Thiruchchikkaaran's Blog

பிராமணனை டி. வீ சீரியலில் தேடிப் பயனில்லை, நீங்களே பிராமணராக முடியும்! பகுதி- 1

Posted on: May 11, 2010


Title: பிராமணனை டி. வீ சீரியலில் தேட வேண்டாம், நீங்களே பிராமணராக முடியும்.

பிராமணன் என்று சொல்லப் படுபவன் யார்,  அவன் எப்படிப் பட்டவன் என்று அவ்வப் போது பல விளக்கங்கள் கொடுக்கப் பட்டு வருகின்றன. இது பற்றிய நம்முடைய பார்வையை இந்தக் கட்டுரையின் வாயிலாக முன் வைக்கிறோம்.

நாம் இந்தக் கட்டுரையின் எழுதுவதற்க்கான முக்கியக் காரணம் என்ன வென்றால், இனி பிராமணன் என்கிற வாழ்க்கை முறையை வாழவே முடியாது என்பது போல பலர் எழுதி வருகின்றனர். இந்த பிராமணன் என்று சொல்லப் படுபவன் பற்றிய சரியான  புரிதல் அவசியம் என நான் நினைக்கிறேன். 

பிராமணன் என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும் ஒரு தகுதி என்பதை நான் இங்கே திட்டவட்டமாக மறுக்கிறேன் என்பதை முதல் பதிவாக இந்தக் கட்டுரைக்கு இடுகிறேன்.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரும், அவர்களின் வாரிசுகளும் பிராமணர்கள் என்று சொல்லப் படுவதை நான் முழுமையாக  நிராகரிக்கிறேன்.

எந்த ஒரு மனிதனும், சில குறிப்பிட்ட குண நலன்களும் செயல்பாடுகளும் உடையவராக இருந்தால் அவன் பிராமணன் எனக் கருதப் பட முடியும்,  என்பதாகவே நான் கருதுகிறேன். அவை பற்றி முதலில் ஆராய்வோம்.

பணம் சம்பாதிப்பதை தன் வாழ்க்கையின் முக்கியக் குறிகோளாகக் கொள்ளாமல் எல்லா மக்களின் நன்மைக்காக பாடுபடுதல்!

 

இதுவே பிராமணன் என்று கருதப் பட வேண்டியவன் பெற்று இருக்க வேண்டிய முக்கிய குணம் ஆகும்.  இதையே வள்ளுவர்,

” அந்தணர் என்பர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்

 செந்தண்மை பூண்டொழு கலான்”

என்றார்.

சுவாமி விவேகானந்தர், 

 ” பிராமணன் தன்னுடைய பண்பாட்டையும் , அறிவையும் கொடுத்து எல்லா சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகப் பாடு பட வேண்டும். அப்படி இல்லாமல் காசுக்காக அலைந்து திரிபவன் பிராமணன் இல்லை”

 என்கிறார்.  

                       

மகா பாரதத்திலே ஒரு குறிப்பு உள்ளது.

தரும ராசன் ஒரு பெரிய யாகத்தை முடித்துவிட்டு, தான தருமங்கள் செய்து கொண்டு இருந்தானாம்! அவன் பிறருக்கு தானங்களை வழங்கிய போது பல தங்க நாணயங்கள், தரையில் சிதறிக் கிடந்தனவாம்.

 அப்போது ஒரு கீரிப் பிள்ளை (Mangoose) அங்கே ஓடி வந்ததாம். அந்த கீரிப் பிள்ளையின் முதுகின் ஒரு பாதி தங்கமாக மின்னியதாம்! அந்த கீரிப் பிள்ளை கீழே விழுந்து கிடந்த தங்க காசுகளின் மேல் புரண்டதாம். அதைப் பார்தது வியந்த தருமன், “உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டானாம்!

 

அதற்க்கு அந்தக் கீரி, “நான் காட்டில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடத்திற்க்கு அருகில் ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் மிகவும் வறுமையில் வாடினார்! அந்த வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகி விட்டன! அந்த அந்தணர் சிரமப்பட்டு சிறிது தானியம் சேகரித்து வந்தார். அந்த தானியத்தைக் குற்றி மாவாக்கி, 4 உருண்டைகள் பிடித்தனர்.

அப்போது ஒரு விருந்தாளி (முன்பு அறிமுகம் இல்லாதவர்) அவர் வீட்டுக்கு வந்தார். அவரின் பசிக்கு உணவாக, அந்த அந்தணர் தான் உண்ண வைத்து இருந்த மாவு உருண்டையைக் குடுததார். கணவன் உண்ணாததால், மனைவியும் தன் பங்குக்கு இருந்த உருண்டையை விருந்தாளிக்கு குடுததார் . அப்படியே அவரின் மகனும், மருமகளும் குடுத்து விட்டனர். அந்த விருந்தினர் பசி தீர்ந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

 அன்று இரவு, அவர்கள் நால்வரும் பசிக் கொடுமையால் இறந்து விட்டனர்!

 நான் (கீரி) அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது, அந்த விருந்தினர் உண்ட போது கீழே விழுந்த மாவில், நான் விழுந்து விட்டேன். அந்த மாவு பட்டு என் முதுகின் ஒருபுறம் தங்கமாக மின்னியது! நீ பெரிய தருமவான் என்று எல்லோரும் சொல்வதால், என் முதுகின் மறு பகுதியை தங்கம் ஆக்க நினைத்து, உன் தானத்தில் சிதறிய பொருளின் மீது புரண்டேன். ஆனால் உன் தானம் அவ்வளவு சிறப்பு இல்லை. என் முதுகு தங்கம் ஆகவில்லை” என்று கூறி சென்று விட்டது!

மாவு பட்டு முதுகு தங்கம் ஆகுமா? இது நடக்கக் கூடியதா? இது பகுத்தறிவா? ஆனால் கடும் பசி நேரத்தில், தான் உண்ண வைத்திருந்த உணவை, விருந்தாக வந்தவருக்கு வழங்குவது நடக்கக கூடியதே! கீரிப் பிள்ளை கதை நிஜமோ, கட்டுக் கதையோ- ஆனால் மற்றவரின் நன்மைக்காக, தான் தியாகம் செய்வது- எல்லோராலும்,வாழ்த்தப் பட வேண்டிய, பின்பற்றப் பட வேண்டிய வாழ்க்கை முறை என்று சொல்லுவதில் பகுத்தறிவுக்கு ஏற்ப்புடையதுதான் !

இவரையே வள்ளுவர்

“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”
என்றார்!

இப்படிப் பட்ட மனிதர் – அவர் பூணூல் அணிந்தாலும், அணியாவிட்டாலும், வேதம் ஓதினாலும், ஓதாவிட்டாலும், எந்தத் தொழில் செய்தாலும், எந்தக் குலம் என்று கூறப்பட்டாலும், அவர் உண்மையில் பிராமணர்தான்!

கீரிப் பிள்ளை கூறிய பிராமணரரின் சிறப்பு, அவரின் ஒழுக்கம் நல்ல எண்ணம், தியாகம் இவைதான்- அவருடைய பிறப்போ, கல்வியோ, அறிவோ அல்ல!! கீரிப் பிள்ளை கூறிய பிராமணரும், அவரின் வாழ்க்கை முறையும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ, ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, உரிமை இல்லை. அவர் நம் அனைவருக்கும் சொந்தம்! யார் வேண்டுமானாலும் அவரைப் போல வாழ முயற்சி செய்யலாம்!!

இவர் போன்றவரைத் தான் வள்ளுவர்

” அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கன்றி

பிறவாழி நீத்தல் அரிது”

என்றார்!

எனவே தலையில் குடுமி வைத்துக் கொள்வதோ, நெற்றியிலோ வீபூதியயோ, நாமத்தையோ அணிவதும், பஞ்ச கச்சம் கட்டிக் கொளவதும் ஒருவனை பிராமணன் ஆக்கி விட முடியாது. 
சுயநலமற்ற செயல் பாடே ஒருவனை பிராமணன் ஆக்குகிறது.
(தொடரும்)
Advertisements

26 Responses to "பிராமணனை டி. வீ சீரியலில் தேடிப் பயனில்லை, நீங்களே பிராமணராக முடியும்! பகுதி- 1"

Nice Article. But, why does someone has to become a brahmin?

Hard Truth.

A good start about who is a Brahmin, also the new design of your blog is very much attractive. In-fact Swami Vivekananda wants everyone should become Brahmin. But to-day even the so called hereditary Brahmins are leading life like a Sudara wearing the cross thread for the name sake and lost all the respect in the society. Why & How is a waste of argument and there is no need for it also. Particularly in Tamilnadu Brahmin is a hate word and nobody wants such identification any more in the society.

Your story is very nice but in practical life it is impossible to-day. We are now living in a satellite age and not bullock cart era. Erasing the cast system in Hindu society is practically not possible and I am also not against it. It is a private affair and to be discussed only in their family circle and not in public.

When all the Varna identification is lost in the society to-day except Brahmin. Let this also vanish in thin air like other Varna. We will all work together to built a harmonize Hindu society.

Here is a nice story :-
One day a rich merchant was ridding on his camel to a far away place to market his product. Since it was too dark & cold unable to proceed further. In an open place he installed a small tent to take rest and parked the camel with a rope outside the tent. After a few hours he notices some noise and shaking of the tent. With the help of candle he could see the camel nose poking inside the tent gap. The human natured man allowed it and continued his sleep. Again after some time similar sound was heard and with the help of candle he could see the entire neck of the camel was inside the tent. Since he is honest human again allowed the camel neck inside the tent. When he woke up in the morning to his surprise he was out side the tent and sensed the snoring sound of the sleeping camel inside the tent comfortably.
This is the exact state of Hindus in India to-day. Islam came to India way of front door, Christians came to India way of back door and now they are dictating terms for the house owner.

Dear Mr. Vedam Gopal,

I thank you for having read the articles and registered your comments as well.

//A good start about who is a Brahmin, also the new design of your blog is very much attractive. //

I Thank you again, sir.

//In-fact Swami Vivekananda wants everyone should become Brahmin. //

Exactly, you have quoted apltly.

//But to-day even the so called hereditary Brahmins are leading life like a Sudara wearing the cross thread for the name sake and lost all the respect in the society. //

This is also true. But the Concepts Bhramin and Sudra are to be understood clearly. There is some sort of Bhraminical way in evey man’s thinking and behaviour. There is some sort of Sudra type behaviour in every mans thinking and behvaiour. Any one can invrease Bhraminical Behaviour. Hence No one is a Sudra.

//Particularly in Tamilnadu Brahmin is a hate word and nobody wants such identification any more in the society.//

Earlier the Bhramins were respected and praised , because they behaved like Bhramins. Later they were more looking intro the swelfare their own (I mean each person themselves), but still claimed to be a Bhramin brought them abuse only.

But in my opinion, a person mantle the Bhraminical living not to get respect, but out of love for all the livingsd, and a real Bhramin would never shy away from his duty & way of living, fearing the abuses!

//Your story is very nice but in practical life it is impossible to-day. We are now living in a satellite age and not bullock cart era. Erasing the cast system in Hindu society is practically not possible and I am also not against it. It is a private affair and to be discussed only in their family circle and not in public.//

I think Bhraminical way of living is more require in satellite era, and I think it is possible. We will discuss about this in upcoming articles. Similaraly, whether any one likes or not, the caste system is vanishing in our soceity , slowly but steadily.

//This is the exact state of Hindus in India to-day. Islam came to India way of front door, Christians came to India way of back door and now they are dictating terms for the house owner//

A Bhramin is always kind herated, like so every hindu shall have kindness only for the brothers following other religions also. Hinduism does not condemn any other religion, in fact have amotherly look at other religions.

Unfortunately many of the religions were misunderstood and wrongly probagated. We will explain the true principles behind every religion.

I am sure that as it is written in Geetha, Athveshta (without hatredness), Sarva bothaanam maithra ( friendly with all livings) , you will really save and protect any man even if he follows the Abrahamic religin, and every hindu woud do the same,

திரு திருச்சிக்காரர் அவர்களே,

உங்கள் தளம் புதிய வடிவில் காண்பது நன்றாக உள்ளது.பிராமணன் என்பது குணத்தால்,ஒழுக்கத்தால் வருவது என்ற கருத்து நன்றாக உள்ளது.கட்டுரையின் தலைப்பு சோவின் எங்கே பிராமணன் தொடரை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.நான் இந்த தொடரை அத்திப் பூத்தார்ப்போல் எப்பொழுதாவது பார்ப்பேன்.சோவும் உங்கள் கருத்தைக் கூறுவதாகவே நான் நினைக்கிறேன்.ஒரு வேலை நான் நினைப்பது தவறாகக் கூட இருக்கலாம்,ஏனென்றால் மேற்ப்படி தொடர் நான் 95 %.பார்ப்பதில்லை.

தரும ராசன் ஒரு பெரிய யாகத்தை…………………“உனக்கு என்ன வேண்டும்? நீ யார்?” என்று கேட்டானாம்! மேற்கண்ட பகுதி இரண்டு முறை பதியப்பட்டுள்ளது.சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.

தல வேதம்கோபால் , புத்திய காட்டுறியே தல. இங்கு முஸ்லிம்களும் , கிருத்துவர்களும் இந்தியர்களே, இந்நாட்டு மக்களே. உங்க கொடுமை தாங்காம மதம் மாறியவர்களே . முஸ்லிம் மதத்தை சேர்ந்த பாரசீகர்களும், கிருத்துவ மதத்தை சேர்ந்த வெள்ளைகாரர்களும் வந்ததால் ஆட்சி புரிந்ததால் , இப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம் கிருத்துவ மக்களை பாரசீகர்களாகவும், வெள்ளையர்கலாகவும் பார்ப்பது உமக்கே கேவலமாக தெரியவில்லையா.இப்படி செய்து கலவரம் வரவேண்டும் அதான தல உன் ஆசை. இது தமிழ்நாடு குஜராத் அல்ல ..

திரு. பிரதீப் அவர்களே,

இந்தியா என்பது எல்லா மக்களுக்குமான நாடே. இசுலாமியர், கிறிஸ்தவர் உட்பட ஒவ்வொரு இந்தியனுக்கும் முழுப் பாதுகாப்பு , சம உரிமை, அந்தஸ்து வழங்கப் பட வேண்டும் என்பதோடு, அவர்களை சகோதர நண்பர்களாக கருத வேண்டும் என்பதுதான் நமது கொள்கை தல. இந்தியாவில் பெரும்பாலான இந்துக்களின் கருத்தும் அதுவே.

அதே நேரத்தில் கணிசமான கிறிஸ்துவர்களும், இசுலாமியர்களும் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதையும், பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்வதையும், பிற மதங்களை புரிந்து கொள்ளாமலே கனடனம் செய்வதுமாக இருப்பதை நீங்கள் கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் தல?

இவர்களின் மத சகிப்புத் தன்மை இல்லாத போக்கும், பிற மதங்களின் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வதுமாக உலகிலே சிலுவைப் போர்கள் முதல் ஈராக் போர்கள் வரை பல கோடி மக்களின் தாலியை அறுத்ததற்கு உங்கள் பதில் என்ன தல?

நம்முடைய தளம் மத நல்லிணக்க , சமத்துவ சமூக, சமரச தளமே.

ஆனால் உங்கள் நோக்கம் என்ன? மத நல்லிணக்கமா? அல்லது அல்லது பிற மதங்களின் மீது வெறுப்பு பிரச்சாரத்திக் கட்டவிழ்த்து விடுபவருக்கு மவுன சம்மதம் அளிப்பதா? – இதை தெளிவாக சொல்லு தல.

நம்முடைய தளத்திலேயே இந்து மத தெய்வங்களை இகழ்ந்து எழுதியும், அப்படித் தான் எழுதுவோம், ,அதனால் சமூகங்களுக்கு இடையிலே மோதல் வந்தாலும் பரவாயில்லை என்ற வகையிலே பல பின்னூட்டங்கள் உள்ளனவே. அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?

மத நல்லிணக்க அடிப்படையிலே நான் சர்ச்சிலே வந்து பிரார்த்தனையில் கலந்து கொள்ளவும் , ரமதானில் நோன்பு நோற்று மசூதியில் தொழவும் தயார். என்னுடன் இன்னும் பல இந்துக்களை அழைத்து வரவும் தயார்.

பிற மதத்தவரின் மத நல்லிணக்கத்துக்கு எதிரான , அமைதியைக் குலைக்கும் இகழ்ச்சிப் பேச்சுகளை, அவர்களின் மனதில் உள்ள வெறுப்பு எண்ணங்களை நீக்கி , அவர்களை மனிதத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணியில் நேர்மையாக ஈடுபட நீங்கக் தயாரா தல?

அப்படி நீங்கள் உண்மையிலே மனிதத்தைக் காக்கும் பணியில் நேர்மையான நோக்கம் உடையவராக இருந்தால் திரு. வேதம் கோபால் அவர்களை மட்டும் கண்டித்து விட்டு மற்றவர்களை திருத்த முயலாமல் பின் வாங்குவது ஏன் தல?

திருச்சிகார நண்பா, ஏன் ??? நான் இந்துமத நம்பிக்கையாலனே . நான் மசூதியிலையோ, சர்ச்சிலையோ வழிபாடு நடத்த தயாராக இல்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவர்கள் நம்பிக்கை , இது என் நம்பிக்கை.இந்து மதத்தில் வேதம்கோபால் போலவே முஸ்லிம் ,கிருத்துவ சமயத்திலும் சில பேர் உள்ளனர். அவர்களை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை. அவர்கள் கூட மத ரீதியில் எற்றுகொள்ளாவிட்டலும் , இந்துக்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றோ , சொல்லவில்லை இந்த வேதம்கோபால் போல. இந்த இந்துத்துவ அமைப்புகள் நாட்டில் கலவரத்தை தூண்டவே நடத்தபடுகின்றன. பல குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது போல் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது.நண்பர் hardtruth கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் அதிகமாக அவருக்கு அதிகமாக பதில் சொல்வதால் நான் அங்கு சொல்லவேண்டிய தேவை இல்லை. வேதம் கோபால் போன்ற கலவரக்காரர்கள் தான் மிக ஆபத்தானவர்கள். அவரின் வெறுப்பு கருத்துக்கு உங்கள் பதில் சரியில்லையே. அதான் நாம் சொல்லவேண்டியதாகிறது.

திரு . பிரதீப் அவர்களே, நீங்கள் //நான் இந்துமத நம்பிக்கையாலனே . நான் மசூதியிலையோ, சர்ச்சிலையோ வழிபாடு நடத்த தயாராக இல்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது அவர்கள் நம்பிக்கை , இது என் நம்பிக்கை// என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.

நீங்கள் சர்ச்சிலோ , மசூதியிலோ பிராத்தனை நடத்த தயாராக இல்லாவிட்டாலும், இயேசு கிறிஸ்துவையோ அல்லாவையோ இகழ மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நான் இப்போது உங்களை சர்ச்சுக்கோ, மசூதிக்கோ வந்து தொழ வேண்டும் என வலியிருத்தவில்லை.

கணிசமான எண்ணிக்கையில் குறிப்பிட்ட சில மதத்தவர்கள், எந்த வித அடிப்படையும் இல்லாமல் இந்து மத தெய்வங்களை இகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்க்கு ஆதாரமும் இருக்கிறது. அவர்கள் நாங்கள் அப்படித்தான் இகந்து பேசுவோம் , அதனால் மோதல் வந்தாலும் வரட்டும் என்கிற அளவிலே செயல் பட்டு வருகின்றனர். மத உணர்வானது அந்த அளவுக்கு அவர்களை ஆக்கி உள்ளது.

இதை நான் தெளிவாக எடுத்து சொல்லியும் நீங்கள் அவர்களைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது ஏன்?

இப்படி பிற மத்தவர் இந்துக்கள் தெய்வங்களாக வணங்குபவர்களை இகழ்வது தான், இந்து மதத்திலும் தீவிரவாத போக்கை உருவாக்குகிறது. நீங்கள் உண்மையிலே நடுநிலையாளராக இருந்தால் மீண்டும், மீண்டும் திரு, வேதம் கோபால் அவர்களைக் கண்டிப்பதோடு நில்லாமல் , பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்ந்து , சமூகங்களுக்கு இடையிலே மோதல் போக்கை உருவாக்குபவரை தெளிவாகக் கண்டிக்க வேண்டும்.

அதோடு மற்ற மதத்திலும் ஏதோ ஒரு சிலர் என்று அப்படி இருக்கக் கூடும், அவர்களை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை, என்று அவர்களுக்கு ஒரு வகையான ஆதரவையும் அளிக்கிறீர்கள்.

நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்துக்கள் அப்படி இருக்க மாட்டார்கள். எனவே சும்மா இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களை உசுப்பி விட்டு வம்புக்கு இழுப்பது போல அவர்களின் தெய்வங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

இதைப் பார்த்தால் உங்கள் கருத்து என்னவென்றால் இந்து மதத்தவர் மட்டும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், பிற மதத்தவர்கள் இந்து மத தெய்வங்களை இகழ்ந்தால் அது பரவாயில்லை என்பது போலவே உங்கள் எண்ணப் போக்கு காணப் படுகிறது.

ஆனால் நீங்கள் மத நல்லிணக்கத்திற்கு முயலும் எங்களைப் போன்றவர்களை ஆர்.எஸ். எஸ். என்று முத்திரை குத்தி லூசு, பித்துக் குளி என்று எங்களை ஏற கட்ட முயற்ச்சி செய்கிறீர்கள்.

//அவரின் வெறுப்பு கருத்துக்கு உங்கள் பதில் சரியில்லையே. அதான் நாம் சொல்லவேண்டியதாகிறது//

போல்டு எழுத்துக்களிலே மிக தெளிவாக முன்னமே தெரியப் படுத்தி இருக்கிறேன்.

திருச்சிக்கார நண்பா,
//இதை நான் தெளிவாக எடுத்து சொல்லியும் நீங்கள் அவர்களைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது ஏன்?/
அதான் சொன்னேனே ஏற்கனவே ,அந்த மதங்களிலும் இருகிறார்கள் கலவரகாரர்கள் என்று. எனக்கு தெரிந்து இந்துக்களுடன் அவர்களுக்கு விரோதம் இல்லை. பிராமணர்கள் தான் விரோதம் கொள்கின்றனர் மற்ற மதத்தவருடன் , அனால் ஒட்டு மொத இந்துக்கலுமே அவர்களை போல் எண்ணம் உடையவர்களாக காட்டுகின்றனர். அப்படி அவர்களை அறியாமலேயே அவர்கள் காட்டி கொள்வதால் தான் பிராமணர்கள் மட்டும் தனியாக தெரிகிறார்கள். அவர்கள் எழுத்தே அவர்களை அடையாளம் காட்டும் அளவுக்கு.
//இப்படி பிற மத்தவர் இந்துக்கள் தெய்வங்களாக வணங்குபவர்களை இகழ்வது தான், இந்து மதத்திலும் தீவிரவாத போக்கை உருவாக்குகிறது. நீங்கள் உண்மையிலே நடுநிலையாளராக இருந்தால் மீண்டும், மீண்டும் திரு, வேதம் கோபால் அவர்களைக் கண்டிப்பதோடு நில்லாமல் , பிற மதத்தவரின் தெய்வங்களை இகழ்ந்து , சமூகங்களுக்கு இடையிலே மோதல் போக்கை உருவாக்குபவரை தெளிவாகக் கண்டிக்க வேண்டும்//
நான் கலவரகாரர் எல்லோரையுமே கண்டிக்கிறேன். மற்ற வீட்டில் நடக்கும் தப்பை விட என் வீட்டில் நடக்கும் தப்பை தான் நான் அதிகமாக கண்டிப்பேன். எச் ராஜா ,ராமகோபாலன் ,அசோக் சிங்கள் பேச்சுக்களை கேட்டதில்லையோ.
//ஆனால் பெரும்பாலான இந்துக்கள் அப்படி இருக்க மாட்டார்கள். எனவே சும்மா இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களை உசுப்பி விட்டு வம்புக்கு இழுப்பது போல அவர்களின் தெய்வங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை. //
இதுதான் இந்துத்துவ பிரச்சாரம் , உங்கள் எழுத்து உங்களை காட்டி கொடுகிறது. யாரும் உசிப்பி விடவில்லை. hard truth போல சிலர் இருப்பது உண்மை தான். அவருக்கு தேவையான பதிலடியை நீங்கள் கொடுத்தால் நான் அங்கு எழுதவில்லை. தெளிவாக அவரை கண்டிக்கிறேன்.
//

A Bhramin is always kind herated, like so every hindu shall have kindness only for the brothers following other religions also. Hinduism does not condemn any other religion, in fact have amotherly look at other religions.

Unfortunately many of the religions were misunderstood and wrongly probagated. We will explain the true principles behind every religion.

I am sure that as it is written in Geetha, Athveshta (without hatredness), Sarva bothaanam maithra ( friendly with all livings) , you will really save and protect any man even if he follows the Abrahamic religin, and every hindu woud do the same,//

இது தான் கண்டிப்பா உங்க மொழியில். ஏன் இந்த soft corner வேதா கோபால் மேல…

//அதான் சொன்னேனே ஏற்கனவே ,அந்த மதங்களிலும் இருகிறார்கள் கலவரகாரர்கள் என்று. எனக்கு தெரிந்து இந்துக்களுடன் அவர்களுக்கு விரோதம் இல்லை. பிராமணர்கள் தான் விரோதம் கொள்கின்றனர் மற்ற மதத்தவருடன் , அனால் ஒட்டு மொத இந்துக்கலுமே அவர்களை போல் எண்ணம் உடையவர்களாக காட்டுகின்றனர். அப்படி அவர்களை அறியாமலேயே அவர்கள் காட்டி கொள்வதால் தான் பிராமணர்கள் மட்டும் தனியாக தெரிகிறார்கள். அவர்கள் எழுத்தே அவர்களை அடையாளம் காட்டும் அளவுக்கு.//

இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். இதை ஆதாரத்தோடு விளக்க இயலுமா? எனக்குத் தெரிந்து பல பிராமணர்கள் அப்படி இல்லையே!

//சும்மா இருக்கும் பெரும்பான்மையான இந்துக்களை உசுப்பி விட்டு வம்புக்கு இழுப்பது போல அவர்களின் தெய்வங்களை இகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை. //
இதுதான் இந்துத்துவ பிரச்சாரம் , உங்கள் எழுத்து உங்களை காட்டி கொடுகிறது. யாரும் உசிப்பி விடவில்லை. //

இது என்னைக் காட்டிக் குடுக்கிறது என்பதை விட உங்களைக் காட்டிக் குடுக்கிறது என்பதே பொருத்தமானது.

இது நீங்கள் ஒரு தலைப் பட்சமாகப் பேசி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள் என்பதி தெளிவாக்குகிறது.

நான் சந்திக்கும் பிராமணரல்லாத இந்துகள் பலரும் கூட என்னிடம் , “பிற மதத்தவர் இந்து மத தெய்வங்களைக் குறிப்பிட்டு இகழ்கின்றனர் , இது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது” என்று தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் வந்து எங்களுடைய கடவுள் மட்டுமே ஜீவனுள்ள கடவுள், உங்களுடைய கடவுள் (பெயரைக் குறிப்பிட்டு) ஜீவனில்லாதது என்று தெரிவித்தாகவும் சொல்கின்றனர். எனவே நான் சொல்லுவது உண்மையே. மோதல் வேண்டாம் என்று தான் நான் பிரச்சாரம் செய்கின்றார். எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இகழ்வது பூசல்லை உருவாக்குகிறது என்கிற உண்மையை தான் சொல்கிறோம்.

இந்து மத தெய்வங்களை மட்டும் அல்லாமல் பிற மத தெய்வங்களான இயேசு கிறிஸ்துவையும், அல்லாவையும் கூட இகழக் கூடாது என்பதையே நான் சொல்லி வருகிறேன். இதுதான் இந்துத்துவமா, இந்துத்துவ பிரச்சாரமா அப்படி என்றால் அது நல்ல தத்துவமே.

இயேசு கிறிஸ்துவை சிலர் இகழ்ந்த போது, நான் தனியனாக இருந்து அது தவறு என்று போராடி இருக்கிறேன். அதற்காக என்னைப் பலர் கிரிப்டோ கிறிஸ்தவன் என்று சொல்லியும் இருக்கின்றனர். அதாவது நாகரிக நல்லிணக்க சமுதாயம் அமைக்க முயன்றால் ஒரு சிலர் என்னைக் கிரிப்டோ கிறிஸ்துவன் என்கின்றனர். இது விடயமாக வேறொரு தளத்திலே நான் இட்ட பின்னூட்டங்கள், இப்போதும் உள்ளது.நீங்கள் உங்களை காட்டி கொடுகிறது என்று எழுதுகிறீர்கள், சிலர் என்னைக் கிரிப்டோ கிறிஸ்தவன் என்கின்றனர். காழ்ப்புணர்ச்சிக் அடிப்படையில் என் மீது குறை கூறப் பட்டால் அதற்க்கு அஞ்சி, மத வெறியினை விலக்கி , மத நல்லிணக்கத்தை உருவாக்கும் பணியில் பின் வாங்க மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. Hard Truth நேரடியாக இந்து தெய்வங்களைத் தாக்கி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் தான் வணக்கும் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்ற நம்பிக்கையில் உள்ளவர் என்றே நினைக்கிறேன்.

//A Bhramin is always kind herated, like so every hindu shall have kindness only for the brothers following other religions also. Hinduism does not condemn any other religion, in fact have amotherly look at other religions.

Unfortunately many of the religions were misunderstood and wrongly probagated. We will explain the true principles behind every religion.

I am sure that as it is written in Geetha, Athveshta (without hatredness), Sarva bothaanam maithra ( friendly with all livings) , you will really save and protect any man even if he follows the Abrahamic religin, and every hindu woud do the same,//

இது தான் கண்டிப்பா உங்க மொழியில். ஏன் இந்த soft corner வேதா கோபால் மேல…//

இது கண்டிப்புக்கும் அடுத்த கட்ட நிலை. வெறுமனே கண்டிப்பதோடு நில்லாது கிறிஸ்தவர்கள், இசுலாமியர் உட்பட அனைவரயும் பாது காத்து, கவ்ரவத்தொடு நடத்த வேண்டிய பொறுப்பை அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

எனக்கு எல்லோரிடமும் சாப்ட் கார்னர் தான். நான் யாரையும் வெறுக்கவில்லை. வெறுப்புக் கருத்துக்கள், சமரச மறுப்புக் கருத்துக்கள், முரட்டுப் பிடிவாத காட்டு மிராண்டிக் கருத்துக்கள் பலரின் மனதிலும் புகுத்தப் பட்டு விட்டன. பகுத்தறிவின் அடிப்படையில் அவர்களின் மனதில் உள்ள விசக் கருத்துக்களை நீக்கி. மனிதத்தின் வளர்ச்சிக்கு முயல்வதே நான் செய்வது. இதில் நான் சார்பு நிலை எடுக்காமலே செயல்படுகிறேன்.

//திரு. Hard Truth நேரடியாக இந்து தெய்வங்களைத் தாக்கி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் தான் வணக்கும் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்ற நம்பிக்கையில் உள்ளவர் என்றே நினைக்கிறேன். //
Thanks Thiruchchikkaaran, for your understanding.

Hard Truth

Mr. Hard Truth,

//திரு. Hard Truth நேரடியாக இந்து தெய்வங்களைத் தாக்கி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் தான் வணக்கும் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்ற நம்பிக்கையில் உள்ளவர் என்றே நினைக்கிறேன். //
Thanks Thiruchchikkaaran, for your understanding.//

Having said my observation, it does not mean I approve your concepts.

May be you had no intention to abuse the Gods ofother religions or you might have restarined yourself from doing so. But the concept “Only my God is True God” inadvertantly bring contempt and hate for the Gods of other religion.

Hence , its better to leave the concept. I am not compelling you to worship the Gods of other religions. But this ” My God is alone is true God” is a dangerous concept, it created lot of bloodshed and killed millions of people.

And needless to say that there is no proof for any God, and in that case, its better for any one to worship the Gods chosen by them peacfully, rather than declaring that My God is only God without any verifiable evidence.

I never oppose any peaceful worship which does not contain any hate , I told many times that I am ready to join in that type of worship with anyone!

1. First of all I am an Indian & I expect all the people living in India irrespective of their religion should have the same feeling. This feeling is totally absent in most of the other religious people including the atheist , communist & brain washed converts in India like you

2. Second I am a Hindu and I am very proud of the same. Also not against other religious peaceful practices in India

3. Understand God is not a solid stuff to be sold in the fish market by shouting & canvassing

4. Given below the statement of a Christian woman (Dr.Annie Besant) :-

“ After a study of some forty years and more of the great religions of the world, I find none so perfect, none so scientific, none so philosophical and none so spiritual that the great religion known by the name of Hinduism. Make no mistake, without Hinduism, India has no future. Hinduism is the soil into which India’s roots are stuck and torn out of that she will inevitably wither as a tree torn out from its place. And if Hindus do not maintain Hinduism who shall save it? If India’s own children do not cling to her faith who shall guard it. India alone can save India and India and Hinduism are one”

5. Now India is facing three major threats. ( JIHAD – SOUL HARVESTING – PSEDO SECULARISM) I consider these are TERRO & DEVIL. Pseudo secularism is the major root cause encouraging the above with the funds floated from all the Christian & Arab nation and destructing the religious harmony as per Abrahamic religious plan

6. Are you aware the whole print & electronic media in India is taken over by the Christian /Arab mafia? Misguiding the people with false news and planning to launch a civil war soon in India like Sri Lanka

7. Assume (ASS/U/ME) Hinduism also vanished due to the wicked plan & what is next fight within Abrahamic Religion. Assume Christianity also vanished then fight within Arabic Religion (note non of the Muslim country in the world is democratic)

“ OH ALLAH – JESUS – RAM SAVE THE EARTH “

Dear Mr. Hard Truth,

I appreciate that the tone of your comments have improved to some extent this time. I hope that with proper education and seminars , both the Islam and Christian Religions can be made to be tolerant and be harmonious to with other religions and help to acheive civilased Soceity.

திருச்சிக்காரரே,
நன்றாக சொன்னீர்கள். இது புரியாமல் நிறைய அரைவேக்காடுகள் ‘—-‘ என்றால் ஒசத்தி, ‘—‘ என்றால் மட்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ்காரன் முதன்முதலில் மனுவை, வேதத்தை கேள்விகேட்டு புத்தகம் போட்டான். அவன் பிரித்தாளும் கொள்கையில் கெட்டிகாரன். அது தெரியாமல் இப்போதும் தடுமாறி கொண்டிருக்கிறோம். அதுவரை 90% நன்றாகதான் போய்கொண்டிருந்தது. இப்போது இருப்பவர்கள் அதற்கு முன்பு நடந்த ஒருசில நிகழ்ச்சிகளுக்கு சாதி சாயம் பூசி த்வேஷத்தை உமிந்து கொண்டிருக்கிறார்கள். அது வேறு விஷயம்.

பறையன் என்பவன் கோயிலில் பறை கொட்டுபவன். அந்த தொழிலால் அவனுக்கு அந்த பெயர். ஆனால் 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் அவனுக்கு கோயிலில் அனுமதி இல்லை. பறையன் தான் கோயிலில் முதலில் நுழைய வேண்டும்.

பிராமணர்களில் அஸ்டசாஸ்திரம் என்ற உட்பிரிவு உண்டு. அப்படி என்றால் அஸ்ட (8) + ஸஹஸ்ரம் (1000). அதாவது 19ஆம் நூற்றாண்டு மத்தியில் 8000 பேர் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அதற்கு பிரிட்டீஷ்காரன் இட்ட பெயர் தான் இது. இன்று இது ஜாதியாக திகழ்கிறது. பிராமணர்களிலேயே வாத்திமா, வடமா உட்பிரிவுகாரர்கள் இந்த பிரிவுக்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதில்லை.

400 மேற்பட்ட ஜாதிகள் எப்படி வந்தது என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இப்போ இருக்கும் ஜாதிகள் எல்லாம் குடும்ப பெயர்கள், குழு பெயர்கள், தொழில் பெயர்கள்.

ஒருவன் உண்மையான பிராமணனாக இருந்தால், அவன் தவறு செய்யமாட்டான் என்பது மனுஸ்மிருதியின் assumption. தவிர அது மேலும் சொல்கிறது.
‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
மேலே உள்ள ஸ்லோகம் மனுஸ்மிருதியில் உள்ளது. சூத்திரன் பிராமணன் ஆகலாம், பிராமணன் வைஸ்யன் ஆகலாம், etc., etc., அப்புறம் என்ன குழப்பம்?

Dear Mr. Bala,

Thanks for visiting the site and registered your comments. We will discuss in detail about your points.

திருச்சிக்கார நண்பா ,
உங்க எழுத்து நீங்க யாருன்னு திரும்ப திரும்ப உங்களை காட்டி குடுகிறது நான் என்ன செய்ய. இல்லாத பூசணிகாயை உருவாக்கி கலவரம் தூண்ட வேண்டுமா?
//எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இகழ்வது பூசல்லை உருவாக்குகிறது என்கிற உண்மையை தான் சொல்கிறோம்.//
நானும் இதை ஆதரிக்கவில்லை.
//இது கண்டிப்புக்கும் அடுத்த கட்ட நிலை. வெறுமனே கண்டிப்பதோடு நில்லாது கிறிஸ்தவர்கள், இசுலாமியர் உட்பட அனைவரயும் பாது காத்து, கவ்ரவத்தொடு நடத்த வேண்டிய பொறுப்பை அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.//
தல உன் காமெடிக்கு அளவே இல்லையா ! முடியல ! அந்த பொறுப்பை அவர் ஏற்று கொண்டார? hardtruth தான் நம்புவதுதான் சரி என்று நம்பிக்கை கொண்டாலும், மற்றவரின் மேல் வெறுப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்த வேதா கோபாலிடம் மத வெறி தவிர வேறில்லை. ஆனா நான் கடிக்கக்க தேவை இல்லை ,அதற்க்கும் அடுத்த கட்ட நிலைக்கு சென்று அவருக்கு பொறுப்பை சொல்லி கொடுத்தேன் என்று கதை அளந்தால் கண்டிப்பாக அது உங்களையும் , உங்களவா வேதா கோபாலையும் காட்டி கொடுக்கத்தான் செய்யும் . அதற்க்கு நான் பொறுப்பல்ல.

அன்புக்குரிய சகோதரர் பிரதீப் அவர்களே,

//உங்க எழுத்து நீங்க யாருன்னு திரும்ப திரும்ப உங்களை காட்டி குடுகிறது//

நாங்கள் சமத்துவ சமரச மத நல்லிணக்ககாரர்கள் தான். அதை எங்கள் எழுத்துக்கள் தெளிவாகக் கட்டிக் கொடுக்கட்டும்.

//எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இகழ்வது பூசல்லை உருவாக்குகிறது என்கிற உண்மையை தான் சொல்கிறோம்.//
நானும் இதை ஆதரிக்கவில்லை.

இத்தனை வற்புறுத்தலுக்குப் பிறகாவது இதை எழுதியதற்கு நன்றி.

வேதம் கோபால் உட்பட பிற மதங்களின் மீது வெறுப்பு பாராட்டும் அனைவரும் திருந்தி அன்புப் பாதைக்கு வர வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

திரு. Hard Truth இந்து தெய்வங்களை நேரடியாக கண்டிக்கவில்லை. ஆனால் அவர் தன்னுடைய மதத்தை தவிர பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்ற கருத்தை உடையவர் என்றே நினைக்கிறேன். அதனால் நாம் சிலரைப் பற்றி எழுதும் போது, அவர்கள் இந்து மதத்தினரால் மதிக்கப் பட்டால், வணங்கப் பட்டால், அந்தக் காரணத்துக்காகவே அவர்களின் தியாகத்தை தவறானது போல, ஒன்றும் இல்லாதது போல எழுதி இருக்கிறார்.

இன்னும் சிலர் இந்து மத தெய்வங்களை இகழ்ந்து எழுதி உள்ளது இந்த தளத்திலே பதிவாகி உள்ளது. மோதல் ஏற்ப்பட்டு பல போர்களே வந்தாலும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றும் எழுதி உள்ளது பதிவாகி உள்ளது.

உங்களுடைய எழுத்துக்களில் இந்து மதத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சியும், குறிப்பிட்ட சாதிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியும் தெரிகிறது. சாதி, மத காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு நாம் இணைய வேண்டிய நேரம் இது.

நான் எந்த மதத்தையும் வெறுக்கவில்லை. எல்லா மதங்களில் உள்ள சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தி, அந்த மதங்களின் பெயரால் தவறாக பரப்பப் படும் வெறுப்பு பிரச்சாரத்தை மாற்றி அன்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

//உங்களவா வேதா கோபாலையும் காட்டி கொடுக்கத்தான் செய்யும்//

எனக்கு பிரதீப், வேதம் கோபால், Hard Truth எல்லோருமே ஒன்றுதான், எல்லோரும் எனது சகோதரரே. வேதம் கோபாலின் சில பின்நூட்டங்களிக் கூட மட்டுறுத்தியிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னைத் திட்டியது உட்பட உங்களின் எந்த ஒரு பின்னூட்டத்தையும் மட்டுறுத்தாமல் வெளியிட்டு இருக்கிறேன்.

சமத்துவ, நல்லிணக்க, நாகரிக சமுதாயம் அமைப்பதில் நேர்மையாக இருக்கிறோம், உங்களின் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

திரு பாலா அவர்களே,

///‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
மேலே உள்ள ஸ்லோகம் மனுஸ்மிருதியில் உள்ளது. சூத்திரன் பிராமணன் ஆகலாம், பிராமணன் வைஸ்யன் ஆகலாம், etc., etc., அப்புறம் என்ன குழப்பம்?///

மிக அருமையான, அர்த்தமுள்ள சுலோகம்.சரியாக எடுத்துத் தந்ததற்கு பாராட்டுக்கள்.

Dear Mr. Dhanabal,

I thank you for your continued clarifications.

The articlehas been corrected with repitions deleted.

//இத்தனை வற்புறுத்தலுக்குப் பிறகாவது இதை எழுதியதற்கு நன்றி.// இத சொல்ல வேண்டியது நாந்தான்.

வேதம் கோபால் உட்பட பிற மதங்களின் மீது வெறுப்பு பாராட்டும் அனைவரும் திருந்தி அன்புப் பாதைக்கு வர வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.//

//இன்னும் சிலர் இந்து மத தெய்வங்களை இகழ்ந்து எழுதி உள்ளது இந்த தளத்திலே பதிவாகி உள்ளது. மோதல் ஏற்ப்பட்டு பல போர்களே வந்தாலும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றும் எழுதி உள்ளது பதிவாகி உள்ளது.//

இதே போல் எழுதிய வேடகோபலை விட்டுவிடீர்கள். சமத்துவம் பேசுனா எல்லாருக்கும் பேசணும்.

//உங்களுடைய எழுத்துக்களில் இந்து மதத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சியும், குறிப்பிட்ட சாதிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியும் தெரிகிறது. சாதி, மத காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு நாம் இணைய வேண்டிய நேரம் இது.//

நான் இந்துவாக பிறந்து இந்து மதத்தை கடைபிடிப்பவன். சாதி ,மத காழ்புணர்வு உள்ளவர்களை உங்களவா என்பதற்காக விட்டுவிட்டு எழுதினால், உங்களிடம் மற்ற மதங்களின் மேல் காழ்புணர்வு உள்ளதாகவே எண்ணவேண்டி இருக்கும்.

சில விடயங்களை இந்துக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் மசூதிக்கு சர்ச்சுக்கு போக தயார் , அதே போல் நீயும் கோவிலுக்கு வர வேண்டும் என்று கூற முடியாது. ஏன் எனில் இந்து மதத்தில் கொள்கை எல்லாவற்றையும் ஏற்று கொள்வது. (பல தெய்வ வழிபாடு கொண்டது) .ஆனால் இஸ்லாமோ, கிருதுவமோ அப்படி அல்ல. பல தெய்வ வழிபாட்டு கொள்கையை எதிர்த்தே உருவானது. ஆதலால் அவர்களின் அடிப்படையையே மீறும் செயலாகும். அதனால் தான் அவர்கள் இந்து தெய்வங்களை வழிபடுபவர்களை எற்றுகொள்வதில்லை. ஆதலால் உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்னும் கொள்கை தான் சரியாக இருக்க முடியும் என்பது ஏன் கருத்து. ( அதே சமயத்தில் கிருத்துவ கூட்டம் போட்டு ,மற்ற மதங்களை இகழ்ந்து ஆள் சேர்க்கும் கும்பலை அந்த மதத்தவர்களே வெறுத்து ஒதுக்க வேண்டும். இந்துக்கள் RSS , சங்க பரிவர் கும்பலை ஒதுக்குவது போல except vedagopal rajagopal)

//இத்தனை வற்புறுத்தலுக்குப் பிறகாவது இதை எழுதியதற்கு நன்றி.// இத சொல்ல வேண்டியது நாந்தான்.

வேதம் கோபால் உட்பட பிற மதங்களின் மீது வெறுப்பு பாராட்டும் அனைவரும் திருந்தி அன்புப் பாதைக்கு வர வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.//

இதே போல் எழுதிய வேதகோபலை விட்டுவிடீர்கள். சமத்துவம் பேசுனா எல்லாருக்கும் பேசணும்.//

வேதம் கோபால் தன்னுடைய கருத்தை வெளியிட்ட உடனேயே , அவர் வெறுப்புக் கருத்துக்களைக் கை விட வேண்டும் என்றும் , எல்லா மக்களையும் பாதுக்காக்கும் வகையில் செயல் பட வேண்டும் என்றும் வலியுறுத்தி என்னுடைய கருத்தை போல்டு எழுத்துக்களில் பதிவு செய்து இருக்கிறேன்.

//நான் இந்துவாக பிறந்து இந்து மதத்தை கடைபிடிப்பவன்.//
இதை முன்பேயும் எழுதி இருக்கிறீர்கள்

//சாதி ,மத காழ்புணர்வு உள்ளவர்களை உங்களவா என்பதற்காக விட்டுவிட்டு எழுதினால், உங்களிடம் மற்ற மதங்களின் மேல் காழ்புணர்வு உள்ளதாகவே எண்ணவேண்டி இருக்கும்.//

நீங்கள், சில்சாம், தனபால், வேதம் கோபால், அசோக், ராம், Hard Truth …… எல்லோருமே என்னவாள் தான். எல்லோரும் என் சகோதர்கள் தான்.

//உங்களிடம் மற்ற மதங்களின் மேல் காழ்புணர்வு உள்ளதாகவே எண்ணவேண்டி இருக்கும்.//

மற்ற மதங்களின் மேல் காழ்ப்புணர்ச்சி இருந்தால் நான் கிரிப்டோ கிறிஸ்துவன் என்று அழைக்கப் பட்ட நிலையிலும் விடாமல் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை விளக்கி, அவற்றில் நாகரிக சமுதாயத்திற்கு உதவக் கூடியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எழுதி இருப்பேனா?

//சில விடயங்களை இந்துக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் மசூதிக்கு சர்ச்சுக்கு போக தயார் , அதே போல் நீயும் கோவிலுக்கு வர வேண்டும் என்று கூற முடியாது. //
நான் எழுதியுள்ளதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் யாரயும் கோவிலுக்கு வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது நாகரீகத்துக்கு எதிரானது. பிற மதங்களையும் அவற்றின் தெய்வங்களையும் எந்த வித முகாந்திரமும் இல்லாமல் இகழ்வது தவறு அது மோதலை உருவாக்கியுள்ளது என்றே சொல்லி இருக்கிறேன்.

நாகரிக சமுதாயத்தின் அடிப்படை பிற மதங்களை முகாந்திரம் இல்லாமல் இகழாமல் இருப்பதே. அதை அவர்கள் செய்தால் போதும்.

பிற மதத்தவரின் வழிபாட்டு தளத்திற்கு செல்வது அடுத்த கட்டம். அதை நானே முன்வந்து செய்கிறேன், மற்றவரைக் கட்டாயப் படுத்தவில்லை.

//ஆனால் இஸ்லாமோ, கிருதுவமோ அப்படி அல்ல. பல தெய்வ வழிபாட்டு கொள்கையை எதிர்த்தே உருவானது. ஆதலால் அவர்களின் அடிப்படையையே மீறும் செயலாகும். //

நீங்கள் பிற மதங்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது . போப் முதலான கணிசமான கிறிஸ்தவர்கள் மேரி மாதவையும், இயேசு கிறிஸ்துவையும் வழிபடுகிறார்கள். இயேசு கிறிஸ்துவோ பிதா என்று சொல்லப் பட்ட வரை வழி பட்டு இருக்கிறார். கணிசமான கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று வகையான வகையில் கடவுளை வழிபடுகின்றனர்.

இயேசு கடவுளின் மகனான கடவுள் என்று ம் பலர் சொல்கிறார்கள். இயேசு கடவுளின் மகனாக வந்த கடவுள் என்றால், முருகன் கடவுளின் மகனாக வந்த கடவுள் என்று நினைப்பதை ஏன் வெறுக்க வேண்டும்.

இதி சொல்வதன் மூலம் நான் அவர்களை முருகனை வழிபட சொல்வதாக நினிக்க வேண்டாம். முருகனை வழி படுவதை கிறிஸ்தவர்கள் வெறுக்கவோ, இகளவோ தேவையில்லை கூடாது என்பதே என் கருத்து.

//அதனால் தான் அவர்கள் இந்து தெய்வங்களை வழிபடுபவர்களை எற்றுகொள்வதில்லை//
அவர்கள் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும். முதலில் எல்லோரையும் மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல் பட வேண்டும்.

//ஆதலால் உன் மதம் உனக்கு என் மதம் எனக்கு என்னும் கொள்கை தான் சரியாக இருக்க முடியும் என்பது ஏன் கருத்து.//

உங்கள் மதம் உங்களுக்கு என்று அமைதியாக வழிபாட்டால் பிரச்சினை இல்லையே. பிற மதங்கள் பொய்யானவை, என் மதம் மட்டுமே உண்மையானது என்று சொல்லி மோதல் போக்கை ஏற்ப்படுத்தாமல் இருப்பது அடிப்படை தேவை ஆகிறது.

//அதே சமயத்தில் கிருத்துவ கூட்டம் போட்டு ,மற்ற மதங்களை இகழ்ந்து ஆள் சேர்க்கும் கும்பலை அந்த மதத்தவர்களே வெறுத்து ஒதுக்க வேண்டும். //

கிறிஸ்துவர்கள் ஒதுக்கட்டும் என்று சொல்லி வேடிக்கை பார்க்க முடியாது. இந்தியாவை பாலஸ்தீன் ஆக்க விட முடியாது. பிற மதங்களை முகாந்திரம் இல்லாமல் இகழ்ந்து மோதல் போக்கை உருவாக்குபவரின் அமைதிக் கெடுப்பு பிரச்சாரத்தை, நாம் பிரச்சாரம் மூலமாக அமைதி வழியிலே யே மக்களுக்கு எடுத்து சொல்லி விளக்குவோம். அது கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, வேத கோபாலாக இருந்தாலும் சரி.

நீங்களே பிராமணர் ஆக முடியும் என்று நீங்கள் கூறுவது, பிராமணர் அல்லாததால் நாங்கள் தாழ்த்தப்பட்டு இருப்பது போல் உள்ளது. பிராமணன் என்பதற்கு நீங்கள் கூறும் விளக்கம் எனக்கு புரிகிறது, ஆனால் சமுதாயத்தில் பிராமணன் என்பனுக்கு வேறு அர்த்தமே உள்ளது. நீங்கள் கூறுவது “அந்த” பிராமணனை உயர்த்தி மற்றவரை தாழ்த்துவது போல் உள்ளது.
Hard Truth

//நீங்களே பிராமணர் ஆக முடியும் என்று நீங்கள் கூறுவது, பிராமணர் அல்லாததால் நாங்கள் தாழ்த்தப்பட்டு இருப்பது போல் உள்ளது. //

நீங்கள் சுயல் தொழில் முனைவர் ஆக முடியும் என்று கூறினால் சுய தொழிலில் ஈடு படாதவர் தாழ்வானவர்கள் என்று அர்த்தமா? உண்மையில் பிராமணனாக வாழ்பவன் சமுதாயத்தில் மரியாதையை எதிர்பார்க்க முடியாது, சமுதாயமோ பணக்காரர்களையும் அதிகாரத்தில் உள்ளவர்களையுமே அதிகம் மதிக்கிறது. நான் நீங்கள் என்று குறிப்பிட்டது – டி . வீ யில் வரும் சில சீரியல்களைப் பார்த்து விட்டு, அப்படி டி . வீ சீரியல்களைப் பார்ப்பதே போறுமானது என்று நினைப்பவர்களுக்கு நினைவுறுத்தும் வகையிலே எழுதி இருக்கிறோம். கட்டுரையின் தலைப்பை நீங்கள் படிக்கவில்லையா?

பிராமணன் என்பது ஒரு வாழும் வழி என்பதையும், அது பிறப்பினால் அமையவில்லை என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறோம். சுயநலத்தை விடுத்து, பணம் சேர்ப்பதையே தன வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளாமல் எல்லோரின் நன்மைக்காக உழைப்பவனே பிராமணன் என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அப்படி இருந்தும் பிறப்பு அடிப்படையில் சிலர் தங்களை பிராமணர் என்று அழைத்துக் கொள்பவரை உயர்த்தி என்று தோன்ற வேண்டிய அவசியம் என்ன? இன்னும் சில கட்டுரைகள் வரும் . அப்போது நீங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.

//பிராமணன் என்பதற்கு நீங்கள் கூறும் விளக்கம் எனக்கு புரிகிறது//

அதையே எடுத்துக் கொள்ளுங்கள். வள்ளுவரும் அப்படியே கூறியுள்ளார். சம்ஸ்கிருத மொழியில் எழுதப் பட்டுள்ள மகா பாரதம் போன்ற நூல்களும் அதே கருத்தையே வலியுறுத்துகின்றன.

//ஆனால் சமுதாயத்தில் பிராமணன் என்பனுக்கு வேறு அர்த்தமே உள்ளது. நீங்கள் கூறுவது “அந்த” பிராமணனை உயர்த்தி மற்றவரை தாழ்த்துவது போல் உள்ளது.//

யாருமே தாழ்ந்த நிலையில் இல்லை. மனநிலை பாதிக்கப் பட்டவரே பிறரை தாழ்வாக கருதுவார்கள். எல்லோருமே உயர்வானவர்கள் தான். இன்னும் அதிக உயர்வு நிலைக்கு நம்மால் இந்த உலகில் யாருக்குமே பாதிப்பு வராத நிலைக்கு, உலகில் எல்லோரின் நன்மையையும் விரும்பும் நிலைக்கு நம் மன நிலையை இன்னும் உயர்த்தவே முயல்கிறோம்.

//ஆனால் சமுதாயத்தில் பிராமணன் என்பனுக்கு வேறு அர்த்தமே உள்ளது.//

இன்னும் சிறப்பான வகையில் புதிய சமூகத்தை, சமத்துவ, சமரச, நல்லிணக்க ,அமைதி சமூகத்தை உருவாக்குவோம். மோதலை உருவாக்கும் வெறுப்புக் கருத்துக்களுக்கு, காட்டு மிராண்டிக் கருத்துக்களுக்கு , வெறித் தனத்தை நீக்கி அன்பை வளர்ப்போம்.

பிராமணன் என்பதற்கு பதிலாக, நல்ல மனிதன் என்று கூறினால் பல குழப்பங்களை தவிர்க்கலாமே.

Hard Truth

இது நல்ல கருத்துதான்.

பிராமணர் என்பது ஒரு வாழும் முறையாக இந்தியாவில பல்லாயிரம் வருடங்களாக கடைப் படிக்கப் பட்டும் , சொல்லப் பட்டும் வருகிறது.

இந்தியாவின் பல மொழிகளின் பணடைய இலக்கியங்களிலும் அந்தப் பெயரைக் குறிப்பிட்டு செய்யுள்கள் உள்ளன. இப்போது சில டி. வி. தொடர்களில் பிராமணன் என்றால் என்ன என்பது பற்றி அவரவர்களுக்கு புரிந்த விளக்கத்தை தருகின்றனர். பிராமணன் என்னும் வாழும் முறை சரியாகப் புரிந்து கொள்ளப் பட வேண்டும் என்பதற்காகவே, குழப்பமாக ஆகி விடக் கூடாது என்பதற்காகவே நாமும் தெளிவாக அதைக் குறிப்பிட்டு எழுதுகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: