Thiruchchikkaaran's Blog

ஏழைகளைக் காப்போம் என்பாரடி கிளியே, ஏழைகளைக் கொல்வாரடி…. கிளியே!

Posted on: May 29, 2010


 

மேற்கு வங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு 150 க்கும் மேலான  அப்பாவி மக்கள் பலியாகக் காரணமாக இருந்த மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் விரோத  கொடூர செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.   

 

பணம்,  அதிகாரம், கல்வி   ஆகியவை எந்த அளவுக்கு பரவலாக்கப் படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த சமுதாயம் நாகரீகமான சமுதாயமாக இருக்கும்.  செல்வமும், அதிகாரமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருப்பது நல்லதல்ல, நியாயமுமல்ல.  ஏழைகளுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் நிவாரணம், முன்னேற்றம் ஆகியவை வழங்கப் பட்டு அவர்களை மகிழ்ச்சியுடன் வாழச் செய்வது சமரச, சமத்துவ , நாகரீக சமூகத்தின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று. 

ஆனால் அதற்காக வன்முறை பாதையில் சென்று நாச வேலைகளில் ஈடுபடுவதையோ, தாக்குதல் நடத்துவதையோ அனுமதிக்க இயலாது. 

கம்யூனிசமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ எந்த நேரத்திலே எதை பின்பற்ற  வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான்.

 எப்போது மக்களில் பெரும்பான்மையினர் உணவு கிடைக்காமல் பசியால் வாடுகிரார்களோ , அப்போது அங்கே தானாகவே கம்யூனிசம் உருவாக்கி விடும்.

 எப்போது நாட்டிலே வளமை கொழிக்கிறதோ, அப்போது மக்கள் இன்னும் அதிக வசதிகளைப்  பெறவும்,  சொந்த சொத்துக்களை ஆர்ஜிதம் செய்யவும் முயல்வார்கள். 

எனவே கம்யூனிசமோ, கேபிடலிசமோ சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் எந்த முறை தேவையோ அந்த முறையை உபயோகப் படுத்துவார்கள். 

எனவே எந்த ஒன்றையும் மக்களிடம் வலிந்து திணிக்க வேண்டியதில்லை. அப்படித் திணிக்க வன்முறையை  உபயோகப் படுத்துவதை அனுமதிக்க முடியாது.

 கடந்த சில மாதங்களாகவே ஜார்கண்ட், ஒரிசா,வங்கம் ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறிச் செயலைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை அச்சத்தின் பிடியில் வைத்து இருக்கின்றனர்.

சம்பந்தப்  பட்ட அரசுகளோ பல்வேறு அரசியல்  கணக்குகளைப் போட்டுக் கொண்டு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறிச் செயல்களின் முன் புன்னாகவராளி  பாடுகின்றனர்.

 நிலப் புகுதிகளை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிகார வெறிக்காக அப்பாவி மக்களைப் பலிகடா ஆக்கும் மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் விரோத வன்முறை வெறியாட்டங்களை, நாசகார சதிச்  செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

மெத்தனப்  போக்கைக் கடைப் பிடித்து, மக்களின் அவலத்தி வேடிக்கை பார்க்கும் கையாலாகாத அரசுகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Advertisements

1 Response to "ஏழைகளைக் காப்போம் என்பாரடி கிளியே, ஏழைகளைக் கொல்வாரடி…. கிளியே!"

இதுபோன்ற மென்மையான போக்கை – அதாவது இராணுவத்தைப் பயன்படுத்தி சொந்த நாட்டு மக்களை தாக்கக்கூடாது எனும் தார்மீக மரபை இலங்கை கடைபிடித்திருந்தால் இலட்சக்கணக்கான சொந்தங்களைப் பறிகொடுத்திருக்கமாட்டோமல்லவா?

இலங்கைக்கு ஒரு நியாயம்,இந்தியாவுக்கு ஒரு நியாயமா என்ன?

தமிழரான உள்துறை அமைச்சர் இந்த நியாயத்தை உணர்ந்து இலங்கைத் தமிழருக்காக ஒரு துரும்பையாகிலும் கிள்ளிப் போட்டாரா?

இலங்கையிலுள்ள அத்தனைத் தமிழரும் விடுதலைப்புலிகளா?

தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் பரவாதிருக்க இலங்கைத் தமிழருக்கு இதற்குப் பிறகாவது நியாயம் செய்யப்படவேண்டும்..!

இன்றைக்கு தனி(கூட்டணி)மெஜாரிட்டி கிடைத்ததுமே தனது சுயரூபத்தைக் காட்டத்துவங்கி முக்கியத் துறைகளைத் திராவிடக் கட்சிகளுக்குத் தராமல் தன்வசம் வைத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி நாளைக்கு தமிழகம் காலை வாரினால் எதையும் செய்யும்..!

“தமிழினத் தலைவர்” என்று சொல்லிக்கொள்வோர் பதவிக்காக விலைபோகாமல் குறைந்தபட்சம் வெளியிலிருந்து ஆதரவு என்று அறிவித்து இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்திருக்கலாம்;

தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள் பரவாதிருக்க இலங்கைத் தமிழருக்கு இதற்குப் பிறகாவது நியாயம் செய்யப்படவேண்டும்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: