010


வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் போது இராமன் மறைந்து இருந்து வாலி மேல் அம்பு விட்டு வாலியைக் கொன்று இருக்கிறார். 

இந்த கேசை நாம் மூன்று  பகுதிகளாக ஆராய்வோம். ஒன்று சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையே உள்ள பிரச்சினை என்ன, அதன் பரிமாணங்கள் என்ன, வாலி கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு குற்றம் செய்தவனா?  இரண்டாவது இராமன் வாலியைக் கொன்றது சரியா ?  அதுவும் மறைந்து இருந்து கொன்றது சரியா?

சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையே உள்ள பிரச்சினை என்ன,இதன் பின்னணி என்ன?

மாயாவி என்னும் அசுரன் கிஸ்கிந்தா பகுதியிலே அக்கிரம ரவடி தனத்திலே ஈடு பட்டு வந்தான். அவனைத் தட்டிக் கேட்க முடிவு  செய்த வாலியும் , சுக்க்ரீவனும் மாயாவியை விரட்டிய போது அவன் ஒரு நீண்ட பொந்து போன்ற குகைக்குள்ளே புகுந்து கொண்டான். சுக்ரீவனை விட வாலியே வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால், வாலி தன தம்பி சுக்ரீவவனைப் பார்த்து, தம்பி, வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடிக்கு நீ இங்கே வாசலில் நின்று பார்த்துக் கொள் . நான் உள்ளே சென்று அந்த ரவுடி அரக்கனை  கைமா செய்து விட்டு வருகிறேன் என்று உள்ளே  சென்று விட்டான்.  நாள் கணக்கில் சண்டை நடக்கிறது. அவர்களின் இரத்தம் வாயில் வரை வந்து விட்டது.

 வாலி இறந்து இருக்க கூடும் என்று நினைத்து, அரக்கன் மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என நினைத்து சுக்ரீவன் குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா வந்து விட்டான். அது அவசரத்திலும் பயத்திலும் செய்த செயல்.

 வாலி அரக்கன்  மாயாவியைக் கொத்து பரோட்டா போட்டு விட்டு , களைப்புடன் குகையின் வாயிலுக்கு வந்தான். குகையின் வாயில் ஒரு பெரிய கல்லால் அடைக்கப் பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த வாலி,  சிரமப் பட்டு அந்தக் கல்லை நகர்த்தி விட்டு கிஸ்கிந்தா வந்து சேர்ந்தான். கிஸ்கிந்தாவிலோ, சுக்ரீவன் அரசனாக முடி சூட்டிக் கொண்டு ஜாம் ஜாமென்று ஆட்சி நடத்துகிறார்.  தன்னைக் கொன்று ஆட்சியைப் பிடிப்பதற்காகவே, சுக்ரீவன் கல்லைப் புரட்டி குகை வாசலை அடைத்ததாக வாலி கருதினான். அவ்வளவுதான் , அவனுடைய முழுக் கோபமும், சுக்ரீவன் மேல் திரும்பியது.

சுக்ரீவன் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அரசன் இல்லாத சமூகத்துக்கு அரசர் தேவை என்பதால் சுக்ரீவன் அரசராகி விட்டான். தமையன் சுக்ரீவன் ஆட்சியைப் பிடிக்க ஆசைப் பட்டு குகையை மூடி விட்டதாக நினைத்தான். எனவே சுக்ரீவன் மீது சினம் கொண்டான். ஒரு சிறு தண்டனை கொடுத்து அதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் சுக்ரீவனின் வாழ்வாதாரத்தை சிதைப்பது, சுக்ரீவனை கொல்வது என முடிவு எடுத்தான்.

 சுக்ரீவன் உண்மையிலே அப்பாவி. ஆனால் அவனை விரட்டி விரட்டி அடித்தான் வாலி. சுக்ரீவன் அவனிடம் இருந்து தப்ப ஒவ்வொரு காட்டுக்கும், மலைக்கும் ஓடினான். எங்கு போனாலும் விடாமல் விரட்டி வந்து, சொந்த தமையன் என்றும் பாராமல் புரட்டி புரட்டி அடித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறான் வாலி.

கடைசியில் வாலி வர முடியாத ரிஷிய மூகி பகுதியில் புகுந்து தன் உயிரைக் காத்துக் கொண்டான் சுக்ரீவன்.

தான் ரிஷியா முகி பகுதியில் நுழைய முடியாதே என்ற ஒரே காரணத்தினால் சுக்ரீவனை உயிரோடு விட்டு விட்டு, கிஸ்கிந்தா திரும்பி சுக்ரீவனின் மனைவியையும் தனக்கு உடமையாக்கிக் கொண்டு, முரட்டுத் தனத்தினால், ஆத்திரத்தினால், மூடத் தனத்தினால் அயோக்கியத் தனம் செய்தவனாகி, சகோதரனுக்கு மாபெரும் அநியாயம் செய்து விட்டான் மாவீரன் வாலி.

வாலிக்கு அவன் மனைவி தாரையே புத்தி சொல்லி, ஆயிரம் ஆனாலும் சுக்ரீவன் சகோதரன் என்று விளக்கியும், ஆத்திரம் அறிவை மறைத்ததால் வாலி அதை ஏற்கவில்லை.

எனவே இராமரோ, இலக்குவனோ வாலியை சந்தித்து சமாதானம் பேச முயற்சி செய்வதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லாமல் போய் விட்டது.

சுக்ரீவன் விசயத்திலே யார் வந்து சொன்னாலும் சுக்ரீவனை மன்னிக்க , மறக்க தயாராக இல்லை வாலி. எனவே மாவீரன் வாலியார் அவர்களை கொல்ல வேண்டியதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை. தண்டிக்க பட வேண்டிய கடுமையான குற்றங்களை செய்து விட்டார் வாலியார். சாமாதனத்துக்கான வாய்ப்பை அளிக்க வாலி தயாராக இல்லை.

சுக்ரீவன் தன்   கையிலே எப்போது  சிக்கினாலும்  அப்போது  அவனை கசாப்பு போட வேண்டும் என்கிற கோவம், வெறி குறையாமல் இருந்து இருக்கிறான் வாலி. தம்பி ஏதோ தவறு செய்து விட்டான் மன்னிப்போம், மறப்போம், அவன் இது வரை ஓடி  ஒளிந்து அலைந்து திரிந்து பயந்து நடுங்கி பட்ட பாடு போதும்.   என்கிற எண்ணம் வரவில்லை வாலிக்கு. கண்ணிலே பட்டால் கைமாதான் என்று கருவிக் கொண்டு இருந்தான். .

எனவே வாலியார் வதம் செய்யப் படுவதை தவிர சுக்ரீவனுக்கு நீதி வழங்க வேறு வழி இல்லை என்கிற நிலையை தானே உருவாக்கி இருக்கிறார் வாலியார்.

சரி வாலி செய்ததுதான் தவறு. அதற்காக இராமன் எப்படி மறைந்து நின்று அம்பு போடலாம். நேருக்கு நேராக நின்று போராடுவதுதானே சுத்த வீரம்? நியாயமான கேள்விதானே. இதிலே இராமன் தரப்பு வாதம் என்ன? வாலி கிஸ்கிந்தா கோட்டைக்கு உள்ளே சுகமாக அந்தப் புரத்திலே இருக்கிறான். அவனை சுற்றி அவனுடைய அமைச்சரும், படை  வீரரும் உள்ளனர்.  இராமன் வாலியை போருக்கு அழைத்து அறைகூவல் விடுத்தால், வாலியின் மாபெரும் சேனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?  என்னதான் வாலி இராமருடன் ஒண்டிக்கு ஒண்டி மோதுகிறேன் என்றாலும் வாலிக்கு பின்னடைவு ஏற்படுவதை அவருடைய போர்த் தளபதிகளும், படையினரும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பர்களா? அவர்கள் வாலியைக் காக்க  குறுக்கே வராமல் இருப்பார்களா? அப்போது இராமர் வாலியின் மொத்த சேனையின் மீதும் படை எடுக்க வேண்டும். ஆதாவது ஜாம்பவான், அங்கதான், நீலன், நலன், குமுதன் , தாரன் உள்ளிட்ட அனைத்து வானர வீரர்களையும், தன்னுடைய சக்தி வாய்ந்த அம்புகளால் துளைத்து விட்டு, வாலியையும் கொன்று விட்டு எல்லா வீரர்களும் இறந்த நிலையிலே ஒரு emptyயான ராச்சியத்தையே சுக்ரீவனுக்கு இராமன் தர முடியும்.

அப்பா இராமன் மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரி அப்படீங்கறீங்களா ?  என்றால், அந்த நிகழ்வு இராமன் ஒரு சாதாராண மனிதனாக நடந்து கொண்ட நிகழ்வு. 
இராமன் தன் வாழ் நாள் முழுவது ஒரு அசாதாரண மனிதனாக , தியாகத்தின் திரு உருவமாக இருந்திருக்கிறான். பெண்கள் விரும்பும் அளவுக்கு, மிகுந்த அழகுடைய  ஹான்ட்சாம் இளைங்கனாக இருந்த போதும்,  தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதிலும் அனுமதிக்காத மாமனிதனாக இருந்திருக்கிறார்.  யாரையும் வம்புக்கு இழுத்து போர் புரிந்தது இல்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது இல்லை. தனக்கு வர வேண்டிய ஆட்சியை விட்டுக் கொடுத்து இருக்கிறார். காட்டுக்கு போகச் சொன்ன போது மறுப்பு தெரிவிக்காமல் அதையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார். காட்டிலும், அப்பாவி சித்தர்களுக்கு அபாயம் ஏற்படும் போது பாதுகாப்பு தந்து இருக்கிறார். எனவே தான் இராச்சியத்தை விட்டு காட்டிலே கஷ்டப் படும் போதும் பிறருக்கு உதவி செய்து இருக்கிறார். ஆனானப் பட்ட கடவுள் என்று சொல்லப் படுபவர்களே, வானத்திலே இருந்து மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக கருதப் படுகிற நேரத்திலே, இராமன் தான் கஷ்டப் பட்ட போதும் மக்களுக்காக போராடி இருக்கிறார். எனவே தான் இராமர் கடவுளுக்கும் மேலானவர், சமானமெவரு, இராம நீ சமான மெவரு, என அறிங்கர்கள் பாடி உள்ளனர்.
அப்படி மனிதர்களில் மாணிக்கமாக, கடவுளுக்கும் மேலான நிலையிலே வாழ்ந்தா இராமன்,  வாலி வாதத்திலே சந்தர்ப்ப சூழ்நிலையால் எல்லா மனிதர்களையும் போல, போட்டுத் தள்ளு, போட்டுத் தள்ளு,  பொருக்கி பசங்களால பூமிக்கு கெடுதி என்று சொல்லப் படும் வகையிலே நடந்து கொண்டு இருக்கிறார் என்பதாகவே நாம் அறிகிறோம்.  
Addendum- 1:
Rama's Bridge seen from above the Mannar island, Sri Lanka.
Large Sri Lanka Map
Advertisements

18 Responses to "வாலியை இராமன் மறைந்து இருந்து கொன்றது சரியா?"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

நல்ல கட்டுரை.

///அப்பா இராமன் மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரி அப்படீங்கறீங்களா ? என்றால், அந்த நிகழ்வு இராமன் ஒரு சாதாராண மனிதனாக நடந்து கொண்ட நிகழ்வு.///

மேலும் வாலிக்கு நேருக்கு நேராக நின்று சண்டையிடும் நபரின் பாதி பலம் வாலிக்கு சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

///கடைசியில் வாலி வர முடியாத ரிஷிய மூகி பகுதியில் புகுந்து தன் உயிரைக் காத்துக் கொண்டான் சுக்ரீவன்.///

ஏன் வாலியால் ரிஷிய மூகி பகுதிக்கு செல்ல முடியவில்லை.?

Dahanabal Sir,

Thanks for your comments and compliments.

//நல்ல கட்டுரை.//

May be you remember, we told ( couple of months ago ), that we will have a separate article discuss about Vaali killing.

Also we will have articles about Sita entering into fire, as well about Sitha going to forest alone!

//மேலும் வாலிக்கு நேருக்கு நேராக நின்று சண்டையிடும் நபரின் பாதி பலம் வாலிக்கு சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.// I too read so.

ஏன் வாலியால் ரிஷிய மூகி பகுதிக்கு செல்ல முடியவில்லை.?

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

நல்ல கட்டுரை.

///அப்பா இராமன் மறைந்து நின்று வாலியைக் கொன்றது சரி அப்படீங்கறீங்களா ? என்றால், அந்த நிகழ்வு இராமன் ஒரு சாதாராண மனிதனாக நடந்து கொண்ட நிகழ்வு.///

மேலும் வாலிக்கு நேருக்கு நேராக நின்று சண்டையிடும் நபரின் பாதி பலம் வாலிக்கு சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

///கடைசியில் வாலி வர முடியாத ரிஷிய மூகி பகுதியில் புகுந்து தன் உயிரைக் காத்துக் கொண்டான் சுக்ரீவன்.///

//ஏன் வாலியால் ரிஷிய மூகி பகுதிக்கு செல்ல முடியவில்லை? //

Rishya mooki was a dense forest area, where one monk was meditating. At one time Vaali had a fight with a demon, Dhunthubi, in ythe forest, Vaali killed the demon Dhundhubi. While doing so, he lifted the Dhundhubi and throw him away, lot of blood spilled and scattered all over the meditating monk, made to to awaken from the mediatation. The monk cursed Vaali that if he enter once agin he would face his death. Psychologically feared and faltered Vaali, was worried that he may die, if he enters in to that forsst again.

இதெல்லாமே கற்பனை கதைகள். இந்த காலத்தில் சினிமா , நாடகம் எப்படியோ அது போல் தான் புராணங்களும் இதிகாசங்களும். அப்படியே இதை உண்மை என்று பேசினாலும், சுக்ரீவன் வாலி நினைத்தது போல் உண்மையிலேயே செய்திருக்கலாமே யாருக்கு தெரியும். கதை எழுதியவன் சுக்ரீவனுக்கு வேண்டப்பட்டவனாக இருந்திருக்கலாம்.

நன்றி பிரதீப்,

இராமாயணம் ஒரு புனைவாக இருந்திருப்பதற்க்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் இராமாயணம் ஒரு உண்மை நிகழ்வாக இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன, அதற்க்கான சான்றுகள் உள்ளன.

வாலியின் வலிமை, போரிடும் திறமை, துணிவு, ஆற்றல் இவற்றோடு ஒப்பிடும் போது சுக்க்ரீவன் அவ்வளவு வலிமையோ,திறமையோ இல்லாதவன். இது எல்லோரையும் விட சுக்ரீவனுக்கு நன்கு தெரியும், ச்க்ரீவனால் ஒரு பெரிய பாறையை புரட்டி குகையின் வாயிலை மூடி விட முடியும் என்றால், அந்தப் பாறையை தள்ளி விட்டு வெளியே வருவது வாலிக்கு இயலாத காரியம் அல்ல என்பதும் சுக்ரீவனுக்கு தெரியும். எனவே சுக்ரீவன் மாயாவிக்கு பயந்து குகையை மூடி விட்டு சென்று விட்டான் என்று எழுதியது நேர்மையான விவரிப்பாகவே இருந்திருக்கக் கூடும் என்று நாம் கருதலாம்.

Pradeep, on July 28, 2010 at 22:31 Said:

இதெல்லாமே கற்பனை கதைகள். இந்த காலத்தில் சினிமா , நாடகம் எப்படியோ அது போல் தான் புராணங்களும் இதிகாசங்களும். அப்படியே இதை உண்மை என்று பேசினாலும், சுக்ரீவன் வாலி நினைத்தது போல் உண்மையிலேயே செய்திருக்கலாமே யாருக்கு தெரியும். கதை எழுதியவன் சுக்ரீவனுக்கு வேண்டப்பட்டவனாக இருந்திருக்கலாம்.
Reply
(1) If so,then all holy books are also written stories.
(2)For an example we are accepting that EVR,Swami vivekananda,Ramana maharishi,mahathma gandi and subash chandra bos were lived in last century.we have some books about their life also written by their followers.It may explains about their preaching, advises,l lifestyle, adventures, etc.
Are we agree or not about the persons though we are not met them directly.Are we believe the books which describes about them.
And we hear and read about the freedom struggle in India happened last century.we have books written by witnessed persons.
Rmayanam is also an event happened very long back and written by the witnessed persons.
if we accepting gandi and subash and EVR by hearing about by others and reading their life as in books then ramayanam also to be accepted.if not the logic says that EVR and gandi and subsh and freedom struggle everything is a story.

Dear Satheesh,

Many thanks for your visit and opinions.

//Rmayanam is also an event happened very long back and written by the witnessed persons//

We have more evidences for Ramayan. The Nala Bridge itself is a collosal evidence. Chennai High court recommended to conduct archeaalogical exploration on the bridge. The govenments are maintaining silence on them.

என்ன ஒரு லாஜிக்…விடுதலை போராட்ட தலைவர்கள் வாழ்ந்தது, அவர்கள் கருத்துக்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் உள்ளது கடிதங்களாக, வீடியோக்களாக, ஆடியோக்கலாக, நேரில் பார்த்தவர்கள். இப்படி எவ்வளவோ. இதனையும் ராமாயண மகபாரதங்களையும் ஒப்பிடுவதே ஒரு பெரிய நகைச்சுவை. ராமர் பாலம் என்பது ஒரு பெரிய கட்டுக்கதை. இது போல மணல் திட்டுக்கள் பல நாடுகளில் உள்ளது. புனித நூல்கள் என்று சொல்லபடுபவைகளிலும் கட்டுகதைகள் ஏராளம் உண்டு. உதாரணமாக இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரம் பைபிளை தவிர வேறு எதிலும் இல்லை, நோவ கதை, நபியின் மிராஜ் பயணம், கிருஷ்ணன் சூரிய சந்திரன்களை குழப்பியது, இராமாயணத்தில் வரும் அரக்கர்கள், வானர படைகள் , புராண கதைகள் இப்படி. அதில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நம்பினால் நாம் தான் மூடர்கள்.

அசோகர் வாழ்ந்ததற்கும், அக்பர் வாழ்ந்ததற்கும், சிவாஜிக்கும், திப்புவுக்கும் வீடியோ ஆதாரம் இல்லை. அதனால அவர்கள வாழவில்லை என்று ஆகி விட முடியாது. இவ்வளவு தெளிவாக கோடு போல பாயின்ட் டு பாயிண்டாக மணல் திட்டு உருவாகுமா? இந்த பாலத்தை அகழ்வாராய்ச்சி செய்து நீள் அகல உயர பரிமாணங்களை உள்ளடக்கிய காண்டூர் சார்ட் (CONTOUR CHART) எடுக்க வேண்டும். அப்போது உண்மை தெளிவாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டே அகழ்வாராய்ச்சி செய்யச் சொல்லி உள்ளது.

வானரப் படை என்பது அறிவியில் ரீதியில் சாத்தியமே. மிருகங்கள் கூட்டமாகவும், சமூக அமைப்பாகவும் அன்று முதல் இன்று வரை வசித்து வருகின்றன. பரிணாம வளர்ச்சியில் கடைசிக் கட்டத்தில் இருந்திருக்கக் கூடும்.

இராமாயணம் நிச்சயம் நடந்தது என்பதை மின்னியக்க விதிகளைப் போல உறுதியாக சொல்ல முடியாது. சாத்தியங்கள் உள்ளன என்றே சொல்லுகிறோம்.

திரும்பவுமா… ராமாயணம் மகாபாரதம் வரலாற்று சான்றுகள் இல்லை. அசோகர், அக்பர் வரலாறு தெளிவாக இருக்கிறது. எந்த ஆராய்ச்சியாளரும் ராமனையோ, கிருஷ்ணனையோ ஆராய ராமாயண மகாபாரத கதைகளை ஆதராமாக கொள்ள மாட்டார்கள். கோடு போன்ற பாயிண்டாக நிறைய மணல் திட்டுகள் உள்ளன. அதையெல்லாம் பாலம் என்று எந்த நாடும் சொல்லுவதில்லை. வானர படைகள் அறிவியல் ரீதியாக சாத்தியமா …பரிணாம வளர்ச்சியில் கடைசியில் இருந்திருக்க கூடுமா … முதலில் பரிணாம வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே..ராம பக்தன் நான் அதனால் நம்புகுறேன் என்று சொல்லிவிட்டு போனால் யாரும் கேட்க போவது இல்லை. சும்மா எதுக்கு பகுத்தறிவு அறிவியல் என்று உதார்…

//எந்த ஆராய்ச்சியாளரும் ராமனையோ, கிருஷ்ணனையோ ஆராய ராமாயண மகாபாரத கதைகளை ஆதராமாக கொள்ள மாட்டார்கள். //

வரலாறு என்பதே அந்ததந்த கால கட்டத்திலே எழுதப்பட்ட நூல்களின் அடிப்படையாக கொண்டும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு வூகிப்பதன் மூலமே எழுதப் படுகிறது. சமீப கால வரலாறை ஓரளவு உறுதியாக சொல்ல முடியும், அதாவது காந்தியப் பார்த்தவர்கள் இப்போதும் உயிரோடு இருக்கக் கூடும். மிகப் பழைய வரலாறை பார்த்து சொலபவர்கள் யாரும் இல்லை. கலிங்கத்துப் பரணியை வைத்து இராசேந்திர சோழனின் வரலாற்றை அறிகிறோம். இண்டிகாவை வைத்து சந்திரகுப்தன் பற்றி அறிகிறோம். அலெக்சாண்டர் இந்தியாவுக்கு படை எடுத்து வரும் முன் மேலை நாட்டவர் இந்தியாவின் வரலாற்றை பதிவு செய்யவில்லை. அதற்காக அலெக்சாண்டருக்கு முன் இந்தியாவில் வரலாறே இல்லை என ஆகி விடாது. சொன்னப் போனால்; இந்தியாவின் வரலாற்றின் பெரும் பகுதி அலெக்சாண்டர் வரும் முன்பே நடந்திருக்கிறது. புத்தர் காலமே அலெக்சாண்டருக்கு முந்தைய காலம்.

சொன்னப் போனால்; இந்தியாவின் வரலாற்றின் பெரும் பகுதி அலெக்சாண்டர் வரும் முன்பே நடந்திருக்கிறது. புத்தர் காலமே அலெக்சாண்டருக்கு முந்தைய காலம். புத்தருக்கு முன்பு பல்லாயிரம் வருடம் இந்தியா சமுதாயம் நாகரிக சமுதாயமாக இருந்திருக்கிறது. வேள்விகள் பல்லாயிரம் வருடம் வேர் பிடித்து இருந்திருக்கின்றன. அந்த வேள்விகள் மீது தன்னுடைய விமரிசனங்களை புத்தர் வைத்து இருக்கிறார். இவ்வாரக இந்திய வரலாறும் , சமூகமும் மிகப் பெரிய வரலாறு உடையவை. இராமாயண நிகழ்வு இந்தியாவின் வரலாற்றின் அதாவது மேலை நாட்டினர் பதிவு செத்ததற்கு முந்தைய வரலாற்றின் ஒரு பகுதியா என்பது ஆராய்ச்சிக்கு உரிய ஒன்று உரிய ஒன்று. இந்தப் பாலம் ஆராயப் பட வேண்டிய ஒன்று.

//கோடு போன்ற பாயிண்டாக நிறைய மணல் திட்டுகள் உள்ளன. அதையெல்லாம் பாலம் என்று எந்த நாடும் சொல்லுவதில்லை. //

நல்லது, அந்த நாடுகளில் அப்படி பாலம் கட்டி இருக்காவிட்டால் அதற்க்கு நாம் அவர்களைக் குறை சொல்லவில்லையே. மேலும் இதே போல மிகவும் குறுகலான அமைப்பில் இணைப்பு இருப்பதாக நீங்கள் கருதும் பகுதிகளை- அப்படி ஏதாவது இருந்தால்- நம்முடைய தளத்துக்கு அனுப்பலாம். அவற்றையும் நாம் கட்டுரையில் இணைப்போம். வெறுமனே இணைப்பு இருப்பதாக சொல்லி பலன் இல்லை.

//முதலில் பரிணாம வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே//

பரிணாம தத்துவத்தை படிக்கமாலா, புரியாமலா நாம் இங்கே எழுதுகிறோம். என்னவோ நீங்கள் மட்டும்தான் படித்தவர்கள், போல எழுதுவது சரியல்ல. நீங்கள் முதலில் சரியாக பரிணாம தத்துவத்தைப் படியுங்கள். ஒரு செல் உயிரி, பிறகு நீர் வாழ்வான, பிறகு நீர்நிலவாழ்வான, பிறகு நிலவாழ்வான, பறப்பன, பாலூட்டிகள், பாலூட்டியில் மிருகங்களில் குரங்கு மனிதானாக பரிணாம வளர்ச்சி நடை பெறுகிறது. இந்த பரிணாம வளர்ச்சியானது பல்லாயிரம் வருடங்களில் கால இட சூழ் நிலைகளில் ஒத்துழைப்புக்கு ஏற்ப நடை பெற்றதாக சொல்லப் படுகிறது. ஒரு வாரத்தில் நடை பெறவில்லை. இந்த பரிணாம வளர்ச்சில் குரங்குகள் மனிதராக உருமாறி யா கால கட்டத்திலே, சில குரங்கு இனங்கள் நிதானமாக உருமாறி இருக்க கூடும்.

திரு பிரதீப் அவர்களே,

///வானர படைகள் அறிவியல் ரீதியாக சாத்தியமா …பரிணாம வளர்ச்சியில் கடைசியில் இருந்திருக்க கூடுமா … ///

மனிதக் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் இருந்திருக்க வேண்டும் என்பது பரிணாமவாதிகள் கூறுகிறார்கள்.அவை ஏன் இந்த வானரமாக இருக்கக் கூடாது.?

இந்து மதத்தில் சொல்லப்பட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக இவைகளை மறுப்பது எப்படி அறிவுடைய செயலாகும்.?

திரு பிரதீப் அவர்களே,

///ராமர் பாலம் என்பது ஒரு பெரிய கட்டுக்கதை. இது போல மணல் திட்டுக்கள் பல நாடுகளில் உள்ளது///

அப்படியென்றால் ஏன் அந்த மணல் திட்டுக்கள் ராமாயணத்தில் ராமர் பாலம் கட்டியதாக சொல்லப்பட்ட இடமான தனுஸ் கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்க வேண்டும்.? ராமர் பாலம் மட்டுமல்ல ராமாயணம் சம்பத்தப்பட்ட இடங்கள் இந்தியா முழுதும் உள்ளன.அப்படியென்றால் வால்மீகி இந்தியா முழுதும் சுற்றி location பார்த்து விட்டு வந்து ராமாயணம் எழுதினாரா?

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

வாலியால் ரிஷிய மூகி பகுதிக்கு செல்ல முடியாத காரணத்தை உங்களால் தெரிந்துகொண்டேன்.நன்றி.

நான் ராமாயணம்,மகாபாரதம் போன்ற நம் இதிகாசத்தின் சிறிய அளவிலான புத்தகத்தை மட்டுமே படித்திருக்கிறேன்.அதனாலேயே பல விசயங்கள் தெரியாமலேயே எனக்கு இருக்கிறது.

முழு அளவிலான புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தற்போது ஏற்படுகிறது.

தனபால், on July 28, 2010 at 22:31 Said:

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

வாலியால் ரிஷிய மூகி பகுதிக்கு செல்ல முடியாத காரணத்தை உங்களால் தெரிந்துகொண்டேன்.நன்றி.

நான் ராமாயணம்,மகாபாரதம் போன்ற நம் இதிகாசத்தின் சிறிய அளவிலான புத்தகத்தை மட்டுமே படித்திருக்கிறேன்.அதனாலேயே பல விசயங்கள் தெரியாமலேயே எனக்கு இருக்கிறது.

முழு அளவிலான புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தற்போது ஏற்படுகிறது.
dear dhanabal sir,
I am presently in reading ramayanam from the below mentioned blog(link from Tamil Hindu website).This is yuddha kandam link,you can choose and read from bala kandam.
jai shriram.
http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/2_16.html

திரு சதீஷ் அவர்களே,

///jai shriram.
http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/2_16.html///

நீங்கள் குடுத்த தகவலுக்கு மிக்க நன்றி சதீஷ் .

Dear predeep Iyya,
Thiruchi Iyya answer is My answer.(there is no medicine for PIDIVADHAM).
Now what I understood,we people are not ready to accept any truth in any case if followed by our Indian culture,and happy to say that facts are stupidity unless otherwise accepted and propagated by white skins. (for their commercial or political benefits).
one day ramayanam and rama-sethu will be accepted and followed by whites with new dimensions as what they are doing in our herbal medicines.that day we will accept with smiling.(because approved by westerns).
If we born before radar and ultra sonic technologies invention, we may refused about the other planets and its rotations and we used to say this is comedy to say there are few other planets and all are revolving on their orbits.because this all are invented and written by indians those who wearing only longodu.
after several centuries when whites says with wearing blazers then we will accept.
the problem is we are not believing the truth(not stories) followed by our ancestors but ready to accept the same thing after several centuries when it is reinvented ( mostly copying from our epics) by whites.
ultra sonic technology,aeronautical,open skull surgery , anesthesia without drugs,treatment for all type of worst disease everything were in practice in india even before westerns are getting civilized. but we wont believe this because nowadays our mind set says, always whites
only genius to find all inventions.

The problem with us is that we look up to the whites to revalidate our puranas and legends and only then we would accept them.We gulp whatever history concocted by them as gospel truths.One such is the Aryan/Dravidian race theory which till date has been based on surmises and conjectures with no tangible proof

Welcome, Mr. Sundar,

This article about Vali , I hope , is a Logical analysis of events which leads to Valis death. I dont think that this has any connection to whites.

Regarding Aryan, I request you to read the following article
இந்தியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகளா?
https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/20/were-the-aryans-indias-original-people/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: