Thiruchchikkaaran's Blog

தமிழ்ப் பெயர்களுக்கான இலக்கணம் என்ன?

Posted on: June 21, 2010


ஒவ்வொரு மொழியை தாய் மொழியாகக் கொண்டவரும்  அந்த மொழியின் அடிப்படையிலே பெயர் வைப்பது பரவலாக இருக்கிறது. மாற்று மொழியிலே பெயர் வைக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  தமிழர்கள் தமிழ் மொழியில் பெயர் வைப்பதை வூக்குவிக்கிறோம் , பாராட்டுகிறோம்.
அதன் படி மொழிகளையும் அவற்றுக்கான பெயர்களையும் பற்றி நாம் சிறிது பார்ப்போம்.
ஜெர்மானிய மொழியில் பெரும்பாலான பெயர்கள் ‘”அர் ” விகுதியில் முடியும்.  பெக்கர், ஸ்வாஸ்நர்கர், ஹிட்லர் இப்படி.
ரஷிய மொழிப் பெயர்கள் கோர்பசேவ்,  ஆந்திரபோவ், குருசேவ்  இப்படி ‘”வ்” விகுதியிலேயோ அல்லது ஸ்டாலின், லெனின், புடின் இப்படி “ன்” விகுதியிலோ முடியும்.
தமிழ் இலக்கணப் படி  ஆண்களின் பெயர்கள்  “அன்”  ”அர்” விகுதியிலோ, “அம்” விகுதியிலோ முடிய வேண்டும்.
அதாவது கம்பன், வள்ளுவன்,  இளங்கோவன், திருமாவளவன், தொல்காப்பியன், சபா நாயகம்,  ரத்தினம் … இவை எடுத்துக் காட்டுகள்.
பெண்களின் பெயர்கள் ”இ'” விகுதியிலோ,   ”ஐ” விகுதியிலோ முடிய வேண்டும்.
கண்ணகி, வாணி, குந்தவை, இலக்குமி … இப்படியாக!
”ராம் நாத்” என்ற பெயர் தமிழில் ”இராமநாதன்'” என்றே ஆகிறது!
“சிவ் சங்கர்” என்பதை ”சிவ சங்கரன்” என அழைக்க வேண்டும்!
வளவன், செம்பியன் போன்ற பெயர்கள் சோழ நாட்டுப் பகுதியை சேர்ந்தவர்களின் பெயர்கள்.
செழியன்,  போன்ற பெயர்கள்  பாண்டிய நாட்டில் வைக்கப் படும் பெயர்கள்.
குமரன், சந்திரன்  போன்ற பெயர்கள் எல்லாப் பகுதியிலும் வழங்கப் பட்ட பெயர்கள்.
இணைப்பு 1:
நண்பர் இராமன் குறிப்பிட்டது போல ‘”அள்” விகுதி பெண்பாலருக்கான பெயர்களில் முக்கிய  விகுதியாகும். நன்றி நண்பரே.
Advertisements

20 Responses to "தமிழ்ப் பெயர்களுக்கான இலக்கணம் என்ன?"

அப்பொழுது, “மூர்த்தி”, “கிரி”, “அரி”, “பாரி”, “காரி”, “ஓரி” போன்றவை தமிழ் ஆண் பெயர்கள் இல்லையா?
“மாது”, “அமுதா”, “குமுதா” போன்றவை தமிழ் பெண் பெயர்கள் இல்லையா?
நீங்கள் எழுதியது ஒரு முழுமையான கட்டுரையாக தெரியவில்லை.
நன்றி,
இராமன்
பி.கு : இதையாவது பதிப்பீர்களா, அல்லது தங்களுக்கு எதிராக எழுதி இருப்பதால், தணிக்கை செய்வீர்களா?

இந்த விகுதிக் குறிப்புகள்- தமிழ் பெயர்கள் பற்றிய தமிழ் இலக்கண நூல்களில் உள்ளதாக தமிழ் நாடு அரசு பாட நூலில் எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நான் பயின்றவையே.

அமுத வல்லி, குமுத வல்லி இவையே சரியான பெயர்கள். கிரி என்பது மலையைக் குறிப்பதாகும். ஹரி என்பது வட மொழி பெயர், ஹரி என்ற பெயருக்கு சரியான தமிழ்ப் பெயர் மாலவன் என்பதே.

“பாரி”, “காரி”, “ஓரி” என்பவர்கள் கடையேழு வள்ளல்களில் சிலர். மேலும், “மாரி”, “முத்து”, “பாணினி” போன்ற பெயர்களும் உண்டு. பெண் பெயர்களில், “மரகதம்”, “மதுரம்”, “கண்ணமா”, “செங்கமலம்” போன்ற பெயர்கள் உண்டு. மேலும் பெண் பெயர்கள் “ள்” என்றும் முடியலாம். பெயர்களின் முதல் எழுத்தாக “ரகரம்”, “லகரம்” வரும்போது “இ” ஐ முன்னாள் சேர்த்து எழுத வேண்டும். நல்ல உதாரணம் “இராமன்” மற்றும் “இலட்சுமணன்”.
வெறும் எட்டாம் வகுப்பு பாடத்தை போடுவதற்கு பதில் உங்கள் சொந்த உழைப்பையும் சேர்த்து போட்டால் நலமாய் இருக்கும்.
நன்றி,
இராமன்

திருச்சிக்காரனைப் பார்த்து அப்படி அபாண்டமாக புகார் கூறாதீர்கள்;

‘அவ்ரு ரெம்ப நெல்லவரு..!’

ரொம்ப சந்தோசமா!

இப்போது ஒரு விஷயத்தை கவனித்தேன். ராமுக்கும், தனபாலுக்கும், ஓடி ஓடி நன்றி சொல்லும் திருச்சிக்காரன், யாருமே சீந்தாத ஒரு கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டு, பல தவறுகள் திருத்தி, விஷயங்கள் சேர்த்து கொடுத்த நண்பர் ராமனுக்கு மட்டும் எந்த நன்றியுமே சொல்லவில்லையே. மேலும் தன் கட்டுரையில் உள்ள தவறுகளை தவறு என்றும் ஒத்துகொள்ளவில்லையே.
Hard Truth

தேவை இல்லாதததுக்கெல்லாம் நன்றி சொல்லிவிட்டு, திருச்சியாரின் தவறை ஆதாரத்துடன் சுட்டி காட்டிய இராமன் அவர்களுக்கு நன்றி சொல்லவில்லையே திருச்சியார். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று அடம் பிடிப்பது போல் தெரிகிறது திருசியாரே.

“அள்” விகுதியும் பெண்களுக்கு உரித்தானது தான். இராமன் என்ற பெயரில் எழுதும் அன்புக்குரிய நண்பர் சொல்லியது சரியே. அதற்கு நன்றி. அதே போல எல்லா நண்பர்களும் எழுதலாம்.

கலக்குங்க ! //ராமன் என்ற பெயரில் எழுதும்// ராமன் என்கிற பெயரிலா….. சரிதான்….

ராமன் என்று நான் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். இராமன் என்பதே சரியான வார்த்தை முறை. இலக்கண விதிப்படி தமிழ் பெயர்கள் ‘”ரா” விலே ஆரம்பிப் பதில்லை. ‘”இரா” என்ற பெயரிலே தான் ஆரம்பிக்க வேண்டும்.

என்ன திருச்சியாரே, பின்னூட்டத்தை போடுவதில்லையா ..” இராமன் என்கிற பெயரில்” நியாயமா இது. உங்களை எதிர்த்து ஆதாரபூர்வமாக உங்கள் தவறை சுட்டி காட்டிய தோழரை இப்படியா இழிவுபடுத்துவது. ஒன்று செய்யுங்கள் , ” என்னை அதி மேதாவி என்று ஒப்புகொள்கிறவர்கள் மட்டும் பின்னூட்டம் போடலாம் ” என்று அறிவுப்பு செய்யுங்கள். நாங்கள் விலகி கொள்கிறோம் உங்கள் தளத்தில் இருந்து.

பிரதீப் நீங்கள் எனக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வதில் அதிக கவனம் காட்டுவது போல உள்ளது. கருத்து அடிப்படையில் விவாதிப்பதில் நம்பிக்கை வையுங்கள்.

கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து கவனம் பிறழ்ந்து என்னை பற்றிய விமர்சனத்துக்கோ, பாராட்டுக்கோ திரும்புவது கட்டுரையின் நோக்கத்தை நிறைவேற்றாது. என்னைப் பற்றி விமரிசனம் செய்ய தனி இடம் இருக்கிறது – About me – அங்கே சென்று விமரிசனத்தைப் பதிவு செய்யலாம்.

இவ்வளவு ஆரவாரம் தேவை இல்லை. நீங்கள் பித்துக்குளி, லூசு என்று என்னை அழைத்தும், இன்னும் பல நல்லிணக்க சகோதரரை ஆர். எஸ். எஸ். என்று பழி சொல்லியும் இட்ட பின்னூட்டங்களை கூட பதிவு செய்து இருக்கிறோம். என்னிடம் உள்ள தவறுகளை தாரளாமாக சுட்டிக் காட்டலாம். நான் திருத்திக் கொள்வேன்.

தவறை சுட்டிகாட்டினால் ஒரே அடியாக ஜல்லி அடிப்பது, தனிப்பட்ட தாக்குதல் என்று. கேட்பதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதவர்கள் செய்யும் தந்திரம் இது. நான் சொன்னது கட்டுரைக்கு சம்பந்தமானது தான். உங்கள் கட்டுரையின் தவறை ஒத்துகொண்ட மாதிரி தெரியவில்லையே .அதையே சுட்டி காட்டினேன். மற்றபடி உங்களுக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்யும் அளவுக்கு நீங்கள் அவளோ பெரிய ஆளும் இல்லை, நானும் அவளோ பெரிய ஆள் இல்லை.

நான் எழுதியதில் பெண்பால் விகுதிக்களில் ”’அள் ” இடம் பெறவில்லை. அது விட்டுப் போனது. அதை சுட்டிக் காட்டி எழுதிய போது, அதை ஏற்றுக் கொண்டு இணைப்பாக கட்டுரையில் வெளியிட்டு இருக்கிறோம். நான் எழுதிய கருத்திலே குற்றச் சாட்டு இருந்தால் அதைக் கட்டுரையில் தெரிவிக்கலாம்.

நீங்கள் என் மீது தனிப் பட்ட முறையில் ஏதாவது விமரிசிக்க விரும்பினால் அதை About me பகுதில் எழுதுங்கள்.

“பெருமாள்”, “thirumaal” இவை இரண்டும் தமிழ் பெயர்களா?
Hard Truth

திருமால் என்பது தமிழ்ப் பெயரின் முதல் புகுதியாகும். .
திருமால்வளவன் என்பதே முழுமையான தமிழ்ப் பெயர். புகழ் பெற்ற சோழ அரசன் கரிகால் சோழனின் இயற் பெயர் திருமால் வளவன்என்பதே.

மாலவன் என்பதும் சரியான தமிழ்ப் பெயர். வடமாலவன் குன்றம் குமரி வரை வரை புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு என்று பாடி இருக்கிறார்கள்.

பெருமாள் என்பது கடவுள் என்பது போன்ற ஒரு விளிப்பாகும்.

வளையாபதி, சிகாமணி, குண்டலகேசி, புலிகேசி, போன்ற ‘இ”கர வரிசையில் முடியும் பெயர்களை எவ்வகை படுத்துவீர்? அவை ஆண் பெயர்கள் அல்லவா? அல்லது தமிழ் பெயர்கள் அல்லவா?
Hard Truth

புலிகேசி என்பது புகழ் பெற்ற சாளுக்கிய அரசனின் பெயர். குறிப்பாக இரண்டாம் புலிகேசி என்பவன் வாதாபியை தலை நகராக கொண்டு ஆட்சி செய்து , ஹர்ஷா வர்த்தனன், மகேந்திர பல்லவன் ஆகியோரை போரில் வென்று இருக்கிறான். பதி என்பது வட மொழியில் இருந்து வந்த சொல்லே. பதி என்பது தலைவன், கணவன் ஆகியோரை குறிக்க வட மொழியில் பயன் படுத்தப் படும் சொல்லாகும். கணவனைப் பதி என்றும், மனைவியை பத்தினி என்றும் சொல்வர். அரசனை பூபதி என்பார்கள். கேசி என்பதும் வட மொழியில் இருந்து வந்த சொல்லே. சிகாமணி என்பது சிறந்த ரத்தினக் கற்களைக் குறிக்க உபயோகப் படுத்தப் படும் வார்த்தையே.

அப்போ கருணாநிதி, அழகிரி, தயாநிதி, உதயநிதி, துர்கா, கலாநிதி …

என்னை அதிகம் கவர்வது ஊர் பெயர்களே.
திரு கரு கா ஊர்
கும்ப கோணம்
மயில் ஆடு துறை
கடல் ஊர்
திரு நெல் வேலி
நாகர் கோவில்
செம் மண் சேரி

இப்படி கூறிக்கொண்டே போகலாம். அர்த்தமுடைய பெயர்களும் அதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் அல்லது புராணம் என்று

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: