Thiruchchikkaaran's Blog

பரிதவித்து மனம் துடிதுடித்து

Posted on: June 10, 2010


 

Title:  பரிதவித்து,  மனம் துடிதுடித்து ………..

உணவு இல்லாமல் ஒரு மனிதனால் பல நாள் உயிர் வாழ முடியும் , நீர் அருந்தாமல் இரண்டு நாள் வாழ முடியும் என்கிறார்கள்.

ஆனால் காற்றை சுவாசிக்காமல் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.

குடிநீரை பானையில் வைத்துக் கொள்வது போல, காற்றை ஒவ்வொரு மனிதனும் தனக்கென அடைத்து வைத்துக் கொள்ள முடியாது. 

 காற்று இருப்பதால்தான் எல்லா உயிரினனங்களும்  வாழ்கின்றன.  காற்று இல்லாவிட்டால் இந்த உலகிலே யாரும் வாழ  முடியாது.  நம்முடைய மூச்சுக் குழலை அடைக்க யாராவது முயற்ச்சி செய்தால் எதிர்த்துப் போராடலாம். ஆனால் காற்றையே நஞ்சாக்கி விட்டால் என்ன செய்ய முடியும்?   1984 ம் வருடம் போபாலிலே யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்த அதிக அளவில் வெளியேறிய விஷ வாயு,  அப்பகுத்யின் காற்று மண்டலத்தையே நஞ்சா க்கியது. கொத்துக் கொத்தாக மக்கள மடிந்து விழுந்தனர்.

                                         Bhopal Gas Tragedy

                                

முதல் நாளிலே 3000  பேர் இறந்தனர். தொடர்ந்து 25,000 க்கும் மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர். அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டு பல நோய்களுக்கும் ஆளாகி இன்று வரை அவதிப் பட்டு வருகின்றனர். 

 சம்பம் நடந்து வருடங்களுக்கு 25 பிறகு ஆடி  அசைந்து  வழங்கப்   பட்ட தீர்ப்பிலே  பேருக்கு அதிக பட்சம் 2 வருட சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது.  அவர்களில் பெரும்பாலோர் அன்று மாலையிலேயே பெயில் கிடைக்கப் பெற்று , வீட்டிற்கு சென்று ரிலாக்ஸ் ஆகி விட்டனர். கம்பெனியின் CEO ஆனா திரு. ஆண்டர்சன் அமெரிக்காவில் இருக்கிறார். தீர்ப்பில் அவரிப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப் பட்ட நிவாரணமோ பிணத்துக்கு வைக்கப் படும் நெத்திக்காசு மதிப்பிலே யே இருந்தது.    

உண்மையான குற்றவாளிகள் யார். நாம் தான்,  நீங்களும் (அதாவது தங்களுக்குப் பொறுப்பு இருப்பதாக நினைப்பவர்களை மட்டும்)  நானும் தான். எது என்ன நடந்தாலும் சரி, நாம் மசால்  தோசை சாப்பிட்டோமா, சிங்கம் படம் பார்த்தோமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்தோமா என்று தினவுக்கு சொரிந்து கொள்ளும் நாம் தான் குற்றவாளி.   மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுதாமல், சாதி, மத, மொழி, இன, வர்க்க பேதங்களை எல்லாம் தாண்டி நியாத்தின்  அடிப்படையிலே மக்களை இணைக்கத் தவறிய சிந்தனையாளர்களே இதற்குப் பொறுப்பு.  கரன்சிகளை என்ன முடியாமல் தவிக்கும் கனவான்களை வைது பலனில்லை.

 
 
 
Advertisements

10 Responses to "பரிதவித்து மனம் துடிதுடித்து"

நல்ல புலம்பல். இப்படி புலம்புவதற்கு பதிலாக என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். இப்படி புலம்புவதற்கும், குறை கூறுவதற்கும், திண்ணைக்கு திண்ணை, டீக்கடையில், சலூன் கடையில் என பெரிய கூட்டமே உள்ளது. “சிந்தனைவாதியான” நீங்கள் (?) என்ன செய்ய உத்தேசம்?

//உண்மையான குற்றவாளிகள் யார். நாம் தான், நீங்களும் (அதாவது தங்களுக்குப் பொறுப்பு இருப்பதாக நினைப்பவர்களை மட்டும்) நானும் தான். எது என்ன நடந்தாலும் சரி, நாம் மசால் தோசை சாப்பிட்டோமா, சிங்கம் படம் பார்த்தோமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்தோமா என்று தினவுக்கு சொரிந்து கொள்ளும் நாம் தான் குற்றவாளி. //
இது என்ன புது குற்றச்சாட்டு? ஒன்று இந்த விஷவாயு விஷயத்தில் பங்கேற்க வேண்டும் அல்லது தங்களுக்கு பொறுப்பில்லை என்று கூறவேண்டுமா?

Really I didn’t want to involve much on your blog acitivities. But, I was very actively involved in getting justice for the people who are affected in Bhopal Gas tragedy, right from my student days. You cannot just bash everyone, because you feel that no one tried doing anything for the victims of Bhopal Gas tragedy.

Hard Truth

இன்றுதான் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளீர்கள் . மிக தேவையான கட்டுரை. வாழ்த்துக்கள் !
hardtruth என்ன சொல்ல வரிங்கன்னு ஒன்னும் விளங்கல ..! இதுபோல் கட்டுரைகள் எழுதுவது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே…எல்லோருடைய சிந்தனையும் ஒன்று பட்டால் இந்த நிலை வராமல் தடுக்கலாம் , குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம். அரசியலும், நீதியும் செத்து ரொம்ப நாள் ஆச்சு. (சீக்கிய படுகொலை, போபால் விஷ வாயு கசிவு, ,பாபர் மசூதி இடிப்பு, குஜராஜ் படுகொலைகள் , பார்லிமென்ட் தாக்குதல் ,மலேக்கன் குண்டுவெடிப்பு ,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ).
மதங்களை பற்றிய கட்டுரைகளில் திருசிகாரனின் கருத்துக்களில் இருந்து நானும் வேறுபடுகின்றேன். அதற்காக நல்ல கட்டுரையையும் எதிர்க்க வேண்டாம் hardtruth . மதத்தை எல்லா இடத்திலும் நுழைகாதிர்கள்.

நன்றி, திரு. பிரதீப், உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.

புகையிலை மறுப்பு தினம், விமான விபத்து, சதிச் செயலினால் ரயில் கவிழ்ந்து 150 பேர் மரணம் … இப்படி மக்கள் பிரச்சினைக்கான கட்டுரைகள் வெளியாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அக் கட்டுரைகளுக்கு எல்லாம் பெரும்பாலும் யாரும் பின்னூட்டம் இடுவதில்லை. தனபாலும், நீங்களும், ராமும் மற்ற சிலரும் மாத்திரம் பின்னூட்டம் இடுகிறீர்கள். புகையிலை ஒழிப்புக்காவது பலர் பின்னோட்டம் இடுவார்கள் என எதிர்பார்த்தேன். மதம் என்பது மக்களுக்கு ஆன்மீக முன்னேற்றத்துக்கு அமைதி வழியில் உதவ வேண்டும், மதம் என்பது மக்களுக்கு(ள்) பிரச்சினை ஆகி விட வேண்டாமே என்றுதான் மதம் பற்றி எழுதுகிறோம். நம்முடைய நோக்கம் மக்கள் நலனே.

நண்பர் பிரதீப்,
இந்த தலைப்பை, இது போன்ற சமூக பிரச்சனைகளை கொண்ட கட்டுரைகளை நான் வரவேற்கிறேன். ஆனால், பிரச்சனைகளை கண்டு, தான் ஒன்றுமே செய்யாமல், வெறும் புலம்பலோடு, மற்றவரை குற்றப்படுத்துவதைதான் நான் கேள்விகேட்கிறேன்.
போபால் விஷவாயு தீர்ப்பு விஷயத்தில், ஒரு போராட்டம் நடத்த மக்களை கூட்டி சேர்க்க ஒரு விண்ணப்பம் போல ஒரு கட்டுரை அமைந்திருந்தால் பாராட்டி இருப்பேன். பாதிக்க பட்டவர்க்கு நிதி திரட்ட ஒரு வழி கூறியிருந்தால் நன்றாய் இருந்து இருக்கும்.
ஒரு செயலை செய்து, பிறகு அதை உபதேசித்தால் அது நலமாய் இருக்கும். காந்தி, அஹிம்சையை பின்பற்றி பிறகு அதை பிரச்சாரம் செய்ததால், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பாரதியும், வெறும் வார்த்தைகளில் தன் சுதந்திர தாகத்தை காட்டவில்லை, தன் வாழ்க்கையிலும் காட்டியுள்ளார்.
தன்னை சிந்தனாவாதி என்று சொல்லிக்கொள்ளும் திருச்சிக்காரர் ஏன் இதை சிந்திக்கவில்லை என்றே நான் கேட்கிறேன்.
Hard Truth

மக்களை சாதி, மத, இன, மொழி, பிரதேச, …. அடிப்படையில் பிரித்து வைப்பதில் அரசியல் வாதிகள் வெற்றி பெறுவதால், இது போன்ற கொடூர நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் கவலைப் பட வேண்டியதில்லாமல் போய் விடுகிறது.

மக்கள் தங்களின் சாதி, மத, மொழி, இன, பிரதேச… பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு மனிதனாக இணைந்து நியாயத்தின் பக்கம் நிற்க முடிவெடுத்தால் அரசியல்வாதிகளும் மாற வேண்டிய சூழ் நிலை உருவாகும்.

மக்களை நியாயத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டியது சிந்தனையாளர்களின் பொறுப்பு. இதையே சொல்லி இருக்கிறோம்.

மக்களின் சிந்தனைகளை தூண்டுவதே நாம் முன் வைக்கும் தீர்வு.

//ஆனால் அக் கட்டுரைகளுக்கு எல்லாம் பெரும்பாலும் யாரும் பின்னூட்டம் இடுவதில்லை. //
பின்னூட்டாதிர்க்காகதான் கட்டுரைகளா?
சரி சரி.
Hard Truth

என்னை தனிப்பட்ட முறையிலே எப்படியாவது விமரிசிக்க முடியுமா, அதற்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்று முயல்வது போலவே தோன்றுகிறது.

ஒரு எழுத்தாளரின் குறிக்கோளை அறிந்தால் அவர்கள் எழுத்துக்கள் புரிவது சுலபமாகிவிடும். அதற்காக கேட்கப்பட்ட கேள்வியே இது.
உங்கள் புத்திக்கு எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம். அதற்க்கு நான் பொறுபேற்க வேண்டுமா?
Hard Truth

உங்களின் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் அதன் நோக்கத்தையும் புரிந்து கொள்வார்கள்.

போபால் விச வாயு தாக்குதலில் பலியான அனைவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதே என் விருப்பம். போபால் விச வாயுத் தாக்குதல் என்றாலே அந்த பிஞ்சுக் குழந்தையின் முகம் தான் எப்போதும் என்நினைவுக்கு வரும்.மிகக் கொடுமையிலும் கொடுமையான சம்பவம்.

ஆபத்தை ஏற்ப்படுத்தும் தொழிற்ச்சாலைகள் அமைக்க , புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருத்துகளை சோதனை செய்ய, அணு ஆயுதக் கழிவுகளை கொட்ட என பல விசயங்களுக்கு இந்தியா ஒரு குப்பை தொட்டியாகவும், சோதனைச் சாலையாகவும், இந்தியர்கள் சோதனை எலிகளாகவும் பயன்படுத்துவதை உணராத அரசும், அரசை தேர்ந்தெடுத்த நாமும் தான் இந்தக் கொடூர பயங்கர நிகழ்வுக்குக் காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: