Thiruchchikkaaran's Blog

நாம் அனைவரும் பாவிகளா? நாம் பாவிகள் அல்ல, நாம் அப்பாவிகளே!

Posted on: April 24, 2010


நாம் எல்லோரும் பாவிகளா?

நாம் பாவிகள் அல்ல.  நாம் அனைவரும் அப்பாவிகளே

ஒரு மனிதனை நிலை குலைய வைக்க என்ன செய்ய வேண்டும்? அவனைத் திருடன் என்று திட்டினால் அவன் அதை ஒத்துக் கொள்ள மாட்டன். அவன் திருடவில்லை என்பது அவனுக்கு தெரியும். ஒருவனை பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவன் என்று திட்டினால் அவன் அதை ஒத்துக் கொள்ள மாட்டான், அவன் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

ஒருவனை  ஒரே அடியாக நிலை குலையச் செய்து, அவனை முழுவதும் தனது கட்டுப் பாட்டில் கொண்டு வர உருவாக்கப் பட்ட கற்பனையே ஒரு மனிதனை பாவி என்று திட்டுவது. நீ பாவிதான், உன்னால பாவம் செய்யாமல் இருக்க முடியாது, நீ அந்தப் பையனை கீழே தள்ளி விட்டாய், மேசியிலே இருந்த பூஞ் சட்டியை உடைத்து இருக்கிறாய்….

இது போல பல குற்றச்  சாட்டுகளை மிரட்டும் தொனியில் சொல்லிக் கொண்டே போவார்கள். அப்படியே உனக்கு எரி நரகம் தான் காத்திருக்கிறது என்று அப்படியே அவனை எரி நரகத்தில் தள்ளி விடுவார்கள். 

அவன் மன  ரீதியில் சிதைக்கப் படுவான். பாவம் செய்யாமல் , குற்றம் செய்யாமல் தன்னால் இருக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவன் இழக்கும் படி செய்யப் படுவான்.

இப்படியாக மனிதர்களின் கூட்டங்களை தங்களின் கட்டுப் பாட்டுக்கு கொண்டு வர உருவாக்கப் பட்ட சித்தாந்தமே இந்த பாவ சித்தாந்தம் என்பது தெளிவு.

இந்த பாவ சித்தாந்தத்தில் மூழ்கிய சில நண்பர்கள் நம்மிடையேயும் வந்து பாவப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இதில் கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்தப் பாவப் பிரச்சாரத்தை இயேசு கிறிஸ்துவின் பெயராலே அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரும் பாவிகள் என்று சொன்னதாக நமக்குத் தெரிந்த வரையில் இல்லை. அதன்னியில் நீதிமான்களை அன்று  பாவிகளையே இரட்சிக்க வந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

இவ்வாறாக இந்த உலகிலே நீதி மான்கள் உள்ளனர், ஆனால்  பாவத்தின் பாதையில் சென்றவருக்கு உதவுவதே தன் பணி என்று சொல்லி இருக்கிறார்.  ஆனால் எல்லோரையும்  பாவி  என்று கூறி, பாவத்தை எதிர்க்கும் அவர்களின் மன  வலிமையை  சிதைத்து ,அவர்களையும்  பாவ வலையில் சிக்க வைப்பது சரியா என நமது தோழர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யார் யாரோ உருவாக்கிய கருத்துக்களை எல்லாம்   இயேசு கிறிஸ்து வின் கருத்துக்களாகக் காட்டி, அவரின் கொள்கைக்கு எதிராக செயல் படுவது சரியா?

எனவே   நாம் பாவிகள் அல்ல,  நாம் அப்பாவிகளே, நாம் மன வலிமை உடையவர்கள், மன வலிமையாலும், அறிவு முதிர்ச்சியாலும், பாவச் செயல்களை தவிர்த்து, நாகரீக சமுதாயத்தின் குடி  மகனாக எல்லோரையும் நேசித்து நல்லதே செய்வோம் என உறுதியோடு வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன்.

Advertisements

10 Responses to "நாம் அனைவரும் பாவிகளா? நாம் பாவிகள் அல்ல, நாம் அப்பாவிகளே!"

அன்புள்ள திருச்சிக்காரருக்கு, உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். நம் இந்து மதக் கோட்பாட்டின்படி , பாவம் என்பது அறியாமையின் விளைவாகும். அதனால் யாரையும் பாவி என்று அழைப்பதில்லை.உங்க்ள் கருத்து சரியானதே.

பெரு மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய முனைவர் ஐயா அவர்களே,

கட்டுரையைப் படித்து உங்களின் மேலான கருத்துக்களை தெரிவித்தற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய கருத்துக்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தை அறியாமை என்பது மிகப் பொருத்தமாக உள்ளது.

நன்றி,

திருச்சிக்காரன்.

Respected Prof Muthukumaraswamy

I am sorry that I have no Tamil fonts and am writing in English. My queries are meant not to counter you, but to learn from you.
Is sin the result of ignorance?
I am unable to comprehend.
Do not people commit sin with intention. In such a case, does ignorance play a role?
Don’t we pray to Lord Ayyappa “naan aRinthum aRiyaamalum seytha pizaikaLaip poRuththaruLka.”

முனைவர் ஐயா சொன்னது மிகச் சரியே.

எது ஒரு மனிதனுக்கு நல்லது, எது கெடுதல் என்று தெரியாத அறியாமையினாலே (Ignorance) ஒருவன் பாவத்திலே ஈடுபடுகிறான்.

நிதானத்தோடு அறிவை உபயோகப் படுத்துபவன் பாவத்தை செய்யாமல் கட்டுப் படுத்த இயலும். அறிவினால் ஏற்பட்ட மனவுறுதியே , விவேகத்தினால் ஏற்ப்படும் வைராக்கியமே ஒருவனைப் பாவம் செய்யாத மன நிலைக்கு உறுத்துகிறது.

தெரிந்து செய்வதுதான் பாவம். தெரியாமல் செய்வது பிழையே.

இருட்டிலே ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தால் அவன் யார் என்று தெரிந்து கொண்டு வேண்டுமென்றே மிதித்தால் அது பாவம்.

ஆனால் இருட்டில் ஒருவர் தூங்கிக் கொடிருப்பதை அறியாமலே காலை அவர் மேல் வைத்து மிதித்து விட்டால் அது பிழை.

.

As you know, in Thailand, prostitution is legal. It is one of the review generating business in Thailand. Many of them are ignorant about the fact that it is a wrong thing, because of the culture there. So, considering their ignorance, can we say that prostitution is not a sin?

Hard Truth

//நம் இந்து மதக் கோட்பாட்டின்படி …//

ஆம்,அது நம்முடைய வசதிக்காக நாமே வகுத்துக் கொண்ட கோட்பாடுதான்;அது இறைவனால் கொடுக்கப்பட்டதல்ல;

ஆனால் அதே இந்து மதம் பாவம்,தோஷம்,பரிகாரம் என்றும் போதிக்கிறது;

நெற்றியில் அணியப்படும் ஒவ்வொரு சின்னமும் (குங்குமம் முதல் பட்டை நாமம் வரை) இது சம்பந்தமாகவே போதிக்கிறது;

அது அடிமையின் சின்னம்;அதிலிருந்து விடுதலை தரவே இறைவன் தாமே தமது பாவமில்லாத சரீரத்தில் ஒரே தரம் அனைத்தையும் செய்துமுடித்தார்..!

Dear Mr. சில் சாம்,

ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டை சொல்கிறார்கள்.

நீங்களும் உங்கள் கோட்பாட்டைச் சொல்லலாம்.

ஆனால் நீங்கள் சொல்லும் கோட்பாடு மட்டும் இறைவனால் கொடுக்கப் பட்ட து என்பதற்கு என்ன ஆதாரம்?

முதலில் இறைவன் என்று ஒருவன் இருப்பதற்கு நிரூபணம் தர யாராலும் முடியவில்லையே.

எனவே நீங்கள் எல்லோரயும் பாவி என்று திட்ட வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்கிறோம்.

// நீங்கள் சொல்லும் கோட்பாடு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? //

ஒருவன் தான் செய்த தவறுக்காக மனம் வருந்துவதும் அதற்கான பரிகாரம் தேவை என்று தவிப்பதுமே முதலாவது காரணம்;தனக்கு மேல் ஒரு மகாசக்தி இருப்பதைக் குறித்த இயல்பான அச்சமே இதற்குக் காரணம்;

அந்த இறை அச்சமானது பல்வேறு நிலைகளைக் கடந்து கலாச்சார எல்லைகளைக் கடந்தும் அதன் ஆதாரம் மாறாமலிருப்பது ஒரு ஆச்சர்யம்;அதாவது சைவமானாலும் சரி வைணவமானாலும் சரி பலியினால் மட்டுமே பரிகாரம் என்பது பொதுவானது;

இரத்தபலியே உச்சமாகக் கருதப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு இன்றைக்கும் தொடருகிறது;

மனமாற்றமில்லாமல் தான் செய்த குற்றத்துக்காக வருந்தாமல் தவறிழைப்பதற்காகவே அபராதம் செலுத்தும் மனப்போக்கில் மனிதன் வாழத் துணிந்த போதே ப்ரஜாபதியின் மகாபலியினால் பாவம் நிக்ரஹமாகும் வேதத் தத்துவம் வெளிப்பட்டு நடைமுறைக்கு வந்தது;

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=35

அன்புக்குரிய சகோதரர் சில் சாம் அவர்களே,

யாரும் தன்னைப் பாவி என்று கருதிக் கொண்டால் அது அவரவர் விருப்பமே. நான் என்னைப் பாவி என்று கருதவும் இல்லை, நான் தவிக்கவும் இல்லை. எந்த ஒரு மகாசக்தியையும், அது இருக்கிறதோ இல்லையோ, நான் அதை இகழவும் இல்லை.

அதே நேரம் நான் யாருக்கும் பயந்து பாவம் செய்யாமல் இருப்பதை விட என்னுடைய பாவத்தினால் அடுத்தவருக்கு பாதிப்பு வரக் கூடாதே என்கிற அக்கறையினால், அன்பினால், மன முதிர்ச்சியின் அடிப்படையில் பாவம் செய்வதை தவிர்க்கிறேன். இதை முன்பே எழுதியும் இருக்கிறோம்.

நீங்கள் சைவத்தையும் வைணவத்தையும் முறையாக புரிதல் செய்து எழுதினால் சிறப்பாக இருக்கும்.

இந்து மதத்தின் படி
புண்ணியங்களின் பலனே மனிதப் பிறவி , இப்போதையக் கஷ்டங்களுக்குக் காரணம் செய்த பாவம் , அதற்குரிய தண்டனையை ஏற்றுக் கொண்டு மேலும் மேலும் பாவம் சேர்க்காமல் முடிந்த வரை அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்வது .
அதை ஞாபகப் படுத்தும் குறியீடுகள் தான் குங்குமம், விபூதி எல்லாம்.

இது பிறப்பே பாவத்தின் அடையாளம் என்னும் கோட்பாட்டுக்கு முரண்.

,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: