Thiruchchikkaaran's Blog

ஈச்சை மரத்து இன்பச் சோலை! பகுதி- 1

Posted on: May 2, 2010


உலகின் முக்கிய மதங்களுள் ஒன்று இஸ்லாம். அராபிய சமூகத்தை சேர்ந்த   முஹம்மமது (PBUH ) ,  மத்தியக் கிழக்கு  ஆசியப் பகுதியில் தோற்றுவித்த மதம் இஸ்லாம் ஆகும்.

இந்தக் கட்டுரையில் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப் பட்டதன் பின்னணி,  அந்தக் கால கட்டத்திலே மத்திய தரைக் கடல் பகுதியில் நிலவி வந்த சூழ் நிலை ஆகியவை பற்றி ஆராய்ந்து இருக்கிறோம்.

மத்தியக் கிழக்கு ஆசியப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக  பல மதங்கள் இருந்து வந்தன. அவற்றில் முக்கியமனாதாக இருந்தது யூதமதம் .

அடிமைகளாக   யூதர்களை மோசஸ் எகிப்தில் இருந்து மீட்டு பாலஸ்தீனப் பகுதிக்கு  கொண்டு வந்ததாக சொல்லப் படுகிறது. உலக வரலாற்றில் இது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

ஜோர்டான் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில்   யூதர்கள் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வாழ்ந்தார்கள் என்றே நாம் கருதலாம்.  அவர்கள் பாபிலோனியர், கிரேக்கர், ரோமர் உள்ளிட்ட பலராலும் ஆளப் பட்டு வந்தனர். யூதர்களை ஒன்றிணைத்து ஒரு சமுதாயமாக ஆக்கியவர் மோசஸ் என்றே கருதப் படுகிறது. கர்த்தர் என்றும், ஜெஹோவா என்றும் கூறப் படும்  கடவுள் யூதர்களைக் காப்பவர், அவரை மட்டுமே யூதர்கள் வணங்க வேண்டும் எனக் கூறி யூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு  மதத்தையும்,  சமுதாயத்தையும், சட்டங்களையும், நாட்டையும்  மோசஸ் உருவாக்கினார் என நம்பப் படுகிறது.

யூத மதமானது தன்னுடைய கடுமையான மதக் கொள்கைகளோடு,   யூதர்களின் இனவாதக் கொள்கையை நியாயப் படுத்தும் வகையிலே அமைக்கப் பட்டு இருந்தது. அவற்றை சீர் திருத்த இயேசு கிறிஸ்து முயன்றார். இயேசு கிறிஸ்துவின் பெயரால் உருவாக்கப் பட்டது கிறிஸ்துவ மதம்.

நான்காம் நூற்றாண்டிலேயே மத்தியத்ததரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ரோம் உள்ளிட்ட பெரும்பாலான  நாடுகள் கிறிஸ்தவ மதத்தை தழுவின.   இவ்வாறாக மத்தியத்த தரைக் கடல் பகுதி கிறிஸ்துவ மத பகுதியாக இருந்திருக்கிறது.

இவ்வாறாக மத்தியத் தரைக் கடல் பகுதியில் பலவேறு இனங்களும் தங்களுக்குகேன்று மதங்களையும், சட்ட திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டு, சமூகமாக உருப் பெற்ற கால கட்டத்திலே , அரேபியப் பாலைவனப்   பகுதியில் வாழ்ந்து வந்த  மத்தியக் கிழக்கு ஆசியாவின் முக்கிய இனமான அரேபியர்கள் பைடூன்கள் எனப் படும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர்.  அவர்களை ஒன்றிணைத்து ஒரு  மத,  சமூக, அரசியல் அமைப்பை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சூழலிலே இஸ்லாம் தோற்றுவிக்கப் பட்டது.

Advertisements

9 Responses to "ஈச்சை மரத்து இன்பச் சோலை! பகுதி- 1"

//இந்த சூழலிலே இஸ்லாம் தோற்றுவிக்கப் பட்டது.// அந்த சூழலில் என்ன நடந்து எப்படி உண்டானது என்று இன்னும் கொஞ்சம் விளக்கினால் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்னு நினைக்கிறேன். நேரம் கிடைக்கும் போது விளக்குங்கள்.

//அவர்களை ஒன்றிணைத்து ஒரு மத, சமூக, அரசியல் அமைப்பை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது.// மொத்தத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ மதங்கள் எல்லாம் தத்துவார்த்த அடிப்படையில் அமையாமல் அரசியல் சமூக அடிப்படையில் மட்டுமே உருவானது என்றே தோன்றுகிறது. அதனால் தான் இவர்கள் எங்கே இருந்தாலும் அரசியல் மதக்காரர்களாகவும் கலகக்காரர்களாகவுமே இருக்கிறார்கள்.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, மதங்கள் எல்லாம் உருவாக்கப் பட்டதும், பின்பற்றப் பட்டதும் எந்த அடிப்படையில் இருந்தாலும் சரி, நாம் மனிதனின் மனசாட்சியின் மேல் நம்பிக்கை வைத்தவராக இருக்கிறோம்.

பல்வேறு மதங்களும் பல்வேறுபட்ட சமூக சூழலில் உருவாக்கப் பட்டவை.

உலகம் முழுவதும் ஒரே சமூகமாக உருவெடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு மனிதனும் நாகரீக கனவானாக வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.

எந்த ஒரு மதத்தைப் பின்பற்றுபவரும் பிற மதங்களை வெறுக்காமல்,

எந்த ஒரு மொழியை பேசுபவரும், பிற மொழி பேசுபவரை வெறுக்காமல்,

எந்த ஒரு இனத்தை சேர்ந்தவரும் , பிற இனங்களை வெறுக்காமல் வாழ வேண்டியது மனிதம் வாழா முக்கியமானவை.

இதை அன்பின் அடிப்படையிலேயே நாம் சாதிக்க விரும்புகிறோம். அன்பின் அடிப்படையில் எல்லா மதங்களையும் புதுப் பொலிவுடன் திகழச் செய்ய வேண்டிய பொறுப்பை நாம் அந்தந்த மததினரிடமே ஒப்படைக்கிறோம்.

எல்லா மதங்களும் நல்லிணக்க அடிப்படையில், அன்பின் அடிப்படையில் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள முடியும். அதை செய்ய வேண்டியது மனிதர்களே. அவர்களுக்கு இதை நினைவு படுத்தவே நாம் எழுதுகிறோம். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

கட்டுரை நன்றாக உள்ளது.அதிக தகவல் கூறியிருந்தால் தெரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும்.

Dear Brother Dhanabal,

We will publish more articles on this Subject.

an interesting artical. but if can it cud be so explained about given points

// ஆசியாவின் முக்கிய இனமான அரேபியர்கள் பைடூன்கள் எனப் படும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களை ஒன்றிணைத்து ஒரு மத, சமூக, அரசியல் அமைப்பை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சூழலிலே இஸ்லாம் தோற்றுவிக்கப் பட்டது. //

சகோதரர் மறவன் அவர்களே,
கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

//மத்தியக் கிழக்கு ஆசியாவின் முக்கிய இனமான அரேபியர்கள் பைடூன்கள் எனப் படும் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். அவர்களை ஒன்றிணைத்து ஒரு மத, சமூக, அரசியல் அமைப்பை கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சூழலிலே இஸ்லாம் தோற்றுவிக்கப் பட்டது.//

மத்தியக் கிழக்கு ஆசியா மற்றும் அதை ஒட்டிய மத்திய தரைக் கடல் பகுதில் வாழ்ந்த பிற இனங்களான யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் தங்களுக்கான சமுதாய முறைகளையும், , அரசியல் சட்டங்களையும், மத வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொண்டு விட்டனர்.

அரேபியர்கள் தங்களுக்கென சமூக, அரசியல், மத முறைகளை வகுத்துக் கொள்ளாமல் இருந்த நிலையிலே அவர்கள் ஒன்றிணைக்கப் பாடவும், சமூகமாக உருவாகவும் வேண்டிய அவசியம் இருந்தது. .

மத்தியக் கிழக்கு ஆசியா, மற்றும் அதை ஒட்டிய மத்திய தரைக் கடல் பகுதில் வாழ்ந்த பிற இனங்களான யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் தங்களுக்கான சமுதாய முறைகளையும், , அரசியல் சட்டங்கக்ளையும், மத வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொண்டு விட்டனர். அரேபியர்கள் தங்களுக்கென சமூக, அரசியல், மத முறைகளை வகுத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

அன்பு நண்பர் அவர்களே இஸ்லாம் முஹம்மத் அவர்களால் தோற்றுவிக்கபடவில்லை அவரால் சீர் செய்ய பட்டது.

அன்பு சகோதரர் நெல்லை மஸ்தான் அவர்களே,

நீங்கள் சொல்ல வருவது அனேகமாக ஆபிரகாம் (pbuh) உட்பட பல இறைத் தூதர்கள் இஸ்லாத்தை உருவாக்கியதாக நீங்கள் குறிப்பிடுவதாகவும், முஹம்மத் (pbuh) இறுதியாக அதை சீர் திருத்தியதாகவும் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

வரலாற்று நிபுணர்கள், மற்றும் சமய ஆராய்ச்சியாளர்கள் பலரும் முஹம்மத் (pbuh) அவர்கள் குரானை அளித்த கால கட்டத்தையே இஸ்லாத்தின் பிறப்பாகக் கருதுகின்றனர். மத்தியக் கிழக்கு பக்தியில் அரேபியர்களின் சமூக வரலாறு என்பது இஸ்லாத்துக்கு முன்பு எத்தகைய பதிவும் இல்லாமல், எந்த விதமான குறிப்பும் இல்லாமலே உள்ளது. எனவே இஸ்லாம் மதத்தை முஹம்மது தோற்றுவித்தார் என்று நாம் எழுதியது வரலாற்றின் அடிப்படையிலே. குரான் அருளப்பட்ட காலமாகிய கி.பி. 610 ஐயே ஆரம்பமாக கருதப் படுகிறது.

முந்தைய இறைத்தூதர்களின் வழிகாட்டுதலின் சீர்திருத்தமாக இஸ்லாத்தை நீங்கள் கருதலாம். யூத, கிறிஸ்தவ இஸ்லாம் இந்த மூன்று மதங்களும் பல அடிப்படைகளில் ஒன்று படுகின்றன, அதே நேரம் பல முரண்பாடுகளும் உள்ளன. இது நம்பிக்கை சம்பந்தப் பட்ட விடயமே.

இது பற்றி நாம் சரியான நேரத்திலே விவாதிப்போம். நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களது கருத்துக்கள் முக்கியமானவையாக இருப்பதால், ஒரே வரியிலே எழுதுவதோடு நில்லாமல் தயவு செய்து விளக்கமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: