Thiruchchikkaaran's Blog

நித்தம் நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா………..

Posted on: June 12, 2010


ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் உணவுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை.

 உணவின்றி வாழ முடியாது. ஆனாலும் ஏதோ ஒரு உணவை உண்டு பசியைத் தீர்த்துக் கொண்டு செல்கிறோமேயல்லாது, உணவே நமக்கும் ஆரோக்கியத்தை தரக் கூடிய  வாழ் நாளை அதிகரிக்கக் கூடிய சக்தியை உடையதாக இருக்கிறது என்பதை பலர் அறியாமலே இருக்கிறோம்.  

நம்முடைய   உணவிலே   அரிசி, கோதுமை  ஆகிய தானிய வகைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தானிய வகைகளோடு கணிசமான அளவுக்கு காய்கறிகளும் , ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பழ வகைகளும் உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

 அதோடு பால், தயிர் முதலிய  பண்ணை தயாரிப்புகளும் , மாமிச பதார்த்தங்க்களோ  அல்லது  அதற்க்கு இணையான பருப்ப வகைககளோ உணவிலே இடம் பெறுவது சிறந்தது.

அதைப் போலவே  உணவுக்காக எடுத்துக் கொள்ளப் படும் பொருட்களும், உணவைத் தயாரிக்கும் முறையும் முக்கியமானவை. தொடர்ந்து  வெளியே உணவகங்களில்  உண்பது உடலுக்கு  நல்லது அல்ல. 

 வீட்டிலே சமைக்கப் பட்ட உணவை உண்பதே நல்லது. வீட்டிலே சமைக்கப் பட்ட  உணவை நீண்ட நேரம் வைத்து இருந்து உண்பது நல்லது அல்ல. உணவு தானியமாக இருக்கும் வரைஅவை  பாக்டீரியாக்களால் பாதிப்படைவதில்லை.

 சமைக்கப் பட்ட உணவோ , பாக்டீரியாக்களால் தாக்கப் படக் கூடியது. சமைக்கப் பட்டவுடன் உண்ணுவது மிகச் சிறந்த முறையாகும். 

Advertisements

5 Responses to "நித்தம் நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா……….."

நல்ல பதிவு.

அருமை நண்பரே!….

இடுகைக்கு சம்மந்தப்பட்ட படம் ஏதேனும் இடலாமே!.

கொஞ்சம் கவர்ச்சியாய் இருக்கும்.

– ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

நன்றி ஜெகதீஸ்வரன், நீங்கள் சொல்வது போல உணவு வகைகளின் படத்தை இணைத்து இருந்தால் சிறப்பாக இருக்கும். அடுத்த முறை படத்தையும் இணைக்க முயற்ச்சி செய்வோம்.

சகோ திருச்சிக்காரர் அவர்களே,

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா ……ஒரு நல்ல பாடலின் வரிகளை தலைப்பாக வைத்திருக்கிறீர்கள். நல்ல கட்டுரை.காலை, மற்றும் இரவு உணவாக சி(ப)லர் நூடுல்களையே சாப்பிடுகிறார்கள்.அது நல்லதா?

அன்பு நண்பர்களே,
“நித்தம் நித்தம் நெல்லு சோறு” என்று தலைப்பு இருப்பதினால் இது என் மனதிற்கு பட்டது. இப்போதுள்ள வாழ்வியல் சூழ்நிலைகளுக்கு நித்தம் நித்தம் நெல்லு சோறு உண்பது, சர்க்கரை வியாதி மற்றும், உடல் கொழுப்பை அதிகரிக்க செய்யும். உடல் உழைப்பு கடினமாக இருந்த காலத்திற்கு நெல்லு சோறு பொருந்தியது, இப்போதைய மக்கள் அலுவலகத்தில் அதிகமாய், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால். கோதுமை பண்டங்களை, அரிசிக்கு பதிலாக அதிகம் சேர்த்துக்கொள்வது நலமாய் இருக்கும். பல மருத்துவர்கள் மற்றும் உடற்கல்வி மேதைகள் கூறியது இது.
நன்றி,
இராமன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: