Thiruchchikkaaran's Blog

வெறுப்புணர்ச்சி – விவரிக்க முடியாத அளவுக்கு மிக அபாயகரமானது!

Posted on: May 30, 2010


வெறுப்புணர்ச்சி –   விவரிக்க முடியாத அளவுக்கு மிக  அபாயகரமானது!

வன்முறையை  போலவே அபாயகரமானது, அதை விட அபாயகரமானது வெறுப்புணர்ச்சியும், வெறுப்பு பிரச்சாரமும். 

       Photobucket

நம்முடைய முந்தைய கட்டுரையிலே பின்னூட்டமிட்ட அன்பு சகோதரர் அப்துர் ரஹ்மான் இந்தியன்  அவர்கள் பிற மத வழிப்பாட்டு முறைகளின் மீது வெறுப்பு இருந்தாலும் அதை வெளியே காட்டி குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று எழுதி இருந்தார்.

 //அடுத்த மதத்தவர் கொள்கையை நீங்கள் வெறுத்தாலும் ஒதுங்கி செல்லுங்கள், குழப்பம் விளைவித்து, சண்டையிடாதீர்கள்.//

பிற மதங்களின் வழிபாட்டு முறைகளை எந்த காரணமும் இல்லாமல்  நாங்கள் இகழ்ந்து கண்டிப்போம் என்று “இணக்கமாக” தெரிவிக்கும் சில  நண்பர்களின் கோட்பாடுகளோடு ஒப்பிடும் போது,  திரு.  அப்துர் ரஹ்மான் அவர்களின் கோட்பாடு  பாராட்டுக்குரியது. 

அதே நேரம், நாம் திரு. ரஹ்மானை கேட்டுக் கொள்வது என்ன வென்றால் வெறுப்புக் கருத்துக்கள் வேண்டாம், அவற்றை விலக்கி வைத்து அன்புக் கருத்துக்களைக் கைக் கொள்ளலாம் என்பதே.  ஏனெனில் வெளியில் காட்டப் படாமல் மனதில் அழுத்தி வைக்கப்  பட்டு இருக்கும் வெறுப்புக் கருத்துக்கள் எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெடிக்கும்.

எப்படி நீரிலே அமுக்கி வைக்கப்பட்ட காற்றடைத்த பந்தானது அழுத்தம் குறைந்தவுடன்  வேகமாக நீரின் மேல் பரப்புக்கு வருகிறதோ அதைப் போல,  மறைத்து வைக்கப் பட்ட அழுத்தி வைக்கப் பட்ட வெறுப்பும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்திலே எரிமலையாக வெடிக்கிறது.  

 Photobucket

வன்முறை என்பது இரண்டு பக்கமும் கூரான ஆயுதம். ஆனால் வெறுப்பு கருத்துக்களைப் பரப்புபவர்கள் சைலண்டாக விசக் கருத்துக்களைக் பரப்பி விட்டு தாங்கள் கூலாக சென்று விடுகின்றனர்.

வன்முறையை செய்பவருக்கு என்றைக்காவது ஒரு நாள் தன்னையும் எவனாவது  தாக்கி கொல்லக் கூடும் என்கிற உணர்வு இருக்கும்.

 ஆனால் வெறுப்பு பிரச்சாரகர்கள்  வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பிய போதும், பெரும்பாலான தங்கள் சொந்த அளவிலே எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பி  விடுகின்றனர். எனவே வெறுப்புக் கருத்துக்களைப் பரப்புவதை பயமில்லாமல் செய்யலாம் என்பது சாத்தியமாக இருக்கிறது. அவர்கள விதைத்த வெறுப்பு விஷ விதைகளோ பல்கிப் பெருகி விஷ விருட்சமாகி பல்லாயிரக்  கணக்கான மக்களின் படு கொலைக்கு காரணமாகி விடுகிறது.

                       

          

சுவர்களால் பாதுகாக்கப் பட்ட கோட்டைகளை  ஒத்த வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு,  சுற்றிலும் பாது காப்பாக நம்மைச் சுற்றி பாலிஸ்டிக்  டிபென்சிவ்  மிசைல்களை வைத்துக் கொண்டு  வாழ்ந்தாலும்,  நாம் யாருக்கு எதிராக எந்தத் தீங்கையும் நினைக்காமல் இருந்தாலும், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவராக இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி வந்து நம்மையும்  நமது சமுதாயத்தையும் தாக்கவும் அழிக்கவும் தூண்டக் கூடிய மூலம் ஏதாவது இருக்குமானால் அதில் வெறுப்புணர்ச்சியும் ஒன்று.

எனவே அனைவரும் வெறுப்புக் கருத்துக்களை முழுவதுமாக விலக்கி விடுவது மிக அவசியமாகும். 

நம்முடைய தளத்திலே ‘”நாங்கள் பிற மதத்தவரின் வழிபாட்டை மாத்திரமே வெறுக்கிறோம், பிற மதத்தவரை  வெறுக்கவில்லை” என்று எழுதும் நண்பர்களின் பின்னூட்டங்களைப் பாருங்கள்.

தங்களுடைய மதப் பற்றுக்காக , மத வெறிக்காக போர் செய்வதோ, இன அழைப்பு செய்வதோ பொருட்டல்ல என்கிற அவர்களின்  சிந்தனையை நீங்கள் மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

 திரு . Hard Truth அவர்கள் கடவுளின் பெயரால் இனப் படுகொலைகள செய்யப்படுவது முற்றிலும் சரியானதே என்பதாக  ஒரு உதாரணத்தைக் காட்டி   எழுதி உள்ளதைப்  படியுங்கள்.

Hard Truth, on April 9, 2010 at 22:31 Said:
கடவுள் என்பதற்கு, கிறிஸ்துவர்களின் வேதம் கூறும் தேவனை மையமாக வைத்து எழுதியதற்கு நன்றி. ஏனென்றால் அவரே மெய்யான தேவன்.
ஆனால், அந்த தேவனை பற்றியும், பரிசுத்த வேதத்தை பற்றியும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

//கடவுள் எதற்கு இனப் படுகொலையில் ஈடு பட வேண்டும், இது என்ன காட்டுமிராண்டிக் கருத்தை விட கொடுமையான கருத்தாக இருக்கிறதே என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?//

அனைத்திற்கும் சகல அதிகாரமுள்ள தேவனுக்கு, தான் படைத்ததை அழிக்க உரிமை இல்லையா? மண்ணை மனிதனாய் மாற்றியவர் அந்த மனிதனை மீண்டும் மண்ணாக்க உரிமை இல்லையா?
என்னுடைய கணிப்பொறியில், நான் fileகளை ஆக்குவதும், அழிப்பதும் என் இஷ்டம். ஒரு fileஐ அழிக்க இன்னொரு file programஆக இருக்க செய்யலாம். சில சமயம் கணினி வைரஸ் பாதிப்பு வந்தால் மொத்தமாக சில அழிப்பு வேலைகளும் செய்யப்படும்.Fileகளை அழிப்பதால் எனக்கு அவற்றின் மீது காழ்ப்புணர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை. எனது கணினியும், அவற்றில் இருக்கும் நல்ல விஷயங்களும் காப்பாற்றபடவே நான் இதை செய்கிறேன்.
Will Continue,
Hard Truth

இன்னொரு அன்புக்குரிய சகோதரரோ தனது தளத்திலே மத நல்லிணக்கம் போன்ற வழிமுறைகள் ஒத்துவராது என்றும், கூடவே துரோகிகளை மன்னிக்க முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்.

மனிதரகளின் மேல் தனக்கு எந்த  எந்த வெறுப்பும் இல்லை என கூறுகிறார் திரு. அசோக், ஆனாலும் அவருடைய மதப் பற்று அவரை எந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை பாருங்கள். அதாவது திரு. அசோக் மனிதர்களின்  ஆன்மாவை இரட்சிப்பு வாங்கிக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அதற்காக பெரும் போர்கள் நடத்தப் பட்டு மனிதர்களின் உடல்கள் வெட்டி வீழ்த்தப் பட்டாலும், அதைப் பற்றி தனக்கு கவலை  இல்லை என்கிறார், திரு அசோக். 

எழுபது  வயதில் சாகப் போகிறவன், முப்பது வயித்திலே செத்தால் என்ன , என்கிற அளவுக்கு திரு. அசோக்கின் மதப் பற்று , மத வெறியாகி இருக்கிறது என்பதையே வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம்.  

https://thiruchchikkaaran.wordpress.com/2010/01/20/does-god-exist-2/#comment-319

//Yeah, I love souls of the people than the people. Whether there is war or peace in this world, none of the people is going to live here for ever. Everyone is going to die. But, their souls are important. It is going to live for ever and I want them have a better eternity. Every other thing is secondary.
With Love,
Ashok//

நான் உன் மேல் அன்பு செய்கிறேன், அதனால் அவர்கள்  உன்னை அன்புடன்  கத்தியால் குத்துவார்கள் ,என்று, அன்புடன்  சதக் சதக் என்று கத்தியால் குத்துபவர்களின் சிந்தனைத் தளத்திலே இருக்கிறார் திரு. அசோக்

கொள்கை அடிப்படையிலே சுட்டிக் காட்டி பகுத்தறிவு ரீதியிலே விவாதித்து   இந்தக் கொள்கை இந்த அளவுக்கு பின்னடைவை, வன்முறையை உண்டு பண்ணுகிறது என்று சொல்லலாம்.

ஆனால் எந்த வித காரணமும் இல்லாமல்  என் மதத்திலே வெறுக்க சொல்லி இருக்கிறது அதனால் வெறுக்கிறேன் என்று சொல்பவர்கள்,  வெறுப்பு கருத்துக்களைப் பரப்பி விட்டு தாங்கள் கூலாக சென்று விடுபவர்கள்.

வெறுப்புக் கருத்துக்களை முழுமையாக விட்டு விட்டு ,  அன்புக் கருத்துக்கு வாருங்கள், அவரவர்கள் அமைதியாக வழிப்பாட்டை நடத்துங்கள், பிற மதத்தினரின் வழிபாட்டு முறைகளை காரணமில்லாமல் இகழ்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தி நாடை காடாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.  

 நாம் இந்தக் கோரிக்கையை வைப்பது எல்லா மதத்தினரிடமும் தான்.

Advertisements

8 Responses to "வெறுப்புணர்ச்சி – விவரிக்க முடியாத அளவுக்கு மிக அபாயகரமானது!"

நண்பர் Hard Truth கூறியதில் என்ன தவறு? கடவுள் என்பவர் அனைத்திற்கும் அதிபதி என்றால், அவர் எதை செய்யவும் அவருக்கு உரிமை உள்ளது. திருச்சிக்காரருக்கு, தான்தான் எல்லாம் என்ற இறுமாப்பு, அதனால் இறைவனின் ஆளுமையை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இங்கே நாங்கள் எதை வெறுக்க சொல்கிறோம்… பாவங்களைதானே!!! அதை வெறுப்பதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை நண்பரே?

அன்புடன்,
அசோக்

என்ன திருச்சியாரே,
உங்களால் பதில் அழிக்கமுடியாத விஷயங்களை எல்லாம் வெட்ட ஆரம்பித்து விட்டீரே? உண்மையை ஜீரணிக்க முடியவில்லையோ? உங்கள் மேல், blog நடத்தும் விஷயத்தில் ஒரு மரியாதை இருந்தது இப்போது அதுவும் போய்விட்டது. இதை நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள் என்று தெரியும், இருந்தாலும் என் உள்ளக்கிடக்கையை தெரியவைத்துவிட்டேன்.
அன்புடன்,
அசோக்

நண்பர்களே,

என்னை ஏக வசனத்தில் அழைத்தும், இன்னும் பல வகையிலும் திட்டியும் பலர் எழுதிய பின்னூட்டங்களை நானே இந்த தளத்தில் பிரசுரித்து இருக்கிறேன். அதே நேரம் ஆதாரம் இல்லாமல் சுமத்தும் வீண் பழிகளை பிரசுரிக்க இயலாது. யாராக இருந்தாலும் பொறுப்போடு எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புக்குரிய நண்பர்களே,

நான் எழுதியதில் ஏதாவது தவறு இருந்தால் அதை மேற்கோள் காட்டி , இது தவறு என்று சுட்டிக் காட்டலாம்.

ஆனால் ஆதாரம் இல்லாமல் பழி சொல்லுவதை எல்லாம் பிரசுரித்துக் கொண்டும் அதற்க்கு பதில் சொல்லிக் கொண்டும் இருந்தால் கால விரயம் ஆவதோடு, முக்கிய விடயங்களில் கருத்துக்களில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது.

எனவே தனிப் பட்ட அளவிலே காழ்ப்புணர்ச்சி யின் காரணமாக அனுப்பப் படும் பதிவுகளை வெளியிட அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.

நண்பர்கள் இதைப் புரிதல் செய்து கோட்பாடுகளின் அடிப்படையிலே, கருத்துக்களின் அடிப்படையிலே பதிவுகளை அனுப்பலாம். என்னைத் திட்ட வேண்டும் என்று விரும்பினால், என்றாவது நாம் சந்திக்கும் போது திட்டிக் கொள்ளலாம்.

The prime route and history of Abrahamic religions is hatred and hatred… nothing else. These people in India had been converted into those religions years ago and the converts are doing the business of Vatican and Mecca vigorously than expected. These converts think that their ancestors were from the parts of Jerusalem, Mecca, or somewhere in the Middle-East. This is the tragedy of India. Sometimes, they look pity, amidst their vengeance and hatred. May God bless these “sheep”!!!

நன்றி திரு. athikarvithaa அவர்களே,

athikarvithaa சொல்லும் கருத்துக்களில் உள்ள உண்மைகளைக் கவனிக்கிற அதே நேரத்திலே, எந்த ஒரு மனிதரையும் நாம் வெறுக்க கூடாது, அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் வெறுக்கக் கூடாது. அவர்கள் மனத்திலே புகுத்தப்பட்டுள்ள உள்ள வெறுப்புக் கருத்துக்களை விலக்கி அன்புக் கருத்துக்களை சேர்ப்பதுதான் நமது நோக்கம். எந்த ஒரு நேரத்திலும் வெறுப்புக் கருத்துக்கள் நம் உள்ளத்தில் புக நாம் அனுமதிக்கக் கூடாது.

Athikarvitha,
//These converts think that their ancestors were from the parts of Jerusalem, Mecca, or somewhere in the Middle-East.//
Nice Comedy. How can u give all such false information.
Love,
Ashok

Mr. Asok, if it is a comedy, then do not turn your spears to your own blooded-brothers, who are still Hindus.

The vice-versa would prove that you think or are made to believe strongly that all the converts have inherited from parents of Jerusalem or Nazareth.

Asok, I am sick and tired of answering you, ‘coz you don’t seem to read my words. Pre-maturity or pre-disposed?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: