Thiruchchikkaaran's Blog

தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போம்!

Posted on: June 23, 2010


தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போம். உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. மிகச் சிறந்த பண்பாட்டுக்கு உரிய சமுதாயத்துக்கு உரிய மொழியாக தமிழ் மொழி உள்ளது. பண்டைய தமிழ் மொழி இலக்கியங்கள் எல்லாம், அன்பையும், பரந்த மனப்பான்மையையும் , விருந்தோம்பலையும் எல்லோரயும் உறவினராக கருதும் கொள்கையையும் பரப்பின. வெறுப்புக் கருத்துக்கள் எதுவும் அவற்றில் இல்லை.

இதனால் தமிழ் மொழியும் தமிழ் சமுதாயமும் உலகத்துக்கு நல் வழி காட்டும் உதாரணமாக அமைந்து இருக்கின்றன.  குறளைப் போல  ஆன்மீகம் ,அன்பு, குடும்பம், ஆட்சி,  அரசியல், பொருளாதாரம்  ,   காதல்…  ஆகிய அனைத்திற்கும் மிகச் சிறந்த ஆராய்ச்சியை, விளக்கத்தை, அறிவுரையை வழங்கிய நூல் உலகிலே வேறு எதுவும் நம்முடைய பார்வைக்கு, அறிவுக்கு எட்டிய வரையில் இல்லை.

அத்தகைய நம் தாய் மொழியாம தமிழ் மொழியை முன்னேற்றி சொல்ல இந்த தமிழ் செம்மொழி மாநாடு ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுவோம். கோவையில் நடக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போம். இந்த மாநாட்டை அரசியல, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நாம் ஆதரிக்க வேண்டும்.

Advertisements

8 Responses to "தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போம்!"

உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

நன்றி, நண்பர் திரு. நடன சபாபதி அவர்களே!

மொழி எனது அடையாளம்
மொழி எனது ஆதாரம்
மொழி எனது இன்பம்
மொழி என்னை ஈன்றது
மொழி எனக்கு உறவைத் தந்தது
மொழி என்னை ஊட்டி வளர்த்தது
மொழி எனக்கு ஐக்கியத்தைத் தந்தது
மொழி என்னை எழுப்பியது
மொழி என்னை ஏற்றிவிட்டது
மொழி என் வாழ்வில் ஒளியேற்றியது
மொழி என் எதிரிகளை ஓட்டியது
மொழி என்னை எஃகாக்கியது

விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!

அன்னைத்தமிழ் அழகுத்தமிழாம் நம் தமிழ்மொழி இன்று செம்மொழி என்ற அரியணையில் அமர்த்தி அழகுபார்க்கும் நற்த்தருணம் இது முடிந்த வரையில் அவ்வ‌ரியணைக்கு வேற்றுச்சாயம் பூசாம்ல் போற்றி பேணுவோம்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு…!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

மிக்க நன்றி திரு. முரளீதர தொண்டைமான் அவர்களே,

தமிழ் மொழி அதன் தகுதியால், அதன் தொன்மையால், அதன் மிகச் சிறந்த இலக்கியங்களால அதன் தனித் தன்மையால், அதைப் பேசியவர்களின் நற் பண்பாட்டால் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இனியும் தமிழ் மொழியின் உயர்வுக்கு நாம் தொடர்ந்து பாடு படுவோம். தமிழ் மொழி செம்மொழி இல்லை என்றால் வேறு எம்மொழி செம்மொழி?

உங்களின் வருகைக்கும் , கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றிகள், தொடர்ந்து தளத்தைப் பார்வை இட்டு உங்கள் மேலான் கருத்துக்களைப் பதிவு செய்யுமாறு கோருகிறோம்.

நன்றி,

திருச்சிக்காரன்.

///தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போம்.///

தமிழ் வளர்ச்சிக்கு உரிய அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்போம்.

//வெறுப்புக் கருத்துக்கள் எதுவும் அவற்றில் இல்லை.//

இந்த வார்த்தைகள் தேவையா, நண்பரே? திருச்சிக்காரன் தளத்தை அதிகம் பார்வையிடும் மக்கள் எல்லோருக்கும் “வெறுப்பு கருத்துக்கள்” என்ற வார்த்தைகளின் மூலம் என்ன சொல்லுகிறீர்கள் என்று தெரியும். எதற்க்காக ஆபிரகாமியர்களை (தங்கள் தளத்தில் கற்ற வார்த்தைதான்) வம்புக்கிழுக்க வேண்டும்? நீங்கள் வெகு சுலபமாக “நான் அதை சொல்லவில்லையே” என்று மழுப்பலாம், ஆனால் உண்மை அனைவருக்கும் தெரியும். இந்த கட்டுரையில் பல விடையங்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இந்த வார்த்தைகள் கண்களை உறுத்தியது.
இந்த பின்னூட்டம், வெளியிடுவதிர்க்கு தகுதி இல்லாததாய் இருக்குமானால், வெளியிட வேண்டாம்.
நன்றி,
இராமன்

நண்பரே, தமிழ் இலக்கியத்தில் வெறுப்புக் கருத்துக்கள் இல்லை என்பது உண்மைதான் ஐயா. இது மகிழ்வோடு அறிந்து கொள்ள படத் தக்கதே.

நீங்கள் இதை மதக் கண்ணோட்டத்தில் நோக்க வேடியதில்லை.

வெறுப்புக் கருத்துக்கள் யாரிடம் இருந்தாலும் , எந்த கோட்பாட்டுக் காரரிடம் இருந்தாலும் அது மோதலுக்கு வழி வகுக்கும்.

உலகின் பல சிந்தனையாளர்களும், வெறுப்பு கருத்துக்கள் இல்லாமல் இருப்பதே அமைதிக்கு வழி என்று கருதுகின்றனர்.

வெறுப்புக் கருத்துக்கள் இல்லாமல் அன்புக் கருத்தக்களின் அடிப்படியிலே தமிழ் இலக்கியம் அமைக்கப் பட்டு உள்ளது என்பது தமிழ் மொழிக்கு முக்கிய பெருமையே. அதற்கு காரணம் தமிழ் சமுதாயம் வெறுப்பு சிந்தனை இல்லாமல் இருந்ததே. வாழ்க தமிழ், வாழ்க தமிழர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: