Thiruchchikkaaran's Blog

எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைவுக்கு அஞ்சலி

Posted on: May 18, 2010


புகழ் பெற்ற எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

அனுராதா ரமணன், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய, முற்போக்குச் சிந்தனைகளுடன் கூடிய எழுத்தைத் தந்தவர் அனுராதா.

சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை படைத்துள்ளார்.

சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகியவை திரைப்படங்களாக உருவெடுத்து வெற்றியும் பெற்றன.

பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்டவை தொலைக்காட்சி நாடகங்களாக மாறி புகழ் பெற்றவையாகும்.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார்.

அவரது கணவர் இறந்த போதும் அவர் தனியாக நின்று தன் குடும்பத்தை நடத்தி சென்று இருக்கிறார்.   ஒரு பத்திரிக்கை ஒன்றை நடத்தவும் முறச்சி செய்து இருக்கிறார். வாழக்கையிலே பல சூறாவளிகளை   சந்தித்த அவர், அவரால் முடிந்த அளவுக்கு வாழ்க்கையில் போராடி இருக்கிறார்.

அவரது நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

5 Responses to "எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைவுக்கு அஞ்சலி"

//வாழக்கையிலே பல சூறாவளிகளை சந்தித்த அவர், அவரால் முடிந்த அளவுக்கு வாழ்க்கையில் போராடி இருக்கிறார்.//
அதுல ஒரு சூறாவளிதான் நம்ம ஜெயேந்திரர்
அவரது ஆன்ம சாந்தி அடையட்டும் !

இந்தப் பெண் தொலைந்ததில் எனக்கு நிம்மதி. குறைந்த பட்சம் வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் விவஸ்தை கெட்ட கள்ளத் தொடர்புகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் வேலை முடிக்கப்பட்டது. இனியாவது அந்தப்பத்திரிக்கை அந்தப் பக்கத்தை நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்தும் என்று நம்பலாம். மேலும் அனுராதா சிறை படம்பற்றிய எனது கருத்து இங்கே.

http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

இவர் எழுதிய நாவல்களையோ, சிறுகதைகளையோ படித்ததில்லை.முன்பு வாரமலரில் அவரின் ஆலோசனைகளைப் படித்திருக்கிறேன்.அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

திரு ராம் அவர்களே,

///இந்தப் பெண் தொலைந்ததில் எனக்கு நிம்மதி.///

உங்களுக்கு எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது கோபம் இருக்கலாம்.அது உங்கள் சுதந்திரம்.அதற்காக இறந்துவிட்ட ஒருவரை இவ்வாறு கூறுவது உங்கள் பெயருக்கும் (ராம்), உங்கள் பெயரிலிருந்து விரியும் உங்கள் பகுத்தறிவு(இந்து ஆன்மீக) தளத்திற்கும் அழகல்ல.

உங்கள் தளம் அருமையான ஆன்மீகத் தளமாக நன்றாக உள்ளது.

//உங்களுக்கு எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது கோபம் இருக்கலாம்// கோபம் இல்லை. ஏதோ ஒரு அருவெறுப்பு. முறையற்ற உறவுகளுக்கும் கேவலமான நடத்தைகளுக்குமெல்லாம் அவர் எழுதிய சப்பைக்கட்டு பதில்களும் சீ என்று தோன்றிவிட்டது. வாரமலர் நல்ல வாழைஇலையில் சோறு போட்டு ஓரத்தில் மலத்தை ஒரு கை வைப்பது போல இப்படி ஒரு பத்தியை வைத்திருந்தது நீண்டகாலமாக எனக்கு உறுத்தலாகவே இருந்தது.அது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் கருத்திற்கு நன்றி தனபால்.

Leave a reply to ram Cancel reply

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 45 other subscribers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09