Thiruchchikkaaran's Blog

மத நல்லிணக்கம் என்பது என்ன?

Posted on: April 15, 2010


Its with immense happiness and goodwill we present this article to all.  We hope that this article  will offer very good things to the mankind, only good things.

On hearing the word “Religious harmony”,  one need not be anxious as whether their religions will get a setback due to religious harmony. Religious harmony will not give any setback to any religion, it will enhance the prospects of all the .religionsSwami Vivekananda

Religious harmony to start with, is to approach each and every religion with positive mindset and look  to find the good things in every religion.

Gauthama Buddha gave us a peaceful  religion. He was full of love and mercy for all the livings in the world.  He loved even the innocent animals. He told all to show love for all the livings. It was his love for the livings, which drove him to search the solution to liberate all the livings from the sorrow.  He found that the root cause of the sorrow was the desire and a man can raise himself  to control his desires and thus liberate himself from sorrow. Buddha’s religious practice was to give up the desire,  land doing mediatation, which can raise oneself to the liberated stage. Its told that he attained that stage and then started preaching.

Buddha was aprince, a luxurious life was available for him.  He left that Royal life, in his quest to save all the people of the world from sorrow!

Why shall not we think of his good intentions, his sacrifice,  his methods ? He proposed only peace, he never compelled any one. I am happily saluting the Great Buddha and fold my  my hands in respect in front of him. I dont say that each and every one in the world has to worship Buddha, I only say that if you can understand him, you can give your respects to him, atleast you refrain from hating him or his religion.

Jesus Christ gave wonderful principle,  he told to do the neighbour as what the neighbour expected to do to us, a wonderful principle. He told all to have forgiveness. We will have many articles about Jesus Christ and his principles in our blog.  I think  that Jesus Christ  deseves to be respected and revered by all in the world.

The Islam has all the provisions for a religion, it promotes  equlaity among it followers, it stipulates for a 5 times prayer in a day, its followers concentrate their mind 5 times in a day, thus it has provisions for spiritual upliftment of onself .  It asks all the rich to donate one tenth of their properties to the poor, it bans adulatration, it bans all narcotics… like this we have many good points . Unfortuanately that religion is made as one of the staunch intolerant religions, we can learn from them , we can join with them, we can help them to assimilate in the modern civilised soceity.

Coming to Hinduism, I have to thank Hinduism because it helped me to shape my approcah, ideas, concepts and behaviour. I can say that its the most tolerant religion , I had ever come across. I find that its includes the priciples Buddha, it includes the principles of Jesus Christ, It shares some concepts with Islam, It has many commonalitis with Jainism and Sikhism. It would need many articles to shed some light in Hinduism, I will be content with mentioning one verse from its sacrad book Githa ,

ADdhveshtaa (without hatred , without enemity),

Sarva boothaanaam maithra (Friendly with all livings , friendly with plants and   rivers as well)

Karuna Eva cha ( heart filled with compassion, compassion only)

Nirmamo , Nirahangkara ( without ego, without arrogance)

Sama sukha dhukka ( equally poised in pleasure and sorrow )

 Kshama  ( forgiveness)

Santhusta Saththam yogin ( always in  peaceful and happy )

Yaththathma drudha Nischaya (self controlled, with unflinching determination)

mayyarpitha mano buddhir ( dedicating  mind and  intelligence on me)

Yo me priya ( he is dear to me),

Hinduism helps one person to raise his qulaites to be fiendly and compassionate with all,  to live without hatredness… all the qualities explaine above can be attained by a man, it helps one to elevate himself.

Now, the most imporatant question is how do we acheive religious harmony,

there are many stages in religious harmony

The First stage is to keep our mind and heart open. If  you do  not to have contempt,  hatredness for other religion, congratulations,  we are lucky , you are already a person in the path of religious harmony

The second step will be to participate in the festivals of other religions,  Join with Hindus in Deepaavali festival,  join with Christains in Christmas celebrations, ,Join with Muslims in Eid festivals… etc.

The peak of the religious harmony  will be to understand and feel the love and sacrifice of all the personalities Rama,  Buddha, Jesus… etc,  pay  respect and reverence for them wholeheartedly.

                            File:Akbar1.jpg

(மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. உண்மையான மத நல்லிணக்கம் மதங்களை- எல்லா மதங்களையும் – வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.

மத நல்லிணக்கம் என்பது என்ன?

மத நல்லிணக்கம் என்பது  மக்களிடையே  நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.)

Swami Vivekananda

மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ந‌டை முறையில் செய‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விட‌யம்.

மத நல்லிணக்கம் – இதைச் செய்ய‌ வேண்டிய‌ பொறுப்பு எல்லா ம‌னித‌ர்களுக்கும் உள்ள‌து.

மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.

இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.

எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற வூக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.

எனவே உண்மையான  மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.

எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன.

எல்லா உயிர்களின் மீது அன்பு செலுத்தும் கொள்கையைப் போதித்தவர் புத்தர்.  மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தி, மக்களுக்காக பாடுபட்டவர். யாரயுமே வெறுக்கவில்லை. யாரையுமே இகழவோ திட்டவோ இல்லை. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

10.jpg

கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் இயேசு கிறிஸ்து  ” நான் பசியாய் இருந்தேன் , எனக்கு உண்ணக் குடுத்தீர்கள் , நான் தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்க குடுத்தீர்கள். மிகவும் சிறியவனாகிய என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு கொடுத்தது எனக்கு கொடுத்தது” என்றார்.  ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு கிறிஸ்து- இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

இஸ்லாத்திலே வட்டி வாங்கக் கூடாது,  மது அருந்தக் கூடாது,  சூதாடக் கூடாது என்ற கொள்கைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய சொத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு  தானமாக வழங்க வேண்டும் என இஸலாம் சொல்லுகிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது?ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

இந்து மதம் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மன நிலைக்கு வரவேண்டுமென

அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

என்பதை சொல்கிறது.  இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

என் மதத்தை மட்டுமே ஆதரிப்பேன், மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்பவன் மோதலை உருவாக்குபவனாக,  வன்முறையை தன்னை அறியாமலேயே தூண்டுபவனாக, பயங்கர வாதத்தை வூக்குவிப்பனாக அமைந்து விடுகிறான்.

மத நல்லிணக்கத்தை கட்டாயப் படுத்தி உருவாக்க முடியாது. அது மனித  இதயங்களின் அன்பால் உருவாக்கப் பட வேண்டியது. மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.

பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.

அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.

அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.

இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.

காந்தி பிறந்த தினத்தன்று காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது போல, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது போல,  சர்ச்சுக்கு சென்று இயேசு கிறிஸ்துவுக்கு மெழுகி வர்த்தி ஏற்றி வைக்கலாம், மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம், கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றலாம்.

ஒரு இந்து மசூதிக்கு சென்று தொழுதால், இசலாத்தின் மீது வெறுப்பு வராது, மசூதியை இடிக்க மாட்டான். ஒரு முஸ்லீம் புத்த விஹாரத்துக்கு சென்று வந்தால் நல்லிணக்கம் ஏற்படும் , பின்னொரு நாள்  யாராவது  புத்தர் சிலையை உடைப்பதைப் பார்த்தால் அதைத் தடுப்பான்.

மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக காஞ்சி குடிப்பது போன்ற போலி  மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.

Mogul Emperor- Mohammed Jalaaludin Akbar

மத நல்லிணக்கம் மிக முக்கியமானது. இன்றியமையாதது. உங்கள் வருங்கால சந்ததியினர்   உங்களிடம் பெற விரும்பும் மிக முக்கியமான சொத்து ஏதாவது இருந்தால், அதில் மத நல்லிணக்கமும் முக்கியமான  ஒன்றாக இருக்கும்.

எந்த ஒரு அரசியல் அல்லது பொருளாதார லாபத்தையும் எதிர்பார்க்காமல் பேரையோ , புகழையோ  எதிர்பார்க்காமல் சாதாரண மக்கள் முன்னெடுத்து செல்லும் உண்மையான  மத நல்லிணக்கம் உறுதியான  அமைதியை  தரும்.

Advertisements

30 Responses to "மத நல்லிணக்கம் என்பது என்ன?"

நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் சகோ திருச்சிக்காரன்,
இதை ஹிந்து,அல்ல,முஸ்லிம்களும்,இன்னபிற மதத்தவரும் புரிந்து செயல்பட்டால் மதநல்லிணக்கம் புத்துயிர் பெரும்.நாம் ஒற்றுமை எனும் புனலிட்டு நல்லிணக்கம் எனும் மரம் காப்போம்..எதிர்கால சந்ததிக்கு நல்லிணக்கம் கற்றுத்தருவோம்…

எனது வளைபூவின் வாசம் காண வருக…

நன்றி..
http://sunmarkam.blogspot.com/

சமத்துவவாதி ரஜின் ஏன் இந்துக்களை புண்படுத்த வேண்டும்.?

http://sunmarkam.blogspot.com/2010/04/blog-post.html#comment-form

அன்புக்குரிய சகோதரர்கள் ரசீன், தனபால், ராம் ஆகியோரின் கருத்துக்களுக்கும் , பாராட்டுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.திரு. ராம் அவர்களே, திரு. ரசீன் என்ன எழுதினார் என்பதை நீங்கள் மேற்கோள் காட்டி குறிப்பிட்டு, அது எந்த வகையில் உங்கள் புண்படுத்தியது என்பதை தெரிவித்து இருந்தால், அவரும் புரிந்து கொண்டு பதில் அளிக்கவோ, முன்னேறவோ உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படி வெறுமனே சுட்டியை மட்டும் போட்டு எழுதினால் குற்றம் சாட்டுவது போல அமைந்து விடும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது நல்லிணக்கத்துக்கும் உதவாது. உங்களின் கேள்விக்கான காரணமும் பின்னுக்குத் தள்ளப் பட்டு விடும்.

சகோதரர் திருச்சிக் காரர் அவர்களே,

கட்டுரையின் ஒவ்வொரு வாக்கியமும் அற்ப்புதமானவை.உங்கள் நல்லெண்ண,மத நல்லிணக்கப் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

எனது கருத்துக்களை அவரது தளத்திலேயே எழுதிவிட்டேன். ஆனால் இன்னும் வெளிவரவில்லை. நீங்களும் படித்துப்பார்த்து அவை சரிதானா என்று சொல்லலாமே என்று தான் உங்களுக்கு சுட்டியை தந்தேன். இதோ நான் அங்கே இட்ட பின்னூட்டம்.

//இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து பயங்கர வாதிகளுக்கு தக்க பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.//

அன்புள்ள ரஜின், நீங்கள் ஒரு சமத்துவ சிந்தனை உடையவர் என்ற நினைப்பிலேயே நான் கூட ஏமாந்து போய் ஒரு அன்பான பின்னூட்டம் உங்களது முந்தைய கட்டுரையில் வெளியிட்டேன். அது தவறோ என்று என்னவைத்து விட்டீர்கள். எழுத்துக்கு எழுத்து இந்து பயங்கரவாதி என்று எழுதி அதை சிகப்பு மையிட்டு பெரிதுபடுத்தி காட்டுவதன் மூலம் நீங்களும் அரசியல் முஸ்லீம் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை. புரிந்துகொள்ள உங்கள் மத வெறி உங்களை விடவும் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. மாவோயிஸ்டுகளும் சக்ஸலைட்டுகளும் எப்போதோ கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகளாகிவிட்டார்கள். அவர்கள் இந்து விசுவாசிகள் கிடையாது. மேலும் நீங்கள் குறிப்பிடும் அந்த பயங்கரவாதிகள் நான் இந்த கொலைகளை கிருஷ்னருக்காக செய்கிறேன், மாரியம்மனுக்காக செய்கிறேன் என்று கூறி கொலைபுரியவில்லை. அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் முஸ்லீம் தீவிரவாதிகள் தங்கள் உயிர் தியாகத்தை அல்லாவுக்காக செய்வதாகக் கூறியே கொலையும் செய்து தற்கொலையும் செய்துகொள்கிறார்கள் என்பதை ஏன் மறக்கிறீர்கள் நண்பரே!. ஒவ்வொரு முஸ்லீம் தீவிரவாதியும் தங்கள் அடையாளங்களோடு சாவதை பெருமையாக நினைக்கிறான். அதனாலேயே அவன் முஸ்லீம் தீவிரவாதி என்றும் அடையாளப்படுத்தப் படுகிறான். அது போகட்டும். மாவோயிஸ்டுகளையும்
நக்சலைட்டுகளையும் ஒடுக்க வேண்டும் என்று சாதாரண இந்துவும் விரும்புவான். ஆனால் அமெரிக்கா காரன் உங்களைப் போன்ற
முஸ்லீம்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக அழித்தேதீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போர் அறிவிக்கும் வரை உலகின் எந்த
முஸ்லீம் தலைவர்களும் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லவே இல்லை. ஆப்பு வைத்த பிறகு தான் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள்
ஐயோ இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று வாய் பிளந்தார்கள். தமிழக முஸ்லீம்கள் கூட உலக முஸ்லீம்களுக்கு ஆப்பு வந்த உடன்
தான் இஸ்லாம் அன்பை தான் போதிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றார்கள்.

அதுவரை கோயமுத்தூரிலோ, காஷ்மீரிலோ மும்பையிலோ, கல்கத்தாவிலோ எங்கேயெல்லாம் முஸ்லீம்களால் இந்துக்கள் படுகொலை
செய்யப்பட்டாலும் அதை உங்கள் ஆட்கள் ரசித்துக் கொண்டு தான் இருந்தார்கள் என்பதை மறக்காதீர்கள். உங்கள் இமாம்களின் மதவெறியால்
கீழ்விசாரத்தில் அரபுநாட்டு அரசாங்கம் தான் நடக்கிறது. அதை ஏன் உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஏகத்துவம் என்ற பெயரில் உங்கள் இமாம்கள் நாட்டைகூறு போட நினைப்பது பற்றி நீங்கள் எல்லாம் பேசப்போவதில்லை.
மேலும் சன் டிவிக்காரன் பற்றி வேறு எழுதி இருக்கிறீர்கள். சன் டிவி குடும்பத்தினரே இந்துக்களை அவமதிக்கும் நாத்திகப்போக்கு
கொண்ட குடும்பம் தான். அதனால் அவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயற்கையான விஷயங்களையே கண்பிக்கிறார்கள் என்பது ஒரு
முஸ்லீமான உங்களுக்குப் புரியாது. சன் டிவியை ஆதரிக்கும் நீங்கள் விஜய் டிவியில் பர்தா பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது
என்று கொலைமிரட்டல் விடுத்து தடுத்தீர்களே ஏன்? விஜய் டிவி காரர் மட்டும் என்ன முஸ்லீகளுக்கு எதிரியா? உங்களுக்கு ஒரு நியாயம்
இந்துக்களுக்கு ஒரு நியாயமா?

தயவு செய்து மதவெறியராக இருந்து எழுதாதீர்கள். ஹிந்துத்தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துக்களில் எழுதி உங்கள் ஆழ்மன வக்கிரத்ததை
வெளிப்படுத்த வேண்டாம்.

//அப்படி இருக்கும் போது என்ன செறக்கிரதுக்கு இவன் எனக்காக பாடுபட போறான்.இல்ல என்ன மயித்துக்கு நா அவனுக்கு ஆதரவா இருக்க போரேன்..ஹ்ம்ம்..ரெண்டுமே இல்ல…அப்டி இருக்கும் போது ஏய்யா அவனோட என்ன சேக்குரீங்க.//

இது நியாயமான குமுறல் நண்பரே! இது போன்ற உணர்வும் குமுறலும் கொண்ட ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களுக்கும் என் போன்ற சாதாரண இந்துவின் ஆதரவு உண்டு. தன் குடும்பத்தைக் காப்பதும் பிள்ளைகுட்டிகளை படிக்கவைப்பதும் அவர்களை வாழ வைத்து நிம்மதியாய் வாழ வேண்டும் என்ற சாதாரண முஸ்லீம்கள் யாரையும் தீவிரவாதிகளுடன் சம்பத்தப்படுத்தி பேச யாருக்கும் உரிமை இல்லை. அப்படிப் பேசுவதும் கூடாது. ஆனால் நண்பரே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். அப்படி சம்பந்தப்படுத்தி பேச வைப்பதும் முஸ்லீம்களே. ஒரு விஷயத்தை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
அமெரிக்காவின் ரெட்டை கோபுறம் தகர்க்கப் பட்ட போது நான் வேலை பார்த்த அலுவலகத்தின் அருகே டிராவல்ஸ் நடத்தும் முஸ்லீம் முதலாளிகள்
பேசிக்கொண்டது என்ன தெரியுமா? “எப்படி அடிச்சான் பாத்தியா எங்க ஆளு” என்றார்கள். இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதிகள் செய்யும்
கொட்டத்தை தமது வெற்றியாகவே நினைத்து அதை வெளிப்படையாகவே பேசும் முஸ்லீம்கள் தான், தீவிரவாதிகளை முஸ்லீம்கள் எல்லாரும்
ஆதரிக்கத்தானே செய்கிறார்கள் என்று பேச வைக்கிறது. அது ஹிந்துக்களின் குற்றமல்லவே! இன்னும் பாகிஸ்தான் ஜெயித்தால் விசிலடிக்கும்
முஸ்லீகள் இருக்கிறார்களே! கொயம்புத்தூரில் கார்கில் போரில் இறந்து போன தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்திய முஸ்லீமை என்ன
சொல்வீர்கள்! இந்து நாட்டிலேயே வாழ்ந்து இந்து விவசாயியின் வேர்வையில் நனைந்த அரிசியையே தின்றுவிட்டு
இந்திய ராணுவத்தின் வெற்றியை கொண்டாடாமல் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நாட்டுப்பற்று அற்ற முஸ்லீம்கள்
இருந்தால் உங்களை ஏன் தீவிரவாதிகளோடு சேர்க்க மாட்டார்கள்! எனவே தவறு எங்கே என்று இன்னும் நீங்கள் ஆராய வேண்டி
இருக்கிறது. இப்போது கூட சானியா பாகிஸ்தானியரை தான் திருமணம் செய்கிறாள். இந்தியாவில் நல்ல முஸ்லீம் ஆம்பளைகளே இல்லையா
என்ன? ஒரு விஷயம் மட்டும் நிஜம். முஸ்லீம்கள் எங்கே வாழ்ந்தாலும் முஸ்லீம்களாகத்தான் வாழ்வீர்கள். இந்தியராகவோ, தமிழராகவோ உங்களை
உங்கள் இமாம்கள் வாழ விடமாட்டார்கள் என்பது நிஜம்.

என்றும் அன்புடன்
ராம்
http://www.hayyram.blogspot.com

Dear Mr. Ram,

We will soon publish an article Regarding these issues. Hope both you and Mr. Razin would read and discuss. Generally my opinion is that, each and every person can be brought in to Religious harmony and hence civilised soceity. We have to educate the people. I am sure that both you and Mr. Razin along with other Brothers would work towards bringing all people in to the harmonious civiised soceity.

I wish to add that I condemn the terrorism committed by any one! We have to understand that whether a Muslim comitted terrorism or a Christian comitted Terrorism a Hindu committed a terrorism, the blame is passed on to the entire community, its not correct, but its happening. I will elaborate this in that article.

ராமாயணம் ஒருவருக்கு ஒருத்தி என்று போதிக்கிறது, நல்ல விஷயம். மகாபாரதத்தில் ஐவருக்கு ஒருத்தி என்று வாழ்கிறார்களே. மேலும் அதன் நாயகர்கள், பல பெண்களுடன் வாழ்கிறார்களே. இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு சராசரி மனிதன் குழம்பதானே செய்வான். இதனால் மகாபாரதத்தை தள்ளுபடி செய்துவிடலாமா?

The above one is just one example.
ஒரு தவறான விஷயம் கண்ணில் படும்போது அதில் எப்படி நல்லிணக்கம் கொள்ள மனம் வரும்?

Hard Truth

Dear Mr. Hard Truth,

//ராமாயணம் ஒருவருக்கு ஒருத்தி என்று போதிக்கிறது, நல்ல விஷயம். மகாபாரதத்தில் ஐவருக்கு ஒருத்தி என்று வாழ்கிறார்களே. மேலும் அதன் நாயகர்கள், பல பெண்களுடன் வாழ்கிறார்களே. இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு சராசரி மனிதன் குழம்பதானே செய்வான். இதனால் மகாபாரதத்தை தள்ளுபடி செய்துவிடலாமா?//

இராமாயணம் , மகாபாரதம் இவற்றில் இருந்து நாம் பாடம் கற்று நம் வாழ்வை செம்மைப் படுத்திக் கொள்ளவே இவற்றைப் பற்றி சொல்லப் படுகிறது. எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது.

இராமாயணம் சகோதர்கள் எப்படி ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்து தியாகம் செய்து வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

மகா பாரதம் தன்னுடைய சகோதரர்களின் மேல் ஏற்ப்பட்ட வெறுப்பு ஒருவனை எவ்வளவு கேட்டுக்கு அழைத்து செல்லுகிறது என்பதைக் காட்டுகிறது.

அரசர்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறோம். திரவுபதி ஐந்து பேரை திருமணம் செய்து வாழ்ந்தாள் என்றால், அக்காலத்திலேயே பெரிய இடத்துப் பெண்களுக்கு அதிக சுதந்திரமும் செல்வாக்கும் இருந்ததை தெரிந்து கொள்ளலாம்.

திரவுபதி ஐந்து பேரை திருமணம் செய்ததற்கு இந்து மதத்தை எப்படி குறை சொல்ல முடியும்?

இராமாயணமும் , மகா பாரதமும் இந்திய நாட்டின் பண்டைய நிகழ்வுகளாக கருதப் படுகின்றன. இவற்றின் மூலம் நாம் பல விடயங்களை கற்றுக் கொள்கிறோம்.

இந்து மதத்தின் முக்கியக் கருத்துக்கள் பல உள்ளன. வெறுப்புணர்ச்சி இல்லாமல் எல்லா உயிர்களுடனும் சிநேகமாக வாழ சொல்லுகிறது. உண்மைக்கு செல்லுதல் (அசத்தோமா சத்கமய) , உண்மையே வெல்லும் (சதயம் ஏவ ஜெயதே) போன்ற சிறப்பான கருத்துக்கள் சொல்லப் பட்டு உள்ளன. இந்து மதத்தின் முக்கியக் கருத்துக்கள் பற்றி தொடர்ந்து எழுதுவோம். அது இந்து மதத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு வழி வகுக்கும்.

சரியான புரிதல் நல்லிணக்கத்தை உருவாக்கும்.

அனைவரும் இந்துவாக மாறுவதுதான் மதநல்லிணக்கமா? நீங்கள் சொல்லும் மதனல்லினக்கதுக்கு (இப்போதைய) இந்துத்துவம்தான் ஓரளவாவது பொருந்துகிறது. நான் கூறியது தவறாக இருந்தால், சற்று விளக்கி கூறுங்கள்.
Hard Truth

//அனைவரும் இந்துவாக மாறுவதுதான் மதநல்லிணக்கமா? நீங்கள் சொல்லும் மதனல்லினக்கதுக்கு (இப்போதைய) இந்துத்துவம்தான் ஓரளவாவது பொருந்துகிறது.//

ஏன் எல்லோரும் இந்துவாக மாற வேண்டும்? நல்லிணக்கம் செய்ய மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

பிற மதங்களை வெறுக்காமல் இருந்தால், பிற மதங்களின் நோக்கங்களைப் புரிந்து கொண்டால், அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துக்களை அறிந்து கொண்டால் நல்லிணக்கம் தானாக உருவாக்கி விடும்.

உதாரணமாக சொல்வது என்றால், மாமன்னர் அக்பரை சொல்லலாம். நம்முடைய மதிப்பிற்குரிய கலாம் ஐயாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்லிணக்கம் ஏற்ப்பட்டால் உலகில் உள்ள எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களைப் புரிந்து கொண்டு, அவரை அன்புடன் மரியாதை செய்யும் சிறப்பு ஏற்ப்படும். என்ன, இயேசு கிறிஸ்துவை மரியாதை செய்வதோடு, ஸ்ரீ ராமரையும், புத்தரையும் மரியாதை செய்வார்கள். அல்லாஹ்விற்க்கும் தொழுகை நடத்துவார்கள். இவ்வாறாக உலகிலே மத அடிப்படியில் கலவரமோ, சண்டையோ உருவாகாது. மனிதம் காப்பாற்றப் படும்.

பிற மதங்களைப் பற்றி வெறுப்புக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்று இயேசு கிறிஸ்து ஒரு போதும் சொல்லவில்லை. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் போகச் சொன்னால் அவருடன் இரண்டு மைல் போ என்றார் கிறிஸ்து. ஒருவனே தேவன் என்றார் கிறிஸ்து. அந்த தேவன் கிறிஸ்துவாக அவதரித்ததாக கருதும் போது, அதே தேவன் இராமராக அவதரித்ததாகவும் கருதுவதில் என்ன தவறு என்கிற சிறப்பான கருத்தை திரு. தனபால் அவர்கள் இதே தளத்திலே பின்னூட்டமாக எழுதியதை நீங்கள் படித்து இருப்பீர்கள்.

இராமரின் கருத்தும் கிறிஸ்துவின் கருத்தும் ஒன்றே.

இராமர் தன் சுகங்களை மறுத்து, கஷ்டங்களை சுமந்து கொண்டு கட்டுக்குப் போனார். தன் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் எண்ணவில்லை. பரதன் தன் சகோதரனான இராமனுக்கு தான் எந்த தீங்கும் செய்யாத போதும், அவனுடன் சமாதானத்தை வேண்டி, ஆட்சியை இராமரிடம் கொடுக்க காட்டுக்கு அவரைத் தேடி சென்றான். இயேசு கிறிஸ்து எப்படி வாழ வேண்டும் என்று போதனை செய்தாரோ, அதே கொள்கையை வைத்து வாழ்க்கையை இராமரும், பரதனும் வாழ்ந்து காட்டி உள்ளனர். எனவே இராமரின் கொள்கையையும் , இயேசுவின் கொள்கையையும் ஒன்றாகவே உள்ளது.

இயேசு பிறந்தவுடன் ஏரோது மன்னன் தன் ஆட்சி பகுதில் உள்ள குழந்தைகள் எல்லாவற்றையும் கொன்றதாக சொல்லப் படுவது போல, கிருஷ்ணர் பிறந்தவுடன் கம்சன் எப்படியாக கிரிஷ்ணனைக் கொல்ல வேண்டும் என எல்லா குழந்தைகளையும் கொன்றதாக சொல்லப் படுகிறது.

நீங்கள் ஏன் ஒற்றுமையைப் பார்க்கக் கூடாது? கற்பனைகளை கைக் கொள்வதே முக்கியம் , என்னை பார்த்து கர்த்தாவே என்று அழைத்து பலன் இல்லை என்றி இயேசு கூறி உள்ளது உங்களுக்குத் தெரியும்.

அண்ணே அருமையா சொல்லிட்டேங்க

தங்களின் மத நல்லிணக்க கட்டுரை சொல்ல வந்த கருத்தை தெள்ள தெளிவாக உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஐயா.

சகோதரர்கள் ஸ்மார்ட் தமிழ், வி .பி. மறவன் ஆகியோருக்கு என் நன்றி. நான் உங்கள் அனைவரின் கருத்தையும் ஒட்டியே எழுதுகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியான விடயம். உலகிலே பல மதங்களைப் பின்பற்றுவோர் ஒன்றாக வாழும் நாடாக இந்தியாவே உள்ளது. மத நல்லிணக்கத்தை உலகம் முழுதும் பரப்பும் பொறுப்பு, இந்தியாவிற்கே, அதாவது நம்மிடமே உள்ளது.

சகோ ராம்,அவர்களின் இரண்டு பின்னூட்டங்களும் இருவேறு மனநிலையை படம்பிடிக்கிறது.அல்லது அவர் கட்டுரையை முழுதாக் படிக்காததன் பிரதிபலிப்பாக முதல் பின்னூட்டம் தெரிகிறது.
நான் இத்தனைக்கும்,அந்த கட்டுரையின் நோக்கத்தை தெளிவாக்கி விட்டேன்,முழுமையாக படித்தவர்கள் அறியமுடியும்.
நான் பயன் படுத்திய அந்த வார்த்தையின் சாரம் குறையும்வண்ணமே,கட்டுரையின் நடுவில் எனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இருப்பேன்.
இந்த வார்த்தை பயன்பாட்டின் நோக்கம்,நிச்சியமாக யாரையும் புண்படுத்த அல்ல.அக்கட்டுரையை முழுவதுமாக படிப்பவர்களுக்கு,நிச்சயம் அந்த வார்த்தை சுடாது.நான் அறிவேன்.இது மிகவும் சென்ஸிடிவான விஷயம்.இன்னொருவர் மீது அவதூரு கற்பிப்பது இஸ்லாத்தில் பெரும் பாவம்.அதையும் அறிவேன்.அதை செய்ய நான் ஒரு போதும் துணியமாட்டேன்.
இரண்டாவது,நான் நடுநிலையாலனின் வேஷம் போட்டு,உங்களின் ஆதரவை பெற்று,ஒன்னும் ஆட்சியை பிடிக்கபோவதில்லை.ஏன் இன்னும் சொல்லப்போனால்,எனது எழுத்து சில முஸ்லிம் சகோதரர்களுக்கு கூட பிடிக்காமல் போகலாம்..அதை பற்றி சிந்திக்கவில்லை.
எனது நோக்கம் மதநல்லிணக்கம்.அவ்வளவே..முடிந்தால் நடுநிலையோடு திரும்ப ஒருமுறை அதை முழுமையாக படிக்கவும்..
அவருக்கு விரிவான பதில் எனது தளத்தில்….

நன்றி…

திரு HARD TRUTH அவர்களே

//அனைவரும் இந்துவாக மாறுவதுதான் மதநல்லிணக்கமா? நீங்கள் சொல்லும் மதனல்லினக்கதுக்கு (இப்போதைய) இந்துத்துவம்தான் ஓரளவாவது பொருந்துகிறது. நான் கூறியது தவறாக இருந்தால், சற்று விளக்கி கூறுங்கள்.
Hard Truth ///

மதநல்லிணக்கத்திற்காக யாரும் இந்துவாக மாற வேண்டியது இல்லை திரு HARD TRUTH .

இயேசு தன்னை கொடூரமாக சித்திரவதை செய்து,சிலுவையில் அறைந்தவர்களை இவர்கள் தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியுங்கள் என்று கூறினார்.முதலில் அவர்களை யேசுவானவர் மன்னித்தக் காரணத்தாலேயே கர்த்தரிடம் மன்னிக்கும்படி வேண்டுகிறார்.

நீங்கள் இவ்வாறு சிந்தியுங்கள்

“” தன்னை கொடூரமாக சித்திரவதை செய்து சிலுவையில் ஆணி அடித்துக் கொன்றவர்களைக் கூட இவர்கள் செய்தது அறியாமல் செய்தார்கள் என்று மன்னித்த யேசுவானவர்,இவர்கள் அறியாமல் (உண்மையில்லாத!!!) கடவுளை வணங்குகிறார்கள் இவர்களை மன்னிப்போம் என்று ஏன் கருணையே வடிவமான யேசுவானவர் மன்னிக்கமாட்டார்.””

இதயத்தில் தூயமையுள்ளவர்கள், இரக்கமுள்ளவர்கள், குழந்தை உள்ளமுள்ளவர்கள், ஏன் பிஞ்சுக் குழந்தைகள் அவர்கள் அனைவரும் ஏசுவைக் கும்பிட வில்லை என்ற ஒரே ஒரு காரணத்திர்க்காக கருணையே வடிவமான கர்த்தர் இவர்களை நிரந்தர எரி நரகத்தில் தள்ளமாட்டார் என்று நீங்கள் உங்கள் கடவுளை அன்புள்ள, கருணையுள்ள கடவுளாக பார்த்தாலே மத நல்லிணக்கம் வந்துவிடும்.

உங்கள் சிந்தனை இப்படி மாறினாலே அதாவது கடவுளை கருணை மிக்கவராக நீங்கள் நினைத்தாலே மத நல்லிணக்கம் வந்து விடும்.

மற்ற கடவுளை உண்மை என்று ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனம் வராவிட்டாலும் உங்கள் கர்த்தர் அன்பானவர், கருணையுள்ளவர், அனைவருக்கும் கடவுளானவர் என்று நீங்கள் உங்கள் கடவுளை மேன்மைப்படுத்துவதே மதநல்லிணக்கம் ஆகும்.

இது இந்துத்துவம் தான் திரு HARD TRUTH .நல்லது எங்கிருந்தால் என்ன திரு HARD TRUTH அவர்களே.இந்துத்துவம் தான் உங்கள் கடவுள் கருணைமிக்கவர்,அன்பானவர் என்று கூறுகிறது. மதநல்லிணக்கத்திற்காக யாரும் இந்துவாக ஆக வேண்டியது அவசியமில்லை.

மத நல்லிணக்கம் என்பது தன் கடவுள் எல்லையில்லா கருணை வடிவானவர், எல்லையில்லா அன்பு வடிவமானவர், தன்னை வணக்குபவர்கள், அறியாமையால் வணங்காமல் இருப்பவர்கள் அனைவரையும் பாகுபாடில்லாமல் ஏற்றுக்கொள்பவர் என்ற எண்ணமே மத நல்லினக்கமாகும்.

எம்மதமும் சமதம் என்பவர் ஏமாற்று பேர்வழியே.. ஹிந்து மதமே உண்மையானது அநாதியானது , அது உண்மையான ஹிந்துகளுக்கே புரியும். கிறித்துவ இஸ்லாம் மதங்கள் ஆள் சேர்த்து கொண்டு மற்ற மதத்தவரை படு கொலைகள் செய்வதற்கே. மதத்தை பரப்புவதர்க்கே. ஜாதியை ஒழிப்பேன் மதத்தை ஒழிப்பேன் என்பவர்கள் ஊரை ஏமாற்றுபவர்கள். நம் முனோர்களுக்கு தெரியாத எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று.

திரு. ரவி அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டதற்கும் கட்டுரையைப் படித்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ஆனால் உங்கள் கருத்து எமக்கு ஒப்புமை இல்லை.

மத நல்லிணக்கத்தில் நாங்கள் நேர்மையானவர்கள்.

எந்த சர்ச்சிலும் வந்து பிரேயரில் கலந்து கொண்டு வணக்கம் செலுத்த நாங்கள் தயார். எந்த மசூதியில்
நடை பெரும் தொழுகையிலும் பங்கெடுக்கத் தயார்.

கிறிஸ்தவ, இசுலாமியர்கள் எங்கள் சகோதரரே. முன்னோர்கள் மத நல்லிணக்கப் பாதையில் இருந்தவர்களே. சாதிப் பிரிவினைகள் தொழில் அடிப்படையில் உருவாக்கி பிறப்பு அடிப்படையில் இறுக்கப் பட்டு விட்டன. இப்போது சாதிப் பாகுபாடுகள் வேகமாக நீங்கி வருகின்றன. சாதி பாகுபாட்டை வைத்து குட்டையை குழப்பி மீன் பிடிப்பது காலப் போக்கில் இயலாத ஒன்றாகி விடும்.

ஹிந்து மதம் அனாதியாக இருக்கக் கூடும். ஆனால் அது யாரையும் வெறுக்க சொல்லவில்லை, எந்த மதத்தையும் வெறுக்க சொல்லவில்லை.

உண்மையான இந்து, மத நல்லிணக்கத்திற்கு தயங்க மாட்டான். அத்வேஷ்டா கோட்பாட்டை கை விட்டு துவேஷக் கோட்பாட்டுக்கு மனதில் இடம் கொடுத்த வழி மாறிய இந்துவே மத நல்லிணக்கத்தை எதிர்ப்பான்.

//இராமர் தன் சுகங்களை மறுத்து, கஷ்டங்களை சுமந்து கொண்டு கட்டுக்குப் போனார். தன் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் எண்ணவில்லை. //
That is fine. But, in what way Mr.Ram going to forest helps the man kind?
Probably, if he stayed back in the country, Ayodhya would have got a better care for 14 more years. Sita would not have got that pityful life. Dasaratha would have lived for few more years. Ram was so self righteous and his decision of going to jungle might not be the best.
Also, If he is not behind other women, it is good for him.

//இயேசு கிறிஸ்து எப்படி வாழ வேண்டும் என்று போதனை செய்தாரோ, அதே கொள்கையை வைத்து வாழ்க்கையை இராமரும், பரதனும் வாழ்ந்து காட்டி உள்ளனர். எனவே இராமரின் கொள்கையையும் , இயேசுவின் கொள்கையையும் ஒன்றாகவே உள்ளது. //
Jesus never preached violence against violence. Jesus never preached killing anyone (even your worst enemy). Did Ram followed it?
You may come back and argue, what will I do if someone takes my wife? I might do anything, but still that doesn’t qualify your statement that Ram and Christ had the same way.

Hard Truth

//மகா பாரதம் தன்னுடைய சகோதரர்களின் மேல் ஏற்ப்பட்ட வெறுப்பு ஒருவனை எவ்வளவு கேட்டுக்கு அழைத்து செல்லுகிறது என்பதைக் காட்டுகிறது. //
In the attempt of teaching one good thing, these epics are teaching several other bad things right??
I don’t know much of Hinduism. I am also trying to learn it. But, these stories really stumbles me. You mean to say that a woman being wife to 5 men is OK? Since Krishna (who is considered as GOD) is also agreeing with this, why not a common man/woman go out of the way?
Yudhirstra is supposed to be a nice guy. But he himself bids his (and brother’s) wife and gamble.
Very respected Bheeshma and Dhrona didn’t come to help, when a women is stripped in a court.
So called GOD Krishna, says that everything is fine to do, because every thing is he.

What does a common man can learn from this?

Ramayana and Bharatha are great stories. I really enjoyed reading it. But, really dont feel like taking anything for my personal life.

Thanks,
Hard Truth

Dear Mr. Hard Truth,

As your questions needs explanation, The reply for your comments shall be published as an article within couple of days.

அன்பின் திரு.திருச்சிக்காரர்(ன்),

எனக்கு கை பரபரக்குது. திரு. Hard Truth கேட்ட கேள்வியான திரெளபதியின் திருமணத்தின் சட்ட நுணுக்கம் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். சிலர் விவரம் புரியாமல் திரெளபதியைப்பற்றி அவதூறாக பேசுகின்றனர். திரெளபதி பாண்டவர்கள் ஐந்து பேருடனும் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்தவில்லை. ஆதாரம் : திரெளபதி தர்மருடன் ஆயுத சாலையில் நெருக்கமாக இருந்ததை பார்க்க நேரிட்டதால் தான் அர்ஜூனர் தவம் புரிய சென்றுவிட்டார்.

உண்மையில் ஐவருடன் ஒரே நேரத்தில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படியான வாழ்க்கைமுறையில் திரெளபதி இருந்திருந்தால் அர்ஜூனர் ஏன் அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் ?. ஆக அவர்களுக்குள் அந்த மாதிரியான உறவு முறை ஏதும் கிடையாது என அறிகிறேன். தவிர பாண்டவர்கள் ஒவ்வொருவரின் வாயிலாக தனித்தனியாக திரெளபதிக்கு பிறந்த உப பாண்டவர்களை குருக்ஷேத்திரப் போரானது முடிந்த பிறகும், போர் விதிகளுக்கு முரணாக இரவு நேரத்தில் அஸ்வத்தாமன் பழிவாங்கும் முகமாக கொன்றுவிட்டதால் நமக்கு சாட்சியம் இல்லாமல் போய்விட்டது. ஆதலால் தான் அஸ்வத்தாமனின் நெற்றியிலிருந்து அந்த சக்தி வாய்ந்த ஆபரணம் பிடுங்கப்பட்டது. இதற்கு மேல் இறைவனே முற்றிலும் அறிந்தவன். இதை இன்னும் தெளிவான ஆதாரங்களுடன் என்னால் விளக்க இயலும். ஆனால்அதற்கு கொஞ்சம் காலமாகும்.

with care & love,

Muhammad Ismal .H, PHD.,
gnuismail.blogspot.com

என்னைப்பற்றி மேலும் அறிய இந்த சில சுட்டிகள் உங்களுக்கு உதவும்.

1. உயிர் என்றால் என்ன? http://wiki.pkp.in/forum/t-72160/#post-213477

2. கேள்விகள் பதில்கள் http://gnuismail.blogspot.com/2008/11/blog-post.html

3. வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்) http://suduthanni.blogspot.com/2010/01/3.html

அன்புக்குரிய நண்பர், திரு. முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு,

உங்களை நமது தளத்திற்கு வரவேற்கிறோம். திரவுபதி பற்றிய நீங்கள் கூறிய கருத்துக்கள் சரியே. மகாபாரத்தில் உங்களுக்கு உள்ள புலமை பாராட்டுக்குரியது. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியவையாக உள்ளன.

உயிர் பற்றிய உங்களின் ஆராய்ச்சி வரவேற்கத் தக்கது. உடல் இறந்த பின், உயிர் தொடர்ந்து வாழ்கிறதா என்பது ஒரு முக்கியமான ஆராய்ச்சிக்குரிய விடயம் என்பதை நானும் இந்த தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் நாம் நேரடி அனுபவமோ அல்லது நிரூபிக்கப் பட்ட (Proven and can be verified) தியரியோ அல்லாத ஒன்றை எளிதில் முடிவாக அறிவிக்கத் தயங்குகிறேன்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

நீங்கள் நம்முடைய தளத்திற்கு தொடர்ந்து விஜயம் செய்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யக் கோருகிறோம். உங்களுடைய கருத்துக்கள் நமக்கு மிக முக்கியமானவை.

மிக்க நன்றி

அன்புடன்,

திருச்சிக்காரன்

//பாண்டவர்கள் ஐந்து பேருடனும் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்தவில்லை. //
So? Does that qualify a polygamy?

Hard Truth

thank u Mr.thiru its very useful for my seminar

மிக்க மகிழ்ச்சி சகோ. ரஞ்சனி கோவிந்தராஜ் அவர்களே.

தளத்தைப் பார்வை இட்டதற்கும் கட்டுரைகளை படித்து அவரில் உள்ள கருத்துக்களை உங்களின் செமினாரின் மூலம் பரப்பியதற்கும் எங்கள் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத நல்லிணக்கம் தொடர்பாக நான் எழுதிய கருத்துக்கள் யாவும் இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் அப்பாவி மக்களின் எண்ணப் போக்கின் பிரதிபலிப்பே. இந்தியர்கள் என்றைக்குமே எந்த மதத்தையும் வெறுத்தது இல்லை. எல்லா மதங்களையும் அரவணைத்து செல்லும் போக்கினராகவே பெரும்பாலான இந்தியர்கள்
உள்ளனர்.

உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் , மோதல்களையும், அதனால் மக்கள் படும் அவதியையும் நீக்கி அமைதியை அன்பை மலரச் செய்யக் கூடியது மத நல்லிணக்கமே.

மத நல்லிணக்கத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமை இந்திய சமுதாயத்துக்கும், இந்தியர்களுக்கும் உள்ளது.

நாங்கள் இங்கே பிளாகில் எழுதவதோடு சரி. நீங்கள் செமினார் மூலம் பலரும் அறியச் செய்கிறீர்கள். நீங்கள் உலக சமுதாயத்துக்கு சிறப்பான தொண்டு செய்கிறீர்கள் என்பதே உண்மை.

//பாண்டவர்கள் ஐந்து பேருடனும் ஒரே நேரத்தில் குடும்பம் நடத்தவில்லை. //
So? Does that qualify a polygamy?//////

எத்தனை ஆண்கள் பலதார மணம் செய்து கொண்டுள்ளார்கள், ஒரே ஒரு பெண் பலதார மணம் செய்ததை மட்டும் நாம் பெரிதாக பார்க்கிறோம். அது ஒரு அரச குடும்பத்தில் நடந்தது இன்னும் பெரிதாக படுகிறது.
அனால் அதனை யாரும் இங்கு பின்பற்றுவதில்லை, மறுமணமே இங்கு பெண்களுக்கு பெரிய விசயமாக உள்ளது. இன்று நேற்றல்ல காலம் காலமாக ஒரு ஆண் எத்தனை மணம் செய்து கொள்கிறான் எத்தனை வரலாறுகள் நமக்கு சொல்கின்றன? ஆனால் ஒரே ஒரு பெண் பல தார மணம் செய்ததை நாம் பெரிய குற்றமாக்கி பார்க்கிறோம்.

இந்தியாவில் இந்து தர்மத்தில் நடந்த நிகழ்வுகள் அப்படியே சித்திரமாக்க பட்டன, இங்கேயே பிற சமுகத்தவ்ரிலும், வெளிநாட்டில் உள்ள அரச குடும்பத்திலும், சாதாரண குடும்பங்களிலும் என்ன நடந்ததோ எல்லாம் பதிவு செய்ய பட்டதா?
இங்கே உள்ளதை உள்ளபடி எழுதி வைப்பது தர்மம் அனால் பிற நாட்டின் வரலாறுகளில் ஆதிக்கத்தில் உள்ளவர் நினைப்பது மட்டுமே அச்சேறும்.

இதிஹசாம்– இது நடந்தது என்று வரும் போது அதில் பதிவு செய்யப்பட்ட எல்லாமே உண்மை. ஆனால் அதிலே நல்லவர்களிடம், கெட்டவர்களிடம் உள்ள நல்லவைகளை ஏற்றுக்கொண்டும், நல்லவர்களிடம், கெட்டவர்களிடம் உள்ள அல்லாதவைகளை தவிர்த்தும் வாழவேண்டுமே அல்லாது வேறு கருத்து இங்கு சொல்லப்படவில்லை.
கர்ணனின் வீரம் வில்வித்தை கொடைத்தன்மை, துரியோதனின் நட்பு அவனுகிருந்த பிற திறமைகள் போற்றப்பட்டன, துரியோதனன் பிறர் சொத்தை அநியாமாக பறிக்க நினைத்த தவறுகள் குற்றமாக காட்டப்பட்டன. அவர்களின் பக்கம் நியாயம் இல்லாமலிருந்தும் அவர்களுடன் நின்ற கர்ணன் கெட்டவனாக கொள்ளபட்டான். ஆனால் நன்றி உணர்ச்சியில், தன் சகோதரர்கள் எனத்தெரிந்தும் நட்புக்கும் நன்றிக்குமே முதலிடம் கொடுத்த இடத்தில் செஞ்சோற்று கடனுக்காக உயிரை கொடுத்த இடத்திலே போற்றப்படுகிறான்.

பல தார மணம் என்பது ராமாயண காலத்திலேயே உள்ளது, என்ன இப்போது அதனை ஒரு பெண் செய்துவிட்டாள்.
இப்போது முதல் வரியிலிருந்து படிக்கவும்

good

Thank you, Ms. Subha & Ms. Anu.

Please read other articles as well and send us your comments.

You can send your articles to our blog. We will publish them.

The aim of our blog is to unite all the people in brotherly attidude.

Thiruchchikkaaran

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: