Thiruchchikkaaran's Blog

அடக் கடவுளே!

Posted on: July 25, 2010


கடவுள் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தத்துவத்தை முன் வைக்கிறது.  அந்த தத்துவங்களுக்கு  இடையிலே ஒற்றுமையும் இருக்கிறது, வேற்றுமையும் இருக்கிறது. 

இந்து மதம்

உலகின் மிகப் பழமையான மதமான இந்து மதமோ எல்லா உயிரினங்களின் உயிராக கடவுள் இருக்கிறார் என்றும், எனவே எல்லா உயிர்களும் எப்போதுமே ஆரம்பம் இல்லாமல் இருக்கின்றன  என்றும், அதே போல அழிவும் இல்லாமல் இருப்பதாகவும் சொல்லுகிறது. உயிர்கள் தாங்கள் கடவுளாக இருப்பதை அறியாமல்  இருப்பதாகவும், தங்களின் உண்மை நிலையை அறியும் ஞானத்தைப்  பெரும் போது அவர்கள் கடவுளாக மாறி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறது.  இதை வெறுமனே நம்பத் (faith) தேவை இல்லை, நம்பிக்கையோடு ( with confidence and hope)  இதை ஒவ்வொருவரும் முயற்சி செய்து தாங்களாகவே அறிந்து கொள்ளலாம் என்று இந்து மதம் சொல்லுகிறது. மேலும் அவரவர் முயற்சி செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்து உத்தம கதி என்று சொல்லப் படும் கடவுள் நிலையை அடைந்தால் தான் அவர்கள் துன்பம் இல்லா நிலையை அடைய முடியும். எனவே ஆன்மீக முன்னேற்றத்துக்கு முயலுங்கள் என்று சொல்லுகிறது.

அன்று முதல் இன்று வரை இந்து மதத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கை இதுதான். பல்வேறு முனிவர்களும், சித்தர்களும், உபநிடதங்களும், கீதையும், சித்தர் பாடல்களும்,  கிருட்டினர், பட்டினத்தார்,  அப்பர், ஆதி சங்கரர், விவேகானந்தர் எல்லோரின் கடவுள் தத்துவமும் இதுதான். அழியாத மாறாத ஒரே தத்துவத்தை இந்து மதத்தின் பல அறிங்கர்கள் சொல்லி வருகின்றனர்.

இப்படி உத்தம கதி என்று சொல்லப் படும் கடவுள் நிலையை அடையும் போது ஒரு உயிர் கடவுளாகவே இருப்பதாக  வித்யாசமே இல்லாமல்  ஒன்றாகவே இருக்கும் அத்வதைக் கோட்பாடே இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடாக இருக்கிறது. அதே நேரத்திலே உத்தம கதியை அடைந்த உயிர் எந்த துன்பமும் இல்லாத நிலையில் கடவுளை சேர்வதாகவும், ஆனாலும் கடவுளின் பாதத்திலே நிம்மதியாக துன்பங்களற்ற  நிலையிலே  அமைதியும் ஆனந்தமும் உடைய நிலையிலே இருப்பதாக சொல்லப் படும் துவைத தத்துவமும் இந்து மதத்திலே உண்டு. அதே நேரம் உயிர்கள் விடுதலை பெற்று கடவுளை அடைய முடியும் என்கிற கருத்திலே மாறுபாடு இல்லை.
எல்லா உயிர்களும் விடுதலை பெற்ற நிலையை அடைந்து, துன்பங்கள் இல்லாத அமைதியான நிலையை அடையும் என்பதே இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு.
 

புத்த மதம்:

புத்த மதம் கடவுள் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் ஆன்மீக  முன்னேற்றத்தின் மூலம் ஒருவன் துன்பத்தில் இருந்து விடுபட்ட நிலையை அடைய முடியும், என்கிறது. அந்த வகையிலே புத்த மதம் இந்து மதம் இரண்டின் நோக்குமும் ஒன்றாகவே இருக்கிறது. துன்பங்கள் ஒரு உயிரைத் தாக்காத நிலைக்கு அந்த உயிரை உயர்த்துவதுதான் இரண்டு மதங்களின் நோக்கமும்.   ஆசையே துன்பத்துக்கு காரணம் , ஆசையை அழித்தவன் துன்பத்தை வெல்கிறான் என்கிறார் புத்தர். அப்படி விடுதலை அடைந்த உயிர் என்னவாக ஆகிறது என்பது பற்றி பவுத்தர்கள் சொல்லும் போது ஒன்றும் இல்லை சூனியம் தான் என்கிறார்கள். இந்த ஒரே ஒரு வித்யாசம் தான் புத்த மதத்திற்கும் இந்து மதத்திற்கும். விடுதலை பெற்ற உயிர் எல்லையற்ற கடவுளாகவே தான் இருப்பதாக உணர்கிறது என்கிறது இந்து மதம். ஆனால் பவுத்த மதமோ விடுதலை பெற்று விட்டாயிற்று, அதோடு பிரச்சினை விட்டது என்கிற அளவிலே முடித்துக் கொள்கிறது.
இஸ்லாம் :
 
உலகின் முக்கிய மதங்களுள் ஒன்றாக விளங்கும் இஸ்லாம் முஹம்மது (pbuh) அவர்களால் தோற்றுவிக்கப் பட்டது.  கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஆணித்தரமாக இஸ்லாம் சொல்லுகிறது. ஒரே கடவுள் தான் , அவர்தான் அல்லா, வேறு எந்தக் கடவுளும் இல்லை, முஹம்மது (pbuh)அல்லாவின் தூதர் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
குர் ஆன் என்பது அல்லாஹ்வினால் முகமதுவுக்கு சொல்லப் பட்டது என்றும், அதில் இருப்பதை அப்படியே கடைப் பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் உறுதியான நம்பிக்கை.  அல்லாஹ், குர் ஆன், முகமது இவர்களை நிராகரிப்பவர்கள நரகத்துக்கு செல்வார்கள் என்பது இஸ்லாத்தின் கருத்து. அல்லாஹ்வை குர் ஆனில் சொல்லப் பட்ட முறையில் மட்டுமே தொழ வேண்டும், ரமதானின் நோன்பு இருத்தல் , ஏழைகளுக்கு சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தல் உள்ளிட்ட பல கருத்துக்களும் இஸ்லாத்திலே  உள்ளன. 
இஸ்லாத்தின் கடவுள்  கொள்கை என்ன வென்றால் அல்லா ஒருவரே கடவுள் என்பதும்,  மனிதர் உட்பட அனைவரும் கடவுளின் படைப்புகள் மாத்திரமே என்பதும் தான். எந்த ஒரு உயிரும் தன்னைத் தானே உயர்த்திக் கொள்வது என்பதோ, கடவுள் ஆவது என்பதோ இஸ்லாத்திப் பொறுத்தவரையில் நடவாத காரியம். அல்லாஹ் குர் ஆனில் சொல்லியது போல நடந்து கொண்டால் மரணத்துக்குப் பின் நீரோடைகள்   நிறைந்த சொர்க்கத்திலே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை  ஆகும்.  இஸ்லாத்தின் கடவுள் கொள்கை யானது முகமது இஸ்லாத்தை தோற்றுவித்த நாளது  முதல் இன்று வரை மாறாமல் இருக்கிறது, ஏனெனில் எந்த ஒரு மாற்றத்தையோ, சேர்ப்பையோ, நீக்கத்தையோ இஸ்லாத்தில் அங்கீகரிப்பதில்லை.
கிறிஸ்தவம்:
உலகில் மிக அதிக மக்களால் பின்பற்றப் படும்  கிறிஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆதார நூலான பைபிளிலே காணப்படும் கடவுள் தத்துவமானது வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையாக உள்ளது.
 
அவர்களின் முதல் தத்துவமான ஆதாம் ஏவாள் கோட்ப்பாட்டுக் காலத்திலே கடவுள் என்பவர் இந்த உலகத்தை படைததவராகவும், கண்டிப்புக்க காரராகவும் (Disciplinerian) சித்தரிக்கப் படுகிறார். கடவுள் மனித ரூபத்தில் இருப்பதாக பைபிளின் முதல் பகுதியில் உறுதியாக சொல்லப் பட்டு உள்ளது.
பைபிளின் இரண்டாவது பகுதியில் ஒரு  புதிய திருப்பமாக இஸ்ரேல் இன மக்களுக்கான கடவுளாக ஜெஹோவா என்ற பெயரிலே கடவுள் இருப்பதாக சொல்லப் பட்டுள்ளது. அந்த ஜெஹோவா எனப் படும் கடவுள் இஸ்ரேலியருக்கு முன்னுரிமை கொடுக்கும் கடவுளாக இஸ்ரேலியர்கள் பிற இன மக்களை அளித்து அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ள உதவும் கடவுளாக பைபிளில் சுட்டிக் கட்டப் பட்டு உள்ளது.  கடவுள் பொறாமைக்கார கடவுள் என்பதாக அதிர்ச்சி தரும் தத்துவத்தை மோசஸ் என்பவர் காலத்தில் உருவாக்கி உள்ளனர். மோசசுக்கு முன்பு கடவுள் பொறாமைக்கார கடவுள் என்பதாக பைபிளில் எங்கும்  எங்கும் குறிப்புகள் இல்லை.  மோசஸ் இஸ்ரவேலர்கள வேறு கடவுளை வழி பட்டால் பொறாமை உள்ள கடவுள் கடுமையாக தண்டிப்பார் எனச் சித்தரித்து உள்ளார்.
 
  இயேசு கிறிஸ்துவானவர் கடவுளை தந்தையாக சித்தரித்து, அவர் எல்லா உயிரையும் தன்னிடம் சேர்த்துக் கொள்ள காத்திருபவராக குறிப்பிடுகிறார். ஒரே ஒரு ஆடு காணமல் போனாலும் அந்த ஆட்டை தேடும் மேய்ப்பனைப் போல கவலை உடையவராக இருப்பதாகவும், தந்தை யானவர் நல்ல செயலகளை விட்டு கேட்ட பழக்கங்களை கைக்கொண்ட மகனைக் கூட திரும்பி நல்லவனாக மாறுவான் என  வழி மேல் விழி வைத்து காத்திருப்பவராக இயேசு கிறிஸ்து சித்தரிக்கிறார். இயேசு கிறிஸ்து சித்தரிக்கும் தந்தையின் (கடவுள்) குணாதிசயங்களை நோக்கினால் அவர் எந்த ஒரு உயிரையும் கை விட்டு விடாமல் எல்லா உயிர்களும் விடுதலை அடையும் என்கிற கொள்கையை உடையவராக இருக்கிறார்.
என்னுடைய பிதாவின் கற்பிதங்களை பின் பற்றுவதே அல்லாமல் என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொலப்வன் பரலோக சாமராஜ்ஜியத்தில்  நுழைவதில்லை   என்று இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார். தன்னுடைய தந்தை பொறாமைக்கார கடவுள் என்றோ, அவரைக் கும்பிடாவிட்டால் எரி நரகத்துக்குப் போவாய் என்றோ இயேசு சொல்லவில்லை.
(To be continued….)
Advertisements

4 Responses to "அடக் கடவுளே!"

very good and real analysis.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

இந்து மதத்தைப் பற்றி மிக சரியாக ரத்தினசுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.

///அந்த ஜெஹோவா எனப் படும் கடவுள் இஸ்ரேலியருக்கு முன்னுரிமை கொடுக்கும் கடவுளாக இஸ்ரேலியர்கள் பிற இன மக்களை அளித்து அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ள உதவும் கடவுளாக பைபிளில் சுட்டிக் கட்டப் பட்டு உள்ளது. ///

பைபிளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதால் தான் கிருஸ்தவர்கள் பல இனங்களையும்,கலாச்சாரத்தையும் அழித்து அவர்களின் நிலங்களையும்,வளங்களையும் ஆக்கிரமித்து,கொள்ளையடிக்கிறார்களா?

///ஒரே ஒரு ஆடு காணமல் போனாலும் அந்த ஆட்டை தேடும் மேய்ப்பனைப் போல கவலை உடையவராக இருப்பதாகவும், தந்தை யானவர் நல்ல செயலகளை விட்டு கேட்ட பழக்கங்களை கைக்கொண்ட மகனைக் கூட திரும்பி நல்லவனாக மாறுவான் என வழி மேல் விழி வைத்து காத்திருப்பவராக இயேசு கிறிஸ்து சித்தரிக்கிறார்.
இயேசு கிறிஸ்து சித்தரிக்கும் தந்தையின் (கடவுள்) குணாதிசயங்களை நோக்கினால் அவர் எந்த ஒரு உயிரையும் கை விட்டு விடாமல் எல்லா உயிர்களும் விடுதலை அடையும் என்கிற கொள்கையை உடையவராக இருக்கிறார்.///

இதைப் படிக்கும்போது இயேசு கிறிஸ்து எல்லா மதத்தவரையும் ஏற்றுக்கொள்கிறார் என்றாகிறது.ஆனால் இந்தக் கருத்தை கிருஸ்தவ ஊழியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இயேசுவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொண்டவர்களை மட்டுமே கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார் என்று கூறித் தானே இத்தனை நூற்றாண்டுகளாக மதம் மாற்றி வருகிறார்கள்.?

Dhanabal Sir,

Jesus was against conversion.

Jesus only wanted to modify the Jewish religion and to civilize the Jewish people.

Jesus probably knew that the other people already had good religion and civilization.

Mathews 10

2. அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

3. பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

4. கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

Mathews 15

23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.

For those who are converting the people, Jesus said the following:

14. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள் அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///Jesus was against conversion.
Jesus only wanted to modify the Jewish religion and to civilize the Jewish people.
Jesus probably knew that the other people already had good religion and civilization.///

இந்த மூன்று வாக்கியங்களும் மிகவும் சக்திவாய்ந்த வாக்கியங்கள்.இதுவரை இப்படி ஒரு கருத்தை நான் கேள்விப்பட்டதில்லை.இது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய என்னுடைய கருத்தை தலைகீழாகப் மாற்றி விட்டது.

///5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
Mathews 15:
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்///

இவ்வாறு இயேசு கிறிஸ்து தெளிவாக கூறியபோதிலும் கிருஸ்தவர்கள் ஏன் இதே இயேசு கிறிஸ்துவின் பேரைச் சொல்லிக் கொண்டு உலகம் முழுதும் சென்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு எதிராக மதம் மாற்றும் வேலையை செய்கிறார்கள்?இது இயேசு கிருஸ்துவை அவமதிக்கும் செயல் அல்லவா?

///15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள் அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.///

இந்த மதம் மாற்றுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று இயேசு கிறிஸ்து தீர்க்கமாக கூறியும் இவர்கள் மதம் மாற்றுகிறார்களே.இதற்க்கு காரணம் என்ன.?பைபிளையே எந்த நேரமும் வைத்திருப்பவர்கலாகிய இந்த ஊழியர்கள் ,இயேசு கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்வதாக நினைத்து,அவர் கூறியதை,பைபிளை , சரியாக புரிந்துகொள்ளாமல், அவருக்கு எதிராகவே செயல்பட்டு நரகத்திருக்கு செல்கிறார்கள்.!!!

தான் சுமக்கும் சுமையில் உள்ளவற்றின் மதிப்பை அறியாத கழுதை போல,அவர்கள் வைத்திருக்கும் பைபிளின் பொருளை சரியாக அறியாதவர்கள். இவர்கள் மதத்திற்கு மாறும் இந்து மற்றும் மற்ற மதத்தினரையும் //இரட்டிப்பாய் நரகத்தினின் மகனாக்கு//கிறார்கள் இந்த பைபிளுக்கு எதிரான மதம் மாற்றுபவர்கள்.

ஐரோப்பியர்கள், மற்ற தேசங்களை ஆக்கிரமித்து கொள்ளையடிக்க மதத்தைப் பயன்படுத்துவதை உணராமல், இங்குள்ளவர்களும், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு எதிராக, இந்த மதம் மாற்றும் பணியை செய்வது, இயேசு கிறிஸ்து கூறியதுபோல் நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயலாகும்.

குருடன் குருடனுக்கு வழிகாட்டி இருவரும் குழியில் விழுந்ததைப் போல் இவர்களும் நரகத்திற்கு சென்று இவர்கள் மதம் மாற்றியவர்களையும் நரகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: