Thiruchchikkaaran's Blog

உடன்படிக்கை……

Posted on: June 20, 2010


தன்னுடைய ரூபமாக மனிதரைப் படைத்த தேவன் என்று எழுதி இருப்பதை முந்தைய  கட்டுரையில் சுட்டி காட்டினோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/05/31/god-looks-like-man-as-per-bible/

அடுத்ததாக  மோசஸ் எனப்படும் யூதர்களின் மாபெரும் தலைவர் யூதர்களை ஒருங்கிணைத்து , யூதர்களின் தேவன் தந்தாக அவர்களுக்கு பல கட்டளைகளைப் போட்டு இருக்கிறார்.  

அந்தக் கட்டளைகளில்  ஒன்று  யூதர்களை தப்புவித்த யூதர்களின் தேவனை மட்டுமே யூதர்கள் வழி பட வேண்டும் என்பதும் , எந்த ஒரு   உருவத்தையும் வழி படக் கூடாது என்பதுமாகும். 

இது விடயமாக நாம் நமது சகோதரர் சந்தோஷ்  இட்ட ஒரு பின்னூட்டத்திற்கு நாம் அளித்த பதில் பின்னூட்டம் விரிவாக இருப்பதால் அதையே கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

Mr. Santhosh said:

//திருச்சிகாரரே,

நீங்கள் சொன்னது சரியே. இயேசு தன்னுடைய சாயலின்படியே மனிதனை படைத்தார். ஆனால் தன் சிலையை வணங்குவதை அவர் விரும்பவில்லை. அவர் எப்படி அவரை எப்பப்போது வணங்க சொல்கிறாரோ அவரை அப்பப்போது அப்படி வணங்க வேண்டியது அவரை பின்பற்றுகிற மனிதனின் கடமையாகும்.//

Reply: Thiruchchikkaaran Said :
நண்பர் சந்தோஷ் , சிலை இல்லாத வடிவில், அரூப வடிவில் வணங்குவதை நான் குறை கூறவோ தடுக்கவோ, வெறுக்கவோ, இல்லை. அது உங்கள் உரிமை, நல்லிணக்க அடிப்படையில் நான் உங்கள் வழிபாட்டிலும் கலந்து கொள்ளத் தயார். கடவுள் மனிதனின் சாயலில் தன்னைப் படைத்தார் என்று ஆரம்பத்திலே சொல்லி இருக்கிறது. மோசஸ் என்பவர் யூதர்களை ஒரு கூட்டமாக இணைக்கும் வரைக்கும் சிலை வடிவில் கடவுளை வணக்கக் கூடாது என்ற ஒரு கருத்து பைபிளில் கூறப் படவில்லை என்பதைக் கவனித்தீர்களா? விக்கிரக ஆராதனையை முதலில் கண்டித்து மோசஸ் தான்.
File:Duraeuropa-1-.gif
    (Wall painting from the Dura- Europa Synagogue)
 
மோசஸ் ஆரோன் காலத்திற்கு பைபிள் வரும்போது யூதர்களுக்கு என்று தனியாக ஒருவர் தேவனாக, கர்த்தர் என்று ஒருவர் தேவனாக காட்டப் படுகிறார்.
 • //யாத்திராகாமம்,
  அதிகாரம் 5

  1.பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

  2. அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

  3. அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.//

  எகிப்து நாட்டு மக்களும் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி கர்த்தர் என்னும் தேவன் சொன்னதாகத் தெரியவில்லை. இதில் இருந்து கர்த்தர் என்னும் கடவுள யூதர்களுக்கானவர் என்பது தெளிவாகிறதே.

  //யாத்திராகாமம்
  அதிகாரம் 9

  //1. பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.//

  இஸ்ரவேல் மக்களின் தேவன் கர்த்தர், அந்த தேவனின் ஜனங்கள் இஸ்ரவேலர்கள் என்பதே இதன் பொருளாக இருக்கிறது. அந்த தேவனாகிய கர்த்தர், பார்வோனுக்கு தேவன் இல்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.
  ஏனெனில் பார்வோனை நோக்கி, உன்னுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறேன், இஸ்ரவேலரை போக விடு என்று சொன்னதாக இல்லை.

File:BialyBimah.JPG

// யாத்திராகாமம்,
அதிகாரம் 20
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். //

யூதர்களுக்கும் அவர்கள் தேவனாக தெரிந்து கொண்ட கர்த்தருக்கும் இடையில் என்ன உடன் படிக்கை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அதற்கும் உலகில் உள்ள எல்லோருக்கும் என்ன சம்பந்தம்?
இந்தியர்களோ , சீனர்களோ, ஜப்பானியரோ, ஆங்கிலேயரோ , ஜெர்மானியாரோ எகிப்து நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க போகவும் இல்லை, எகிப்தில் இருந்து தப்பி வரவும் இல்லை.

சம்பந்தமே இல்லாமல் இருக்கும் மற்றவர்களை அதற்க்கு அடி பணியச் சொல்லி ஏன் பயமுறுத்த வேண்டும்?  ராமசாமி வீடு கட்ட வாங்கிய கடனை ராமசாமிதான் அடைக்க வேண்டும், சந்தோசை அடைக்க சொல்லி வற்புறுத்த முடியுமா?

   யூதர்களை தப்புவித்தார் என்கிற காரணத்தினால் யூதர்கள்  தங்களுக்கு தேவனாக கருதியவருக்கும் , யூதர்களுக்கும் இடையிலே மோசஸ் என்பவர் உருவாக்கிய ஒப்பந்தந்திற்க்கும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே மோசஸ் அன்று யூதர்களின் தேவருக்கும் , யூதர்களுக்கும்  இடையே போட்ட ஒப்பந்தத்தில் கூறப் பட்டுள்ளது போல உலகில் எவருமே விக்கிரக ஆராதனை செய்யவே கூடாது என்று கண்டிப்பு காட்டுவதும், அப்படி செய்யப் அப்படும் விக்கிரக  ஆராதனைக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுவதும் வெறும் சின்னப் பிள்ளைத் தனமாக மட்டும் அல்ல,  சமூகங்களுக்கு இடையே மோதலை  உருவாக்கி மனிதத்தை சிதைக்கக் கூடியவை என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் . 
 மற்றபடி யூதர்களின் வழி பாட்டை நாம் இகழவோ, வெறுக்கவோ இல்லை. யூதர்களின் வழி பாட்டுத் தளத்திலே (சினகாக் ) அவர்களுக்கு பணி விடை செய்ய , பாதுகாப்பு தர நான் தயார்.
Advertisements

37 Responses to "உடன்படிக்கை……"

//மோசஸ் ஆரோன் காலத்திற்கு பைபிள் வரும்போது யூதர்களுக்கு என்று தனியாக ஒருவர் தேவனாக, கர்த்தர் என்று ஒருவர் தேவனாக காட்டப் படுகிறார்//
கர்த்தர் என்பது பெயர் அல்ல. கர்த்தர் என்றால் GOD என்று அர்த்தம்.
Hard Truth

கர்த்தர் என்பவர் இஸ்ரவேலர்க்ளுகளுக்கான GOD என்பதாகவே மோசஸ் என்பார் சொல்லி இருக்கிறார். இதை பைபிள் சொல்லுகிறது.

//பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்//

கட்டுரையை மறுபடியும் படியுங்கள். தேவை ப் பட்டால் பைபிளையும் ஒரு முறை படியுங்கள்.

உமது இறைவன், உங்கள் இறைவன் போன்ற வார்த்தைகள் ஆபிரஹாமிய மதங்களில் சாதரணமாக வரும் வார்த்தை . அதற்க்கு பொருள் ஒவ்வொருவருக்கும் ஒரு இறைவன் என்பது அல்ல. எதுக்கு அடுத்த மதத்தவரிடத்தில் உங்கள் வேதம் இப்படிதான் சொல்லி இருக்குனு அடம் பிடிகரிங்க.அதற்க்கு பதிலாக பாகவதம் பற்றி நீங்கள் எளிய தமிழில் எழுதலாமே , பொதுவாக பாகவதம் இந்துக்களுக்கே தெரிவதில்லை. நீங்கள் எழுதினால் அனைவரும் பயன் பெறுவார். கீதை ,அர்த்த சாஸ்திரம், போன்றவற்றில் இருந்து நல்ல கருத்துக்களை எழுதலாம்.

சகோதரர் பிரதீப்,

அடம் பிடிப்பது யார்?

இந்தியர்கள் வழிபடும் தெய்வங்களை விடாமல் இகழ்ச்சியாகப் பேசி, உருவ வழிபாடு செய்யக் கூடாது என்று அந்த வழி பாட்டு முறைக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, அதனால் சமூக பூசலை உருவாக்குவது யார்?

நாங்கள் உங்களின் வழி பாட்டில் கலந்து கொள்கிறோம் என்று சொல்கிறோமே, இது அடம் பிடிப்பதா? மற்றவரின் மத சுதந்திரத்தை அழித்து, தன் நம்பிக்கை மட்டுமே எல்லோராலும் பின் பற்றப் பட வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் வகையில் எழுதுவது யார்?

மற்றபடி இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்று பல இடங்களில் எழுதப் பட்டுள்ளது, அதை சுட்டிக் காட்டினோம்.

//ஒவ்வொருவருக்கும் ஒரு இறைவன் என்பது அல்ல// என்றால் எல்லோருக்குமான கடவுள் ஒரு இனத்தை மட்டும் வாழ வைக்க, பிற இனங்களை எல்லாம் கொன்று குவித்து அவர்கள் வாழ்ந்த இடங்களை ஒரு இனத்திற்கு மட்டும் தருவாரா? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

//உபாகமம்
அதிகாரம் 7

//1.நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,

2. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.//

பிற இனங்களை அழித்து ஒரு இனத்தை மட்டும் வாழ வைக்க தேவன் செய்ததாக நூல்களில் எழுதி இருப்பதை தானே சுட்டிக் காட்டுகிறோம், நாமாக எதையும் எழுதவில்லையே!

//அதற்க்கு பதிலாக பாகவதம் பற்றி நீங்கள் எளிய தமிழில் எழுதலாமே , பொதுவாக பாகவதம் இந்துக்களுக்கே தெரிவதில்லை. நீங்கள் எழுதினால் அனைவரும் பயன் பெறுவார். கீதை ,அர்த்த சாஸ்திரம், போன்றவற்றில் இருந்து நல்ல கருத்துக்களை எழுதலாம்//

சரிதான் தல, நாம் எழுதுவதை கத்திரி போட்டு, திரித்து காட்டி எழுதுகிறார்கள். விளக்கம் தரவே அது சமபந்தமாக தொடர்ந்து எழுத வேண்டியதாயிருக்கிறது.

//சரிதான் தல, நாம் எழுதுவதை கத்திரி போட்டு, திரித்து காட்டி எழுதுகிறார்கள். விளக்கம் தரவே அது சமபந்தமாக தொடர்ந்து எழுத வேண்டியதாயிருக்கிறது.//
எப்படி நீங்க பைபிளில் இருக்கறத போடுற மாதிரியா ? அது சம்பந்தமான விளக்கம் அவர்கள் தர மாதிரியா ? சரிதான்…

தல,

அவர்கள் தான் கண்டிசன் போட்டு கட்டாயப் படுத்தறாங்க. நாங்க எந்த முறையிலும் வழிபாடு செய்யலாம் கிறோம். அவர்கள வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்கிறோம். ஆனால் , இவரைத் தான் வணக்க வேண்டும், இப்படித் தான் வணங்க வேண்டும், நீ ஒரு நாள் மண்டி போட்டு தான் ஆக வேண்டும், நீ பாவிதான், உருவ வழிபாட்டை வெறுக்கிறோம், உருவ வழிப்பாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வோம் என்று கடுமை காட்டியும் கட்டாயப் படுத்தியும் எழுதுவதாலேயே, இவர்கள ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய நாம் முற்படுவதாலேயே நமக்கு பல விடயங்கள் புலனாகின்றன.

நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. நாம் நல்லிணக்க அடிப்படையில் எல்ல்லோரின் வழிபாட்டிலும் கலந்து கொள்ளத் தயார் என்று பலமுறை எழுதி விட்டோம்,பதிலுக்கு அவர்கள் பிற மார்க்கத்தினரின் வழிபாட்டு முறைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் எழுதி இருக்கிறோம், பிற மார்க்கங்களின் வழிபாட்டுக்கு எதிரான வெறுப்பு சமூக அமைதியைக் கெடுக்கும், அதனால் வெறுப்பை விடுங்கள் என்கிற ஒரே கோரிக்கையை மாத்திரமே முன் வைக்கிறோம்.
நான் அப்படியே எடுத்து மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஒரு எழுத்து கூட மாற்றவில்லை.

அதோடு இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் நாம் இங்கே எழுதும் கட்டுரைகள் சில, நம்முடைய நண்பர்களின் பின்னூட்டதிற்கு நான் அளித்த விளக்கமே.

நியாயம் எந்த எந்தப் பக்கம் இருக்கு என்று பாருங்க தல, உங்க மதப் பற்றை கொஞ்சம் ஒத்தி வச்சிட்டு, மனசாட்சியை கேளுங்க தல.

//நியாயம் எந்த எந்தப் பக்கம் இருக்கு என்று பாருங்க தல, உங்க மதப் பற்றை கொஞ்சம் ஒத்தி வச்சிட்டு, மனசாட்சியை கேளுங்க தல.//
அக்க ! உங்க பகுத்தரிவு புல்லரிக்க வைக்குது. பார்பனர்கள் பொதுவாக தங்கள் மீது குற்றம் சுமத்தினால் நீ வேற்று மதத்து ஆள். இந்துக்களின் விரோதி அப்படின்னு ஒட்டு மொத்தமாக சேற்றை வாரி இறைப்பார்கள் .அதுதான் தெரிகிறது திருச்சியாரிடம். நீங்கள் பார்பனரா ? இதே ஸ்டைல் எச் ராஜா ,ராமகோபாலன் பேசும்போதும் காணலாம்.

தல,

நான் உங்களிடம் மீண்டும் வைக்கும் கோரிக்கை இதுதான்,

//நியாயம் எந்த எந்தப் பக்கம் இருக்கு என்று பாருங்க தல, உங்க மதப் பற்றை கொஞ்சம் ஒத்தி வச்சிட்டு, மனசாட்சியை கேளுங்க தல.// அதற்க்கு மேல் உங்கள் விருப்பம்!

அவர்கள் தான் கண்டிசன் போட்டு கட்டாயப் படுத்தறாங்க. நாங்க எந்த முறையிலும் வழிபாடு செய்யலாம் கிறோம். அவர்கள வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம் என்கிறோம். ஆனால் , இவரைத் தான் வணக்க வேண்டும், இப்படித் தான் வணங்க வேண்டும், நீ ஒரு நாள் மண்டி போட்டு தான் ஆக வேண்டும், நீ பாவிதான், உருவ வழிபாட்டை வெறுக்கிறோம், உருவ வழிப்பாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வோம் என்று கடுமை காட்டியும் கட்டாயப் படுத்தியும் எழுதுவதாலேயே, இவர்கள ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய நாம் முற்படுவதாலேயே நமக்கு பல விடயங்கள் புலனாகின்றன.

நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. நாம் நல்லிணக்க அடிப்படையில் எல்ல்லோரின் வழிபாட்டிலும் கலந்து கொள்ளத் தயார் என்று பலமுறை எழுதி விட்டோம்,பதிலுக்கு அவர்கள் பிற மார்க்கத்தினரின் வழிபாட்டு முறைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் எழுதி இருக்கிறோம், பிற மார்க்கங்களின் வழிபாட்டுக்கு எதிரான வெறுப்பு சமூக அமைதியைக் கெடுக்கும், அதனால் வெறுப்பை விடுங்கள் என்கிற ஒரே கோரிக்கையை மாத்திரமே முன் வைக்கிறோம்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///யூதர்களை தப்புவித்தார் என்கிற காரணத்தினால் யூதர்கள் தங்களுக்கு தேவனாக கருதியவருக்கும் , யூதர்களுக்கும் இடையிலே மோசஸ் என்பவர் உருவாக்கிய ஒப்பந்தந்திற்க்கும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.///

நான் பைபிளைப் படித்ததில்லை.ஆனால் கிருஸ்தவ பிரச்சாரர்கள் எழுதிய பல மாத புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள்,சொர்ப்பொழிவுகள்,சர்ச்சில் செய்யும் பிரசங்கங்கள் போன்றவற்றை படித்தும், கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். ஆனால் நீங்கள் முற்றிலும் வேறு கோணத்திலிருந்து பைபிளை இங்கு விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

நானும் கூட கர்த்தர் அனைவருக்கும் கடவுள் என்றே பைபிளில் சொல்லப்பட்டிருப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் உங்கள் பைபிளின் மேற்க் கோளிலிருந்து தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு மட்டும் தான் என்று பைபிளில் கூறப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

சகோதரர் தனபால் அவர்களே,

நீங்களே நாடு நிலை மனதுடன் பைபிளைப் படித்துப் பாருங்கள் . நான் குறை சொல்லவோ, குற்றம் சாட்டவோ இதை எழுதவில்லை. அப்படியே எடுத்து மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஒரு எழுத்து கூட மாற்றவில்லை. சரியான பொருளையே முன் வைக்கிறேன். நான் எழுதும் கோணம் நேரான கோணமே.
நான் யூதர்களின் வழி பாட்டைக் குறை சொல்லவில்லை.

அதோடு இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் நாம் இங்கே எழுதும் கட்டுரைகள் சில நம்முடைய நண்பர்களின் பின்னூட்டதிற்கு நான் அளித்த விளக்கமே.

நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. நாம் நல்லிணக்க அடிப்படையில் எல்ல்லோரின் வழிபாட்டிலும் கலந்து கொள்ளத் தயார் என்று பலமுறை எழுதி விட்டோம்,பதிலுக்கு அவர்கள் பிற மார்க்கத்தினரின் வழிபாட்டு முறைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்றும் எழுத்து இருக்கிறோம், பிற மார்க்கங்களின் வழிபாட்டுக்கு எதிரான வெறுப்பு சமூக அமைதியைக் கெடுக்கும், அதனால் வெறுப்பை விடுங்கள் என்கிற ஒரே கோரிக்கையை மாத்திரமே முன் வைக்கிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர்களோ உருவ வழிப்பாடு செய்யக் கூடாது, இவரைத் தான் வணக்க வேண்டும், இப்படித் தான் வணங்க வேண்டும், நீ ஒரு நாள் மண்டி போட்டு தான் ஆக வேண்டும், நீ பாவிதான் என்று நம்மை கடுமை காட்டியும் கட்டாயப் படுத்தியும், எழுதுவதாலேயே, இவர்கள ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ய நாம் முற்படுவதாலேயே நமக்கு பல விடயங்கள் புலனாகின்றன.

எனது நண்பர் இந்தியர் தான்;அவருக்கென கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் அமெரிக்காவில் சென்று குடியேறிவிட்டார்;இன்றைக்கு பத்து வருடத்துக்குப் பிறகு அவர் ஒரு அமெரிக்கர்;

விளக்கமாவது,அமெரிக்காவில் அமெரிக்கர் மட்டுமே நிரந்தரமாக தங்கமுடியும்;ஆனால் அமெரிக்க தேசத்தின் விதிமுறைகளுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் எவரும் அவர் எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அமெரிக்கர் ஆகமுடியும்;

அதாவது அமெரிக்கர் ஆவது எத்தனை கடினமோ அந்த அளவுக்கு அமெரிக்கர் ஆவதும் சுலபம்;

இது உதாரணம் மட்டுமே;இதை வைத்தும் யாராவது லாவணி பாடினால் அதற்கு நான் பொறுப்பல்ல..!

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

///அப்படியே எடுத்து மேற்கோள் காட்டி இருக்கிறேன். ஒரு எழுத்து கூட மாற்றவில்லை. சரியான பொருளையே முன் வைக்கிறேன். நான் எழுதும் கோணம் நேரான கோணமே.///

கிருஸ்தவ பிரச்சாரர்கள் சொல்லாமல் விட்ட விஷயத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.அதைக் குறிக்கவே நான் வேறு ஒரு கோணம் என்று கூறினேன்.தவறான கோணம் என்ற அர்த்தத்தில் கூறவில்லை.

கர்த்தர் இஸ்ரவேலருக்கு மட்டுமே கடவுள் என்பதை உங்கள் கட்டுரையிலிருந்தே தெரிந்து கொண்டேன்.அதனால் தான் இந்துக்களின் பிரம்மமும்,கிறிஸ்தவர்களின் கர்த்தரும் ஒன்றே என்பதை கிறிஸ்தவர்களான திரு CHILLSAM , திரு HARD TRUTH போன்றோர் ஏற்றுக் கொள்ளாததற்கு அவர்களின் பைபிளே காரணம் என்பது உங்கள் கட்டுரை மூலம் அறிந்து கொண்டேன்.

உங்கள் கட்டுரை எனக்கு ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

நல்லது .மக்களால், மக்களுக்காக நடத்தப் படும் சனநாயக முறையிலே மக்களுடைய சட்டம் அனுமதித்தால் வேறு நாட்டுக் காரர் அமெரிக்க குடி மகன் ஆகலாம். அந்த சட்டம் மாற்றப் பட்டு விட்டால் குடி மகன் ஆக முடியாது.

ஆனால் இந்த நடை முறை இஸ்ரவேல் தேவனின் கட்டளைக்கு பொருந்துமா? இஸ்ரவேல் தேவன் அவருடைய விருப்பப் படி கட்டளைகளை போடுபவர் போல உள்ளதே.

இரக்கம் காட்டாமல் இன்னொரு இனத்தை சங்கரிக்கச், சொன்னதாக குறிப்பு இருக்கிறதே, அவனுடன் உடன் படிக்கை பண்ணாதே என்று இஸ்ரவேல் தேவனின் தெளிவான கட்டளை இருக்கிறதே,

ஒரு ஆயி குடி மகன், நான் இஸ்ரவேல் தேசத்தவன் ஆகி விடுகிறேன் என்னை உயிரோடு விடுங்கள் என்று உடன் படிக்கை போட முன் வந்தால் கூட உடன் படிக்கை பண்ணக் கூடாதே , இரக்கம் காட்டதே என்று ஸ்டாண்டிங் ஆர்டர் இருக்கிறதே.

இப்போதும் துருக்கிய உணவு உதவிக் கப்பலைத் தாக்கி பல அப்பாவிகளை இஸ்ரேல் கொன்று விட்டது. அமெரிக்கா தான் இன்றைய இஸ்ரேல் குடிகளுக்கு லேட்டஸ்ட் தேவனா?

மற்றுமொரு உதாரணத்தையும் முன்வைக்கிறேன்;
அரசாங்கமானது தன் மக்களுக்கு முழுமையான கல்வியறிவையும் சுகாதாரத்தையும் தர பாடுபடுகிறது;இந்தியா போன்ற நூறுகோடி மக்களுக்கும் அதைத் தருவதே நோக்கம்;ஆனாலும் ஒரே நாளில் திடீரென அதனைச் செய்யமுடியாது;படிப்படியாகவே அதனைச் செய்யமுடியும்;

அரசாங்கம் இதற்காகத் திட்டக்குழுவை அமைத்து ஆலோசித்து செலவினங்களை ஆராய்ந்து பணியாளர்களை நியமித்து ஒரு கிராமத்தையோ பட்டணத்தையோ மாதிரியாகத் தேர்ந்தெடுத்து உருவாக்குகிறது;

இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் சிருஷ்டி கர்த்தரான கடவுளும் கூட அனைத்துலகையும் நல்வழிப்படுத்த முனையாமல் அதனை ஒரு குறிப்பிட்ட குடும்பம் மற்றும் சமூகம் வழியாகச் செய்ய விரும்புகிறார்;

இந்த நடைமுறையினையே பரிசுத்த வேதாகமத்தில் காண்கிறோம்;

ஆதியிலே தேவன் மனிதனை உண்டாக்கியபோது பன்னி குட்டியைப் போலவோ மீன் குஞ்சுகளைப் போலவோ திரளாக மனிதர்களைப் படைக்காமல் ஒரு ஜோடியை மட்டுமே படைத்தார்;

அடுத்து குடும்பம்,அடுத்து ஒரு சந்ததி,அடுத்து 12 கோத்திரங்கள் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் இப்படி இறைவனின் அநாதியும் அலாதியுமான திட்டம் படிப்படியாக உருப்பெற்று இன்று யூத ஜனம் புறக்கணித்த இயேசுவானவரின் வழியாக உலகமனைத்தும் உய்த்திடும் மாபெரும் திட்டமானது முழு பரிமாணத்தையும் அடைந்து நிறைவேறும் கட்டத்தினை எட்டியுள்ளது;

இதனிடையே அந்த காலத்திலிருந்தது போலவே இன்றும் அசுரர்களும் இராட்சதர்களும் கொடுங்கோலர்களும் ஆங்காங்கே தோன்றி இறைப்பணிக்கு இடையூறு செய்துகொண்டும் பரியாசம் பண்ணிக்கொண்டுமே இருப்பர்;

உலகமே அழிந்த முதல் பேரழிவின் போது ஒரு குடும்பம் மட்டும் உயிருடன் காக்கப்பட்டது;அதற்கு காரணமானது ஒரு கப்பலைப் போன்ற மிதக்கும் பேழை;அதனை ஒரு வருடமாகக் கட்டிக்கொண்டிருந்த போது மக்களனைவரும் அந்த மனிதனை நிந்தித்து கேலி பேசினர்;ஆனால் அதுவே இன்றைய நவீன உலகின் கப்பல் கட்டும் சூத்திரத்துக்கு ஆதாரமானது;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36633219

//இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் சிருஷ்டி கர்த்தரான கடவுளும் கூட அனைத்துலகையும் நல்வழிப்படுத்த முனையாமல் அதனை ஒரு குறிப்பிட்ட குடும்பம் மற்றும் சமூகம் வழியாகச் செய்ய விரும்புகிறார்;//

மொத்திலே யூதர்கள் எதை நினைத்தார்களோ அதை சாதித்து விட்டனர்.

தங்கள் இன நன்மைக்காக, தாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட இனம் என்றும், அதனால் தாங்கள் எந்த இனத்தை வேண்டுமானாலும் அழிப்பது தேவனின் கட்டளையாக சொல்லிக் கொள்ள வழி செய்யும் படிக்கு ஒரு கோட்ப்பட்டை உருவாக்கி, அதை சொன்னதே தேவன் தான், அவர் தான் இஸ்ரவேலரின் தேவன் என்று எல்லோரிடமும் சொல்லி விட்டனர். மூவாயிரம் வருடம் கழித்து இன்றைக்கு எம்முடைய சகோதரரான தமிழரும் அந்தக் கோட்பாட்டை அப்படியே உள் வாங்கி, இஸ்ரவேலரின் இன அழிப்புகளுக்கு வெள்ளை அடிக்கும் படி செய்யும் அளவுக்கு கோட்பாட்டை உருவாக்கி…. சும்மா, சொல்லக் கூடாது, இன அழிப்பு செய்வதையும் இஸ்ரேல் காரர் ஸ்டேயிலாகவே செய்கிறார்!

தலைவா எல்லாம் எழுதி விட்டு கடைசியில் சிறப்பான காமெடியையும் எழுதி இருக்கிறீர்கள்.

//உலகமே அழிந்த முதல் பேரழிவின் போது ஒரு குடும்பம் மட்டும் உயிருடன் காக்கப்பட்டது;அதற்கு காரணமானது ஒரு கப்பலைப் போன்ற மிதக்கும் பேழை;அதனை ஒரு வருடமாகக் கட்டிக்கொண்டிருந்த போது மக்களனைவரும் அந்த மனிதனை நிந்தித்து கேலி பேசினர்;ஆனால் அதுவே இன்றைய நவீன உலகின் கப்பல் கட்டும் சூத்திரத்துக்கு ஆதாரமானது;//

தண்ணீரில் ஒரு மரக் கட்டையை தூக்கிப் போட்டால் அது மிதக்கிறதே. அதைப் பார்த்தே கப்பலை கட்ட ஐடியா வருமே, என்ன… தலைவா!

மிதக்கும் கட்டையிலெல்லாம் பயணிக்க முடியாதையா..!

முத‌லில் வெறுப்புக்கருத்துக்களைப் பரப்பும் பணியினை நிறுத்திவிட்டு விருப்புவெறுப்பற்ற முறையில் மாற்றுக்கருத்துக்களை அணுகும் தெய்வநிலைக்கு முன்னேறிவாருமையா..!

நோவா எனும் வேதப் புருஷனின் சாதனை மனுக்குல வரலாற்றில் மறைக்கவோ மறக்க்வோ முடியாத மாபெரும் சாதனையாகும்;இறைவனைத் தவிர வேறு யாரும் இதனை அவருக்குக் கற்றுத் தந்திருக்க முடியாது;

இதனை இந்து வேதங்களும் ஒப்புக்கொள்ளுகிறது; ஆதாரம் நான் தரமாட்டேன்,அது உங்கள் வேலை..!

திரு CHILLSAM அவர்களே,

படைப்பிற்கு தொடக்கமும் முடிவும் இல்லையென்றும் பிரபஞ்சம் இறைவனிலிருந்து வெளிப்படுகிறது.பின் இறைவனிலேயே ஒடுங்குகிறது என்றும் வேதம் கூறுகிறது.

அணு நிலை நிலை பிரபஞ்சம் என்று அறிவியலாளரால் அழைக்கப்படும் “எல்ம்” என்பதையே வேதம் “மஹத்” என்று அழைக்கிறது.இந்த “எல்ம்” விரிவடையும் போதே பெரு வெடிப்பு (BIG BANG ) ஏற்ப்பட்டு இந்த நட்சத்திரங்களும் பின் கோள்களும்,பின் உயிரினங்களும் உருவாகியது.

பெரு வெடிப்பிலிருந்து உயிர்கள் உருவாவது வரை ஒரு இடையறாத ஒரு தொடர்ச்சியான ஒரு பரிணாமமே ஆகும்.

எளிய ஹைரஜன் அணுவிலிருந்து சிக்கலான அணு அமைப்பைக் கொண்ட மனிதன் வரை பிரபஞ்ச பரிணாமத்தின் பாதையில் செல்லும் பொது எந்த இடத்தில் உயிரற்றவைகளின் உலகம் முடிந்து , உயிருள்ளவைகளின் உலகம் தொடங்குகின்றது என்பதை அறிவது இயலாத காரியம் என்று பிரபஞ்ச அறிவியலார் கூறுகின்றார்கள்.

மேலும் ஒரு பிராணி உயிருள்ளது என்றும்,ஒரு கல் உயிரற்றது என்றும் கண்டறிவது சுலபமாக இருந்தாலும்,உயிருள்ளது என்பது என்ன, உயிரற்றது என்பது என்ன என்பதை திட்டவட்டமாகக் கூறுவது முடியாத காரியமாகும் என்று வானியல் அறிஞர் கட்சல்ஸ்கி கூறுகிறார்.

உயிரினங்களின் குணாதிசியங்களை அவற்றின் பௌதீக மற்றும் ரசாயன பகுதிப் பொருட்களில் தேடுவதற்கு ஆதாரமாக அமைகிறது–இவ்வாறு குவாண்டம் கொள்கையை நிருவியவருள் ஒருவரான எர்வின் ஸ்ட்ரோடின்ஜெர்.என்பவர் கூறுகிறார்.

உயிரினத்தன்மையை அதன் பௌதீகத் தன்மையில் விளக்க முடியும்-நீல்ஸ் போர்.

இதிலிருந்து தெரிவது எல்ம் இலிருந்து நட்சத்திரம்,கோள்கள்,கடல்கள், உயிரினம் இவை எல்லாமே சிறிது சிறிதாக பரிணாமத்தின் மூலமே வந்துள்ளது.

அதனால் உயிரினம் இந்த ப்ரபஞ்சத்திளிருந்தே பரிணாமம் மூலமாக வந்துள்ளது.

மீண்டும் இந்த பிரபஞ்சம் ஒடுங்கும் பொது முதலில் உயிரினங்கள் அழிந்து பின் அனைத்து கோள்களும் நட்சத்திரங்களும் அதன் நுட்பமான அணு அமைப்பைப் பெற்று மீண்டும் ELM (மஹத்) இல் கரைகிறது.பின் மீண்டும் விரிவடைகிறது. இப்படித்தான் பிரபஞ்சத்தின் தோற்றம் ஒடுக்கம் பற்றி அறிவியல் சொல்லுகிறது.

இதையே தான் இந்து மதமும் படைப்பிற்கு தொடக்கமும் முடிவும் இல்லையென்றும் பிரபஞ்சம் இறைவனிலிருந்து வெளிப்படுகிறது.பின் இறைவனிலேயே ஒடுங்குகிறது என்று கூறுகிறது.

பிரபஞ்ச தோற்றம், ஒடுக்கம் பற்றி அறிவியல் கூறும் கருத்திற்கும் உயிர்கள் தோன்றிய பரிணாமக் கருத்திற்கும் இந்துமத வேதம் கூறும் சிருஷ்டி தத்துவத்திற்கும் 100 % ஒற்றுமையே காணப்படுகிறது.இந்து மதம் அறிவியலுடன் எந்த விதத்திலும் மாறுபடாமலே செல்கிறது.

ஆனால் நீங்கள் கூறும் படைப்பு அறிவியலுக்கு ஒத்து வராததாக இருக்கிறது.அறிவியல் கூறும் பரிணாமத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.அதிலும் அந்தக் கப்பல் கதை இப்பொழுதுள்ள குழந்தை கூட ஏற்றுக்கொள்ளாது.

//ஆனால் நீங்கள் கூறும் படைப்பு அறிவியலுக்கு ஒத்து வராததாக இருக்கிறது.அறிவியல் கூறும் பரிணாமத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.அதிலும் அந்தக் கப்பல் கதை இப்பொழுதுள்ள குழந்தை கூட ஏற்றுக்கொள்ளாது.//

ஒரு காலத்தில் – ஏதோ யுகத்தில் -பகவான் ஒரு கலத்தை உருவாக்கி அது தண்ணீரில் மிதக்க – உயிர்கள் காக்கப்பட்டதாக …

மற்றபடி பரிணாமக் கொள்கையும்…கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் ஏற்றுக்கொள்ளுகிறார்;

வேதத்தை ஆய்ந்து படித்த டார்வின் அதன் காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது;

இதுவே நாத்திகத்தின் ஆதாரக் கொள்கையாகவும் விளங்குகிறது; அப்படியானால் கட்டங்களில் தொலைத்த எதிர்காலத்தை விட்டங்களில் தேடும் இந்து நண்பர்கள் நாத்திகர்களா,யாரை ஏமாற்றும் வேலை இது..?

ஒரு பெரிய ரேடியோ கடை வெடித்து சிதறி அதில் இருந்த பல்வேறு உபகரணங்களும் வெவ்வேறு பக்கங்களில் இணைந்தால் ஒரு புதிய பொருள் கிடைக்குமா என்ன..?

இதனை யூதனோ,கிறித்தவனோ அல்லது இவையிரண்டின் சாரத்திலிருந்து வந்த இஸ்லாமியனோ ஏற்பதில்லை;

இறைவன் என்பதற்கு இணையாக‌ இயற்கை என்பதைச் சொல்வதும் கூட இறையடியவர்களால் தேவதூஷணமாகவே பாவிக்கப்படுகிறது.

ஏம்பா இயற்கையை இணை வைக்கிறீங்க?

இயற்க்கை திட்டம் போட்டு ஒரு இனத்தை வாழ வைக்க பிற இனங்களை அழித்து, அந்த இடத்தை எடுத்து ஒரு இனத்துக்கு கொடுக்க செயல் பட்டதா? ஏதோ இயற்க்கையால் சில சீற்றங்கள் வந்த போதிலும் அவை அப்பகுதயில் வாழும் எல்லா மக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன.

ஏம்பா இயற்கையை இணை வைக்கிறீங்க! இயற்கையை தூஷனை செய்யாதீங்கப்பா !

ஒரு காலத்தில் – ஏதோ யுகத்தில் -பகவான் ஒரு கலத்தை உருவாக்கி அது தண்ணீரில் மிதக்க – உயிர்கள் காக்கப்பட்டதாக …

Pls follow the Link:
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36633219

திரு CHILLSAM அவர்களே,

///வேதத்தை ஆய்ந்து படித்த டார்வின் அதன் காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது///

எப்படி இப்படி ஒரு கருத்தை உங்களால் கூற முடிகிறது.?டார்வினின் பரிணாமக் கொள்கை பைபிளுக்கு எதிராக உள்ளது என்று உலகம் முழுதும் அறிந்த உண்மை.

டார்வின் எழுதிய ஜீவராசிகளின் மூலம் என்ற புத்தகம் 1859 ஆம் வருடம் நவம்பர் 24 ஆம் தேதி வெளிவந்தது.அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தியது.230 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகம் 1250 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு வெளியான அன்று மதியத் திற்குள்ளேயே அத்தனை பிரதிகளும் விற்று தீர்ந்தன.

அந்த புத்தகம் பல சர்ச்சுகளில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், மற்றும் பொது மக்களின் காலடியில் மிதிக்கப்பட்டு பிராத்தனைகள் நடத்தப்பட்டது.

டார்வினின் பரிணாமக் கொள்கை தவறானது என்று நிரூபிக்க தேவாலய பாதிரியார்களால் 1860 ஆம் வருடம் ஜூன் மாதக் கடைசியில் ஆக்ஸ்போர்ட் சர்வ கலாச்சாலையில், பிரிட்டீஷ் அசோசியேசன் சார்பில் மாபெரும் விவாத கூட்டம் நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டது.கிருஸ்தவ மதவாதிகள் டார்வின் தத்துவத்திற்கு எதிராக இருந்தனர்.

கிருஸ்தவ மதவாதிகளின் கோஷ்டிக்கு தலைவராக பிஷப் வில்பர் போர்ஸ் பேசினார்.

பரிணாமம் பற்றி பேசியவர்களுள் முக்கியமாக ஹக்ஸ்லி யும்,ஹூக்கரும் ஆவர்.

இறுதியில் பரிணாம தத்துவமே வென்றது.

இந்த வரலாற்று நிகழ்வுகள் கூறுவது என்னவென்றால் டார்வினின் பரிணாமக் கொள்கை பைபிளுக்கு எதிரானதே.

///வேதத்தை ஆய்ந்து படித்த டார்வின் அதன் காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது//// என்றால் அது ஏன் பைபிளுக்கு எதிராக இருக்க வேண்டும்.அதை ஏன் இன்றும் கிருஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும்?

//அது ஏன் பைபிளுக்கு எதிராக இருக்க வேண்டும்.அதை ஏன் இன்றும் கிருஸ்தவர்கள் எதிர்க்க வேண்டும்?//
தனபால்,
சகோ.சில்சாம் எங்குமே டார்வினின் கோட்பாடும், பரிசுத்த வேதாகமமும் ஒன்றுடன் ஒன்று இசைந்து போகிறது என்று சொல்லவில்லை. அவர் கூறியது, வேதத்தை படிக்கும் பொது டார்வினுக்கு இந்த ஐடியா தோன்றி இருக்கலாம் என்பதே.
தங்களுடைய புரிதலும் திருச்சிக்காரனின் புரிதலும் எப்படி ஒரே மாதிரி உள்ளது என்று தெரியவில்லை. நிரூபிக்க பட்டதாக கருதப்பட்ட பல தியரிகள், மீண்டும் பல காலம் கழித்து மண்ணை கவ்வி உள்ளன.
இந்த பிரபஞ்சத்தின் கட்டமைப்பை நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்களுக்கு புரியும், இது இது தானாக “பரினாமத்தினால்” வந்திருக்க வாய்ப்பில்லை என்று. இதை மிகுந்த ஞானம் உடைய ஒரு கட்டமைபாலரே செய்ய முடியும். அடுத்தவன் சொன்னான், அறிவியலாளன் சொன்னான், பிரபலமானவன் சொன்னான், மதபோதகன் சொன்னான் என்று பாராமல், நீங்களே ஆராய்ந்து பாருங்கள். திறந்த மனதுடன், விருப்பு வெறுப்பு (திருச்சிக்கரனுக்கு பிடித்த வார்த்தை) இல்லாமல் ஆராயுங்கள். இதை எனக்காக கேட்கவில்லை, உங்களுக்காக செய்யுங்கள். உங்கள் முடிவினால் விளையும் பயனுக்கு நாளைக்கு உங்களுடன் நானோ, திருச்சிக்காரனோ, டார்வினோ, சில்சாமோ வந்து நிற்க போவதில்லை.
Hard Truth

யூகத்தின் அடிப்படையில் யூகமாக சொல்லப் பட்ட தியரிகள் சிலவே மண்ணைக் கவ்வி இருக்கக் கூடும்.

நிரூபிக்கப் பட்ட எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்து சரி பார்த்துக் கொள்ள கூடிய தியரிகள் மண்ணைக் கவ்வியது இல்லை. காந்தப் புலத்தினூடே மின் கடத்தி குறுக்கு வெட்டாக வூடுருவி செல்லும் போது மின்னோட்டம் உண்டாகிறது என்னும் விதியை எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். இந்த தியரிகள் எல்லாம் ஒரு போதும் மண்ணைக் கவ்வியது இல்லை.

எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் நிரூபணமும் இல்லாமல் சொல்லப் பட்ட கோட்பாடுகளுள் ஒரு கோட்பாடுதான், தேவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதும்.

பரிணாம த்தினால் வந்திருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்து மத போதனைகளை மனதுக்குள் இருக்கப் பற்றிக் கொள்வதால் அப்படி தோன்றுகிறது. பரிணாமத்தினால் உயிர்கள் மேம்பாடடைந்து மனிதனாக உருமாறி இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. வழக்கம் போல //உங்கள் முடிவினால் விளையும் பயனுக்கு நாளைக்கு உங்களுடன் நானோ, திருச்சிக்காரனோ, டார்வினோ, சில்சாமோ வந்து நிற்க போவதில்லை// என்று சொல்லி பயமுறுத்த ஆரம்பித்து விட்டார்கள். இந்த பயமுறுத்தல் எல்லாம் இனி வொர்க் அவுட் ஆகாதைய்யா!

// எப்படி இப்படி ஒரு கருத்தை உங்களால் கூற முடிகிறது..? டார்வினின் பரிணாமக் கொள்கை பைபிளுக்கு எதிராக உள்ளது என்று உலகம் முழுதும் அறிந்த உண்மை… டார்வின் எழுதிய ஜீவராசிகளின் மூலம் என்ற புத்தகம் 1859 ஆம் வருடம் நவம்பர் 24 ஆம் தேதி வெளிவந்தது. //

நண்பரே நான் முன்வைத்த‌ ஆதாரப்பூர்வமான தர்க்கங்களுக்கு ஒரு மதிப்பையும் தராமல் பெலவீனமானதொரு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்;

டார்வினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா?
அவர் ஒரு மதகுருவின் மகன்;அந்த கால பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்தின் கிமு -கிபி என்று குறிப்பிட்டிருக்கும்;

கிமு என்பது கீழ்நோக்கி செல்லும்;அது அப்படியானால் அது கிமு 4000 ல் வந்து நிற்கும்;இதுவே டார்வின் மனதை அசைத்தது;அதன்பிறகே மற்ற எல்லா பிரச்சினையும் வந்தது;

தற்போது நான் மற்றுமொரு குறிப்பை தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்;‌

வருடங்களைக் குறிப்பிடும் முறை எப்போது யாரிடமிருந்து பெறப்பட்டது?

இன்றைய நவீன உலகிலும் உலக முழுவதும் ஒரே காலக் கணக்கு இருக்கிறதா?

ஆங்கிலக் கணக்கீட்டு முறையின் தோற்றம் எது?

அதனை பைபிளில் குறிப்பிட்டது யார் மனிதனா? கடவுளா?

இந்த கேள்விகளின் அடிப்படையில் டார்வினின் விசிறிகளான தங்களை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவர் வழியே தோன்றி செழித்த நாத்திகத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

அப்படியானால் நாம் செய்து வைத்துள்ள தெய்வங்களும் போலியானவை தானே?

கோடிக்கணக்கான வருடத்துக்கு முந்தியது என எதை வேண்டுமானாலும் காட்டலாம்;ஆனால் உயிரின் இரகசியம் என்ன,உலகம் எப்போது எப்படி தோன்றியது போன்றவற்றை அறிந்திடவே முடியாது;கணிப்புகளெல்லாம் முடிவுகளாகி விடாது;

ஆனானப்பட்ட (..?) டார்வினைக் குறிப்பிடவே ஒரு வருடத்தைக் குறிப்பிட வேண்டியதாகிறது என்பதே தன்னைத் தான் மெச்சிக் கொள்ளும் பரிதாப நிலை;அந்த வருடமும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது;

இறுதியாக,டார்வினின் கொள்கையின்படி மனிதன் குரங்கிலிருந்து தோன்றியது உண்மையானால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடையிலே ஏதோ ஒரு ஜீவன் விடுபட்டிருக்கிறதே,அது எது?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது உண்மையானால் குரங்கு இரத்தத்தையே மனிதனுக்கு செலுத்தலாமே,குரங்குடன் இணைந்து இன்னும் நல்ல புதிய உயிரினங்களை நாம் உருவாக்கலாமே..!

குரங்கைவிட எலிகளே மருத்துவ ஆராய்ச்சியில் அதிகம் பயன்படுத்தபடுகிற‌து;இதனால் மனிதன் எலியிலிருந்து தோன்றினான் என்று கூறலாமா?

நீர் பைபிளைப் பொய்யாக்கப் பார்த்தால் அது உம்மை பைத்தியமாக்கிவிடும்..!

தனபால்,
நீங்கள் திருச்சிக்காரனுடைய வார்த்தைகளுக்கு தலையாட்டுவதற்க்கு முன்னாள், சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு வேத வசனத்தையும், அது எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது, யாரால் சொல்லப்பட்டது, சொல்பவரின் சூழ்நிலை மற்றும் குணாதிசயங்கள் என்ன, மேலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான அர்த்தம் என்ன என்று பார்க்கவேண்டும். பல விஷயங்களில் மூல பாஷையிலும் குறிப்பு தேடலாம்.
உதாரனத்திற்க்கு: ஆதியாகமம் 4 ஆம் அதிகாரம்:
“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.”
எபிரேய மொழியில், “அறிவது” என்பது “உறவு கொள்வது” என்பதாகும். ஆனால், தமிழ் மற்றும் இதர மொழிகளில் அப்படி கிடையாது. இதனால் சில குழப்பங்கள் வரலாம். பல சமயம், இத்தகைய சூழ்நிலையில் “பரிசுத்த ஆவியானவர்” உங்கள் மனதில் பேசி உங்களுக்கு புரியவைப்பார். விசுவாசமுள்ளோர் அதை ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் மனிதன் சாதரணமாக எதையும் நம்புவதில்லை. இந்த சூழ்நிலையில், உண்மையில் உங்களுக்கு உண்மையை அறிய ஆவல் இருக்குமானால், நீங்களே ஆராய்ச்சி செய்ய வேண்டியதுதான்.
நீங்கள் முதலில் கர்த்தர், தேவன், ஆண்டவன், Lord, GOD ,போன்றவைகளுக்கு சரியான அர்த்தம் அறிந்து அவைகளை திருச்சிக்காரன் குறிப்பிட்ட வசனங்களுடன் வைத்து பாருங்கள். உங்களுக்கு தெளிவு பிறக்கலாம்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
Hard Truth

EXODUS 5

1.And afterward Moses and Aaron went in, and told Pharaoh, Thus saith the LORD God of Israel, Let my people go, that they may hold a feast unto me in the wilderness.

2. And Pharaoh said, Who is the LORD, that I should obey his voice to let Israel go? I know not the LORD, neither will I let Israel go.

3. And they said, The God of the Hebrews hath met with us: let us go, we pray thee, three days’ journey into the desert, and sacrifice unto the LORD our God; lest he fall upon us with pestilence, or with the sword.

Exodus 9
1. Then the LORD said unto Moses, Go in unto Pharaoh, and tell him, Thus saith the LORD God of the Hebrews, Let my people go, that they may serve me.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36633219

இஸ்ரவேலரையும் யூத இனத்தையும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்;

ஏதோ அவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இதனை நான் கூறவரவில்லை;

அவர்கள் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கட்டாயப்படுத்தப்பட்டதால் அடைந்த துன்பங்கள் ஏராளம்,ஏராளம்;

அவர்கள் வாழ்ந்த காலக் கட்டத்திலிருந்த மக்களுடன் ஒன்றித்துப் போயிருந்தாலும் சிறப்பான வாழ்க்கையையும் பாதுகாப்பான சமூக அமைப்பையும் பெற்றிருக்கலாம்;

ஆனால் அவர்களுடைய ஒத்துப்போகாத தன்மையினாலும் இறையச்சத்தினாலும் அவர்கள் மற்ற அனைத்து மக்கள் குழுக்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டார்கள்;

மற்றொரு விதத்தில் சில காலக் கட்டத்தில்- சில தலைமுறையினர் இறைவனை விட்டு விலகிச் சென்ற போது அவர்களுடைய இறைவனே அவர்களை கைவிட்டது போல அடிமைகளாக நடத்தப்பட்டு பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள்;

இஸ்ரவேலருடைய வரலாறு இரத்தம் தோய்ந்த தியாக வரலாறு..!

அவர்களுடன் இனியும் வழக்காடவேண்டாம்;
அவர்கள் தேவன் மிகப்பெரிய‌வர்;
நீர் சொல்வதுபோல உமக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

அவர்களுடன் மோத வேண்டாம்,நண்பரே;
உங்க நல்லதுக்குத் தான் சொல்லுகிறேன்;

வேண்டுமானால் இஸ்ரவேல் மக்களின் வாழ்வியல் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் விருப்பப்பாடமாக எடுத்து நிதானமாகப் படியுங்கள்;அதினால் சற்று பலனுண்டு.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36633219

திரு CHILLSAM அவர்களே,

///நண்பரே நான் முன்வைத்த‌ ஆதாரப்பூர்வமான தர்க்கங்களுக்கு ஒரு மதிப்பையும் தராமல் பெலவீனமானதொரு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்///

நீங்கள் எங்கேயும் ஆதாரப்பூர்வமான தர்க்கத்தை முன் வைக்க வில்லை.///வேதத்தை ஆய்ந்து படித்த டார்வின் அதன் காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது;///என்று ஒரு யூகத்தையே முன் வைத்தீர்கள்.அதை யூகம் என்று திரு HARD TRUTH ம் நம்புகிறார் என்பது அவருடைய எழுத்துக்களிலிருந்து தெரிகிறது.

/// சகோ.சில்சாம் எங்குமே டார்வினின் கோட்பாடும், பரிசுத்த வேதாகமமும் ஒன்றுடன் ஒன்று இசைந்து போகிறது என்று சொல்லவில்லை. அவர் கூறியது, வேதத்தை படிக்கும் பொது டார்வினுக்கு இந்த ஐடியா தோன்றி இருக்கலாம் என்பதே.///

நானும்,திரு HARD TRUTH ம் நீங்கள் கூறியது உங்கள் யூகம் என்கிறோம்.ஆனால் நீங்கள் ஆதாரப்பூர்வமான தர்க்கம் என்கிறீர்கள்.அப்படி என்றால் அந்த ஆதாரத்தைக் காட்டுங்கள்.

///டார்வினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா?
அவர் ஒரு மதகுருவின் மகன்;அந்த கால பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் ஆரம்பத்தின் கிமு -கிபி என்று குறிப்பிட்டிருக்கும்;
கிமு என்பது கீழ்நோக்கி செல்லும்;அது அப்படியானால் அது கிமு 4000 ல் வந்து நிற்கும்;இதுவே டார்வின் மனதை அசைத்தது;அதன்பிறகே மற்ற எல்லா பிரச்சினையும் வந்தது///

என்று நீங்கள் இந்த கிமு, கிபி போன்ற பைபிளில் கூறப்பட்ட காலம் சம்பந்தப்பட்டவையே டார்வினின் பரிணாமக் கொள்கை உருவாக மூல காரணம் என்று கூறுகிறீர்கள்.

ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் அவர் ஒரு மதகுருவின் மகனாக இருந்த போதிலும் சிறுவயதிலிருந்தே பல பகுத்தறிவு கேள்விகளை தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார் என்பதே.

அதில் முக்கியமாக டார்வின் தன் தந்தையிடம் “நான் எப்படி பிறந்தேன்” என்று கேட்டிருக்கிறார்,

அதற்க்கு அவர் தந்தை “நானும் உன் அம்மாவும் உன்னைப் பெற்றெடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

சிறுவனான டார்வின் மேலும் “நீங்களும்,அம்மாவும் எப்படிப் பிறந்தீர்கள்” என்று கேட்கிறான்.

அதற்க்கு டார்வினின் தந்தை “என் அப்பா அம்மாவும், உன் அம்மாவின் அப்பா அம்மாவும் பெற்றெடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

டார்வின் மீண்டும் “அவர்கள் எப்படி பிறந்தார்கள்” என்று கேட்கிறான்

அதற்க்கு டார்வினின் தந்தை “இதென்னடா கேள்வி…அவர்களின் அப்பா அம்மாவாலும்…,அவர்களின் அப்பா அம்மாவாலும்…., அவர்களின் அப்பா அம்மாவாலும்… இப்படி நம் மூதாதையர் பிறந்து கொண்டே வந்தார்கள்” என்று பதில் கூறுகிறார்.

மீண்டும் டார்வின் ” அவர்களெல்லாம் எப்படி முதன் முதலில் பிறந்தார்கள்”

டார்வினின் தந்தை ” இது கூடவா தெரியாது ? அநாதி காலத்தில் முதன் முதலாகத் தோன்றிய முதல் மனசனுக்கும், முதல் மனிஷிக்கும் தான் மனித முலம் அனைத்தும் பிறந்தது.”

மீண்டும் டார்வின்-“அந்த முதல் மனுசனும் முதல் மனுசியும் எப்படியப்பா பிறந்தார்கள்”

டார்வினின் தந்தை-” இதென்னடா அசட்டுத் தனமான கேள்வி எல்லாம் கேட்கிற ?அந்த முதல் மனுஷனையும் முதல் மனுசியையையும் கடவுள் படைத்தார்.

மீண்டும் டார்வின்-” எப்படியப்பா கடவுள் அவர்களைப் படைத்தார்?”

டார்வினின் தந்தை-” இனிமேல் இது போன்ற முட்டாள் தனமான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.கடவுள் முதல் மனுஷனையும்,மனுசியையும் படைத்தார்.அவ்வளவுதான்.அதற்குமேல் கேள்விகேட்டால் நாஸ்திகம்!,மகாபாவம்!……பொய் விளையாடு”-என்று கூறுகிறார்.

இப்படி சிறுவயதிலேயே பகுத்தறிவோடு சிந்தித்து, தொடர்ச்சியான ஆராய்ச்சி ,மற்றும் சிந்தனையாலேயே டார்வின் பரிணாமத் தத்துவத்தை கூறியிருக்கிறார்.அவர் மனிதனின் ஆரம்பம் எது என்று சிந்தித்து இறுதியில் உயிரினங்களின் மூலம் என்ன வென்று கண்டறிந்து கூறியிருக்கிறார்.

நீங்கள் கூறுவது போல் கிமு கிபி போன்ற காலம் சார்ந்து சிந்தித்ததே டார்வினின் பரிணாமக் கோட்பாடு உருவாகக் காரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

நண்பர் தனபால்,
நல்லாதானே சார் இருந்தீங்க, இப்போ என்ன ஆச்சு. எதுக்கு இப்படி திருச்சிக்காரன் மாதிரி நடந்துக்கறீங்க. நானும், சகோ.சில்சாமும் டார்வினின் கோட்பாடும் பரிசுத்த வேதமும் ஒத்துபோகவில்லை என்று தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். அவருடைய விளக்கத்தை அவருதைய தளத்தில் தெளிவாக கொடுத்து அதற்க்கான திரியையும் கொடுத்து உள்ளார். அதில் கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் உள்ளது:

//We have seen that the Bible does not teach evolution. //

ஒருவர் மீது குற்றம் கண்டு பிடிக்கும் கண்ணோட்டத்தில் எதை படித்தாலும் தவறாகவே தெரியும், பல விஷயங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் வேதத்தை படித்தாலும், அதில் உள்ள உண்மை புரியாது.
Hard Truth

பரிணாம கோட்பாடு எல்லா மதத்துக்குமே எதிராகத்தான் இருக்கிறது. டார்வின் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்து மத எதிரி தேச துரோகி என்று சொல்லி கொன்று இருப்பார்கள் வானர படைகள். எல்லா மதங்களிலும் இருப்பது ஆதாரமற்ற கதைகளே (பைபிளில் வரும் நோவா கதை, இஸ்லாமில் வரும் மிராஜ் பயணம், இந்து மதத்தில் வரும் சிவன் தலையில் கங்கை, அமிர்தம் எடுத்தது, ராமர் காலடி என்று ராமேஸ்வரத்தில் இருக்கும் பாதம்) இப்படி நிறைய கதைகள் உண்டு. இதெல்லாம் மக்களுக்கு அவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி அன்றைய நாளில் சொல்லப்பட்டவை. இப்போ இதெல்லாம் நம்புறதுக்கு சின்ன குழந்தை கூட தயாராக இல்லை.

// நீங்கள் கூறுவது போல் கிமு கிபி போன்ற காலம் சார்ந்து சிந்தித்ததே டார்வினின் பரிணாமக் கோட்பாடு உருவாகக் காரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். //

ரெம்ப சந்தோஸம்..நான் வேற வேலைய பாக்குறேன்..!

திரு HARD TRUTH அவர்களே,

///நானும், சகோ.சில்சாமும் டார்வினின் கோட்பாடும் பரிசுத்த வேதமும் ஒத்துபோகவில்லை என்று தெளிவாகவே சொல்லி இருக்கிறோம்.///

நீங்கள் டார்வினின் கோட்பாடும் பரிசுத்த வேதமும் ஒத்துபோகவில்லை என்று சொல்லி இருப்பது தெரியும்.ஆனால் சகோ.சில்சாம் அப்படி அவர் தளத்தில் சொல்லி இருப்பது எனக்குத் தெரியாது.

இருந்தாலும் ///வேதத்தை ஆய்ந்து படித்த டார்வின் அதன் காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது/// என்று அவர் கூறிய இந்தக் கருத்து அவருடைய யூகமே என்று தான் நான் தெரிவிக்கிறேன்.

ஆனால் அவர் ///நண்பரே நான் முன்வைத்த‌ ஆதாரப்பூர்வமான தர்க்கங்களுக்கு ஒரு மதிப்பையும் தராமல் பெலவீனமானதொரு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்///என்று கூறுகிறார்.

அது ஆதாரப் பூர்வமான தர்க்கம் என்றால் அந்த ஆதாரத்தைக் காட்டுங்கள் என்கிறேன்.

டார்வின் சிறுவயதிலிருந்தே பல பகுத்தறிவுப்பூர்வமாக சிந்தித்து கேள்விகளைக் கேட்கும் அவரின் இயல்பே அவருடைய பரிணாமம் பற்றி சிந்திக்கத் தூண்டியது என்று அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது என்று நான் கூறுகிறேன்.

அவர் பைபிளின் ///காலக் கட்டங்களை ஆராய்ந்தபோது உதித்த ஞானமே பரிமாணக் கொள்கையாக வகுக்கப்பட்டது///என்று கூறுகிறார்,

நீங்கள் கூறுங்கள் எது சரி.சிறுவயதிலிருந்தே டார்வினிடம் இருந்த சிந்திக்கும் திறனா? அல்லது சகோ.சில்சாம் கூறியபடி பைபிளின் கால கட்டத்தை ஆராயந்ததாலா?
இதில் எது ஆதாரப்பூர்வமான தர்க்கம்?

இதில் என்ன தவறு இருக்கிறது.?///நல்லாதானே சார் இருந்தீங்க, இப்போ என்ன ஆச்சு///என்று கேட்கவேண்டிய அளவுக்கு நான் ஒன்றும் தவறாகக் கூறவில்லையே.

////இந்த பிரபஞ்சத்தின் கட்டமைப்பை நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்களுக்கு புரியும், இது இது தானாக “பரினாமத்தினால்” வந்திருக்க வாய்ப்பில்லை என்று. இதை மிகுந்த ஞானம் உடைய ஒரு கட்டமைபாலரே செய்ய முடியும். அடுத்தவன் சொன்னான், அறிவியலாளன் சொன்னான், பிரபலமானவன் சொன்னான், மதபோதகன் சொன்னான் என்று பாராமல், நீங்களே ஆராய்ந்து பாருங்கள். திறந்த மனதுடன், விருப்பு வெறுப்பு (திருச்சிக்கரனுக்கு பிடித்த வார்த்தை) இல்லாமல் ஆராயுங்கள். ///

பிரபஞ்சத்தின் கட்டமைப்பை மிகுந்த ஞானம் உடைய ஒரு கட்டமைபாலரே செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் இந்த ///பிரபஞ்சத்தின் கட்டமைப்பு தானாக “பரினாமத்தினால்” வந்திருக்க வாய்ப்பில்லை என்று/// ஏன் கூறவேண்டும்? இந்தப் பரிணாமமே இறைவனின் செயலாக ஏன் இருக்கக் கூடாது.?

///ஒருவர் மீது குற்றம் கண்டு பிடிக்கும் கண்ணோட்டத்தில் எதை படித்தாலும் தவறாகவே தெரியும், பல விஷயங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் வேதத்தை படித்தாலும், அதில் உள்ள உண்மை புரியாது.///

அருமையான உண்மையான வாக்கியம்.இது உங்களுக்கும் பொருந்தும்.

திரு PRADEEP அவர்களே,

///பரிணாம கோட்பாடு எல்லா மதத்துக்குமே எதிராகத்தான் இருக்கிறது.///

பரிணாமக் கொள்கை இந்து வேத சிருஸ்டித் தத்துவத்துடன் ஒன்றுபடுகிறது.இந்து மதத்திற்கு பரிணாமம் எதிரானதல்ல.

///டார்வின் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்து மத எதிரி தேச துரோகி என்று சொல்லி கொன்று இருப்பார்கள் வானர படைகள்.///

அறிவியலே இந்து மத தத்துவங்களுடன் இணக்கமாக செல்கிறது.அதனால் டார்வின் இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் இந்து தத்துவத்தை விளக்கிய ஒரு ரிஷியாகவே போற்றியிருப்போம்.

chilsam
//டார்வினின் கொள்கையின்படி மனிதன் குரங்கிலிருந்து தோன்றியது உண்மையானால் மனிதனுக்கும் குரங்குக்கும் இடையிலே ஏதோ ஒரு ஜீவன் விடுபட்டிருக்கிறதே,அது எது?//

இது தவறு.
குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே ancestor என்பது தான் Darwin theory. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல.
இப்போ arthepidathacus என்று நடக்கக் கூடிய அதே நேரத்தில் மரம் ஏறக் கூடிய கால் அமைப்புக் கொண்ட ஒரு உயிர் இனத்தின் fossils கண்டுபிடித்து இருக்கிறார்கள். கொஞ்சம் நம்ம கிஷ்கிந்தையை ஞாபகப்படுத்துகிறது

the name is Ardipithacus . It can walk with legs like a man and can climb trees like a monkey

Pls read genesis with hebrew translation if u need better ustanding then u can u stand the creation There is thousands r million years gap between the gen 1.1 and 1.2 wen u read u can ‘t u stand simply pray and meditate True god will reveal truth first u ustand the firast two versus then pls go deep and argue abt bible

Dear Mr. Edwin,

Thanks for your visit. You are welcome.

I had quoted from Bible exactly, the same version which is used by many throughout the world. If you thing there is an error in my quote you are welcome to point out the same.

The main points of this article are that

1)before the period Moses, there was no reference in Bible that the idol worship has to be looked upon with hatredness and contempt

2) The covenent made by Moses was between the Isrelites who escaped from Egypt and the Lord of Isrel

Do the above two points are correct or not? If the above two points are not correct as per biblem can you please quote from bible and clarify?

//There is thousands r million years gap between the gen 1.1 and 1.2 //

I cant say any thing on this. I dont know what relevance does this has on this subject

//wen u read u can ‘t u stand simply pray and meditate True god will reveal truth //

Dear Edwin, by saying that can you please claerly say what do you mean?

You mean that -if we stand and meditate before True God, he will reaveal the truth – does it mean that what is quoted by me from the Bible is not truth?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: