Thiruchchikkaaran's Blog

மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!

Posted on: July 19, 2010


 

இந்து மதத்தின் முக்கிய வலிமை அதன் ஆன்மீக சக்தியே. எந்த அளவுக்கு இந்துக்கள் ஆன்மீக முயற்ச்சியில் ஈடுபடுகிரார்களோ அந்த அளவுக்கு இந்து மதம் வலிமை பெரும். இந்துக்களும் உறுதியான மன வலிமை பெறுவார்கள். ஒவ்வொரு இந்துவிடமும் ஆன்மீக வலிமை உருவாக்கப் பட வேண்டும்.

ஒவ்வொரு இந்துவும் ஏதாவது ஒரு இந்துக் கடவுளிடமாவது கொள்கை அடிப்படையில், தனிப் பட்ட முறையில் ரேப்போ (Rappo) வைத்துக் கொள்ளும் படி ஆன்மீக பிரச்சாரம் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு இந்துவும் மாணிக்கவாசகரைப் போலவோ, பிரஹலாதனைப் போலவோ, உடனே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆன்மீக முயற்சி என்பது சிறிதளவாவது ஏற்படுத்தப் பட்டால் கூட அவர்கள் மன வலிமை பெறுவார்கள். ஆன்மீக வலிமை பெற்றவன் எந்தக் கஷ்டம் வந்தாலும் உறுதியாக நிற்பான். கஷ்டம் வந்த போது, தாங்கும் வலிமையை பெற்றால் தாவ மாட்டார்கள்.

ஆனால் யாருக்காவது ஏதாவது கஷ்டம் வந்தால் உடனே சில வியாபாரிகள் தங்கள் தள்ளு வண்டியை அங்கே கொண்டு போய் விடுகின்றனர்,

இந்தக் கடவுளுக்குத் தான் மகிமை இருக்கிறது என்றால் அப்படிப் பார்த்தால் எந்த மதக் கடவுளாவது இந்த உலகத்தில் யாரையாவது சாவே இல்லாமல் தொடர்ந்து வாழும் படி செய்து இருக்கிறார்களா? புத்தர் சொன்னது போல யார் வீட்டிலாவது சாவே இல்லாமல் இருக்கிறதா ? எனவே எந்தக் கடவுளும் யாரையும் சாகாமல் காக்கவில்லை. பொய்யை உணமையால் கூட காக்க முடியாது. உணமையையே உண்மையால காக்க இயலும்.

எனவே இந்துக்கள் இந்து மதத்தைக் காக்க விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு இந்துவையும், மனக் குவிப்பு பயிற்ச்யிலோ பூசனையிலோ, யோகத்திலோ சிந்தனையிலோ ஈடுபடும்படி செய்ய வேண்டும். இது முக்கியம். நான் இதை பல முறை எழுதி இருக்கிறேன். அவர்கள் உலகில் உள்ள மக்களை எல்லாம் சிந்தனைப் பாதைக்கு கொண்டு வருவது முக்கியன செயல்.

அதோடு உலகிலே எந்த ஒரு மதத்தையும், யாரையும் வெறுக்காத மதமாக இந்து மதம் இருக்கிறது என்பதையும் தெரியப் படுத்த வேண்டும்.

File:Thiruchendur2.jpg

இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் பெரும்பாலானவை இந்திய சமுதாயம் பல்லாயிரம் ஆணடுகளாக பின்பற்றி வரும் கருத்துக்களே. ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டு, இறுதி வரை அவளை பிரியாமல் வாழ வேண்டும், அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும், விபச்சாரம செய்யக் கூடாது என்பது போன்ற இந்திய சமுதாயக் கருத்துக்களை ஒத்த கருத்துக்களை இயேசு கிறிஸ்து யூத மக்களிடம் பரப்ப முயற்சி செய்தார். இதை எல்லாம் நாம் ஒவ்வொரு இந்துவிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.

யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பெயராலேயே , அடிப்படை வாத முரட்டுப் பிடிவாத சமரச மறுப்புக் கருத்துக்கள் பரப்பப் பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொண்டு, அவரது உணமையான கருத்துக்களை, சமரச மறுப்பு முரட்டுப் பிடிவாதக் கோட்பாட்டு பரப்பாளர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பும் நம்மிடமே இருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் ஆரம்பமான முக்கிய செயல் ஒவ்வொரு இந்துவும் வாரத்திலே ஒரு நாட்களோ, இரண்டு நாட்களோ, நேரம் கிடைக்கும் பொதெல்லாம் ஆரவாரமில்லாத மனக் குவிப்பு பயிற்சியிலோ, பூசனையிலோ, ஈடு பட செய்வதோடு சிந்தனையிலும் ஈடுபட செய்ய வேண்டும். இந்து மதத்தின் தத்துவங்களை எல்லா இந்துக்களிடமும், எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டும்.

வாழ்க்கை என்ன என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி இனி முனிவர்களால் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்துவாலும் மேற்கொள்ளப் பட வேண்டும்.

We have added the comments of brother  Mr. Dharasan, and our reply for the same as part of this article.

இணைப்பு 1:

தர்சன் says:

//ஆன்மீகச் சக்தி என்றால் என்ன? காணக் கிடைக்காத கடவுளிடம் எப்படி Rappo வைத்துக்கொள்வது? கஷ்டங்களை கடவுளால் தீர்க்க முடியாவிட்டால் மதம் மாறாது மதத்தைக் காக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?//

Thiruchchikkaaran says:

//ஆன்மீகச் சக்தி என்றால் என்ன?//

கையிலே சல்லிக் காசு இல்லாத நிலையில் சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடை பெறவிருந்த சர்வமத சபையில் தான் கலந்து கொள்ளல் வேண்டும் என்றும், அந்த சர்வமத சபையே தன் கருத்துக்களை உலகம் எங்கும் பரப்ப அமைந்த ஒரு நிகழ்வே என்றும் உறுதியாக கூறி அமேரிக்கா செல்ல தனக்கு உதவி செய்யுமாறு நண்பர்களிடம் சொன்னதோடு, அதை செய்தும் காட்டியதை ஆன்மீக சக்தி என்றே நான் கருதுகிறேன்.

தன்னை மிதித்துக் கொல்ல யானை ஏவப் பட்ட நிலையிலே, “நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்”, என்று யானையை எதிர் கொண்டு, திருநாவுக்கரசர் பாடியதை ஆன்மீக சக்தி என்றே நான் கருதுகிறேன்.

இன்னொரு அலெக்சாண்டராக உருவாக்கி இருக்கக் கூடிய அசோகனை ” குளங்களை வெட்டு வித்தார், சாலைகளை கட்டு வித்தார், சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வித்தார்” என்னும் வரலாறாக்கியது புத்தனின் ஆன்மீக சக்தியே என நினைக்கிறேன். ஆனால் தூர திர்ஷ்ட வசமாக அந்த ஆன்மீக சக்தி இலங்கையில் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.

சிலுவையில் அறையப் படும் நிலையிலும், தானே யூதர்களின் அரசன் என்றும், தன்னுடைய கொள்கை சரியானது என்றும் கூறிய இயேசுவின் நிலைப்பாடும் அவரது ஆன்மீக சக்தியை காட்டியதாகவே கருதலாம்.

மெக்காவில் இருந்து பாதுகாப்பு தேடி மதீனாவுக்கு சென்ற நிலையிலும், திரும்பி வந்து அரேபிய பகுதி முழுதையும் கைப்பற்றிய முகம்மதுவின் செயலையும் அவரது ஆன்மீக சக்தியை காட்டியதாகவே கருதலாம்.

ஆன்மீக சக்தி என்பது தொடர் முயற்சி மூலம் பெறக் கூடியது என சொல்லப் படுகிறது. ஓரிரு நாட்களில் ஆன்மீக சக்தியை பெறுவது கடினம் என சொல்கிறார்கள்.

//காணக் கிடைக்காத கடவுளிடம் எப்படி Rappo வைத்துக்கொள்வது//

இந்துக்கள் வணக்கும் கடவுள்களில் பெரும்பாலானோர், மக்களுடன் வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி, மக்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த வகையிலும் தெய்வம் ஆக்கப் பட்டவர்கள். முருகன், ஐயப்பன், கிருஷ்ணர், இராமர்…. ஆகியோர் மக்களோடு இருந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தியோடு வைப்பது போலவே இந்தக் கடவுலகளிடமும் Rappo வைக்கலாம். காந்தியே இராமரிடம் Rappo வைத்தவர் தானே.

//கஷ்டங்களை கடவுளால் தீர்க்க முடியாவிட்டால் மதம் மாறாது மதத்தைக் காக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?//

மதம் என்பது மனிதன் தன்னுடைய மன நிலையை செம்மைப் படுத்தி உயர்வான நிலைக்கு கொண்டு சென்று , சிறந்த மனிதனாக வாழ உதவி செய்வதாகும். முழுமையான அறிவை எட்டியவன் துனபங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைகிறான் என்றே இந்து மதம் சொல்லுகிறது.

அப்படி விடுதலை பெற்ற நிலையை அடையும் முன் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான்.

அப்படி ஒரு மனிதனை எந்தொரு துன்பமும் இல்லாமல், இன்பத்துடனே வாழும் வகையிலே வைத்திருக்கும் கடவுள் யாரவாது உண்டா? அதாவது இந்த மனிதன் என்கிற நிலையே மாறுதலுக்கு உட்பட்ட நிலையாக, அழியக் கூடிய நிலையாக துனபங்களால் தாக்கப் படும் நிலையாக உள்ளது. இதிலே கடவுள் என்பவர் அவ்வப் போது உதவி செய்கிறார் என்று நூல்கள் சொல்லுகின்றன. ஆனாலும் மனிதனாக இருக்கும் யாரும் துன்பத்தில் இருந்து தப்ப முடியாத நிலையே உள்ளது என்பதே நமது கருத்து.

கீழ்க்காணும் சுட்டிகளில் நாம் மேலதிக விடயங்களை விவாத்தித்து இருக்கிறோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/20/what-is-spiritualism/

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

Advertisements

15 Responses to "மதம் மாற்றுகிறார்களே….என்று வருத்தப் படும் நண்பர்களுக்கு!"

ஆன்மீகச் சக்தி என்றால் என்ன? காணக் கிடைக்காத கடவுளிடம் எப்படி Rappo வைத்துக்கொள்வது? கஷ்டங்களை கடவுளால் தீர்க்க முடியாவிட்டால் மதம் மாறாது மதத்தைக் காக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?

அன்புள்ள தர்சன், தளத்தைப் பார்வை இட்டு கருத்துப் பதிவு செய்தமைக்கு நன்றி. கேள்விகளை முன் வைத்ததற்கு என் பாராட்டுகள்

//ஆன்மீகச் சக்தி என்றால் என்ன?//

கையிலே சல்லிக் காசு இல்லாத நிலையில் சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நடை பெறவிருந்த சர்வமத சபையில் தான் கலந்து கொள்ளல் வேண்டும் என்றும், அந்த சர்வமத சபையே தன் கருத்துக்களை உலகம் எங்கும் பரப்ப அமைந்த ஒரு நிகழ்வே என்றும் உறுதியாக கூறி அமேரிக்கா செல்ல தனக்கு உதவி செய்யுமாறு நண்பர்களிடம் சொன்னதோடு, அதை செய்தும் காட்டியதை ஆன்மீக சக்தி என்றே நான் கருதுகிறேன்.

தன்னை மிதித்துக் கொல்ல யானை ஏவப் பட்ட நிலையிலே, “நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்”, என்று யானையை எதிர் கொண்டு, திருநாவுக்கரசர் பாடியதை ஆன்மீக சக்தி என்றே நான் கருதுகிறேன்.

இன்னொரு அலெக்சாண்டராக உருவாக்கி இருக்கக் கூடிய அசோகனை ” குளங்களை வெட்டு வித்தார், சாலைகளை கட்டு வித்தார், சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வித்தார்” என்னும் வரலாறாக்கியது புத்தனின் ஆன்மீக சக்தியே என நினைக்கிறேன். ஆனால் தூர திர்ஷ்ட வசமாக அந்த ஆன்மீக சக்தி இலங்கையில் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.

சிலுவையில் அறையப் படும் நிலையிலும், தானே யூதர்களின் அரசன் என்றும், தன்னுடைய கொள்கை சரியானது என்றும் கூறிய இயேசுவின் நிலைப்பாடும் அவரது ஆன்மீக சக்தியை காட்டியதாகவே கருதலாம்.

மெக்காவில் இருந்து பாதுகாப்பு தேடி மதீனாவுக்கு சென்ற நிலையிலும், திரும்பி வந்து அரேபிய பகுதி முழுதையும் கைப்பற்றிய முகம்மதுவின் செயலையும் அவரது ஆன்மீக சக்தியை காட்டியதாகவே கருதலாம்.

ஆன்மீக சக்தி என்பது தொடர் முயற்சி மூலம் பெறக் கூடியது என சொல்லப் படுகிறது. ஓரிரு நாட்களில் ஆன்மீக சக்தியை பெறுவது கடினம் என சொல்கிறார்கள்.

//காணக் கிடைக்காத கடவுளிடம் எப்படி Rappo வைத்துக்கொள்வது//

இந்துக்கள் வணக்கும் கடவுள்களில் பெரும்பாலானோர், மக்களுடன் வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி, மக்களுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த வகையிலும் தெய்வம் ஆக்கப் பட்டவர்கள். முருகன், ஐயப்பன், கிருஷ்ணர், இராமர்…. ஆகியோர் மக்களோடு இருந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தியோடு வைப்பது போலவே இந்தக் கடவுலகளிடமும் Rappo வைக்கலாம். காந்தியே இராமரிடம் Rappo வைத்தவர் தானே.

//கஷ்டங்களை கடவுளால் தீர்க்க முடியாவிட்டால் மதம் மாறாது மதத்தைக் காக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?//

மதம் என்பது மனிதன் தன்னுடைய மன நிலையை செம்மைப் படுத்தி உயர்வான நிலைக்கு கொண்டு சென்று , சிறந்த மனிதனாக வாழ உதவி செய்வதாகும். முழுமையான அறிவை எட்டியவன் துனபங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைகிறான் என்றே இந்து மதம் சொல்லுகிறது.

அப்படி விடுதலை பெற்ற நிலையை அடையும் முன் மனிதன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான்.

அப்படி ஒரு மனிதனை எந்தொரு துன்பமும் இல்லாமல், இன்பத்துடனே வாழும் வகையிலே வைத்திருக்கும் கடவுள் யாரவாது உண்டா? அதாவது இந்த மனிதன் என்கிற நிலையே மாறுதலுக்கு உட்பட்ட நிலையாக, அழியக் கூடிய நிலையாக துனபங்களால் தாக்கப் படும் நிலையாக உள்ளது. இதிலே கடவுள் என்பவர் அவ்வப் போது உதவி செய்கிறார் என்று நூல்கள் சொல்லுகின்றன. ஆனாலும் மனிதனாக இருக்கும் யாரும் துன்பத்தில் இருந்து தப்ப முடியாத நிலையே உள்ளது என்பதே நமது கருத்து.

கீழ்க்காணும் சுட்டிகளில் நாம் மேலதிக விடயங்களை விவாத்தித்து இருக்கிறோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/20/what-is-spiritualism/

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

//இந்து மதத்தின் தத்துவங்கள் இந்துக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். அதோடு பிற மதங்களின் தத்துவங்களையும் நாம் இந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்துவாக இருப்பவன் சர்ச்சுக்கு செல்ல முடியும்,மசூதிக்கும் செல்ல முடியும். அவன் வேறு மதத்திற்கு மாறினால் பிற மதங்களை கண்டிக்க வேண்டும் என்றே சொல்லப் படுகிறது.

யாராவது நம்மிடம் வந்து ” வூழியத்தை ” ஆரம்பித்தால் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை அவர்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும். ஒரு சரியான இந்து சரியான கிரிஸ்துவனுமாவான். ஒரு சரியான கிறிஸ்துவன் சரியான இந்துவுமாவான் என்றார் சுவாமி விவேகானந்தர்//

நண்பரே மிகவும் அருமையான கருத்துகள். உங்கள் பார்வை கொஞச‌ம் வித்தியாசமாகவே உள்ளது.அவரவர் தங்கள் மதாங்களை உண்மையாக பின் பற்றினால் மனித ஒற்றுமை வளரும் என்பதையே உங்கள் எழுத்துகள் பிரதி பலிக்கின்றன. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.மதங்கள் இல்லாமல் போனால் நன்றாக இருக்கும் என்று நினைகிறேன்.தன்னம்பிக்கை என்பதையே நீங்கள் ஆன்மீக சக்தி என்று கூறுகிறீர்கள் என்று பொருள் கொன்டால் உங்கள் கருத்துகள் எனக்கும் சரியாகவே படுகிறது.

அன்புக்குரிய நண்பர் சந்தானம் அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கும், உங்களின் பாராட்டுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நம்பிக்கையின் (confidence) உச்ச கட்டத்தையே , மனித மனம் பிற உயிர்களின் மீது செலுத்தும் அன்பு உச்ச கட்ட நிலையை அடைவதையே, முழுதும் அச்சமற்ற நிலையை அடைவதையே, உண்மையின் உச்சத்தை அறியும் நிலையே கடவுளைக் காணும் நிலையாக, கடவுளாக மாறும் நிலையாக பல இந்து மத அறிங்கர்கள் சொல்லுகின்றனர்.

நாத்திகராக இருந்து, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவரைப் பார்க்க முடியுமா என்று முழு முயற்ச்சியில் ஈடுபட்ட நரேந்திரன், சுவாமி விவேகானந்தராக ஆனா பின் அவர் கூறிய ஒரு கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்

ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை.உங்க‌ளிட‌த்தில் ந‌ம்பிக்கை, பிற‌கு க‌ட‌வுளிட‌த்தில் ந‌ம்பிக்கை. உங்க‌ள‌து முப்ப‌த்து முக்கோடி தேவ‌ர்க‌ளிட‌மும், மற்றும் பிற‌ நாட்டினர் அவ்வ‌ப் போது உங்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்திய‌ தேவ‌ர்க‌ளிட‌மும் ந‌ம்பிக்கை வைத்து, உங்க‌ள் சொந்த‌ முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைக்க‌வில்லை என்றால், அத‌னால் ப‌ல‌ன் எதுவும் இல்லை.

//அவரவர் தங்கள் மதங்களை உண்மையாக பின் பற்றினால் மனித ஒற்றுமை வளரும் என்பதையே உங்கள் எழுத்துகள் பிரதி பலிக்கின்றன.//

அவரவர்கள் தங்கள மதங்களைப் பின்பற்றுவது நல்லதே, அதோடு பிற மதங்களை வெறுக்காமல், ஆக்க பூர்வமாக அணுகுவது மிகவும் அவசியம் ஆகும். அந்த வெறுப்பற்ற அணுகுமுறை மட்டுமே உலகிலே அமைதியை உருவாக்க சிறந்த வழி.

//எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது//

அவசரப் பட்டு கடவுளை நம்ப வேண்டியதில்லை. கடவுளை நம்புகிறேன் எ ன்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் , உடனே, “நீ கடவுளைநம்புற இல்ல, அது சரிதான், நான் சொல்லுகிற கடவுள் மட்டுமே உண்மையான கடவுள், மற்ற கடவுள்கள் ஜீவன் இல்லாதவை” என்று வெறுப்புக் கருத்துக்களை அள்ளிக் கொண்டு தள்ளு வண்டிகள் உங்கள் வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும். உங்களையும் வெறுப்புக் கருத்து உடையவர் ஆக்கி பிற மதங்களை வெறுக்கும் நிலைக்கு உங்களை கொண்டு போய் விடுவார்கள். உலகம் முழுதும் இவர்கள் இரத்த ஆறு ஓட விட்டது இப்படி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுத்தான்.

மனக் குவிப்பு போன்ற ஆன்மீக முயற்சியில் ஈடுபடுங்கள், முருகனையோ, இராமரையோ, காந்தியையோ, பெரியாரையோ நினைத்துக் கொண்டு கண்ணை மூடி மனக் குவிப்பு பயிற்சியில் ஈடுபடுங்கள். கடவுள் என்று ஒருவர் தனியாக இருக்கிறாரா அல்லது நாமே தான் கடவுளா, அல்லது கடவுள் இல்லையா என்பதை எல்லாம் நாமே நேரிலே பார்த்து, அனுபவித்து முடிவு செய்து கொள்ளாலாம். காணாத கடவுளுக்கு அவசரப் பட்டு இருக்கிறார் என்று அடித்து சொல்லி பொய் சாட்சி கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு என்ன? கடவுளை இப்போதைக்கு மறப்போம். மனித மன நிலையை உயர்த்தும் முறையை நினைப்போம்.

கிறிஸ்துவம் இந்தியாவை விழுங்கி கொண்டு இருக்கிறது. இப்போதாவது விழித்து கொள்ளுங்கள். இப்போது இல்லை என்றால் பிறகு எப்போதுமில்லை.

“க்ளிக்” செய்து படியுங்கள்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

“க்ளிக்” செய்து படியுங்கள்.

…………………………………………….
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு…??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது

பையா…அடங்கிடு…இல்லனா..அடக்குவோம்..!
(பையா என்றால் சகோதரன் என்று அர்த்தம் கொள்ளவும்.)

…………………………………………….
//ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு…??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது//

ராஜ்,
சும்மா ஒரு இணைய தளத்தில இருக்கிறத பார்த்திட்டு வந்து இங்கே கதையளக்க வேண்டாம். ஒருவரை குற்றம் சொல்லும் முன் சிறிதாவது ஆராய்ச்சி செய்யவேண்டும். Jesus is always PERFECT. அவர், தான் சொன்னதை விடவும் அதிகம் செய்தார் என்று உங்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? அவரை ஒரு கன்னத்தில் அடித்தபோது, அவர் தன் உடல் முழுவதும் வாரினால் அடிக்க விட்டுக்கொடுத்தார், அதுமட்டும் அன்றி, தன்னை சிலுவையில் அறியவும் ஒப்புக்கொடுத்தார். இப்படி தான் சொன்னதை முழுமையாக கடைபிடித்தவர் அவர். வேதத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்று படித்தால் அனைத்தும் புரியும்படி தேவன் செய்வார். குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் படித்தால் இப்படிதான் அரைகுறையாக உளற வேண்டிவரும். உங்கள் மற்ற கேள்விகளுக்கும் உண்மையில் உங்களுக்கு விடை தேவை என்று நினைத்தால், வேதத்தை தேடி பாருங்கள். வேதத்தை நீங்கள் அறியாவிட்டால் நஷ்டம் வேதத்திற்க்கல்ல.
அசோக்

பையா…அடங்கிடு…இல்லனா..அடக்குவோம்..!

சகிப்புத் தன்மை மத நல்லினக்கணம் பற்றி தமிழ் இந்து தளத்திலே குறிப்பிட்டீங்களே, அது இது தானே

நண்பரே,கற்பனைக் கதாபாத்திரங்களான ராமனையும் கிருஷ்ணனையும் ஏதாவது சொல்லிவிட்டால் ஊரையே ரெண்டாக்குகிறவர்களைவிட மெய்யான தெய்வத்தையும் வேதத்தையும் வைத்திருப்பவர்களைப் புண்படுத்தினால் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்;

நீங்கள் எங்களை நோக்கிக் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் உங்கள் வீட்டின் நிலைக் கண்ணாடியைப் பார்த்து கேளுங்கள்;அது சரியான பதிலைச் சொல்லும்..!

தன்னுடைய தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்வது அறிங்கர்கள் ஒத்துக் கொள்ளக் கூடியது அல்ல. சிந்திக்கக் கூடிய எவரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொல்கிறோம், வானிலே தொடர்ந்து ௬ மாதங்கள் எல்லா நாட்களும் முழு நிலவாக ஒளி விட செய்து காட்டுங்கள் , நீங்கள் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறோம் என்கிறோம், அதை செய்யாமல் ஜகா வாங்குகிறார்கள். உண்மையிலே எந்தக் கடவுளையும் இவர்கள பாரக்கவில்லை, இன்று உலகிலே இருக்கும் யாருமே பார்க்கவில்லை. அப்படி யாருமே பார்க்காத , நிரூபணம் இல்லாத நிலையில் அவரவர்கள அமைதியாக வணங்க வேண்டும். மதப் பற்று அதிகமாகலாம், ஆனால் மத வெறியாகி விடக் கூடாது. எந்தக் கடவுளையும் நான் பார்க்கவில்லை. அதனால சாட்சியும் கொடுக்க இயலாது. இராமரும், கிரிஷ்ணரும், இந்தியாவின் பணடைய அரசர்களாக , இந்தியாவின் வரலாற்று நிக்ளவாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

திருச்சிக்காரன்,
கடவுள் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர் அல்ல, அவரை கூட்டிவந்து நீங்கள் சொல்வதை போல வித்தை காட்ட. அப்படி வித்தை காட்ட முடியாததால் கடவுள் இல்லை என்று அர்த்தம் அல்ல, கடவுள் நம் சொல்படி நடக்கும் வேலைக்காரன் அல்ல என்றே அர்த்தம்.
நான் எனது கண்ணால் கண்டவற்றை மட்டுமே சாட்சி கொடுக்க முடியும் என்று காற்று முதற்கொண்டு எதையும் நாம் ஒத்துக்கொள்ளவே முடியாது. பல விஷயங்களை அவற்றின் கிரியைகளை கொண்டு சொல்லமுடியும். உங்களுக்கு எந்தமாதிரி நிரூபணம் (proof ) வேண்டும்?
There are various kinds of prroofs (eg: axiomatic, logical, mathematical, emphirical, Historical-Legal, etc.,) what are you expecting? First of all, you have to know, what is PROOF? Probably based on your explanation on that topic, we can proceed. Many people who asks for proof, doesn’t know what is PROOF and doesnt want PROOF.
To know GOD, if you are looking for a Miracle. You yourself is a miracle. See urself, how your heart beats, without your concious effort, how ur eye blinks without your effort.? Isn’t amazing? You are a Miracle. Because GOD made you. But you just creation / Miracle of GOD. But you are not GOD himself.
Love & Peace,
Ashok

சகிப்புத் தன்மை மத நல்லண‌க்கணம் என்று பேசும் யாராக இருந்தாலும் அவருடைய ஆழ்மனதில் தன்னுடையதே சரியானது என்றும் எப்படியாவது இந்த நபருக்கும் அது தெரியவந்தால் நன்றாக இருக்குமே என்றும் நினைக்காதிருப்பதில்லை, இது பொதுவானது; இந்நிலையில் மாற்று மார்க்கத்தின் மீது சேற்றை அள்ளிவீசி அதனைத் தாழ்த்திவிட உள்நோக்கத்துடன் செயல்படும்போது அது கண்டிக்கப்படவேண்டும்; அதையே நாம் செய்துவருகிறோம்; இதற்கும் மத நல்லிணக்கம் சார்ந்த சகிப்புத்தன்மைக்கும் சம்பந்தமில்லை;

மத நல்லிணக்கம் என்பது மற்றவன் ஏற்காவிட்டாலும் என்னுடையதே சரியானது என்ற உணர்விலிருந்தே வெளிப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்; சகிப்புத்தன்மை என்பது அந்த நம்பிக்கையினைக் குறித்து யாராகிலும் தாழ்த்திப் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய உயர்குணமாக இருக்கலாம்;அதற்கும் ஒரு அளவு உண்டு யாவரும் அறிந்ததே;உதாரணமாக கிறித்தவ நம்பிக்கையான் தனது கொள்கையை நிறுவ எடுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் போலியான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவது;அதற்கு எந்த விளக்கமும் தராமல் திசைதிருப்பும் வண்ணம் பைபிளையே குறைசொல்வது என்ன நியாயம்?

ஒருவன் இந்துவாக இருந்து மதம் மாறிய காரணத்தைக் கூறும்போது அதற்கு சரியான விளக்கத்தை அவ்வப்போது கொடுத்துவந்தால் அது அநேகர் மதம் மாறாமலிருக்கவும் தெளிவுபெறவும் உதவுமே;அதைச் செய்யாமல் சும்மா லாவணி பாடுவதும் தனிகட்டுரை விரைவில் வரும் என்று சால்ஜாப் சொல்லி நமது பின்னூட்டங்களையே இங்குமங்கும் சற்று மாற்றி எதையோ போட்டு விட்டு காலந்தள்ளும் போக்கே இங்கே நிலவுகிறது;இதற்கு அவர்களது பெலவீனமே காரணம்;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37546748

அன்புக்குரிய நண்பர்களே, அலுவல் காரணமாக உடனுக்குடன் உங்களது பின்னூடங்களை வெளியிட இயலவில்லை. மற்ற படி நாம் வெளியிடுகிறோம் என்று கூறிய கட்டுரைகளை வெளியிட்டே வந்து இருக்கிறோம். இதில் சால்ஜாப்போ எதுவுமோ இல்லை. தெளிவான விளக்கக் கட்டுரைகள் வெளியாகும்.

// அன்புக்குரிய நண்பர்களே, அலுவல் காரணமாக உடனுக்குடன் உங்களது பின்னூடங்களை வெளியிட இயலவில்லை. //

(திரு).ச்சிக்காரன் அவர்களே எல்லோருக்கும் வேலையும் இருக்கிறது வேலைப்பளுவும் இருக்கிறது;ஆனால் நீங்கள் கல்லெறிந்து அது வலிக்கும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டுமா என்பதை யோசியுங்கள்;

உங்கள் இந்து மத நம்பிக்கைகளையும் தேசப்பற்றையும் மொழிப்பற்றையும் சார்ந்த கட்டுரைகளுக்கெதிராக எதாவது வம்பு வளர்த்தோமா, இன்னும் நான் தமிழுணர்வுடன் எழுதிய கவிதைக்கு எந்த ஒரு வார்த்தையும் பதிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்;

நீங்கள் தாக்குவது எமது மத நம்பிக்கைகளை மட்டுமல்ல, உணர்வுகளை மட்டுமல்ல,சுய மரியாதையையுமே என்பதையறிய வேண்டும்;

// இராமரும், கிரிஷ்ணரும், இந்தியாவின் பணடைய அரசர்களாக , இந்தியாவின் வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. //

இதற்கு மட்டும் நீங்கள் நிரூபணம் தரமுடியுமா என்ன, அதுவும்கூட பெரும்பாலானோரின் நம்பிக்கை சார்ந்ததுதானே?

அவர்கள் எப்போது தொழத்தக்க நிலையினை அடைந்தார்கள் என்பதற்கு என்ன நிரூபணம்?

// வானிலே தொடர்ந்து ௬ மாதங்கள் எல்லா நாட்களும் முழு நிலவாக ஒளி விட செய்து காட்டுங்கள் , நீங்கள் சொல்வதை அப்படியே ஒத்துக் கொள்கிறோம் என்கிறோம், அதை செய்யாமல் ஜகா வாங்குகிறார்கள். உண்மையிலே எந்தக் கடவுளையும் இவர்கள பாரக்கவில்லை, இன்று உலகிலே இருக்கும் யாருமே பார்க்கவில்லை. //

ஐயா நீங்க எந்த (செத்த) காலேஜிலே படித்தீர்களோ, நான் நல்லவேளையா எந்த‌ காலேஜும் படிக்கல, இறைவன் தனது இருப்புக்கு ஆதாரமா வைத்துள்ள அண்டத்தின் இயக்கத்தையே நிறுத்தச் சொல்லும் உமது புத்தி “நெய்க்கு தொன்னை ஆதாரமா,தொன்னைக்கு நெய் ஆதாரமா ” என்று ஆராய்ந்தவன் கதையையே ஞாபகப்படுத்துகிறது;

Rom 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Rom 1:19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Rom 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

//அறிங்கர்கள் //
//அறிஞர்கள்//
இந்த சாதாரண “ஞா” எனும் எழுத்தையே (நான் சொல்லிக் கொடுத்தும் ) உங்க வீட்டு கீ போர்டில் கண்டுபிடிக்கமுடியாத நீர் இறைவனை நான் கொண்டுவந்து நிறுத்தினாலும் நம்பப்போவதில்லை;

இப்படியே ஒருவன் இயேசுவிடம் வந்து கேட்டான்,

Joh 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.

Joh 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

Joh 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

Joh 14:11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இதைவிட ஒரு தெய்வம் எப்படி வந்து பேசும்?
இதே நிலையிலேயே இன்றைய மனுக்குலமும் இருக்கிறது..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: