Thiruchchikkaaran's Blog

மத நல்லிணக்கம், உலக அமைதிக்கான மிகச் சிறந்த கொள்கை.

Posted on: June 5, 2010


         File:1893parliament.jpg
                      Parliment of Religions, Chicago, 1893
மத நல்லிணக்கத்தின் சாம்பியனாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை முன் வைத்து இந்தக் கட்டுரையை துவக்குகிறோம்.

 //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.

உலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மாகானையும் ஓர் இந்து வழி பட முடியும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம். எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //

(பக்கம் 77, 78, தலைப்பு: இந்திய ரிஷிகள், நூல் : இளைய பாரதமே எழுக அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம் சொற்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர், Speech given at Chennai.)

With this, we can see that Hindus can worship Jesus Christ along with Rama, Krishna , Murugaa…etc. Hindus can worship Allaah also as God in shapless form.

The only difference between Most of the Indians and some of  our other Indian brothers is that  – while many  consider Jesus Christ also an Avathaar of God, some brothers insist that only Jesus Christ has to be considered as God.

We are not  insisting every one to worship the Gods of Hindu Religion / God of Islamic Religion/ God of Zorastrianism…, we are only requesting as  not to have hateredness for other religions, and not to make hate probagation.

 

For this they are becoming angry with me. But we are clear on our principles.

We encourage that Jesus Christ  be worshipped or atleast respected by all in the World.

We encourage that Allah be worshipped or atleast respected by all in the world.

We encourage that Rama, Krishna, Muruga .. be worshipped or atleast respected by all in the world,

We are not insisting anything!

 

As far as those who want to do their own reseach about the existance of god, they can do their experiments, its ok as long as they are not indulging in hate probagation or willful malignation of any God/religion without any reason.

 தங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் என்றும் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் யாரவாது நினைத்தால்,   தங்கள் மதம் மட்டுமே உலகத்தில் இருக்க வேண்டும் என்ற உணர்வு உருவாகி  மனதிலே ஆவேசமும் வெறுப்புமே பொங்கும்.  எனவே நல்லிணக்கத்துடன் வாழ்வதே அமைதிக்கு வழி. 
 
இது விடயமாக சமயப் பேராசிரியர் திரு. பால் நிட்டர் அவர்களின் கருத்து கீழ்வருமாறு:
 
 (Paul Knitter is the Paul Tillich Professor of Theology, World Religions and Culture at Union Theological Seminary in New York.Matthew Weiner is Program Director at the Interfaith Center of New York. )

By Paul Knitter and Matthew Weiner

//In 1893, the Chicago Parliament of World Religions was convened to gather the world’s faiths together for the first time.

The organizers had a subversive message they kept hidden from invited speakers from non-Christian traditions: Christianity is the one true faith. They assumed that if all the faiths had a chance to speak publicly to the world, it would be obvious that Christianity was superior.

But things didn’t go as planned. As it turned out, the Hindu representative  Swami Vivikananda from India stole the show, convincing everyone that Hinduism was as valid a way to worship and experience the divine as any other.

 The state of the world’s religions was changed forever and the interfaith era had its symbolic beginning.//

For complete article,

http://blogs.reuters.com/faithworld/2009/12/08/guestview-faiths-meet-at-parliament-of-world-religions/

எனவே   தங்கள் மதம் மட்டுமே நிலைக்க முடியும் , பிற மதங்கள் பொய்யானவை என்று  நிரூபிக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் செயல் பட்டவர்கள், 1893 ம்  வருடத்திலேயே    அன்பு வழியிலே, அறிவு வழியிலேயே  புரிய வைக்கப் பட்டு விட்டனர்.  பிற மதங்கள் எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு  1893 லேயே ஒரே அடியாக முடிவுக்கு கொண்டு வரப் பட்டு விட்டது.  மத நல்லிணக்கத்துக்கான விதை அப்போதே  ஊன்றப் பட்டு விட்டது.

அமெரிக்கரும், ஐரோப்பியரும் கூட அதை புரிந்து கொண்டு விட்டனர். ஆனால் அந்த நல்லிணக்கப் பாதையை உருவாக்கியவர் எங்கிருந்து சென்றாரோ அந்த நாட்டை சேர்ந்தவர்களே நல்லிணக்கப் பாதையை   அனுசரிக்க விரும்பாததுதான் நம்முடைய துரதிர்ஷ்டம்.

                        

                 swami_vivekananda-1893-09-signed by Scientific Spirituality.

Note: 

Quotes from Swami Vivekaanda’s quotes has been provided in italic slanted letters. Those  sentences  which are  not in slanted letters are not spoken by Swami Vivekanadha.

Those letter in red color are quoted from Mr. Paul Knitter, professor of Theology.

 

Advertisements

13 Responses to "மத நல்லிணக்கம், உலக அமைதிக்கான மிகச் சிறந்த கொள்கை."

//தங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் என்றும் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் யாரவாது நினைத்தால்,//

இப்படி நினைத்து உலகத்தையே ஒரே குடையின் கீழ் ஒரே கடவுளின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று துடித்து உலகமெங்கும் ரத்தக்களரியை உண்டு செய்தவர்களுக்கிடையில் தான் எத்தனை ஜாதிகள் எத்தனைப் பிரிவுகள். அது பற்றி ஒரு அலசல் இங்கே படிக்கலாம்.
http://www.hayyram.blogspot.com

ராம், தங்களின் கருத்து பதிவுக்கு மிக்க நன்றி. எல்லா மதங்களும் நல்லிணக்கப் பாதைக்கு வர உதவி செய்வதே மிகச் சிறந்த பணியாக இருக்கும் என்பதே என் கருத்து. உங்களின் இந்தக் கட்டுரை அந்த வகையில் அமைந்து இருக்கிறதா.

தெரியாது. ஆனால் இந்துக்களில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கின்றன என்று தொடர்ந்து தூற்றிவருபவர்கள் தங்களை எப்படி சமூகத்திலிருந்து மறைத்துக் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே எமது கட்டுரையின் நோக்கம். உண்மைகள் வெளிப்பட்டால் மட்டுமே நன்மைகளை நோக்கி நடக்க முடியும். எனவே முதலில் உணமையைப் பேசுவோம். மற்றபடி நல்லிணக்கம் உண்டாகவேண்டும் என்பதில் எமக்கும் விருப்பமே! ஆனால் ஒருகை மட்டும் ஓசை எழுப்பாதே!

// ஜடாயு (author)
6 June 2010 at 12:03 pm

When the lion of Vedanta roars, the foxes run to their holes என்றார் சுவாமி விவேகானந்தர்.

chillsam என்ற கிறிஸ்தவ மதவெறியரின் துவேஷத்தில் ஊறிய அபத்தக் கருத்துகளுக்கு உறுதியாகவும், அறிவுபூர்வமாகவும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்து சிங்கங்கள்.

நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி //

அன்பு நண்பர்களே, நான் இங்கே எந்த மதப் பிரச்சாரமும் செய்து யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்யவில்லை;

அப்படி செய்திருந்தால் இந்த தளத்தில் என்னுடைய நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை;

ஆனால் தாங்கள் எம்முடைய நம்பிக்கையினை அவதூறு செய்வதற்கு விளக்கமளிக்கவே முயற்சித்தே மீண்டும் மீண்டும் இங்கே நுழையவேண்டியதாக இருக்கிறது;

ஆனால் “தமிழ்ஹிந்து” தன்னை விவேகானந்தரின் வழிவந்தோர் சொல்லிக்கொண்டு செய்துவரும் சூழ்ச்சிகள் சொல்லி மாளாது;

அண்மையில் நான் கொடுத்த சரியான சவுக்கடிக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனர்;

நானோ நிர்வாகத்திலுள்ள ஒரு சிலராவது படிக்கட்டுமே என்ற நப்பாசையில்தான் இருந்தேன்;

தற்போதோ எனது அடுத்தடுத்த பின்னூட்டங்களைத் தடுத்துவிட்டு தனக்குத் தானே தட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது..!

http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/comment-page-2/#comment-14461

என்னப்பா சொல்ல வரிங்க ? முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை வணங்க வேண்டுமா?
//“எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.//
என்ன இது லாஜிக்கே இல்லாத வார்த்தைகள். அவதாரம் என்பதே ஒரு புருடா ! ( ஏசுநாதர் முதல் கொண்டு, கிருஷ்ணன் ,ராமர் எல்லோருமே)
ராம் //நல்லிணக்கம் உண்டாகவேண்டும் என்பதில்// இவருக்கும் விருப்பமாம். எல்லோரும் நம்பிட்டாங்க !

//என்னப்பா சொல்ல வரிங்க ? முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை வணங்க வேண்டுமா?//

இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் கிரிஷ்ணனை வணங்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.

பல முறை சொல்லி இருக்கிறோம். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லத் தயாராக இருக்கிறோம். யாரையுமே நாம் வற்புறுத்தவில்லை. வற்புறுத்துவது என்பவது நாகரீகத்துக்கு எதிரானது. யார் வேண்டுமானாலும் , எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம். பிறரின் வழிபாட்டு முறைகளை வெறுக்காமல் இருந்தால் போதுமானது. அதுதான் முதல் படி, பிறகு மத்த படிகளுக்கு வருவது அவரவர் விருப்பம்.

//மத நல்லிணக்கத்தை கட்டாயப் படுத்தி உருவாக்க முடியாது. அது மனித இதயங்களின் அன்பால் உருவாக்கப் பட வேண்டியது. மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.

பிற மதங்களின் மீது ஒருவருக்குள்ள மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.

அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.

அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.

இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.//

https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/15/religious-harmony/

அவதாரம் என்பது ஒரு புரூடா என்று நீங்கள் கருதலாம். அந்தக் கருத்தை பின்பற்ற உங்களுக்கு உரிமை உண்டு. கடவுள் என்று யாரும் இல்லை என்று கூட ஒருவர் கருதிக் கொள்ளலாம்.

அதே நேரம் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் உலகின் பெருவாரியான மக்களிடையே அவதாரம் என்கிற தத்துவத்தின் மூலம், இந்த உலகிலே கணிசமான மக்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருகிறார்கள். இயேசுவும் கடவுளின் அவதாரம் என்று கருதுபவன் சர்ச்சை சேதப் படுத்த மாட்டான். எனவே இது நல்லிணக்கப் பாதைக்கு உதவுகிறது.

///எனவே தங்கள் மதம் மட்டுமே நிலைக்க முடியும் , பிற மதங்கள் பொய்யானவை என்று நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் பட்டவர்கள், 1893 ம் வருடத்திலேயே அன்பு வழியிலே, அறிவு வழியிலேயே புரிய வைக்கப் பட்டு விட்டனர். பிற மதங்கள் எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு 1893 லேயே ஒரே அடியாக முடிவுக்கு கொண்டு வரப் பட்டு விட்டது. மத நல்லிணக்கத்துக்கான விதை அப்போதே ஊன்றப் பட்டு விட்டது.///

மிகச் சரியான வரிகள்.எவர்கள் கிருஸ்தவ மதம் மட்டுமே உண்மை மற்றவையெல்லாம் பொய் என்று கூற உலகம் முழுதும் பிரச்சாரர்களை அனுப்பி கிருஸ்தவ மதம் பரப்பப்பட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டார்களோ அவர்களே விவேகானந்தர் சொற்பொழிவுகளின் மூலம் இந்து மதத்தின் சிறப்பை புரிந்து கொண்டனர்.ஆனால் இங்குள்ளவர்கள் தான் இன்னும் இந்து தத்துவங்களை புரிந்து கொள்ள வில்லை.அவர்கள் விவேகானந்தரின் நூல்கள் சிலவற்றைப் படித்தால் அவர்களிடம் மாற்றம் ஏற்ப்படும் என்றே கருதுகிறேன்.

// விவேகானந்தர் சொற்பொழிவுகளின் மூலம் இந்து மதத்தின் சிறப்பை புரிந்து கொண்டனர்.ஆனால் இங்குள்ளவர்கள் தான் இன்னும் இந்து தத்துவங்களை புரிந்து கொள்ள வில்லை.அவர்கள் விவேகானந்தரின் நூல்கள் சிலவற்றைப் படித்தால் அவர்களிடம் மாற்றம் ஏற்ப்படும் என்றே கருதுகிறேன். //

விவேகானந்தரை நான் சற்று படித்திருக்கிறேன்; அவருடைய போதனைகளில் கர்மா தியரியும் மறுபிறவிக் கொள்கையும் பேகனிஸ்ம் சார்ந்த கருத்து என்பதால் என்னால் ஏற்கமுடியவில்லை;

சரியானச் சொல்லிச் சமுதாயத்தைச் சரிசெய்ய மகான்கள் அனைவரும் முயன்றனர்;

ஆனாலும் முக்கியமானதை மட்டுமடுத்தியும் சாதாரணமானதை அதிகமாகவும் சொல்லும்போது அதன் வீச்சு குறைந்து போகிறது;

இறைவன் வகுத்துக் கொடுத்த ஆதார சத்தியம் நிச்சயமாக ஒன்றே ஒன்றுதான்;அது எதனுடனும் சமரசம் ஆகாது;

அது எது என்பதிலேயே சர்ச்சை நீடிக்கிறது; அதுவரை எல்லாம் ஒன்றுதான் என்ற சமரசக் கொள்கையில் போவதே பெரும்பான்மையினரின் முடிவாகும்;

ஏனெனில் அன்றாட‌ வாழ்க்கையின் அழுத்தங்கள் அதைவிட முக்கியமானதைப் போன்ற மாயை பரவிவிட்டது.

திரு chillsam அவர்களே,

///ஆனாலும் முக்கியமானதை மட்டுமடுத்தியும் சாதாரணமானதை அதிகமாகவும் சொல்லும்போது அதன் வீச்சு குறைந்து போகிறது;
இறைவன் வகுத்துக் கொடுத்த ஆதார சத்தியம் நிச்சயமாக ஒன்றே ஒன்றுதான்;அது எதனுடனும் சமரசம் ஆகாது///

முக்கியமானது எது?

சாதாரணமானது எது?

இறைவன் வகுத்துக் கொடுத்த ஆதார சத்தியம் எது? இதை அறிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

///விவேகானந்தரை நான் சற்று படித்திருக்கிறேன்; அவருடைய போதனைகளில் கர்மா தியரியும் மறுபிறவிக் கொள்கையும் பேகனிஸ்ம் சார்ந்த கருத்து என்பதால் என்னால் ஏற்கமுடியவில்லை///

நீங்கள் எதையும் ஏற்க வேண்டாம்.இந்து மதத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

இந்து மத வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்துமே விவேகானந்தர் சொற்பொழிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.எதுவும் விடப்படவில்லை.இந்து மதத்தை தெரிந்துகொள்ள மிகச் சிறந்த வழி விவேகானந்தர் புத்தகங்களைப் படிப்பதே.
நீங்கள் இந்து மதத்தை விட கிருஸ்தவ மதம் மேலானது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் இந்து மதத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு,அதைவிட கிருஸ்தவ மதம் மேலானது என்று மதம் மாறியவர்கள் இது வரை ஓருவர் கூடக் கிடையாது.

அதே போல் இந்து மதத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு அதை விட தங்கள் மதமான கிறிஸ்தவம் எப்படி உயர்ந்தது என்று கூறும் ஒரு பிரச்சாரர் ஒருவர் கூடக் கிடையாது.

இந்து மதத்தைப் பற்றிய அடிப்படி அறிவு கூட இல்லாதவர்கள் தான் இது வரை மதம் மாறியிருக்கிறார்கள்.

இந்து மத வழியில் உண்மையான நம்பிக்கையுடன் முயன்று கடவுளை நேரில் காண உணர முடியவில்லையென்று கிருஸ்தவ மத வழியில் முயன்று கடவுளை நேரில் கண்டு, உணர்ந்தவர்கள் யாராவது உண்டா???

உண்மையில் கிருஸ்துவ மதத்தில் சொல்லப்பட்ட வழியும் கூட இந்து தத்துவங்களில் உள்ள ஒன்றே.

முதலில் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டு அதன் பின் உங்கள் கிருஸ்தவ மதம் எப்படி இந்து மதத்தை விட உயர்வானது என்றுப் பிரச்சாரம் செய்வது தானே சரியாக இருக்கும்.?

உங்களுக்கே இந்து மதத்தைப் பற்றி சரியாகத் தெரியாத போது எப்படி அதை உங்கள் மதத்துடன் ஒப்பிட்டு உங்கள் மதம் உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?

//உங்களுக்கே இந்து மதத்தைப் பற்றி சரியாகத் தெரியாத போது எப்படி அதை உங்கள் மதத்துடன் ஒப்பிட்டு உங்கள் மதம் உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்? //

சகோதரரே,நான் யாருடனும் யாரையும் ஒப்பிடவுமில்லை; ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கவுமில்லை; நான் இந்து மதத்தைப் பற்றி அறியாதவனுமில்லை; போதுமா..?

///சகோதரரே,நான் யாருடனும் யாரையும் ஒப்பிடவுமில்லை; ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கவுமில்லை;///

நீங்கள் ஒப்பிட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

///நான் இந்து மதத்தைப் பற்றி அறியாதவனுமில்லை; போதுமா..?///

நீங்கள் கூறுவது முழு உண்மையல்ல CHILLSAM அவர்களே.இந்து மதத்தின் ஆணி வேர் வேதாந்தமே,அத்வைதமே.அந்த வேதாந்தம்,அத்வைதம் இறைவனைக் குறிப்பிடும் “பிரம்மம்” என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பது உங்கள் பின்னூட்டங்களே கூறுகிறது.

// எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே…//

-என்று என் கருத்துக்கு நீங்கள் கீழ்க்கண்டவாறு உங்கள் பின்னூட்டங்களில் கூறியிருந்தீர்கள்.

///கர்த்தரும் அல்லாவும் பிரம்மாவும் ஒருவர் எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது;///- திரு CHILLSAM

///அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?
சிந்தியுங்கள்..!/// – திரு CHILLSAM

நான் குறிப்பிட்டது பிரம்மத்தை.ஆனால் அந்த வார்த்தையைக் கூட அறியாத உங்களுக்கு நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்ட பேரான “பிரம்மா” என்று நீங்களாகவே அர்த்தப் படுத்திக் கொண்டீர்கள்.இதிலிருந்து நீங்கள் இந்து மதத்தைப் பற்றி மேலோட்டமாகவே அறிந்துள்ளீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.

அதற்காகத் தான் கூறுகிறேன்.நீங்கள் இந்து மதத்தைப் பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள் அதற்குப் பிறகு ஒருவன் இந்து மதத்தில் இருப்பது அவனுக்கு நல்லதா? கிருஸ்தவ மதத்தில் இருப்பது அவனுக்கு நல்லதா? என்று தீர்மானியுங்கள்.

நீங்கள் மதம் மாற்றும் ஒருவன் எப்படிப் பட்ட மதத்தைப் சேர்ந்தவன் என்பதை நீங்கள் அறிந்திருப்பது உங்கள் கடமையாகும்.நீங்கள் வேதாந்தத்தைப் புரிந்து கொண்டால் தான் உங்கள் அடுத்தகட்ட விமர்சனம் வேதாந்தத்தை நோக்கி திரும்பும்.அப்பொழுது இன்னும் ஆரோக்கியமான விவாதம் ஏற்ப்படும்.

என்றும் அன்புடன்.

தனபால்.

மதம் தேவை என்பது என் கருத்து. இந்த மதம் தான் ஒசத்தி, மற்றது மட்டம் என்பது கூடாது.

மதம் என்பது “விதிமுறைகள்”, “ஒழுங்கு நிலைப்பாடு”.

சாலையில் விதிமுறை இல்லையென்றால்?
அலுவலகத்தில் விதிமுறை இல்லையென்றால்?
பள்ளி, கல்லூரிகளில் விதிமுறை இல்லையென்றால்?
பேருந்தில், விமானத்தில் விதிமுறை இல்லையென்றால்?
குடும்பத்தில் விதிமுறை இல்லையென்றால்?
மருத்துவமனையில் விதிமுறை இல்லையென்றால்?
அரசு அலுவலகங்களில் விதிமுறை இல்லையென்றால்?

என்னவாகுமோ,

அதே விடை தான் மதம் தரும் விதிமுறைகட்கும், கட்டுப்பாடுகளுக்கும் பொருந்தும்.

People have realized that if a species is vanished from this planet that would adversely affect other creatures. That’s conceived the idea of Diversity. Difference is inevitable and it prevails spontaneously in nature.

Diversification is therefore acceptable, but not the dividend governance between the difference. This in turn shatter the nature. British invaded into the sub-continent (Bharatha Nation as known in scriptures) for trading, then to Evangelize, and later on to conquer. We now face the consequences of their venomous strategies, esp. dividend ruling between ethnic groups.

However, we are not complaining about their religion but the hatred propaganda it carries out on laypeople in rural regions.

The very first thing the locals need to do is to educate the people with Hinduism. And everyone should remember that Hinduism is a name given for the all-alike religious/ spiritual beliefs and doctrines practiced in India, by some Travelers. Because, these people were originated from Indus Valley which gave them a collective name Hindus.
Hence, Hinduism has so many philosophies which sometimes seem to have drastic differences, though they do compromise with each other. For example, Saiva sect has two paths: devotion and wisdom (Sidhars way). This differs from Tantric methods of worshiping. Tribal worships are quiet a differnt from all the above. And Vaishnava branch is totally committed to devotion and krya. Likewise, there are ample amount of ways. THAT IS THE SPIRIT OF LONG SURVIVAL NATURE OF THIS RELIGION. No body knows which region they are attacking. It’s and old Ficus tree and immaturity cannot chop its hundreds or thousands of hanging roots.

I will come soon, yes, with other treats 😉

Cheers,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: