Thiruchchikkaaran's Blog

தொடக்க விழா நிகழ்ச்சிகள், ௦ தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை

Posted on: June 24, 2010


தொடக்க விழா நிகழ்ச்சிகள் ௦ தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை:

உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழர் வந்து இருந்தது சிறப்பாக இருந்தது. ஆயிரம் ஆனாலும் மொழியை தமிழர்கள்  விட்டுக் கொடுப்பார்களா?   தமிழ் தாய் வாழ்த்துரையை சீர்காழி சிவ சிதம்பரம் பாடினார். அவருடையான தந்தையான சீர்காழி கோவிந்தராஜனின் குரலை ஒத்தே இவரது குரலும் இருப்பினும், குரலில் சிறிது நடுக்கம் தெரிகிறது.  தந்தையின்  கணீர் குரலும், கம்பீர தொனியும் இல்லை. அடுத்து கலைங்கர் எழுதி,  ரஹ்மான இசை அமைத்த பாடலை ஒலி பரப்பினர். ஸ்டாலின் வரவேற்புரையை நிகழ்த்தினார்,  சம்பிரதாயப் பேச்சாகவே இருந்தது.

யாழ்ப்பான பேராசிரியர் சிவத் தம்பி சிறப்பாக உரை ஆற்றியதோடு , வெளி நாட்டினருக்கும் , குடி அரசுத் தலைவருக்கும் உணர்த்தும் வண்ணம் ஆங்கிலத்திலே அவ்வப் போது பேசியதைப் பாரட்டுகிறேன். நமது மொழி தெரியாதவர்க்கு இணைப்பு மொழியிலே தானே தெரிவிக்க முடியும்?

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் அஸ்கோ பாப்லோ ஆகியோர் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆதாரங்களை முன் வைத்துப் பேசினார்.  அவர்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது.

பேராசிரியர் அஸ்கோ பாப்லோ இந்திய நாகரீகத்தில் தமிழ் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதோடு , சமஸ்கிருதமும் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார். சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களும், தமிழ் எழுத்துக்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து கலைங்கர் பேச ஆரம்பித்து, முதலில் தன்னுடைய புகழை தானே பாடிக் கொண்டார். காவிரிக் கரை, திருக்குவளை என்று மன்னருக்கு கட்டியம் சொல்வது போல ஆரம்பித்து பேசியது … இங்கேயுமா… என்று எண்ண வைத்தது.  பிறர் தன்னை  புகழ் போடுவதே போதும் என்று இருந்து இருக்கலாம்.

மாநாட்டிலே எல்லாம் இருந்தும் இந்நாள் குடி அரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையார் வந்திருக்கிறார், முன்னாள் குடி அரசுத் தலைவர்,  தமிழன்னையின் சிறந்த மகன், புகழ் பெற்ற விஞ்ஞானி திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களைக் காணவில்லையே என்று பலரும் வருந்தினர். சிறந்த  எழுத்தாளரும், பேச்சாளரும், சிறந்த சிந்தனையாளருமான திரு.  கலாம்  ஐயாவுக்கு   அழைப்பு விடுக்கப் பட்டதா என்று கேள்வியும் எழுந்தது.   வெளி நாட்டில் இருந்து இன்னும் பல  தமிழ் அறிங்கர்கள் பங்கு  பெற்று இருக்கலாம் என்கிற கருத்தும் தோன்றியது.

மாலையில்   இனியவை நாற்பது, என்ற பெயரில் அலங்கார வூர்திகள் அணி வகுப்பு நடை பெற்றது.  அவை எல்லாம் குடியரசு தினத்திலே புது  தில்லியிலும் ,  சென்னையிலும் இராணுவ  அணிவகுப்பின் முடிவிலே நடக்கும்  நடக்கும் அலங்கார வூர்தி அணி வகுப்பு போலவே காட்சி அளித்தது.இது நாம் வருடந்தோறும் பார்க்கும் நிகழ்ச்சி போலவே இருந்ததால் என்னைப் பொறுத்தவரையில் இதில் புதுமையாக எதுவும் இல்லை.

வேலு நாச்சியார் போன்ற வீரப் பெண்மணிகளின் சிலைகளையும், கட்டபொம்மன், பொன்னான், சங்கர்  போன்ற வீரத் தியாகிகளின் சிலை,   குறிஞ்சி, நெய்தல் …. இந்த பண்டைய வாழ்விட பகுப்பு காட்சிகள் இதை எல்லாம் அலங்கார வூர்தியில் அணி வகுத்து வந்தன.    இந்த வூர்வலத்தைப் பார்ப்பதற்கு அமைக்கப் பட்ட மேடையே ஒரு கிலோ மீட்டர் தூரம். அதிலே முக்கிய இடங்களில் முதலவர், அவர் துணைவியார் , மகன் , மகள் … இப்படி குடுமப உறுப்பினர்களைப் பார்த்த போது, இது இன்றைய தமிழ் நாடு என்கிற நனவுலகுக்கு வந்தோம்.  தமிழ் நாட்டின் எப்ப்போதும்  பசுமை நாயகியான திரு மதி குஷ்பூ அவர்களும் மேடையில் வீற்று இருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தார். மக்களும் ஏய்…  குஸ்பு பா என்று புளாங்கிதம் அடைந்தனர்.

நாளைய  நிகழ்சிகளில் தமிழ் மொழி காப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த விவாதங்களும்,  திட்ட ஆய்வுகளும் நடை பெரும் என்று நம்புவோம் ஆகுக!

Advertisements

1 Response to "தொடக்க விழா நிகழ்ச்சிகள், ௦ தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை"

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///பேராசிரியர் அஸ்கோ பாப்லோ இந்திய நாகரீகத்தில் தமிழ் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதோடு , சமஸ்கிருதமும் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார். ///

அவர் பேசியதை நான் பார்க்கவில்லை.ஆனால் ///சமஸ்கிருதமும் முக்கிய ஆற்றி இருக்கிறது/// என்று அவர் கூறியதை பெரும்பாலான ஊடகங்களில் சொல்லப்படவில்லை..உண்மையை ஏன் மறைக்க முயல வேண்டும்.?

நான் பள்ளியில் படிக்கும் போது சிந்து சமவெளிபற்றிய வரலாறுப் பாடத்தில் சிந்துசமவெளி மக்கள் குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று படித்திருக்கிறேன்.அது நம் வேதத்தில் குதிரையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதால் சிந்து சமவெளி மக்களை வேத கால நாகரீகத்திலிருந்து வேறுபடுத்தும் நோக்கத்துடனே அவ்வாறு கூறப்பட்டது என்பதை பின் அறிந்து கொண்டேன்.சிந்து பகுதியில் குதிரையின் உருவம் பொறித்த படிவங்களும் கண்டெடுக்கப்பட்டும் உண்மையைக் கூறாமல் “சிந்துசமவெளி மக்கள் குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை” என்று நம்மை பொய் வரலாற்றைப் படிக்க வைத்த கொடுமையை என்னவென்பது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: