Thiruchchikkaaran's Blog

சாக்ரடீஸ்

Posted on: May 19, 2010


                        

உலகின் பகுத்தறிவு சிந்தனையாளர்களில் சாக்ரடீஸ் அவர்கள் குறிப்பிட்டு மிக முக்கியமாக சொல்லப் பட வேண்டியவர். நாம்   அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது என்றும் நான் கருதுகிறேன்.

அவருடைய கால கட்டத்திலே, மேலை நாடுகளிலே சிந்தனை என்பது முக்கிய ஒரு செயலாக கருதப் படவில்லை.  பணம் சம்பாதிப்பதும், ஆட்சி அதிகாரங்களை அடைவதும் அதனால் இந்த உலகிலே மகிழ்சியாக வாழ முடியும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற எண்ணம் மாத்திரமே மக்களின் மனதிலே இருந்தது. (இப்போதும்  பெரும்பானமையான   மக்கள்  அப்படியே நினைக்கின்றனர் )

ஆனால் சாக்ரடீஸ் மக்கள தங்கள் அறிவை வளர்த்து மன நிலையை மேம்படுத்திக் கொள்வதே முக்கியம் என கூறினார்.  (மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதே நாகரிக சமுதாயம் அமைக்க மிகச் சிறந்த வழி என்றே நானும் கருதுகிறேன். )

 பல நாட்கள் சாக்ரடீஸ் சந்தைக்கு   செல்வார் ,  அங்கே விற்கப் படும் பொருட்களை உற்று  நோக்குவார்,  பிறகு திரும்பி வந்து விடுவார். 

 ஒரு முறை ஒரு நண்பர் அவரிடம் ”நீங்கள் என்ன செய்கிறீர்கள் , வெறுமனே சந்தைக்கு போய் விட்டு திரும்பி வந்து விடுகிறீர்களே”,  என்று கேட்டார்.

அதற்க்கு சாக்ரடீஸ் பதிலாக “சந்தையில் எத்தனை விதம் விதமான பொருட்கள் இருக்கின்றன, ஆனால் அவை இல்லாமலேயே நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்!”,  என்றார்.

இன்னொரு நண்பர் அதே கேள்வியைக் கேட்ட போது “சந்தையில் எத்தனை பொருட்கள், ஆனால் எதுவுமே எனக்கு அவசியமில்லை!” ,என்று சொல்லி இருக்கிறார்.

மகிழ்ச்சி என்பது மனதிலே தான் இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ்.

ஒரு மனிதன் தவறு செய்வதற்கு காரணம் அவன் அறியாமையே என்பது சாக்ரடீசின் கருத்து.

(தொடரும் )

Advertisements

2 Responses to "சாக்ரடீஸ்"

சாக்ரடீஸ் மிகச் சிறந்த சிந்தனையாளர், மற்றும் உண்மையான பகுத்தறிவுவாதி.

///அதற்க்கு சாக்ரடீஸ் பதிலாக “சந்தையில் எத்தனை விதம் விதமான பொருட்கள் இருக்கின்றன, ஆனால் அவை இல்லாமலேயே நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்!”, என்றார்///

ஆனால் இன்று பலருக்கு பொருட்களே சந்தோசத்தைத் தருகிறது.மொபைல் போன் இதற்க்கு சிறந்த உதாரணம்.மேலும் ,இன்று பலர் சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதையே மகிழ்ச்சியான தருணமாக கருதுகின்றனர்.பல பெண்கள் பெரிய மால்களுக்கு சென்று பொருட்களை வாங்குவது தங்களுக்கு பிடித்த விசயங்களில் ஒன்று என்று கூறுகின்றனர்.அதாவது பொருட்கள் தரும் சந்தோசத்தைவிட அதை வாங்குவது அதிலும் பெரிய பெரிய கடைகளில் (MALL ) வாங்குவது தான் சந்தோசமானது என்ற அறியாமை தற்போது நகரங்களில் வாழும் மக்களிடம் தொடங்கி இருக்கிறது.

///ஒரு மனிதன் தவறு செய்வதற்கு காரணம் அவன் அறியாமையே என்பது சாக்ரடீசின் கருத்து///

இதையே தான் இந்து மதமும் கூறுகிறது.அவன் தானே இறைவனின் அம்சம் என்பதை அறியாமல்,அந்த அறியாமையால் தவறு செய்கிறான்.

நன்றி சகோதரர் தனபால் அவர்களே!

அறியாமையினால் ஒருவன் தவறு செய்கிறான் என்பதே என்னுடைய கருத்தும். முனைவர் கோ.ந. முத்து குமார சுவாமி ஐயா அவர்களும் அதே கருத்தை சொல்லி உள்ளார். என்னைப் பொறுத்த அளவிலே மனிதன் தன்னுடைய மன நிலையை உயர்த்தி தவறு (குற்றம்/ பாவம் ) செய்யாத நிலையை அடைய முடியும்.

தவறு செய்வதே ஆசையினால் உந்தப்பட்டுத்தான். அந்த ஆசையை கட்டுப் படுத்தும் திறன் பெற்றவன் தவறுகள் செய்யாமல் தன்னைத் தானே தடுத்துக் கொள்கிறான்.

ஆசை ஒருவனின் மனம் அறிவை அடைய விடாமல் தடுத்து, அவன் மனதை மயங்க வைக்கிறது.

போட்டி அறிவுக்கும் ஆசைக்கும் தான். அறிவு மேலோங்கினால் ஆசையை அடக்கி விடுகிறான். ஆசை மேலோங்கினால அறிவு மறைக்கப் பட்டு விடுகிறது.

சிந்தனைப் பயிற்சி மூலம் அறிவை வலிமைப் படுத்த இயலும் என்பதே என் கருத்து.

அறிவினால் ஏற்ப்பாட மனவுறுதி ஒருவனுக்கு எது சரி, எது தவறு என்பதை தெளிவாக அறிந்து ஆசையை அடக்கும் மன வலிமையை தருகிறது. விவேகத்தால் உருவான வைராக்கியம், அறிவை மூடி மறைக்கும் அறியாமையை விளக்கி அறிவை பிராகாசிக்கச் செய்யும் நிலையை அளிக்கிறது. இது பகுத்தறிவின் அடிப்படையிலும் புரிதல் செய்து அடையக் கூடிய தத்துவமே.

சாக்ரடீசின் கருத்துக்கள் பற்றி தொடர்ந்து நம் தளத்தில் கட்டுரைகள் வெளியாகும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: