Thiruchchikkaaran's Blog

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Posted on: June 16, 2010


மொழி ஏன் முக்கியமாகிறது? ஏனெனில் அது பண்பாட்டை தொடர்ந்து எடுத்து செல்லுகிறது. அது மக்களின் அடையாளமாக இருக்கிறது.

உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். அது இபோதும் உயிர்த் துடிப்புடன் செயல் பட்டு வருகிறது.

 தமிழ் மொழி பிறந்ததும் வளர்ந்ததும் தமிழ் நாட்டிலே என்றாலும், ஈழத்திலும், மலேசிய, சிங்கப்பூர், ஆகிய நாடுகளிலும் தமிழ்  முக்கிய மொழியாக இருந்து வருகிறது.

ஒரு மொழி எப்படி வளர்கிறது , எப்படி முக்கியத்துவம் பெற்று பலராலும் பேசப் படும் மொழியாகிறது என்பதை ஆராய்வோம்.  அரசியல், கலாச்சாரம் இவை இரண்டுமே ஒரு மொழி முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக அமைகின்றன என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

ஆங்கில மொழி இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாக பேசப் படும் மொழியாக இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் அவர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் ஆளுகையின்  கீழ்  வைத்து இருந்ததுவே.  இன்றைய கால கட்டத்திலே அதைப் போல எந்த ஒரு நாடும் உலகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ்   கொண்டு வர இயலாது என்ற  போதிலும் , மொழி வளர்ச்சிக்கு , பாது காப்புக்கு ஆரசியல் ஒரு காரணி என்பதை மறுக்க இயலாது.  அந்த வகையிலே ஈழத்திலே சொல்லொனா கொடுமைகளை தமிழர்கள் அனுபவித்து  கட்டவிழ்த்து விடப் பட்ட காட்டு மிராண்டித் தனத்தின் முன் அடிமையாகி இருப்பது, தமிழ் மொழிக்கு ஒரு துன்பமாகவே அமைந்திருக்கிறது.

   File:SivajiGanesan 19620824.jpg File:Mgre34wk3wk.jpg

அடுத்த படியாக ஒரு மொழி வளர்ச்சி அடைய , முக்கியத்துவம் பெற காரணியாக இருப்பது பண்பாடும், கலாச்சாரமுமே.  இயல் தமிழ் , இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற மூன்றாக இருந்த தமிழ் இப்போது சுருங்கி சினிமா தமிழாக , தொலைக் காட்சி தமிழாக மாறி வருகிறது. சினிமா என்பது மொழியை உலகின் பல பகுதிகளுக்கும்  எடுத்து சொல்லும்  வலிமையான வூடகமாக இருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிட்டு சொல்லுகிறோம்.  அந்த வகையிலே ஹிந்தி மொழியின் தூதுவராக செயல் படும் பாலிவுட் உலகின் இரண்டாம் மிகப் பெரிய திரைப் படத் துறையாக இருப்பதோடு,  இஸ்ரேல் முதல் நேபால் வரையிலும் ஹிந்தி மொழியின் தாக்கத்தை அதிகப் படுத்துகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்தி படங்கள் தாக்கத்தை ஏற்ப்படுத்த ஆரம்பித்து விட்டன. இந்திப் படங்களும், தமிழ் தெலுங்கு படங்களைப் போல ஒரு ஹீரோ ஐம்பது பேரை அடைத்து நொறுக்குவது,  இளம்  பெண்கள்  குறைந்த  ஆடைகளுடன் வருவது இப்படியாக அசிங்க காமெடிகளை உள்ளடக்கியதாகவே இருந்தாலும், அதை ஒப்பேற்றி உலகின் பல பகுதிகளுல்ம் பலரும் பார்க்கும் வண்ணம் செய்து விடுகின்றனர்.

                               File:Smttrm44grrrt.jpg

தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால்  ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி கணேசன், எம். ஜி.ஆர், ஜெமினி கணேசன்  ஆகியோர் நடித்த படங்கள் தமிழ் பண்பாட்டின் தன்மையை ஓரளவுக்கு  பரப்பும் வகையிலே அமைந்து இருந்தன.  

(தொடரும்)

Advertisements

5 Responses to "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு!"

திரு.திருச்சிக்காரர் அவர்களே,

நல்ல சிறந்த கட்டுரை.

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன்.அது சிறுவர்களுக்கான அறிவுத்திறனை காணும் நிகழ்ச்சி.அதில் திருக்குறளில் உள்ள சில வார்த்தைகளைக் காட்டுவார்கள்.அந்த வார்த்தைகளுக்குரிய திருக்குறளைச் சரியாகச் சொல்ல வேண்டும்.அதற்க்கு அந்த சிறுவர் சிறுமியர்கள் பலமுறை சரியாகவே கூறினார்கள்.நான் சொல்லவந்த விஷயம் என்னவென்றால் அப்படி சரியாகச் சொன்னவர்களிடம் அந்த திருக்குறளின் அர்த்தம் என்னவென்று கேட்டதற்கு, அத்தனை பிள்ளைகளுமே அந்த அந்த திருக்குறளுக்கு அர்த்தத்தை ஆங்கிலத்திலேயே கூறினார்கள்.அதற்க்கான அர்த்தம் தமிழில் சொல்லத்தெரிய வில்லை.அவர்களுக்கு திருக்குறளுக்கு அர்த்தம் ஆங்கிலத்தில் கற்றுத் தரப்படுகிறது.நான் சிறுவயதில் ஆங்கிலத்திற்கு அர்த்தம் தெரியாமல் மொட்டை மனப்பாடம் செய்ததது போல் இப்பொழுது METRICULATION பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் தமிழை அர்த்தம் தெரியாமல் மொட்டை மனப்பாடம் செய்கிறார்கள் என்பதை இந்த VIJAI TV நிகழ்ச்சியிலிருந்து புரிந்து கொண்டேன்.

நம் டிவி, சினீமா,சினிமாப் பாடல்கள் போன்றவை நல்ல தமிழில் இருந்தால் தமிழ் நம் இளைய தலைமுறைகளிடம் வளரும் என்பது என் கருத்து.

வணக்கம் நண்பரே,
நல்ல கட்டுரை… சமூகத்துக்கு தேவையான கட்டுரை. ஆனால், இதற்கு யாரும் அவ்வளவாய் பின்னூட்டம் இடவில்லையே என்று வருத்தமாக உள்ளது. நம் தமிழ் சமுதாயத்தின் மேல் இவ்வளவுதான் மதிப்பா?
சரி என்னால் இயன்ற பதிவை நான் பதிந்து விடுகிறேன்.
திருச்சிக்காரன் ஐயா,
தாங்கள் சினிமாவை முன்னிறுத்தி பேசியுள்ளீர்கள். ஆனால், சினிமா என்பது, மக்கள் நலனுக்காக வந்ததல்ல, அது ஒரு வியாபாரம். தாங்கள் கூறியதைப்போல், தமிழ் கலாசாரத்தை பரப்புதைபோல் படம் எடுத்தால், தயாரிப்பாளர் தலையில் துண்டுதான். பெப்சி கம்பெனி தனது குளிர்பானங்களை நிறுத்துவிட்டு, ஊட்டச்சத்துள்ள பானங்களை விற்கும் காலத்தில்தான் தங்கள் கூறிய சினிமாப்படங்கள் வரும்.
தமிழை வளரவைக்க, வேறு பலவழிகள் உள்ளது. பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுகொடுங்கள். தமிழில் பேசுங்கள், எழுதுங்கள், வேற்றுமாநில நண்பர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுங்கள், புத்தங்கங்களை வாங்கி, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள். ஜப்பானியரின் மொழி கடினமாக இருந்தாலும், மக்கள் அவர்கள் மொழியை கற்றுகொள்கிரார்கள் அவர்களுடன் வர்த்தகம் செய்ய (நானும் கற்றுக்கொண்டேன் வேலைவாய்ப்புக்காக). ஜப்பானியர், பல துறையில் முன்னேறி, அவர்கள் மொழியை முன்னேற்றுகின்றனர், அவர்கள் கலாசாரத்தை பரப்புகின்றனர். நாமும் அதுபோல் செய்யலாம்.
மேலும் பின்னூட்டங்களை எதிர்பார்கிறேன்.
நன்றி,
இராமன்

Good write-up, indeed.

A good write-up,indeed

சினிமா மூலம் மொழியும் அதன் இடம் சார்ந்த கலாசாரமும் பரவக் கூடும் என்றாலும், இப்போதைய சினிமாவும் சரி, தொ.கா மற்றும் ஏனைய ஊடகங்கள் அதை எந்த அளவு செய்கிறது என்பது கேள்விக் குறியே.
எது தமிழ் கலாசாரம் என்பதை முதலில் நாம் புரிந்து கொண்டு இருக்கிறோமா என்றே தெரியவில்லை.
இபூதைய ஊடகங்கள் பரப்புவது தான் நமது கலாச்சாரமா? அது தான்நமது மொழியா ?

கடவுளே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: